WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஜப்பானிய பேரழிவின் தாக்கங்கள்
14 March
2011
Chris Talbot and Patrick Martin
உயிர்பிழைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்விடங்களின் சிதைவுகளை உணர்விழந்து சேகரித்துக்
கொண்டிருக்கும் நிலையிலும் உறவினர்களை தேடிக் கொண்டிருக்கும் நிலையில்,
ஜப்பானை
தாக்கியிருக்கும் பேரழிவின் முழுவீச்சும் படிப்படியாக வெளிப்பட்டு வருகின்றன.
இதில்
மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும்,
இதில்
காயப்பட்டவர்களுக்கும்,
தங்களின் வீடுகளை
இழந்திருப்பவர்களுக்கும்,
இந்த பிரளயத்தில்
தங்கள் வாழ்வாதாரங்களை அனைத்தையும் இழந்திருக்கும் அனைவருக்கும் உலக சோசலிச
வலைத் தளம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
குறைந்தபட்சம்
10,000
மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் வடகிழக்கு
கடற்கரையை சூழ்ந்துவந்த சுனாமியின்
30
அடி உயர கடலலைகளால்
பேரழிவிற்கு உள்ளான நகரங்களில் மீட்புக்குழுக்கள் தேடி வருகின்ற நிலையில்,
இந்த எண்ணிக்கை
வரும் நாட்களில் இன்னும் உயரக்கூடும்.
தண்ணீரின் வேகத்தால்
ஒட்டுமொத்த நகரங்களும் வரைபடத்திலிருந்து துடைக்கப்பட்டு இருப்பதை செயற்கைகோள்
படங்கள் காட்டுகின்றன.
துறைமுக சரக்கு
பெட்டகங்களும்,
படகுகளும்
நிலத்திலிருந்து வெகுதூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதை
ஒளிப்பதிவுக்காட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.
வாகனங்கள்,
பாரவூர்திகள்
மற்றும் இரயில்களையும் கடலலை இழுத்துச் சென்றுவிட்டது;
வீடுகளை அதன்
அஸ்திவாரத்தோடு பெயர்த்து,
அவற்றை
தூள்தூளாக்கிவிட்டது.
எரிவாயு குழாய்கள்
உடைந்ததால்,
வீடுகள்
தீப்பிடித்து கொண்டன;
அத்துடன் அந்த
வெள்ளப்பெருக்கிற்கு இடையிலும் எரிந்து கொண்டிருந்த அந்த நெருப்பு மேலும் பரவியது.
ஒரு
செங்குத்தான பள்ளத்தாக்கில் இருந்த ஒரு சிறிய கடற்கரை நகரமான மினாமிசன்ரிக்குவில்,
ஒரு சுனாமி அலையால்
நான்கு-மாடி
கட்டிடமே தலைகீழாக திருப்பிப் போடப்பட்டது.
அந்த நகரத்தின்
17,000
மக்களில் ஏறத்தாழ
10,000
மக்கள் அழிக்கப்பட்டனர்.
சுனாமி அலை அந்நகரை
அணுகுவதற்கு 30
நிமிடத்திற்கு
முன்னால் அங்கிருந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நகரிலிருந்து
வெளியேறுவதற்கு இருந்த ஒரேயொரு சாலையும் உடனடியாக போக்குவரத்து நெருசலில் சிக்கிக்
கொண்டதால்,
பலரால் அந்த
நேரத்திற்குள் தப்பிக்க முடியவில்லை.
அங்கே மேடான
பகுதியிலிருந்த கட்டிடங்களில் ஒன்றாக ஓர் உள்ளூர் பள்ளியில் தப்பித்தவர்கள்
குழுமினர்.
மருத்துவமனைகளும்
கூட அழிக்கப்பட்டுள்ளன.
காயப்பட்டவர்கள்
ஹெலிகாப்டர்கள் மூலமாக அருகிலுள்ள நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
பெரும்
பாதிப்பிற்கு உள்ளான நகரங்களில் ஒன்றான சென்டாயில் உயிரிழந்தவர்களின் துல்லியமான
எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.
மீட்புக்குழுவினர்
சிதைவுகளில் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால்
நூற்றுக்கணக்கான உடல்கள் ஏற்கனவே கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
பிழைத்திருப்பவர்கள்
உணவுக்காகவும்,
தண்ணீருக்காவும்
காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது;
இன்னமும்
கடுங்குளிர் நிலவும் வானிலையில் வெப்பத்திற்கு வழியில்லாமல் இருக்கிறது.
மற்றொரு சுனாமி
தாக்குவதற்கு முன்னால்,
எரிபொருளை
நிரப்பிக்கொள்வதற்காக,
அந்த அளவுமுறையில்
விநியோகிக்கப்பட்டு வரும் எரிபொருளுக்காக மோட்டார் வாகன ஓட்டிகள் வரிசையில்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பூகம்பம்
மற்றும் பெரும் கடலலைகளின் உச்சக்கட்ட விளைவுகளாக,
மூன்றுமைல் நீளமுள்ள
தீவான செர்னோபைலைப்போல் அல்லது அதைவிட மோசமாக பல அணுசக்தி உலைகள் வெடிக்கும்
அபாயங்கள் உள்ளன.
பூகம்பம் ஏற்பட்ட
உடனேயே,
மியாகி ஆட்சிஅதிகார
எல்லையில் உள்ள புக்கூஷிமா டாய்ச்சி அணுஆலையைச் சுற்றி ஓர் அவசரகால நெருக்கடி நிலை
அறிவிக்கப்பட்டது.
அப்பகுதியைச்
சுற்றியிருந்த சுமார்
200,000
மக்கள்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை
மதியம்,
அங்கே ஒரு பெரும்
வெடிப்பு ஏற்பட்டது.
அது முதல்
அணுஉலையைச் சுற்றியிருந்த கான்கிரீட் கட்டிடத்தைச் சேதப்படுத்தியிருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
அந்த அணுஉலையின்
எஃகு அமைப்புமுறை வளாகம் சேதமடையவில்லை என்றும்,
ஆனால் அங்கிருக்கும்
மூன்று அணுஉலைகளுமே ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.
உடைவின் விளைவாக,
முதன் அணுஉலையின்
அருகாமையிலுள்ள பிரதேசங்களில்,
செசியம்-137
மற்றும் ஐயோடின்-131
கதிரியக்க
உட்கூறுகள் பரவியுள்ளதைக் கண்டறிந்துள்ளதாக ஜப்பானின் அணுசக்தி மற்றும் தொழில்துறை
பாதுகாப்பு ஆணையம்
(Nisa)
உறுதிப்படுத்தியுள்ளது.
புக்கூஷிமாவில் மேலும் வெப்பமயமாதலைத் தடுக்கும் விதத்தில்,
மூன்று
அணுஉலைகளின்மீதும் அதிகாரிகள் கடல்நீரைப் பாய்ச்சியடைக்க கடுமையான முறைமைகளை
எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் வெடிப்புகள்
நிகழ வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடல்நீரை
பாய்ச்சுவதால் அந்த அணுஉலைகளை அதற்கு மேலாக வர்த்தகரீதியில் பயன்படுத்த முடியாது
போகும் என்ற போதினும்,
அதைமீறி கடல்நீரைப்
பயன்படுத்துவதென்பது,
நிலைமை எந்தளவிற்கு
மோசமாக இருக்கிறதென்பதை எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் மோசமான
பேரழிவைத் தடுக்கும் ஒரு கடைசி முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
ஜப்பானின்
வடகிழக்கு பசிபிக் கடற்கரையை ஒட்டியொட்டியுள்ள மொத்தம் ஆறு அணுஉலைகளும் அவற்றின்
குளிரூட்டு அமைப்புமுறையில் கோளாறுகளைக் கண்டு வருவதாக,
ஜப்பானிய நேரப்படி
திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொழில்நுட்ப
வல்லுனர்களை அவசரகால நெருக்கடி நிலையை அறிவிக்கும் நிலைக்கும்,
அவசரகால
தகவல்பாதுகாப்புகளை
(backup)
பயன்படுத்தும் நிலைக்குத்
தள்ளியது.
பூகம்ப பாதிப்பு குறித்து
ஆய்வு செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை முறைமையாக,
மேலும் ஆறு அணுஉலை
ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
ரஷ்ய
அணுசக்தி நீர்மூழ்கிகப்பலான குர்ஷ்க்கை மீட்டதில் அபாய மதிப்பீட்டு குழுவிற்குத்
தலைமையேற்றிருந்த பொறியாளர் ஜோன் லார்ஜ்,
British Channel 4 Newsக்கு
கூறுகையில்,
அடுத்த ஒருசில
நாட்களில் தான் அபாயத்தின் முழுவீச்சும் வெளிப்படையாக தெரியவரும் என்றார்.
புக்கூஷிமாவில் உள்ள
இரண்டாவது அணுஉலை,
எரிபொருளுக்கான
புளூடோரியத்தைக் கொண்டிருக்கும்
"ஆக்சைடுகளின்
கலவையைப்"
பயன்படுத்தும்,
ஒரு
"MOX”
அணுஉலை என்பதால்,
அதுவொரு பெரிய
ஆபத்தை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
செர்னோபில்-வகை
சம்பவத்திலிருந்து வெளிப்படும் ஒரு கதிரியக்கம் முழுவீச்சையடைய பல நாட்கள்
எடுக்கும்,
அக்காலக்கட்டத்தில்
காற்று தெற்குநோக்கி நகரக்கூடும்.
அது இந்த கதிரியக்க
மேகங்களை டோக்கியோவை நோக்கியும்,
அங்கு வசிக்கும்
20
மில்லியன் மக்களை
நோக்கியும் நகர்த்திச் செல்லக்கூடும்.
இந்திய
பெருங்கடல் சுனாமி,
ஹூரிகேன் கத்ரீனா,
நர்கீஸ் புயல்,
பாகிஸ்தானில்
ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
ஹைட்டி,
காஷ்மீர் மற்றும்
வென்சுவான் (சீனா)
ஏற்பட்ட பூகம்பம் என
கடந்த தசாப்தத்தின் ஏனைய பெரும் இயற்கை பேரழிவுகளை போலவே,
ஜப்பான் பேரழிவும்
ஓர் உலக நிகழ்வாகும்.
அது
பாதிக்கப்பட்டவர்கள் மீதும்,
பிழைத்திருப்பவர்கள்
மீதும் ஓர் உலகளாவிய அனுதாபத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒரு கொடூரமான இயற்கை
பேரிடர் பட்டகை மூலமாக,
அது எந்த சமூக
அமைப்புமுறையில் நிகழ்ந்திருக்கிறதோ அந்த முதலாளித்துவ சமூக அமைப்புமுறையின்
முரண்பாடுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
உலகம்
முழுவதிலும் இருப்பதைப் போன்றே,
ஜப்பானில் உள்ள
அணுசக்தி தொழில்துறையும்,
பெருநிறுவன
உரிமையாளர்கள்,
வினியோகஸ்தர்கள்
மற்றும் சேவை வழங்குனர்கள் அவர்களின் அடித்தளத்தைக் கொழுக்க வைத்துக் கொள்வதற்காக
பாதுகாப்பு ஓட்டைகளை மேலும்கவனிக்காது வெட்ட,
ஒரு தொடர்ச்சியான
ஊக்கத்தொகையைப் பெறும் வகையில்,
தனியார் இலாபத்தின்
அடித்தளத்தில் நடத்தப்படுகிறது.
குறிப்பாக ஒரு
பேரழிவு போன்ற சம்பவங்களில் தொழில்துறையின் நிதியியல் கடமைப்பாடுகளை அரசாங்கத்தின்
சிறப்பு விதிவிலக்குகள் கைவிட்டுவிடுகின்றன.
புக்கூஷிமா
அணுஉலை ஜெனரல் எலக்ட்ரிக்
(General
Electric)
நிறுவனத்தால் 40
ஆண்டுகளுக்கு
முன்னர் வடிவமைக்கப்பட்டது.
அது தற்போதைய
அதிநவீன தொழில்நுட்பத்தைவிட பெருமளவிற்கு பின்தங்கியதாகும்.
இந்த பழைய
வடிவமைப்பு ஜப்பானின் ஏனைய அரை டஜன் அணுசக்தி ஆலைகளிலும் மற்றும் அமெரிக்காவில்
பிலடெல்பியாவின்
55 மைல்கள்
கிழக்கிலும்,
மன்ஹட்டனிலிருந்து
90
மைல் தெற்கிலும் உள்ள
நியூஜெர்ஸி அணுசக்தி உலை,
டோம்ஸ் ரிவர் உட்பட
குறைந்தபட்சம் 21
அணுஉலைகளிலும் அதே
வேலை செய்யப்பட்டுள்ளது.
புக்கூஷிமா
வளாகத்தின் இயக்குனரான
Tokyo Electric Power (TEPCO),
மிக மோசமான
பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்வதில் இழிபெயர் பெற்றது.
2003இல்,
ஒரு தவறான பரிசோதனை
அறிக்கைகளை அளித்த மோசடியில் அதன் மொத்த
17
அணுசக்தி ஆலைகளும்
தற்காலிகமாக மூடப்பட்டன.
பின்னர்
2006இல்
மீண்டும் தவறான தகவல் மோசடி எழுந்தது.
Los
Angeles Times
வெளியிட்ட செய்தி,
“ஜப்பானின் பல
அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு குறித்து விமர்சகர்கள் நீண்டகாலமாகவே ஆழ்ந்த கவலையை
அறிவித்துள்ளனர்.
அவற்றில் சில
1970கள்
மற்றும் 1980களையும்
விட பழமையானவை.
புக்கூஷிமா
நீண்டகாலமாக விமர்சகர்களின் பார்வையில் இருந்து வந்துள்ளது.
அவ்வாறே,
டோக்கியோவின்
தென்மேற்கில் 100
மைல் தூரத்தில் உள்ள
ஹமோகா ஆலையும் இருந்து வந்துள்ளது.
அது தற்போதும் ஒரு பிழையான நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பூகம்ப
பாதுகாப்புகளுடன் அணுசக்தி உலைகளை உருவாக்குவதில் அவருடைய ஆலோசனைகள்
நிராகரிக்கப்பட்டதால்,
அணுசக்தி
உலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை தீர்மானிக்கும் குழுவிலிருந்து,
கோப்
பல்கலைக்கழகத்தின் ஜப்பானிய புவி-இயற்பியலாளர் ஷூஹிகோ இஷிபாஷி
2005இல்
இராஜினாமா செய்தார்.
அவர்
Times
இதழுக்கு கூறியதாவது,
“ஜப்பான் பூகம்ப
ஏற்படக்கூடிய தீவுக்கூட்டமாக உள்ளது.
மேலும் அதன்
கடற்கரையோரத்தில்
54
அணுசக்தி உலைகள்
அமைந்துள்ளன.
இது தற்கொலைப்படை
குண்டுதாரி அவர் இடுப்பைச் சுற்றி வெடிமருந்துகளை கட்டிக் கொண்டிருப்பதைப் போல
உள்ளது,”
என்றார்.
ஜப்பான்
அணுசக்தி உலைகளைப் பெரிதும் சார்ந்திருப்பது,
கடந்த நான்கு
தசாப்தங்களில் ஜப்பானிய ஆளும் வர்க்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகும்.
அது அதன் மின்சார
உற்பத்தியில் 30
சதவீதத்தை
54
ஆலைகளில் உற்பத்தி
செய்கிறது. 2030
வாக்கில்,
மேலும் பல ஆலைகளைக்
கட்டியெழுப்பி,
இதை
50
சதவீதமாக ஆக்க
திட்டமிடப்பட்டிருந்தது.
1973இல்,
OPEC நாடுகளால் ஓர்
எண்ணெய்வள தடையாணையை அரேபிய-இஸ்ரேல்
யுத்தம் தூண்டிவிட்டபோது,
உலகளாவிய
பொருளாதாரம் குறிப்பாக ஜப்பான் பொருளாதாரம் மந்தப்பட்டது.
அப்போது ஜப்பானின்
எரிசக்தி வினியோகத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அணுசக்திகள் மூலமாக அதனால் பெற
முடிந்தது.
சர்வதேச
அணுசக்தி கூட்டமைப்பு அதன் வலைத் தளத்தில் குறிப்பிடுவதைப் போல,
“ஜப்பான் கச்சா
எண்ணெய் இறக்குமதியை,
குறிப்பாக
மத்தியகிழக்கிலிருந்து,
சார்ந்திருந்தது
(1974இல்
மின்சாரத் தேவையின்
66
சதவீதத்தை எரிபொருள்
பூர்த்தி செய்து வந்தது).
1973இல் எண்ணெய்
அதிர்ச்சியின் காரணமாக இந்த புவியியல்ரீதியிலான மற்றும் பாவனைப்பொருட்கள்
பாதிக்கப்படும்தன்மை மிகவும் சிக்கலாக மாறியது.
உள்நாட்டு எரிபொருள்
கொள்கையின் மறு-மதிப்பாய்வு
மாற்றீட்டைக் கொண்டு வந்தது.
மேலும்,
குறிப்பாக,
ஒரு முக்கிய
அணுசக்தி கட்டமைப்பு திட்டத்தையும் கொண்டு வந்தது.
எண்ணெய் இறக்குமதியை
நாடு சார்ந்திருப்பதைக் குறைக்க அதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு
பகுத்தறிவார்ந்த முறையிலான திட்டமிட்ட உலகளாவிய பொருளாதாரத்தில்,
பித்துப்பிடித்த
நிலையில் இல்லாவிட்டாலும்,
ஒட்டுமொத்த
அலட்சியத்துடன்,
பூமியின் மிக
முக்கியமான புவியியல்ரீதியிலான மிகவும் அசையும் தன்மையுடைய மற்றும் பெரும்
மக்கள்தொகை நிரம்பிய பகுதிகளில் ஒன்றில் டஜன் கணக்கான அணுசக்தி ஆலைகளை நிறுவுவது
பெரும் கவனமற்ற ஒரு நடவடிக்கையாகவே கருதப்படமு்டியும்.
ஆனால் தேசிய-அரசுகளின்
போட்டியுடன் கூடிய முதலாளித்துவ பொருளாதாரத்தில்,
மிகவும் குறைந்த
எண்ணெய்வளமும்,
எரிவாயுவும் மற்றும்
நிலக்கரியும் போதியளவிற்கு இல்லாமல்,
போதிய ஜனநாயக
எரிசக்தி வினியோகத்தை அளிக்க ஜப்பானிய முதலாளித்துவத்தால் முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக,
1973ற்கு முன்னரே
ஜப்பானின் ஆளும் வர்க்கம் எரிசக்தி நெருக்கடியின் அனுபவத்தைக் கொண்டிருந்தது.
இரண்டாம் உலக
யுத்தத்தின்போது அமெரிக்காவிற்கு எதிரான ஒருதலைப்பட்டசமான யுத்தத்தைத் தொடக்க
ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் முடிவிற்கு முக்கிய உந்துசக்திகளாக இருந்தவைகளில்,
சீனாவினுள் ஜப்பான்
தலையீடு செய்ததற்கு பதிலடியாக ரூஸ்வெல்ட் நிர்வாகத்தினால் அமெரிக்க எரிபொருள்
மற்றும் உலோகங்களின் வினியோகங்களின் மீதான தடையாணையாக இருந்தது.
தங்களுடைய
கட்டிடங்களில் பூகம்ப-தடுப்பு
கட்டுமான முறைகளைக் கையாள்வதில் உலகில் முன்னனியில் இருக்கும் ஜப்பானின்
தொழில்நுட்பம் செறிவுடன் இருந்த போதினும்,
அத்துடன் மக்களை
முன்னெச்சரிக்கையாக உயர்ந்தமட்ட அளவிற்கு தயார்படுத்தி வைத்திருந்த போதினும்,
இந்த இயற்கை
பேரழிவிற்கு அடித்தளமாக இருந்தது புவியின் அடித்தள அடுக்குகளின் ஏற்பட்ட உடைவுகள்
மட்டுமின்றி,
மாறாக
சமூகக்காரணங்களாகும்.
இலாப
அமைப்புமுறையும்,
முதலாளித்துவ தேசிய-அரசும்
உலக மக்களுக்கு அவசியமான பாதுகாப்பு,
சுகாதாரம்,
ஆரோக்கியம்
போன்றவற்றை,
ஜப்பான் போன்ற
முன்னேறிய நாடுகளிலும் கூட,
உறுதிப்படுத்த
இலாயக்கற்று போய்விட்டிருக்கின்றன.
முதலாளித்துவத்தையும்,
தேசிய-அரசையும்
இல்லாதொழித்துவிட்டு,
ஓர் உலகளாவிய அளவில்
சமூகரீதியில் கைக்கொள்ளப்பட்ட,
பகுத்தறிவார்ந்து
திட்டமிடப்பட்ட ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில்,
ஒரு நிஜமான
விஞ்ஞானபூர்வமான,
உலகளாவிய
முன்னோக்கைக் கையாள்வது மட்டுமே,
மனிதயினத்திற்கு ஒரு
முன்னோக்கிய பாதையை அளிக்க முடியும்.
|