சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama and Libya

ஒபாமாவும் லிபியாவும்

21 March 2011
Bill Van Auken
Use this version to print | Send feedback

மத்தியகிழக்கிலுள்ள பெரிதும் பாதுகாப்பற்ற ஒரு நாட்டிற்கு எதிராக ஒபாமா நிர்வாகம் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தைத் தொடுத்துள்ளது. ஏற்கனவே பலர் உயரிழந்துள்ளதுடன் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ள லிபிய நகரங்களின் மற்றும் இராணுவ நிலைகள் மீதும் கடலில் இருந்து ஏவுகணைகளையும் மற்றும் குண்டுகளை வீசவும் அது உத்தரவிட்டுள்ளது.    

பென்டகனின் ஒரு பிரச்சார ஆயுதமாக அவற்றின் சேவைகளை வழங்கிவரும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்களில் சில மீண்டுமொருமுறை, ஈராக் யுத்தத்தைத் தொடக்கிவைத்த "அதிரடி-அச்சுறுத்தும் பிரச்சாரத்தின் எட்டாவது ஆண்டில் இந்த புதிய யுத்தமும் தொடங்கியுள்ளதாக குறிப்பிட வேண்டிய சங்கடத்திற்குள்ளாகி உள்ளன. நூறு ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்திருக்கும் அந்த யுத்தம், ஈராக்கிய மண்ணில் இதுவரையில் குவிக்கப்பட்டிருக்கும் சுமார் 50,000 அமெரிக்க துருப்புகளுடன், இந்தநாள் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆத்திரத்தோடு ஒரு பாரிய யுத்த-எதிர்ப்புணர்விற்கு அழைப்புவிட்டு  அவருடைய நவம்பர் 2008 தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி பராக் ஒபாமா, ஆப்கானிஸ்தானில் யுத்தத்தைத் தீவிரப்படுத்தியதுடன், பாகிஸ்தானிற்குள்ளும் அதை விரிவாக்கினார். அத்துடன் சோமாலியா மற்றும் யேமனில் இராணுவ தலையீடுகளை விரிவாக்கும் நடவடிக்கைகளைச் செய்தார். இப்போது, அவர் அவருடைய அதிரடி அச்சுறுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதன் விளைவுகள் பெரும் நாசகரமானதாக தான் இருக்கும் என்று நம்புவதற்கு, அங்கே எல்லா காரணங்களும் அமைந்துள்ளன.   

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு வெறுமனே உதவி வருகிறது என்றும், வரம்புமீறாத இராணுவ நடவடிக்கையை" மட்டுமே கையாண்டு வருகிறது என்ற ஒபாமாவின் கூற்று, ஆக்கிரமிப்பிற்கான ஒரு புதிய யுத்தத்தில் கண்மூடித்தனமாக மூழ்கியிருக்கும் ஜனநாயக கட்சி நிர்வாகத்தின் போலித்தனத்தையும் அடாவடித்தனத்தையும் மற்றும் கோழைத்தனத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. லிபியா மீதான அமெரிக்க தாக்குதல் "இன்னும் ஒருசில வாரங்களில் அல்ல, ஒருசில நாட்களிலேயே" முடிவுக்கு வரும் என்று அவர் அவரின் ஆதரவாளர்களுக்கு அறிக்கையும், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியும் அளித்திருக்கின்ற நிலையில், "வாஷிங்டன் எந்த அமெரிக்க துருப்புகளையும் அந்த தரையில் இறக்காது" என்ற அவரின் தொடர்ச்சியான கூப்பாடுகள், அர்த்தமற்றவை.    

இத்தகைய ஒரு பொறுப்பற்ற வாய்ஜாலங்களில், ஒருவர் டோனால்டு ரூம்ஸ்பெல்டின் விருப்பங்களின் ஓர் எதிரொலியைக் காணலாம். அவர் ஈராக் யுத்தத்தின் போது ஊடகத்திற்கு பின்வருமாறு உத்தரவாதமளித்தார்: இன்று ஈராக்கில் இருக்கும் படைகளின் பயன்பாடு, ஐந்து நாட்களிலேயோ, அல்லது ஐந்து வாரங்களிலேயோ, அல்லது ஐந்து மாதங்களிலேயோ முடிந்துவிடும் என்று என்னால் உங்களுக்கு கூற முடியாது. ஆனால் நிச்சயமாக அதற்கு மேல் அது நீடிக்காது.     

ஈராக் யுத்த விளைவுகள் குறித்து ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷூக்கு அப்போதைய வெளிவிவகாரத்துறை செயலர் கொலின் பவுலால் எரிச்சரிக்கையால் தூண்டிவிடப்பட்ட, தளபாடக்கடை விதி என்றழைக்கப்பட்ட, அதாவது நீங்கள் அதை உடைத்துவிட்டால், அது உங்களுக்கு சொந்தமாகிவிடும் என்ற விதி, இன்றும் பொருந்தும். இப்போதிருக்கும் ஆட்சியை நீக்கும், அதிகாரத்தை இழக்கச்செய்யும் நோக்கில் யுத்தத்தைத் தொடுக்கும் ஒரு தர்க்கம், மூர்க்கத்தனமானதாகும். இத்தகைய ஒரு தாக்குதலை நடத்தும் ஏகாதிபத்திய சக்தி, அதன் விருப்பத்திற்கு ஏற்ற ஒரு புதிய ஆட்சியை வடிவமைப்பதில் ஆசை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் விளைவுகள் நிதர்சனமாக தெரிகின்றன: அதாவது காலனித்துவத்தின் மறு-உதயம், அங்கிருக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதை நோக்கமாக கொண்ட முடிவில்லா யுத்தம், கர்ஜாய் மற்றும் மலிக்கி போன்ற அரசியல் பிரங்கன்ஸ்ரைன் (Frankenstein) பேய்களை தூக்கி நிறுத்துவது போன்றவை.       

ஒபாமா நிர்வாகத்தின் அனுதாபிகள் (இவர்களில் பெரும்பான்மையினர் போலி-இடதின் பகுதியைச் சேர்ந்தவர்கள்), புஷ்ஷின்கீழ் தொடக்கப்பட்ட அந்த யுத்தங்களோடு இந்த இப்போதைய யுத்தத்தை ஒப்பிட முடியாது என்று வலியுறுத்துகின்றனர். இந்த வகையில், முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில், லிபிய மக்களைப் பாதுகாப்பதே நோக்கங்கள் என்று நமக்கு கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஐக்கிய நாடுகள் சபை அனுமதி அளிக்கப்பட்டு, அரபு லீக்காலும் கூட இந்த யுத்தம் அழைப்புவிடப்பட்டுள்ளது. இங்கே, ஒருதரப்பட்ட "புஷ் கோட்பாடிற்கு" வேறுபட்ட வகையில், பலதரப்பட்ட "ஒபாமா கோட்பாட்டை" நாம் காண்கின்றோம்.   

இவை அனைத்துமே பெரும் கண்துடைப்பாகும். பீரங்கிகள், துருப்புகள் மற்றும் நகர்புற இலக்குகளைத் தாக்குதல் அத்துடன் நீண்டகாலத்திற்கு இராணுவத்தை நிறுத்துதல் போன்ற குண்டுவீச்சின் அளவும், காட்டுமிராண்டித்தனமும், இராணுவ நடவடிக்கை பெரிதும் பொதுமக்களைப் பாதுகாப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டது  என்ற உத்திரவாதங்களை பொய்யென எடுத்துக்காட்டியுள்ளன.      

அமெரிக்காவால் நடத்தப்படும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும், பலவந்தத்தில் இருக்கும் மக்களை மீட்பதற்கான ஒரு மனிதாபிமான முயற்சியாகதான் எப்போதுமே நியாயப்படுத்தப்படுகிறது. 1993இல் சோமாலியா மீது நடத்தப்பட்ட திடீர் படையெடுப்பு, பொஸ்னியா தலையீடு, அந்த தசாப்தத்தின் இறுதியில் சேர்பியாவிற்கு எதிரான வான்வழி யுத்தம் அனைத்திலும் இதே நிலைமை தான் இருந்தது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பானது, தலிபான் மற்றும் அல்கொய்தாவிற்கு எதிராக ஆப்கான் மக்களைப் பாதுகாக்க ஒரு சிலுவையுத்தத்தின் ஒரு பாகமாக ஊக்குவிக்கப்பட்டது. ஈராக் யுத்தம், தனது சொந்த மக்களை விஷவாயுவினால் கொன்றுகுவித்த ஒரு தலைவருக்கு எதிராகவும், ஈராக்கிய மக்களுக்கு ஜனநாயகத்தின் ஆசிர்வாதங்களை வழங்குவதற்கும் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஊடகங்களால் சொல்லப்பட்டது.   

"ஒரு கொடுங்கோலன் அவருடைய மக்களைப் பார்த்து, 'இனி கருணை காட்ட முடியாது, தம்முடைய படைகள் அவற்றின் தாக்குதல்களை முன்னெடுக்கும்' என்று கூறும் போது, நாம் சும்மா பார்த்து கொண்டிருக்க முடியாது, என்று அறிவித்து, சனியன்று லிபியா மீதான யுத்தத்தை ஒபாமா நியாயப்படுத்தினார்.  

உண்மையில், பஹ்ரெயினில், ஆளும் அரசபரம்பரை வீதிகளில் நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்களைச் சுட்டு கொன்ற போது, ஒடுக்கப்பட்ட ஷியா பெரும்பான்மையினருக்கு எதிராக பிரிவினைவாத பயங்கரவாதத்தை அது கட்டவிழ்த்துவிட்ட போது, வாஷிங்டன் வெறுமனே பார்க்காமலா இருந்தது. அது மக்களின் எழுச்சியை நசுக்க, சவூதி அரேபியா மற்றும் ஏனைய சர்வாதிகார முடியாட்சிகளின் மற்றும் எமிரேட்களின் தலையீடுகளையும், ஒடுக்கமுறையையும் ஆதரித்துள்ளது.     

அதேபோல, வெள்ளியன்று யேமன் ஆட்சி குறைந்தபட்சம் 52 அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைப் படுகொலை செய்து, அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்த பின்னர், அந்த வன்முறைக்கு வெறுமனே "வருத்தம் தெரிவித்த" ஒபாமா நிர்வாகம், பேச்சுவார்த்தை" நடத்த வலியுறுத்தியதுடன், அலி அப்துல்லாஹ் சலாஹின் அமெரிக்க ஆதரவு-பெற்ற சர்வாதிகாரத்தின் "ஸ்திரப்பாட்டிற்கு" அது கொண்டிருக்கும் பொறுப்புகளையும் தெளிவுபடுத்தியது.    

எந்தமாதிரியான ஒடுக்குமுறை நடவடிக்கை அமெரிக்காவின் தலையீட்டைத் தீர்மானிக்கிறது என்பதற்கு ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தும் அளவுகோல், சர்வதேச நியாயத்திற்குரிய கொள்கைகள் அல்ல, மாறாக நிர்வாணமாகிநிற்கும் ஏகாதிபத்திய நலன்களே ஆகும்.

முதல் சான்றாக, எண்ணெய் வளத்திற்காகவும் (40 பில்லியன் பேரல்களுக்கும் மேலாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது), அடுத்தது பெருநிறுவன இலாபங்கள் மற்றும் அமெரிக்க மூலோபாய நலன்கள் இரண்டிலும் இந்த எண்ணெய்வளங்கள் கொண்டிருக்கும் தாக்கங்களுக்காகவும், முன்னர் ஈராக்கைப் போலவே, இப்போது லிபியா இலக்காகி உள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிலும் ஏனையவைகளிலும் தெளிவுபடுத்தப்பட்டதைப் போல, அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான உடனடி தூண்டுதல், லிபியாவில் கடாபி ஆட்சியால் தீவிரப்பட்ட ஒடுக்குமுறையோ அல்லது அரபு லீக்கின் அறிக்கையால் முன்வைக்கப்பட்ட நியாயப்படுத்தலோ அல்ல.

கடந்தகாலத்தில் அந்த அமைப்பிற்கு அது பகிரங்கமான வெறுப்பைக் காட்டுவதைப் போல, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டித்து வாஷிங்டன் பெயளவிற்கு அறிக்கைகளை பிறப்பித்தது. ஏகாதிபத்திய சக்திகள் என்ன செய்ய விரும்புகின்றனவோ அதை எப்படியாவது செய்து முடிக்க அது அழைப்புவிட்டது மட்டும் தான், ஓர் அதிகாரபூர்வமான குரலாக உருவாகியது.

குண்டுகளும், ஏவுகணைகளும் லிபியாவை தாக்க தொடங்கிய உடனேயே, அந்த லீக்கின் தலைவர் அமர் முசா, பொதுமக்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு வேண்டும், இன்னும் அதிகமாக அவர்களின் உயிரிழப்புகள் தேவையில்லை, என்று கூறி, அந்த நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். எகிப்தில் ஜனாதிபதியாக செயல்பட திட்டமிட்டு வரும் முசா, அவரின் பாதையைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். எகிப்திலும், அரேபிய உலகம் முழுவதிலும் பெரும்பான்மை மக்களால் அமெரிக்க தலைமையிலான தாக்குதல் எதிர்க்கப்படுகிறது என்பதை அவர் அறிவார்.

தலையீடு செய்ய மிகவும் தீவிரமாக இருந்த இங்கிலாந்து, மற்றும் குறிப்பாக பிரான்ஸின் சூழ்ச்சிகளால் ஒதுக்கப்பட்டு" விடுவோமோ என்ற அச்சத்தால் தான், ஒபாமா நிர்வாகம் இந்நடவடிக்கையில் இறங்க நிர்பந்திக்கப்பட்டதாக ஜேர்னல் குறிப்பிடுகிறது. 1956இல் சூயஸ் நெருக்கடியில் கடந்தமுறை ஆங்கிலோ-பிரெஞ்ச் இராணுவ தலையீட்டின் பின் அவற்றின் அடித்தளத்தை இழுத்த பின்னர், அப்பிராந்தியத்தில் ஸ்திரமாக உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைக்கு ஓர் உள்ளார்ந்த சவாலாக, இப்பிராந்தியத்தின் இரண்டு முன்னாள் காலனித்துவ சக்திகள் சொந்த விருப்பின்படி செயல்படுவதை வாஷிங்டன் ஏற்க விரும்பவில்லை.

லிபிய யுத்தத்தின் இதயமாக இருப்பது ஜனநாயக பொதுநலவாதம் அல்ல, மாறாக ஏகாதிபத்திய நலன்களும், தீவிரப்பட்டுவரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகும். முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்த காலக்கட்டங்களின் போது உலக முதலாளித்துவத்தை பிடித்துக் கொண்டிருந்த, அதே தொடர்ச்சியான தீவிர கொடிய நெருக்கடிகளை உலக நிலைமை இன்னும் இன்னும் அதிகமாக ஒன்று சேர்க்கிறது.    

1937இல், இரண்டாம் உலக யுத்தம் உருவான போது, பிராங்கிளின் டெலெனோ ரூஸ்வெல்ட் பாசிச ஆக்கிரமிப்பைத் "தனிமைப்படுத்த" அழைப்புவிடுத்து ஓர் உரை நிகழ்த்தினார். அவர் அமெரிக்க மக்களுக்குப் பின்வருமாறு அறிவித்தார்:

எந்தவொரு யுத்த பிரகடனமும் இல்லாமல், எந்தவொரு எச்சரிக்கையோ அல்லது எவ்விதமான நியாயப்படுத்தல் இல்லாமல் பெரும்பான்மை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, பொதுமக்கள் விமானங்களில் இருந்து வீசப்படும் குண்டுகளால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டு வருகிறார்கள். பலமுறை அமைதிக்காக என்று கூறிக்கொண்டு, கப்பல்கள் தாக்கப்படுகின்றன. எவ்வித எச்சரிக்கையோ அல்லது காரணமோ இல்லாமல் நீர்மூழ்கிகப்பல்களால் அவை மூழ்கடிக்கப்படுகின்றன. நாடுகள், அவற்றிற்கு எவ்வித அபாயத்தையும் ஒருபோதும் செய்திராத நாடுகளுக்குள் உள்நாட்டு யுத்தத்தை மூட்டிவிட்டு, அதன்பக்கம் சாய்கின்றன. தங்களின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நாடுகள், மற்றவைகளுக்கு சுதந்திரம் அளிக்க மறுக்கின்றன. நியாயம் மற்றும் மனிதாபிமானத்தைக் கவனிப்பதில் எல்லாவிதத்திலும் கையுதறிவிட்டிருக்கும் சக்திகளின் மற்றும் மேலாதிக்கத்தின் பேராசைக்கு அப்பாவி மக்களும், அப்பாவி நாடுகளும் கொடூரமாக தியாகம் செய்து வருகின்றன.  

ரூஸ்வெல்ட் அவரின் சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வந்தார். ஆனால், இருந்தபோதினும் அவருடைய கருத்துக்கள் ஜனநாயக கொள்கைகளின் ஒரு விழிப்புணர்வை பிரதிபலித்தது. ஆனால் இன்று அவை முற்றிலுமாக இல்லாமல் போயிருக்கிறது. காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அமெரிக்க மக்களின் சிறிதும் சம்மதமில்லாமல் ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடக்கியிருக்கும், "விமானவழி குண்டுவீச்சுகளுடன் படுகொலைகளையும், அமெரிக்காவிற்கு ஒன்றுமே செய்திராத ஒரு நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிடும் பக்கம் சாயும் ஒபாமா நிர்வாகத்தின் குற்றங்களுக்கு, நாஜி மற்றும் பாசிச ஆட்சிகளின் குற்றங்கள் குறித்த ரூஸ்வெல்டின் குற்றச்சாட்டுகள், எந்தவித மாற்றமும் இல்லாமல் தோற்றப்பாட்டளவில் பொருந்தி நிற்கின்றன.   

அமெரிக்க தொழிலாள வர்க்கம் அவற்றின் வாழக்கை தரங்கள், சமூக நிலைமைகள், அடிப்படை உரிமைகள் மீது இரண்டுமடங்கு அதிகமாக நடத்தப்படும் தீவிர தாக்குதலுடன் இதற்கு விலை கொடுக்கும். ஒருசில மணிநேரங்களில் வீசப்படும் 112 தொமாஹாக் கடற்தள ஏவுகணையின் விலை, $100 மில்லியனுக்கும் அதிகமாகும். அமெரிக்க யுத்தவிமானங்கள் மற்றும் யுத்தகப்பல்களின் பாரிய நிறுவுதலுக்கு செலவிடப்படும் செல்வத்தின் அளவு, இதையும்விட அதிகமாகும். அரசாங்கத்திடம் பணமில்லை; பாடசாலைகள் மூடப்பட வேண்டும்; ஆசிரியர்களை நீக்க வேண்டும்; அத்தியாவசிய சமூக திட்டங்கள் படிப்படையாக சுருக்கப்பட வேண்டும்; அரசுத்துறை பணியாளர்களின் கூலிகள், ஓய்வூதியங்கள், மருத்துவநலன்கள் வெட்டப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகளும், ஊடகங்களும் முடிவில்லாமல் அறிவித்துவரும் நிலைமைகளின்கீழ், இந்த யுத்த நடவடிக்கைகளின் செலவுகள் குறித்து ஒரு வார்த்தைகூட எழுப்பப்படுவதில்லை.

ஒபாமாவின் ஆதரவு-பெற்ற அதி-இடது போராட்ட குழுக்களால் செல்வாக்கு பெற்ற உத்தியோகபூர்வ "யுத்த-எதிர்ப்பு" போராட்டத்தால் மூச்சடைக்கப்பட்ட யுத்தத்திற்கு எதிரான போராட்டம், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இரண்டு தரப்பினருக்கும் எதிராகவும், இராணுவவாதத்தின் மூலாதாரமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே புத்துயிர்பெற செய்ய முடியும்.

லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான ஒரு போராட்டத்தைக் கையிலெடுக்க விரும்புகிற அனைவரும், சோசலிச சமத்துவ கட்சி, உலக சோசலிச வலைத் தளம், மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பால் "சோசலிசத்திற்கான இன்றைய போராட்டம்" என்ற தலைப்பில் ஏப்ரலில் அமெரிக்கா முழுவதிலும் நடத்தப்பெறவுள்ள தொடர்ச்சியான கூட்டங்களில் பங்குபெற அழைப்புவிடுக்கிறோம்.