WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Who is responsible for the nuclear catastrophe
in Japan?
ஜப்பானின்
அணுசக்தி
பேரழிவுக்கு
யார்
பொறுப்பு?
Patrick
Martin
16 March 2011
ஜப்பானின்
வடகிழக்கு
கடற்கரையோரங்களில்
பேரழிவை
உண்டாக்கிய
பூகம்பம்
மற்றும்
சுனாமியின்
விளைவாக,
நான்கு
அணுஉலைகள்
நெருக்கடியின்
பல்வேறு
கட்டங்களில்
உள்ளன;
வெடித்துச்சிதறும்
சாத்தியக்கூறும்
உள்ளது.
ஜப்பானிய
நேரப்படி,
புதனன்று
காலை,
உத்தியோகபூர்வ
உயிரிழப்பு
எண்ணிக்கை
3,373ஐ
எட்டி
இருந்தது.
ஆனால்
அந்த
எண்ணிக்கை
10,000த்தைத்
தாண்டும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கூஷிமா
வளாகத்தில்
மூன்று
அணுஉலைகளில்
வெடிப்புகள்
ஏற்பட்டுள்ளன.
அணுசக்தியின்
கழிவு பட்டைகளை
கிடப்பில்
வைத்திருக்கும்,
எண்
நான்கு
ஒன்றின்
குளிரூட்டும்
அமைப்புமுறை
இரண்டு
பெரிய
தீவிபத்துக்களால்
பாதிக்கப்பட்டுள்ளது.
இருபது
மில்லியனுக்கும்
மேலான
மக்கள்
வாழும்
ஒரு
மகாநகர
பிரதேசமான
டோக்கியோவிற்கு
ஓரளவிற்கு
தொலைவில்,
அளவிடக்கூடிய
பாதிப்புகளுடன்,
கதிரியக்க
கசிவுகள்
கணிசமாக
ஏற்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிரோஷிமா,
நாகாசாகி
சம்பவத்திற்குப்
பின்னர்
நாடு
அதன்
மிகப்பெரிய
பேரழிவை
முகங்கொடுத்திருப்பதாக
ஜப்பானிய
பிரதம
மந்திரி
அறிவித்துள்ளார்.
ஜப்பானிய
அணுசக்தி
முறிவு
அதன்
நீண்டகால
தாக்கத்தில்,
இறுதியாக,
செர்னோபில்
சம்பவத்தையும்
கடந்து
செல்லக்கூடும்
என்று
குறிப்பிட்டுக்காட்டி,
ஜப்பானிய
நிலைமைகளை
வரையறுக்கையில்,
அமெரிக்க
மற்றும்
சர்வதேச
ஊடகங்கள்
"இயற்கை
சீற்றம்"
என்ற
சொற்களைப்
பயன்படுத்தி
உள்ளன.
குறிப்பாக
ஒரு
சுவாரசியமான
கட்டுரை
ஒன்றில்,
நியூ
யோர்க்
டைம்ஸ்,
அந்த
நீளமான
தீவு
குறித்து
புரூக்ஹெவன்
தேசிய
ஆய்வகத்தால்
1977இல்
நடத்தப்பட்ட
ஓர்
ஆய்வை
நினைவுபடுத்தியது.
ஓர்
அணுஉலையின்
குளிரூட்டு
அமைப்புமுறைக்குள்
எரிசக்தி
கழிவால்
தூண்டப்பட்டு ஒரு
கட்டுப்பாடில்லாத
பேரழிவின் முக்கிய
விளைவுகள்
குறித்து,
அந்த
ஆய்வறிக்கை
ஆய்வு
செய்திருந்தது.
டைம்ஸ்
செய்தியின்படி,
“500 மைல்
தூரத்திற்குள்
100
உடனடி
உயிரிழப்புகளும்,
138,000 படிப்படியான
உயிரிழப்புகளும்
ஏற்படக்கூடும்
என்று
அது
மதிப்பிட்டது.
நிலத்தில்
2,170
மைல்
தூரத்திற்கு
பாதிப்பு
இருக்கும்;
சேதங்கள்
$546
பில்லியனை
எட்டக்கூடும்
என்றும்
அந்த
ஆய்வு
கண்டறிந்தது.
புரூக்ஹெவன்
ஆய்வின்
அந்த
பகுதி,
ஜப்பான்
நெருக்கடியின்
இதயமாக
விளங்கும்,
அதேவகையான
நீர்-உலை
கொதிகலன்களைக்
கொண்ட
அணுஉலைகளையே
அந்த
ஆய்வும் கணக்கில்
எடுத்திருந்தது.”
ஜப்பானில்
இதுவரை
முன்னொருபோதும்
இந்தளவிற்கு
மோசமாக
நிகழ்ந்திராத,
சென்டாயில்
ஏற்பட்ட
அந்த
9
ரிக்டர்
அளவிலான
பூகம்பமும்,
மற்றும்
கடற்கரையை
வந்து
தாக்கிய
அந்த
பிரமாண்ட
அலையும்
இயற்கையின்
விளைபொருள்
தான்.
ஆனால்
அதற்கடுத்து
நிகழ்ந்த
அணுசக்தி
சார்ந்த
சம்பவங்கள்
சமூக
சக்திகளின்
விளைவுகளாகும்.
அவை
பூமிக்கடியில்
நகர்ந்த
அடுக்குகளின்
மோதல்களால்
ஏற்பட்டதல்ல.
மீண்டுமொருமுறை,
இந்த
முதலாளித்துவ
அமைப்புமுறை
உலகை
பேரழிவின்
விளிம்பிற்கு
கொண்டு
வந்துள்ளது.
இந்த
வழிமுறையில்
பெருநிறுவன
ஆளும்
வர்க்கம்
அதன்
இரக்கமற்றதனத்தை,
பொறுப்பற்றதனத்தை
முழுமையாக
எடுத்துக்காட்டி
உள்ளது.
உலக
சோசலிச
வலைத்
தளம்
குறிப்பிட்டுக்
காட்டியதைப்
போல
(ஜப்பானிய
பேரழிவின்
தாக்கங்கள்),
பூகம்பம்
ஏற்பட
மிக
அதிக
சாத்தியமுள்ள
உலகின்
இந்த
பகுதிக்கருகில்,
50க்கும்
மேலான
அணுசக்தி
உலைகளை
நிறுவுவதில்
மிக
வெளிப்படையான
ஆபத்துகள்
இருந்த
போதினும்,
நாடு
எண்ணெய்
இறக்குமதியைச்
சார்ந்தில்லாமல்
இருக்கச்
செய்ய,
ஜப்பானிய
ஆளும்
மேற்தட்டு
அணுசக்தியை
பணயத்தில்
வைத்தது.
இது
வெறுமனே
ஜப்பானில்
மட்டும்
ஏற்பட்ட
ஒரு
சம்பவமல்ல. கடந்த
40
ஆண்டுகளாக
அணுசக்தி
தொழில்நுட்பத்தின்
அபாயங்கள்
குறித்து
தொடர்ந்து
எச்சரிக்கைகள்
அளிக்கப்பட்டு
வந்துள்ளன.
அத்துடன்
விண்ட்ஸ்கேல்,
பெர்மி
I,
த்ரீ
மைல்
தீவு,
செர்னோபில்
போன்ற
பல
தொடர்ச்சியான
சம்பவங்களும்
மில்லியன்
கணக்கான
மக்களின்
நிஜ-வாழ்க்கையில்
பாதிப்புகளை
ஏற்படுத்தி
உள்ளன.
ஆனால்
அணுசக்தி
உற்பத்தியில்
பில்லியன்களை
முதலீடு
செய்வதிலிருந்து,
ஒன்று
மாறி
ஒன்றாக
ஒவ்வொரு
நாட்டின்
முதலாளித்துவ
ஆளும்
மேற்தட்டின்
உந்துதலை,
எதனாலும்
நிறுத்திவிட
முடியவில்லை.
இதேபோன்ற
பேரழிவிற்கு
சாத்தியக்கூறுகளை
கொண்டிருக்கும்
ஒரு
டஜனுக்கும்
மேலான
அணுசக்தி
உலைகள்
அமெரிக்காவில்
உள்ளன.
கலிபோர்னியாவில்
உள்ள
இரண்டு
அணுசக்தி
வளாகங்கள்,
அதாவது
டியப்லோ
கேன்யன்
மற்றும்
சான்
ஒனோப்ரீ
இரண்டும்,
சான்
ஆண்ட்ரியஸ்
அபாயப்பகுதிக்கு
(San Andreas Fault)
அருகாமையில்
உள்ளன.
1986இல்
ஏற்பட்ட
ஒரு
பூகம்பத்தில்
ஓர்
ஓஹியோ
ஆலை,
நியூ
மேட்ரிட்
அபாயப்பகுதியிலிருந்து
வந்த தூண்டுதலுடன்
சேர்ந்து,
செயல்பாடுகளை
நிறுத்தும்
நிலைக்கு
கொண்டு
செல்லப்பட்டது.
அதே
மாநிலத்திலுள்ள
மற்றொன்று
டோர்னாடோவால்
சீரழிக்கப்பட்டது.
டெக்சாஸ்,
லூசியானா,
அலாபாமா,
புளோரிடா,
ஜோர்ஜியா
மற்றும்
வடக்கு
கலிபோர்னியா
ஆகியவற்றின்
கடற்கரை
பகுதிகளிலும்,
பெரும்
புயல்களால்
தாக்கப்பட்டிருக்கும்
ஏனைய
பகுதிகளிலும்
பல
அணுஉலைகள்
உள்ளன.
மிசிசிபி
வளைகுடா
கடற்கரை
பகுதியில்,
கத்ரீனா
புயல்
வந்து
தாக்கிய
இடத்திலிருந்து
100
மைல்
தூரத்தில்
இருந்தாலும்
கூட,
லூசியானாவில்
உள்ள
வாட்டர்போர்ட்
அணுசக்தி
உலையை,
அந்த
புயல்
தாக்கிய
போது,
“ஓர்
அசதாராண
சம்பவத்திற்காக
நிறுத்தப்படுகிறது"
என்ற
அறிவிப்புடன்
நிறுத்தும்
நிலை
ஏற்பட்டது.
குஷ்தவ்
புயல்,
லுசியானாவின்
செயிண்ட்
பிரான்ஸிஸ்வெலில்
உள்ள
ரிவர்
பெண்ட்
ஆலைக்கு
அருகில்
வந்து
தாக்கியது.
மியாமிக்கு
தெற்கில்
பிஸ்கானி
வளைகுடாவிலுள்ள
Turkey Point
அணுஉலையை
Florida Power & Light
நிறுவனம்
நிர்வகித்து
வருகிறது.
“இந்த
ஆலை
இரண்டாண்டுக்கொரு
முறை
பூமிக்கடியில்
நிகழும்
புயல்களையும்,
ஒவ்வொரு
ஏழு
ஆண்டுகளுக்கு
ஒருமுறை
கடுமையான
காற்றுவீசும்
புயலையும்
சந்திப்பதாக”
ஓர்
ஆய்வு
தெரிவிக்கிறது.
1992இல்,
ஆண்ட்ரூ
புயலின்
பார்வை
நேரடியாக
இந்த
ஆலையின்
பக்கம்
திரும்பியது.
இது
பெரும்
சேதங்களை
ஏற்படுத்தியதோடு,
புறநகர்
மின்சார
வினியோகத்தையும்
ஐந்து
நாட்களுக்கு
நிறுத்திப்
போட்டிருந்தது.
அந்த
இடியும்,
மின்னலும்
அவசரகால
மின்சக்தியை
நிறுத்தியிராவிட்டால்,
Turkey Pointம்
இன்று
புக்கூஷிமாவின்
அதே
நிலைமையில்
இருந்திருக்கும்.
இதில்
எதுவுமே,
அணுசக்தி
மீதிருக்கும்
ஒபாமா
நிர்வாகத்தின்
பேரார்வத்தைக்
குறைத்துவிடவில்லை.
ஜப்பானில்
நிகழ்ந்த
மோசமான
பேரழிவின்
விளைவு
எந்தளவிற்கு
இருக்கின்றது
என்று
தெரியாத
நிலையிலேயே,
புதிய
அணுசக்தி
ஆலைகளைக்
கட்டியமைக்கும்
வேலைக்கு
$39
பில்லியன்
கடன்
உத்தரவாதங்களை
அமெரிக்கா
அளிக்க
ஒப்பு
கொண்டிருப்பதாக
செவ்வாயன்று
எரிசக்தித்துறை
செயலாளர்
ஸ்டீவன்
சூ
காங்கிரஸின்
ஒரு
துணைக்குழுவிற்கு
முறைப்படி
அறிவித்தார்.
இது
மூன்று
தசாப்தங்களாக,
அதாவது
Three Mile
தீவு
விஷயத்திலிருந்து,
தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
Three Mile தீவில்
இத்தகைய
கட்டுமானம்
நிறுத்தப்பட்டிருந்தது.
அணுசக்தி
ஆலைகளை
நிறுவுவதில்
காட்டப்படும்
பொறுப்பற்றத்தனம்
ஒரு
சர்வதேச
விஷயமாகும்.
துருக்கி
அதன்
Akkuyu Bay
அணுஉலையை,
அபாயகரமான
எகிமிஸ்
அபாயப்பகுதிக்கு
அருகில்
கட்டியுள்ளது.
விரைவிலேயே
நான்காவது
மிகப்பெரிய
அணுசக்தி
உற்பத்தி
நாடாக
ஆகப்போகின்ற,
27 ஆலைகளைக்
கட்டியமைத்து
வருகின்ற
சீனா,
உலகிலேயே
அதிகளவில்
பூகம்பம்
பாதிக்கும்
சாத்தியக்கூறு
உள்ள நாடுகளில்
ஒன்றாகும்.
மேற்கு
ஐரோப்பாவின்
மக்கள்தொகை
நிரம்பிய
நாடுகள்
பலவும்,
பெரிதும்
அணுசக்தியைச்
சார்ந்துள்ளன.
முதலிடத்தில்
பிரான்ஸ்
58
ஆலைகளுடன்
இருக்கிறது.
பிரிட்டன்
19,
ஜேர்மன்
17,
ஸ்வீடன்
10,
குட்டி
பெல்ஜியம்
7,
சுவிட்சர்லாந்து
5.
கனடா
18
அணுசக்தி
ஆலைகளைக்
கொண்டிருக்கிறது.
இதில்
16
ஆலைகள்,
உலகிற்கு
அதிகளவில்
சுத்தமான
நீர்
வழங்கும்
கிரேட்
லேக்ஸை
ரேடியோ
கதிர்வீச்சால்
மாசுபடுத்தும்
அளவிற்கு
ஒரு
பேரழவு
ஏற்படலாம்
என்று
கருதப்படும்,
தெற்கு
ஒன்டாரியோவில்
அமைந்துள்ளன.
இயற்கை
பேரிடர்கள்
ஏற்படக்கூடிய
சாத்தியக்கூறுகள்
உள்ள
மற்றும்
மக்கள்தொகை
மிகுந்த
இடங்களுக்கு
அபாயகரமாக
அண்மையில்
இருக்கும்
மையங்கள்
துடைத்தெடுக்கப்பட
வேண்டும்.
ஆனால்
மின்சக்தி
உற்பத்தியிலிருந்து
இலாபங்களைக்
கொழிக்கும்
சக்திவாய்ந்த
பெருநிறுவனங்கள்
மற்றும்
நிதியியல்
நலன்களுக்கு
அல்லது
ஏகாதிபத்திய
அரசாங்கங்களுக்கு
இதுபற்றி
எந்தக்
கவலைகளும்
இல்லை.
அவை
தொடர்ந்து
அதிகரித்துவரும்
போட்டி
நிறைந்த
சர்வதேச
சூழலில்,
எரிசக்தி
வினியோகத்திற்கு
உத்தரவாதமளிக்க
முயல்வதாக
கூறிக்
கொள்கின்றன.
செப்டம்பர்
11, 2001
பயங்கரவாத
தாக்குதலில்
இருந்தே,
அமெரிக்காவும்,
ஏனைய
ஏகாதிபத்திய
சக்திகளும்
அணுசக்தி
பயங்கரவாதத்தின்
அபாயம்
குறித்து
ஓயாமல்
எச்சரித்துக்
கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா
ஈராக்கில்
உடனடியாக
தலையிட்டு,
சதாம்
உசேனிடமிருந்து
“பேரழிவு தரும்
ஆயுதங்களை"
பறிக்கவில்லையென்றால், “திடீரென்று
பிடித்துக்
கொள்ளும்”
பிசாசை புஷ்
நிர்வாகத்தின்
தேசிய
பாதுகாப்புத்துறை
செயலர்
கொண்டலீசா
ரைஸ்
தூண்டிவிட்டிருந்தார்.
அணுசக்தி
பேரழிவின்
முக்கிய
அபாயம்
பயங்கரவாதத்திடமிருந்து
அல்ல,
மாறாக
முதலாளித்துவ
பொருளாதார
அமைப்புமுறையின்
தொழிற்பாடுகளிலிருந்து
வருகிறது
என்பதையே
ஜப்பானில்
நடந்த
சம்பவங்கள்
எடுத்துக்காட்டுகின்றன.
டோக்கியோ
எலெக்ட்ரிக்
பவர்
(TEPCO),
டோஷிபா
மற்றும்
ஜெனரல்
எலெக்ட்ரிக்,
இவற்றின்
நடவடிக்கைகள்
தான்
இன்று
ஜப்பானை தரிசாக
மாற்றிவிட
அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்றன.
அணுசக்தி
உலைகளில்
பெரும்
பாதுகாப்பு
பிரச்சினைகளை
மூடிமறைத்ததற்காக,
ஜப்பானில்
TEPCO
அவப்பெயரை
பெற்றுள்ளது.
நியூ
யோர்க்
டைம்ஸ்
செய்தியின்படி,
ஜெனரல்
எலெக்ட்ரிக்கால்
வடிவமைக்கப்பட்ட
புக்கூஷிமா
வளாகத்தைக்
கட்டியமைத்த
டோஷிபா,
ஓப்பீட்டளவில்
சிறிய
மற்றும்
மலிவான
வடிவமைப்பைப்
பயன்படுத்தியதன்
ஒரு
பாகமாக,
அதை
மலிவாகவும்,
எளிதாகவும்
கட்டியதாக
கூறப்பட்டது.”
முதலாளித்துவ
அமைப்புமுறையால்
தோற்றுவிக்கப்பட்ட
ஒன்றன்பின்
ஒன்றாக
பல
பேரழிவுகளைக் கடந்த
தசாப்தம்
சந்தித்துள்ளது:
ஆப்கானிஸ்தான்
மற்றும்
ஈராக்கில்
காலனித்துவ
யுத்தங்கள்;
கத்ரீனா
புயலின்
போது
அணை
உடைத்துக்
கொண்ட
போது
நியூ
ஓர்லியனில்
ஏற்பட்ட
பேரழிவு;
உலகை
பொருளாதார
வீழ்ச்சிக்குள்
மூழ்கடித்த,
உலக
வரலாற்றில்
நிகழ்ந்த
மிகப்பெரிய
நிதியியல்
பொறிவு;
பிரிட்டிஷ்
பெட்ரோலியத்தால்
மெக்சிக்கோ
வளைகுடா
விஷமாக்கப்பட்டது.
இதில்
எந்தவொரு
பேராபத்துக்கும்
ஒரு
பெருநிறுவன
தலைமை
செயல்
நிர்வாகியோ
அல்லது
ஒரு
முதலாளித்துவ
அரசியல்வாதியோ
பொறுப்பாக்கப்படவில்லை.
இந்த
சம்பவங்கள்
திட்டமிடலில்
தோற்று
போயிருக்கும்,
அவசியமான
சமூக
உள்கட்டமைப்பைக்
கட்டியமைப்பதில்
அல்லது
நிர்வகிப்பதில்
தோற்று
போயிருக்கும்,
பாதுகாப்பு
நெறிமுறைகளைக்
கடைபிடிப்பதில்
தோற்று
போயிருக்கும்
முதலாளித்துவ
வர்க்கத்தின்
குற்றம்மிக்க
பொறுப்பற்றதனத்தையும்,
முதலாளித்துவ
அமைப்புமுறையின்
உள்ளார்ந்த
குளறுபடியையும்
எடுத்துக்காட்டுகின்றன.
தொழிலாள
வர்க்கத்தின்
உழைப்பு,
வரலாற்றில்
முன்னொருபோதும்
இல்லாத
அளவிற்கு
பெரும்
செல்வவளத்தை
உற்பத்தி
செய்துள்ளது.
ஆனால்
பெருளாதார
வாழ்வின்
அனைத்தும்
ஆளும்
வர்க்கத்தின்
செல்வம்-குவிக்கும்
நோய்க்கு
அடிபணிந்துள்ளதால்,
இந்த
வளங்கள்
சமூக
தேவைகளைப்
பூர்த்தி
செய்வதற்குக்
கிடைப்பதில்லை.
இந்த
உலக
முதலாளித்துவ
அமைப்புமுறை
உற்பத்தி
செய்து
கொண்டிருக்கும்
பேரழிவுகளிலிருந்து,
உழைக்கும்
மக்கள்
அவசியமான
தீர்மானங்களைப்
பெற
வேண்டும்.
நவீன
சமூகத்தின்
பரந்த
பொருளாதார
வளங்கள்
நிதியியல்
பிரபுத்துவத்தின்
கைகளிலிருந்து
எடுக்கப்பட்டு,
ஒட்டுமொத்த
மக்களின்
பயன்பாட்டிற்குக்
கொண்டு
வரப்பட
வேண்டும்.
சந்தை
குளறுபடிக்கு
மாற்றாக,
திட்டமிட்ட
பங்கீட்டு
வினியோக
முறை
நிறுத்தப்பட
வேண்டும்.
போட்டிமிக்க
தேசிய-அரசுகளின்
மோதல்களுக்கு
மாற்றாக,
உலக
பொருளாதாரத்தின்
இணக்கமான
அபிவிருத்தி
கொண்டு
வரப்பட
வேண்டும்.
இது
சர்வதேச
சோசலிசத்திற்கான
ஒரு
போராட்டத்தைக்
குறிக்கிறது. |