World Socialist Web Site www.wsws.org |
: செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்
Mounting human toll and nuclear emergency in Japanஜப்பானில் பெருகும் மனித இறப்பு எண்ணிக்கையும், அணுக் கசிவு நெருக்கடி நிலையும்
By Mike Head Back to screen versionவெள்ளி நிலநடுக்கத்தாலும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட சுனாமி வருகையினாலும் ஏற்பட்ட இறப்புக்களும் அழிவுகளின் முழுக் கொடூரமும் வெளிப்படுகையில், இன்று ஜப்பானின் அணுக் கசிவு நெருக்கடி நிலையும் மோசமாகியதுடன், மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் உடல்நலத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை உயர்த்திக் காட்டியுள்ளது. டோக்கியோ மின்சார நிறுவனமான (டெப்கோ) புகுஷிமாவின் அணுசக்தி உலையில் நான்காவது வெடிப்பு மற்றும் உடல்நிலையை அச்சுறுத்தும் தீவிர கதிரியக்கக் கசிவுகள் பற்றி அரசாங்கம் கொடுத்துள்ள எச்சரிக்கைகளும் பேரழிவு இன்னும் மோசமாகப் போகக்கூடும் என்ற அச்சங்களை உயர்த்தியுள்ளன. உத்தியோகபூர்வமாக ஜப்பானின் வடகிழக்குப் பசிபிக் கடலோரப் பகுதியை தாக்கிய சுனாமி மற்றும் ரிக்டர் அளவுகோலில் 9 எனப் பதிவாகிய நில நடுக்கத்தின் விளைவுகளால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையும் 2,400க்கு மேல் உயர்ந்துவிட்டது. குறைந்தது இன்னும் 15,000 பேர்களைப் பற்றித் தகவல் ஏதும் இல்லை. இறப்பு எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கும். மியாங் பகுதி துறைமுக நகரான மினமிசன்ரிகுவில் மட்டும் மொத்த எண்ணிக்கை 10,000 ஐக் கடக்கக்கூடும் என்று பொலிஸ் கூறியுள்ளது. தேடுபவர்கள் மியாகி பகுதியில் நேற்று 2,000 சடலங்களைக் கண்டனர். இவற்றுள் அலைகளால் மோதித் தள்ளப்பப்பட்ட ஒஷிகா தீபகற்ப கடற்கரைகளில் மீட்கப்பட்ட 1,000 சடலங்களும் அடங்கும். நிவாரணக் குழுக்கள் இன்னும் முழு சமூகங்களையும் அடையவேண்டும். அதிர்ச்சிதரும் வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் தொலைவுப் பகுதிகளிலிருந்து வெளிவந்து புரிந்துகொள்ள முடியாத அளவு பேரழிவைக் காட்டுகின்றன. பல சிறு நகரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. வசித்த மக்கள் பலர், குறிப்பாக முதியவர்களும் இயலாதவர்களும் தப்பிக்க அதிக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 66,000 இராணுவத்தினர்கள் ஆறு பகுதிகளில் நேற்று இரவு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் கூட, வடக்கு மியாகியிலுள்ள சில கடலோரச் சிறு நகரங்கள், மற்றும் அருகிலுள்ள ஐவேட் பகுதிகள் உடன் இன்னும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. நேற்று இரவு, மில்லியன் கணக்கான மக்கள் நான்காவது இரவாகப் போதிய குடிநீர், உணவு மற்றும் வெப்பப்படுத்தும் வசதியின்றி கிட்டத்தட்ட உறையும் நிலையிலுள்ள வெப்பநிலையை எதிர்கொண்டனர். “மிகக் குறைந்த உணவு மற்றும் குடிநீரையே மக்கள் பயன்படுத்திவருன்றனர். பொருட்கள் வரத்தும் ஏதும் இல்லை” என்று ஐவேட் பகுதியில் ஒரு அரசாங்க அதிகாரியான ஹஜிமே இடோ கூறினார். பாதிக்கப்பட்டதில் இப்பகுதியே மிக அதிகமான மாவட்டப் பகுதியாகும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். மொத்தத் தேவையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுதான் உணவும் மற்றய பொருட்களும் கிடைக்கின்றன என்று சாடோ கூறினார். சடலங்களை மூடும் உறைகள் மற்றும் சவப்பெட்டிகளும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன என்று அவர் எச்சரித்தார். நேற்றிரவு எட்டு மணியை ஒட்டி, கிட்டத்தட்ட 450,000 மக்கள் ஒன்பது பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 250,000 வெளியேற்றப்பட்டோர் தங்கும் மையத்தில் இருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் சில பாதுகாப்பு மையங்கள் இன்னும் நிவாரணப் பொருட்களான நீர் மற்றும் உணவு போன்றவற்றைப் பெறவில்லை. தடைக்கு உட்பட்ட சாலைகளையும், தொடர்புகளும் மற்றும் அம்புலன்ஸ், டிரக்குகளுக்குத் தேவையான பெட்ரோலும் தட்டுப்பாடு காரணமாக நிவாரண முயற்சிகள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன எனத் தெரிகிறது. “இது நரகத்திலிருந்த ஒரு காட்சி, முற்றிலும் தீய கனவு போன்றது” என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பாட்ரிக் புல்லர் வடகிழக்கு கடலோர சிற்றூரான ஒட்சுசி பற்றிக் குறிப்பிட்டார். “இங்கு நிலைமை நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. அநேகமாக அனைத்துமே தரைமட்டம் ஆக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் 9,500 பேர் எனக் கூறுகிறது, அதாவது மொத்த மக்கட்தொகையில் பாதிக்கும் மேல் என இறந்திருக்கக் கூடும், அத்தோடு நான் அவ்வளவு மோசமான நிலை என்றுதான் நம்புகிறேன்” என்றார் அவர். அவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் இழந்ததோடு, தங்கள் பிழைப்பு வழிவகையையும் இழந்தது பற்றி வருங்காலக் கவலையை வெளியேறி வந்துள்ளவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். உதாரணமாக இஷிமாகி என்னும் நகரத்தில் மொத்த மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் என இருக்கும் 111,295 பேர் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கலம் கோரியுள்ளனர் என்று நகர அதிகாரிகள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட 53,000க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமாகிவிட்டன. சுனாமியின் சக்தியினால் முற்றிலும் அழிக்கப்பட்டவிட்டன. இது பரந்த பகுதிகளில் வெறும் சேத குப்பை இடர்பாடுகளை மட்டும் விட்டுச் சென்றுள்ளது. இவை அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பல பின்னதிர்வுகள்—ரிக்டர் அளவுகோலில் 5 அல்லது அதற்கும் மேல் என்று பதிவாகியுள்ள 250க்கும் மேற்பட்டவை—தொடர்ந்து மீட்பு, நிவாரண செயற்பாடுகளைத் தடைக்கு உட்படுத்தியுள்ளன. அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் 7 அளவு இருக்கும் பெரிய நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம் என இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஞாயிறன்று 6.2 அளவில் நில அதிர்வு ஒரு தனியான fault கருவியிலிருந்து டோக்கியோவிற்கு கிழக்கே 100 கி.மீ. தூரத்திலிருந்து வந்ததையடுத்து தலைநகரை அதிர்விற்கு உட்படுத்தியது. நேற்று ஒரு மிகப் பெரிய அலை ஒன்று கடலுக்கு வருவது தென்பட்டதை அடுத்து, ஒரு புதிய சுனாமி அச்சம் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் பெரும் வெளியேற்றங்களைத் தூண்டியது. ஆனால் அதிகாரிகள் பின்னர் எச்சரிக்கையை இரத்து செய்தனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மூடப்பட்டுவிட்ட நான்கு அணுசக்தி நிலையங்களில் ஒன்றான புகுஷிமாவின் இன்றைய அபாய நெருக்கடியில் தொழிலாளர்கள் உலையை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டெப்கோ செய்தித்தொடர்பாளர் ஒருவர் இன்று காலை 2ம் எண் அணு உலையில் “மாபெரும் வெடிப்பு” இருந்தது என்றார். முன்னதாக அதிகாரிகள் fuel rods ஆபத்திற்கு உட்பட்டுள்ளன, கரைவு ஏற்படலாம் என்று கூறியிருந்தனர். இரு ஹைட்ரஜன் வெடிப்புக்கள் புகுஷிமா எண்1, எண்3 அணு உலைகளில் சனி மற்றும் திங்களில் நடந்ததுடன், குறைந்தபட்சம் 11 பேர் இரண்டாவது வெடிப்பில் காயமுற்றிருக்க வேண்டும். உள்ளூர் நேரம் 11 மணிக்கு பிரதம மந்திரி நாவோடோ கான் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி புகுஷிமாவில் கட்டாய வெளியேற்றம் நடைபெற்றுள்ளது என்று அறிவித்தார். அணு உலைக்கு 30 கி.மீ. சுற்றளவிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். “இதன் மட்டம் மிக அதிகமாக இருக்கும்போல் உள்ளது, இன்னமும் கதிரியக்க ஆபத்து பெரிதும் வரக்கூடும்” என்றார் கான். காபினெட்டின் தலைமைச் செயலாளர் யுகிடோ எடனோ, “நாம் இப்பொழுது மனித உடல்நலத்திற்கு சேதம் விளைவிக்கும் அளவுகளை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார். கதிரியக்க அளவுகள் அணு உலையில் முன்னதாக microsieverts களில் தவறாகக் கூறப்பட்டன என்றும் அவை millisieverts களில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்றும் எடனோ கூறியுள்ளார். பிந்தையதோ 1000 மடங்கு அதிக வலிமை உடையவை, எனவே மனித உடல்நிலைக்கு அதிக சேதம் விளைவிக்கும். கானும் எடனோவும் செய்தி ஊடகத்திற்குத் தகவல் கொடுத்த சற்று நேரத்தில், அணு உலை எண் 4 வெடித்துள்ளதாக தகவல் வந்தது. வீசும் காற்றுக்கள் டோக்கியோ புறம் வருவதால், பிரெஞ்சுத் தூதரகம் அதன் குடிமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கூறியது. அந்த வெடிப்பின் விளைவுகள் 10 மணி நேரத்திற்குள் வந்துவிடும் என்றும் அது கூறியது. கான் அரசாங்கமும் டோக்கியோவிற்கு மின்சாரம் வழங்கும் பழசாகிவிட்ட புகுஷிமா உலைகள் மற்றும் நிறுவனங்களைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனமான டெப்கோவும், நேற்று நிலையத்தின் ரியக்டர்களில் முழுக் கரைவினால் பேரழிவு ஏற்படும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை கொடுத்துள்ளன. இத்தகைய கரைப்பு, கொள்கலத்தில் விரிசலை ஏற்படுத்தி சுற்றுச் சூழலுக்கு கதிரியக்கக் கசிவையும் ஏற்படுத்தலாம். உலையின் கொள்கலத்தில் ஒரு பகுதி சேதமுற்றுவிட்டது போல் தோன்றுகிறது என்றும் ஜப்பானிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. “அடக்கும் நீர்த்தேக்கத்தில் சேதம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது”—அதாவது உலையிலுள்ள குளிர்ச்சி கொடுக்க, காற்றழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நீரை வைக்கப் பயன்படுத்தும் கொள்கலத்தின் கீழ்ப்பகுதியில்—என்று எடனோ செய்தியாளர்களிடம் கூறினார். “ஆனால் கதிரியக்கக் குறியீடுகளில் திடீரென எந்த அதிகரிப்பையும் பதிவு செய்யவில்லை” என்றார் அவர். அரசாங்கமும் டெப்கோவும் விளைவுகளைப் பற்றி குறைமதிப்பிடுவதைத் தொடர்ந்ததான வகையில் அவருடைய பேச்சு இருந்தது. முன்னதாக “செர்நோபிலை ஒத்த நிலைமையாக இது வளர்ச்சி அடையாது” என்றுதான் எடனோ வலியுறுத்தியிருந்தார். ஆனால், க்யோடோ செய்தி நிறுவனம் அதிக கதிரியக்க அளவுகள் புகுஷிமாவிற்கும் டோக்கியோவிற்கும் இடையேயுள்ள பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. சர்வதேச அணுசக்தி நிறுவனமானது, அரசாங்கம் 230,000 அலகுகள் உறுதியான அயோடினை வினியோகித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. கதிரியக்கத்திற்கு உட்படுகையில் புக்ஜிமாவில் வெளியேறியோர் மையங்களில் ஏற்படுத்தும் தைரோய்ட் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பைக் கொடுக்க இது பயன்படும். பெருந்திகைப்பில், முன்பு சோதனை செய்யப்படாத வகையில் உலை நடுப்பாகங்களை குளிர்விக்க அவற்றுள் கடல்நீரை டெப்கோ உட்செலுத்திவருகிறது. இந்தக் கடைசி நேர முயற்சி 40 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்தப் பழைய உலையை இனி வருங்காலத்தில் பயன்படுத்த முடியாது என்று செய்துவிடும். அணுசக்தி வல்லுனர்கள் முழுக் கரைப்பும் தவிர்க்கப்பட்டு விட்டாலும் கூட, நெருக்கடி நிலைமை ஓராண்டிற்கு நீடிக்கும் என்றும் இதற்குக் காரணம் மையப் பகுதிகளை குளிர்விப்பதிலுள்ள இடர்பாடுகள் என்றும் இதையொட்டி நீண்டகாலம் வெளியேற்றங்கள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர். உலையையைச் சுற்றி 20 கி.மீ. ஆரச்சுற்றளவில் ஒரு ஒதுக்குப் பகுதியாக அதிகாரிகள் அறிவித்து, அங்கிருந்து 210,000 மக்களை வெளியேற்றியுள்ளனர். ஒரு பாதுகாப்பு மையத்தில் தன் குழந்தையை அணைத்திருந்த இளம் பெண் ஒருவர் NHK பொதுத் தொலைக்காட்சி நிறுவனத்திடம், “இக்குழந்தை கதிரியக்கப் பாதிப்பிற்கு உட்படுவதை நான் விரும்பில்லை. என்ன ஆனாலும் அதைத் தவிர்க்க விரும்பினேன்” என்றார். உலகிலேயே அதிக நிலநடுக்க அதிர்விற்கு உட்படும் சங்கிலித் தொடர்போல் ஜப்பான் இருந்தாலும், அதன் ஆளும் உயரடுக்கு கடந்த நான்கு தசாப்தங்களாக அணுசக்தி உலைகளைப் பயன்படுத்தியுள்ளது. இவை இலாபம் சேகரிக்கும் பெருநிறுவனங்களால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதித் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. சாதாரண தொழிலாளர்களிடையே சீற்றம் பெருகி வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இவை அணுசக்தி நிலைய வெடிப்புக்களினால் மட்டும் அல்ல. டெப்கோவின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் தொடர்ந்த பல திட்டமிட்ட இருட்டடிப்புக்கள் நேர்ந்தன, அவை பெரும் குழப்பத்தையும் இரயில்கள் செல்லுவது தாமதிப்பதையும் நேற்று டோக்கியோ, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுத்தின என்பதால். பெரும் சக்திப் பயன்பாட்டு நிறுவனம் உரிய காலத்தில் தகவலைக் கொடுக்கத் தவறிவிட்டது, இடைவிடாமல் தன் திட்டங்களை மாற்றுகிறது. அதன் வலைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. நிறுவனமானது இருட்டடிப்புக்களினால் நகரங்கள் பட்டியலில் தவறுகளைச் செய்தது. அவற்றில் அடுத்த மாதம் வரை திட்டமிடப்பட்ட நகரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. நேற்றைய குழப்பத்திற்கு முன்பே, நிறுவனம் ஜப்பானின் முக்கிய நிதிய ஏடான நிக்கெயில் ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுத்தது, இருட்டடிப்புக்களால் ஏற்பட்ட தொந்திரவிற்கு மன்னிப்புக் கேட்டதுடன் எரிசக்தியை சேமிப்பதற்கு ஒத்துழைப்பையும் நாடியது. சர்வதேச உதவியின் அளவும் பேரழிவின் தன்மையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. நேற்று இரவு வரை, கிட்டத்தட்ட 750 வெளிநாட்டு தேடுதல், மீட்புப் பணியாளர்கள் 12 நாடுகளிலிருந்து 35 மோப்ப நாய்களுடன் ஜப்பானுக்கு வந்துள்ளனர். அமெரிக்க நிவாரணம் முக்கியமாக பெரிய அளவு அமெரிக்க ஆயுதப்படைகள் ஜப்பான் இன்னும் பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டவை ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் உள்ளது. இது க்யோடோ நியூஸின் கருத்துப்படி, உள்நாட்டு இராணுவத்துடன் பேரழிவை முகம்கொடுக்கும் முயற்சிகளுக்கு கூட்டாக இணைந்துள்ள மிகப் பரந்த அளவிலான அத்தகைய முயற்சியைக் குறிக்கிறது என்று உள்ளது. அத்தகைய தலையீடு கூட அணுசக்தி நெருக்கடியின் அபாய பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது பிரிவானது புகுஷியாமா உலையின் கதிரியக்க கீழ்நோக்குக் காற்றை எதிர்கொண்ட பின் சுற்றிக் கொண்டு வரும் கட்டாயத்திற்கு உட்பட்டது என்றும் யோகோடா தளமாகக் கொண்ட ஜப்பானிய அமெரிக்க படைகளின் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. |
|