செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ
தாக்குதலுக்கு ஐ.நா.
வாக்களித்து வழியை அமைக்கின்றது
By
Bill Van Auken
18 March 2011
வியாழன்
இரவு ஐ.நா.பாதுகாப்பு
சபையானது அமெரிக்காவும் மற்ற முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் குடிமக்களின்
உயிர்களைக் காப்பாற்றும்
“மனிதாபிமானப்”
பணி என்ற
போலிக்காரணத்தின் கீழ் லிபியாவில் நேரடியாக இராணுவத் தலையீடு நடத்துவதற்கான
தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.
அமெரிக்கா,
பிரான்ஸ்,
பிரிட்டன் மற்றும்
லெபனான் ஆகியவை கொண்டுவந்த இத்தீர்மானம் ஒரு பறக்கக்கூடாத பகுதிக்கான முந்தைய
திட்டங்களை விட அதிக அளவு சென்று,
“அனைத்துத் தேவையான
நடவடிக்கைகளும்
…. தாக்குதல்
அச்சுறுத்தல் இருக்கும் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் மக்களைக் காப்பாற்றுவதற்கு”
எடுக்கப்படலாம்
என்பது உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகள் எடுப்பதற்கு இசைவு கொடுக்கிறது.
இந்தப்
“பகுதிகளில்”
ஒரு மாதம் முன்பு
கடாபி சர்வாதிகாரத்திற்கு எதிராக தொடங்கிய எழுச்சியின் ஒரே வலுவான கோட்டையான ஒரு
மில்லியன் மக்களைக் கொண்ட பெங்காசியும் அடங்கும்.
“லிபிய பகுதிகள்
எதிலும் வெளிநாட்டுத் துருப்புக்கள் நிலை கொள்ளக்கூடாது”
என்னும் ஒரு
விதிதான் தீர்மானத்தின் செயற்பாட்டிற்கு இருக்கும் வரம்பு ஆகும்.
அமெரிக்க,
பிரெஞ்சு மற்றும்
பிரிட்டிஷ் போர் விமானங்கள் லிபியா மீது வான் வழித் தாக்குதல் நடத்துவதற்கு இந்த
வாக்களிப்பு அரங்கு அமைக்கிறது.
பிரெஞ்சு பிரதம
மந்திரி பிரான்சுவா பியோன்
France 2 Television
இடம் இராணுவ நடவடிக்கைத்
தீர்மானம் ஒப்புதல் பெற்ற சில மணி நேரங்களுக்குள்ளேயே தொடங்கக்கூடும் என்றார்.
பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தின் பெயரிடப்படாத உறுப்பினர் ஒருவர்
“பிரிட்டிஷ் படைகள்
வான்வழித் தாக்குதல்களுக்கு தயாராக உள்ளன,
வியாழன் இரவே கூட
அணிதிரட்டப்பட்டு செயலாற்ற முடியும்”
எனக்கூறியதாக
மேற்கோளிட்டு அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது.
அமெரிக்க
இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பறக்கக்கூடாத பகுதி சுமத்தப்படுவது கூட முன்கூட்டியே
லிபியாவின் விமானப் பாதுகாப்புத் திறன்களை அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது என்று
எச்சரித்துள்ளனர்.
இதன் பொருள்
லிபியாவிற்கு எதிராக ஒரு பெரிய குண்டுவீச்சுத் தாக்குதல் சந்தேகத்திற்கு இடமின்றி,
“நேரடியாக இல்லாத
இரண்டாந்தர இணைந்த சேதத்தையும்”
ஏற்படுத்தும்
என்பதாகும்.
அதாவது லிபியக்
குடிமக்களுக்கு பெரும் சேதத்தையும் சாவிற்கும் உட்படுத்துவது என்பதாகும்.
“விருப்பத்
தேர்வுகளில் க்ரூஸ் ஏவுகணைகள் நிலையான லிபிய இராணுவத் தளங்கள் மற்றும் விமானப்
பாதுகாப்பு முறைகள் மீது தாக்குவதும் அடங்கும்….
விமானிகளுள்ள,
விமானிகளற்ற
விமானங்களும் கேர்ணல் கடாபியின் டாங்குகள்,
துருப்புக்களை
எடுத்துச் செல்லும் ஊர்திகள்,
காலாட்படை நிலைகள்
ஆகியவற்றிற்கு எதிராகப் பயன்படுத்தபடலாம்.
மத்தியதரைக் கடலின்
தென்பகுதியிலிருக்கும் அமெரிக்கா மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புத்
(நேட்டோ)
தளங்களிலிருந்து
தாக்குதல் பறப்புக்கள் இருக்கும்”
என்று பென்டகன்
அதிகாரிகள் கூறியதாக
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
மேற்கோளிட்டுள்ளது.
செனட்
ஆயுதப்படைகள் குழுக் கூட்டத்தில் வியாழனன்று சாட்சியம் அளித்த அமெரிக்க விமானப்
படையின் தலைரான ஜெனரல் நோர்ட்டன் ஷ்வார்ட்ஸ்,
ஒரு பறக்கக்கூடாத
பகுதியை நிறுவ “ஒரு
வாரத்திற்கும் மேலான”
தயாரிப்புக்கள் தேவை
என்றார்.
இது நீடித்த குண்டுவீச்சுத்
தாக்குதல்கள் இருக்கும் என்பதை அடையாளம் காட்டுகிறது.
அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவிலுள்ள தளங்களில் அமெரிக்கப் போர் விமானங்களைத் தவிர,
ஆப்கானிஸ்தான்
மற்றும் ஈராக் போர்களில் ஈடுபட்டுள்ள விமானங்களும் திசைதிருப்பப்படக்கூடும் என்றும்
அவர் எச்சரித்தார்.
மற்ற இராணுவ
அதிகாரிகளைப் போல்,
ஷ்வார்ட்ஸும்
பறக்கக்கூடாத பகுதியைச் சுமத்துவது என்பது கேணல் முயம்மர் கடாபியின்
சர்வாதிகாரத்திற்கு விசுவாசமாக இருக்கும் படைகளின் முன்னேற்றத்தை நிறுத்தப்
“போதுமானவையாக இராது”
என்றார்.
அப்படைகள் முறையாக
கடந்த 10
நாட்களில் பெங்காசியை
நோக்கிக் கிழக்கே நகர்ந்துள்ளன.
எனவே கடாபியின்
தரைப்படைகளுக்கு எதிரான வான் தாக்குதல்கள்தான் தயாரிப்பில் உள்ளன என்பது
தெளிவாகிறது.
கடாபியைப் படுகொலை
செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு குண்டுவீச்சை நடத்தும் திட்டமும் இருக்கிறது.
போருக்கான
இத்திட்டங்கள் லிபிய மக்களைப் பாதுகாக்கும் விருப்பத்தையோ அல்லது ஜனநாயகத்திற்காக
உழைப்பதையோ ஐ.நா.பாதுகாப்பு
சபையினுள் இது பற்றி ஆதரவாகப் பேசுபவர்கள் கருத்தினால் உந்துதல் பெறவில்லை.
வட ஆபிரிக்க
எண்ணெய்ச் செழிப்புடைய நாட்டில் வரவிருக்கும் தலையீடு முக்கிய சக்திகள்
போலித்தனமாகக் கூறும்
“மனிதாபிமானக்”
கவலைகளுடன் எந்தத்
தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
மாறாக அவை தவிர்க்க
முடியாத இலாப நலன்கள் மற்றும் புவிசார் அரசியல் இலக்குகளின் உந்துதலைத்தான்
கொண்டுள்ளன.
இதன் நோக்கம் லிபிய
உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி நாட்டின் ஆதாரங்களைச் சுரண்ட முற்படும்
இச்சக்திகளுக்கும் முக்கிய மேலைத்தேய எண்ணெய் பெருநிறுவனங்களுக்கும் இன்னும்
வளைந்துகொடுக்கும் தன்மையுடைய ஆட்சியை அங்கு சுமத்துவதுதான்.
தலையீட்டிற்கு ஆதரவு தரும் ஏகாதிபத்தியச் சக்திகளின் அப்பட்டமான பாசாங்குத்தனம்
மற்றும் இழிந்த தன்மை பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே ஐ.நா.
தீர்மானம்
கொண்டுவரப்படுவதற்கான முயற்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில்
அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
“அரபு திடீர்ப்
பாய்ச்சல்”, “வரலாற்றின்
போக்கை மாற்றக்கூடிய பெரும் புரட்சிகளில் ஒன்றாக இருக்கும்”
என்று கூறிய யுப்பே
சமீபத்தில் அவருக்கு முன்பு பதவியிலிருந்த மிஷேல் அலியோ மரிக்குப் பின் இப்பதவிக்கு
வந்துள்ளார்.
மிஷேல் அலியோ மரி
அகற்றப்பட்ட துனிசியச் சர்வாதிகாரி பென் அலியுடன் நெருக்கமான அரசியல் மற்றும்
தனிப்பட்ட உறவுகளைக் கொண்டிருந்த பெரும் ஊழலையோட்டி இராஜிநாமா செய்யும்
கட்டாயத்திற்கு உட்பட்டார்.
யூப்பேயின்
அரசாங்கம் அதன் முன்னாள் காலனிப் பகுதியில் மக்கள் எதிர்ப்பால் சர்வாதிகாரியை
நாட்டை விட்டு வெளியேற்றும் கட்டாயத்தை ஏற்படுத்திய நிலையில் கலகங்களை அடக்கும்
கருவிகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
ஐ.நா.வின்
அமெரிக்கத் தூதராகவுள்ள சூசன் ரைஸ்,
லிபியா மீது
வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அனுமதிக்கும்
“அனைத்துத் தேவையான
நடவடிக்கைகளையும்”
என்ற சொற்றொடரைப்
புகுத்தியவர்,
தீர்மானம்
இயற்றப்பட்டதைப் பாராட்டி,
“லிபியாவின்
வருங்காலம் லிபிய மக்களால் தான் முடிவெடுக்கப்பட வேண்டும்”
என்று அறிவித்தார்.
ஐயத்திற்கு
இடமின்றி அப்படித்தான் நடக்க வேண்டும்.
கடாபிக் குழுவினரின்
வலதுசாரிச் சர்வாதிகாரத்தை அகற்றும் பணி லிபியாவின் ஒடுக்கப்பட்ட மற்றும்
தொழிலாளர்களின் செயல் ஆகும்,
அவர்கள்தான் அதைத்
தொடங்கியவர்கள்.
ஆனால் அமெரிக்க
ஆதரவுடைய தலையீட்டின் நோக்கம் அத்தகைய உண்மையான புரட்சியை குறுக்கே கவிழ்த்து
கடாபிக்கு பதிலாக வரும் எந்த ஆட்சியும் லிபிய மக்களுடைய நலன்களுக்கு என்று இல்லாமல்
வாஷிங்டன் மற்றும் பெரிய எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க நடப்பதாக
இருக்க வேண்டும் என்பதாகும்.
மேலும் லிபியாவை
அப்பிராந்தியம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கங்களை நசுக்குவதற்கு
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தளமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா
விரும்புகிறது.
பாதுகாப்பு
சபையின் வாக்களிப்பில்
10 ஆதரவாகவும்,
ஐந்து நாடுகள்
வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்களிக்காத
நாடுகளில் ரஷ்யா,
சீனா,
ஜேர்மனி,
பிரேசில் மற்றும்
இந்தியா ஆகியவை இருந்தன.
சபையின் நிரந்தர
உறுப்பினர்கள் என்னும் முறையில் ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தைத் தோற்கடிக்க
“வேண்டாம்”
வாக்குகளைப்
போட்டால் போதும்.
ஆனால் அவை அவ்வாறு
செய்ய விரும்பவில்லை.
இதையொட்டி ஐ.நா.
தொடர்ந்து முக்கிய
ஏகாதிபத்தியச் சக்திகளின் கோரிக்கைகளுக்கு இசைவு கொடுக்கும் ரப்பர் முத்திரைபோல்
தொடர்ந்து செயல்படுகிறது.
ஆனால்
வாக்காளிக்காததற்கு காரணங்களை விளக்கிய தங்கள் அறிக்கைகளில்,
ஐந்து நாடுகளின்
தூதர்கள் லிபியா மீது வரவிருக்கும் தாக்குதல் லிபிய மக்களைக் பாதுகாக்க வேண்டும்
என்னும் “உலகச்
சமுதாயத்தின்”
ஒருமித்த உணர்வுடன்
இயைந்து இருக்கவில்லை என்றும்,
மாறாக வாஷிங்டன்,
லண்டன் மற்றும்
பாரிஸ் ஆகியவற்றிற்கு இடையே இரகசியமாக நடந்துள்ள சதித்திட்டத்தின் விளைவுதான் என்று
கூறியுள்ளன.
ஐ.நாவில்
ரஷ்ய தூதராக இருக்கும் விடலி சுர்க்கின் இந்த நடவடிக்கை
“பெரிய அளவிலான
இராணுவத் தலையீட்டிற்கு வழிவகுக்கிறது”
என்றும்
தீர்மானத்திற்கு முன் நடந்த விவாதங்களில் எழுப்பப்பட்ட வினாக்களை பற்றியும்
வலியுறுத்தினார்:
அதாவது,
இது எப்படிச்
செயல்படுத்தப்படும்,
எந்த இராணுவப்
படைகளால்,
மற்றும் எந்தப்
போர்விதிகளின்படி போன்றவை.
ஆனால் இவற்றிற்கு
“விடைகள் ஏதும்
இல்லை”
என்றார்.
இத்தியாவின்
தூதர் ஹர்தீப் சிங் பூரி ஐ.நா.வின்
பாதுகாப்பு சபையானது லிபியா நிலைமை பற்றி ஒரு சிறப்புத் தூதரை நியமித்திருக்கையில்,
அது
“அங்குள்ள நிலைமை
பற்றி தகவல் எதையும் பெறவில்லை”
என்றும்,
“குறைவான நம்பகத்
தன்மை உடைய தகவல் இருந்தும்கூட”
தீர்மானத்தை
இயற்றியுள்ளது என்றார்.
தீர்மானம் எப்படிச்
செயல்படுத்தப்பட உள்ளது என்பது பற்றி விளக்கம் ஏதும் இல்லை,
“எவரால் எந்த
நடவடிக்கைகள் மூலம்”
என்பது பற்றியும்
விளக்கம் இல்லை என்றார்.
லிபியாவின்
“இறைமை,
ஐக்கியம்,
நிலப்பகுதிப்
பாதுகாப்பு”
குறித்து கவலையையும்
அவர் தெரிவித்தார்.
பல புதிய
பொருளாதாரத் தடைகள் பற்றியும் தயக்கங்களை சிங் கூறினார்.
இவை மற்றவற்றுடன்
லிபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனத்தையும் இலக்கு கொண்டுள்ளது என்றார்.
இந்த நடவடிக்கைகள்
வணிகத்திற்குத் தடை ஏற்படுத்தி உறுப்பு நாடுகள் முதலீடு செய்வதையும் தடுக்கும்
என்றார்.
ஜேர்மனியின்
தூதர்
Peter Wittig
இராணுவப் படை
பயன்படுத்தப்பட இசைவு கொடுத்திருப்பது
“மிகப் பெரிய அளவில்
உயிரிழப்புக்கள் ஏற்படக் காரணமாகலாம்”
என்று எச்சரித்து
ஜேர்மனியின் படைகள் இத்தலையீட்டில் பங்கு பெறாது என்றும் கூறிவிட்டார்.
பாதுகாப்பு
சபையின் இடைக்காலத் தலைவரும் சீனாவின் ஐ.நா.விற்கான
தூதருமான Li
Baodong இதே
தயங்கங்களை வெளிப்படுத்தினார்.
ஆனால்
நடவடிக்கைகளுக்கு பெய்ஜிங் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம்
கடந்த வார இறுதியில் அரபு லீக் ஐ.நா.வை
ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் செயல்படுத்த விடுத்த அழைப்புத்தான் என்று
நியாயப்படுத்தினார்.
இந்த வாக்கு
“பிராந்திய ஆதரவு”
நிரூபிக்கப்பட்டுவிட்டதால் தலையீட்டிற்கு ஆதரவு என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மை
என்னவென்றால்,
அரபு லீக்கே
சர்வாதிகாரங்கள்,
முடியாட்சிகள்
மற்றும் எமிரேட்டுக்கள் என்று எந்த விதத்திலும் அரபு மக்களைப் பிரதிபலிக்காதவர்கள்
நிறைந்த ஒரு குழுவாகும்.
அதில் பல பேர்
மக்கள் எழுச்சிகளை வன்முறையின் மூலம் அடக்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள்.
லிபியாவிற்கு எதிரான தலையீடு எதுவும் அரபு நாடுகளின் நேரடிப் பங்கைக் கொண்டிருக்க
வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்தியுள்ளபோது,
அவற்றின் ஈடுபாடு
மிகக் குறைவாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.
கெய்ரோவிற்கு
அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் வருகையைத் தொடர்ந்து,
எகிப்திய வெளியுறவு
அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டரிடம்,
“அந்த அரபு
நாடுகளில் எகிப்து ஒன்றாக இராது.
நாங்கள் எவ்வித
இராணுவத் தலையீட்டிலும் தொடர்பு கொள்ள மாட்டோம்.
தலையீடு கிடையாது
என்பது உறுதி”
என்றார்.
வியாழக்கிழமை அமெரிக்க-நேட்டோத்
தாக்குதலில் சேரத்தயார் எனக்கூறும் இரு நாடுகளைத்தான் அரபு லீக் கூறமுடிந்தது—அதாவது
கட்டாரும் ஐக்கிய அரபு எமிரேட்டும்.
இரண்டுமே அரச
குடும்பங்களால் ஆளப்படுகின்றன.
இரு
எமிரேட்டுக்களும் சௌதி அரேபியாவின் பஹ்ரைன் தலையீட்டில் நேரடியாகப் பங்கு பெற்ற
ஆளும் முடியாட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்கின.
பாதுகாப்புப் படைகள்
தெருக்களில் எதிர்ப்பாளர்களைக் கொன்று,
மருத்துவமனைகளைத்
தாக்கி ஷியா கிராமங்களில் அச்சுறுத்தும் பயங்கர ஆட்சியை நடத்தியுள்ள நிலையில்,
லிபியாவிற்கு
ஜனநாயகம் வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எவரும்
பஹ்ரைனில் ஐ.நா.படையெடுப்பு
வேண்டும் என்று கூறவில்லை.
அதுவோ அமெரிக்காவின்
ஐந்தாவது கடற்படைக்குத் தளமாக உள்ளது.
கடாபி
அரசாங்கம் லிபியா மீது எத்தகைய தாக்குதலும்
“மத்தியதரைக் கடல்
பகுதியில் அனைத்து வான்,
கடற்படைப்
போக்குவரத்தையும் ஆபத்திற்கு உட்படுத்தும்,
சிவிலிய,
இராணுவ நிலையங்கள்
லிபியாவின் மறு தாக்குதலுக்கு இலக்குகள் ஆகிவிடும்”
என்று
அச்சுறுத்தியுள்ளது.
லிபியா மீது
புதிய கடினப்போக்கைத் தெரிவிக்கும் வகையில் துனிசியாவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
கடாபியை
“மனச்சாட்சி இல்லாத
மனிதர்,
அவர் பாதைக்குக் குறுக்கே
நிற்கும் எவரையும் அச்சுறுத்துவார்….
அது அவர் இயல்பு.
உலகில் இத்தகைய
பிறவிகள் சிலர் உள்ளனர்”
என்று அமெரிக்க
வெளிவிவகார செயலர் கிளின்டன் கண்டித்தார்.
ஏப்ரல்
2009ல் கூட இதே
ஹில்லாரி கிளின்டன் கடாபியின் மைந்தரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சராக உள்ளவரை,
அமெரிக்க வெளிவிவகார
அலுவலகத்தில், “அமெரிக்காவிற்கும்
லிபியாவிற்கும் இடையேயுள்ள உறவுகளை நாம் ஆழ்ந்து மதிக்கிறோம்.
நம் ஒற்றுமையை
ஆழப்படுத்தவும்,
விரிவாக்கவும்
நமக்குப் பல வாய்ப்புக்கள் உள்ளன,
இந்த உறவை நன்கு
கட்டமைப்பதற்கு நான் ஆவலுடன் உள்ளேன்”
என்று
கூறியிருந்தார்.
அவருடைய
ஐரோப்பிய சக அதிகாரிகளைப் போலவே,
சில மாதங்கள்
முன்புதான் கிளின்டனும் கடாபி ஆட்சியுடன் ஆதரவுகள் நாடி நின்றார்.
அவை எண்ணெய்த்
தொழிலில் இலாபம் மற்றும் வாஷிங்டனின்
“உலகளாவிய
பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர”
அவருடைய இரகசியப்
பொலிசின் ஒத்துழைப்பையும் நாடியிருந்தார்.
இப்பொழுது
மனித உரிமைகள் பிரச்சாரம் என்று உரத்த குரலில் நடக்கும் நிகழ்வில்,
செய்தி ஊடகத்தின்
சில பிரிவுகள் கடாபியின் அடக்கு முறை ஆட்சியானது
“இனப் படுகொலைக்கு”
ஒப்பானது என்று
கூறும் நிலையில்,
வாஷிங்டன்,
பிரெஞ்சு,
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்துகொண்டு லிபியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரில்
தலையிடுகின்றன.
இவையே அத்தகைய
தூண்டுகோலுக்குப் பெரும் காரணமாக இருந்துள்ளன.
“உயிர்களைக்
காப்பாற்றுதல்”
குறித்த எத்தகைய
வனப்புரையும் நடக்கும் அப்பட்டமான ஏகாதிபத்தியக் கொள்ளை முறை குறித்து மூடி மறைக்க
இயலாது.
இது
20ம் நூற்றாண்டின்
இரண்டாவது பகுதியில் கொங்கோ மற்றும் நைஜீரியாவைப் பிரிவினை செய்த முயற்சிக்கு
ஒப்பானது ஆகும்.
அவற்றுள்,
இப்பொழுது
லிபியாவில் உள்ளதைப்போல்,
தலையீட்டின்
பின்னணியில் மூலோபாய இருப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கான உந்துதல்கள் இருந்தன.
லிபியத்
தலையீட்டிற்குக் கொடுக்கப்படும் நியாயப்படுத்துதல்கள் விகாரமான முரண்பாடுகள் ஆகும்.
லிபிய மக்கள்
கொல்லப்படுவது பற்றிச் சீற்றத்தைக் காட்டுவதாகவும்,
உயிர்களைக்
காப்பாற்றுவது என்ற தோற்றம் அளிக்கும் வாஷிங்டனே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்
நூறாயிரக்கணக்கான உயிர்களைப் படுகொலை செய்வதற்குப் பொறுப்பானவை.
மேலும் ஐ.நா.வாக்களிப்பிற்குச்
சற்று முன்னதாக கொடூரமான குருதி கொட்டிய கொலை என்னும் வகையில் பாக்கிஸ்தானில்
ட்ரோன் தாக்குதல் மூலம்
40 குடிமக்களைக்
கொன்றுவிட்டது.
அமெரிக்கா
மற்றும் அதன் நட்பு நாடுகள் ஐவரி கோஸ்ட்டில் இராணுவப் படை பயன்படுத்துவதற்குத்
தீர்மானம் இயற்ற முற்படுவதில் ஆர்வம் காட்டவில்லை.
அங்கு லிபியாவில்
நடைபெறுவதற்கு ஒப்பான மோதல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் வெளிப்படையான
விளக்கம் எண்ணெய் போல் கொக்கோவானது
(cacao)
மூலோபாய முக்கியத்துவம்
கொண்டுள்ளது என்று கருதப்படவில்லை என்பதுதான்.
லிபியத்
தலையீடு மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கான வெற்றியை உறுதிபடுத்தும் என்று
கூறுகையில்,
வாஷிங்டன் தொடர்ந்து
பஹ்ரைன்,
யேமன் ஆட்சிகளுக்கு அவை
ஜனநாயக உரிமைகளைக்
கோரும்
எதிர்ப்பாளர்களை
நசுக்குகையில் ஆதரவைக் கொடுக்கிறது.
அமெரிக்க-நேட்டோ
தலையீட்டில் ஒரு தீவிரப் பொறுப்பற்ற கூறு அங்கு இருக்கிறது.
அது எதைத்
தோற்றுவிக்கும்?
ஒரு
எதிர்பார்க்கக்கூடிய மாறுதலால் லிபியா பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டு சைரேநனைக்கா
(the
resurrection of Cyrenaica)
மீண்டும் வரக்கூடியது ஆகும்.
இது1920களில்
பெங்காசியில் இத்தாலியால் நிறுவப்பட்ட ஒரு காலனியாகும்.
அத்தகைய ஆட்சியின்
கீழ் அதிகாரத்தைப் பெறும் எந்தக் கூறும்,
வலதுசாரி
ஏகாதிபத்தியக் கைப்பாவையாகத்தான் இருக்கும்.
இது ஆப்கானிஸ்தானில்
கர்சாய் அரசாங்கம் போன்றதாகவும் ஈராக்கில் மாலிக் அரசாங்கம் போன்றதாகவும் இருக்கும்.
மேலும் லிபிய மக்கள்
மீது இன்னும் பரந்த முறையில் குருதி கொட்டும் தாக்குதலைத் தொடரும். |