WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்
Japan
nuclear emergency deepens
ஜப்பானின் அணுக்கசிவு
நெருக்கடி தீவிரமாகிறது
By Chris
Talbot
17 March 2011
புகுஷிமா
அணுசக்தி ஆலையில் நிலைமை விரைவில் மோசமாகிக் கொண்டிருப்பதுடன் மற்றும் அரசாங்கம்
மற்றும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம்
(TEPCO) ஆகியவை
வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவின் அளவு பற்றித் தவறாக கருத்துக்களைக்
கொடுத்து வருகின்றன என்பதும் தெளிவு.
இப்பொழுது கூட
ஆலைக்கு மிக அருகேயும் டோக்கியோவிற்கு
240 கி.மீ.
தொலைவில் உயர்ந்த
இடங்களிலும் கதிர்வீச்சு தீமை நிகழக்கூடிய நிலை வந்துவிட்டது
அறியப்பட்டுள்ளபோதிலும்கூட,
கொடுக்கப்படும்
தகவல்கள் முழுமை இல்லாமலும் முரண்பாடாகவும் உள்ளன.
அமெரிக்க
அணுசக்திகட்டுப்பாட்டு ஆணையத்தின்
(NRC)
தலைவரான கிரிகரி ஜாக்ஸ்கோ
நேற்று மன்ற விசை மற்றும் வணிகக் குழுவின் கூட்டத்தில் ஜப்பானிய அதிகாரிகள் ஒப்புக்
கொண்டுள்ளதைவிட நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றார்.
புகுஷிமாவின் எண்.
4 உலையில் அணு
எரிபொருள் தண்டுகள் சேமிக்கும் இடத்தில் நீரே இல்லை அல்லது மிகக் குறைந்த நீர்தான்
உள்ளது என்று அவர் கூறினார்.
இது
உண்மையானால்,
பேரழிவு தரக்கூடிய
கதிரியக்க நெருப்புகளும் வெடிப்புகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதவை.
NRC தலைவர் உலை எண்
3க்கு மேல்,
பயன்படுத்தப்பட்ட
தண்டுகள் குளிர்விப்பதற்காக தேக்கிவைக்கப்படும் நீர்த் தொட்டி விரிசல்
கண்டிருக்கலாம் என்றும் இது நீர் முழுவதையும் இல்லாமல் கசியச் செய்துவிடும்,
அணுசக்திப்
பொருட்களை சுற்றுச்சூழலுக்கு வெளிப்படுத்திவிடும் அச்சத்தைக் கொண்டுள்ளது என்றும்
கூறினார்.
இத்தளத்தில் உள்ள ஜப்பானிய
அவசரக்காலத் தொழிலாளர்களின் திறன் பற்றியும் ஜாக்ஸ்கோ ஐயம் எழுப்பியுள்ளார்.
“கதிர்வீச்சு
மட்டங்கள் மிக அதிகம் என்று நாங்கள் கருதுகிறோம்.
இது சீராக்க
நடவடிக்கை திறனை பாதிப்பது சாத்தியம் என்றும் நாம் நம்புகிறோம்”
என்றார் அவர்.
ஜாக்ஸ்கோடவின் சாட்சியம் முன்னதாக அமெரிக்க அணுசக்தி மந்திரி ஸ்டீவன் சூ ஆலையில்
“ஓரளவு கரைப்பு”
ஏற்பட்டுவிட்டது
எனத் தான் நம்புவதாகக் கூறியிருந்த அறிக்கையைத் தொடர்ந்து வந்தது.
டோக்கியோவில் உள்ள
அமெரிக்கத் தூதரகமும் நேற்று குடிமக்கள் புகுஷிமா ஆலையில் இருந்து
“கிட்டத்தட்ட
50 மைல்கள் ஆரம்
சுற்றளவு உள்ள”
பகுதிகளில் இருந்து
வெளியேற்றப்பட வேஎண்டும் என்று அறிவித்துள்ளது.
இந்தப் பகுதி
ஜப்பானிய அதிகாரிகள் சுமத்தியுள்ள வெளியேற்றப்பகுதியை விட நான்கு மடங்கு அதிக
பரப்பு உடையது ஆகும்.
டோக்கியோவில் அரசாங்கமும்
TEPCO அதிகாரிகளும்
உலைக்கூடம் எண் 4
பற்றிய நிலைமையை
தெரிவிக்கும் ஜாக்ஸ்கோ அறிக்கையை நிராகரித்தன.
“உள்ளே சோதிக்க
எங்களால் செல்ல முடியாது,
ஆனால் கட்டிடத்தின்
சூழலை கவனத்துடன் கண்காணிக்கிறோம்,
குறிப்பிடத்தக்க
வகையில் பிரச்சினை ஏதும் இல்லை”
என்று
TEPCO செய்தித்
தொடர்பாளர் ஹஜிமே மோடோஜுகு அறிவித்தார்.
இதற்கு விடையிறுத்து
ஜாக்ஸ்கோ கூறுகையில் தன்னுடைய மதிப்பீடு துல்லியமானது என்றும்
TEPCO இன்னும் பிற
ஜப்பானிய அதிகாரிகள் இந்த உலைக்கூடம் எண்
4 பற்றி
உறுதிபடுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.
அமெரிக்க
அதிகாரியின் அறிக்கைகள்
TEPCO மற்றும்
ஜப்பானிய அரசாங்க அதிகாரிகள் புகுஷிமா நிலைமை உண்மையை வெளிப்படுத்தாமல் மூடிமறைத்து
அதிர்ச்சி தரும் சான்றுகளைத்தான் அளிக்கின்றன.
ஐரோப்பிய
ஒன்றிய எரிசக்தி ஆணையர் குந்தர் ஒற்றிங்கர் ஐரோப்பியப் பாராளுமன்றக்குழுவிடம்
நேற்று
“தளம் முற்றிலும்
கட்டுப்பாட்டிற்கு அப்பால் சென்றுவிட்டது.
வரவிருக்கும்
மணித்தியாலங்களில்,
இன்னும் பேரழிவு
நிகழ்வுகள் ஏற்படக்கூடும்,
அவை தீவிலுள்ள
மக்களின் உயிர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடும்.”
என்றார்.
இந்த
எச்சரிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளை சரிவிற்கு உட்படுத்தியது.
அதனால் ஒற்றிங்கர்
ஒரு புதிய செய்தி ஊடகத்திற்கான தகவலை அவருடைய செய்தித்தொடர்பாளர் மூலம் அனுப்பி
நிலைமை பற்றி தன்னிடம்
“சிறப்பான தகவல்
ஏதும்”
வரவில்லை என்றும்,
“தன்னுடைய கவலையைப்
பகிர்ந்து கொண்டதாகவும்,
மக்கள்,
பாதிப்பாளர்களுக்கு
ஏற்படக்கூடிய நிலை பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும்”
கூறினார்.
அனைத்து
அவசரக்காலத் தொழிலாளர்களும் தற்காலிகமாக புகுஷிமா உலைக்கூடத்தில் இருந்து புதன்
காலை வெளியேற்றப்பட்டபின்,
கதிர்வீச்சுத்
தரங்கள் மணித்தியாலத்திற்கு
1,000
மைக்ரோசீவெர்ட்டுகள்
(microsieverts)
என்ற நிலையை அடைந்தபின்,
பேரழிவு ஒரு புதிய
கட்டத்தை அடைந்துவிட்டது என்பது வெளிப்படையாயிற்று.
அவசரக்காலக் குழு
ஆலைக்கூடத்திற்குப் பின்னர் கதிர்வீச்சுத் தரம் சற்று குறைந்தவுடன் திரும்பினர்.
ஆனால் அதற்குள்
நிலைமை பேரழிவைத் தொட்டுவிட்டது;
புகைப்படலம்
உலைக்கூடம் எண் 3ல்
இருந்து வெளியே வந்த வண்ணம் இருப்பது காணப்பட்டது;
மற்றொரு தீ கட்டிடம்
4ல் உள்ள
குளிர்விக்கும் தொட்டியில் வெளிப்பட்டது;
அங்கும்
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகளின் சேமிப்புக்கள்தான் இருந்தன.
நிறுவனமோ
அல்லது ஜப்பானிய அரசாங்கமோ அதிகரித்த தர கதிர்வீச்சின் ஆதாரம் பற்றித் தெளிவான
அறிக்கையைக் கொடுக்கவில்லை.
தேக்கத்தொட்டியில்
இருக்கும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகளில் தீப்பற்றியிருக்கலாம் அல்லது
ஒவ்வொரு உலைக்கூடத்தையும் தாங்கியிருக்கும் எஃகு கட்டுப்பாட்டுக் கொள்கலன்களில்
பெரும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம்.
எப்படி இருந்தாலும்,
புகுஷிமா உலகை
மாசுபடுத்தக்கூடிய அணுக்கசிவுப் பேராபத்தாக வளர்ந்துவிட்டது.
செர்னோபில்
உலைக்கூடத்தில் உடைப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலில் ஒருதொகை கதிர்வீச்சுப் பொருட்கள்
வெளியேற்றிய நிலைமைதான் இத்துடன் ஒப்பிடப்பட முடியும்.
இதுவரை
கதிர்வீச்சு புகைமண்டலம் பசிபிக் கடலைத் கடந்து வரும் ஆபத்து என்பது
“மிக அரிது”
என்று
விவரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒபாமா
அமெரிக்க மக்களிடம் கதிர்வீச்சு ஹவாய்ப்பகுதிக்கு வருவதற்கு முன்பே கரைந்துவிடும்
என்று உறுதியளித்தார்.
அமெரிக்க அணுசக்தி
கட்டுப்பாட்டு ஆணையம் முன்னதாக ஜப்பானிய விடையிறுப்பு இதே போன்ற நிலையில் அமெரிக்க
என்ன செய்திருக்குமோ அப்படித்தான் உள்ளது என்று கூறியது.
ஆனால் அமெரிக்க
இராணுவ அதிகாரிகள் ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து தங்களுக்குக் கட்டுப்படுத்தும்
திறனுடைய பொருட்கள் பயன்படுத்துவது பற்றிப்
போதுமான தகவல்கள்
கிடைக்கப்பெறவில்லை
என்றும் தம் கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பெறும் தகவல்களைத்தான் நம்புகின்றனர்
என்றும் கூறியுள்ளனர்.
கதிர்வீச்சு
அளவுகள் சீவெர்ட்டுக்களில் அளக்கப்படுகின்றன;
இவை பொதுவாக
மில்லிசீவெர்ட்டுக்கள் எனப்படும்.
அதாவது சீவர்ட்டில்
ஆயிரத்தில் ஒரு பகுதி அல்லது மைக்ரோசீவெர்ட்டுக்கள் என.
அதாவது ஒரு
சீவெர்ட்டில் மில்லியனில் ஒரு பகுதி.
பெரும்பாலான மக்கள்
ஓராண்டில் எதிர்கொள்ளும் இயற்கையான கதிர்வீச்சு இயக்கம்
2
மில்லிசீவெர்ட்டுக்கள் அல்லது
2,000 மைக்ரோ
சீவெர்ட்டுக்கள் ஆகும்.
சில பகுதிகளில்
இயற்கைத்தர கதிர்வீச்சு உள்ளூர் புவியியல் தன்மையை ஒட்டி அதிகமாக இருக்கும்போது,
ஆண்டில்
எதிர்கொள்ளப்படும் கதிரியக்கம்
4மில்லிசீவெர்ட்டுக்கள்
வரை போகலாம்.
ஆனால் கதிர்வீச்சு
ராடோன் வாயு
(radon gasi)
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சேர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவிடும்.
அணுசக்தித்
தொழிற்சாலையில் உள்ள தொழிலாளி ஆண்டு ஒன்றிற்கு
20
மில்லிசீவெர்ட்டுக்கள் வரை எதிர்கொள்ள நேரிடும்;
அமெரிக்காவில்
சட்டபூர்வ அளவு
50
மில்லிசீவெர்ட்டுக்கள் ஆகும்.
ஜப்பானில் இது
100
மில்லிசீவெர்ட்டுக்கள்;
ஜப்பானிய அரசாங்கம்
புகுஷிமா நெருக்கடிக்குக் கொடுத்த முதல் விடையிறுப்பு இதை
250
மில்லிசீவெர்ட்டுக்கள் என்ற அளவிற்கு உயர்த்தியது ஆகும்.
ஆண்டு ஒன்றிற்கு
100
மில்லிசீவர்ட்டுக்கள் அளவு என்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை
1
சதவிகிதமாக்குவதற்கு இணையாக ஒப்பிடப்படும்.
ஒரு மணிக்கு
1,000
மைக்ரோசீவெர்ட்டுக்கள்
(1 மில்லிசீவெர்ட்)
என்று புதன்கிழமை
காலை அளக்கப்பட்டது.
உடனடி கதிர்வீச்சு
நோய்க்கு உட்படப் போதுமானது ஆகும்.
ஆலைக்குள்
தொழிலாளர்கள்
600-800
மைக்ரோசீவெர்ட்டுக்கள் என்று குறைந்தபோது சென்றனர்.
அது இன்னும் மிக
உயர்ந்த ஆபத்தான அளவு ஆகும்.
செவ்வாயன்று,
கதிரியக்க மட்டம்
ஒரு மணிக்கு 400
மைக்ரோசீவெர்ட்டுக்கள் என்று ஒருகட்டத்தை அடைந்தபோது,
இதற்குக் காரணம்
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட தீவிபத்து என்று கருதப்பட்டது.
தலைமை மந்திரிசபை
செயலர் யுகியோ எடனோ,
“இப்பொழுது நாம்
மனித ஆரோக்கியத்தைச் சேதப்படுத்தக்கூடிய திறன் உடைய அளவு பற்றிப் பேசுகிறோம்”
என்றார்.
24 மணி நேரமும்
புகுஷிமா பேரழிவைக் கட்டுப்படுத்த முற்படப் போராடிவரும் தொழிலாளர்கள் ஏற்கனவே மிக
அதிக கதிர்வீச்சு அளவுகளை எதிர்கொண்டு விட்டனர்.
பாதுகாப்புக் கவச
ஆடைகள் அணியப்பட்டும் இந்த நிலைதான் இருக்கும்.
கதிர்வீச்சு பரவுகிறது
ஆலையின்
அருகே உள்ள பகுதி காலி செய்யப்பட்டுவிட்டதுடன் இன்னும் அப்பால் உள்ள பகுதியில்
வசித்து வந்த மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறும் அவர்களுடைய குளிர்சாதன முறைகளை
அணைத்து வைக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளனர்.
இது உடனடியாக
பாதிப்பை எதிர்கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்,
ஆனால் கதிர்வீச்சு
விரைவாகப் பரந்து கொண்டிருக்கிறது.
உயர்மட்ட
கதிர்வீச்சு அளவுகளும் புகுஷிமாப் பகுதியின் நீர் வழங்கும் முறைகளில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
8,000
மைக்ரோசீவெர்ட்டுக்கள் என்ற
உயர்ந்த அளவிலான கதிர்வீச்சுக்கள் செவ்வாயன்று டோக்கியோவில்
கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒப்புமையில் ஒரு
கணினி டோமோக்ராபி
(computer tomography-CT)
ஸ்கான் ஒரு அவசரத்தில்
6,000
மைக்ரோசீவெர்ட்டுக்களை வெளிப்படுத்த முடியும் என்றாலும் அது அதிக நேரத்திற்கு
முடியாது.
கர்ப்பிணிப் பெண்கள்,
குழந்தைகள்
போன்றோருக்கு இந்த அளவு கதிர்வீச்சு தீவிர ஆபத்தைக் கொடுக்கும்.
எத்தனை பேர்
இறுதியில் பாதிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனால் ஐரோப்பாவில்
500 எலும்பு மச்சை
மாற்று சிகிச்சை மையங்கள் ஜப்பானில் இருந்து கதிர்வீச்சு நச்சினால் பாதிக்கப்படும்
திறன் உடைய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
டோக்கியோவில் உள்ள பிரெஞ்சுத் தூதரகம் அதன் குடிமக்களை,
அனைவரும் இன்னும்
தெற்கே செல்ல வேண்டும் இல்லாவிடின் ஜப்பானை விட்டே அகன்றுவிட வேண்டும் என்று ஆலோசனை
கூறியுள்ளது.
முக்கிய சர்வதேச
நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேறு நாடுகளில் வேலை செய்யுமாறு
அமைதியாகக் கூறி,
உள்ளூர் ஊழியர்களும்
வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறுகோரியுள்ளது.
BMW, SAP, Continental, Infrineon
அனைத்துமே ஊழியர்களை வெளியே
அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன
அரசாங்கம் அதன் மக்களை வடமேற்கு ஜப்பான் பகுதி அனைத்தில் இருந்தும் முழுதும்
வெளியேற்ற வகை செய்துள்ளது.
தனியார் ஜெட் விமான
நிறுவனங்கள்
அதிகமானோர்
தங்களை
அணுகுவதாக
குறிப்பிட்டதுள்ளதுடன்
தேவையைப் பெற்றுள்ளன.
ஹாங்காங்,
தைவான்,
தென் கொரியா,
ஆஸ்திரேலியா மற்றும்
அமெரிக்கா ஆகியவற்றிற்கான பயணக்கட்டணங்கள் வியத்தகு அளவில் உயர்ந்துவிட்டன.
Qantas, Lufthansa
ஆகியவை தங்கள் விமானப் பணிகளை வேறுபாதையால்
இயக்கும் வகையை
மேற்கோண்டுள்ளன;
இதற்குக் காரணம்
விமானம் இயக்கும் குழுவினர் டோக்கியோவில் இரவு தங்குவதைத் தவிர்ப்பது ஆகும்.
பொதுவாக
எச்சரிக்கையுடன் தகவல் கொடுக்கும் அணுசக்தித் தொழில்துறையில் உள்ளிதழான
World Nuclear
News முன்பு
நெருக்கடி நிலைமைகள் பற்றி சற்று பாதுகாப்பான முறைகளில் எழுதி வந்தது,
தற்பொழுது அதன்
ஒலிக்குறிப்பைத் திங்களன்று தீவிரமாக மாற்றி,
“ஜப்பானில் வியத்தகு
ஆபத்துப்பெருக்கம்”
பற்றி எச்சரித்தது.
இந்த
மாற்றத்திற்குத் தூண்டுதலாக இருந்தது புகுஷிமா டைச்சி எண்
2ல் கேட்கப்பட்ட
“மிக உரத்த
சப்தங்கள்”
என்ற தகவல்கள்
வெளிவந்தது ஆகும்.
ஜப்பானின்
அணுசக்தி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு நிறுவனம்
(NISA) இத்தகவலை
உறுதி செய்து, “கட்டுப்பாட்டிற்குள்
வைக்கும் அறை சேதம் அடையக்கூடும்”
எனக் கூறியுள்ளது.
கட்டுப்பாட்டிற்குள்
வைக்கும் அறை அல்லது டோரஸ் என்பது டோனட் வடிவில் உள்ள உலைக்கூடத்தின்கீழ் உள்ள
கட்டமைப்பு ஆகும்;
இதில் ஏராளமான நீர்
சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.
நெருக்கடிக்காலத்தில் அதற்குள் நீராவி இயக்கப்பட்டு கட்டுப்பாட்டுக் கொள்கலனில்
அழுத்தம் குறைக்கப்படும்;
இதில்தான் எரிபொருள்
தண்டுகள் உள்ளன.
உரத்த
சப்தங்கள் கேட்கப்பட்டவுடன்,
டோரஸில் இருந்த
அழுத்தம் தீவிரமாகக்
குறைந்தது.
அது
சேதப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
டெப்கோ கருத்துப்படி,
உடனடிப் பகுதியில்
கதிரியக்க அளவுகள் பெரிதும் உயர்ந்துவிட்டன.
எந்த அளவில் உயர்வு
ஏற்பட்டுள்ளது என்பது பற்றி முரண்பாடான தகவல்கள்தான் வந்துள்ளன.
ஆனால் அந்தக்
கட்டத்தில்தான் நிறுவனம் அதன் ஊழியர்கள் பலரையும் வெளியே அகற்றி,
50
தொழிலாளர்களை மட்டும் உள்ளே
நிறுத்தியது.
டோரஸ்
இழக்கப்பட்டுவிட்டதே சுற்றியுள்ள பகுதியின் பொது நிலையை மோசமாக்கிவிடாது;
ஏனெனில் கதிரியக்க
நீராவி ஏற்கனவே நேரடியாகச் சுற்றுச் சூழலில் செலுத்தப்பட்டிருக்கும் ஆனால் டோரஸும்
செயல்படாதது முழு வழிவகையிலும் உள்ள பாரிய
இடர்பாடுகளைக்
குறிக்கிறது;
ஏற்கனவே இவை
அவற்றின் வடிவமைப்பில் உள்ள தரங்களைவிடக் கூடுதலாகச் செயல்பட்டுவருகின்றன.
ஒரு மாபெரும்
அமைப்புமுறையின்
பேரழிவு தரும்
தோல்வி விளைந்து கொண்டிருக்கிறது.
புகுஷிபா
டைச்சி எண்
4 தளத்தில் மற்றும்
ஒரு நிகழ்வு இன்னும் புதிரில் ஆழ்ந்துள்ளது.
ஏனெனில் அதைப்பற்றி
முரண்பாடான,
ஊடுருவமுடியாத
அறிக்கைகள்தான் வந்துள்ளன.
தேக்கத் தொட்டி
ஒன்றில் ஒரு வெடிப்பைத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகளில் தீப்பற்றி
உள்ளது என்பதுதான் இது.
உலைக்கூடம்
வாடிக்கையான பரமாரிப்பிற்காக நில அதிர்வின் போது மூடப்பட்டபோது அந்தக் கட்டிடத்தில்
இந்த வெடிப்பு ஏற்பட்டது.
உலைக்கூடம்
எண்4ல்
எவ்வித பிரச்சினைகளும் முன்னதாக ஏற்படவில்லை.
தேக்கத்தில் நீர்
இல்லாதுதான் தண்டுகள் கூடுதல் சூடேறி,
நீராவித் தொடர்பைக்
கொண்டு அதையொட்டி ஹைட்ரஜனை விளைவித்து வெடிப்பை ஏற்படுத்தியது என்று டெப்கோ
கூறுகிறது.
வெளி விஞ்ஞானிகள்
இந்த விளக்கம் பற்றி கருத்துத் தெரிவிக்குமாறு கோரப்பட்டபோது,
இது ஒரு பொருளற்ற
விளக்கம் என்றனர்.
புதன்கிழமை
அதிகாலை மீண்டும் உலைக்கூடம்
4 கட்டிடத்தில் தீ
ஏற்பட்டது.
இரு தொழிலாளர்கள்
காணாமற்போய்விட்டனர்,
ஒருவேளை
இறந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கதிர்வீச்சு தரங்கள்
பெரிதும் உயர்ந்துவிட்டன,
எஞ்சியிருந்த
தொழிலாளர்கள் தற்காலிகமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
சாதாரண
செயற்பாட்டின்போது,
பயன்படுத்தப்பட்ட
எரிபொருள் தண்டுகள் உலைக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்டு தேங்கியுள்ள நீர்த்
தொட்டி ஒன்றில் குளிர்விப்பதற்காக வைக்கப்படும்.
புகுஷிமாவில்
அத்தகைய தேக்கங்கள் ஏழு உள்ளன.
அவற்றுள்
6 உலைக்கூடக்
கொள்கலத்திற்கு நேர் மேல்
உலைக்கூட
கட்டிடங்களுக்கு மேலை அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்று மட்டும்
தரைமட்டத்தில் உள்ளது.
TEPCOவோ
அரசாங்கமோ ஏற்கனவே வெடிப்புக்கள் ஏற்பட்ட மூன்று கட்டிடங்களில் இருந்த
நீர்த்தேக்கங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை.
தரைமட்டத்தில்
இருக்கும் தேக்கம் சுனாமியினால் மோசமான
பாதிப்பிற்கு
உட்பட்டிருக்க வேண்டும்.
மொத்தத்தில்
தளத்தில் இன்னும்
600,000 கதிரியக்கம்
உடைய எரிபொருள் தண்டுகள் இருப்பதாகத் தெரிகிறது.
இவை ஏற்கனவே
சுற்றுச்சூழலுக்கு
வெளிப்பட்டிருக்கவேண்டும் அல்லது இப்பொழுது வெளிப்படவேண்டும்.
கட்டிட எண்
4ல் இருந்த
தேக்கத்தின் நீர் கொதித்து,
அது மறுபடியும்
நிரப்பப்படு முன்னரே நீராவியாகிக் கொண்டிருந்தது என்பதை ஒப்புக் கொள்ள நேரிட்டது:
அதன் விளைவாக
எரிபொருள் தண்டுகள் காற்றிற்கு முகங் கொடுத்தன.
கட்டிட எண்
4ல் இருந்த
எரிபொருள் தண்டுகள் தீப்பிடித்துக் கொண்டன என்பதை
TEPCO நிர்வாகம்
மறுத்தது.
ஆனால் எரிந்த தீயை அணைக்க
முடியவில்லை என்பது இது உண்மையல்ல என்பதைக் காட்டுகிறது.
இதன் பொருள் அணுக்தி
பின்விளைவு முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்ட எரிபொருள்
தண்டுகளால் ஏற்பட்டது என்பதாகும்.
ஏனெனில் இந்த
வெடிப்பு அருகில் இருந்த கொங்க்ரீட் கட்டமைப்பு ஒன்றில் பெரிய துவாரத்தைப்
போட்டுவிட்டது.
அதுதான்
வெளிச்சூழலுக்கும் அணுசக்தி எரிபொருளுக்கும் இடையே நடுவில் இருந்தது ஆகும்.
புகுஷிமா
டைச்சி எண்1ஐப்
போலவே வடிவமைப்புக் கொண்ட அமெரிக்காவிலுள்ள
Vermont Yankee
அணுசக்தி நிலையத்தில் பொது மேற்பார்வைக் குழுவின் ஒருவரான அணுசக்தி பொறியியல்
வல்லுனர் ஆர்னி குண்டர்சென்
தேக்கத்தில்
20 ஆண்டுகளுக்கு
இருக்க வேண்டிய பயன்படுத்தப்பட் எரிபொருள் இருக்கக்கூடும் என்றார்.
எரிபொருள்
தண்டுகளில் நெருப்புப் பற்றுதல் என்பது
மனித
ஆரோக்கியத்திற்கு தீவிர,
பரந்த ஆபத்தைக்
கொடுக்கும். “அது
செர்னோபில் தொகுப்புகளை
போல்தான் ஆகும்”
என்றார் குண்டர்சென்.
உலைக்கூட
எண்
4 ல் ஏற்பட்ட
விளக்கம் கொடுக்கப்படாத தீ உலைக்கூடக் கரைப்பை விடக் கூடுதலான சுகாதார ஆபத்தை
ஏற்படுத்தும் திறனைக் கொண்டது;
ஏனெனில்
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் வைக்கப்படும் தேக்கம் உலைக்கூடத்தில்
இருக்கும் எஃகுக் கொள்கலத்தில் வைக்கப்படுவதில்லை.
நேற்று
ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த இடத்தில் நீரைப் பாய்ச்சுவதற்கு
TEPCO முயற்சித்தது.
ஆரம்பத்தில் அது
உலைக்கூடம் எண் 3
ஐ இலக்கு கொண்டது;
ஆனால் இது
தோல்வியில் முடிந்தது;
ஏனெனில் இடையே
உயர்மட்ட கதிரியக்க அளவுகள் இருந்தன.
இன்று இதை மீண்டும்
முயற்சிக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
போரிக்
அமிலம் சேர்க்கப்பட்ட நீரை சிதைந்த கட்டிடத்தின் வழியே நேரடியாக குளிர்விக்கும்
தேக்கத்தில் பாய்ச்சுவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படலாம்.
இல்லாவிடின்,
பொலிஸ்
நீர்ப்பாய்ச்சு வீச்சைப் பயன்படுத்துவர்.
போரிக் அமிலம் கலந்த
தண்ணீர் முக்கித்துவம் கொண்டது.
இது அணுசக்தியை
ஒட்டி சங்கிலிப் பிணைப்பு போன்ற பின்விளைவு பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள்
மூலம் தொடங்கிவிட்டது,
அல்லது அத்தகைய
நிகழ்வு நேரலாம் என்ற அச்சத்தைத் தெரிவிக்கிறது.
பேரழிவுத்
தளத்தில் அதிகப்படியான கருவியைக் கொண்டுவருவது இதுதான் முதல்தடவை எனத் தோன்றுகிறது.
அமெரிக்க ஊழியர்கள்
புகுஷிமா தளத்தில் உள்ளனர் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.
USS Ronald Reagan
இன்னும் பல அமெரிக்க இராணுவக் கப்பல்கள் கடலோரத்தில் நின்று கொண்டிருப்பது மற்றும்
ஜப்பானில் பல இராணுவத் தளங்களும் உள்ளன என்பது தெரிந்ததே.
அமெரிக்கக்
கப்பல்கள் பாதிக்கப்பட்ட அணு ஆலையில் இருந்து வெளிவரும் காற்றை எதிர்கொள்ளாத
வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்குக் காரணம்
கதிரியக்க வெளிப்பாட்டை முகங்கொடுப்பது குறையும் என்பது;
அமெரிக்க இராணுவத்
தளங்கள் உயர்ந்த கதிர்வீச்சு அளவுகள் பற்றியும் தகவல்களைக் கொடுத்துள்ளன.
வெடிப்புக்கள்
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் வைக்கப்பட்டுள்ள தேக்கத்தில் ஏற்பட்ட
வெடிப்பைத் தொடர்ந்து டைச்சி பிரிவுகள்
1, 2, 3
ஆகியவற்றிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டன.
இக்கட்டிடங்களில்
இருந்த உலைக்கூடங்கள் செயல்பட்டுவந்தன;
ஆனால் நில அதிர்வுக்
காலத்தின் தாமாகவே நின்று போயின.
ஆனால் உலைக்கூடம்
மூடப்பட்டாலும்கூட,
அது வெப்பத்தை
உற்பத்தி செய்கிறது;
ஏனெனில்
சேகரிக்கப்பட்டுள்ள எரியும் பொருட்கள் விரைவில் ஏற்படக்கூடிய கரைப்பைத்
தவிர்ப்பதற்கு குளிர்விக்கப்பட வேண்டும்.
இந்த ஆபத்து
கிட்டத்தட்ட 40
ஆண்டுகளுக்கு முன்பே
தெரியவந்துள்ளது.
கனேடிய விஞ்ஞானி
வால்ட் பாட்டர்சன் இதைப்பற்றி
1972ல்
New Scientist
ஏட்டில் விவாதித்துள்ளார்.
“ஒரு
சிதைவுற்ற குழாய் குளிர்விக்கும் நீரை மிருது நீர் உலைக்கூடத்தின் மையத்தில்
இருந்து வெளியேற அனுமதித்துவிட்டால்,
எரியும் பொருள்
சூடாவது விரைவான வெப்ப உயர்வை ஏற்படுத்தும்.
15 வினாடிகளுக்குள்
எரிபொருள் பூச்சு சிதைந்துவிடும்,
ஒரு நிமிடத்திற்குள்
எரிபொருளே கரையத் தொடங்கிவிடும்.
அப்படி ஏற்பட்டால்,
அதன் விளைவு
கட்டுப்படுத்தமுடியாத ஒரு விபத்துத்தான்;
அழிவுகள் தாங்க
முடியாதவையாக இருக்கும்.”
என்று அவர்
எழுதினார்.
PWR
Pressurized Water Reactors (அழுத்தம்
கொடுக்கப்பட்ட நீர் உலைக்கூடங்கள்)
மற்றும்
BWR Boiling Water Rectors (கொதிநீர்
உலைக்கூடங்கள்) -புகுஷிமா
டைச்சி இரண்டாம் ரகம்-
இரண்டுமே இந்த
ஆபத்தை ஒட்டி,
அவசரகால
குளிர்விக்கும் முறைகளைக் கொண்டவை.
ஆனால் பாட்டர்சன்
குறிப்பிட்டுள்ளபடி,
இந்த முறைகளின்
நம்பகத்தன்மை கொண்டவை அல்ல,
ஏனெனில் பரிசோதனைகள்,
மாதிரிகள் ஆகியவை
அதிக வலுவற்றவை.
அவர் கட்டுரை எழுதிய
காலத்தில்,
ஒரு அவசர
குளிர்விக்கும் முறை செயல்படுத்த நேரிடும் என்ற நிலைமை உண்மையில்
எதிர்பார்க்கப்படாத நிலையில்தான் இருந்தது.
ஜிர்கோனியம்
(zirconium)
கூட்டு உலோகமான ஜிர்காலாய்(
Zircalloy) மீது
வெப்பத்தின் விளைவு பற்றி பரிசோதனை செய்து பெறப்பட்ட சான்று இல்லாதது குறித்து
பாட்டர்சன் குறிப்பாகக் கவனத்தை ஈர்த்தார்.
அப்பொழுது இந்த
உலோகம்தான் எரிபொருள் தண்டிற்குப் பூச்சிற்கு பயன்பட்டது.
அவரும்
Union of Concerned Scientists
உறுப்பினர்களும் எழுப்பும்
வினாக்கள் இன்னும் கடுமையான பாதுகாப்புத் தரங்களுக்கு வகை செய்யும் என்று
பாட்டர்சன் நம்பினார்.
ஆனால் இப்படி
நடந்ததா என்பது சந்தேகம்தான்.
புகுஷிமா எரிபொருள்
தண்டுகள் ஜிர்காலாய் பூச்சைக் கொண்டவைதான்.
இது சூடேறியதால்
இயங்காதுவிட்டதுதான்,
தொடர் விளைவின்மூலம்
ஹைட்ரஜன் வாயுவைத் தோற்றுவிக்கும்
குளிர்விக்கும்
நீரில் ஏற்படுத்தியிருக்கக்கூடும்,
அது பின்னர்
வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜப்பானிய
அதிகாரிகள் ஒப்புக் கொண்டதற்கு மாறாக மற்ற வல்லுனர்கள் உலைக்கூடங்களில் எரிபொருள்
தண்டுகளுக்கு ஏற்பட்டுள்ள கூடுதுல் சேத அளவைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க அணுசக்தி
கட்டுப்பாட்டு ஆணையத்தில் மூத்த ஆணையராக உள்ள விக்டர் கிலின்ஸ்கி மூற்று மைல் தீவு
(Three Mile
Island)
பேரழிவின்போது நெருக்கடிக்கால குளிர்விக்கும் முறை ஒரு சில மணிநேரம் மட்டுமே
மூடப்பட்டது என்றாலும்,
உலைக்கூடத்தில் பாதி
எரிபொருள் கரைந்துவிட்டன என்று சுட்டிக் காட்டினார்.
இது கூறப்பட்ட பல
ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஆய்வாளர்கள் மூன்று மைல் தீவில் எந்த அளவிற்கு
எரிபொருள் கரைந்தது என்பது பற்றித் துல்லியமாகத் தெரிவித்தனர்.
“இது
இன்னும் மோசமாகப் போனால்,
அனைத்து எரிபொருளுமே
கரைவதைக் காண முடியும்.
இந்த உலைக்கூடங்கள்
ஒவ்வொன்றிலும் கணிசமான அளவு எரிபொருள் கரைப்பு ஏற்பட்டு அதன் விளைவும் இருக்கும்
என்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”
என்றார் கிலின்ஸ்கி.
“அவர்களுக்குத்
தெரிந்தவரை நீர்மட்டம் பாதிதான் இருந்தது.
அதைவிடக் குறைந்து
போயிற்று என்றால்,
அவர்கள் அனைத்து
நீரையும் இழந்துவிடுவர்,
பின் கரைந்துவிட்ட
எரிபொருள் -அதில்
டசின்கணக்கானவை உள்ளன,
நூறு டன் எரிபொருள்
எரிபொருள் ஒரு உலைக்கூடத்தில் இருக்கும்-
இவை அழுத்தக்
கொள்கலத்தின் கீழ்ப்பகுதி மூலமும் கரைந்துவிடும்.
சுற்றியுள்ள
கட்டிடங்கள் இவற்றைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்படவில்லை.”
புகுஷிமாவின் எரிபொருள் தண்டுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் ஒரு சங்கிலித் தொடர் பின்
விளைவை ஏற்படுத்தப் போதுமானவையாக இருக்கும் என்று பாட்டர்சன் நினைக்கிறார்.
உலைக்கூடங்களைப்
பொறுத்தவரை,
இது ஒரு அழுத்தமான
எஃகு கட்டுப்படுத்தும் கொள்கலனிற்குள் நடக்கும்.
ஆனால் இவை ஏற்கனவே
பழுதாயிருக்கும் வாய்ப்பு பற்றி அவர் கூறியுள்ளார்.
எண்
2 உலைக்கூடம்
திருத்தப்படமுடியாமல் போகலாம் என்று நினைக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ
அறிக்கைகள் கூட அதன் செயற் தன்மை பற்றி ஐயங்களை எழுப்பியுள்ளன.
இந்தக் கொள்கலன்கள்
பாரிய அழுத்தங்களைத் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு கட்டப்பட்டவை,
கிட்டத்தட்ட ஒரு அடி
பருமன் ஆனவை.
”ஆனால்
இவை நியூட்ரோன்கள் தாக்குதலுக்கும் உட்பட்டவை;
ஏனெனில்
இதைப்பொறுத்தவை அவை
40 ஆண்டுகாலமாக
உள்ளவை.
அதிலும் குறிப்பாக அழுத்தம்
மற்றும் வெப்பத்தட்ப வன்முறை அதிர்ச்சிகைகளைக் கொள்ளும்போது,
உலைக்கூடம் அதன்
இயல்பான செயற்பாட்டு நிலைமைக்கு வெளியே நகர்ந்து கொண்டு இயங்குகையில் அந்த
உலோகத்தின் நிலைமை பற்றி நமக்கு உண்மையிலேயே தெரியாது..”
என்றார் பாட்டர்சன்.
புகுஷிமாவில் இருப்பவை சில
1971ல் இருந்து
செயல்முறையில் உள்ளவை;
அவை செயற்பாட்டில்
இருந்து அகற்றப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.
அழுத்தக்
கொள்கலங்களில் ஏதேனும் ஒன்று முறிந்தாலும்,
“அனைத்தையும்
இழந்துவிடுவோம்”
என்று பேராசிரியர்
பாட்டர்சன் இங்கிலாந்துத் தளமுடைய
Independent
பத்திரிகையிடம் கூறினார்.
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டு குளிர்விக்கும் தேக்கம் கட்டிட எண்
4ல் இருப்பது
தீப்பிடித்தால்,
அது பரந்த பகுதிக்கு
உயிர்களை அச்சுறுத்தும் ஆபத்தைக் கொடுக்கும் என்றாலும்கூட,
வெளியாகிக்
கொண்டிருக்கும் தீய கனாவின் முழு அளவும்
இன்னும் புகுஷிமாவை
அடையில்லை என்பது முற்றிலும் ஏற்கத்தக்கதே.
ஒன்று அல்லது
கூடுதலான அழுத்தக் கொள்கலன்களில் உடைவு
என்பது உண்மையான
ஆபத்து,
அது அணுசக்தி நெருக்கடியை
இன்னும் உயர்ந்த அளவிற்குக் கொண்டு செல்லும்.
புகுஷிமாவிலுள்ள நிலைமை விபத்துத் தர அளவில்
7 புள்ளித்
தன்மையில் 6
என்ற இடத்திற்கு
உயர்த்தப்பட்டுள்ளது.
1979 மூன்று மைல்
தீவு பென்சில்வானியாவில் கரைப்பு என்பது ஐந்து என்னும் தரத்தில் கொள்ளப்பட்டது.
புகுஷிமா இப்பொழுது
உத்தியோகபூர்வமாக செர்னோபில்லை அடுத்த மிக மோசமான அணுசுக்திக் கசிவு விபத்து ஆகும்.
அது ஒன்றுதான் அன்று
தரம் 7
கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் செர்னோபில்லில்
குளிரூட்டும் சக்தியை இழந்தபோது ஒரு அழுத்தக் கொள்கலன்தான் உடைந்தது.
அங்கு பயன்படுத்தப்பட்ட
எரிபொருள் தேக்கங்களில் தீயும் படரவில்லை.
அணுசக்திப் பாதுகாப்பை
பொறுத்தவரையில் உலகம் ஏற்கனவே இன்னும் என்ன நேரும் என்று தெரியாத பகுதியில்தான்
உள்ளது.
மனித
ஆரோக்கியத்தை உலகளாவிய முறையில் அச்சுறுத்தும் நெருக்கடியைத் தோற்றுவித்த நிர்வாகம்
இன்னும் தனியார் கைகளில் உள்ளது என்பது முதலாளித்துவ முறையின் பகுத்தறிவற்ற தன்மை,
உண்மையில் குற்றம்
சார்ந்த தன்மை பற்றி நன்கு எடுத்துரைக்கிறது.
TEPCO தான் என்ன
செய்ய வேண்டும் என்று இன்னும் கூறுகிறது.
இதுவரை கறையற்ற
பாதுகாப்பு வரலாற்றை
TEPCO
கொண்டிருந்தாலும்
-அவ்வாறு
இல்லை-
அதன் பாதுகாப்பு முறைகள்
முதற்கண் போதுமானவையாக இல்லை,
இத்தகைய
நெருக்கடியின் தரம் என்பதானது எந்த தனியார்உடைமை நிறுவனம் கட்டுப்படுத்தும்
திறனைவிட மிக அதிகமாகும்.
எந்த நிறுவனமும்,
எந்த பங்குதாரர்கள்
பிரிவும்,
தனியார் இலாபம் என்ற
பெயரில்,
உலகம் ஒரு புறம் இருக்க,
ஒரு நாட்டு மக்களின்
முழுச் சுகாதாரப் பாதுகாப்பையும் ஆபத்திற்குட்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருக்கக்
கூடாது. |