World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Arab League backs no-fly zone in Libya

லிபியாவில் ஒரு பறக்கக்கூடாத வலயப் பகுதிக்கு அரபு லீக் ஆதரவு கொடுக்கிறது

By Ann Talbot and Barry Grey
14 March 2011
Back to screen version

லிபியாவில் ஒரு பறக்கக்கூடாத பகுதி தேவை என்ற அழைப்பு மற்றும் பெங்காசியை தளமாகக் கொண்ட தேசிய மாற்றுக்கால சபைக்கு அங்கீகாரம் என்று சனிக்கிழமையன்று அரபு லீக் எடுத்த முடிவு முயம்மர் கடாபியை அகற்றுவதற்கான மற்றும் இன்னும் தாழ்ந்த வாடிக்கை ஆட்சியை அங்கு நிறுவுவதற்கு நேரடியான அமெரிக்க-நேட்டோ தலையீட்டிற்கு ஒரு முக்கியமான படியாகும்.

ஒபாமா நிர்வாகம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நேட்டோஅரபு உலகம் ஏகாதிபத்தியத் தலையீட்டிற்குப் பிராந்திய ஆதரவு என்னும் அத்தி இலையை அளிக்க வேண்டும் என்ற அழைப்புக்களை அரபு முதலாளித்துவ அரசாங்கங்கள் தாழ்மையுடனும், பரபரப்புடனும் எதிர்கொண்டுள்ளன. செவ்வாயன்று நேட்டோ மந்திரிகள் ஒரு பறக்கக் கூடாத பகுதிப் பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கு முன்னதாகவே சனிக்கிழமையன்று அவர்களுடைய முடிவு வந்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலுள்ள 22 உறுப்பினர்களை கொண்ட அரபு நாடுகள் (கெய்ரோவில் சனியன்று நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக நீக்கப்பட்ட லிபியாவை தவிரஅதன் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை), லிபிய எதிர்ப்புத் தலைமையை அங்கீகரித்த பிரான்ஸின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து நாட்டில் ஒரு உள்நாட்டுப்போர் தீவிரமாவதை உறுதிப்படுத்தியது. குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் லிபியாஅதன் இறைமையை இழந்துவிட்டதுஎன்று அக்கூட்டம் அறிவித்தது. இது அமெரிக்கா மற்றும் நேட்டோவிற்கு உட்குறிப்பாக ஆட்சி மாற்றத்தைச் செயல்படுத்துவதற்கு தொகையெழுதப்படாத காசோலை வழங்குவதற்கு ஒப்பாகும்.

கடாபியின் கொடூரங்களையும், விரிவாகும் உள்நாட்டுப் போரையும் போலிக்காரணங்களாகப் பயன்படுத்தி லிபியாவை துனிசியா, எகிப்து, யேமன், பஹ்ரைன், ஓமன், ஜோர்டான் இன்னும் மற்றய நாடுகளில் நடக்கும் வெகுஜன இயக்கங்களை அடக்குவதற்கு ஒரு இராணுவ, அரசியல் தளமாக மாற்றும் முயற்சியை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டுள்ள திட்டங்களைத்தான் இது ஒத்திருக்கிறது. அது ஏகாதிபத்திய ஆதரவுடைய சர்வாதிகாரங்களுக்கு ஊக்கம் கொடுத்து முதலாளித்துவ ஆட்சி மற்றும் முக்கிய எரிசக்தி இருப்புள்ள தளங்களில் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு இராணுவங்களையும் பயன்படுத்தும் தன்மையைக் கொண்டது.

லிபிய மக்கள் கடாபியின் வலதுசாரி முதலாளித்துவச் சர்வாதிகாரத்தை அகற்றுவதற்கான போராட்டத்திற்கு உலக சோசலிச வலைத்தளம் ஆதரவு கொடுக்கிறது. ஆனால் அமெரிக்காவும் நேட்டோவும் ஏகாதிபத்தியத் தலையீடு செய்து கடாபியை அகற்றுவதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்தது போலவே, ஒரு அமெரிக்கத்-தலைமையிலான தலையீடு என்பது மக்களுக்கு எதிராக இயக்கப்படும். அங்குள்ள மக்கள் விரைவில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளுக்கு இலக்கு ஆகிவிடுவார்கள்.

அரபு லீகின் நடவடிக்கை பெரும் அளவில் ஒரு பாசாங்குத்தனச் செயல் ஆகும். .நா. பாதுகாப்புச் சபையானது ஒரு பறக்கக் கூடாத பகுதிக்கு இசைவு தரவேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் அத்தகைய செயலை ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்று விவரித்துஇராணுவ நடவடிக்கையைநிராகரிக்கிறது. இது ஒரு வெளிப்படையான மோசடித்தனம் ஆகும். ஏனெனில் பறக்கக்கூடாத பகுதியைச் சுமத்துவது என்பது லிபிய விமானப் பாதுகாப்புத் தளங்கள் பிற நிலையங்களைத் தாக்குவது, அதாவது போர்ச் செயல் என ஆகும் என்பதை அனைவரும் அறிவர்.

இந்த முடிவில் தொடர்புடைய அனைத்து 21 ஆட்சிகளும் வலதுசாரிச் சர்வாதிகாரங்கள் ஆகும். அவை தன் மக்களாலேயே வெறுக்கப்படுகின்றன. அவை கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு ஆளுகின்றன. தங்கள் சொந்த பிற்போக்குத்தனக் காரணங்களுக்காகத்தான் அவை இராணுவத் தலையீடு என்னும் ஏகாதிபத்திய அழுத்தத்தின் பேரில் நடவடிக்கைக்கு கையெழுத்திட்டுள்ளனர். முதலில், அவர்கள் தங்கள் ஆட்சிக்கு அமெரிக்கா மற்றும் பிற சக்திகளின் ஆதரவை உறுதிப்படுத்த முயல்கின்றன. ஏனெனில் கீழிருந்து பெருகிய அச்சுறுத்தல் வந்துள்ளது. இரண்டாவதாக, அவை அனைத்தும் தங்கள் பிராந்திய நலன்களை மேம்படுத்துவதற்காக கடாபிக்கு எதிராக அமெரிக்காவிற்குப் பின் வரிசையில் நிற்கின்றன.

பெரும்பாலான எதிர்ப்புத் தேசிய மாற்றுக்கால சபை உறுப்பினர்கள் சில வாரங்கள் முன்புதான் கடாபி ஆட்சியின் பகுதியினராக இருந்தனர். இவர்கள் கூடுதலான, புறம்பான முறையில் மேற்கிற்கு தாங்கள் கடாபி பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்த இலாபகரமான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை நிலைநிறுத்துவதாகவும்  உறுதியளித்துள்ளனர்.

22 அரபு லீக் நாடுகளில் குறைந்தபட்சம் 13, லிபியாவையும் தவிர, கடந்த இரு மாதங்களாக எதிர்ப்புத் தெரிவிக்கும் தங்கள் மக்களையே தாக்குகின்றன, கைது செய்கின்றன, கொலை செய்கின்றன மற்றும் காயப்படுத்துகின்றன. இப்பட்டியலில் அல்ஜீரியா, பஹ்ரைன் (ஞாயிறன்று கூட்டங்கள் மீது ரப்பர் தோட்டாங்களையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியது), சௌதி அரேபியா (மாபெரும் பொலிஸ் பிரசன்னம், முன்கூட்டிய கைதுகள் ஆகியவற்றைக் கையாண்டு வெள்ளியன்று எதிர்ப்புக்களைத் தடுத்துவிட்டது), சூடான், துனிசியா மற்றும் யேமன் ஆகியவையும் அடங்கும். யேமன் நாட்டின் பிரதிநிதி லிபியக் குடிமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பெயரில் ஏகாதிபத்தியக் தலையீட்டிற்கு வாக்களித்தது, ஆனால் அவருடைய அரசாங்கமோ உண்மையான தோட்டாங்களை யேமனியத் தலைநகரான சானாவில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொல்லவும், காயப்படுத்தவும் உபயோகித்தது.

ஓமனின் சுல்தான் கபூஸ் பின் செய்தின் வெளியுறவு மந்திரி யூசுப் பின் அலவி பின் அப்துல்லா கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் முடிவை அறிவித்தார். Der Spiegel ஏட்டிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், அரபு லீக்கின் தலைமைச் செயலர் அம்ர் மௌசாஎப்படி, யார் இப்பகுதியைச் சுமத்துவர்என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். இது நேட்டோ மற்றும் அமெரிக்காவிற்குத் தடையற்ற சுதந்திரம் கொடுக்கும் என்ற அவர், “அதுவும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்என்றார்.

அரபு லீக்கும் ஒரு பங்கைக் கொள்ளும். அதைத்தான் நான் பரிந்துரைப்பேன்என்று மௌசா மேலும் கூறினார். அரபு ஆட்சிகள் பறக்கக் கூடாத பகுதி மற்ற இராணுவ நடவடிக்கைகளில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று மேலைத்தேய அரசாங்கங்கள் கோரிய அறிக்கைகளுக்கு இணங்க உள்ளது.

லிபியத் தலையீட்டைப் பயன்படுத்தி எகிப்து இன்னும் பிற அரபு நாடுகளின் இராணுவங்களை நெருக்கமாக ஒருங்கிணைத்து அவற்றின் வலிமைக்கு ஊக்கம் கொடுத்து அரபியத் தொழிலாளர் வர்க்கத்துடன் தவிர்க்க முடியாத மோதலுக்கு முன் உறுதியாக இருக்க வேண்டும் என்னும் அமெரிக்கத் திட்டங்களைத்தான் இது தெரிவிக்கிறது.

முபாரக்கின் நீண்டகாலச் செயலராக மௌசா இருந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். அவருடைய வெளியுறவு மந்திரியாக 1991ல் இருந்து 2001 வரையில் இருந்தார் என்பதுடன், அதற்குப் பின் மற்ற முக்கிய ராஜதந்திரப் பதவிகளையும் வகித்துள்ளார்.

இதற்கிடையில் ஒபாமா நிர்வாகம் பெங்காசியிலுள்ள தேசிய மாற்றுக்கால சபையை லிபியாவின் நெறியான அரசாங்கம் என அங்கீகரிக்க நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அரச செயலர் கிளின்டன் இன்று மஹ்மூத் ஜிப்ரிலைச் சந்திக்க உள்ளார். அவர்தான் எதிர்ப்புச் சபைக்கு வெளியுறவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று பாரிசில் உள்ளார். ஜிப்ரில் கடந்த வியாழனன்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் வரவேற்கப்பட்டு பேச்சுக்களை நடத்தினார்.

இந்த வாரம் எகிப்திற்கும் துனிசியாவிற்கும் செல்லும்போது லிபிய எதிர்ப்பினரையும் தான் சந்திக்க இருப்பதாகக் கிளின்டன் கூறினார். வெள்ளியன்று, அமெரிக்கா எதிர்ப்புத் தலைமையுடன் பேசுவதற்கு ஒரு சிறப்புத் தூதரை நியமிக்க உள்ளதாக ஒபாமா அறிவித்தார்.

ஜிப்ரிலும் சில வாரங்களுக்கு முன் எதிர்ப்பிற்கு மாறிவிட்ட அமெரிக்காவிற்கான லிபியத் தூதரான அலி ஔஜலியும் வெள்ளியன்று அமெரிக்க நிதித்துறையால் வரவேற்கப்பட்டனர். புதிய அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுள்ள லிபியச் சொத்துக்கள் பற்றி அவர்கள் விவாதித்தனர். அருகிலுள்ள கிழக்கு விவகாரங்களுக்கான அரச அலுவலகத்தில் உதவி அரச செயலர் ஜேப்ரி பெல்ட்மனையும் அவர்கள் சந்தித்தனர்.

எங்கள் முக்கிய முன்னுரிமை ஒரு பறக்கக்கூடாத பகுதியாகும்என்று ஔஜலி கூறினார்.

வெள்ளியன்று ஐரோப்பிய வெளியுறவுக் குழுவின் மாட்ரிட் அலுவலகத்தில் தலைவர் ஜோஸ் இக்நேசியோ டோரபிளாங்காவை மேற்கோளிட்டு, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சீனா மற்றும் ரஷியா ஐ.நா.பாதுகாப்பு சபை பறக்கக் கூடாத பகுதிக்கு ஒப்புதல் கொடுக்கும் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான மூலோபாயங்கள் பற்றிப் பேசுவதாகத் தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகள் பிரான்ஸுடன் சேர்ந்தால் -- டோரபிளாங்கா அதைத்தான் எதிர்பார்க்கிறார்எழுச்சித் தலைவர்கள் நேரடியாக பறக்கக்கூடாத பகுதிக்கான வேண்டுகோளை அனுமதிப்பதற்கான உத்வேகம் ஏற்பட்டுவிடும். இது நேட்டோ மற்றும் பாதுகாப்பு சபையின் பணியை எளிதாக்கிவிடும்என்று ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது. “பெங்காசி அதிகாரிகள் கூடுதல் அங்கீகாரம் பெற்று, நேரடியாக பறக்கக் கூடாத பகுதியை வேண்டினால், சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்று டோரபிளாங்கா கூறினார்.”

எப்படிப் பார்த்தாலும், அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆனது ஐ.நா. ஒப்புதல் இல்லாமலேயே பறக்கக்கூடாத பகுதித் திட்டத்தைச் செயல்படுத்தும். இப்பிராந்தியத்தில் ஆதரவு உள்ளதற்கு அரபு நாடுகளில் ஒப்புதலை மேற்கோளிடும். உண்மையில் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பொதுமக்களிடையே அமெரிக்கத் தலையீட்டிற்கு பெரும் எதிர்ப்புத்தான் உள்ளது.

ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட் எகிப்தியர்களும் லிபியர்களும் அரபு லீக்கின் தலைமையகத்திற்கு முன்பு கெய்ரோவிலுள்ள தஹ்ரிர்  சதுக்கத்தில் கடாபி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்ததைக் குறிப்பிட்டுள்ளது. லிபியச் சர்வாதிகாரிஇனவெறிபிடித்த கொலைகாரர்என்று விவரித்த அடையாள அட்டைகளை எதிர்ப்பாளர்கள் எடுத்துச் சென்றனர் என்று போஸ்ட் எழுதியது.

ஆனால் அவர்கள் மோதலில் மேலைத்தேய இராணுவத் தொடர்பிற்கான திறன் உள்ளது பற்றிய எச்சரிக்கை உணர்வையும் வெளிப்படுத்தினர். ….’நாங்கள் ஒன்றும் அமெரிக்கத் தலையீட்டிற்கு அழைப்பு விடவில்லைஎன்று 21 வயதான மாணவர் ஒமர் மஹம்மது கூறினார்.”