WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
அமெரிக்க அணு ஒப்பந்த
விவகாரத்தில் வாக்கெடுப்பில் வெல்வதற்காக இந்தியா கையூட்டு அளித்ததை விக்கிலீக்ஸ்
கேபிள்கள் காட்டுகின்றன
By
Keith Jones
19 March 2011
இந்தியாவின்
காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு உலகளாவிய
மூலோபாயக் கூட்டை திண்மைப்படுத்திக் கொள்ளும் தனது உறுதியில்
2008
ஜூலை மாதத்தில் நடந்த “நம்பிக்கை” வாக்கெடுப்பு அல்லது
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலஞ்சம் அளித்தது என்று
நெடுநாட்களாகக் கூறப்பட்டு வந்ததை,
விக்கிலீக்ஸ் வெளிக்கொணர்ந்த ஒரு அமெரிக்க தூதரகக் கேபிள் ஆவணம்
உறுதி செய்ததை அடுத்து இந்த அரசாங்கம் உலுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம்
வாக்கெடுப்பில் தோற்றிருக்குமானால்,
அப்போது அது பதவி விலகத் தள்ளப்பட்டிருக்கும்,
அத்தோடு இந்திய-அமெரிக்க
அணு ஒப்பந்தமும் மரித்துப் போயிருக்கும்.
இந்தியாவுடன் சிவிலியன் அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பல
தசாப்தங்களாய் இருந்து வந்த சர்வதேசத் தடையை அகற்றுவதை நோக்கிப் பாதை திறந்த இந்த
ஒப்பந்தம் ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தால் ஊக்கமுடன் முன்னெடுக்கப்பட்டதாகும்.
இந்த நடவடிக்கை “ஒரு உலக சக்தியாக இந்தியா ஆவதற்கு உதவ” அமெரிக்கா
தயாராய் இருப்பதை எடுத்துக் காட்டும் நோக்கம் கொண்டதாக அச்சமயத்தில் வெளிப்படையாக
புஷ் அறிவித்தார்.
அமெரிக்காவின் உண்மையான இலக்கு என்னவென்றால்,
எழுந்து வரும் சீனாவை மட்டுப்படுத்துவதற்கும்,
அவசியப்பட்டால் அதனுடன் மோதுவதற்கும்,
நோக்கம் கொண்ட ஒரு கூட்டணிக்குள் இந்தியாவை இழுப்பதாகும்.
செவ்வாயன்று,
சென்னையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ஹிந்து
விக்கிலீக்ஸிடம் இருந்து பெற்ற
5100
இந்தியா தொடர்பான அமெரிக்கத் தூதரக கேபிள் ஆவணங்களின் அடிப்படையிலான
செய்திகளை வெளியிடத் தொடங்கியது.
மார்ச்
17
அன்று வெளியான பதிப்பில் ஜூலை
17, 2008
அன்றான ஒரு கேபிளின் அடிப்படையிலான செய்தியை அது வெளியிட்டிருந்தது.
நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி
எம்பிக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவதற்குத் தாங்கள் செய்து வரும்
முயற்சிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பெருமையுடன் தங்களிடம்
கூறியதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டன் தலைமையகத்துக்கு தகவல்
தெரிவித்திருந்தது.
அப்போது
அமெரிக்க தூதரகத்துக்குப் பொறுப்பானவராய் இருந்த
Steven
White
எழுதிய அந்த அறிக்கையில்,
“அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தள்
(RLD)
கட்சியைச் சேர்ந்த நான்கு எம்பிக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக
அவர்களுக்கு
10
கோடி ரூபாய்
(2.5
மில்லியன் டாலர்)
கொடுக்கப்பட்டிருந்தது” என காங்கிரஸ் எம்பியும் காங்கிரஸ் கட்சித்
தலைவரான சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான சதிஸ் சர்மாவின் ஒரு
உயர்நிலை உதவியாளர் ஜூலை
16
அன்று தூதரக அலுவலர் ஒருவரிடம் குறிப்பிட்டிருந்தார்.
“பணம் ஒரு
பிரச்சினையில்லை,
ஆனால் பணத்தை வாங்கியவர்கள் பேசியபடி அரசாங்கத்திற்கு வாக்களிப்பது
உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் முக்கியம்” என்று அந்த உதவியாளர் நசிகேத
கபூர் குறிப்பிட்டிருந்தார்.
“ரொக்கப் பணம் கொண்ட இரண்டு பெரும் பெட்டிகளை தூதரக ஊழியரிடம்
காட்டிய கபூர் இலஞ்சம் கொடுப்பதற்காக சுமார்
50-60
கோடி வரை வீட்டைச் சுற்றி பதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.”
வர்த்தகம்
மற்றும் தொழிற்துறை அமைச்சராய் இருந்த கமல்நாத்தும்
“இந்தத்
தாராளகுணத்தை பரப்ப உதவிக் கொண்டிருப்பதாக”
தூதரகத்தைச் சேர்ந்த போல்கோன்ஸிடம்
“காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த இன்னொரு மனிதர்”
தெரிவித்ததாக கேபிள் மேலும் கூறியிருக்கிறது.
ஆரம்பத்தில் கமல்நாத் இலஞ்சமாக
“சிறு
விமானங்களைத் தான் கொடுக்க முடிந்த நிலையில் இருந்தார்,
இப்போது அவரால் ஜெட் விமானங்களே தர முடியும்”
என்றும் அந்த காங்கிரஸ் கட்சி மனிதர் கூறியதாக கேபிள் மேற்கோள்
காட்டுகிறது.
சதீஷ் ஷர்மா
போல்கோன்ஸை
2008
ஜுலை
16
அன்று சந்தித்த போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்கு காங்கிரஸ்
கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருப்பதாக அவரிடம்
வாக்குறுதியளித்தார்:
“ஷர்மா
கூறுகையில் அவரும்...கட்சியில்
உள்ள மற்றவர்களும் ஜூலை
22
அன்று நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ அரசாங்கம்
வெல்வதை உறுதி செய்வதற்கு கடினமாய் உழைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்....அகாலி
தளத்தின்
8
வாக்குகளுக்கு ஃபைனான்சியர் சாந்த் சத்வால் மற்றும் மற்றவர்களின்
மூலமாக சிங் மற்றும் மற்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் ஆனால்
துரதிர்ஷ்டவசமாக அது பலனளிக்கவில்லை என்றும் ஷர்மா கூறினார்.
சிவ சேனாவை
(12
வாக்குகள்)
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து
கொண்டிருந்ததாய் அவர் குறிப்பிட்டார்.”
நம்பிக்கை
வாக்கெடுப்பு முடிந்த பின்னர்
(இதில்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம்
275-256
என்கிற வித்தியாசத்தில் வென்றது,
10
எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை)
பிரதான எதிர்க் கட்சிகளான,
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா
கட்சி
(பாஜக)
மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான இடது முன்னணி ஆகியவை காங்கிரஸ்
கட்சி வாக்குகளை விலைக்கு வாங்கியதாகக் குற்றம் சாட்டின.
ஸ்ராலினிஸ்டுகள் நான்கு வருடங்களுக்கு ஐக்கிய முன்னணி கூட்டணியுடன்
இருந்து வந்திருக்கின்றனர்,
(ஒரு
முறைப்படியான கூட்டணி அல்ல என்றாலும் கூட),
இதன் மூலம் அரசாங்கம் பதவியில் தொடர்வதற்கு அவசியமான நாடாளுமன்ற
வாக்குகளை வழங்கியிருந்தனர் என்பது ஞாபகத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால்
2008
ஜூன் மாதத்தில்,
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில்
அடுத்த கட்டத்திற்குச் செல்லும் பொருட்டு காங்கிரஸ் கட்சி கூட்டணியை உடைத்து இடது
முன்னணியை எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளியது.
அலைக்கற்றை
உரிமங்களை பெருநிறுவனங்களுக்கு மலிவுத் தள்ளுபடி விலையில் விற்றது உட்பட
தொடர்ச்சியான பல ஊழல் மோசடிகளில் ஐமுகூ அரசாங்கம் ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருந்த
ஒரு சமயத்தில் தான் வாக்குகளை விலைக்கு வாங்கும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும்
தூதரகக் கேபிள் வெளியே வந்திருக்கிறது.
இந்தியாவின் பெருநிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசுச் சொத்துகளை
விற்பதில் ஆதாயமடைந்ததோடு மட்டுமின்றி,
அரசாங்கத்திற்கு கொள்கையும் இன்னும் கேபினட் அமைச்சர்களின்
தேர்வையும் கூட உத்தரவிட்டன என்பதன் மீது இந்த மோசடிகள் வெளிச்சம் போட்டுக்
காட்டுகின்றன.
ஊழல்
மோசடிகள் விஷயத்தில் அரசாங்கம் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை,
அலைக்கற்றை விற்பனை இந்தியக் கருவூலத்துக்கு பத்து பில்லியன்கணக்கான
டாலர்களை இழப்பாக்கிய ஒரு மிகப் பெரும் ஊழலாக இருந்தது என்பதற்கு எண்ணிலடங்கா
ஆதாரங்கள் இருந்தும் கூட அது அதனை மறுத்து வந்திருக்கிறது.
அரசாங்கம்
நாடாளுமன்றத்தின் விருப்பத்திற்குக் குழிபறிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் கேபிள்
காட்டும் சமயத்தில்,
இதற்கு அரசாங்கத்தின் பதிலிறுப்பு இன்னும் அதிர்ச்சிகரமானதாக
இருக்கிறது.
நடப்பு நிதி
அமைச்சரும்
2008ல்
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி
2008
நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் அதற்குப் பின் ஒரு தேர்தல்
முடிந்து விட்டிருக்கும் நிலையில் இப்போது பேசுவதற்குப் பொருத்தமற்றது என்றார்.
“விக்கிலீக்ஸ் சொல்லியிருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ என்னால்
முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசாங்கம்
15வது
மக்களவைக்குத் தான் கடமைப்பட்டிருக்கிறதே அன்றி
14வது
மக்களவைக்கு அல்ல.”
காங்கிரஸ்
எம்பியான ராஜீவ் சுக்லா,
வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை
நிராகரிப்பதற்கு,
உலகெங்கிலும் ஏகாதிபத்திய ஜனநாயகத்தின் இரட்டைவேடத்தையும்
வழிப்பறியையும் அம்பலப்படுத்தத் துணிந்ததற்காக அரசாங்கங்களும் பெருநிறுவன
ஊடகங்களும் விக்கிலீக்சிற்கு எதிராகக் குவித்திருக்கும் பிரச்சாரத்திற்கு கவனத்தை
இழுத்தார்.
“இந்திய நாடாளுமன்றத்தில் விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டுவது
அபத்தமானது,
அற்பமானது,
மலிவான செயல்” என்று சுக்லா அறிவித்தார்.
“உலகின் எந்த அரசாங்கமுமே விக்கிலீக்ஸை கண்டு கொள்வதில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.”
வாக்குகள்
விலைக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுக்கும் விதமாக,
இலஞ்சம் பெற்றவர்களாகக் கேபிளில் கூறப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளக்
(RJD)
கட்சியின் எம்பிக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு
எதிராக வாக்களித்திருந்தனர் என்று சுக்லா குறிப்பிட்டார்.
RJD
தலைவர் அர்ஜூன்சிங்கும் இதனைக் கூறியே,
தான் கண்டனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதாய் வலியுறுத்தினார்.
ஆனால்
RJD
எம்பிக்கள்
இலஞ்சம் பெற்ற பின் தங்களது “வாக்கை”க் காப்பாற்றுவார்களா என்பது குறித்து துப்புக்
கொடுத்த காங்கிரஸ் கட்சி நபரே சந்தேகம் வெளியிட்டிருந்தார் என்பது கேபிளிலேயே
இருக்கிறது.
”ஆனால் பணத்தை வாங்கியவர்கள் பேசியபடி அரசாங்கத்திற்கு வாக்களிப்பது
உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் முக்கியம்” என்று அவர் கூறியதாய் கேபிள்
கூறுகிறது.
அபூர்வமாய்
வெள்ளியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அளித்த அறிக்கையில் மன்மோகன்சிங்,
தனது அரசாங்கத்திலோ அல்லது காங்கிரஸ் கட்சியிலோ இருக்கிற யாரும்
நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டவிரோதமான செல்வாக்கு செலுத்துவதற்கு முயற்சி
செய்திருக்கவில்லை என்று வலியுறுத்தியதோடு “பழைய குற்றச்சாட்டுகளுக்கு” மீண்டும்
உயிர் கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகளைக் கண்டித்தார்.
“ஊகத்தின் அடிப்படையிலான,
சரிபார்க்கப்படாத,
சரிபார்க்க முடியாத தகவல்களுக்கு மரியாதை அளிக்கப்படுவது என்பதும்
திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டிருக்கின்ற பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும்
கையிலெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அதனைப் பற்றிக் கொள்வது என்பதும் மிகவும்
ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் சிங்.
2008
நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி நடந்துள்ள விவகாரத்தை இந்திய
ஊடகங்கள் தகவல் விபரம் போல் செய்தி வெளியிட்டு பதிலிறுப்பு செய்கின்றன.
கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் புவி அரசியல்
மூலோபாயமும் அமெரிக்க சாய்வு கொண்டிருந்தற்கு இந்தியாவின் ஆளும் உயரடுக்கிற்குள்
வலிமையான ஆதரவு உள்ளது,
இதன் விளைவாக,
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அங்கீகாரத்தை
கேள்விக்குட்படுத்துவதற்கு எந்த ஆதரவும் இல்லை.
அரசியல்
ஆய்வாளரான மகேஷ் ரங்கராஜனின் கருத்தினை இதற்கு சிறந்த உதாரணமாய்க் கூறலாம்:
“எல்லோரும்
எதிர்பார்த்ததைத் தான் விக்கிலீக்ஸ் உறுதி செய்திருக்கிறது...இதில்
அதிர வைக்கின்ற எதுவும் இல்லை.
ஆனாலும்,
இது காங்கிரசுக்கு சேதம் விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பது
உண்மையே.
ஊழல்களின் இந்தப் பருவம் தொடர்வதாய்த் தோன்றுகிறது.
ஒவ்வொரு வாரமும்,
ஒவ்வொரு மாதமும்,
புதிதாய் ஏதாவது நடக்கிறது.”
2008
ஜூலை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த விக்கிலீக்ஸ் கசிவுகள் பக்கம்
பக்கமாய்ப் பேசுவது,
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கமான கூட்டை ஏற்படுத்திக்
கொள்வதற்காக எத்தனை தூரம் செல்ல காங்கிரஸ் கட்சி தயாராய் இருந்தது என்பதை மட்டுமல்ல,
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பெருநிறுவன ஊடகங்கள் உலகின் இரண்டு
மக்கட்தொகையில் பெரிய ஜனநாயகங்களாக இடைவிடாது பிரச்சாரம் செய்கிற அரசாங்கங்கள்
ஜனநாயகத்திற்கு கொண்டுள்ள உறுதிப்பாட்டைக் குறித்தும் தான் பேசுகிறது.
நம்பிக்கை
வாக்கெடுப்பில் வெல்வதற்கு இலஞ்சத்தைப் பயன்படுத்த காங்கிரஸ் தலைமை கொஞ்சமும்
வெட்கமின்றி செயல்பட்டது,
அத்துடன் இந்திய-அமெரிக்க
அணு ஒப்பந்தம் முன்னே செல்வதற்காக சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான அனைத்து
நடவடிக்கைகளுக்கும் தான் தயாராக இருப்பதை அமெரிக்காவை அறிந்து கொள்ளச் செய்வதில்
அது மிக ஆர்வத்துடன் இருந்தது.
அமெரிக்கா
இதைப் பேசாது விட்டு விடும் என்பதை மட்டுமல்ல,
நாடாளுமன்றத்தின் விருப்பத்தையே திசைதிருப்புவதற்கும் அரசாங்கம்
தயாராக இருக்கும் நிலையை அமெரிக்காவுடன் ஒரு மூலோபாயக் கூட்டிற்கான அவர்களது
மற்றும் இந்திய உயரடுக்கினது ஆதாரமாகக் கருதும் என்று அவர்கள் சரியாகவே கணக்குப்
போட்டிருந்தனர்.
2008
ஜூலை
22
அன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக,
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான டேனா பரினோ பிரதமர்
மன்மோகன் சிங் மீது புகழ்மழை பொழிந்தார்.
“இந்தியாவில் அரசியல் என்பது கையாள எவ்வளவு சிரமம் என்பது எல்லோரும்
அறிந்தது தான்,
ஆனால் அவர் அதில் வீரத்துடன் நடத்திச் சென்று கொண்டிருக்கிறார்,
ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்” என்று
செய்தியாளர்களிடம் இவர் கூறினார்.
ஐமுகூ
அரசாங்கம் வாக்கெடுப்பில் தப்பிய உடனேயே அப்போது அமெரிக்கத் தூதராக இருந்த டேவிட்
முல்போர்டு அறிவித்தார்:
“இந்திய அமெரிக்க சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு முன்முயற்சிக்கு
இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் ஆதரவை அமெரிக்கா வரவேற்கிறது.”
இந்த
ஆசிரியர் இதனையும் படிக்க பரிந்துரை செய்கிறார்:
Indian parliament gives green light to Indo-US nuclear treaty |