சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan’s TEPCO: a history of nuclear disaster cover-ups

ஜப்பானின் TEPCO: அணுசக்திக் கசிவு மூடிமறைக்கப்படுபவற்றின் ஒரு வரலாறு

By Mike Head
17 March 2011
Use this version to print | Send feedback

டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO-டெப்கோ) என்பது புகுஷிமாவிலுள்ள ஜப்பானின் அணுசக்தி கதிரின் நெருக்கடிக்கு மையத்திலுள்ள பெரும் நிறுவனமாகும். கடந்த பல தசாப்தங்களாக அதன் செயற்பாடுகள் பொதுமக்களின் உயிர்கள், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் நேரடி இழப்புக்களில் அரசாங்க ஆதரவுடன் பெருநிறுவன இலாபம் அடைவதின் உருவகமாகத் திகழ்கின்றது.

உலகிலேயே நான்காவது மிகப் பெரிய மின்சக்தி நிறுவனமாகவும், ஆசியாவில்  மிகப் பெரியதும் ஆகவும், 17 அணுசக்தி உலைக் கூடங்களைக் கொண்டு ஜப்பானின் மின்சாரத் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கும் நிறுவனமாக டெப்கோ உள்ளது. இதில் நீண்டகால தீவிர பாதுகாப்பு விரிசல்கள், ஆபத்துதரும் பேரழிவுத்திறன் உடையவற்றை முறையாக மூடி மறைத்தல், தகவல் வெளியிடுவோரை துன்புறுத்துதல், மக்கள் எதிர்ப்பை நசுக்குதல் மற்றும் குறைகூறல்களை அடக்குவதற்கு அதன் பொருளாதார, விளம்பரச் செல்வாக்கை பயன்படுத்துல் என்ற வரலாற்றைக் கொண்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஆய்வு அறிக்கைகளை தவறாக்கியுள்ளது என்ற நிரூபணத்தை தவிர, பாதிக்கப்பட்டுள்ள புகுஷிமா டைச்சி நிலையத்திலேயே பல தவறாக்கப்பட்டுள்ளவையும் உள்ளன. 2002ம் ஆண்டில் றியக்டர்கள் 1, 2, 3, 4 மற்றும்ஆகியவற்றின் அடித்தளங்களில் 1993லேயே கண்டுபிடிக்கப்பட்ட விரிசல்கள் பற்றிய அறிக்கைகளை மாற்றித் தவறாகக் கொடுத்துள்ளது பற்றி டெப்கோவே (TEPCO)  ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று ரிக்டர் அளவுகோலில் 9 எனப் பதிவான நிலநடுக்கத்தால் புகுஷிமாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது நிறுவனத்தின் நில நடுக்கத் தொடர்புடைய முதல் உடைவல்ல. 2007ல் இதைவிடச் சிறிய 6.8 அளவு இருந்த நடுக்கமே ஒரு தீயை ஏற்படுத்தி, அதையொட்டிய கதிரியக்க கசிவுகளை தோற்றுவித்து உலகிலேயே மிகப் பெரிதான டெப்கோவின் றியக்டர் 7 கஷிவாசாகி-கரிவா உலையை மூடவைத்தது. இதற்குப் பின்னர் நிறுவனம் அத்தகைய அதிர்வுகளைத் தாங்கும் வகையில் உலை கட்டமைக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டது.

தொடர்ச்சியான ஜப்பானிய அரசாங்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையங்கள் கடந்த 40 ஆண்டுகளாக அணுசக்தி மின்சக்தி நிறுவனங்களிலுள்ள பாதுகாப்புத் தோல்விகளில் கொண்டுள்ள உடந்தை  பற்றிய ஆய்விற்குரிய வரலாறு ஆகும். 1955ல் அமைக்கப்பட்டதிலிருந்து 2009 வரை ஜப்பானைக் கிட்டத்தட்ட தொடர்ந்து ஆண்டு வந்த LDP எனப்படும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் வணிக உயரடுக்கு ஆக்கிரோஷத்துடன் 50க்கும் மேற்பட்ட அணு உலைகளை வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புக்களையும் மீறித் தொடர்ந்துள்ளன. உலகில் நில நடுக்கம் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களில் ஒன்றான நாட்டில் பெரும் ஆபத்துக்களுக்கான திறன் இவ்வாறு செய்வதில் உள்ளது என்று அறியப்பட்டும், ஜப்பானிய முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு ஏற்ப மின்சக்தியைப் பெறுவதற்கு இது செய்யப்பட்டது.

மூடிமறைக்கப்பட்டுள்ள அணுசக்திக் கசிவு பற்றிய விபத்துக்கள் பற்றிய தகவல்ஐயத்திற்கு இடமின்றி பனிப்பாறையின் உச்சிதான் இது—1995லேயே வெளிப்படத் தொடங்கியது. அந்த ஆண்டு ஜப்பானிய அணுசக்தி அமைப்பான மொஞ்சுவில் துரித உற்பத்தி உலைக்கூடத்தில் சோடியக் கசிவு மற்றும் தீவிபத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய உத்தியோபூர்வத் தவறான தகவல்கள் பெரும் மக்கள் சீற்றத்தை ஏற்படுத்தின. PNC எனப்படும் சக்தி றியக்டர் மற்றும் அணுசக்தி எரிபொருள் வளர்ச்சி நிறுவனம், மொஞ்சுக்குப் பொறுப்பைக் கொண்டதும், அறிக்கைகளை மாற்றியதுடன், நிகழ்ச்சி நடந்தவுடன் எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் மாற்றி ஊழியர்களுக்கு எதுபற்றியும் பேசக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்தது என்று பின்னர் வெளியாயிற்று. தொடர்ந்த பல நீதிமன்ற வழக்குகளை அடுத்து, அரசாங்கம் கடந்த ஆண்டு றியக்டர் மீண்டும் திறக்கப்படுவதற்கு அனுமதி கொடுத்தது.

1999 ம் ஆண்டு ஜப்பானின் மிக மோசமான அணுசக்தியை ஒட்டிய விபத்துக்களில் ஒன்று டோக்கியோவிற்கு வடக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டொகைமுரா யுரேனிய வழிமுறை உலையில் நிகழ்ந்தது. சுமிடோமோ உலோகச் சுரங்கத்தின் ஒரு துணை நிறுவனமான JCO வினால் செயற்படுத்தப்பட்ட இந்த உலையில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு அணுக்கசிவு தொடர்ப் பின்விளைவு இரு தொழிலாளர்களை கொன்று நாடு முழுவதும் கதிரியக்க நியூட்ரோன்களையும் தூவியது. பாதுகாப்புத் தரங்கள் மீறப்பட்டதால் ஏற்பட்ட ஒரு கசிவையடுத்து, 55 தொழிலாளர்கள் கதிரியக்க பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் 300,000 மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டனர். உலையிலிருந்த பாதுகாப்புக் கருவி காணப்படவில்லை என்று அரசாங்க அதிகாரிகள் பின்னர் கூறினர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் TEPCO, பழையதாகிக் கொண்டிருக்கும் புகுஷிமா டைச்சி நிலையம் உட்பட பல இடங்களிலும் பாதுகாப்புத் தகவல்களை தவறாகக் கொடுத்துக் கொண்டுவருகிறது என்பது அம்பலமாயிற்று. ஆரம்பத்தில் நிறுவனம் தவறான தகவல்கள் 29 முறை கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டது. ஆனால் இறுதியில் அது 1977 முதல் 2002க்கு இடேயே இரு தசாப்தங்களில் 200 முறைக்கும் மேலாக அவ்வாறு நடந்ததாக ஒப்புக்கொண்டது. இதில் அதிகாரிகளுக்குத் தவறான தொழில்நுட்பத் தகவல்கள் கொடுக்கப்பட்டதும் இருந்தது. NISA எனப்படும் அணுசக்தி தொழில்துறைப் பாதுகாப்பு அமைப்பின் கருத்துப்படி 13 பிரிவுகளில் உலைக்கூட கொள்கலப் பூச்சுக்களில் ஏற்பட்ட விரிசல்களை மறைப்பதற்கு TEPCO முயன்றது. இதில் புகிஷிமா டைச்சி (6 றியக்டர்கள்), புகுஷிமா டைனி (4 றியக்டர்கள்) மற்றும் கஷிவாசிகி-கரிவா (7 றியக்டர்கள்) ஆகியவை உள்ளன.

TEPCO வின் தவறான செயல்கள் GE எனப்படும் ஜெனரல் எலெக்ட்ரிக்கில் ஒரு முன்னாள் பொறியியலாளரின் தகவலை வெளிப்படுத்திய செயலின் விளைவாக வெளிப்பட்டது. TEPCO வுடன் நெருக்கமான பிணைப்புக்களை GE கொண்டிருந்தது. GE ஆனது உலைகளைக் கட்டமைத்து மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை பரிசோதனை செய்வதற்கும் பல தசாப்தங்களாக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு MITI அமைச்சரகத்திற்கு, (தற்பேதைய பொருளாதார, வணிக, தொழில்துறை METI அமைச்சரகத்திற்கு) பாதுகாப்பு பற்றிய மோசடிகளை தெரிவித்த பொறியியல் வல்லுனர், அமைச்சரகமானது அவருடைய பெயரை TEPCO விற்குத் தெரிவித்து நிறுவனத்துடன் சேர்ந்துகொண்டு தகவலை புதைப்பதில் ஈடுபட்டது என்பதைத்தான் கண்டார்.

டெப்கோவிற்காக காற்று இறுக்கத்தைப் பற்றிய ஆய்வு நடத்திய ஹிடாச்சியும் சோதனை முடிவுகளில் திரித்தல்கள் ஏற்படுத்தப்பட உடந்தையாக இருந்தார். இரு முறை புகுஷிமா எண்1 றியக்டரில் அழுத்தப் பதிவுகள் உறுதியற்ற நிலையில் இருந்தன. எனவே தொழிலாளர்கள் கொள்கலனில் காற்றை உட்செலுத்துமாறு பணிக்கப்பட்டனர். அதையொட்டி அழுத்தம் தக்க வைக்கப்படுவதாகத் தோன்றும்.

ஆயினும்கூட, TEPCO வின் சொந்த கணிப்பீடுகளை நம்புவதும், உலைகளின் பாதுகாப்பு தொடர்பாக அங்கே பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் NISA பேணிவந்தது. ஒவ்வொரு 13 மாதங்களில் மட்டும் அணுசக்தி உலை ஏஜன்சி பரிசோதிப்பதுடன், ஒவ்வொரு நிறுவனத்தின் மத்திய றியக்டரைச் சுற்றி பயன்படுத்தும் உடைகளும் பம்ப்புகளும் பரிசோதனையிலிருந்து விடப்படுகின்றன.

LDPஅரசாங்கம் இத்தகைய அப்பட்டமான பாதுகாப்பு மீறல்களைப் பற்றி கவலைப்பட்டது போல் காட்டிக் கொண்டது. பொருளாதாரம், வணிகம், தொழில்துறையின் துணை மந்திரியான செய்ஜி மூரட்பொதுமக்கள் அணுசக்தி பற்றி நிறுவனத்திடம் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டிக் கொடுத்துவிட்டதுஎன்றார். TEPCO வின் மூத்த நிர்வாகிகள் முறையாக இராஜிநாமா செய்தனர், அவர்களுக்குப் பின் பதவிக்கு வந்தவர்கள் இனி மோசடி வராமல் தடுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறினர்.  2005ம் ஆண்டு இறுதியை ஒட்டி அரசாங்கத்தின் ஒப்புதலுடன் எல்லா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உலைகளையும் புதிய தலைமுறை மீண்டும் தொடக்கியது.

ஓராண்டிற்குப்  பின், மார்ச் 2007ல் நிறுவனம் ஒரு உள் விசாரணையில் பல தெரிவிக்கபடாத நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதைக் காட்டியுள்ளன என்று அறிவித்தது. 1978ல் ஒரு றியக்டரில் ஏற்பட்ட எதிர்பாராத நெருக்கடி, முறையாகத் தவறாக உண்மைகளை மாற்றிக் கூறுதல் என 2002ல் மறைக்கப்படாதவை பற்றியும் தெரியவந்தன. மீண்டும் நிறுவனம் பகிரங்கமாக வருத்தத்தை காட்டியது: ”எங்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொதுமக்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் பெரும் கவலை கொடுத்ததற்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்என்று டெப்கோவின் துணைத் தலைவர் கட்சுடோஷி கூறினார். நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது.

பல மாதங்களுக்குப் பின்னர் ஜூலை 2007ல் TEPCO வின் கஷிவாசகி-கரிவா அணுசக்தி நிலையம் 6.8 நில நடுக்கத்தையடுத்து மூடப்பட்டது நிறுவனத்தின் உண்மையான உத்தரவாதங்களைத்தான் நிரூபித்தது. ஹொன்ஷு மேற்குக் கடலோர உலையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் மையம் கொண்ட நில நடுக்க அதிர்வு முக்கியக் கட்டிடத்திற்கு சேதம் ஏற்படுத்தியதுடன், தண்ணீர்க் குழாய்களைச் சிதைத்தும், ஐந்து மணி நேரம் அணைப்பதற்குப் பிடித்த தீவிபத்து ஒன்றை ஏற்படுத்தியும், சுற்றுச் சூழல் மற்றும் கடலில் கதிரியக்கங்கள் செல்வதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. கதிரியக்கம் ஏதும் இல்லை என்றுதான் நிறுவனம் முதலில் கூறியது. பின்னர் நில நடுக்கம் கதிர்வீச்சை ஏற்படுத்தி, அதைத் தொடர்ந்து கதிரியக்க நீர் ஜப்பானியக் கடலுக்குள் பரவியது எனக் கூறியது. நில நடுக்க ஆராய்ச்சியாளர் கட்சுஹிகோ இஷிபஷி அதிர்வின் மையம் தென்மேற்கே 10 கி.மீ.தூரத்தில் 7 ரிக்டர் அளவிலிருந்தது என்றும், இதையொட்டி கஷிவாசகி நகரம் ஒரு பெரிய நெருக்கடியை அனுபவித்திருக்கும் என்றும் எச்சரித்தார்.

பொதுமக்கள் எழுப்பிய பெரும் கூக்குரலையடுத்து அரசாங்கம் மீண்டும் கோபம் அடைந்தது போல் காட்டிக் கொண்டது. செய்தி ஊடகத் தகவல்களின்படி, ஒரு மூத்த ஜப்பானிய அரசாங்க அதிகாரி, TEPCO தலைவரைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துஒரு அபூர்வமான இழிவுபடுத்தும் வசைச் சொற்களை அள்ளி வீசினார்.” இந்த அதிகாரியின்பெரும் சீற்றத்திற்குக்காரணம் TEPCO நிர்வாகம்கஷிவாசகி-கரிவாவில் உடைப்புகளின் பரப்பு பற்றிமுதல் தடவையும் அல்லஅவருடைய அதிகாரிகளிடம் ஆரம்பத்தில் தவறாக செய்திகளைக் கொடுத்ததுதான்.”

2007ம் ஆண்டு TEPCO வின் மிகப் பெரிய உலை மூடப்பட்டது இரு ஆண்டுகளில் முதல் முதலாக நிறுவனத்திற்கு இழப்பை அளித்த வகையில் இருந்தது. இப்பொழுது அது உலகின் மிக அதிகம் கடன்பட்டுள்ள நிலையம் ஆகும். தற்போதைய நிகரக் கடன்கள் 88 பில்லியன் டொலர் என்று உள்ளன. நிதிய நெருக்கடி நிர்வாகத்தைச் செலவினங்களை உயர்த்தி அதன் மற்ற உலைகளிலிருந்து உற்பத்தியைப் பெருக்க உந்துதல் கொடுத்துள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பாதுகாப்பு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. TEPCO வின் “2020 பார்வைஎன்னும் ஆவணம்செலவைக் குறைக்கும் முயற்சிகள் விரிவுபடுத்தப்படும்என்று உறுதியளித்து, இதன் தேக்க எரிபொருள் (முக்கியமாக அணுசக்தி உடையவை) மொத்தத்தில் 33ல் இருந்து 50 சதவிகிதத்திற்கு உயர்த்தப்படும் என்றும் அறிவித்தது.

புகுஷிமாவில் தற்போதைய கரைப்பு மற்றும் கதிரியக்க நெருக்கடி நிலைமைகள் நீடித்த வகையில் டெப்கோ-அரசாங்கம் ஆகியவை ஒத்துழைத்ததின் விளவுதான். இது இப்பொழுது இன்னமும் தற்போதைய ஜப்பானிய ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தால் தொடரப்படுகிறது. பிரதம மந்திரி நாவோடொ கான், அவருடைய LDP முன்னோடிகளை போலவே, பகிரங்கமாக டெப்கோவின் சமீபத்திய நெருக்கடியில் மீண்டும் மீண்டும் மூடி மறைக்கும் செயற்பாடுகளுக்காக பகிரங்காமாக சீற்றத்தைக் காட்டியது போல் தோன்றுகிறார். “ஜப்பானிய பிரதம மந்திரி தன்னுடைய அலுவலகத்திற்கு, அணுசக்திக் கசிவு நெருக்கடியின் மையத்தில் இருக்கும் மின்சக்தி நிறுவனத்தின் நிர்வாகிகள் அதன் வளாகத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது பற்றி தெரிவிக்க அதிக அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது பற்றி சீற்றம் அடைந்து, “என்ன கெடுதல்தான் அங்கு நிகழ்கிறது? என்றும் கேட்டுள்ளார்என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கானின்சீற்றம்முற்றிலும் பொதுமக்களைத் திருப்தி செய்வதற்குத்தான். சமீப மாதங்களில் கான் அரசாங்கம் ஜப்பானிய மின்சக்தி நிறுவனங்களுக்கான உதவியை முடுக்கி விட்டுள்ளது. அதில் TEPCO தலைமை தாங்குகிறது. வெளிநாடுகளில் அணுசக்தி றியக்டர்களைக் கட்டமைக்கும் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் உதவுகிறது. அந்த உதவியின் ஒரு பகுதியாக METI, அணுசக்தி அமைப்பான NISA வின் தாய் அமைச்சரகம் ஜப்பான்ஒரு பாதுகாப்பான கட்டுப்பாட்டுச் சூழ்நிலையைக்கொண்டுள்ளது என்று வேறு பெருமையாகப் பேசியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் டெப்கோ தலைவர் சுனேஹிசா கட்சுமாடா மற்ற ஜப்பானிய எரிசக்தி நிறுவன நிர்வாகிகளுடன் METI மந்திரியாக அப்பொழுது இருந்த மசயுகி நவோஷிரா தலைமையின் கீழ் ஒரு பிரதிநிதிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அக்குழு வியட்நாமில் இரு அணுசக்தி றியக்டர்களைக் கட்டமைக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

TEPCO, அரசாங்கத்தின் ஆதரவுடன் மற்றய பெரும் ஜப்பானிய நிறுவனங்களுடனும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான், பெப்ருவரி 23ல் TEPCO மற்றும் மிட்சுபிஷி நிறுவனம் இரண்டும் ஒரு பங்காளித்தனம் கொண்டு EGCO எனப்படும் மின்சக்தி உற்பத்தி நிறுவனம் என்பதின் நிர்வாகத்தை எடுத்துள்ளன. அது தாய்லாந்தில் மிகப் பெரிய மின்சக்தி நிறுவனங்களில் ஒன்றாகும்.

நிர்வாகத்தின் சமீபத்திய விரிவாக்கம் அமெரிக்காவிற்கும் படர்ந்துள்ளது. மே 2010ல் TEPCO தெற்கு டெக்சாஸ் திட்ட அணுசக்தி றியக்டரில் விரிவுபடுத்தும் செயற்பாடுகள் குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது. இது வட அமெரிக்க அணுசக்தி நவீன செயற்பாடுகளின் நிறுவனத்துடன் (NINA) பங்காளித்தனத்தை கொண்டுள்ளது. அந்நிறுவனம் கூட்டாக NRG Energy, Inc. மற்றும் டொஷிபாவாவிற்கு சொந்தமானதாகும்.

ஜப்பானிற்குள்ளேயே TEPCO ஆறு புதிய அணுசக்தி றியக்டர்களை நிறுவ உள்ளது. இவற்றுள் புகுஷிமா டைச்சி உலையில் 7 மற்றும் 8 பிரிவுகள் (2014 மற்றும் 2015ல்), வடக்கு ஜப்பானில் பசிபிக் பெருங்கடலுக்கு எதிரேயுள்ள ஹிகஷிடோரி உலையில் 1, 2 பிரிவுகள் (2015 மற்றும் 2018ல்ஆகியவையும் அடங்கும். கடந்த மாதம் நள்ளிரவில் நிறுவனம் இரு புதிய அணுசக்தி உலைகளை கட்டமைக்கத் தொடங்கியபோது அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவற்றுள் ஒன்று ஜப்பானின் முக்கிய தீவான ஹொன்ஷுவிற்குத் தெற்கே ஐவாய் தீவிலும், மற்றொன்று இந்த வாரம் எரிமலை வெடித்த  க்யஷுத் தீவிலும் உள்ளன

ஐவாய் தீவில் நடந்த எதிர்ப்பு நிகழ்வுகள் ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் நிறுவனத்தின் 7.30 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மார்ச் 15ம் திகதி காட்டப்பட்டன. அந்நிகழ்வுப் பதிவு ஆவணத் திரைத் தயாரிப்பாளர் ஹிடோமி கமனகாவால் மேற்கொள்ளப்பட்டது. அவர் அரசாங்கத் தொலைக்காட்சி நிறுவனமான NHK யிலிருந்து நாட்டின் அணுசக்தி நிறுவனங்கள் பற்றிக் குறைகளை எடுத்துக் கூறியிருந்த அவருடைய ஆவணத் திரைப்படத்தை வெளியிட மறுத்தபின், பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

அரசாங்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்களினால் பல தசாப்தங்களாக TEPCO பாதுகாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியுள்ளது போல் (“The implications of the Japanese catastrophe”) ஜப்பானிய ஆளும் உயரடுக்கு 1960 களின் கடைசிப் பகுதி மற்றும் 1970 களின் ஆரம்ப ஆண்டுகளிலும் பெரும் வேகத்தில் அணுசக்தி மின்சக்தி வளர்ச்சியை மேற்கொண்டது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை நம்பி இருக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. இப்பொழுது 40 ஆண்டுகளாக செயல்படும் TEPCO வின் புகுஷிமா டைச்சி உலை முதலில் மார்ச் 26, 1970ல் செயல்முறையில் மின்சாரத்தை முதலில் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

மிக அடிப்படைப் பாதுகாப்புத் தரங்களை TEPCO ஏராளமாக வேண்டுமென்றே மீறியிருக்கும் செயல்கள், ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களின் கூட்டினால் சாத்தியமாயிற்று. இது எப்படியும் தனியார் இலாபத்தைப் பற்ற வேண்டும் என்ற தளத்தைக் கொண்டுள்ள முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கானது உலக மக்களுக்குக் கொடுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆபத்தையொட்டி விளையும் தீமைகளுக்குத் தெளிவான நிரூபணம் ஆகும்.