செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
லிபியாவில் இத்தாலிய
ஏகாதிபத்திய குறிக்கோள்களின் மறுஎழுச்சி
By Marc
Wells
10 March 2011
மார்ச்
7ம்
தேதி லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் இத்தாலிய போர்க் கப்பலான லிப்ரா நங்கூரம்
பாய்ச்சி நின்றது.
லிபியாவில் தனது முக்கிய பங்கை நிலைநிறுத்திக் கொள்ள
வேண்டுமென்பதும்,
தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பை நெரித்துவிட
வேண்டும் என்னும் இத்தாலிய ஆளும் வர்க்கத்தின் புவிசார் மூலோபாயக் கணக்கீடுகளின்
தர்க்கரீதியான விளைவுதான் இந்த நிலைப்பாடு ஆகும்.
ஒரு சில
நாட்களில் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியின் இத்தாலிய அரசாங்கம் கேணல்
முயம்மர் கடாபி ஆட்சிக்குத் தான் காட்டிய வலுவான ஆதரவைக் கைவிட்டுவிட்டது.
மாறாக அது “மனிதாபிமான உதவி”
என்ற மறைப்பில் தன் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டை
உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இராணுவத் தலையீட்டிற்காகத் தயாரிப்புக்களை
மேற்கொண்டுள்ளது.
லிபியாவின்
முன்னாள் காலனித்துவ சக்தியான இத்தாலிக்கும் லிபியாவிற்கும் இடையே கிட்டத்தட்ட அரை
நூற்றாண்டுக்கால இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பின்னர் ஆகஸ்ட்
2008ல் பெர்லுஸ்கோனி கடாபியுடன் ஒரு சமாதான உடன்பாட்டைச் செய்து
கொண்டார். இது நட்புணர்வு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம்
(Friendship and Cooperation Treaty) என்பதைத் தளமாகக்
கொண்டிருந்தது. இந்த உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே
நெருக்கமான பொருளாதர உறவுகளின் விதிகளை நிறுவியது. அதேபோல்
குடியேற்றக் கட்டுப்பாடுகள் குறித்தும் வரையறை செய்தது.
இத்தாலி 1911ல் இருந்து 1943 வரை
மிருகத்தனமான காலனி ஆதிக்கத்தின் கீழ் லிபியாவை 32 ஆண்டுகள்
வைத்திருந்ததுடன் இந்த ஆபிரிக்க நாட்டு மக்களை அழித்தற்கான இழப்பீட்டுத் தொகையாக
5 பில்லியன் டொலர் கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம்
குறிப்பிட்டது.
இந்த
உடன்பாடு பெங்காசியில் கையெழுத்திடப்பட்டது.
இதே இடத்தில்தான் இன்று லிபியித் தேசியச் சபை ஒரு முதலாளித்துவ
கடாபி எதிர்ப்பு எதிர்ப்பாளர்கள் அமைப்பை முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா
மஹ்மத் அபுத் அல் ஜேலில் தலைமையில் நிறுவியுள்ளது. இது
பெப்ருவரி 28, 2011 அன்று பெர்லுஸ்கோனி அரசாங்கத்தால் ஒரு
அரசியல் நிறுவனம் என்ற அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க
ராஜதந்திர நெறி
2008 உடன்படிக்கையைக் கவனத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டது.
ஜூன் 2009 விக்கிலீக்ஸ் தகவல் ஆவணத்தில்,
ரோமிலிருந்த அமெரிக்கத் தூதரகக் கருத்துப்படி, “பெர்லுஸ்கோனி
இத்தாலியின் கொள்கையான லிபியாவுடன் விரிவாக்கப்பட்ட உறவை வளர்ப்பது என்னும்
கொள்கையை தொடர்கிறார். இது முக்கியமாக லிபியப்
பகுதியிலிருந்து முறையற்ற குடியேற்ற அலை வருவதைத் தடுப்பதற்கு மட்டும் இல்லாமல்,
லிபியாவின் எண்ணெய் இருப்புக்களை இத்தாலிய நிறுவனங்கள் அணுகும்
வாய்ப்பின் மூலம் பெறக்கூடிய நலன்களைப் பெறுவதற்கும் ஆகும்,
முக்கியமாக ENI க்கு” என்று
வெளிப்படுத்தப்பட்டது. ENI என்பது ஒரு இத்தாலிய பன்னாட்டு
எண்ணெய் நிறுவனம் ஆகும்.
தகவல் ஆவணம்
தொடர்ந்து கூறுவதாவது:
“2008 லிபிய-இத்தாலிய நட்பு
உடன்படிக்கையின்—இது லிபியாவை தன் கரைகளிலிருந்து
இத்தாலிக்கு முறையற்ற குடியேறுபவர்களை தடுக்க லிபியாவை இன்னும் கடுமையான
நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியது—தொடர்ச்சியாக லிபியத்
தலைவர் கடாபி உத்தியோகபூர்வமாக ரோமிற்கு ஜூன் 10-12
நாட்களில் ஒரு வரலாற்று தன்மைவாய்ந்த பயணம் செய்வார். இது
பெர்லுஸ்கோனி வாஷிங்டனுக்கு செல்லுவதற்குச் சற்று முன்னதாக இருக்கும்.”
கடாபியின்
பயணம் நடந்தது.
ஜூன் 2009ல் லிபியத் தலைவர் சியாம்பினோ
இராணுவ விமான நிலையத்தில் இத்தாலிய காலனிக்கு எதிரான லிபிய எதிர்ப்பாளர்களின்
தலைவர் ஒமர் அல்-முக்தாரின் படத்தைக் காட்டிய வண்ணம்
இருந்தார். முக்தார் 1931ல்
முசோலினியின் பாசிஸ்ட்டுக்களால் கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
இது இத்தாலிக்கு கடாபியின் முதல் உத்தியோகபூர்வ பயணம் ஆகும்.
இத்தாலிக்கும் லிபியாவிற்கும் இடையே முக்கியப் பங்காளித்தனம் இருக்கின்றதும்,
சர்வதேச விவகாரங்களில் ஒரு பொதுநிலைப்பாட்டிலிருந்து ஆரம்பித்து பல
துறைகளில் வலுவான ஒத்துழைப்பு லிபியாவுடனும், மற்றும்
பொருளாதாரத் துறையில் இறுக்கமான ஒத்துழைப்பு இருப்பது”
பற்றியும் அந்த நேரத்தில் பெர்லுஸ்கோனி பேசினார். கடந்த
15 ஆண்டுகளில் தான் “கடாபியைப் பல முறை
சந்தித்துள்ளதாகவும், ஒரு உண்மையான,
ஆழ்ந்த நட்பைப் பெற்றுள்ளதாகவும்” கூறினார். “நான்
அவருடைய பேரறிவிற்காக அவருக்கு இசைவு கொடுக்கிறேன்” என்றும்
நிருபர்களிடம் கூறினார்.
ஒரு வாரம்
கழித்து மற்றொரு தகவல் ஆவணத்தில் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகம்
“உயரும் எண்ணெய் விலைகள் லிபியாவை வெளிநாட்டு எண்ணெய்,
எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுடன் கடுமையான நீண்ட கால
ஒப்பந்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க அனுமதித்துள்ளது.
இத்தாலிய நிறுவனமான Eni North Africa BV ஆனது 25
ஆண்டுகள் ஒப்பந்த நீட்டிப்பை பெற்றது.
இதையொட்டி கணிசமான போனஸ் தொகை இருந்தது. இதைத்தவிர
நிறுவனத்தின் உற்பத்திப் பங்கு வியத்தகு முறையில் குறைக்கப்பட்டது.
நீடித்த பேச்சுக்களுக்கு பின்னர் அது சமீபத்தில் இசைவு
பெற்றிருந்தது. Eni நிறுவனத்துடனான உடன்பாட்டின் பாதிப்புத்
திறன் கணிசமானது.”
லிபியாவை
ஒரு முக்கியப் பொருளாதாரப் பங்காளியாக இத்தாலி கருதுகிறது.
இதன் பொருளாதாரம் ஆழ்ந்த முறையில் லிபியாவின் எண்ணெய்,
எரிவாயுவை நம்பியுள்ளது. நாட்டிற்குத்
தேவையான எரிசக்தியில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அது
இறக்குமதி செய்கிறது. அதில் 25
சதவிகிதம் லிபியாவால் அளிக்கப்படுகிறது. வங்கித்துறை,
எரிசக்தித் துறை தவிர, லிபிய எண்ணெய்
நிதிகள் இத்தாலிய ஜவுளி, கார்த்தொழில்,
கட்டமைப்புப் பிரிவு, பாதுகாப்பு,
வான்துறைப் பிரிவுகள் மற்றும் கால்பந்துக் குழுமங்களுக்கு பிணை
எடுத்துள்ளன.
இப்பொழுது
கடாபி அவருடைய ஆட்சியை அச்சுறுத்தும் ஒரு எதிர்ப்பிற்கு முகங்கொடுக்கிறார்.
ஆனால் எதிர்ப்புக்காரர்களுக்குள் இரு முற்றிலும் மாறுபட்ட சமூக-அரசியல்
சக்திகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு புறம் கடாபியின்
தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கான வெகுஜன எதிர்ப்பும் அரசியல் சுதந்திரங்களுக்கு
அவரின் ஆட்சியின் அடக்குமுறையும் உள்ளன.
மறுபுறமோ,
கடாபியின் ஆட்சியின் முன்னாள் தலைவர்கள்,
கடந்த மாதம் வெகுஜன எதிர்ப்புக்கள் தொடங்கியபின் கப்பல் மாறியவர்கள்—கடாபியின்
முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா அப்டெல்ஜலில்,
முன்னாள் உள்துறை மந்திரி ஜெனரல் அப்துல் பட்டா யூனிஸ் அல் ஒபைடி உட்பட—உள்ளனர்.
இச்சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் உள்ளன.
ஏகாதிபத்திய அரசாங்கங்களான அமெரிக்கா,
பிரிட்டன் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியின் அரசியல்
மற்றும் இராணுவ ஆதரவிற்குக் குரல் கொடுத்துள்ளன.
நாட்டின்
மீது கேணல் மீண்டும் கட்டுப்பாட்டைக் கொள்வார் என்ற நம்பிக்கையில்,
இத்தாலிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கையான நிலைப்பாட்டைக்
கொண்டது. ஆனால் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வெற்றியடைதலின்
பரபரப்பைக் கொண்டவுடனும், எண்ணெய் வயல்கள் தொழிலாளர்களின்
கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடும் என்ற ஆபத்து தெளிவானவுடனும்,
பெர்லுஸ்கோனி அரசாங்கம் இத்தாலிய மூலதனத்திற்கு நன்மைகளைப்
பயக்கும் பொருளாதார நலன்களைத் தொடர்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் திறனுடைய
முதலாளித்துவ தட்டுக்களுடன் புதிய உறவுகளைப் பிணைக்க முற்பட்டது.
இதுதான்
இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினி பெப்ருவரி
28ம் தேதி நட்புணர்வு உடன்படிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்ததின்
பின்னணியாகும். பிரட்டினி கடாபி எண்ணெய் வயல்கள் மீது
கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மை பற்றிக் குறிப்பாக இருந்தார் என்றும்,
“புதிய லிபிய தேசிய சபையுடன் தொடர்புகளை இத்தாலி கொண்டுள்ளது”
என்றும் இத்தாலியச் செய்தி நிறுவனமான ANSA
தகவல் கொடுத்துள்ளது.
இந்த
முடிவில் நேரடி இராணுவ உட்குறிப்புக்கள் உள்ளன.
2008 இன் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கிரமிப்புப் போர்
கூடாது என்பதை நிறுவியிருந்தது. இப்பொழுது இத்தாலி
ஒருதலைப்பட்சமாக அதிலிருந்து வெளியேறுகிறது.
மத்தியதரைக்கடலின் இதயத்தானத்தின் மூலோபாய இடத்தில் இத்தாலி உள்ளது,
அது லிபியாவிற்கு வடக்கே என்ற நிலையில்.
லிபியாவிற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைக்கு இத்தாலியின் பங்களிப்பு அவசியமாக
இருக்கிறது.
லிபியாவிலும் அப்பிராந்தியத்திலும் இத்தாலி ஒரு முக்கிய பங்கைக் கொள்வதற்குத்
தயாரிப்பு செய்து வருகிறது.
ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கும் வட
ஆபிரிக்காவிலிருந்து இத்தாலி மற்றும் ஐரோப்பாவிற்கு மக்கள் எதிர்ப்புக்கள் என்னும்
அச்சுறுத்தல் பரவக்கூடும் என நிலையை எதிர்ப்பதற்கும் இந்நிலைப்பாடு
எடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று பெர்லுஸ்கோனி அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானமான
இத்தாலியிலுள்ள லிபியச் சொத்துக்களை முடக்க இசைவு தரும் என்று அறிவித்தது.
ஆனால் இத்தாலிய நிதியத் தொகுப்பில் இச்சொத்துக்களின் பங்கு உள்ள
நிலையில், அரசாங்கம் பெரும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.
வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கூற்றுப்படி இந்த முடிவு “லிபிய
மத்திய வங்கி, நாட்டின் இறைமை நிதியத் தொகுப்பான லிபிய
முதலீட்டு அதிகார சபை [LIA]
ஆகியவற்றிற்கு பொருந்தாது, ஏனெனில் இவை
இரண்டும் பல முக்கிய இத்தாலிய நிறுவனங்களில் பங்கைக் கொண்டுள்ளன.”
இத்தாலிய
வங்கியான
UniCredit ல் LIA 7.5 சதவிகிதக்
கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு மற்றும்
வான்வழி பெருநிறுவனமான Finmeccanica வில் 2
சதவிகிதம் கொண்டுள்ளது. இதைத்தவிர
Fiat மற்றும் ENI மேலும் கால்பந்துக்
குழுவான Juventus ஆகியவற்றில் கணிசமான பங்குகளைக்
கொண்டுள்ளது. இத்தாலிய வங்கி முறைக்கு இது கொடுக்கும் மூலதன
உட்செலுத்துதல்தான் செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ்
சரிவிற்குப் பின் ஒரு பெரிய நிதியப் பேரழிவைத் தவிர்த்தது.
ஆனால்
நிதியத் தொந்தரவுகள் முற்றிலும் முடிந்துவிடவில்லை.
பாங்க் ஆப் இத்தாலியின் கவர்னர் Mario Draghi, “இத்தாலிய
வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் குறிப்புக்களை இந்தக் கோடையில் வரவிருக்கும்
ஐரோப்பிய அழுத்தச் சோதனைகளுக்கு முன் சீராக்க வேண்டும்”
என்று வலியுறுத்தி வருகிறார். UniCredit, Intesa மற்றும்
MPS போன்ற வங்கிகள் ஐரோப்பாவில் மிகக் குறைந்த மூலதனத்தை
உடையவற்றில் உள்ளன. Basel III வங்கி விதிகளுக்கு ஏற்ப
இயங்குவதற்கு இவை கூடுதல் நிதிகளைத் திரட்ட வேண்டும்.
மேலும்,
சமீபத்திய EPP எனப்படும் ஐரோப்பிய மக்கள்
கட்சி மாநாடு ஹெல்சிங்கியில் நடைபெற்றபோது, பெர்லுஸ்கோனி
“துனிசியா மற்றும் எகிப்திலும் நடந்த மாற்றங்கள் போல்
ஜனநாயகத்திற்கான மாற்றம் என்பது நம் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தக்கவைக்கும்
வகையில் உறவுகளைக் கொண்டிருக்கும்” என்று வெளிப்படையாகப்
பேசினார். இன்னும் குறிப்பாக அவர் ஒரு புதிய மார்ஷல்
திட்டம், 10 பில்லியன் டொலர் மதிப்புடையது “இம்மாற்றத்தைச்
செயல்படுத்தும் எல்லா நாடுகளுக்கும் தேவை” என்ற கருத்தையும்
வெளிப்படுத்தியுள்ளார்.
இத்தாலிய
ஆளும் வர்க்கத்தின் தட்டுக்கள்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத் தட்டுக்களைப் போலவே,
இராணுவ விருப்புரிமையை எச்சரிக்கையுடன்தான் காண்கின்றன.
கொள்கையளவில் அவை இதை எதிர்க்கவில்லை.
ஆனால் சர்வதேச உறவுகளில் இதன் விளைவுகள் பற்றி அஞ்சுகின்றன.
அதுவும் உலகப் பொருளாதாரம் பெருகிய போட்டித்தன்மை கொண்டுள்ள நிலைமையில்.
மேலும் ஒரு இராணுவத் தலையீடு என்பது அரபுத் தொழிலாள வர்க்கம்
ஏகாதிபத்திய ஆதிக்கம் பல நூறு ஆண்டுகளாக இருப்பதற்கு எதிராக எழுச்சி செய்யும்
முழுத்திறனையும் கட்டவிழ்த்துவிடக்கூடும்.
“மனிதாபிமான”
முயற்சிகள் போன்ற சொற்றொடர்கள் இப்பொழுது மீண்டும் வந்துவிட்டன.
ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமாக தாங்கள் திட்டமிட்டு
வரும் தலையீட்டின் வர்க்கத் தன்மையை மூடிமறைப்பதற்காக இவ்வாறு பேசப்படுகிறது.
இத்தாலிய
முதலாளித்துவ
“இடது”, தலையீட்டிற்கான திட்டங்களுக்கு
ஆதரவு கொடுப்பதானது, இத்தகைய சொல்லாட்சியில் முழு நயம்
பெற்றுள்ளது. முன்னாள் பிரதம மந்திரியும்,
ஜனநாயகக் கட்சியின் முக்கிய நபரும் முன்னாள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவருமான மாசிமோ டி அலீமா நிபந்தனையற்ற தன் ஆதரவை பெர்லுஸ்கோனி
அரசாங்கத்தின் ஏகாதிபத்திய நலன்களுக்கு அறிவித்துள்ளார். “இது
போன்ற நேரங்களில் எதிர்க் கட்சி சக்திகளானது அரசாங்கத்தின் செயல்களுக்கு ஊக்கம்
கொடுக்கும் நோக்கங்களை அடையாளம் காணவேண்டும்” என்று அவர்
கூறினார்.
1999ல்
பிரதம மந்திரிப் பதவியிலிருந்தபோது, நேட்டோ சேர்பியாவிற்கு
எதிரான கொசோவோப் போரின்போது இத்தாலிய வான்வழியைப் பயன்படுத்த நேட்டோவிற்கு அவர்
அனுமதித்தார். இரண்டாவது உலகப் போருக்குப் பின் இரண்டாவது
முறையாக (முதல்தடவை 1991 நடந்த
வளைகுடாப் போர் ஆகும்) இத்தாலி ஒரு இராணுவத் தாக்குதலில்
பங்கு பெற்றது. அதுவும் ஒரு “மனிதாபிமான”
முயற்சி என்று கருதப்பட்டது.
Sinistra Econogia
Liberta வின் தலைவரான Nichi Vendola
கருத்துப்படி, இறுதி நோக்கம் கடாபியை அகற்றுதல் ஆகும்.
“தான் (அரச)
ஜனாதிபதி நேபோலிடனாவிற்கு நன்றியுணர்வு உடையவனாக இருக்கிறேன் என்று அவர் மற்றொரு
கதையைக் கூறியுள்ளார். கடாபியின் விரோதி,
லிபிய மக்களின் நண்பன்”. லிபியத் தேசிய
சபையை சட்டபூர்வமாக்க வெண்டோலா தயாரிப்பு செய்கிறார்.
இச்சபையானது கடாபி மந்திரிசபைகளில் மாற்றி அமைக்கப்பட்டபோது இருந்த மந்திரிகள்,
நிர்வாகச் செயலர்கள், அவர்கள் கடாபியால்
அகற்றப்படும் வரை இருந்தவர்கள், பலவிதக் கருத்துக்களை உடைய
ஒரு குழுவாகும்.
இத்தாலிய
போர்க் கப்பல் பெங்காசித் துறைமுகத்தில் இறங்கிய மறுநாள்
Rifondazione Communista வின் வெளியீடான Liberazione, “குண்டுகள்
கூடாது, இராஜதந்திர முறை வேண்டும்”
என்று அழைப்பு விடுத்துள்ளது. “உத்தியோகபூர்வ எதிர்க்
கட்சிகளின் கருத்துப்படி, தேவையானது ஐ.நா.வில்
வலுவான முனைப்புச் செயல் ஆகும். இதற்கு சர்வதேச சமூகம்
முழுவதும் ஆதரவு கொடுக்க வேண்டும். அது உள்நாட்டுப் போரை
நிறுத்தி, ஜனநாயக வழிவகைகளைத் தொடக்கும் தீர்வைப்
பேச்சுவார்த்தைகள் மூலம் காணவேண்டும்.”
இத்தகைய
வெற்றுத்தன போர் எதிர்ப்பு மற்றும்
“முதலாளித்துவ எதிர்ப்பு” வனப்புரையின்
பின்னணியில், Rifondazione அதன் அப்பட்டமான ஆதரவை
ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கருவியான இராஜதந்திர முறை என்பதற்குக் கொடுக்கிறது.
லெனின் சொற்களில் ஐ.நா.
போன்ற அமைப்புக்கள் “திருடர்களின் சமையலறை”
என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. கடந்த
தசாப்தத்தில் ஏகாதிபத்தியத்தின் வரலாறு ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்,
நூறாயிரக்கணக்கானவர்களின் பலிகளை ஏற்படுத்திய பின்னர்,
ஏகாதிபத்திய நலன்களுக்கு வசதியளிக்கும் சர்வதேச அமைப்பு என்னும் ஐ.நா.வின்
பங்கைப் புரிந்து கொள்ளப் போதுமானது. 90 ஆண்டுகளில் ருவண்டா,
ஈராக், சேர்பியா,
கொசோவோ மற்றும் சூடான் ஆகியவை பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.
இவைகூட சில உதாரணங்கள்தான்.
எல்லா
“இடது” குழுக்களின் பங்கும்
பகிரங்கப்படுகின்றது என்றால், லிபியாவில் தொழிலாளர்
அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்படுவதை
நிராகரிப்பது என்பதுதான். அதுதான் ஐக்கிய சோசலிச மத்திய
கிழக்கு மற்றும் மகரெப் அரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்திற்கு ஒரு ஆரம்ப
கட்டமாக இருக்கும். |