WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
பிரான்சில் தேசிய
முன்னணிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கிற்கு பின்னணியில் என்ன இருக்கிறது?
9 March 2011
Peter Schwarz
பிரான்சில்
நவ-பாசிச
தேசிய முன்னணி,
முதல்முறையாக,
ஜனாதிபதி தேர்தல்
மீது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தேர்தல் அடுத்த
ஆண்டு நடைபெற உள்ளது.
ஹேரிஸ்
கருத்துக்கணிப்பு நிறுவனத்தால்,
Le Parisien
பத்திரிகையின் சார்பில்
1,618
நபர்களிடம் நடத்தப்பட்ட ஓர்
இணைய கருத்துக்கணிப்பில்,
அவர்கள் அடுத்த
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று
கேட்கப்பட்டது.
அதில்
இருபத்திமூன்று சதவீதத்தினர்,
தேசிய முன்னணி
தலைவர் மரீன் லு பென்னுக்கு அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
தற்போதைய பிரெஞ்சு
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும்,
சோசலிஸ்ட் கட்சி
தலைவர் மார்டீன் ஒப்றியும்,
வெறுமனே தலா
21
சதவீத ஆதரவைப் பெற்றனர்.
2002
ஜனாதிபதி தேர்தலின்
இரண்டாவது சுற்றில் தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் ஜோன் மரி லு பென்
பெற்றிருந்த எண்ணிக்கையான கணிசமாக
17
சதவீதத்திற்கும் அதிகமாக
மரீன் லு பென் பெற்றிருக்கிறார்.
மரீன் லு பென்
அவருடைய தந்தையாருக்கு மாற்றாக இந்த ஆண்டின் ஜனவரியில் கட்சியின் தலைமைக்கு வந்தார்.
தொழிற்சங்கங்களும் மற்றும்
"இடது"
கட்சிகள்
என்றழைக்கப்படும் சோசலிஸ்ட் கட்சி
(PS),
இடது கட்சி
(PG),
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி
(PCF),
மற்றும் ஒலிவியே
பெஸன்சனோவின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு
கட்சி (NPA)
போன்றவற்றின்
கொள்கைகள் மீதிருக்கும் பெரும் அதிருப்தியால்,
இந்த தீவிர-வலதுசாரி
போக்கின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
வர்க்க பதட்டங்களும்,
சமூக அவலங்களும்
அதிகரித்துவரும் நிலைமைகளின்கீழ்,
அவை தொடர்ச்சியாக
தொழிலாள வர்க்க போராட்டங்களை நிராயுதபாணியாக்கவும்,
தணிக்கவும் வேலை
செய்துள்ளன.
இவ்வகையில் அவை சமூக
போராட்ட மொழியை தீவிர வலதின் பக்கம் இணங்க செய்துள்ளனர்.
வாகனத்துறை,
ஜவுளித்துறை மற்றும்
இதர தொழில்துறைகளிலும் ஆலைகளின் கதவடைப்பு அலைகளையும்,
மற்றும்
பணிநீக்கங்களையும் சேர்த்து,
இந்த உலக பொருளாதார
நெருக்கடி ஒரு நாசகரமான தாக்கத்தை பிரான்சில் ஏற்படுத்தியுள்ளது.
உத்தியோகபூர்வ
வேலைவாய்ப்பின்மை
10
சதவீதத்திற்கு நெருக்கமாக
உள்ளது.
இளைஞர்களில் சுமார் கால்
பகுதியினர் வேலையின்றி உள்ளனர்.
விலையுயர்வு,
வேலையிட மன-அழுத்தம்,
சமூக மற்றும்
ஓய்வூதிய நலன்களில் வெட்டுக்கள் என இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
தொழிலாள
வர்க்கம் இத்தகைய அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றன.
கடந்த
15
ஆண்டுகளில் தொழிலாளர்களும்,
இளைஞர்களும்
ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்திராத ஒரேயொரு ஆண்டு கூட கிடையாது.
சமீபத்தில்கூட கடந்த
இலையுதிர் காலத்தில்,
ஓய்வூதிய வயதை
உயர்த்தியதற்கு எதிராக பல ஒரு-நாள்
பொது வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
ஆனாலும்,
ஒவ்வொரு
சம்பவத்திலும்,
தொழிற்சங்கங்களும்
"இடது"
கட்சிகளும்,
தொழிலாள
வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அரசியல் எதிர்ப்பைக்
காட்டக்கூடாது என்றும்,
தொழிலாள வர்க்கம்
தொழிலாளர்களுக்கு-எதிரான
அரசாங்கங்களுடன் தொழிற்சங்கங்களைப் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க வேண்டுமெனவும்
கேட்டுக் கொண்டன.
கடந்த இலையுதிர்
காலத்தில்,
எதிர்ப்புகளைப்
பலவீனமான ஒரு-நாள்
போராட்டங்களுக்குள் நிறுத்திக் கொண்டதுடன்,
துறைமுக இறங்குதுறை
மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களால் நடத்தப்படவிருந்த சக்திவாய்ந்த
போராட்டங்களையும் அவை தனிமைப்படுத்தின.
வேலைநிறுத்தத்தில்
இறங்கியவர்களுக்கு எதிராக பொலிஸ் அதன் படைகளைப் பயன்படுத்திய போது,
தொழிலாளர்களுக்கு
ஆதரவாக தொழிற்சங்கங்கள் அவற்றின் சுண்டுவிரலைக் கூட தூக்கவில்லை.
2012இல் சோசலிஸ்ட்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக்கூடிய ஒரு மனிதராக டொமினிக் ஸ்ராவுஸ்-கானை,
கண்டறிந்திருப்பதிலிருந்தே அக்கட்சியின் முதலாளித்துவ சமூக குணாம்சம் மிகத் தெளிவாக
வெளிப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய
நிதியத்தின் தலைவராக இருக்கும் அவரே,
கிரீஸ்,
ஹங்கேரி போன்ற
ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் உலகில் உள்ள ஏனைய நாடுகளிலும் நாசகரமான சிக்கன
நடவடிக்கைகளைக் கொண்டு வருவதற்குப் பொறுப்பாவார்.
சோசலிஸ்ட்
கட்சியினை சுற்றிவரும்
"இடது"
அமைப்புகள் தொழிலாள
வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதில்லை.
மாறாக,
அவை தொழிலாளர்களின்
நலன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சமூக நலன்களைக் கொண்டிருக்கும் ஒரு வழம்மிக்க
மத்திய தட்டின் பக்கம் நிற்கின்றன.
திடீர்திடீரென்று
அவை தீவிரமான வார்த்தைகளை முழங்கினாலும் கூட,
அவை
தொழிலாளர்களிடமிருந்து வரும் எல்லா அழுத்தத்திற்கு எதிராகவும் தொழிற்சங்க
அதிகாரத்துவத்தையும்,
சோசலிஸ்ட்
கட்சியையுமே ஆதரிக்கின்றன.
எவ்வாறிருந்த
போதினும்,
அவை இத்தகைய ஆதரவை வலதுசாரி
கட்சிகளுக்கும் கூட விரிவாக்க விரும்புகின்றன.
இந்த
நிகழ்வுமுறை,
2002இன் ஜனாதிபதி
தேர்தலில் முன்னுதாரணத்தைக் கொண்டுள்ளது.
தேசிய முன்னணியின்
அப்போதைய தலைவர் ஜோன்-மரி
லு பென் இரண்டாவது சுற்றில் கோலிசவாதியான (Guallist)
ஜாக் சிராக்கிற்கு எதிராக நின்ற போது,
பிரான்ஸ் முழுவதில்
இருந்தும் மில்லியன் கணக்கானவர்கள் நவ-பாசிசவாதிகளுக்கு
எதிரான போராட்டத்தில் வீதிகளில் இறங்கினர்.
"மற்ற
இரக்கமற்றவர்களைவிட சிராக் பரவாயில்லை"
என்று
குறிப்பிட்டும்,
அவரை குடியரசின்
பாதுகாவலர் என்று பாராட்டியும்,
இந்த எல்லா
"இடது"
கட்சிகளும்
சிராக்கிற்குப் பின்னால் நின்றன.
தொழிலாளர்கள்
இரண்டாவது சுற்றைப் புறக்கணிப்பதையும் அவை திட்டவட்டமாக எதிர்த்தன.
ஒட்டுமொத்த அரசியல்
அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒன்றுதிரட்ட,
இரண்டாவது சுற்று
வாக்களிப்பை புறக்கணிக்கும் இந்த முன்னெடுப்பு குறிப்பாக நான்காம் அகிலத்தின்
அனைத்துலக குழுவால் முன்மொழியப்பட்டிருந்தது.
இத்தகைய
நிலைமைகளின்கீழ் தான்,
பொருளாதார
நெருக்கடியால் உண்டான கோபத்தையும்,
அந்த அடுக்குகளிடையே
ஏற்பட்ட அரசியல் நிலைகுலைவையும் தேசிய முன்னணியால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
மரீன் லு பென் சமூக
எரிச்சல்களை,
இஸ்லாமிய-எதிர்ப்பு
மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தப்பெண்ணத்தை உருவாக்கல்,
மற்றும் தேசியவாத
சோவினிசத்திற்குள் திருப்ப விரும்புகிறார்.
அந்த பெண்மணி,
பொருளாதார
தாராளவாதத்தின் மீது வார்த்தைஜால தாக்குதல்களைச் செய்வது மற்றும் ஐரோப்பிய
ஒன்றியத்தை ஒரு சக்திவாய்ந்த தேசிய அரசாக ஆக்க அழைப்புவிடுப்பது ஆகிய இரண்டையும்
கலந்து வைத்திருக்கிறார்.
1933இல்
ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது மற்றும் ஜேர்மன் பாசிசம் ஆகியவை குறித்து
குறிப்பிடுகையில்,
ட்ரொட்ஸ்கி
எழுதினார், “நம்பிக்கையின்மையின்
கட்சியின் வெற்றி சாத்தியமானது ஏனெனில் சோசலிசத்திற்கான நம்பிக்கைக்குரிய கட்சி
அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என தன்னை நிரூபித்துகாட்டியதாலாகும்.
இந்த குறிக்கோளை
எட்ட ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் எண்ணிக்கையிலும் சரி,
கலாச்சாரரீதியாகவும்
சரி இரண்டிலுமே போதியளவிற்கு பலமாக இருந்தது.
ஆனால்
தொழிலாளர்களின் தலைவர்கள் தகுதியிழந்திருந்ததை நிரூபித்தனர்.”
ஒரு சிறந்த
சமூகத்தை கட்டியமைக்க,
மக்களிடையே
உள்ளார்ந்த தூண்டுதல்களை எழுப்பிவிட்டு,
ஐக்கியத்தை
ஊக்கப்படுத்தி,
ஒரு நிஜமான சோசலிச
முன்னோக்கால் மக்களின் சக்தியை ஒன்றுதிரட்ட முடியும்.
மற்றொருபுறம்,
பாசிசம் மக்களிடையே
பிற்போக்குவாதத்திற்கு அழைப்புவிடுகிறது.
மேலும் அது
அவர்களின் கோபத்தை,
மனிதர்கள் மீதே
வெறுப்பை உமிழும் படுகுழிக்குள்ளும்,
சோவினிசத்திற்குள்ளும் திருப்பிவிட கோருகிறது.
2011இல்
இருக்கும் பிரான்ஸ்,
1933இல் இருந்த
ஜேர்மனி அல்ல.
தேசிய முன்னணிக்கு
அதிகரித்திருக்கும் கணித்துக்கணிப்பு எண்ணிக்கையானது,
பிரான்ஸ்
பாசிசத்தைக் கையிலெடுக்கும் விளிம்பில் நிற்கிறது என்பதைக் குறிக்கவில்லை.
ஆனால்,
தொழிலாள
வர்க்கத்திடமிருந்து வரும் ஒரு சவாலை முகங்கொடுக்க,
எழுபது ஆண்டுகளுக்கு
முன்னால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஒருங்கிணைப்பாளர் மார்ஷல் பெத்தனின் கீழ்
செய்ததைப் போல,
பிரெஞ்சு ஆளும்
வர்க்கம் ஏதேச்சதிகார மற்றும் பாசிச அணுகுமுறைகளுடன் அதன் ஆட்சியைக் காப்பாற்றத்
தயங்காது என்பதற்கு இவை சந்தேகத்திற்கிடமில்லாத ஓர் எச்சரிக்கையாக உள்ளன.
துனிசியா
மற்றும் எகிப்து புரட்சிகள் பிரெஞ்சு முதலாளித்துவத்தை இன்னும் கூடுதலாக வலதுசாரி
அணுகுமுறைகளை நோக்கி தள்ளியுள்ளன.
இந்த சம்பவங்கள்,
அந்த இரண்டு
நாடுகளுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை
தடுமாறச் செய்துள்ளது.
மேலும் வட
ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா வரையில் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்கள்
பரவக்கூடும் என்றும் அது அஞ்சுகிறது.
தேசிய முன்னணியை
ஊக்குவிப்பதன் மூலமாகவும்,
ஊடகங்களில் அதற்கு
முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாகவும் பிரெஞ்சு முதலாளித்துவம் அதற்கு
விடையிறுப்பைக் காட்டியுள்ளது.
ஆளும்
வர்க்கம்,
வட ஆபிரிக்கா
மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களை பிரிக்க விரும்புவதால்,
முஸ்லீம்-எதிர்ப்பைக்
குருட்டு பிடிவாதத்துடன் ஊக்குவித்து வரும் தேசிய முன்னணியைக் குறிப்பாக அதற்கு ஒரு
பயனுள்ள கருவியாகி ஆக்கிக் கொண்டுள்ளது.
சமீபத்திய
ஆண்டுகளில் பிரான்ஸ் வெற்றிகரமான இஸ்லாமிய-எதிர்ப்பு
பிரச்சாரங்களைக் கண்டுள்ளது.
இவை முதலாளித்துவ
வலதுகளால் மட்டுமல்லாமல்,
முதலாளித்துவ
"இடதுகளாலும்"
ஆதரிக்கப்பட்டன.
மத
சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட ஓர் அடிப்படை உரிமை மீறலாக உள்ள இஸ்லாமிய
முகத்திரைக்கு தடைவிதித்த சட்டமசோதா,
ஆளும் கோலிச
UMP
மற்றும்,
அத்துடன் சோசலிஸ்ட்
கட்சியாலும், “தீவிர
இடதான"
தொழிலாளர் போராட்டம்
(LO - Lutte Ouvrière)
அமைப்பாலும்,
ஆதரிக்கப்பட்டு,
எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த பிரச்சினையில்
பிளவுபட்ட NPA,
எந்த எதிர்ப்பையும்
காட்டவில்லை.
குருட்டுத்தனமான பிடிவாதத்தோடு முஸ்லீம்-எதிர்ப்பை
ஊக்கப்படுத்துவதில்,
“இடதிடமிருந்து"
எவ்வித எதிர்ப்பும்
இல்லாததால்,
ஒரு வளமான
விளைநிலத்தை பெற தேசிய முன்னணிக்கு உதவியுள்ளது.
ஒரு
சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தால் மட்டும் தான் தீவிர-வலதைத்
தடுத்து நிறுத்த முடியும்.
இதற்கு
தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான போராட்டத்திலும்,
ஒரு சோசலிச சமூகத்தை
கட்டியெழுப்புவதிலும்,
இனம்,
மதம் அல்லது நிறம்
போன்றவற்றைக் கடந்த அனைத்து தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியம் தேவைப்படுகிறது.
தொழிலாள
வர்க்கத்தின் இத்தகைய ஒரு போராட்டத்தால் தான்,
சமூகத்தில்
பின்தங்கியுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவுகளையும் ஒன்றுதிரட்ட முடியும். |