சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European summits: Aggressive action against Libya and European workers

ஐரோப்பிய உச்சிமாநாடுகள்: லிபிய, ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு எதிரான ஆக்கிரோஷ நடவடிக்கை

By Peter Schwarz
12 March 2011
Use this version to print | Send feedback

கடந்த சில நாட்களில் ஐரோப்பாவின் உயர்மட்டக் கூட்டங்கள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றதானது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஆழ்ந்த நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிகள் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு வியப்பை அளித்துடன், அவற்றின் வெளியுறவுக் கொள்கை கணக்கீடுகளை தகர்த்துள்ளன. அதே நேரத்தில், யூரோ நாணயச் சரிவை அச்சுறுத்தும் கடன் நெருக்கடியும் இன்னும் தீவிரமாகி உள்ளது.

இந்த இரு பிரச்சினைகளும் லிபியப் போர் மற்றும் யூரோவின் தொடரும் நெருக்கடிகடந்த இரு தினங்களில் நடந்த கூட்டங்களில் குவிப்பாக ஆயிற்று. ஐரோப்பிய ஒன்றியம் பெருகிய ஆக்கிரோஷமான முறையில் இரு போக்குகளுக்கும் விடையிறுத்துக் கொண்டிருக்கிறது.

வியாழனன்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்து லிபியாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் பற்றி முடிவெடுத்தனர். அதே நேரத்தில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் கூட்டங்களும் நடந்தன. வெள்ளியன்று 27 ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத் தலைவர்கள் லிபியா பற்றிய ஒரு சிறப்பு உச்சிமாநாட்டிற்காகக் கூடினர். அதன்பின் அவர்களுள் 17 பேர் யூரோ நாணயம் பற்றிய உச்சிமாநாடு ஒன்றில் கூடி இரு வாரங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் ஒப்புதல் பெறுவதற்கு ஒரு மீட்புப் பொதிக்கான திட்டங்களை ஏற்றனர்.

27 ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் லிபியச் சர்வாதிகாரி முயம்மர் கடாபி உடனடியாக இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரினர், ஒரு இராணுவத் தலையீடு இல்லை என்று ஒதுக்கவும் இல்லை. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் ஏற்கனவே லிபிய ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுதல், லிபிய மத்திய வங்கி மற்றும் பிற நிதிய நிறுவனங்களுக்கு பணப்பாய்தலைத் தடுத்துவிடுவது ஆகியவற்றை முடுக்குவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் லிபியக் கடலோரப் பகுதியை ஒட்டி இராணுவக் கண்காணிப்புக்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

யூரோ உச்சிமாநாட்டில் பங்கு பெற்ற 17 நாடுகள்போட்டித்தன்மை ஒப்பந்தம்ஒன்றிற்கு ஒப்புக் கொண்டனர். இது ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வரிகளை ஐரோப்பா முழுவதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் கடன் நெருக்கடியைத் தள்ளி அதற்குத் தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

லிபியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்கள்

துனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் நடைபெற்ற கலகங்கள் ஐரோப்பிய சக்திகளுக்கு நேரடி விளைவுகளைக் கொண்டுள்ளன. 1995ல் ஆரம்பித்தபார்சிலோனா வழிவகைஎன அழைக்கப்பட்டது தொடங்கி, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார, அரசியல் உறவுகளை ஐரோப்பிய ஒன்றியம் வளர்த்துள்ளன.

குறிப்பாக அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மத்தியதரைக் கடல் ஒன்றியத்தை கட்டமைப்பதை தன் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய திட்டமாகக் கருதுகிறார். இது பிரெஞ்சுத் தலைமையின் கீழ் அனைத்து மத்தியதரைக் கடலோரப் பகுதி அரசுகளையும் ஐக்கியப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு புற விரிவாக்கத்திற்கு ஒரு மாற்றுக் கனமாக இருக்க வேண்டும் என்பதோடு, அது ஜேர்மனி அதிகம் நலன் அடைந்துள்ளது என்ற பார்வையைக் கொண்டது ஆகும். ‘உலகில் பிரான்ஸினதும் ஐரோப்பாவினதும் செல்வாக்கிற்காக மத்தியதரைக் கடலின் இரு கரைகளையும் ஒன்றுசேர்ப்பது மைய முக்கியமாக இருக்கிறதுஎன்று 2008 இல் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தபோது முன்னாள் வெளிவிவகார மந்திரி Herve de Charette கூறினார்.

துனிசியாவில் பென் அலி ஆட்சி, எகிப்தில் முபாரக்கின் ஆட்சி ஆகியவை அகற்றப்பட்டது, மற்றும் அல்ஜீரியா, மொரோக்கோ, மத்திய கிழக்கில் அதிக புரட்சிகள் வெடிக்கும் ஆபத்து ஆகியவை இத்திட்டத்தை வினாவிற்கு உட்படுத்திவிட்டன. லிபியாவிற்கு எதிரான ஆக்கிரோஷ நடவடிக்கைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் அப்பிராந்தியத்தில் தன் நலன்களைப் பாதுகாக்க முயல்கிறது. தலையீட்டிற்கான கோரிக்கைகுடிமக்களைக் காத்தல் அல்லது பிறமனிதாபிமானஇலக்குகளுடன் அதிக தொடர்பு கொண்டவை அல்ல. ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் மீதான போர்களில் அவை எப்படி இல்லையோ அவைபோல்தான் இங்கும்.

பிரஸ்ஸல்ஸ் மற்றும் வாஷிங்டனை நம்பியுள்ள அரசாங்கத்தை லிபியாவில் நிறுவுதல் என்பது மேற்கத்திய பெருநிறுவனங்கள் அனைத்திற்கும் லிபிய எண்ணெய் பெரும் இலாபத்துடன் அடையப்படுவதவற்கு உதவும். அண்டை நாடுகளில் ஏற்படக்கூடிய புரட்சிகளை தடுத்து நிறுத்த லிபியா இராணுவ இணைப்பாக சேவை செய்வதன் மூலம் உதவமுடியும்.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி குறிப்பிடத்தக்க வகையில் ஆக்கிரோஷ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன் அவர் கிழக்கு லிபியாவிலுள்ள பெங்காசியில் இருக்கும் தேசிய மாற்றுக்கால சபையின் இரு பிரதிநிதிகளை வரவேற்று அழைத்துப் பேசினார். அவர்களை உத்தியோகபூர்வ லிபிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என அங்கீகாரம் கொடுத்து, கடாபி ஆட்சியை வான்வழித் தாக்குதல்கள் மூலம் அச்சுறுத்துவோம் என்றும் கூறினார். அரசாங்க சார்பு Le Figaro நாளேட்டின்படி, தன்னுடை வெளியுறவு மந்திரியைக் கூட இந்த முடிவெடுப்பதற்கு முன் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை.

சார்க்கோசியின் முன்முயற்சி லண்டனில் சிறிது ஆதரவைக் கண்டுள்ளபோது, மற்ற ஐரோப்பியத் தலைநகரங்களில், குறிப்பாகப் பேர்னிலில், அது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் அடிப்படையில் இராணுவத் தலையீட்டிற்கு எதிர்ப்புக்களைக் கொள்ளவில்லை. ஆனால் வட ஆபிரிக்காவில், பேர்னில் பிரான்ஸுக்கு ஒரு பங்காளி என்பது மட்டும் இல்லாமல், ஒரு போட்டியாளரும் கூட, இதையொட்டி தந்திரோபாய அழுத்தங்கள் வளர்தல் தவிர்க்க முடியாதது ஆகும்.

லிபியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் கொண்டுவருவதற்கு அதிக ஒலி எழுப்பியது பேர்லின்தான். ஆனால் மிக வெளிப்படையான தலையீடு லிபியாவிலும் மற்ற அண்டை நாடுகளிலும் உள்ள தீவிரச் சக்திகளுக்கு வலிமை கொடுத்துவிடும், அவற்றில் ஜேர்மனி ஏற்கனவே நெருக்கமான உறவுகளை அகற்றப்பட்ட ஆட்சியாளர்களிடம் கொண்டுள்ளது என்ற அச்சத்தைக் கொண்டுள்ளது. எனவே ஜேர்மனிய அரசாங்கம் இந்தக் கட்டத்தில் இராணுவத் தலையீடு ஐ.நா. மற்றும் அரபு லீக்கின் ஒப்புதலுடன்தான் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சார்க்கோசிக்கு சில ஜேர்மனிய ஆதரவாளர்களும் உள்ளனர். அதில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ளவர்களும் இருக்கின்றனர். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் CDU உறுப்பினரான எல்மர் ப்ரோக் மற்றும் பசுமைக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான டானியல் கோன் பென்டிட்டும் தங்கள் பேட்டிகளில் லிபிய விமானம் கடலோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பல்களிலிருந்து சுட்டு வீழ்த்தப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒரு அமெரிக்க ஆய்வில் மதிப்பு கொண்டுள்ளனர். இது முழு பறக்கக் கூடாத பகுதித் தடையை விட அதிக மக்கள் தொகை உடைய கடலோரப் பகுதியின் மீது பறக்கக் கூடாத கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது எளிதில் செயல்படுத்தப்பட முடியும் என்று கூறியுள்ளது.

MEP இன் லோதர் பிஸ்கி, நீண்டகாலம் இடது கட்சியின் தொடர்ந்த தலைவராக முன்பு இருந்தவரும் இராணுவத் தலையீட்டிற்கான ஆதரவாளர்களில் ஒருவர் ஆவார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வியாழனன்று ஒரு தீர்மானத்தை அவர் அளித்தார். அதில் பறக்கக் கூடாத பகுதி பற்றிய ஒரு விதியும் அடங்கியிருந்தது.

போட்டி ஒப்பந்தம்

சார்க்கோசியின் அவசர அணுகுமுறை பைனான்சியல் டைம்ஸ் Deutschland அதைஒரு கிறுக்குத்தனமானஜனாதிபதியின்இராஜதந்திர நாசப்படுத்துதல்என்று விவரித்ததுஉள்நாட்டு அரசியல் தளங்களையும் கொண்டுள்ளது. மற்றவற்றைப் போலவே இராணுவவாதமும் ஐரோப்பாவிற்குள் இருக்கும் பெருகிய சமூக அழுத்தங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பப் பயன்படுத்தப்படுகிறது.

மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் அதிகக் கடன்பட்டுள்ள கிரேக்கம், அயர்லாந்து போன்றவற்றில் ஆணையிட்டபின், ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது ஐரோப்பா முழுவதும் படர்ந்துள்ள ஊதியங்கள், சமூக நலன்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை மையப்படுத்த முயல்கிறது.

போட்டித்தன்மைக்கான உடன்பாடு என்பதின் மையக் கருத்து யூரோ உச்சிமாநாட்டின் ஆதரவைப் பெற்றது, இரு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அளிக்கப்பட உள்ளது, ஒரு நிரந்தர யூரோநெருக்கடிக்கால பரசூட்டை நிறுவுதல் அடங்கியுள்ளது. அது வங்கிகளுக்கு பொதுப் பண உத்தரவாதம் செய்யப்படுவதற்கு உறுதியளிக்கும். அனைத்து அரசாங்கங்களும் ஓய்வூதியங்கள், ஊதியங்கள் மற்றும் வரிகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை செயல்படுத்தும் உறுதிக்கும் தள்ளுகிறது. தீர்மானகரமான சொல்லாட்சியில் இதன் பொருள் ஓய்வூதிய தகுதி வயது மிகவும் அதிகரிக்கப்படும், ஊதியங்கள் நேரடியாக உற்பத்தித் திறனுடன் பிணைக்கப்படுமே ஒழிய வாழ்க்கைச் செலவின உயர்வுகளிலல்ல.

இதேபோன்ற திட்டங்கள் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலாலும் நான்கு வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டன. அதையொட்டிக் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பின. இதற்கிடையில், அவை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் மானுவல் பாரோசாவாலும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பையினாலும் திருத்தப்பட்டன.

பேர்லின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிக நிதியளிக்கிறது என்னும் பங்கை மேர்க்கெல் பயன்படுத்தி ஜேர்மனியக் கோரிக்கைகளுக்கு கனம் கொடுக்கிறார். அதையொட்டி அவர் ஜேர்மனியின் முதலாளிகள் சங்கங்கள் மற்றும் அவருடைய கட்சியிலேயே ஒரு பிரிவிடமிருந்து அதிக கடனுக்கு உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இனியும் பண இடமாற்றலை நிராகரிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தைதான் கொண்டுள்ளார். தற்போதைய ஜேர்மனிய மாநிலத் தேர்தல்கள்ஜேர்மனியில் வரி செலுத்துபவர்மற்ற நாடுகளின் கடன்களுக்கு பொறுப்பை ஏற்கக் கூடாது என்ற வாதங்களின் மேலாதிக்கத்தைத்தான் கொண்டுள்ளன.

நிதியச் சந்தைகளும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த வலுவான அழுத்தங்களைக் கொடுக்கின்றன. யூரோ உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக, கடன் வழங்கும் அமைப்பான மூடிஸ் ஸ்பெயினின் அரசாங்கப் பத்திரங்களின் தகுதியைக் குறைத்து, இன்னும் செலவுக் குறைப்புக்கள் மீதான அழுத்தங்களை அதிகரித்தது. இது இப்பொழுது ஒரு பொதுவான வடிவமைப்பாகி விட்டது. கடந்த எட்டு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடுகளில் ஏழில் குறைந்தபட்சம் ஒரு யூரோ நாடாவது தரம் பிரிக்கும் நிறுவனங்களால் தகுதிக் குறைப்பிற்கு உட்படுத்தப்பட்டது.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய தாக்குதல்கள் அலை தவிர்க்க முடியாதவை என்பது தெளிவாகும். இங்கும் அரசாங்கங்கள் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நடைபெறும் கலகங்களின் விளைவுகள் பற்றி அச்சப்படுகின்றன. ஐரோப்பிய தொழிலாளர்களிடையே அவை ஆதரவையும் ஒற்றுமை உணர்வையும் கண்டுள்ளன என்பது மட்டுமின்றி, நாமும் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளன