சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: March 7-13

வரலாற்றில் இந்த வாரம்: மார்ச் 7 - 13

7 March 2011

Use this version to print | Send feedback

 

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்கா சேமிப்பு மற்றும் கடன் வங்கிகளை பினையெடுப்பதை அறிவித்தது

S&L
ஒகியோ
, சின்னியில் உள்ள மக்கள் சேமிப்பு மற்றும் கடன் வங்கி (கட்டிடக் கலைஞர், லூயிஸ் சுலிவன்)

1986 மார்ச் 12 அன்று, வீட்டு மற்றும் நிதி சந்தையில் நிதிய ஊகங்களின் விளைவாக முன்னைய மூன்று வருடங்கள் பூராவும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் நடைமுறையில் வங்குரோத்தடைந்து கொண்டிருந்ததை கண்ட, அமெரிக்க சேமிப்பு மற்றும் கடன் வங்கித் துறையை பினையெடுக்கும் திட்டமொன்றை, வீட்டுக் கடன் வங்கிச் சபையின் தலைவர் எவின் கிறே முன்வைத்தார்.

வீட்டு வங்கி கமிட்டியின் முன் கிறே பேசிய போது, சிக்கன வங்கிகள் என்றழைக்கப்பட்டதில் உள்ள வைப்புக்களுக்கு உத்தரவாதமளித்துள்ள, ஆற்றல் குறைந்த பெடரல் சேமிப்பு மற்றும் கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தை மீண்டும் உயிர்பெறச் செய்வதற்கு 22.5 பில்லியன் டொலர் தேவைப்படும் என தெரிவித்தார். மொத்த தொழிற்துறையில் 42 வீதமாகவுள்ள, 433 பில்லியன் டொலர்களை சொத்தாகக் கொண்ட 1,300 சேமிப்பு மற்றும் கடன் வங்கிகள், வெகு விரைவில் திவாலை எதிர்கொள்ளும் என்ற ஒரு அரசாங்க கணக்கீட்டு அலுவலகத்தின் மதிப்பீட்டை அவர் நிராகரித்தார்.

நிதிய ஊகங்களின் அழுகிப்போன அத்திவாரங்களின் மீது ரீகன் மீட்பு என சொல்லப்படுவது கட்டியெழுப்பப்படுவதாகவும் அந்த வாரம் வேறு அறிகுறிகள் காணப்பட்டன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள நிறுவனங்களை கலைப்பதற்காக 1 பில்லியன் டொலரை ஒதுக்கு வைக்கும் நடவடிக்கையில் கூட்டுத்தாபன தாக்குதல்காரரான ஐவன் பொயெஸ்கி ஈடுபட்டிருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது; வர்த்தக வங்கிகளுக்கான முதலீட்டுத் தேவைகளை தளர்த்துவதாக மத்திய வங்கிக்கூட்டமைப்பு  அறிவித்தது; திருத்திக்கொள்ளக்கூடிய வகையிலான ஈட்டு வீதம் பரந்தளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வங்கித் தொழிற்துறையின் கோரிக்கைகளை டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரை விவரித்த அதே வேளை, இன்னொரு கட்டுரை, கடன்களை மலிவாக்கும் புதியமுறையிலான நிதி உற்பத்திகளை துரிதமாக வளர்ப்பதைப் பற்றி விவரித்திருந்த்து.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: பிக்ஸ் வலைகுடா (Bay of Pigs) மீதான படையெடுப்புக்கு கென்னடி நிர்வாகம் திட்டம் தீட்டியது 

Bay of Pigs
பிக்ஸ் வலைகுடா மீதான ஆக்கிரமிப்பு தோல்வியடைந்ததன் விளைவாக படையெடுத்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

1961 மார்ச் 11 அன்று, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, சி... உதவி ஆணையர் ரிச்சர்ட் எம். பிஸ்ஸெல்லுடன் இரகசிய கலந்துரையாடல் நடத்தினார். கியூபா மீது படையெடுத்து பிடல் காஸ்ரோவின் தேசியவாத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு திட்டமிடுவது பற்றியே இந்த கலந்துரையாடல் நடந்தது.

புளோரிடாவில் நாடுகடந்திருந்த கியூப எதிர்ப்புரட்சியாளர்களுக்கு இரகசியமாக இராணுவத் தளபாடங்களை வழங்குவதையே இந்த சதித் திட்டம் மையமாகக் கொண்டிருந்தது. கென்னடி மற்றும் பிஸ்ஸெல்லுக்கு மேலதிகமாக, இராஜாங்கச் செயலாளர் டீன் ரஸ்க், பாதுகாப்புச் செயலாளர் ரொபட் மெக்நமாரா மற்றும் சி.ஐ.ஏ. ஆணையர் எலன் டலெஸ் ஆகோயோரும் கூட்டத்தில் இருந்தனர். றினிடட் கடற்கரை மீது ஒரு நேரடித் தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பிஸ்ஸெல்லின் முதலாவது திட்டம் ஆகவும் வெளிப்படையாக உள்ளதென்று கென்னடி நிராகரித்தார். சில நாட்களின் பின்னர், பிக்ஸ் வலைகுடா மீதான படையெடுப்பு சம்பந்தமான ஒரு யோசனையுடன் பிஸ்ஸெல் வந்தார். வரலாற்றாசிரியர் ஒருவரின் படி, அவர்கள் நம்பிக்கையில்லாமல் இருந்த போது, கென்னடி குழு உறுதியற்றிருந்தது.

கியூப அரசாங்கத்தை கவிழ்த்து பிடல் காஸ்ரோவை படுகொலை செய்யும் திட்டம் ஒரு வருடத்துக்கு முன்னரே ஜனாதிபதி ஐஸன்ஹொவரால் கட்டளையிடப்பட்டிருந்ததோடு டலஸ் தலைமையில், 5412 குழு என்றழைக்கப்பட்ட ஒரு சி.ஐ.ஏ. குழுவின் பொறுப்பின் கீழ் விடப்பட்டது. 1954ல் குவாதமாலா அரசாங்கத்தை இரத்தக்களரியில் தூக்கி வீச இந்தக் குழுவே காரணமாக இருந்தது.

இந்தத் திட்டதிதன் ஒரு பாகமாக, டேவிட் எட்லீ பிளிப்ஸ், ஜகொப் ஈஸ்டர்லைன், இ. ஹொவார்ட் ஹன்ட் மற்றும் டெட் ஷக்லீ போன்ற சி.ஐ.ஏ. முகவர்கள், புளோரிடாவில் வலதுசாரி கியூப குடியேற்றவாசிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியளைத்தனர். டலஸ்ஸின் செயலூக்கமான பங்களிப்புடன், கியூப பரட்சியின் காரணமாக இழிமுறையில் ஆதாயம் பெறும் தமது ஹவானா குற்றக் கும்பலின் இழப்பால் சினமுற்றிருந்த பிரதான மாஃபியா புள்ளிகளை அவர்கள் அணிதிரட்டிக்கொண்டனர். மெயர் லன்ஸ்கி, ஹவான மற்றும் புளோரிடா குண்டர் கூட்டத்தைச் சேர்ந்த சன்டோ றஃவிகண்டே, சம் கியன்கனா மற்றும்  சிகாகோ கருவியின் ஜொனி ரொஸெலி மற்றும் லூஸியான குற்றக் கும்பல் தலைவன் கார்லொஸ் மேர்செல்லோவும் இதில் அடங்குவர். (இந்த கார்லொஸ் மெசெல்லோ, 1960ல் கென்னடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ரிச்சர்ட் நிக்ஸனுக்கு 500,000 டொலர்களை, Teamsters தொழிற்சங்கத் தலைவர் ஜிம்மி ஹொஃபா மூலம் நன்கொடையாகக் கொடுத்தவராவார்.)

75 ஆண்டுகளுக்கு முன்னர்: வேர்சைலஸ் ஒப்பந்தத்தை மீறி, ஜேர்மன் இராணுவம் ரையின்லான்டை மீண்டும் இராணுவமயமாக்கியது

Hitler army
1934
ல் ஒரு ஜேர்மன் படை அணிவகுப்பு

வேர்சைலஸ் ஒப்பந்தத்தை ஆணவத்துடன் மீறிய ஜேர்மனிய ஆயுதப் படைகள், 1936 மார்ச் 7 அன்று ரைய்ன்லாந்தினுள் மீண்டும் நுழைந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் 1919ல் வரையப்பட்ட இந்த உடன்படிக்கை, ஜேர்மனி, ரையினின் கிழக்குப் பகுதிக்கு ஐம்பது கிலோமீட்டர்கள் வரை வரையப்பட்டுள்ள கோட்டின் இடது கரை அல்லது வலது கரை இரண்டில் எதிலேனும் எந்தவொரு அரணையும் பராமரிப்பதில் அல்லது கட்டுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றது.

 எந்த முறையிலான எந்தவகையிலான ஒப்பந்த மீறலும், ஒரு பகைமை நடவடிக்கையை மேற்கொள்வதாக கருதப்படும்... மற்றும் உலகின் அமைதியை குலைக்கும் செயற்பாடாக கணிக்கப்படும், என அந்த உடன்படிக்கை பிரகடனம் செய்கின்றது.

அந்த சனிக்கிழமை, அந்தச் செய்தியை ஒரு பெருமகிழ்ச்சிகொண்ட ஜேர்மன் பாராளுமன்றத்துக்கு ஹிட்லர் அறி்வித்த நிலையில், ரெயின் நதிக்கரையோர வலயத்தினுள் 3,000 துருப்புக்கள் ஊடுருவியதுடன், சுமார் 30,000 துருப்புக்களும் பொலிசும் கொலோன் நகருக்குள் நுழைந்தன. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தின் எல்லையில் அமைந்துள்ள, நிலக்கரி வளம் நிறைந்த மற்றும் உயர்ந்த மட்டத்தில் தொழிற்துறைமயமாக்கப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம், முழுமையான யுத்தத்தை நோக்கிய நாஸிக்களின் உந்துதலுக்கு மையப்புள்ளியாக இருந்தது.

''பனிக்கால நடவடிக்கை“(''Winter Exercise'') என சங்கேதப் பெயரிடப்பட்டிருந்த ரெயின்லாந்து மீதான மீள் இராணுவமயமாக்கம், ஆரம்பத்தில் அடுத்த ஆண்டு முன்னெடுக்கவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உணவுப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்த மட்டத்திலான வேலையின்மையும் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சீற்றத்தை அதிகரிக்கச் செய்திருந்ததுடன், ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஒரு பிரச்சார சதியின் தேவையினாலேயே ஹிட்லர் அதை செய்வதற்கு நெருக்கப்பட்டார். பரஸ்பர உதவிக்கான பிரான்ஸ்-சோவியத் உடன்படிக்கையின் அச்சுறுத்தல் இருந்த நிலையில், ஹிட்லர் ரெயின்லாந்து மீதான படையெடுப்பை இராணுவ சுற்றிவளைப்புக்கு எதிரான தற்காப்பு நகர்வு என சோடித்தார்.

நாஜி ஜேர்மனியைப் போலவே, இன்னமும் சோவியத் ஒன்றியத்துடன் இன்னமும் தொடர்புபட்டுள்ள சமூகப் புரட்சியின் அச்சுறுத்தலையிட்டு அடிப்படையில் கவலைகொண்டுள்ள பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் இராஜதந்திர சூழ்ச்சித் திட்டங்களால் ஹிட்லர் துணிவுகொண்டார். ரெயின்லாந்துள் மீண்டும் நுழைவதை பற்றி பேச்சுவார்த்தை நடத்த தன்னால் இராஜதந்திரத்தை பயன்படுத்த முடியும் என ஹிட்லர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அப்போதைய ஐக்கிய இராச்சியத்துக்கான தூதுவர் ஜோகிம் வொன் ரிப்பன்றொப்பினால் தூண்டப்பட்ட ஹிட்லர், மாறாக விவகாரத்தை ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பதன் மூலம் பாரிஸ் மற்றும் லண்டனின் வீண்பேச்சை எதிர்கொள்ள முடிவெடுத்தார். அவரது இரக்கமின்மைக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தது. பிரிட்டனோ அல்லது பிரான்சோ வேர்ஸைலஸ் உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டுமென்று ஒரு விரலைத்தன்னும் உயர்த்தவில்லை.
 

100 வருடங்களுக்கு முன்னர்: ருத்தர்போர்ட் அணுவின் கட்டமைப்பை விவரித்தார்

Rutherford
ஏர்னஸ்ட் ருத்தர்போர்ட்

1911 மார்ச் 7 அன்று, பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஏர்னஸ்ட் ருத்தர்போர்ட், மென்சஸ்டர் இலக்கிய மற்றும் மெய்யியல் அமைப்புக்கு ஒரு கற்கை அறிக்கையை முன்வைத்தார். அது பெருமளவில் வெற்று இடைவெளியால் நிரம்பியிருக்கும் ஒரு அணுவின் மையத்தில் ஒரு கருமூலப்பகுதி இருப்பதை துல்லியமாக முன்னறிவித்தது.

அல்பா மற்றும் பீட்டா கதிர்களின் சிதறல்களும் அணுவின் கட்டமைப்பும் என்ற தலைப்பிலான அந்த கற்கை அறிக்கை, ஒரு அணுவின் அடர்த்தி மையத்தில் ஒரு சிறிய அணுக்கரு அமைந்துள்ளது, அது அதன் திணிவின் பில்லியனில் ஒரு பகுதியை உள்ளடக்கிக்கொண்டிருப்பதோடு அதைச் சூழ குறைந்தளவிலான துகள்களும் இலத்திரன்களும் உள்ளன எனக் காட்டியது. விண்வெளியில் சூரியனைச் சூழ பல கிரகங்கள் சுற்றிவருகையில், சூரியன் அளவில் பெரும் பகுதியை கொண்டுள்ள சூரிய மண்டலத்துக்கும் அணுவுக்கும் இடையிலான கருத்தொற்றுமை காரணமாக, ருத்தர்போர்டின் கண்டுபிடிப்பு கோள்மண்டல உருமாதிரி என அறியப்பட்டது.

மன்செஸ்டரில் ஹன்ஸ் ஜென்கர், ஏர்னஸ்ட் மார்ஸ்டென் ஆகியோரால் 1990ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிசோதனையினையிலேயே இந்த கண்டுபிடிப்பு வெளிவந்தது.  துத்தநாக சல்பைடு கொண்ட ஒரு தாள் மீது மெல்லிய தங்கத் தாளின் ஊடாக ரேடியம் கடக்கும் போது, அதன் கதிரியக்க சிதைவுகளால் ஏற்படும் அல்பா துகள்களின் கோணங்களை ஆராயுமாறு ருத்தர்போர்ட் ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார். ருத்தர்போர்ட்டுக்கு ஆச்சரியமூட்டிய வகையில், சில கதிர் துகள்களின் தீவிரமான திருப்பங்களை நடப்பில் உள்ள சடப்பொருள்(திண்மம்) பற்றிய கோட்பாடுகள் எதனாலும் விளக்கமுடியாததாக இருந்தது. 

ருத்தர்போர்ட் கண்டுபிடிப்பின் நிலையை பின்வருமாறு விவரித்தார்: என் வாழ்க்கையில் எனக்கு நடந்த மிகவும் வியக்கத்தக்க சம்பவம் அதுவாகும். ஒரு மெல்லிய தாளில் ஒரு 15 அங்குல குண்டினை செலுத்தும் போது அது திரும்பி வந்து உங்களைத் தாக்குவது வியக்கத்தக்கதாகும். கவணத்திற்கொள்ளும் போது, இந்த பின்நோக்கிய சிதறல் ஒரே ஒரு மோதலின் விளைவாக இருக்க வேண்டும் என நான் புரிந்துகொண்டேன், மற்றும் நான் முடிவுகளை எடுக்கும் போது, மிகச்சிறிய அணுத் திணிவின் பெரும் பகுதி ஒரு சிறிய அணுக்கருவில் குவிந்திருக்கும் ஒரு முறைமையை நீங்கள் அடையும் வரை, அதன் பருமனின் ஒழுங்கைப் பற்றி எதையும் புரிந்துகொள்வது சாத்தியமற்றது என நான் கண்டேன். பின்னரே, ஒரு சிறிய உறுதியான மையத்தைக்கொண்ட ஒரு அணு, ஒரு மின்னேற்றத்தை கொண்டுள்ளது என்ற எண்ணத்தை நான் கொண்டேன்.