World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The bombing of Gaddafi’s compound

கடாபி வீட்டுவளாகத்தின் மீது குண்டுவீச்சு

22 March 2011
Barry Grey
Back to screen version

ஞாயிறன்று இரவு திரிபொலியில் லிபிய தலைவர் மௌம்மர் கடாபியின் வீட்டு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் தொடங்கப்பட்ட யுத்தத்தின் குற்றவியல் குணாம்சத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காகவே ஒரு "மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை" மேற்கொள்ளப்படுவதாக கூறும் மனிதாபிமான போலித்தனங்களையும் அது அம்பலப்படுத்தி உள்ளது.  

பிரிட்டிஷ் நீர்மூழ்கி கப்பலால் வீசப்பட்ட கடற்படை ஏவுகணை, ஒரு மூன்று-மாடி கட்டிடத்த்தை தரைமட்டமாக்கியதாக செய்திகள் குறிப்பிட்டன. உண்மையில் பாதுகாப்பற்ற ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சால் நடத்தப்பட்டுவரும் பெரும் விமான தாக்குதலில் கடாபி தான் உத்தியோகபூர்வ இலக்காக இருந்தார் என்று ஞாயிறன்று காலை, பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை செயலர் லியம் பாக்ஸ் கூறியிருந்தார்

ஆபிரிக்காவிற்கான மற்றும் லிபியாவில் தாக்குதல் நடத்தும் ஒட்டுமொத்த படைகளுக்கான அமெரிக்காவின் தலைவர், அமெரிக்க ஜெனரல் கார்டர் ஹாம், திங்களன்று ஜேர்மனியில் பேசுகையில், கடாபி குறிவைக்கப்படவில்லை என்று மறுத்தார். அதேநேரம், அந்த ஆட்சியின் "அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டுத் திறனைக்" குறைக்கும் முயற்சிகளின் ஒரு பாகமாகவே அது நடத்தப்பட்டதாக அவர் அந்த ஏவுகணை தாக்குதலை நியாயப்படுத்தினார். 

M16 உளவுவிமானங்கள் கடாபியின் தளபதிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்கள் தோற்கும்வரை ஏவுகணை தாக்குதலுக்கு அவர்கள் இலக்காக்கப்படுவார்கள் என்று எச்சரித்ததாக, பிரிட்டிஷின் Daily Mail இதழ் திங்களன்று அறிவித்தது.

இராணுவ மற்றும் பொதுமக்கள் இலக்குகள்மீதும் தாறுமாறாக தாக்குதல் நடத்த, வெளிப்பார்வைக்கு ஒரு பறக்க-தடைவிதிக்கப்பட்ட வலயத்திற்கு அதிகாரம் வழங்கிய .நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஒரு சட்டப்பூர்வ மூடுதிரையைப் பயன்படுத்திவரும் அமெரிக்கா தலைமையிலான யுத்த கூட்டணியின் திமிர்தனத்தை, கடாபியின் குடியிருப்புமீது வீசப்பட்ட குண்டுவீச்சு எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை, மாறாக கடாபியின் இராணுவ உள்கட்டமைப்பை அழிக்க, சாத்தியப்பட்டால், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் எண்ணெய்வளத்தைத் தேடும் மேற்கத்திய கூட்டணிக்கு இன்னும் அதிகமாக அடிபணிந்த கருவிகளைக் கொண்டு அந்த சர்வாதிகார ஆட்சியை மாற்றியமைக்க, அந்த அரசின் தலைவரையே படுகொலை செய்யவதுமே அதன் நோக்கமாகும்

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பிருந்த சர்வதேச நாடுகளின் சங்கத்தைத் "திருடர்களின் சமையலறை" என்று தகுதிப்படுத்திய லெனின் கூற்றை மெய்பித்துக் காட்டும் வகையில், மீண்டுமொருமுறை, ஐக்கிய நாடுகள் சபை அது முக்கிய சக்திகளின் ஒரு கைக்கருவியே தவிர, வேறொன்றுமில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த தாக்குதல் நடந்த வேளையில் அங்கே கட்டிடத்தில் கடாபியின் ஆதரவாளர்கள் சுமார் 300 நபர்கள் இருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த தாக்குதலில் யாரும் காயப்பட்டதாக லிபிய அரசாங்கம் அறிவிக்கவில்லை.

ஈராக் ஆக்கிரமிப்பின் எட்டாம் ஆண்டுதினத்தில் இந்த யுத்தத்தைத் தொடக்கி வைத்தும், கடாபியின் தத்தெடுக்கப்பட்ட மகள் உட்பட 60 லிபியர்களின் உயிர்களைப் பறித்த, அதே இடத்தில் ரீகன் குண்டுவீசியதிலிருந்து 25 ஆண்டுகள் நிறைவுபெற வெறுமனே இன்னும் ஓர் ஆண்டு இருக்கின்ற நிலையில், அதேயிடத்தில் கடாபியின் வீட்டுவளாகத்தின் மீது குண்டுவீசியும், ரோனால்டு ரீகன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காட்டுமிராண்டித்தன மகுடத்தைப் பறிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர் பாதையில் செல்வதாக தோன்றுகிறது.

ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சிறியளவிலான வரையறுக்கப்பட்ட தலையீடு என்று பேசப்படும் அனைத்து வார்த்தை ஜாலங்களையும் பொறுத்த வரையில், கடாபியின் படைகளுக்கு எதிராக "தேவையான எல்லா முறைமைகளையும்" அங்கீகரித்து, கடந்த வியாழனன்று கொண்டு வரப்பட்ட .நா. சபையின் தீர்மான மொழிக்காகவே அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததது. இது ஓர் ஒட்டுமொத்த யுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டியது.

 “ஆக்கிரமிப்பு துருப்புகள்" தடை செய்யப்பட்டிருப்பதாக கூறுவது, மற்றொரு ஏமாற்றுத்தனமாகும். .நா. சபை தீர்மானத்தை மீறாமல், ஆயுத தடையாணையைக் கண்காணிக்கும் நோக்கத்திற்காக பிரிட்டிஷ் துருப்புகள் நிறுத்தப்படலாம் என்று ஏற்கனவே பிரிட்டிஷ் கேபினட் மந்திரிகளுக்கு, பிரதம மந்திரி டேவிட் கேமிரோன் கூறி வருகிறார்.

தனது அணுசக்தி ஆலைகளை மூடவும், அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" இணைந்து செயல்படவும், மேற்கத்திய நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய்யில் சலுகைகள் வழங்கவும் ஒப்புக்கொண்டு, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களுடனான உறவுகளில் கடந்த தசாப்தத்தில், கடாபி இதமாக குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அமெரிக்க ஆளும் மேற்தட்டின் மும்முரமான முயற்சிகள் இருந்த போதினும், அவற்றின் பூகோள-மூலோபாய நோக்கங்களில் இடக்கு-முடக்காக சிக்கி கொண்ட கடாபி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்பிருந்த சொத்துக்கள் என்ற நீண்ட பட்டியலில் இப்போது அவரும் சேர்ந்துவிட்டார். பனாமாவின் நோரிகா, சோமாலியாவின் அய்டிட், சேர்பியாவின் மிலோசெவிக் மற்றும் சதாம் ஹூசைன் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளடங்குகிறார்கள்.   

வடக்கு ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் பெரும்பகுதிகளில் சுற்றி வளைத்திருக்கும் புரட்சிகர அலையை தீர்க்கமாக நசுக்குவதற்கான, மற்றும் தணிப்பதற்கான அமெரிக்காவின் பரந்த போராட்டத்தில், கடாபி விலையாகிறார். லிபியாவின் கிழக்கில் கடாபிக்கு எதிராக எழுந்த எழுச்சியை (ஒருவேளை அந்த எழுச்சியில் அதனது கை இருந்திருக்கலாம்) வாஷிங்டன் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக எகிப்து மற்றும் சவூதி அரேபியாவில், சோசலிச புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் அமெரிக்கா செயல்படும் வகையில், கடாபியை நீக்கிவிட்டு, அங்கேயொரு புதிய காலனித்துவ-பாணியிலான ஓர் ஆட்சியைக் கொண்டுவரவும், மற்றும் அதன் முக்கிய கூட்டாளியான இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காகவும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.      

திங்களன்று திரிபொலியிலும், ஏனைய நகரங்களிலும் குண்டுவீச்சு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், எரிந்த டாங்கிகளின் புகையும், பின்வாங்கிய கடாபி துருப்புகளின் கருகிய உடல்களும், பென்காஜிக்கும் ஏனைய நகரங்களுக்கும் வெளியில் சாலைகளில் சிதறிக்கிடந்தது. இந்த இரத்த ஆறு ஒடுவதன் நோக்கமே கடாபியை நீக்குவது தான் என்று ஒபாமா அழுந்தந்திருத்தமாய் தெரிவித்தார். “கடாபி வெளியேற வேண்டும் என்பது தான் இப்போதும் அமெரிக்காவின் கொள்கையாக உள்ளது" என்று அவர் சிலியில் சாண்டியாகோ பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.    

குறிப்பிடத்தக்க இரட்டை அரத்த்த்துடனான வசனத்துடன், லிபிய மக்கள் அவர்களின் சொந்த தலைவிதியை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளுடன், ஆட்சி மாற்றத்திற்கான கோரிக்கையை இணைக்க ஒபாமாவும், ஐரோப்பாவில் அவரின் கூட்டினரும் கோரியுள்ளனர். உண்மையில், லிபியாவிலும், அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள பல்வேறு முதலாளித்துவ தலையாட்டி ஆட்சிகளைத் தீர்த்துகட்டவும், தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தை அவற்றின் சொந்த கைகளில் எடுத்து ஏகாதிபத்தியத்தின் இரும்புப்பிடியைப் உடைக்க, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அது தலைமைகொடுத்து சென்றுவிடாமல் தடுப்பதே, லிபியாவிற்கு எதிரான தாக்குதலின் முக்கியமான நோக்கமாகும்.

லிபியாவின் தாக்குதலில் இருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கு, மற்றொரு உள்நோக்கமும் உள்ளது. வாஷிங்டன் அதன் கட்டளைகளை எதிர்த்து நிற்க, விதிவிலக்காக கூட எந்த தலைவரையும் அனுமதிக்காது. இதை ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் லீபர்மான், ஞாயிறு நேருக்குநேர் நிகழ்ச்சியில் மறைமுகமாக குறிப்பிட்டார், அவர், அமெரிக்காவின் சர்வதேச அந்தஸ்து சம்பந்தப்பட்டிருப்பதால், கடாபி இராஜினாமா செய்ய வேண்டுமென்று அமெரிக்கா கோரினால் அவர் கீழ் இறங்கித்தான் ஆக வேண்டும் என்று கூறினார்.

எல்லா ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் லிபியா ஒரு முன்மாதிரி பாடமாக ஆகியுள்ளது. பாரிய ஆயுதசக்தியைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாக மரணங்களையும், பேரழிவுகளையும் கொண்டுவர ஏகாதிபத்திய சக்திகள் காட்டியிருக்கும் ஆற்றலின் நோக்கம், அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சிகரமான விருப்பங்களை அச்சுறுத்துவதேயாகும்.   

ஏகாதிபத்தியத்தின் வன்முறை, ஆழ்ந்துவரும் பொருளாதார, சமூக, அரசியல் முரண்பாடுகளாலும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் உடைவிலிருந்து எழுந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரப்பட்டிருப்பதினாலும் தூண்டப்பட்டுள்ளது. இப்போதைய யுத்தத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் தீவிர பாத்திரம், தலைமையை ஏற்க அமெரிக்காவின் தாமதமான, அவசரகதியிலான முயற்சிகள், இராணுவ தலையீட்டிற்கு ரஷ்யா மற்றும் ஜேர்மனியின் எதிர்ப்பு அனைத்தும் ஆபிரிக்கா, மத்தியகிழக்கு மற்றும் அதற்கும்அப்பால் உள்ள சந்தைகளையும் மற்றும் மூலவளங்களை கட்டுப்படுத்துவதற்கும்  முக்கிய சக்திகளுக்கு இடையில் போட்டி அதிகப்பட்டிருப்பதை எதிரொலிக்கிறது

இந்த நிலைமைகளின்கீழ், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஏற்பட்ட சர்வதேச சட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் பொறிந்து போயுள்ளது. இந்த இடத்தை, சித்திரவதை, இலக்குவைத்து படுகொலை செய்வது போன்ற நடைமுறைகளுடன், வெளிநாட்டு கொள்கையின் ஒரு சட்டப்பூர்வ கருவியாக யுத்தத்தின் புதிய உறுதிமொழிகள் வந்து நிரப்பியுள்ளது.

லிபியாவில் சட்டமீறல் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் புதிய வெடிப்பில் உள்ளடங்கியிருப்பது, உலக யுத்தத்தை நோக்கி முதலாளித்துவம் திரும்பியிருப்பதாகும். நான்காம் அகிலத்தின் 1938 ஸ்தாபக வேலைதிட்டத்தின் வரிகள் இன்றைய பரந்தமட்டில் இணக்கமாக பொருந்தியுள்ளது: முதலாளித்துவ சிதைவின் அதிகரித்துவரும் பதட்டங்களின்கீழ், ஏகாதிபத்திய அராஜகவாதங்கள் ஒரு முட்டுச்சந்தை எட்டும். அதன் உச்சக்கட்டத்தில் உலக பரிணாமத்தின் ஒரு காட்டுத்தீயினுள் தவிர்க்க இயலாமல் பிரத்தியேக நெருக்கடிகளும், இரத்தந்தோய்ந்த உள்நாட்டு குளப்பங்களும் (எதியோப்பியா, ஸ்பெயின், தொலைதூர கிழக்கு நாடுகள், மத்திய ஐரோப்பாஇணைந்திருக்கும்.”

அப்போதிருந்ததைப் போன்றே, இப்போதும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஓர் உலகளாவிய கலகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், சர்வதேச சோசலிச புரட்சியின் மூலமாக ஏகாதிபத்தியங்களை நிராயுதபாணியாக்குவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.