WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியா மீதான தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
தீவிரப்படுத்துகின்றன
By Tom Eley
22 March 2011
திங்களன்று
அமெரிக்கா,
பிரான்ஸ்
மற்றும்
பிரிட்டன்
ஆகிய
நாடுகள்
பெரிதும்
எதிர்ப்புத்திறனற்ற
லிபிய
பாதுகாப்புப்
படைகள்,
இராணுவக்
கட்டுமானங்கள்
மற்றும்
தலைநகர்
திரிபோலியில்
முயம்மர்
கடாபியின்
Bab al Aziziz
வீட்டு வளாகத்தின்
ஒரு
பகுதி
உட்பட,
சில
சிவிலிய
தளங்கள்
மீதான
தங்களுடைய
தாக்குதலை
அதிகரித்தன.
இத்தாக்குதலில்
நூற்றுக்கணக்கான
லிபியர்கள்
உயிரிழந்தனர்.
சனிக்கிழமையன்று
திரிபோலியில்
ஒரு
மருத்துவமனை
அழிக்கப்பட்டதில்,
லிபிய
அரசத்
தொலைக்காட்சியில்
கொடுக்கப்பட்ட
இறப்பு
எண்ணிக்கை
48
என்றும்
காயமுற்றவர்கள்
எண்ணிக்கை
150க்கும்
மேலாகவும்
உள்ளது.
இறந்தவர்களில்
பெரும்பாலானவர்கள்
சிறுவர்கள்
என்று
கூறப்படுகிறது.
எழுச்சியாளர்கள்
கட்டுப்பாட்டில்
இருக்கும்
பெங்காசியையும்,
கடாபியின்
கட்டுப்பாட்டிற்குள்
உள்ள
நகரமான
அஜ்டபியாவையும்
இணைக்கும்
நெடுஞ்சாலை,
கடாபியின்
அதிகாரத்திற்குள்
உள்ளது.
“இதில்
எங்கு
பார்த்தாலும்
கடாபியின்
ஆயுதங்கள்,
டாங்குகள்
ஆகியவற்றின்
சிதைவுகள்
சிதறிக்
கிடக்கின்றன”
என்று
திங்களன்று
AlJazeera
வின்
நிருபர்
டோனி
பிர்ட்லி
எழுதியுள்ளார்.
அமெரிக்க
ஜெட்டுக்களால்
படுகொலை
செய்யப்பட்ட
படையினர்கள்
ஒருதலைப்பட்சமாக
கடாபியினால்
அறிவிக்கப்பட்ட
போர்நிறுத்த
அறிவிப்பையடுத்து
பெங்காசியிலிருந்து
திரும்பிக்
கொண்டிருந்தனர்.
ஆனால்
அந்தப்
போர்
நிறுத்தம்
அமெரிக்கா
மற்றும்
அதன்
நட்பு
நாடுகளால்
நிராகரிக்கப்பட்டது.
மூன்று
நாட்களில்
இது
கடாபியின்
இரண்டாவது
போர் நிறுத்த
முறையீடு
ஆகும்.
பிரிட்டிஷாரால்
நடத்தப்பட்டது
எனக்
கூறப்படும்
Bab al Azizia
மீதான
க்ரூஸ்
ஏவுகணைத்
தாக்குதல்
ஏப்ரல்
1986ல்
இதே
வளாகத்தில்
ரேகன்
நிர்வாகத்தால்
கிட்டத்தட்ட
25
ஆண்டுகளுக்கு
முன்பு
நடத்தப்பட்டது.
அது
பயங்கரவாதத்திற்கு
எதிராக
என்று
கூறப்பட்டது.
அத்தாக்குதலிலும்
கடாபியின்
தத்ததெடுத்த
மகள்
உட்பட
டஜன்
கணக்கான
மக்கள்
கொல்லப்பட்டனர்.
லிபியா மீதான
தாக்குதலில்
அமெரிக்காவின்
பங்கு
இரண்டாம்
நிலையில்தான்
என்று
சித்தரித்துக்
காட்டப்படும்
முயற்சிகள்
இருந்தாலும்கூட,
வாஷிங்டனானது
செயற்பாடுகளின்
மீதான
கட்டுப்பாட்டைக்
கொண்டுள்ளது.
அமெரிக்க
இராணுவம்
பெரும்பாலான
க்ரூஸ்
ஏவுகணைத்
தாக்குதல்களை
நடத்தியது.
ஞாயிறன்று
அது
பலவித
கண்காணிப்பு
நடவடிக்கைகளையும்
மேற்கொண்டது.
மூன்று
அமெரிக்க
B-2
ஸ்டெல்த்
விமானங்கள்
45
இரண்டாயிரம்
பவுண்டு
குண்டுகள் மற்றும்
90,000
பவுண்டுகள்
என்று
மொத்தத்தில்
வீசின.
இவை
Missouri
இலுள்ள
தங்கள்
தளத்திலிருந்து
வந்துவிட்டுச்
சென்ற
முறையில்
நடத்தப்பட்டன.
நீண்ட
தூர
குண்டுகள்
திரிபோலிக்கு
மேற்கில்
மிஸ்ரடாவிலுள்ள
விமானத்
தளம்
ஒன்றை
அழித்து
விட்டதாகக்
கூறப்படுகிறது.
அமெரிக்கா
இதுவரை
124 Tomahawk
க்ரூஸ்
ஏவுகணைகளை
கடற்படைக்
கப்பல்களிலிருந்து
ஏவியுள்ளது.
இத்தாலி,
ஸ்பெயின்,
கனடா,
பெல்ஜியம்,
டென்மார்க்,
நோர்வே,
கிரேக்கம்
மற்றும்
கட்டார்
ஆகியவையும்
இராணுவ நடவடிக்கைகளில்
பங்குகொண்டன.
வெள்ளை
மாளிகையும்
பிரிட்டிஷ்
பிரதம
மந்திரி
டேவிட்
காமெரோனும்
“Odyssey Dawn”
என்று
அழைக்கப்படும்
இந்த
குண்டுத்
தாக்குதலானது
காலம்
கடந்துவிட்ட
சோவியத்
தொழில்நுட்பத்தின்
அடிப்படையிலிருந்த
லிபிய
வான்
பாதுகாப்பு
முறையை
ஏற்கனவே
முடக்கியுள்ளதாகக்
கூறுகின்றனர்.
“இப்பொழுது
அடிப்படையில்
ஒரு
பறக்கக்கூடாத
பகுதி
வந்துவிட்டது
எனலாம்”
என்று
வெள்ளை மாளிகை
செய்தித்
தொடர்பாளர்
ABC News
இடம்
கூறினார்.
ஒரு
பறக்கக்
கூடாத
பகுதி
ஏற்கனவே
திறமையுடன்
நிறுவப்பட்டுவிட்டாலும்கூட,
மேற்கத்தைய
சக்திகள்
தங்கள்
ஏவுகணைத்
தாக்குதல்களை
விரைவுபடுத்துவதனூடாக,
செயற்பாட்டின்
ஒரே
நோக்கம்
குடிமக்களைப் பாதுகாத்தல்
என்பது
ஒரு
பொய்தான்
என்பதை
அம்பலப்படுத்தியுள்ளன.
திங்களன்று
சிலி
நாட்டிற்கு
அரசப்
பயணத்தை
மேற்கொண்டிருந்த
ஒபாமா,
“கடாபி
வெளியேற
வேண்டும்
என்பது
அமெரிக்கக்
கொள்கை”
என்றார்.
பிரிட்டனின்
பாதுகாப்பு
மந்திரி
Liam
Fox
கடந்த
வார
இறுதியில்
பேட்டியொன்றில்
அமெரிக்கா
மற்றும்
நட்பு நாடுகளின்
ஏவுகணைகள்,
குண்டுகளின்
“நெறியான
இலக்கு கடாபி தான்”
என்று
கூறினார்.
மேற்கத்தைய கூட்டணிச்
சக்திகள்,
பெங்காசியை
தளமாகக்
கொண்ட
லிபியத்
ஆளும்தட்டின்
போட்டிப்
பிரிவு
ஒன்றின்
சார்பாக
ஓர்
உள்நாட்டுப் போரில்
தலையிட்டுள்ளன.
இதன்
படைப் பிரிவுகளுக்கு
எகிப்திய
இராணுவத்தால்
ஆயுதங்கள்
கொடுக்கப்பட்டன
என்று
கூறப்படுகிறது.
மூன்று
நாட்களுக்கு
முன்
தவிர்க்கமுடியாத
தோல்வியை
எதிர்கொண்ட
எழுச்சி
சக்திகள்
திங்களன்று
பெங்காசியை
விட்டு
விலகி
கடாபித்
துருப்புக்களின்
கட்டுப்பாட்டிலுள்ள
அண்டை
நகரங்கள் மீது
தாக்குதல்
நடத்தின.
அவை
அஜ்டபியா
நகரத்திற்கு
அருகே
முன்னேறிவிட்டன
என்றும்
ஆனால்
“கடாபியின்
துருப்புக்களின்
கடினமான
குண்டுத் தாக்குதலின்போது
சிதைந்து
பின்வாங்கின”
என்றும்
அல்
ஜசீரா
தெரிவிக்கிறது.
மேற்கத்தைய
வான்
பாதுகாப்பில்
திரிபோலிக்கு
எழுச்சிப் படைகள்
முன்னேறுமானால்,
ஒரு
பெரும்
குருதிகொட்டும்
மோதலுக்கான
அரங்கம்
அமையும்.
நடவடிக்கையின்
தளபதியான
அமெரிக்க
இராணுவத்தின்
ஜெனரல்
கார்ட்டர்
எப்.ஹாம்
திங்களன்று
கூட்டணி
இப்பொழுது
பறக்கக்
கூடாத
பகுதியில்
பரப்பை
மற்ற
நகரங்களுக்கும்,
திரிபோலி
உட்பட
அதிகப்படுத்தும்
என்றார்.
அங்குதான்
லிபியாவின்
வான்
பாதுகாப்பு
முறைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
“ஆட்சியின்
நகரும்
வான்
பாதுகாப்பு
முறைகளை
நாங்கள்
எதிர்கொள்ள
நேரிடலாம்……
அவற்றை
உறுதியாகத்
தாக்குவோம்”
என்று
ஹாம்
அறிவித்தார்.
திங்களன்று
தாக்குதல்களுக்கு
எதிரான
சர்வதேசக்
கண்டனங்கள்
அதிகரித்தன.
அமெரிக்கா,
பிரான்ஸ்
மற்றும்
பிரிட்டன்
ஆகியவை
ஐ.நா.தீர்மானத்தின்
மறைப்பில்
செயல்பட்டாலும்,
உத்தியோகபூர்வ
நேட்டோ
அமைப்புக்களுக்கு
புறத்தே
செயல்படுகின்றன.
முறையான
நேட்டோ
பங்கு
பெறுதல்
என்பது
துருக்கியால்
தடுக்கப்பட்டுள்ளது.
இது
கடாபி
ஆட்சிக்கு
எதிரான
இராணுவ
நடவடிக்கையை
எதிர்க்கிறது.
திங்களன்று
ரஷ்ய
பிரதம
மந்திரி
விளாடிமீர்
புட்டின்
நடவடிக்கைகளை
“மத்திய
காலத்தில்
அழைப்புவிடப்பட்ட நீண்ட போர்
போல்
உள்ளது”
என்று
கண்டித்து,
இதை
அனுமதித்த
ஐ.நா.பாதுகாப்புத்
தீர்மானம்
“தவறானது,
குறையுள்ளது”
என்றும்
கூறினார்.
சீனா,
பிரேசில்,
இந்தியா
மற்றும்
ஜேர்மனியுடன்
இணைந்து
ரஷ்யா
தீர்மானத்தின் மீது
வாக்கெடுப்பில்
பங்கு
பெறவில்லை.
இதையொட்டி
அமெரிக்கா,
பிரான்ஸ்
மற்றும்
பிரிட்டன்
ஆகியவை
ஆக்கிரமிப்புப்
போர்
ஒன்றிற்கு
நலிந்த
இராஜதந்திர
முறையைப்
பெற்றுள்ளன.
ஆபிரிக்க
ஒன்றியக் கூட்டம்
ஒன்றில்
பேசிய
தென்னாபிரிக்க
ஜனாதிபதி
ஜாகப்
ஜுமா
திங்களன்று
அவருடைய
அரசாங்கம்
“ஆட்சி மாற்றக்
கோட்பாட்டை
எதிர்க்கிறது…
இதேபோல்
லிபியாவில்
வெளிநாட்டு
ஆக்கிரமிப்பையும்
எதிர்க்கிறது”
என்றார்.
கடாபிக்கும்
எழுச்சிப் படைகளுக்கும்
இடையே
ஒரு
சமாதான
உடன்படிக்கையைக்
கொண்டுவரும்
நோக்கத்தில்
திரிபோலிக்குச்
செல்லவிருந்த
ஆபிரிக்க
ஒன்றிய
உயர்மட்டக் குழுவின்
ஒரு
பகுதியாக
ஜுமா
இருந்தார்.
ஆனால்,
அமெரிக்கத்
தலைமையிலான
கூட்டணி
இக்குழுவினர்
அங்கு
இறங்க
அனுமதிக்கவில்லை.
உடனடியாக
வான்
தாக்குதல்கள்
நிறுத்தப்பட
வேண்டும்
என்று
இந்தியா
அழைப்பு
விடுத்துள்ளது.
சீனா
திங்களன்று
லிபியா
பற்றி
விவாதிக்க
ஐ.நா.பாதுகாப்புச்
சபையைக்
கூட்டியுள்ளது.
கெய்ரோவில்
ஐ.நா.பொதுச்
செயலாளர்
பான்
கி-மூன்
லிபியாவிற்கு
எதிராக
நடத்தப்படும்
குண்டு
வீச்சுக்களுக்கு
எதிர்ப்புத்
தெரிவித்த
டஜன்
கணக்கான
மக்களால்
சூழப்பட்டார்.
திங்களன்று
தஹ்ரிர்
சதுக்கத்திற்கு
பென்
செல்ல
இருந்தார்.
ஆனால்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
அவரை
அரபு
லீக்
அலுவலகங்களுக்குள்
திரும்பச்
செல்லுமாறு
கட்டாயப்படுத்திவிட்டனர்.
திங்களன்று
கூட்டணியே
சிதையும்
அடையாளத்தைக்
காட்டியது.
இத்தாலி
மற்றும்
நோர்வே
இரண்டும்
போரின்
தற்காலிகத்
தன்மையை
எதிர்த்துள்ளன.
இது
அமெரிக்கா,
பிரிட்டன்
மற்றும்
பிரான்ஸ்
ஆகியவற்றின்
ஆணையின்
பேரில்
நடைபெறுகிறது.
ஒரு
நேட்டோ
கட்டுப்பாட்டிற்குள்
இயங்கும்
அமைப்பு
முறை
ஏற்படுத்தப்படும்
வரை
தன்னுடைய
ஜெட்டுக்கள்
பங்குபற்றாது
என
நோர்வே
கூறியுள்ளது.
இத்தாலிய
வெளியுறவு
மந்திரி
பிராங்கோ
பிரட்டனி
நடவடிக்கைகள்
நேட்டோவின்
கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவரப்படாவிட்டால்
லிபியாவிற்கு
எதிரான
நடவடிக்கைகளுக்குத்
தன்
இராணுவத்
தளங்கள்
பயன்படுத்தப்படுவதை
நிறுத்தக்கூடும்
என்று
கூறியுள்ளார்.
இத்தாலி
லிபியாவின்
மிக
நெருக்கமான
ஐரோப்பிய
அண்டை
நாடு
ஆகும்.
பிரிட்டன்,
பிரான்ஸ்
மற்றும்
அமெரிக்கா
ஆகியவை
வான்
தாக்குதல்களை
தங்கள்
பகுதிகளிலிருந்து,
லிபிய
கடல் பகுதியிலுள்ள
விமானத்தளங்கள்
கொண்ட
கப்பல்களிலிருந்துதான்
நடத்தின.
இத்தாலி
இப்பிராந்தியத்தின்
முன்னாள்
காலனித்துவ
சக்தியாகும்.
1913ல்
இருந்து
1934
வரை
இப்பகுதியைச்
சமாதானப்படுத்தும்
அதன்
முயற்சி
பல்லாயிரக்கணக்கான
லிபியர்களின்
உயிர்களைக்
குடித்தன.
முதலில்
இது
ஜேர்மனியுடன்
சேர்ந்து
இராணுவத் தலையீட்டை
எதிர்த்தது.
பின்னர்
ஒபாமா
நிர்வாகம்
போர்
முறைக்கு
மாறியதும்
தன்
போக்கையும்
மாற்றிக்
கொண்டது.
பிரதம
மந்திரி
சில்வியோ
பெர்லுஸ்கோனியின்
கீழ்
இத்தாலி
கடாபியுடன்
நெருக்கமான
உறவுகளை இணைந்துக்
கொண்டது.
லிபியாவில்
மேற்கத்தைய
சக்திகளிலேயே
மிகப்
பரந்த
நலன்களைக்
கொண்டுள்ளது.
La
Repubblica
கருத்துப்படி
“இத்தாலி
ஒதுங்கி
இருக்கும்
நிலையைப்
பெறக்கூடாது,
மற்றவர்கள்
எடுக்கும்
முடிவுகளின்
விளைவுகளை
மட்டும்
பெற்றுவிடக்கூடாது”
என்று
பெர்லுஸ்கோனி
கூறினார்.
மேலும்
“எண்ணெய்
மற்றும்
எரிவாயு
தொடர்புடைய
வணிக
ஒப்பந்தங்கள்
மதிக்கப்பட
வேண்டும்
என்ற
தீர்மானத்தையும்
இத்தாலி
கோருகிறது”
என்று
செய்தித்தாள்
கூறியுள்ளது.
நடவடிக்கைகள்
நேட்டோ
கட்டுப்பாட்டின்கீழ்
இருக்க
வேண்டும்
என்று
பிரிட்டனும்
வாதிட்டாலும்,
அத்தகைய
போக்கிற்கு
பிரான்ஸ்
எதிர்ப்புத்
தெரிவித்துள்ளது.
வெளியுறவு
மந்திரி
அலன்
யூப்பே,
பிரஸ்ஸல்ஸில்
திங்களன்று
நடைபெற்ற
ஐரோப்பிய
வெளியுறவு
மந்திரிகள்
கூட்டத்தில்
குண்டுத்
தாக்குதல்களுக்கு
“ஒரு
சில
நாட்களுக்குள்
நேட்டோ
ஆதரவைக் கொடுக்க
வரும்”
என்றார்.
ஐரோப்பிய
சக்திகளிடையே
ஜேர்மனிதான்
குண்டுத்
தாக்குதல்
குறித்து
கடுமையாக
விமர்சித்துள்ளது.
வெளியுறவு
மந்திரி
கீடோ
வெஸ்டர்வெல
இந்த
நிலைப்பாட்டை
பிரஸ்ஸல்ஸில்
நடைபெற்ற
ஐரோப்பிய
ஒன்றியக்
கூட்டத்தில்
வலியுறுத்தினார்.
“ஜேர்மனிய
படையினர்கள்
லிபியாவிற்கு
அனுப்பப்பட
மாட்டார்கள்.
ஏனெனில்
இப்போர்
லிபியாவோடு
நிற்காமல்
பிராந்தியம்
முழுவதுமே
பரவக்கூடிய
ஆபத்தைக்
கொண்டுள்ளது”
என்றார்
அவர்.
அதே
நேரத்தில்
பொருளாதாரத்
தடைகளுக்குத்
தன்
அரசாங்கத்தின்
ஆதரவை
அவர்
வலியுறுத்தினார்.
லிபியாவின்
வணிகப்
பங்காளி
என்ற
முறையில்
பிரான்ஸ்,
இத்தாலி,
ஜேர்மனி
ஆகிய
நாடுகளுக்கு
அடுத்து
இருக்கிறது.
பிரிட்டன்
துருக்கியை
அடுத்து
ஏழாவது
இடத்தில்
உள்ளது.
லிபிய
வணிகத்தில்
6
சதவிகிதத்திற்கும்
குறைவாக
அமெரிக்கா கொண்டுள்ளது.
இது
கிட்டத்தட்ட
சீனாவின்
பங்கு
போல்தான்
உள்ளது.
அமெரிக்காவின்
வெள்ளை
மாளிகையானது
காங்கிரஸில்
ஒப்புதல்
ஒருபுறம்
இருக்க,
விவாதம்
கூட
இல்லாமல்
ஒருதலைப்பட்ச
இராணுவ
சக்தி
பயன்படுத்தப்படுவது
பற்றிச்
சில
குடியரசு
மற்றும்
ஜனநாயகக் கட்சிகளின்
சட்டமியற்றுபவர்களின்
வெற்றுத்தன
குறைகூறலை
எதிர்கொண்டுள்ளது
ஒபாமா
நிர்வாகத்தின்
அதிகாரிகள்
தாங்கள்
காங்கிரசை
தாக்குதல்களைத்
தொடர்வதற்கு
முன்னதாக
“கலந்து
ஆலோசித்ததாக”
வலியுறுத்தியுள்ளனர்.
“கலந்து
ஆலோசிக்கும்
தன்மை
பற்றி
நாங்கள்
தீவிர
உணர்வைக்
கொண்டுள்ளோம்”
என்று
ஒரு
வெள்ளை
மாளிகை
மூத்த
அதிகாரி
கூறினார். |