WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Washington to escalate military moves against Gaddafi
கடாபிக்கு எதிரான இராணுவ
நடவடிக்கைகளுக்கு வாஷிங்டனின் விரிவாக்கல்
By Barry
Grey
10 March 2011
கேணல்
முயம்மர் கடாபியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்
இன்னும் பரந்த,
நேரடி இராணுவ
நடவடிக்கைகளின் தயாரிப்பை தொடர்கின்றன.
பெப்ருவரி நடுவில்
வெடித்த கடாபி சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்களை அவை பயன்படுத்தி
ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் கடாபி அரசாங்கத்தில் பெரிதும் இருந்த தனிநபர்கள்
மூலம் ஏகாதிபத்திற்கு தாழ்ந்து நடக்கும் ஒரு எதிர்ப்புத் தலைமையை உருவாக்க
முயல்கின்றன.
மனிதாபிமான
நெருக்கடியை தீர்த்தல் மற்றும் கடாபியின் படைகளிலிருந்து குடிமக்களை பாதுகாத்தல்
என்ற போலிக்காரணம் காட்டி,
ஒபாமா நிர்வாகம் ஒரு
பெரிய அளவிலான ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கும்,
லிபியாவின் எண்ணெய்
வயல்கள் மீது கட்டுப்பாட்டை பெறுவதற்கும்,
ஒரு காலனித்துவ முறை
வாடிக்கை ஆட்சியை நிறுவுவதற்குப் பாடுபடுகிறது.
ஏகாதிபத்திய
தலையீட்டிற்கு ஒரு சட்டபூர்வ அத்தியிலை மறைப்பை அளிப்பதற்கான தொடர்ச்சியான
கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் அரபு உலகு
மற்றும் ஆபிரிக்காவில் அத்தகைய நடவடிக்கைக்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆதரவைப்
பெறுவதற்கும் முயற்சிகள் உள்ளன.
பிரஸ்ஸல்ஸில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் இரு-நாள்
கூட்டம் இன்று தொடங்குகிறது.
இதில் அமெரிக்கா,
பிரான்ஸ் மற்றும்
பிரிட்டன் ஆகியவை லிபியா மீது பறக்கக்கூடாத பகுதியை சுமத்தும் நேட்டோ ஆதரவைப் பெற
முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடியாக
பறக்கக்கூடாத பகுதிக்கான ஆதரவு சில நேட்டோ உறுப்பினர்களால் தடுக்கப்பட்டாலும்,
குறிப்பாக துருக்கி,
ஜேர்மனி
போன்றவற்றால்,
அந்த அமைப்பு பிற இராணுவரீதியான விருப்பத் தேர்வுகளுக்கு ஒப்புதல்
கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
புதன்கிழமையன்று
வாஷிங்டன் போஸ்ட்,
“அமெரிக்க இராணுவத்
திட்டமிடுபவர்களும் மற்ற நேட்டோ அரசாங்கத் திட்டமிடுபவர்களும் பல மாற்றீடுகளை
தயாரித்துள்ளனர்.
இவற்றுள் வான்வழி/கடற்படைப்
பாலம் ஒன்றை மனிதாபிமான வகை அளிப்புக்கள் நிறுவவும்,
பெங்காசி இன்னும்
பிற எதிர்ப்புப் பகுதிகளுக்கு சிவிலிய கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும்,
லிபிய கடலோரப்
பகுதியில் இப்பொழுள்ள ஆயுதத் தடையை நெருக்கமாக கண்காணிப்பதும் அடங்கும்”
என்று தகவல்
கொடுத்துள்ளது.
வியாழக்கிழை
புதிய பொருளாதாரத் தடைகளைப் பரிசீலிக்க ஐ.நா.பாதுகாப்பு
சபை கூட உள்ளது.
பறக்கக்கூடாத
பகுதியைச் சுமத்துவதும் இதில் அடங்கும்.
இதன் வரைவானது
பிரிட்டன் மற்றும் பிரான்ஸினால் வாஷிங்டன் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தீர்மானம் ரஷ்யா
அல்லது சீனாவின் எதிர்ப்பினால் தோற்கக் கூடும்.
இவை இரண்டும்
பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்னும் முறையில் தடுப்பதிகாரச்
சக்தியைக் கொண்டுள்ளன.
இத்தகைய
விளைவு அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பறக்கக் கூடாத பகுதித் திட்டத்தை
செயல்படுத்துவதிலிருந்து தடுத்துவிடாது—அது
ஒரு வெளிப்படையான போர்ச்செயல் ஆகும்.
இதில் லிபிய விமானப்
பாதுகாப்புத் தளங்கள் மற்ற அமைப்புக்கள் குண்டுவீசப்படுவதும் அடங்கும்.
பெயரிடப்படாத நேட்டோ
அதிகாரி
வாஷிங்டன் போஸ்ட்டிடம்,
“அரபு லீக்,
ஆபிரிக்க ஒன்றியம்,
நேட்டோ மற்றும்
ஐரோப்பிய ஒன்றியம் இவற்றின் ஆதரவுத் திறன் இருந்தால்,
இது லிபியாவிற்கு
5,000 மைல்கள்
சுற்றளவில் இருக்கும் நாடுகளின் ஆதரவு என ஆகும்.
இது ஒரு
சட்டபூர்வத்தை அளிக்கும்”
என்றார்.
ஐரோப்பிய
ஒன்றியம் வார இறுதியில் லிபிய நெருக்கடி பற்றிப் பரிசீலிக்க அவசரமாக வெளியுறவு
மந்திரிகள் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
அரபு லீக்கும் அதன்
வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தவுள்ளது.
ஆபிரிக்க ஒன்றியமும்
இதே போன்ற கூட்டம் ஒன்றை வார இறுதியில் நடத்தவுள்ளது.
அரபு லீக்கின்
தலைமைச் செயலரான அம்ர் மௌசா ஏற்கனவே அரபு லீக் ஒரு பறக்கக் கூடாத பகுதியை
சுமத்துவதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எதிர்ப்புக்காரர்களின் இடைக்கால மாற்றுக்கால தேசிய சபை,
பெங்காசியைத்
தளமாகக் கொண்டு கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா அப்டெல் ஜலில்
தலைமையில் இயங்குவது,
வலுவான
ஏகாதிபத்தியத் தலையீட்டிற்குத் தொடர்ந்த அழைப்புக்களைக் கொடுத்து வருகிறது.
இதில் பறக்கக் கூடாத
பகுதி சுமத்தப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
பெங்காசியில்
செவ்வாயன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவருடைய துணை அதிகாரி அப்டெல்
ஹபின் கோகோ, “சர்வதேச
சமூகம் லிபியா மீதி ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்தும் என்று நாங்கள்
எதிர்பார்க்கிறோம்”
என்றார்.
ஜனாதிபிதி
ஒபாமாவின் மூத்த ஆலோசகர்கள் புதனன்று கூடி,
கடாபிக்கு எதிராகப்
பறக்கக் கூடாத பகுதி உட்பட பல இராணுவ நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கக் கூடினர்.
புதனன்று
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
பெயரிடப்படாத
அமெரிக்க அதிகாரிகள் ஒபாமாவின் முதல் நடவடிக்கை நேட்டோ ஒத்துழைப்புடன் அமெரிக்கப்
படைகள் எதிர்ப்பின் தளமாகவுள்ள கிழக்கு லிபியாவிற்கு
“மனிதாபிமான”
அளிப்புக்கள் என
விவரிக்கப்படுவதை விரைவுபடுத்த ஒப்புதல் கொடுப்பதாக இருக்கும் எனக்கூறியதாக
மேற்கோளிட்டுள்ளது.
“திட்டமிடுபவர்கள்
உணவு மற்றும் மருத்துவ அளிப்புக்களை கப்பல்,
விமானம் மற்றும் தரை
வழியேயும் எகிப்திய எல்லைப் பகுதி வழியேயும் அனுப்புதல் பற்றி மதிப்பீடு
செய்துவருகின்றனர்”
என்று
டைம்ஸ்
எழுதியுள்ளது.
அத்தகைய
நடவடிக்கைகள் இன்னும் வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளுக்கு போலிக்காரணமாகக்கூடும்
என்று
ஜேர்னல்
தெரிவித்ததுடன்,
“உதவியை வழங்குவதில்
தலையிட முயற்சித்தால் கடாபி ஒரு இராணுவ விடையிறுப்பைத் தூண்டக்கூடும்”
என்றும்
குறிப்பிட்டுள்ளது.
இராணுவத்
தயாரிப்புக்களுடன் இணைந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் லிபிய ஆட்சிக்கு எதிராக
இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளைச் செயல்படுத்துகின்றன.
அமெரிக்க நிதி
மந்திரி டிமோதி கீத்னர் மற்றும் ஜேர்மனிய தலைவர்களின் பேச்சுக்களுக்கு பின்னர்,
ஐரோப்பிய ஒன்றியம்
லிபிய முதலீட்டு நிதியானது ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பில்லியன்
கணக்கான டாலர் சொத்துக்களை முடக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
ஏற்கனவே
32 பில்லியன் டொலர்
லிபியன் சொத்துக்களை முடக்கிவிட்ட அமெரிக்கா தான் இன்னும் கூடுதலான சில லிபிய
இராணுவ,
உளவுத்துறை மற்றும் அரசாங்க
அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் எதிர்ப்புத் தலைவர்களுடனான
தங்கள் ஒப்பந்தங்களை முடுக்கிவிட்டுள்ளனர்.
லிபியாவின்
சட்டபூர்வ அரசாங்கம் பெங்காசியைத்தான் தளமாக கொண்டுள்ள சபை என அங்கீகரிக்கும்
வகையில் ஒரு நடவடிக்கையாக இது உள்ளது.
ஐரோப்பிய
வெளியுறவுக் கொள்கையின் தலைவர் கத்தரின் ஆஷ்டன் லிபிய எதிர்ப்புப் பிரதிநிதிகளை
செவ்வாயன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் சந்தித்தார்.
எதிர்ப்புப்
பிரதிநிதிகள் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகளுடன் புதனன்று பேச்சுக்களை நடத்தினர்.
இடைக்கால
மாற்றுக்காலத் தேசிய சபையின்
(Provisional
Transitional National Council)
உறுப்பினர்களை ஒரு இத்தாலிய
பிரதிநிதிகள் குழு பெங்காசியில் செவ்வாயன்று சந்தித்தது.
லிபியாவின்
கிழக்குப் பகுதியில் வலுவாகவுள்ள எதிர்ப்புத் தலைவர்களை உத்தியோகபூர்வமான ஒரு
அரசாங்க பிரதிநிதிகள் சந்திப்பது இதுதான் முதல் தடவையாகும்.
பிரெஞ்சு ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசி இன்று பாரிசில் சபையின் உறுப்பினர்கள் இருவரைச் சந்திக்க
உள்ளார் என்று
BBC கூறியுள்ளது.
மற்றொரு
குழு உறுப்பினரான
Jibril al-Walfarvi
சுவிஸ் ஜனாதிபதி மிஷாலைன் காமி-ரேயை
புதனன்று ஜெனீவாவில் சந்தித்தார்.
அமெரிக்க வெளிவிவகார
செயலகம் செவ்வாயன்று அது நேரடிப் பேச்சுக்களை ரோமிலும் கெய்ரோவிலும் சபை
உறுப்பினர்களுடன் நடத்தியதாகக் கூறியுள்ளது. |