WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Japan disaster to intensify global economic contradictions
ஜப்பான் பேரழிவு சர்வதேச பொருளாதார முரண்பாடுகளை தீவிரப்படுத்தும்
Nick Beams
18 March 2011
இந்த
ஜப்பானிய பேரழிவு, முந்தைய
"சாதாரண"
காலகட்டத்தில் ஏற்பட்டிருந்தால்,
ஓர் உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் செல்லாமல்
இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த நாட்கள் நீண்ட காலத்திற்கு முன்பே போய்விட்டன.
இப்போதைய நிலைமையில்,
செப்டம்பர்
2008இல்
லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவுடன் தொடங்கிய உலக நிதியியல் நிலைமுறிவின் ஒரு புதிய
கட்டத்திற்கு களம் அமைப்பதில் இந்த பேரழிவு வினையூக்கியாக இருக்கும்.
ஏழு
முக்கிய முதலாளித்துவ பொருளாதாரங்களின் குழுவைச் சேர்ந்த,
பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு மத்திய வங்கியாளர் ராய்டரிடம் கூறுகையில்,
“உலக
பொருளாதாரம் செங்குத்தாக வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்று நான்
நினைக்கிறேன்.
நிதியியல் சந்தைகள் இன்னமும் பலவீனமாக இருக்கும் இந்த காலகட்டத்திலேயே, இந்த
சம்பவமும் நிகழ்ந்துள்ளது,”
என்றார்.
கடந்த
வெள்ளியன்று நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு முன்னரே,
உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை படிப்படியாக ஸ்திரமின்மையைக் கண்டு வந்தது.
அமெரிக்காவில்,
அமெரிக்க ஈக்விட்டி சந்தைகளில் ஏற்பட்ட இரண்டு-ஆண்டுகால உயர்வு,
அமெரிக்க பொருளாதாரத்தின் எவ்வித மீளெழுச்சியாலும் ஏற்பட்டதல்ல,
மாறாக,
மத்திய வங்கிகள் கூட்டமைப்பால் நிதியியல் அமைப்புமுறைக்குள் பாரியளவில்
பாய்ச்சப்பட்ட நிதிகளால் ஏற்பட்டது.
பைனான்சியல் டைம்ஸில்
பிரசுரமான சமீபத்திய ஒரு செய்தியில்,
2003-2007இல்
ஏற்பட்ட பங்குச்சந்தை உயர்வு தற்காலிக கடன் வளர்ச்சியின் மற்றும் வீட்டு விலை
மதிப்பீட்டின்
"ஆட்டம்காணும்
அஸ்திவாரத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டது.
இப்போதைய… இந்த ஓட்டமும் அரசுத்துறை தலையீடு என்ற அதீதகற்பிதத்தின், இன்னும் மோசமாக
ஆட்டம் கொண்டிருக்கும் அடித்தளத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ளது” என்று வர்த்தக
பொருளாதார நிபுணர் டேவிட் ரோசன்பெர்க் குறிப்பிட்டார்.
அமெரிக்க பொருளாதாரத்தில் எந்தவிதமான நிஜமான மீட்சியும் கிடைக்காது என்பதை,
புதனன்று வெளியான வீட்டு கட்டுமானத்துறை புள்ளிவிபரங்கள் அடிக்கோடிடுகின்றன.
காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்ட விதிமுறைகளுக்கு இடையில்,
1960களில்
அரசுத்துறை பதிவுசெய்ய தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு,
வீடுகள் கட்டுவதற்குப் பெறப்படும் அனுமதிகள் மிக குறைந்தளவிற்கு வீழ்ச்சி
அடைந்துள்ள நிலையில்,
தனிக்குடும்ப மற்றும் கூட்டுக்குடும்ப வீடுகளின் கட்டுமானம் ஜனவரியில் இருந்ததைவிட
கடந்த மாதம்
22.5
சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததை அந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின.
அதேவேளை எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலையுயர்வின் காரணமாக,
அமெரிக்காவில் மொத்தவிற்பனை விலைகள் கடந்த மாதம்
1.6
சதவீதம் உயர்ந்தது.
ஐரோப்பாவில்,
நிதியியல் சந்தைகளிடமிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் பெரும்
அழுத்தத்தின்கீழ் வந்திருக்கும் நிலையில்,
அங்கே ஓர் ஆண்டுக்கு முன்னர் வெடித்த வங்கியியல் மற்றும் செலாவணி நெருக்கடி இன்னும்
தீர்க்கப்படவில்லை என்பது தெளிவாக உள்ளது.
ஆசியாவில்,
ஜப்பானிய பொருளாதாரம் மற்றொரு திருப்புமுனையை சந்திக்கவிருக்கிறது என்பது
வெளிப்படையாக உள்ளது.
அதேநேரத்தில் ஒரு பெரும் கடன்சந்தை விரிவாக்கத்தால் தூண்டப்பட்டு,
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையின் ஒரு தற்காலிக உயர்வால் சீன பொருளாதார
விரிவாக்கம் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக அச்சங்கள் வெளியாகின்றன.
இதற்கும் கூடுதலாக,
மத்தியகிழக்கு கொந்தளிப்பின் காரணமாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டிருக்கும்
உயர்வும் ஒரு பின்னடைவிற்கு அல்லது குறைந்தபட்சம் பொருளாதார வளர்ச்சியில் ஒரு
கணிசமான வீழ்ச்சியைக் கொண்டு வரும் அச்சங்களைத் தூண்டிவிட்டது.
தற்போது
இந்த பூகம்ப பேரழிவு இன்னும் கூடுதலாக உலக ஸ்திரமின்மையை தீவிரப்படுத்தி உள்ளது.
யென்னின் மதிப்பை உயர்த்துவது அதன் உடனடி விளைவுகளில் ஒன்றாக இருக்கும்.
இரண்டாம் உலக யுத்த காலக்கட்டத்திற்குப் பின்னர்,
அது அதிகபட்சமாக அமெரிக்க டாலருக்கு எதிராக நேற்று
76.25
என்ற
அளவை எட்டியது.
உலகம் முழுவதிலும் உள்ள நிதியியல் சந்தைகளுக்கு கடன்கள் அளித்ததில் ஜப்பானிய
நிறுவனங்கள் வகித்த முன்னனி பாத்திரத்திலிருந்து, இந்த ஊகத்திற்கு எதிர்விதத்தில்
அபிவிருத்தி எழுகிறது.
மொத்த
உள்நாட்டு உற்பத்தியில்
(GDP) 220
சதவீதத்திற்கும் அதிகமாக,
சமப்பட்டுள்ள அதன் பெரும் உள்நாட்டு அரசு கடன்கள் இருந்தபோதினும்,
வெளிநாட்டு சொத்துக்களில் சுமார்
$3
ட்ரில்லியன் அளவுடன்,
ஜப்பான் உலகின் முன்னணி கடனளிக்கும் நாடாக உள்ளது.
இதில்,
சுமார்
$900
பில்லியன் அமெரிக்க கருவூல பங்குபத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையைத் தக்கவைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம்
வகிக்கிறது.
எவ்வாறிருந்த போதினும்,
உள்நாட்டில் காப்பீடு மற்றும் ஏனையவைகளிலிருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்
ஜப்பானிய நிதிநிறுவனங்கள் அவற்றின் நிதிகளிலிருந்து ஓரளவிற்கு உள்நாட்டிற்குள்
திருப்பிவிடுகின்றன.
இது யென்னின் மதிப்பைத் தூக்கிவிடுகிறது.
ஆனால் உயர்ந்துவரும் யென்னின் மதிப்பு ஏற்றுமதியையும்,
பொருளாதார வளர்ச்சியையும் வெட்டும் மற்றும் பங்குச்சந்தைகளை அழுத்தும் அச்சுறுத்தலை
அளிக்கிறது.
இது ஓர் எதிர்மறை பின்னூட்ட நிகழ்முறையை உருவாக்கி,
வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு சொத்துக்களை அதிகமாக விற்று
நிதிகளை மீட்கும் நிலைக்குத் தள்ளி,
அவற்றின் மூலதன நிலைப்பாட்டிற்கு இன்னும் கூடுதலாக குழிபறிக்கும்.
ஆகவே இந்த நிலைமைகளின்கீழ்,
பூகம்பத்தின் விளைவாக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செலவும் சுமார்
$200
பில்லியனாக,
அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
4
சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
யென்னின் மதிப்புயர்வு உலக பொருளாதாரத்தை இன்னும் கூடுதலாக ஸ்திரமின்மைக்கு கொண்டு
வந்துவிடும் என்ற அச்சுறுத்தலால்,
ஜி7
நாடுகளின் மத்திய வங்கிகள் அதன் மதிப்பைக் குறைத்துவைத்திருக்கும் முயற்சியாக
யென்னை விற்க ஒப்புக் கொண்டுள்ளன.
ஆனால்,
அதேநேரத்தில்,
அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு,
ஏனைய நோக்கங்களோடு,
அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைவாக வைத்திருப்பதற்கும் நோக்கத்தையும் சேர்த்து,
அதன் பணத்தைப் புழக்கத்தில்விடும் திட்டத்தின் மூலமாக,
உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் பணத்தைப் பாய்ச்சுவதைத் தொடர்கிறது.
இத்தகைய
முரண்பாடாக ஓட்டங்களின் மற்றும் எதிர்-ஓட்டங்களின்
விளைவைத் துல்லியமாக கணிப்பது சாத்தியமல்ல.
ஆனால்,
2008
நிலைகுலைவிற்கு இட்டுச்சென்ற எந்த பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை என்ற
சூழ்நிலையில்,
ஒரு பாரிய நிதியியல் கொந்தளிப்பை உருவாக்கும் சாத்தியத்திறனை அவை கொண்டிருக்கின்றன
என்பது மட்டும் தெளிவாக உள்ளது.
பூகம்பம் தாக்குவதற்கு முன்னரே கூட,
பில்லினியரான ஹெட்ஜ் நிதி மேலாளர் கார்ல் ஐகாஹ்ன்,
அவர்களின் பணத்தைத் திரும்ப அளிப்பதாக கூறி,
அவருடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
“இன்னொரு
சந்தை சீர்குலைவு ஏற்படாது என்று நம்மால் கணிக்க முடியவில்லை என்பதால்,
இந்த வாய்ப்பை விட்டுவிட முடியாது,”
என்று அவர் எழுதினார்.
"கடந்த
இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட வேகமான சந்தை உயர்வும்”,
"பொருளாதார
கண்ணோட்டம் மீது இருந்துவரும் தொடர்ச்சியான கவலைகளும்"
தான்,
"மற்றொரு
சந்தை நெருக்கடிக்குச் சாத்தியமுள்ள"
அபாயத்தில் சிக்காமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு காரணமாகும்,
என்று அவர் குறிப்பிட்டார்.
ஜப்பான்
சம்பவங்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்டு,
கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு முக்கிய உரையில்,
2008
நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்ற உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட
ஏற்றத்தாழ்வுகள் இன்னும் தாண்டி வரப்படவில்லை என்று பேங்க் ஆப் இங்கிலாந்தின்
ஆளுநர் மெர்வின் கிங் குறிப்பிட்டார்.
“தற்போதைய
நெருக்கடிக்கு காரணமான காரணங்களில் எதுவுமே நீக்கப்படவில்லை.
வங்கிகள் “தோற்பதற்கு மிக முக்கியமான"
பிரச்சினை இன்னும் நம்முடன் தான் இருக்கிறது.
ஒரு ஸ்திரமான சர்வதேச நாணயம் மற்றும் நிதியியல் அமைப்புமுறையுடன் கட்டுப்பாடற்ற
வர்த்தகத்தை எவ்வாறு இணக்குவிப்பதென்பது பெரிதும் கையாள முடியாத ஒன்றாக உள்ளது.
ஏற்றத்தாழ்வுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன என்பது,
இன்று,
உலகளவில் இருக்கும் மிக வெளிப்படையான பிரச்சினையாகும்,”
என்று அவர் குறிப்பிட்டார்.
கிங்
நேரடியாக ஐரோப்பா என்று குறிப்பிடவில்லை,
ஆனால் அவற்றின் சில கூர்மையான வடிவங்களில் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின்
தீவிர முரண்பாடுகள் இங்கிருந்து தான் எழுகின்றன.
“இறையாண்மை
கடன்"
என்றழைக்கப்படுவதில் தொடர்ந்துவரும் நெருக்கடி,
நிஜத்தில்,
வங்கியியல் அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியாகும் என்று
Der
Spiegel
க்கு
அளித்த ஒரு சமீபத்திய நேர்காணலில் பிரபல அமெரிக்க பேரிய-பொருளியல்வாதி பேரி
எசென்கிரீன் குறிப்பிட்டார்.
அவர்
அந்த இதழுக்கு கூறுகையில்,
“தற்போதைய
பிணையெடுப்பு முயற்சிகள் ஒன்றுக்கும் உதவவில்லை,”
என்று கூறினார்.
“முக்கியமாக,
இத்தகைய முறைமைகளைக் கொண்டு சாதிக்க விரும்பிய ஜேர்மன்,
பிரான்ஸ் அனைத்தும்,
அவற்றின் சொந்த வங்கிகளைப் பொறிவிலிருந்து காப்பாற்றுவதற்கே ஆகும்… யூரோ நெருக்கடி
முதலாவதும்,
முக்கியமானதுமான ஒரு வங்கியியல் நெருக்கடியாகும்.
…பெரும்பாலான
மக்கள் ஊகிப்பதையும் விட ஐரோப்பிய வங்கிகள் மிகப்பெரும் ஆபத்தில் உள்ளன,”
என்று அவர் குறிப்பிட்டார்.
Bank
for International Settlements
அளித்திருந்த சமீபத்திய புள்ளிவிபரங்கள்,
இந்த அபாயத்தின் வீச்சை வெளிப்படுத்துகிறது.
கிரீஸ்,
அயர்லாந்து,
போர்ச்சுக்கல்,
ஸ்பெயின் ஆகிய நான்கு மிக மோசமான தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கும் ஐரோப்பிய
பொருளாதாரங்களுக்கு
$25
ட்ரில்லியனையும் விட அதிகமாக, வெளிநாட்டு வங்கிகள் ஒரு மொத்தமாக
திறந்துவைத்திருப்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
லெஹ்மன்
பொறிவு ஏற்பட்ட காலக்கட்டத்தில் இருந்ததைவிடவும்,
ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச விடையிறுப்பிற்கு,
மிகக் குறைந்த சாத்தியக்கூறைக் கொண்டிருக்கும் நிலைமைகளில்,
இன்னுமொரு நிதியியல் நிலைகுலைவின் தீவிர அச்சுறுத்தல் எழுந்து வருகிறது.
அந்த நிலைகுலைவிற்குப் பின்னர்,
ஜி20
என்றழைக்கப்பட்ட சர்வதேச முதலாளித்துவத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு,
மற்றும் ஒருவகையான ஆணையம் உதவிக்கு வந்தது.
இரண்டு
ஆண்டுகள் போய்விட்டன,
இந்த முன்னோக்கு,
அது எப்போதும் ஆனதைப் போல,
அதன் மாயபிம்பத்திலிருந்து வெடித்துவிட்டிருக்கிறது.
Foreign Affairsஇன்
சமீபத்திய இதழில் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அயன் பிரம்மர் மற்றும் நௌரியல்
ரௌபினியால் எழுதப்பட்டு வெளியான ஒரு கட்டுரை,
ஒரு நிலைத்திருக்கக்கூடிய ஜி20,
ஜி-3
அல்லது ஒரு ஜி-2
கூட இங்கே கிடையாது என்று குறிப்பிடுகிறது.
“இப்போது
நாம் ஜி-பூஜ்ஜிய
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு நிஜமான சர்வதேச திட்டத்தை எடுத்துச்செல்லும்,
அரசியல் மற்றும் பொருளாதார நெம்புகோலைக் கொண்டிருக்கும் அல்லது நோக்கத்தைக்
கொண்டிருக்கும்,
ஒரேயொரு நாடோ அல்லது நாடுகளின் ஒரேயொரு அணியோ கூட இதில் கிடையாது,”
என்று அது குறிப்பிடுகிறது.
இதன் விளைவுகள்,
பேரிய-பொருளியல் (macro
economy)
கொள்கை,
வர்த்தகம்,
நிதியியல்,
தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற மிக முக்கிய பிரச்சினைகளின்மீது சர்வதேச களத்தில்
தீவிரமான முரண்பாடுகளாக இருக்கும் என்று அந்த இரு பொருளாதார நிபுணர்களும்
எச்சரித்தனர்.
ஜப்பானிலிருந்து பொருளாதார மற்றும் நிதியியல் அதிர்ச்சி அலைகள் பரவியிருக்கின்ற
நிலையில்,
இந்த விரோதங்கள் இன்னும் தீவிரமடையும்.
தனியார்வசமிருக்கும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டின்கீழ்,
உலகில் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பிரதேசங்களில் அணுசக்தி ஆலைகளை நிறுவும்
முடிவுகளில் இருந்து,
இந்த பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்குமுறையின் நாசகரமான விளைவுகளை இப்போது மிக
தெளிவாக பார்க்க முடிகிறது.
எவ்வாறிருந்த போதினும்,
இந்த உலகளாவிய பொருளாதார ஒழுங்குமுறையின் விளைவுகள் மரணத்திற்குக் குறைவில்லாமல்
தான் இருக்கும்.
இதில் உலக மக்களின் உயிரும்,
வாழ்க்கையும் முதலாளித்துவ சந்தை மற்றும் தனியார் இலாப அமைப்புமுறையின் நாசகரமான,
கண்மூடித்தனமான நடவடிக்கைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
இவை,
உலகளாவிய பொருளாதாரத்தை சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மறு-ஒழுங்கப்பிற்காக,
ஒரு சர்வதேச சோசலிச திட்டத்தைச் சுற்றி சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை
ஐக்கியப்படுத்துவதை முன்னிறுத்துகிறது. |