சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Wisconsin’s anti-worker law: An historic attack on the working class

விஸ்கான்சனில் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம்: தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு வரலாற்று தாக்குதல்

11 March 2011
Tom Eley
Use this version to print | Send feedback

சுமார் 200,000 அரசுத்துறை தொழிலாளர்களின் கூட்டு பேரம்பேசும் உரிமைகளைப் பறிக்கும், கூலிகள் மற்றும் நலன்களை வெட்டும் ஒரு சட்டமசோதா விஸ்கான்சன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் பகிரங்கமான சர்வாதிகாரத்தை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பாரிய அடியாகும்.

இரகசியமான முறையில், ஓரளவிற்கு சட்டவிரோதமாகவும் கூட, சட்டஅமைப்பு சூழ்ச்சிகளுடன் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டமசோதாவை குடியரசுக் கட்சியினர் மாநில செனட்டில் நிறைவேற்றிய அடுத்தநாள், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநில செலவுகள் தொடர்பாக எவ்வித வாக்கெடுப்பும் மூன்றில் இரண்டு பங்கு தொகை அவசியம் என்பதைத் தவிர்ப்பதற்காக, செனட்டில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியினர் அதன் நிதிநிலை நடவடிக்கைகளின் சட்டங்களை பறித்தனர். அந்த சட்டமசோதாவைச் சட்டமாக்க, ஆளுநர் ஸ்காட் வால்கரினால் வெள்ளியன்று கையொப்பமிடப்படக்கூடும்.    

அதன் பல்வேறு பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், 8 சதவீத கடுமையான சம்பள வெட்டுக்கள் மற்றும் சிலவிடங்களில் 20 சதவீதமும் கூட விளைவிக்கக்கூடிய, அவர்களின் மருத்துவ நலன் மற்றும் ஓய்வூதிய நிதிகளில் தொழிலாளர்கள் தமது பங்களிப்பை இரட்டிப்பாக்க இந்த சட்டம் அவர்களை நிர்பந்திக்கும். இது, தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நலன்களின்மீது ஓர் இரக்கமற்ற தாக்குதலுக்கு உறுதியளிப்பதன் ஆரம்பம் மட்டும் தான்.    

இந்த சட்டம் எதிர்கால கூலி-வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாளர்களின் எவ்வித எதிர்ப்பையும் சட்டவிரோதமாக ஆக்கும் பல உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. பெருநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் இருக்கும் அரசுத்துறை தொழிலாளர்கள் உட்பட, ஏறத்தாழ அனைத்து அரசுத்துறை தொழிலாளர்களின் கூட்டு பேரம்பேசலுக்கு தடைவிதிப்பதற்கும் கூடுதலாக, அந்த சட்டமசோதாவில் உள்ள வழிவகைகள், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது ஒரு "அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்து" தொழிலாளர்கள் மீது பாரபட்சமின்றி துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரத்தையும் ஆளுநருக்கு வழங்குகிறது.   

''அரச வேலையாட்களை வெளியேற்றுதல்'' (“Discharge of State Employees”) என்ற தலைப்பின்கீழ் அது குறிப்பிடுவதாவது: “ஒரு பேரழிவினாலோ அல்லது ஒரு பேரழிவிற்கான தவிர்க்கமுடியாத அச்சுறுத்தலினாலோ ஓர் அவசரகால விளைவுகள் ஏற்படும் என்று ஆளுநர் கருதினால், மாநிலம் முழுவதிலுமோ அல்லது மாநிலத்தின் ஏதேனும் ஒரு பகுதியிலோ ஓர் அவசரகால நெருக்கடி நிலைக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம்.

) அவசரகால நெருக்கடி நிலையின் போது ஏதேனும் மூன்று நாட்களுக்கு எந்த பணியாளராவது வேலைக்கு வரவில்லை என்றாலோ அல்லது

) மாநில அரசு சேவைகளை அல்லது நடவடிக்கைகளுக்குத் தொந்தரவு செய்யும் வகையில் ஒரு வேலைநிறுத்தத்தில், வேலைதடுப்பில், வேலையிட போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், வேலை குறைப்பு போராட்டம், அல்லது ஏனைய ஒன்றுகூடிய நடவடிக்கைகளில் பங்குபெற்றாலோ, அவரை ஆளுநர் ஒரு நியமிக்கப்பட்ட அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக, வேலையிலிருந்து நீக்கலாம்.”

அமெரிக்காவில் வர்க்க சமரசத்தின் சகாப்தம் முற்றுமுதலாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கு இந்த வரிகள் இன்னொரு சமிக்ஞையாக உள்ளது. ஆளும் அடுக்குகள், தொழிலாள வர்க்கத்தை மிகவும் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டிய அந்த பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு திருப்ப முயல்கின்றன.

ஒரு குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வேலைகள் மற்றும் தொழிற்துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொழிற்சாலையில் சட்டபூர்வமான தொழிற்சங்கங்களை ஸ்தாபிக்கவும், தனிமைபடுத்தப்பட்ட தனிநபர்களாக இல்லாமல் கூட்டாக தொழில்வழங்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையை பாதுகாக்கவும் நடத்தப்பட்ட போராட்டம், 60 ஆண்டு காலக்கட்டம் எடுத்தது என்பதுடன், மிகவும் கசப்பான மற்றும் இரத்தந்தோய்ந்த வேலைநிறுத்தங்களையும் உள்ளடக்கி இருந்தன.  

1877இன் பிரமாண்டமான இரயில்வே போராட்டம் வெடித்ததில் இருந்து, 1937இன் பிளிண்ட் உள்ளிருப்பு போராட்டங்கள் வரையில், உலகின் மிக சக்திவாய்ந்த சில பெருநிறுவனங்களோடு இணங்காமல், தொழிலாளர்களின் போராட்டங்கள் பெரும்பாலும் ஒரு போர்குணமிக்க குணத்தைக் கொண்டிருந்தன. இவற்றில் சிலவற்றைப் பெயரிட்டுக் காட்ட வேண்டுமானால், புல்மேன், ஹோம்ஸ்டீட், லாரன்ஸ், மற்றும் 1919இன் பிரமாண்ட எஃகுத்துறை போராட்டம் போன்றவற்றை இதில் சேர்க்கலாம்.   

தொழிற்சங்கங்களும், வேலைநிறுத்தங்களும் சட்டவிரோதமாக தொழிலாளர்கள் "ஒன்றுகூடுவதாகும்" என்று அறிவித்து, தடை உத்தரவாணைகளால் அரசாங்கம் ஆட்சி செய்தது. இது தோல்வியடைந்தபோது, காட்டுமிராண்டித்தனமான வன்முறை  ஏற்புடைய அணுகுமுறையாக இருந்தது. தொழிலாள வர்க்க தலைவர்கள் வழக்கமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள், தூக்கிலிடப்பட்டார்கள், அல்லது அடித்து நொறுக்கப்பட்டார்கள் மற்றும் விசாரணையின்றி கொல்லப்பட்டார்கள். பின்கெர்டன்களின் கைகளிலும், கருங்காலிகளாலும், கைத்தடிகள், பொலிஸ் மற்றும் அரசு இராணுவத்தாலும் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். தொழிற்சங்கமயமாதலுக்கான போராட்டம், அமெரிக்காவில் இருந்த அளவிற்கு உலகில் வேறெங்கும் அந்தளவிற்கு கொடூரமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இருக்கவில்லை.    

இறுதியாக 1930களில், சான்பிரான்சிஸ்கோ, மினியாபொலிஸ் மற்றும் டொலிடோவில் 1934இல் நடந்த பிரமாண்டமான பொது வேலைநிறுத்தங்களுடன், குறிப்பாக 1936 மற்றும் 1937இல் பிளிண்டில் நடந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்துடன், தொழிற்சங்கங்களை சட்டபூர்வமாக்குவது மற்றும் கூட்டு பேரம்பேசுவதற்கான கோட்பாடு ஸ்தாபிக்கப்பட்டது. அவற்றுடன் பெருநிறுவனங்களின் கொடூரமான வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

AFL மற்றும் CIO அதிகாரத்துவங்களாலும், அவற்றின் நவீன கூட்டு பேரம்பேசல் தத்துவத்தால் முன்கூட்டியே பார்க்கப்பட்ட, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்ட விரிவாக்கம் பல தசாப்தங்களுக்கு வர்க்க சமரசத்திற்கான அடித்தளத்தை அமைத்தளித்தது. பெருநிறுவனங்களால் மற்றும் அரசால் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு கைமாறாக, தொழிலாளர்கள் எவ்வித அடிப்படை சமூக மாற்றத்திற்கான கருத்தையும் கைவிட வேண்டி இருந்தது. 1947 டாஃப்ட்-ஹார்ட்லி சட்டமும், தொழிற்சங்கங்களின் கம்யூனிச-எதிர்ப்பு களையெடுப்பும் ஒரு சாந்தமான தொழிலாளர் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்தியது. அது அமெரிக்க முதலாளித்துவத்தின் இலாபத்தைப் பாதுகாப்பதை அதன் வழிகாட்டு கோட்பாடாக ஏற்றுக்கொண்டிருந்தது.   

இந்த முன்னோக்கு நீண்டகாலத்திற்கு நிலைக்கவில்லை. 1970கள் மற்றும் 1980களின் வாக்கில், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அதனோடு சேர்ந்து அதன் போட்டியாளர்களின் விரைவான வீழ்ச்சியுடன், ஆளும் வர்க்கம் தொழிலாளர்களுக்கு எதிரான ஓர் இரக்கமற்ற தாக்குதலை தொடர்ந்தது. முதலாளித்துவத்துடன் சேர்ந்து AFL-CIO செய்து கொண்ட உடன்படிக்கை இந்த தாக்குதலில் அதன் ஆக்கபூர்வமான பங்களிப்பை எடுத்துக்காட்டியது. விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் 1981 பட்கோ வேலைநிறுத்தத்தை ரேகன் நசுக்கியதிலிருந்து தொடங்கி, பெல்ப்ஸ் டோட்ஜ், கிரேஹாண்ட், ஹார்மெல் மற்றும் AT மேசெ, இன்னும் ஏனையவை உட்பட, வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தவும், திணறடிக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவம் நனவுபூர்வமாக செயல்பட்டது

1990களில் இருந்து இன்றுவரையில், அமெரிக்க தொழிற்துறை களத்திலிருந்து தோற்றப்பாட்டளவில் வேலைநிறுத்தங்கள் காணாமல் போகும் ஒரு வரலாற்றுரீதியிலான முன்நிகழ்ந்திராத நிலைமை, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளால் விளைந்தது. வர்க்கப் போராட்டத்தின் பகிரங்கமான வீழ்ச்சி, செயற்கையாக ஒடுக்கப்பட்டமை சமத்துவமின்மையின் எழுச்சியோடு ஒரேகாலத்தில் நிகழ்ந்த்து. அதேவேளையில் அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம் தொழிற்துறை அழிப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மூலமாக பெரும் செல்வவளத்தை திரட்டிக் கொண்டது.   

விஸ்கான்சனில் அரசு தொழிலாளர்கள் மீதான மற்றும் அவர்களின் கடுமையான எதிர்பின் மீதான இந்த தாக்குதல், இந்த நிகழ்ச்சிப்போக்கு ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதை காட்டுகிறது.

சர்வாதிகார அணுகுமுறைகளை நோக்கிய இந்த திருப்பம், முக்கியமாக வால்கரின் தனிப்பட்ட குணங்களிலிருந்தோ அல்லது அந்த விஷயத்தில் குடியரசு கட்சியிலிருந்தோ  எழவில்லை. மாறாக, வர்க்கங்களுக்கு இடையில் சமரசத்தின் அனைத்து அடித்தளத்தையும்  இல்லாதொழித்திருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் முதிர்ந்த நெருக்கடியிலிருந்து எழுந்துள்ளது. 2008இல் வெடித்த நெருக்கடி, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலையொட்டி தீவிரமடைந்த ஜனநாயக உரிமைகளின் அழிப்பை தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலோடு இணைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது விஸ்கான்சன் சட்டமசோதாவின் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் இரண்டிலுமே தெளிவாக உள்ளது: தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டம், ஜனநாயகத்திற்கு எதிரான மிக மோசமான வழியில் மட்டும் தான் கொண்டு வரப்பட்டிருக்க முடியும்.

இந்த தாக்குதலுக்கு முன்னால், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஓர் இடைஞ்சலாக மட்டுமே இருக்கின்றன. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னால் வால்கர் இந்த சட்டமசோதாவை முன்மொழிந்ததிலிருந்தே, அவர்கள் தொழிலாளர்களின் நிதியியல் விட்டுகொடுப்புகளைக் கோரிய அதன் அனைத்து முறையீடுகளுக்கும் ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் தொழிற்சங்க உறுப்பினர் கட்டணம் வசூலிப்பதன் மீதான சட்டவரைவை தவிர்ப்பதே அவர்களின் ஒட்டுமொத்த மூலோபாயமாக இருந்தது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சங்கங்கள் நடைமுறையில் கூட்டு பேரம்பேசலை கைவிட்டுவிட்டு, அவர்களின் நிதியியல் ஆதாரங்களுக்காக, கூட்டு பேரம்பேசலின் சட்டரீதியான கட்டுக்கதைகளை தக்கவைக்க விரும்பின.   

தொழிற்சங்கங்களின் கையாலாகாதனமான, கோழைத்தனமான மூலோபாயம், ஜனநாயக கட்சியுடனான அவர்களின் ஆதரவுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி காட்டும் தாக்குதல்களும், கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் ஏனைய மாநிலங்களில் வால்கரின் வரவு-செலவு திட்ட அறிக்கை கொண்டிருப்பதைவிட குறைந்தவிடவில்லை. ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினரை பொறுத்த வரையில், அவர்களும் சமூக சேவைகளில் பில்லியன் கணக்கான வெட்டுக்களைச் செய்வதில் குடியரசு கட்சியினருடன் சேர்ந்தே வேலை செய்து வருகிறார்கள்.

அனைத்து அரசுதுறை தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலுக்கு ஒருவிதமான பிரதிபலிபாக ஏற்கனவே வெற்றிகரமாக பரந்த ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு கோரிக்கையாகவுள்ள ஒரு பொதுவேலை நிறுத்தம் அவசியப்படுகிறது. வால்கருக்கு எதிரான துணிச்சலான எதிர்ப்பு, தனியார்துறையிலும் வக்கிரமான கூலி மற்றும் நலன் வெட்டுக்களுக்கு ஆளாகிவரும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திடமிருந்தும் ஆதரவை வென்றெடுக்கும். அது வால்கரால் முன்மொழியப்பட்டிருக்கும் இரண்டு வருட வரவு-செலவு திட்டத்தாலும், கல்வி மற்றும் மருத்துவ நலன் வெட்டுக்களாலும் சூறையாடப்பட்டுள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் வால்கரின் சட்டமசோதாவை எதிர்ப்பதையும் விட இத்தகைய நடவடிக்கைகளையே அதிகமாக எதிர்க்கிறது. புதனன்று இரவு இந்த சட்டவரைவு செனட்டில் கொண்டு வரப்பட்ட உடனேயே, விஸ்கான்சனிலுள்ள இரண்டு மிகப்பெரிய பொதுத்துறை சங்கங்களின் தலைவர்களும், மேரி பெல் (விஸ்கான்சின் கல்வி கூட்டமைப்பு கழகம்), மற்றும் மார்ட்டி பெயில் (விஸ்கான்சின் மாநில தொழிலாளர்கள் சங்கம்), இந்த சட்டமசோதாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததுடன், வேலைநிறுத்தம் செய்ய வேண்டாமெனவும் அவர்கள் தொழிலாளர்களை கேட்டுக் கொண்டார்கள். “விஸ்கான்சன் கல்வியாளர்கள் நாளைக்கு வேலைக்கு வரும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று பெல் அறிவித்தார். இதுவொன்று தான் அவருடைய சிறிய குறிப்புகளில் அவர் கூறிய ஒரே முறையீடாக இருந்தது. பெரும் எண்ணிக்கையில் பாடசாலைகள் நிறைந்த மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களான மில்வாகி மற்றும் மாடிசனில் ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தாலும் வேலைநிறுத்தம் வேண்டாம் என்ற உத்தரவே திரும்ப திரும்ப வலியுறுத்தப்பட்டது. அந்த இரண்டு நகரங்களிலும் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக வளாகங்களின் ஆசிரிய உதவியாளர்களின் தொழிற்சங்கங்களும், ஒரு வேலைநிறுத்தம் பற்றி வாக்கெடுப்பை நடத்தும் திட்டங்கள் எதுவும் தங்களுக்கு இல்லை என்று அறிவித்தன

பெயில் கூறியதைக் கூறியதன்படி, எட்டு குடியரசு செனட்டர்களை மாற்றி ஜனநாயக கட்சியினரை அமர்த்தும் மறு முயற்சிகளுக்கு" ஆதரவளிப்பது தான் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே கருவியாக உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. சட்டமன்றத்தில் இருக்கும் விரல்விட்ட எண்ணக்கூடிய குடியரசுக் கட்சியினரை நீக்க அது வேலை செய்தாலும் கூட, இந்த சூழ்ச்சி ஜனநாயகக் கட்சியினரும் ஆதரிக்கும் அந்த கொடூரமான மாநில வரவு-செலவு திட்டத்தையோ அல்லது கூலி வெட்டுக்களையோ திரும்பப்பெறுவதற்கு எந்த வழியும் இல்லை. ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறிய விஷயம் உட்பட, இந்த சூழ்ச்சியின் நிஜமான நோக்கம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் போர்குணத்தைத் தணிப்பதேயாகும்.  

தொழிற்சங்கங்கள், ஜனநாயக கட்சி மற்றும் அவர்களின் கூட்டணிகளின் கைகளிலிருந்து விஸ்கான்சின் போராட்டங்களின் தலைமையைப் பறிக்க வேண்டியது மிக்க அவசியமாகும். ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பைக் கொண்டு செல்லவும், மற்றும் அதற்கான தயாரிப்புகளில் இறங்கவும் வேலையிடங்களில் சுயாதீனமான தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். வால்கரை நீக்குவதும், அவருடைய முன்மொழிவுகளின் ஒவ்வொன்றையும் நிராகரிப்பதுமே இத்தகைய போராட்டத்தின் நோக்கமாகும்.

விஸ்கான்சன் சம்பவங்கள் சமூக அமைப்பின்மீது அடிப்படை கேள்வியை முன்னிறுத்துகிறது. அதாவது, பொருளாதாரம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிர்வகிக்கப்படுமா? அல்லது தனிமனிதர்கள் செழிப்பதற்காக நிதியியல் பிரபுத்துவத்தின் இரக்கமற்ற தூண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதே தொடருமா மற்றும் அதைத் தொடர்ந்து தவிர்க்கமுடியாமல் சர்வாதிகாரம் தொடருமா?

தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சமூக உரிமைகளுக்காக, அதாவது நல்ல வேலைகள், தரமான கல்வி, மருத்துவ நலன்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வீட்டுவசதி போன்றவற்றிற்காக, பணக்காரர்களின் பெரும் தனிப்பட்ட வாய்ப்புகளுக்கு பயன்படும் "உரிமைகளை" நிராகரிக்கும், ஒரு புதிய அரசியல் முன்னோக்கு அவசியமாகும்

உலக சோசலிச வலைத்தளமும், சோசலிச சமத்துவ கட்சியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பும், அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொடர்ச்சியான மாநாடுகளின் ஒரு பாகமாக, The Fight for Socialism Today <http://www.fightforsocialism.org/>, ஏப்ரல் 9-10இல் மிச்சிகனில் உள்ள அன் ஆர்பரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாள வர்க்கத்திடையே எழுந்துவரும் போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னெடுக்க ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்பவும், ஒரு போராட்டத்தை ஒருங்கிணைக்கவும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடிசனிலும், அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலளார்களும், இளைஞர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இன்றே திட்டமிடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.