தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் டோக்கியோவில் இருந்து ஒரு தகவல்12 March 2011Use this version to print | Send feedbackஉலக சோசலிச வலைத் தள வாசகர் ஒருவர் டோக்கியோவில் இருந்து நேற்று இரவு அனுப்பிய தகவல் தொகுத்தமைத்து கீழே பிரசுரிக்கப்படுகிறது. இந்தத் தீவு நாட்டிலேயே இதுகாறும் இல்லாத அளவிற்கு வலுவான நில அதிர்ச்சியால் ஜப்பான் தாக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகமான சேதம் அதைத் தொடர்ந்த சுனாமியாலே ஏற்படுத்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கைகள் இப்பொழுது வட மற்றும் தென் அமெரிக்கா பரப்பு வரை கொடுக்கப்பட்டுள்ளன, அதாவது பசிபிக் பெருங்கடல் பகுதி முழுவதிற்குமாக. வடகிழக்கு மியாகி மாநிலத்தின் கடலோரப் பகுதியை ஒட்டி பிற்பகல் 2.46 க்கு நில அதிர்வு தாக்கியது. இதன் தாக்கம் பிரதான தீவான ஹொன்ஷு மற்றும் வடக்குத் தீவான ஹொக்கைடோ முழுவதும் வலுவாக உணரப்பட்டது. குறிப்பாக ஐவேட் மற்றும் புகுஷிமா மாநிலங்களில். தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே 91 இறப்புக்கள் நில அதிர்வு அல்லது சுனாமியினால் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட பல விபத்துக்களை ஒட்டி உறுதிபடுத்தப்பட்டன. இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சுனாமி பாதிப்பிற்குட்பட்ட சென்டையில் மட்டும் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் ஆலைகளும் தீப்பற்றி எரிந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன. சில அணு உலை சக்தி நிலையங்களும் சரிவுற்றன என்று தகவல்கள் வந்துள்ளன. இதையொட்டி கதிரியக்க வெளிப்பாடுகளும் வந்திருக்கக்கூடும் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்களும் வந்துள்ளன. பின்னதிர்வுகள் இன்னும் நடைபெறுகின்றன. அவை கணக்கில் அடங்காதவையாக இருக்கின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, இருள் சூழப் போகும் நேரம் நில அதிர்வின் மையப் பகுதிக்கு அருகேயுள்ள மாநிலத்தில் வாழும் மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து மின்சாரம், எரிவாயு, தொலைபேசிகள் ஏதும் இல்லாமல் அவர்கள் துண்டிக்கப்பட்டிருப்பதுடன் தலைநகரத்திலுள்ள எங்களுக்கும் எத்தகவல்களும் வருவதற்கு இல்லை. பெரும்பாலான மக்கள் இரவில் தங்கள் ஆதாரங்களை நம்பி மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. இதைத்தவிர அப்பகுதி முழுவதும் பனிப்பொழிவு வேறு உள்ளது. தலைநகரைப் பொறுத்தவரை, டோக்கியோவில் மில்லியன் கணக்கான வீடுகள் மின்சாரம், எரிவாயு பாதிப்புக்களினால் இருட்டிலுள்ளன. ஜப்பான் இரயில்வே கிழக்கு என்னும் மிகப் பெரிய இரயில் நிறுவனத்தின் அனைத்து இரயில் பணிகளும் குறைந்தபட்சம் சனிக்கிழமை காலை வரையிலேனும் நிறுத்தப்பட்டவிட்டன. தண்டவாளங்கள் தகுதியாக உள்ளனவா என்னும் பாதுகாப்பு ஆய்வுகளைச் செய்வதற்கு இந்த நடவடிக்கை உள்ளது. இந்தத் தகவல் எழுதப்படும் நேரத்தில் சில மெட்ரோ இரயில்கள் இரவு 9 மணியை ஒட்டிப் பணிகளை தொடங்கிவிட்டன என்ற தகவல்கள் வந்தாலும், ஐயத்திற்கு இடமின்றி மில்லியன் கணக்கான பயணிகள் டோக்கியோ மையப் பகுதியில் வீடு திரும்ப வழிவகை இல்லாமல், குளிரில் இருந்து பாதுகாப்பும் இல்லாமல் திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரயில்களும் ஓரளவு பஸ் பணிகளும் நான்கு அல்லது ஐந்துமணி நேரத்திற்கும் மேலாக வரிசைகளில் நிற்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. கைபேசி சேவைகள் செயல்படவில்லை. எனவே காலை வரை பலரும் தங்கள் நடவடிக்கைகள் பற்றியும் பாதுகாப்புப் பற்றியும் குடும்பத்திற்குத் தெரிவித்து உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மைல்கள் தூரத்திற்கு பஸ்கள் மற்றும் நடப்பவர்களும் நெரிசலில் சிக்கியுள்ள போக்குவரத்து நிறுத்தல்களும் செய்தி சேகரிக்கும் ஹெலிகாப்டர்களில் இருந்து எடுப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றன. எங்கும் தீயணைப்பு வண்டிகள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளின் அவசர ஒலிகள் முழங்குகின்றன. கட்டமைப்புக்களுக்கும் கட்டிடங்களுக்கும் பலத்த சேதங்கள் காணப்பட முடிகிறது. டோக்கியோ டவர் என்னும் பிரசித்தி பெற்ற கட்டிடம் வளைந்துள்ளது. பல வலைத் தள பக்கங்கள் பார்க்கப்பட முடியாமலுள்ளது. ஏனெனில் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் பார்க்க முயன்றுவருகின்றனர். இரவு சூழ்கையில், சேதங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன. செலவினத் திறனுக்கு ஏற்ப, மற்றும் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு ஏற்ப அவை இருக்குமா என்றும் விவாதங்கள் உள்ளன. மிகக் கடுமையாக பாதிப்பிற்கு உட்படக்கூடியவர்கள் தொழிலாளர்கள், நேரடியாக சொத்து, வேலை இழப்புக்கள் மூலமாக அல்லது மறைமுகமாக உயரும் விலைகள் மற்றும் கிடைக்கக்கூடிய பொருட்கள் குறைவதாலும், உள்ளூர்க் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதத்தாலும். இவை பொதுச் செலவில் பழுது பார்க்கப்படும். அதையொட்டி மற்ற பிரிவுகளில் செலவுக் குறைப்பும் ஏற்படும். |
|
|