WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Canada joins imperialist assault on Libya
லிபியா மீதான ஏகாதிபத்திய தாக்குதலில் கனடாவும் இணைகிறது
By Keith Jones
22 March 2011
உத்தியோகபூர்வ
லிபரல்களிலிருந்து,
இடது
எனக்
காட்டிக்கொள்ளும்
Bloc Quebecois
மற்றும்
தொழிற்சங்க
ஆதரவுடைய
புதிய
ஜனநாயகக்
கட்சி
வரை
கனடாவின்
முழு
அரசியல் ஸ்தாபனமும்
கனேடிய
ஆயுதப்
படைகள்
(CAF)
அமெரிக்க,
பிரெஞ்சு
மற்றும்
பிரிட்டிஷ்
படைகளுடன்
லிபியா
மீது
போர்
தொடுப்பது
என்று
உத்தரவிடப்பட்டுள்ள
கன்சர்வேடிவ்
அரசாங்கத்திற்குப்
பின்
நிற்கிறது.
பிரதம
மந்திரி
Stephen Harper
கடந்த
வெள்ளியன்று
அவர்
கனடா
6 F-18 விமானங்கள்
மற்றும்
150 CAF ஆதரவுப்
படையினரை
லிபிய
போர்
அரங்கிற்கு
அனுப்ப
இருப்பதாக
அறிவித்தபோது
மூன்று
எதிர்க்கட்சித்
தலைவர்களின்
ஆதரவு
பற்றிய
உறுதிமொழிகளைப்
பெற்றுவிட்டார்.
ஆனால்
எதிர்க்கட்சிகளின்
ஆதரவை
இன்னும்
கூடுதலாக
நிரூபிக்கும்
வகையில்
பாராளுமன்றம்
திங்களன்று
லிபியா
மீதான
ஏகாதிபத்தியத்
தாக்குதலுக்கான
தீர்மானத்திற்கு
முழுமனத்துடன்
கூடிய
ஒப்புதலையும்
ஒருமனதாகப்
பெற்றது.
இதற்கு
முன்னால்
திங்களன்று
பாதுகாப்பு
மந்திரி
பீட்டர்
மக்காய்
கனேடிய
விமானங்கள்
ஏற்கனவே
வட
ஆபிரிக்க
நாட்டில்
நடவடிக்கைகளை
செய்துள்ளன
என்று
கூறினார்.
லிபிய
கடலோரத்தையொட்டி
HIMCS Charlotteletown
என்னும்
கடற்படைப்
போர்க் கப்பலையும்
கனடா
நிறுத்தியுள்ளது.
செய்தி
ஊடகத்
தகவல்களின்படி,
CAF சிறப்புப்
படைகள்
அப்பிராந்தியத்தில்
குறைந்தது
மூன்று
வாரங்களாக செயற்பட
வைத்துள்ளன
என்றும்
தெரிய
வந்துள்ளது.
Charlottetown
மார்ச்
2 அன்று
மத்தியதரைக்
கடல்
பகுதிக்கு
லிபியாவிற்கு
மனிதாபிமான
உதவி
கொண்டுவரும்
நோக்கத்திற்காகப்
புறப்பட்டபோது,
கனேடிய
அரசாங்கச்
செய்தித்
தொடர்பாளர்கள்
போர்க் கப்பலின்
பணி
மாற்றப்பட்டால்
அதற்கானவற்றிற்கும்
தயாரிப்புக்களைக்
கொண்டுள்ளதாகக்
கூறினர்.
அந்த
மாற்றம்தான்
இப்பொழுது
நடந்து
கொண்டிருக்க
வேண்டும்.
கடந்த
சனிக்கிழமை
Harper இன்
அறிவிப்போடு,
லிபியா
மீதான
ஓரு
நேட்டோ
கடற்படை முற்றுகை
நடத்துகையில்
அதில்
Charlottetown ம்
சேர்ந்துகொள்ளும்.
லிபியா
மீதான
ஏகாதிபத்தியத்
தாக்குதலுக்கு
கனடாவின்
ஆதரவு
பற்றிய
திங்கள் பாராளுமன்ற
விவாதத்தில்
முன்னிருந்த
பாதுகாப்பு
மந்திரி
மக்காய்,
கனடாவானது
லிபிய
மக்களுக்கு
உதவுவதற்கும்
ஐ.நா.
மற்றும்
சர்வதேச
சட்டங்களை
நிலைநிறுத்துவதற்காக
தலையீடு
செய்யும்
“அறநெறிக்
கடைமையை”
கொண்டுள்ளது
என்றார்.
இப்பொய்களை
அனைத்து
எதிர்க்கட்சிகளும்
மீண்டும்
கூறியுள்ளதுடன்,
அதிகப்படுத்தியும்
கூறியுள்ளன.
லிபியாவின்
மீதான
இராணுவத்
தாக்குதலில்
அமெரிக்க
ஏகாதிபத்தியம்
மற்றும்
பிராந்தியத்தில்
முன்பு
மேலாதிக்கம்
செலுத்திய
காலனித்துவ
சக்திகளான
பிரான்ஸ்,
பெரிய
பிரித்தானியா
ஆகியவற்றுடன்
கனடா
பங்கு
பெறுவது
லிபிய
மக்களுக்கு
உதவி
செய்வதுடன்
எத்தொடர்பையும்
கொண்டிருக்கவில்லை.
மாறாக,
இது
நாட்டின்
எண்ணெய்
வளங்கள்
மீது
கட்டுப்பாட்டைக்
கொண்டுவந்து,
அமெரிக்கா
மற்றும்
அதன்
நட்பு
நாடுகள்
ஒரு
பிற்போக்குத்தன,
சர்வாதிகார,
அமெரிக்கா
சுமத்திய
சமூக,
அரசியல்
ஒழுங்கிற்கு
எதிரான
மக்கள்
எழுச்சிகளால்
அதிர்ந்துள்ள
ஒரு
பகுதி மீது
மீண்டும்
மேலாதிக்கத்தை
உறுதி
செய்யும்
நோக்கத்தைத்தான்
கொண்டுள்ளது.
கனடாவில்
ஆளும்
உயரடுக்கு,
இப்பொழுது
கடாபி
ஆட்சி
மக்கள் மீது
நடத்தியுள்ள
குருதி
கொட்டிய
அடக்குமுறையினால்
சீற்றம்
அடைந்துள்ளதாகக்
கூறும்போது,
கனேடிய
அரசாங்கமும்
முக்கிய
கனேடிய
நிறுவனங்காளன
Suncor
மற்றும்
SNC-Lavalin ஆகியவை
சர்வாதிகாரியுடன்
வணிகம்
நடத்தியதில்
பெரும்
களிப்பைத்தான்
கொண்டிருந்தன.
பல
தசாப்தங்களாக
கனடா,
அமெரிக்கா
மற்றும்
ஐரோப்பியப்
பெரும்
சக்திகளுடன்
சேர்ந்து
வட
ஆபிரிக்கா
மற்றும்
மத்திய
கிழக்கில்
மொரோக்கவிலிருந்து
சௌதி
அரேபியா
வரை
தொடர்ச்சியான
சர்வாதிகார
ஆட்சிகளை
நிறுவ,
நிலைநிறுத்தச்
சேர்ந்துள்ளது.
அதே
நேரத்தில்
பாலஸ்தீனிய
மக்களை
அடக்குவது,
அவர்களிடம்
இருந்து
நிலத்தைப்
பறிப்பது
ஆகியவற்றைச்
செய்யும்
இஸ்ரேலுக்கும்
ஆதரவைக்
கொடுக்கிறது.
மேலும்
இராணுவ
நடவடிக்கையை
வளர்ப்பதில்
இன்னும்
பகிரங்கமாகவும்,
ஆக்கிரோஷமாகவும்
அது
இருக்க
வேண்டும்
என்ற வகையில்தான்
லிபியா
பற்றிய
கன்சர்வேடிவ்
அரசாங்கத்தின்
நிலைப்பாட்டை
எதிர்க்கட்சிகள்
விமர்சித்துள்ளன.
கனடாவில்
சமூக
ஜனநாயகக்
கட்சியான
புதிய
ஜனநாயகக்
கட்சி,
(NDP) பெப்ருவரி
22ம்
தேதி
ஐ.நா.பாதுகாப்பு
சபை
கூட
வேண்டும்
என்ற
அறிக்கையை
வெளியிட்டது.
அதாவது
லிபியா
மீது
ஒரு
பறக்கக்
கூடாத
பகுதியை
பெரும்
சக்திகள்
நிறுவுவதற்காக.
அதன்
பின்
இக்கோரிக்கையை
உயர்மட்ட
அமெரிக்க
அதிகாரிகள்
பறக்கக்
கூடாத
பகுதியை
நிறுவதல்
என்பது
போருக்கு
ஒப்பான
செயல்பாடு
ஆகிவிடும்
என்று
கூறியும்
கூட
தொடர்ந்து
கூறிவந்தது.
இப்பொழுது
NDP யின்
கோரிக்கை
ஐ.நா.வினால்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது
ஏகாதிபத்திய
ஆதிக்கக்
கூடு ஆகத்தான்
பூகோள அரசியல்
மூலோபாயச்
சூழ்ச்சிகளுக்கு
உள்ளது.
அல்லது
லெனின்
இதன்
முன்னோடி
அமைப்பான
லீக்
ஆப்
நேஷன்ஸைப்
பற்றி
“ஒரு
திருடர்களின்
சமையலறை”
என்று
சொல்லியது
போல்தான்
உள்ளது.
லிபியா
மீதான
போரில்
கனடாவின்
பங்கை
வரவேற்கையில்,
லிபரல்
கட்சியின்
வெளியுறவுத்
திறனாய்வாளர்
Bob
Rae இந்த
வாரமும்
அடுத்த
வாரமும்
வரவிருக்கும்
தொடர்ச்சியான
பாராளுமன்ற
நம்பிக்கை
இல்லா
வாக்குகளுக்கு
முன்பு
எதிர்ப்பின்
நிலைப்பாட்டைக்
குறைக்கும்
வகையில்
தாராளவாதிகள்
CAF
நிலைப்பாட்டிற்குக்
கொடுக்கும்
ஆதரவு
அமையக்கூடும்
என்ற
கருத்தை
நிராகரித்தார்.
“இது
ஒரு
லிபரல்,
கன்சர்வேடிவ்களுக்கு
இடையேயான
பிரிவினைப்
பிரச்சினை
என்று
நாம்
காணவில்லை.
இறுதியாக
திரு
Harper இராணுவ
நடவடிக்கையில்
பங்கு
பெறலாம்
என்று
ஒப்புக்
கொண்டது,
அடுத்த
வாரம்
நாம்
செய்யவுள்ள
மற்றவற்றை
மாற்றாது
என்பதுதான்
உண்மை”
என்றார்
Rae.
உண்மையில்
Harper —எகிப்தில்
வந்துள்ள
வெகுஜன
எழுச்சி
என்பது
“உறுதிப்பாட்டிற்கு”
அச்சுறுத்தலைப்
பிரதிபலிக்கிறது
என்று
கடந்த
இரு
மாதங்களாக
அடிக்கடி
அவர்
வெளியிட்டு
வரும்
அறிக்கைகளையொட்டி—எல்லாத்
தகவல்கலின்படியும்
கனடாவில்
குறைந்த
கனத்தை
பிரான்சின்
நிக்கோலா
சார்க்கோசி
மற்றும்
பிரிட்டனின்
டேவிட்
காமெரோன்
ஆகியோர்
இராணுவத்
தலையீட்டிற்காக
விடுத்த
அழைப்பிற்கு
ஆதரவாகத்தான்
கொண்டுள்ளார்.
ஆனால்
திரைக்குப்பின்
இவ்வாறு
செய்ய
அவர்
விரும்பினார்.
அதற்குக்
காரணம்
கனேடிய
ஆளும்
வர்க்கத்தின்
மிக
முக்கியமான
இருதரப்பு
உறவான
அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடன்
அதன்
பங்காளித்தனம்
என்பதற்கு
எந்தச்
சேதமும்
வந்துவிடக்
கூடாது
என்பதுதான்.
“கண்டத்தின்
பாதுகாப்பு
நெறிகள்”
என்ற
வகையில்
வாஷிங்டனுடனான
இன்னும்
நெருக்கமான
மூலோபாய
உறவுகளைப்
பிணைத்துக்கொள்ளும்
Harper
அரசாங்கத்தின்
சமீபத்திய
அளிப்பு,
கனடாவின்
ஆளும்
உயரடுக்கு
உலகப்
பொருளாதார
நெருக்கடிச்
சூழல்
மற்றும்
உறுதியற்ற
புவிசார்
அரசியல்
ஒழுங்கு
என்று
புதிய
சக்திகளின்
எழுச்சி
பெற்றுள்ள
நிலையில்,
அமெரிக்காவுடனான
அதன்
பங்காளித்தனம்
முன்னைவிட
மிகவும்
முக்கியம்
என்பதைத்தான்
அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது.
ஒபாமா
நிர்வாகம்
போர்
பற்றி
முடிவெடுத்தவுடன்,
ஒரு
ஐ.நா.தீர்மானத்தை
வெறும்
பறக்கக்கூடாத
பகுதிக்கு
அப்பால்
இராணுவ
நடவடிக்கைக்கு
ஒப்புதல்
கொடுக்கும்
வகையில்
அதை
உருவாக்கியபின்,
Harper விரைவில்
போர்
வண்ணங்களை
அணிவதில்
நேரத்தை
வீணாக்கவில்லை.
சனிக்கிழமையன்று
இராணுவ
நடவடிக்கைக்குத்
திட்டமிட்டு,
ஆதரவு
கொடுப்பதற்காக
சார்க்கோசி
ஏற்பாடு
செய்திருந்த
உச்சிமாநாட்டில்
கலந்துகொள்ள
அவர்
பாரிசுக்கு
விரைந்தார்.
அங்கு
Harper பிரெஞ்சு
ஜனாதிபதி
மற்றும்
பிரிட்டிஷ்
பிரதம
மந்திரி
ஆகியோருடன்
இருதரப்புப்
பேச்சுவார்த்தைகளை
நடத்தினார்.
உச்சிமாநாட்டின்
முடிவில்,
Harper மிரட்டும்
வகையிலான
அறிக்கைகள்
பலவற்றை
வெளியிட்டு,
இராணுவ
நடவடிக்கைகளின்
மையத்தில்
கனடாவும்
இருக்கும்
என்று
உறுதியளித்தார்.
ஒபாமாவும்
இன்னும்
பிற
தலைவர்களும்
இராணுவத்
தாக்குதலுக்கு
ஐ.நா.
சட்டபூர்வ
இசைவு
என்னும்
மறைப்பைத்
தக்க
வைக்கும்
முயற்சியில்
ஈடுபட்டிருக்கையில்,
போரின்
நோக்கம்
“ஆட்சி
மாற்றம்
அல்ல”
என்று
கூறிக்கொண்டிருக்கையில்,
Harper
அத்தகைய
வேறுபாடுகள்
எதையும்
காட்டிப்
பேசவில்லை.
அவர்
“கடாபி
அதிக
நாட்கள்
நீடித்து
ஆட்சி
செய்யமாட்டார்”
என்றார்
. “அந்த
அடிப்படையில் தான்
நாம்
செயலில்
ஈடுபடுகிறோம்.
அதைப்பற்றி
நான்
இங்கு
வெளிப்படையாகக்
கூறவேண்டும்
என்றால்,
உரத்துக்
கூறுவதைத்தவிர,
உண்மையில்
மௌனமாக
நன்கு
உணரப்படும்.
ஆனால்
நான்
இப்பொழுதுதான்
அதை
உரக்கக்
கூறிவிட்டேன்”
என்றார்.
லிபிய
எதிர்ப்புப்
போர்க்
கூட்டணியின்
மற்ற
தலைவர்களைப்
போல்
Harper ம்
இதுவரை
லிபியாவில்
கனேடியத்
தலையீடு
போர்த்
துருப்புக்களை
நிலைநிறுத்துவதுடன்
தொடர்பு
கொண்டிராது
என்றுதான்
கவனத்துடன்
கூறிவந்தார்.
ஏனெனில்
அது
சர்வதேச
அளவில்
பெரும்
கூக்குரலை
எழுப்பிவிடும்.
ஆனால்
வெளியுறவு
மந்திரி
Lawrence Cannon
கடந்த
வெள்ளியன்று
கனடா,
லிபியாவைச்
சமாதானப்படுத்துவதற்கு
“அனைத்து
விருப்புரிமைகளையும்”
கொண்டுள்ளது,
“களத்தில்
பூட்ஸ்களையும்
பதிக்கலாம்”
என்று
கூறியதாகப்
பதிவு
ஆகியுள்ளது.
வாஷிங்டன்,
பாரிஸ்
மற்றும்
லண்டன்
இயற்றிய
ஐ.நா.தீர்மானத்தின்படி
துருப்புக்கள்
“குடிமக்களைக்
காப்பதற்காக”
லிபியாவிற்குள்
அனுப்பப்படலாம்
என்றும்
ஆக்கிரமிப்புப்
படைகள்
என்று
அழைக்கப்படமாட்டாது
என்றும்
கூறினார்.
“இதைத்தான்
தீர்மானம்
கூறுகிறது”
என்றார்
Cannon.
பாராளுமன்றத்தில்
இருந்து
ஒருமித்த
உணர்வு
நாட்டின்
முக்கிய
பெருநிறுவன
நாளேடுகள்
முழு
ஆதரவைப்
போருக்கு
வெளியிட்டுள்ளதில்
பிரதிபலிப்பாகிறது.
கனடாவின்
குரலை
எதிரொலிக்கிறது
எனக்கூறப்படும்
Globe and Mail
பல
வாரங்களாக
பறக்கக்கூடாத
பகுதி
சுமத்தப்பட
வேண்டும்,
தேவையானால்
ஜோர்ஜ்
டபுள்யூ
புஷ்
வகையிலான
“விருப்பமுடையோர்
கூட்டணி”
ஐ.நா.வை
மீறிக் கூட
நிறுவப்பட
வேண்டும்
என்று
கூறியது.
“சுதந்திர
லிபியாவிற்கு
உயிர்
வந்துள்ளது”
என்ற
தலைப்பில்
ஒரு
தலையங்கத்தை
தாராளவாத
Toronto Star
எழுதி,
Cannon லிபிய
நடவடிக்கையில்
CAF ஐ
இணைத்து
உத்தரவிட்டுள்ளது
“சரியான
தீர்மானம்தான்”
என்று
கூறியுள்ளது.
Harper
அரசாங்கத்துடன்
சலுகைகளைக்
கொண்டுள்ள
புதிய
கன்சர்வேடிவ்
நாளேடான
National Post
லிபியா
மீதான
தாக்குதல்
இன்னும்
பெரிய
போர்
ஒன்றிற்கு
முதற்படி
எனத்
தான்
கருதுவதைத்
தெளிவாக்குகிறது—அதாவது
ஈரானுக்கு
எதிரான
இராணுவ
நடவடிக்கை
வேண்டும்
என.
“கடாபி
போன்ற
ஒரு சிறிய
சர்வாதிகாரியை
எதிர்கொள்ளக்கூட
நம்மால்
முடியவில்லை
என்றால்,
ஈரான்
போல்
எழுச்சி
பெற்று
வரும்
பிராந்தியச்
சக்தியைப்
பொறுத்தவரை
நம்மைப்
பற்றிய
நம்பகத்தன்மை
எப்படி
இருக்கும்?”
என்று
போஸ்ட்
கேட்டுள்ளது.
அதன்
போட்டியாளர்களைவிடச்
சற்றும்
குறைந்துவிடாமல்,
கனேடிய
முதலாளித்துவமும்
இயற்கை
ஆதாரங்கள்,
சந்தைகள்,
மூலோபாயச்
செல்வாக்குகள்
ஆகியவற்றை
அடைவதற்கு
வழிவகை
என்னும்
முறையில்தான்
இந்த
ஏகாதிபத்தியப்
போரைக்
காண்கிறது—இப்பொழுது
நிலைமை
இரண்டாம்
உலகப்
போருக்குப்
பின்
முதலாளித்துவ
ஒழுங்கு
சவாலுக்கு
இடமில்லாத
அமெரிக்கப்
பொருளாதார
மேலாதிக்கம்,
அதன்
டாலருடைய
மேலாதிக்கத்தின்
கீழ்
நிறுவப்பட்டதிலிருந்து
முற்றிலும்
சரிந்த
தன்மையில்தான்
உள்ளது.
ஒரே
ஒரு
விதிவிலக்குடன்
கனடா,
பனிப் போர்க்
காலத்திற்குப்
பின்
வாஷிங்டன்
முன்னெடுத்த
ஒவ்வொரு
பெரிய
இராணுவ
நடவடிக்கையிலும்
முக்கிய
பங்கைக்
கொண்டுள்ளது—1991
வளைகுடாப்
போர்,
1993 சோமாலியா மீதான
படையெடுப்பு,
1999 நேட்டோ
யூகோஸ்லேவியா
மீது
படையெடுத்தது
மற்றும்
ஆப்கானிய
ஆக்கிரமிப்பு
ஆகியவற்றில்.
ஒரே
ஒரு
விதிவிலக்கு
ஈராக் மீதான
படையெடுப்புத்தான்.
ஆனால்
அதிகம்
அறியப்படாதது
கடைசி
நிமிடம்
வரை
கனடா
அமெரிக்க-பிரிட்டிஷ்
போர்த்
தயாரிப்புகளுடன்
தீவிர
தொடர்பு
கொண்டிருந்தது,
அப்பொழுது
அமெரிக்காவின்
தூதராக
கனடாவில்
இருந்த
Paul Cellucci
ஒப்புக்
கொண்டபடி,
கனடா
“விருப்பமுடையோர்
கூட்டணியில்”
இருந்த
பல
நாடுகளையும்
விட
போருக்குப்
பின்னர்
கூடுதலான
ஆதரவை
அளித்தது.
இப்போர்கள்
மற்றும்
பெரும்
ஆயுதங்களைக்
குவித்தல்
செயற்பாடுகள்
ஆகியவற்றால்,
கனடாவில்
இராணுவத்திற்காகச்
செலவு
செய்தல்
என்பது
1990களில்
இறுதியில்
இருந்து
லிபரல்,
கன்சர்வேடிவ்
அரசாங்கங்கள்
இரண்டிடம்
இருந்தும்
வியத்தகுமுறையில்
அதிகமாகிவிட்டது.
உண்மையில்
இம்மாதத்
ஆரம்பத்தில்
கனடாவின்
Center for Policy Alternatives
கொடுத்துள்ள
அறிக்கை
ஒன்றின்படி,
கனேடிய
அரசாங்கம்
குறைந்தபட்சம்
22.3 பில்லியன்
டொலரை
2010-11 நிதி
ஆண்டில்
இராணுவத்திற்குச்
செலவழிக்கும்.
இது
உண்மை
நிலையை
விட
அதிகமாகும்.
அதாவது
பணவீக்கத்தை
ஒட்டி
சரிசெய்யப்பட்டுவிட்ட
டாலர்
நிலையையும்
கணக்கில்
எடுத்துக்
கொள்ளும்போது.
இரண்டாம்
உலகப்
போருக்குப்
பின்
எந்த
ஆண்டும்
ஒட்டோவா
இவ்வளவு
செலவுகளை
இராணுவத்திற்குச்
செய்தது
கிடையாது.
|