சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British ruling elite advance “humanitarian” cover for intervention in Libya

பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கு லிபியத் தலையீட்டிற்குமனிதாபிமானம்என்னும் மறைப்பை முன்வைக்கிறது

By Julie Hyland
11 March 2011
Use this version to print | Send feedback

பிரிட்டனின் ஆளும் உயரடுக்கினர் மீண்டும் தங்கள் நவ காலனித்துவ நகங்களைமனிதாபிமானத் தலையீடு என்ற மறைப்பில் இம்முறை லிபிய மக்களின் இன்னல்களை பயன்படுத்தி கூர்மைப்படுத்துகின்றனர்..

கடந்த சில நாட்களில் லிபியச் சர்வாதிகாரி முயம்மர் கடாபிவெளியேற வேண்டும்என்று கோருவதில் முன்னிலையில் இருந்து, விரும்பப்படும் ஆட்சி மாற்றத்தை அடைவதற்குஅனைத்து விருப்புரிமைகளும்மேசை மீது உள்ளன என்றும் பிரிட்டன் வலியுறுத்துகிறது.

பெங்காசியில் எதிர்ப்புச் சக்திகள் பல பிரிட்டிஷ் இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கையாளர்களை கைப்பற்றியுள்ளது அதாவது 6 SAS துருப்பினர் மற்றும் ஒரு M15 முகவர்இந்த இலக்கை அடைவதற்கு சக்திகள் ஏற்கனவே உழைத்து வருகின்றனர் என்பதை இது தெளிவாக்குகிறது. இதன்பின், SAS மற்றும் M16 ஆகியவைதரைப்பகுதியில் நிலை கொள்வதற்குமந்திரிகள் ஒப்புதல் கொடுத்துள்ளனர் என்றும்இவர்கள் ஏற்கனவே லிபியாவிலுள்ள சிறப்புப் படைகளுடன் இணைந்து லிபிய எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பும் முறைசாரா இராணுவ ஆலோசனையும் கொடுப்பர்என்றும் Daily Mail கூறியுள்ளது.

பிரிட்டனின் கடற்படைக் கப்பல் Westminster மற்றும் றோயல் கடற்படைத் துணைக் கப்பல் Argus ஆகியவை இரண்டும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மால்டாவிலுள்ள பிரிட்டிஷ் விமானம் தயார் நிலையில் உள்ளது, 600 Black Watch படையினர்கள் 24 மணி நேரத் தயார் நிலையில்பறந்து சென்று மனிதப் பேரழிவைத் தடுப்பதற்குஉள்ளனர் என்றும் மெயில் தொடர்ந்து கூறியுள்ளது.

ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும், கடாபி பதவியை விட்டு இறங்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை மீறினால் அடுத்துச் செய்யப்பட வேண்டிய நடவடிக்கை பற்றிதிட்டமிட்டுச் செயல்பட உடன்பட்டுள்ளதாக ஒரு அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வினாக்களுக்கு புதனன்று விடையிறுக்கையில், .நா. பாதுகாப்பு சபையின் ஒப்புதல் பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றஉத்தரவாதம்இல்லை என்றார் காமெரோன். பிரிட்டனும் பிரான்ஸும் லிபியா வான்பகுதியில் பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்துவது பற்றியதில் தடுப்பதிகாரத்திற்கு உட்பட்டுவிட்டால், என்ன செய்வது என்பது பற்றிய விருப்புரிமைகள் நிறைய இருப்பதாகவும் அவர் கூறினார். பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்துவது என்பது ஒரு போர்ச் செயல் ஆகிவிடும். ஏனெனில் லிபிய விமானங்கள் ஏதேனும் தடையை மீறினால் அவற்றைச் சுட வேண்டும், நாட்டின் விமானத்தளங்கள் தாக்குதலுக்கு உட்படும் என்னும் வகையில் காவல் இருந்தால்தான் அது செயல்படுத்தப்பட முடியும்.

இராணுவவிருப்புரிமைகள்இருத்தப்படுகையில், தலையீட்டிற்கான அரசியல் மற்றும் சட்டபூர்வ வாதங்கள் இன்னும் சிக்கல் வாய்ந்தவை. 2004 ல் டோனி பிளேயரின் கடாபியுடன் இழிந்தபாலைவன உடன்பாடுலிபிய சர்வாதிகாரத்திற்கு எதிராகத் திடீரென முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை ஆளும் உயரடுக்கு எடுப்பது குறித்த பொது அவநம்பிக்கைத்தனத்தை நியாயப்படுத்த பயன்படுத்துவது ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக அரசாங்க மந்திரிகள், எண்ணெய் மற்றும் வணிகப் பெருநிறுவனங்கள் ஒப்பந்தங்களையும் பணத்தையும் ஈடாகப் பெறுவதற்காக மிருகத்தனமான கடாபி ஆட்சியுடன் தங்களை நயமாகப் பிணைத்துக் கொள்ளுவதற்கு முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வியாளர்கள் மூலம் முயன்று வரிசையில் நின்று தயவைப் பெற்றுள்ளனர். உண்மையில் Pan Am  விமானத்தை 1988 ல் குண்டுத் தாக்குதல் செய்து 270 பேரைக் கொன்றதற்கு தண்டனை பெற்ற அப்துல் படெட் அலி அல்-ரெக்ரஹி 2009ல் உடல்நலக் காரணம் கூறப்பட்டு ஸ்காட்லாந்துச் சிறையொன்றில் இருந்து லிபியாவிற்குத் திருப்ப அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றிற்கும் மேலாக லிபியாவிற்குமனிதாபிமான தலையீடுகளுக்கானஅழைப்புக்களில் ஈராக் உயர்ந்து நிற்கிறது. பிரிட்டனின் ஆளும் உயரடுக்கும், அதன் உளவுத்துறைப் பிரிவுகள் மற்ற முக்கிய மந்திரிகள், வேண்டுமென்றே ஈராக்கில் இருப்பதாகக் கூறப்பட்டபேரழிவு ஆயுதங்கள்பற்றிப் பொய் கூறினார். அதையொட்டி 2003ல் அது நடத்திய சட்ட விரோதப் படையெடுப்பிற்கு ஒரு தயாரிக்கப்பட்ட நியாயத்தைக் கொடுத்தனர். இதன் விளைவாக நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் இறந்துள்ளனர், நாடு பாழாக்கப்பட்டது. இன்று வாஷிங்டன் மற்றும் லண்டன் சார்பில் இருத்தப்பட்டுள்ள வாடிக்கை அரசாங்கம் பாக்தாத்தில் எதிர்க் கட்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை வன்முறையால் அடக்கி வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் அரசியல் ஸ்தாபனமும் அதன் செய்தி ஊடகமும் போலித்தனமான பிரிட்டனின்அறநெறி வகைப் பொறுப்பு லிபிய மக்களுக்கு உள்ளது பற்றியவிவாதங்களைதொடங்கியுள்ளன.

ஈராக் போர்க் காலத்தில், கார்டியன் கட்டுரையாளர் டிமோதி கார்ட்டன் ஆஷ்மனிதாபிமானத் தலையீடுகளுக்கு கிளாட்ஸ்டோனியனை ஒத்த வலுவான உள்ளுணர்வுகளைப் பெற்றவர்என்று பிளேயரைப் பாராட்டினார். ஆனால், மார்ச் 3ம் தேதி செய்தித் தாளில் ஈராக்தாராளவாதத் தலையீட்டிற்கு ஒரு கெட்ட பெயரை கொடுத்தது”, “பிளேயர்  கிட்டத்தட்ட அதைக் கொன்றுவிட்டார்என்று ஆஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

“[லிபியாவில்] தலையிடுவதா, வேண்டாமா?. இதுதான் பிரச்சினைஎன்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாராளவாத வாதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், “சில தாராளவாதிகள்போருக்கும் ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவு கொடுத்தாலும், ஈராக்கில் உண்மையில் தாராளவாதத் தலையீடு நடக்கவில்லை என்று கார்ட்டன் ஆஷ் தொடர்கிறார். படையெடுப்பிற்கான உண்மைக் காரணங்களுள் ஒன்று தன் மிகப்பெரிய இராணுவ மேன்மையை உயர்த்திக் காட்டுவதும், ஈராக்கின் எண்ணெய் மீதான கட்டுப்பாடு கொள்வதற்கும் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். ஏதோ லிபாயவிற்கு இத்தகைய கருத்துக்கள் பொருந்தாதவை என்பது போல்.

மாறாக சிதைக்கப்பட்ட தர்க்கரீதியில், “பிரிட்டன், இத்தாலி போன்ற மேலைத்தேய நாடுகள் சமீப காலம் வரை கடாபியிடம் மிகத் தாழ்ந்த வகையில் பணத்திற்கு அடிபணிந்து நின்று அவருக்கு ஆயுதங்களைக் கொடுத்த நிலையில், அதே ஆயுதங்கள் இப்பொழுது கடாபியால் தன் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றனஎன்று அவர் கூறியுள்ளார். இது நாட்டில் தலையீடு செய்வதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்ற வினாவை எழுப்புவதை முக்கியமாக்குகிறது.

பறக்கக் கூடாத பகுதியின் திறன்கள் பற்றி நம்பிக்கை இல்லை என்றாலும், “அவசரக்காலத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டும்என்றும் கூறியுள்ளார்.

Independent ல் எழுதிய Geoffrey Robertson QC—.நா. நீதிச் சபையில் ஒரு உறுப்பினர்—“ஈராக் படையெடுப்பில் இருந்த சட்டவிரோதத் தன்மையின் நிழல் இப்பொழுதுதாராளவாத தலையிடல் முறை என்பது பற்றிய பேச்சுக்களை கறைப்படுத்திவிட்டதுஎன்று இணைந்து ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்படி இருந்தாலும், “ஈராக்கின் படிப்பினை ஒன்றும் இந்த நாடு மற்றொரு நாட்டின் மீது வலிமையை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதில்லை, மாறாக சர்வதேசச் சட்டத்தை மீறி அவ்வாறு செய்யக்கூடாது என்பதுதான்.”

லிபியாவில் தலையீடு என்பது சட்டப்பூர்வமாக நியாயப்படுப்பட முடியும் என்னும் தன் கருத்துவிவாதத்திற்கு உரியது என்று விவரித்தாலும் ரோபர்ட்சன் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நிரபராதியான குடிமக்களைக் கொலை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகநேட்டோ வலிமையைப் பயன்படுத்துவதுநெறியானதுமட்டும் இன்றிசட்டபூர்வமானதும் ஆகும் என்று அவர் எழுதியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை வடக்கு ஈராக்கில் குர்திஷ் மக்களைக் காப்பற்ற எனக் கூறப்பட்ட காரணம், மற்றும் கோசோவோவில் நேட்டோ குண்டு வீசியதற்குக் கூறப்பட்ட காரணம் ஆகியவற்றை இதற்காக மேற்கோளிட்டுள்ளார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பதுஒரு மனிதாபிமானமற்ற பேரழிவைத் தடுப்பதற்காக விருப்பம் உடைய நாடுகள் சேர்ந்து கூட்டமைப்பதை அனுமதிக்கும் வகையிலும்வளர்ச்சி பெற்றுள்ளது.

இத்தகைய கூட்டு பாதுகாப்பு சபைஉலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தல் என்ற ஒரு நிலைமையை அடையாளம் கண்டுவிட்டாலும்வலிமையைப் பயன்படுத்தித் தலையிடலாம், என ரோபர்ட்சன் தொடர்கிறார். லிபியாவைப் பற்றி “ICC இடம் ஒருமனதாகக் குறிக்கப்பட்டுவிட்டதால்இது ஏற்கனவே நடந்துள்ளது என்றும் அவர் வாதிடுகிறார்.

வியாழனன்று முன்னாள் தாராளவாத ஜனநாயகக் கட்சித் தலைவர் Menzies Campbell, மற்றும் Philipp Sands QC இருவரும் இதேபோன்ற வாதத்தை கார்டியனில் தலையீட்டிற்கு ஆதரவு தெரிவித்து முன்வைத்தனர். “செயல்படுத்தக்கூடிய பறக்கக்கூடாத பகுதியைநிறுவுவதன் தேவை, எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதம் வழங்குதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். “ஈராக்கில் ஏற்பட்ட தர்மசங்கடம்இதுபிரிட்டன் மற்றும் அமெரிக்காவின்தலைமையின் கீழ் செய்யப்பட முடியாது என்ற பொருளைக் கொடுத்தாலும், இந்த இரு நாடுகளும் அரபு லீக், ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் வளைகுடா ஒத்துழைப்புக் குழு ஆகியவற்றிற்கு அத்தகைய நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

யூகோஸ்லேவியாவிற்கு எதிரானநியாமான போர்எனக் கூறப்பட்டதற்கு எதிராக ஈராக்கியப் படையெடுப்பை ஒரு சிதைவான மாற்றம் என்று விளக்கம் கொடுத்துள்ளது தவறாகும். கடந்த மாதங்களில் தான் ஐரோப்பிய சபை கொடுத்த ஆய்வு ஒன்று கோசோவோ விடுதலை இராணுவம் (KLA) நேட்டோ போருக்கு முன்னரும் பின்னரும் செய்திருந்த பாசிசக் கொலைகள் பற்றிய விபரங்களைக் கொடுத்திருந்தது. இதில் செர்பிய, கோசோவோ-அல்பேனிய சாதாரணக் கைதிகளுடைய உடல் உறுப்புக்களை விற்பதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டதும் அடங்கும்

கொலை, விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய குற்றம் சார்ந்த குழுவிற்குத் தலைவராக KLA தளபதியும் தற்பொழுதைய பிரதம மந்திரியுமான ஹசிம் தாசி இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதுஇதுமாபியா போன்ற முறையான குற்றம் செய்யும் அமைப்புக்கள் போல் இருந்தது”.

கோசோவாவும் ஈராக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பெரும் போட்டி நாடுகளிடைய பெருகும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் மூலோபாய பிராந்தியத்தில் தங்கள் புவிசார்-அரசியல் நலன்களை உறுதி செய்யும் முயற்சிகளின் தொடர்ச்சியான செயல்களின் ஒரு பகுதிதான்.

அத்தகைய கருத்துக்கள் இன்று இல்லை எனப் பரிசீலனையில் கூறுவது வேண்டும் என்றே ஏமாற்றுவது ஆகும். சொல்லப்போனால் அத்தகைய தன்மைகள் இன்னும் கூடுதலாகத்தான் உள்ளன. உலக நிதிய நெருக்கடியின் இடையே அமெரிக்கா உள்ளது. அதன் பொருளாதார, அரசியல் சரிவு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் விரைவில் படர்ந்து வரும் வெகுஜன அமைதியின்மையினால் அச்சுறுத்தலுக்கு இன்னும் தீவிரமாக உட்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நிலைமை இன்னும் ஆபத்தானது. இது நீண்டகாலமாக தன் வலிமை குறைந்த உலக நிலையை உயர்த்துவதற்கு அமெரிக்க மேலாதிக்கத்தைத்தான் நம்பியுள்ளது. Telegraph ல் எழுதிய சேர் ரிச்சார்ட் டால்டன், லிபியாவில் முன்னாள் பிரிட்டிஷ் தூதராக இருந்தவர், கடாபியோ எதிர்ப்புப் போரை நிறுத்தும் வகையில் அடி கொடுக்க முடியாமல் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிட்டால், அதில் விளையும் ஆபத்து பற்றி எச்சரித்துள்ளார்.

உறுதியற்றநிலைகளின் மத்தியில்’, ‘பிரிட்டனும் அதனுடைய பங்காளிகளும் சுறுசுறுப்பாக ஆய்வில் ஈடுபடவேண்டும் மேலும் ஆயுதபாணியான மனிதாபிமான தலையீட்டு சர்வதேசம் எப்படி அக்கறையாகவும் உடனடியாகவும் பொறுப்பெடுக்க முடியும் என்று அவர் எழுதினார்.’

ஐரோப்பிய, அமெரிக்கத் தலையீடு தங்கள் விவகாரங்களில் இருந்தவை பற்றி லிபியாவின் மோசமான நினைவுகள் உள்ளனஎன்று அவர் எச்சரித்தார். இதையொட்டி திட்டமிடுபவர்களும் இராஜதந்திரிகளும்ஆயுதபாணியான தலையீடு பற்றிய தங்கள் தேசிய அவசரகாலத் திட்டங்கள் பற்றிய விருப்புரிமையைக் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்என்றார் அவர்.

தலையீட்டிற்கு ஒரு பின்னணி என்பதை பல காரணிகள் ஒரு வரக்கூடிய நிகழ்வாகச் செய்துள்ளனஎண்ணெய் விலை 120 டொலர் ஒரு பீப்பாய்க்கு என்று உள்ளது ஒரு குறைந்த காரணம் அல்ல. இதுஉலகப் பொருளாதாரத்திற்குபெரும் எச்சரிக்கை மணிபோல் உள்ளது.

எண்ணெய், வணிக ஒப்பந்தங்களைப் போல் அவசரமானவைதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எதிர் புரட்சி வடிவச் செயல்களும் உள்ளன. பல தசாப்தங்களாக அது மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் வறுமை, அடக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தங்கள் நலன்களை பாதுகாப்பதற்கு சர்வாதிகார ஆட்சிகளைத்தான் நம்பியிருந்தது. எனவேதான் தங்கள் நாடுகளில் எதிர்ப்பை அடக்குவதற்கு வலிமையைக் கையாண்டபோதிலும், பிரிட்டன் ஆயுதத் தாயாரிப்பாளர்கள் நிறைந்த குழு ஒன்றை பல வளைகுடா சர்வாதிகாரிகளையும் சந்திப்பதற்கு ஒரு வணிகப் பயணத்தை காமரோன் மேற்கொண்டிருந்தார்.

மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகளிடையே ஒரு பொதுக் கவலை, லிபியாவில் பிரிட்டிஷ் படைகள் நிலைநிறுத்துவதற்கு உறுதி கொடுப்பது பற்றி இருப்பதில், பஹ்ரைன் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டால் இவை தேவைப்படலாம் என்ற கவலை உள்ளதுதான்என்று கார்டியன் சரியான முறையில் குறிப்பிட்டுள்ளது. பிரிட்டிஷ் போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான தளங்களைக் கொண்டுள்ள வளைகுடாப் பிராந்தியமானது லிபியாவை விட பிரிட்டனுக்கு மூலோபாய வகையில் கூடுதல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. லிபியாவின் முக்கிய அக்கறை வணிகம் மட்டும் தான் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.