சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Obama issues ultimatum in advance of air strikes on Libya

லிபியா மீது வான்தாக்குதல்கள் நடத்துவதற்கு முன் ஒபாமா இறுதி எச்சரிக்கை விடுகிறார்

By Barry Grey
19 March 2011
Use this version to print | Send feedback

.நா.பாதுகாப்பு சபையானது லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் இராணுவப் படைகளுக்கு எதிராக வான் தாக்குதல்களுக்கும் மற்றதேவையான நடவடிக்கைகளுக்கும்அமெரிக்க-நேட்டோவுக்கு இசைவு கொடுத்து ஒரு நாளைக்குப் பின் வெள்ளியன்று வெள்ளை மாளிகையிலிருந்து பேசுகையில், ஜனாதிபதி பாரக் ஒபாமா வட ஆபிரிக்காவில் ஒரு புதிய ஏகாதிபத்தியப் போர் துவக்க வழிவகுக்கும் விதத்தில் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார்.

கடாபி உடனடியாக கிழக்கு நகரமான பெங்காசியைத் தளமாகக் கொண்ட எதிர்ப்புப் படைகளுடன் போர் நிறுத்தம் ஒன்றைச் செயல்படுத்த வேண்டும், அஜடபியா, மிஸ்ரடா மற்றும் ஜாவியாவிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெறவேண்டும், எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் அளிப்புக்களைக் கொடுக்க வேண்டும், மற்றும்லிபிய மக்களைச் சென்றடையும்மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஓபாமா கூறியுள்ளார்.

இந்த விதிமுறைகளில் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன். இவை பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டவை அல்ல. [.நா.] தீர்மானத்தை கடாபி செயல்படுத்தவில்லை என்றால், சர்வதேச சமூகம் விளைவுகளைச் சுமத்தும், தீர்மானம் இராணுவ நடவடிக்கை மூலம் செயல்படுத்தப்படும்என்று ஒபாமா கூறினார்.

லிபிய சர்வாதிகாரி இத்தகைய நிபந்தனைகளை ஏற்கமாட்டார் என்று ஒபாமாவிற்கு நன்கு தெரியும். அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும்மனிதாபிமான உதவிஎன்பதை மேலைத்தேய இராணுவப், பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்படுதல், ஏகாதிபத்திய சக்திகளின் முகாமிற்கு உறுதியாக ஆதரவு காட்டும் கடாபியின் முன்னாள் எடுபிடிகள் அதிகம் நிறைந்துள்ள எதிர்ப்பாளர்களின் தேசிய இடைமருவுகால சபையின் தலைமை ஏற்கப்படல் என்று வரையறுத்துள்ளன. இத்தகைய கோரிக்கைகளுக்கு உடன்படுதல் என்பது நாட்டின் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுத்து லிபியா முறிவிற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது அதன் அந்தஸ்தை அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் மேலைத்தேய எண்ணெய் பெருநிறுவனங்களின் அரைக் காலனித்துவ நாடாக ஆக்குதல் என்பதற்கு ஒப்பாகும்.

மேலும், தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருட்களை எல்லாப் பகுதிகளுக்கும் கொடுப்பது என்பது, அவர் அவ்வாறு செய்யவேண்டும் என்று விரும்பினாலும்கூட, கடாபியின் திறன்களுக்கு அப்பாற்பட்டது எனலாம். அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் ஈரான் ஆக்கிரமிப்பு நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டின் பேரழிவிற்குட்பட்ட பெரும் பகுதிகள் இன்னும் நம்பகமான இதே அடிப்படைத் தேவைகள் இல்லாத நிலையில், ஒபாமா இத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பது விந்தையானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈராக்குடன் ஒப்புமை காணுதல் பொருத்தமானதே ஆகும். ஒபாமாவின் வாய்கிழியப் பேசும் கருத்துக்கள், பாக்தாத் மீது நடத்தப்பட்டஅதிர்ச்சி, வியப்புதாக்குதல் ஆண்டு நிறைவிற்கு இரு நாட்கள் முன்னதாக வந்துள்ளது, தீயவை பயக்கும் வகையில் ஈராக் மீது நடத்தப்பட்ட தூண்டுதலற்ற படையெடுப்பிற்கு முன் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் அறிவிப்பைத்தான் நினைவுபடுத்துகின்றன.

அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு முயற்சியில் வந்துள்ள ஐ.நா.தீர்மானம், வாக்களிப்பில் கலந்துகொள்ளாத பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் இந்தியாவின் எதிர்ப்புக்களை மீறியது, “சர்வதேச சமூகம்எதையும் பிரதிபலித்துவிடவில்லை. இந்நாடுகளின் மக்கள் அனைவரும், ஏற்கனவே ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தீவிரமாக எதிர்ப்பவர்களை ஒன்றும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. அரபுப் பொது மக்களிடையே ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஏகாதிபத்திய இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தும் முயற்சியில், “நிராபராதியான குடிமக்கள் தாக்கப்படுகின்றனர், சிறையில் அடைக்கப்படுகின்றனர், சில நேரம் கொல்லப்படுகின்றனர். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் நசுக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்படுகின்றன, நோயாளிகள் மறைந்துவிடுகின்றனர். மிரட்டல் மற்றும் அடக்குமுறைப் பிரச்சாரம் தொடங்கியுள்ளதுஎன்று ஒபாமா கூறினார்.

ஒரு மாதம் முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த கடாபி இத்தகைய குற்றங்களைச் செய்துள்ளவர் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் அமெரிக்க ஆதரவைக் கொண்டுள்ள அப்பிராந்தியத்தில் மற்ற ஆட்சிகளின் நடவடிக்கைகளையும் தான் ஒபாமாவின் சொற்கள் பொருத்தமாக விவரிக்கின்றன.

ஒபாமா உரை நிகழ்த்திய தினமே, யேமன் ஜனாதிபதி சலேயின் படைகள் வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஏராளமான எதிர்ப்பாளர்களைக் கொன்றன. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையின் தாயகமான பஹ்ரைனில், முடியாட்சி சௌதி துருப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்கியதுடன் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்து, மருத்துவமனைகளைத் தாக்கி மருத்துவர்களையும் உதைத்துள்ளது.

ஒபாமாவின் பாசாங்குத்தனம், “அப்பிராந்தியத்தில் மாற்றம் என்பது அமெரிக்கா அல்லது பிற வெளிநாட்டுச் சக்திகளால் சுமத்தப்பட முடியாது. இறுதியில் இது அரபு உலக மக்களினால்தான் உந்துதல் பெறும். இது அவர்களுடைய உரிமை, அவர்களுடைய பொறுப்புதங்கள் விதியைப் பற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்என்று கூறிய வகையில் ஒபாமாவின் பாசாங்குத்தனம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்புதான் வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் கடாபியை அகற்றுவதற்கு ஆணையிடுதல் எனத் துல்லியமாகத் தெளிவாக்குகின்றார். லிபிய வெளியுறவு மந்திரி போர் நிறுத்தம் என்பது வெறும்சொற்கள்என்று அறிவித்ததை உதறித்தள்ளிய கிளின்டன் வரவிருக்கும் வான் தாக்குதல்கள் மற்றும் பறக்கக் கூடாத பகுதியை நிறுவுதல் ஆகியவைஇறுதி விளைவிற்கானவழிவகையில்ஒரு கட்டம்தான்என்றும் அந்த விளைவுஅகல வேண்டும் என்று கடாபி எடுக்கும் முடிவுதான்என்றார்.

லிபிய தொழிலாள வர்க்கத்தின் பணி சமூகத்தின் அடக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தலைமை தாங்கி கடாபியின் வலதுசாரி சர்வாதிகாரத்தை அகற்ற வேண்டும் என்று உள்ளது. உள்ளூர் முதலாளித்துவம் மற்றும் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களின் நிலைநிறுத்தப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் சலுகைகளைத் தாக்குவதற்கான உண்மையான ஜனநாயக அரசாங்கத்தை சர்வாதிகார ஆட்சிக்குப் பதிலாகக் கொண்டுவருவதற்கு அதுதான் முன்னிபந்தனை ஆகும்.

அமெரிக்க ஆதரவுடைய தலையீட்டின் நோக்கம் அத்தகைய உண்மையான புரட்சியைக் கவிழ்த்து, வாஷிங்டனுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் இன்னும் தாழ்ந்து நடக்கும் ஆட்சியை அங்கு இருத்துதல் ஆகும். அதன் பின் லிபியா ஒரு இராணுவ, அரசியல் தளமாக மாற்றி, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை அடக்கும்.

ஒபாமா உரையாற்றுகையிலேயே, லிபியா மீது நீடித்த, குருதி கொட்டும் வான் தாக்குதல்கள் என உறுதியாக வரக்கூடிய நடவடிக்கைகள் துவக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தயாராகிவிட்டன. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முக்கியப் பங்கை, குறைந்தபட்சம் ஆரம்பத்திலேனும் லிபிய வான் பாதுகாப்புக்கள், ராடர் நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளை தாக்குவதற்கு மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி குறிப்புக் காட்டியுள்ளார். “நம் ஐரோப்பிய, அரபு பங்காளிகள் திறமையுடன் பறக்கக்கூடாத பகுதியை நிறுவுவதற்குஅமெரிக்கா உதவும் என்று ஒபாமா கூறினார்.

இதுவரை நேரடியான விமானத் தாக்குதலில் பங்கு பெறக் கையெழுத்திட்டுள்ளஅரபு பங்காளி நாடுகளாக கட்டாரும் ஐக்கிய அரபு எமிரேட்டும்தான் இருக்கின்றன. இவைகள் இரண்டும் சௌதி அரேபியாவுடன் சேர்ந்து முடியாட்சிக்கு எதிரான வெகுஜன இயக்கத்தை நசுக்க பஹ்ரைனில் செயல்படுகின்றன.

இப்பிராந்தியத்தில் ஒரு புதிய இராணுவ நடவடிக்கைளை தொடர்வது பற்றித் தீவிர தயக்கங்கள் கொண்டதை தெளிவாக்கியுள்ள பென்டகனுக்கு உறுதியளிக்கும் வகையில்தான் ஒபாமா பேசியுள்ளார் என்பது வெளிப்படை.

பிரிட்டனும் பிரான்ஸும் நேட்டோவுடன் வெள்ளியன்று அவசர கூட்டத்தை நடத்தின. அதன்பின் நேட்டோவின் தலைமைச் செயலர் ஆண்டெர்ஸ் போ ரஸ்முசென் கூட்டணிபரந்த சர்வதேச முயுற்சியின் ஒரு பகுதியாக ஐ.நா.தீர்மானத்திற்கு ஆதரவான பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமை செய்துவருகிறதுஎன்று கூறினார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் பாராளுமன்றத்தில் இங்கிலாந்து Typhoon, Tornado விமானங்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை அப்பிராந்தியங்களுக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார். இத்தாலி அதன் மத்தியதரைக்கடல் பகுதியிலுள்ள விமானத் தளங்கள் லிபியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்த பயன்படுத்த அனுமதி கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஸ்பெயினும் அதன் தெற்கு விமானத் தளங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்க முன்வந்துள்ளது.

CF-18 போர் விமான ஜெட்டுக்களை லிபிய கடலோரப்பகுதியிலிருக்கும் கனேடிய போர்க்கப்பலுடன் சேர்ந்து கொள்ள அனுப்புவதாகக் கனடா அறிவித்துள்ளது.

அமெரிக்க கப்பல்களும் போர் விமானங்களும் இப்பிராந்தியத்தை தாக்கும் தூரத்திற்குள் உள்ளன. இவற்றுள் நீர்மூழ்கிக் கப்பல்கள், டொமஹாக் க்ரூஸ் ஏவுகணை இயக்கும் ஆற்றலுடைய மேல் தளக் கப்பல்கள் ஆகியவையும் அடங்கும். கடற்படையில் கிட்டத்தட்ட 1,200 மரைன்களும் டஜன்கணக்கான ஹெலிகாப்டர்களும் உள்ளன.

வெளிவிவகார செயலர் கிளின்டன், பாரிஸுக்கு சனிக்கிழமையன்று ஐரோப்பிய, அரபுப் பிரதிநிதிகளுடன் வான் தாக்குதலுக்கான திட்டத்தை உறுதிப்படுத்துவதற்குக் கூடிப் பேசுவார் என்று ஒபாமா அறிவித்தார்.

ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் மைக்கேல் எம்.டன், ஒரு பறக்கக்கூடாத பகுதியை நிறுவுவதற்குத் தேவையான தாக்குதல் அளவைப் பற்றி, “ஒரு விரிவான பறக்கக்கூடாத பகுதியை நிறுவ வேண்டும் என்றால், அதற்கு ஒரு வார அவகாசம் தேவைஎன்று கூறியதாக மேற்கோளிட்டு ப்ளூம்பேர்க் நியூஸ் தகவல் கொடுத்துள்ளது.

இது ஒரு போர் நடவடிக்கை”, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் லிபிய விமானப் பாதுகாப்பு முறைகளை அழித்தால், லிபியர்கள் கொல்லப்படுவர் எனவும் டன் குறிப்பிட்டார்.

பென்டகனின் கருத்துப்படி லிபியாவிடம் 30 தளங்கள் தரையிலிருந்து வானை ஏவுகணைகள் மூலம் தாக்கும் திறன் கொண்டவை என்றும் அவற்றில் 15 எச்சரிக்கை தரும் ராடர் பொருத்தப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.