WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
“Wealth gap” dominates Chinese congress session
சீனக் காங்கிரஸ்
கூட்டத்தில் “செல்வநிலை
இடைவெளி”
ஆதிக்கம் செலுத்தின
By Mike
Head
9 March 2011
கடந்த
சனியன்று சீன ஆட்சியின் தேசிய மக்கள் காங்கிரஸின்
(NPC) 10 நாட்களாக
பெய்ஜிங்கில் நடந்த ஆண்டுக் கூட்டத் தொடரில் மிகப் பெரிய பொருளாதார,
சமூக மற்றும்
அரசியல் முரண்பாடுகள் இந்த ஆண்டு வெளிப்படையாகத் தெரியவந்தது.
அரசாங்கத்தின் செயல் நடவடிக்கைகள் குறித்த தன் இரண்டு மணி நேர அறிக்கையில்,
பிரதம மந்திரி வென்
ஜியாபோ முந்தைய ஐந்து ஆண்டுகளின்
“மிகச் சிறந்த
சாதனைகளின்”
பட்டியல் ஒன்றைக்
கொடுத்து ஆரம்பித்தார்.
இதில் சராசரி ஆண்டு
வளர்ச்சி விகிதம்
11.2% என்று
இருந்தது பற்றியும் சீனாவின்
“சர்வதேசக் கௌரவம்,
செல்வாக்கின்
எழுச்சி”
பற்றிய அவருடைய பெருமிதமும்
வெளிப்பட்டன.
இந்தப்
பெற்றுக்கொள்ளல்கள்
“சீனாவின்
இயல்புகளுடன் சோசலிசத்தின் அனுகூலங்கள் சேர்ந்துள்ளதால் ஏற்பட்ட விளைவுகளுக்கு”
நிரூபணம் என்று அவர்
கூறினார்.
சீனாவில்
மிகப் பெரிய அளவிற்கு வளர்ச்சியுறும் முதலாளித்துவத்திற்கு முற்றிலும் எதிரான இந்த
அசாதாரண கூற்று ஒருபுறம் இருக்க,
பணவீக்கம்,
சூடேறியுள்ள
வளர்ச்சி,
ஊழல் இன்னும்
செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரும் அதிருப்தியை தோற்றுவிக்கும் பிளவின்
அதிகரிப்பு ஆகியவை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று வென் அறிவித்தார்.
“நாம்
நம் மக்களைத்தான் முதலில் நிறுத்த வேண்டும்,
அவர்களுடைய நலவாழ்வு
உறுதி செய்யப்பட்டு முன்னேற்றப்படுவதுதான் நம் அனைவரின் பணியின் துவக்கக் கட்டமும்
இலக்கும் ஆகும்”
என்று வென் கூறினார்.
ஆண்டுப் பொருளாதார
வளர்ச்சியை 7
சதவிகிதமெனக்
குறைப்பது பற்றித் தெளிவற்ற முறையில் கோடிட்டுக்காட்டி,
வருமான இடைவெளியும்
“எவ்வளவு விரைவில்
முடியுமோ,
அவ்வளவு விரைவில்”
குறைக்கப்படும்
என்றும்,
பெரும்பாலான மக்களுக்கு
சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடியாமல் உயர்ந்து நிற்கும் வீடு மற்றும் நிலங்களின்
விலைகள் குறைப்பது பற்றியும்,
2020 ஐ ஒட்டி
“வறுமையை
அடிப்படையில் ஒழித்து விடுவது”
பற்றியும்
திட்டங்களைக் கூறினார்.
அவர்
உரையாற்றிய கிட்டத்தட்ட தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்த
“மக்கள்
பிரதிநிதிகள்”
3,000 பேரும் கடந்த
இரண்டு தசாப்தங்களாக சீன முதலாளித்துவத்தின் பெரும் எழுச்சியை
உருவகப்படுத்தியுள்ளவர்கள் ஆவார்கள்.
இதில் பலர்
வணிகச்சார்புடைய நிர்வாகச் செயலர்கள் மற்றும்
400 மில்லியன்
அளவுடைய சீனத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முற்றிலும் வர்க்கரீதியாக
எதிர்த்திருந்த சீனாவின் சில மிகப்பெரும் செல்வந்தர்களும் அடங்குவார்கள்.
வோல்
ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி
—அதன்
வலைத் தளம் காங்கிரஸை பற்றி மிகச் சிறிய விவரங்களைக் கூட வெளியிட்டிருந்தது—
ப்ளூம்பேர்க்கில்
வந்த ஒரு கட்டுரை முந்தைய தினம் காங்கிரசின்
“விவாதத்தை தொடக்கி
வைத்தது.”
இக்கட்டுரை ஷாங்காயைத்
தளமாகக் கொண்ட ஆய்வூக்குழு
Hurun
ஆனது சீனாவின் பெரும்
செல்வந்தர்களைப் பற்றிக் கொடுத்துள்ள சமீபத்திய அறிக்கையை உயர்த்திக்
காட்டியிருந்தது.
Hurun
இன்
2010 செல்வந்தர்
பட்டியலில் யுவான் பில்லியனர்கள் என அடையாளம் காட்டப்பட்ட
1,363 தனிநபர்களில்
83 பேர் காங்கிரசின்
பிரதிநிதிகள் என்று ப்ளூம்பேர்க் கூறியிருந்தது.
அவர்களுள் சீனாவின்
பெரும் பணக்காரரான,
வஹாஹா குழு என்னும்
பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்
Zong Qinghhou
என்பவர் 12
பில்லியன் அமெரிக்க
டொலர் சொத்து உடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளவரும் அடங்குவார்.
Hurun பட்டியலைத்
தளமாகக் கொண்டு ப்ளூம்பேர்க் மிக அதிக செல்வம் படைத்த
70 NPC
உறுப்பினர்கள் மொத்தத்தில்
493.1 பில்லியன்
யுவான் அல்லது கிட்டத்தட்ட
75 பில்லியன்
டொலர்களைக் கொண்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது.
இது சீனக்
காங்கிரசை மாபெரும் செல்வந்தர்கள் குவிந்துள்ள மன்றம் என ஆக்குகிறது—
அமெரிக்காவிலுள்ள
காங்கிரசைக் காட்டிலும்.
ஒரு வாஷிங்டன்
ஆய்வுக்குழுவான
Center for Responsive Politics
என்னும் அமைப்பு அமெரிக்க
செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றத்தின் மிக உயர்மட்ட
70 உறுப்பினர்களின்
மொத்த நிகர மதிப்பு
3.1 பில்லியன் டொலர்
என்று மதிப்பிட்டுள்ளது.
குறைந்தபட்சம்
38 NPC
பிரதிநிதிகளாவது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிலேயே அதிகச் செல்வம் படைத்த
கலிபோர்னியப் பிரதிநிதி டரேலை விடக் கூடுதலான சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.
அவருடைய
சொத்துக்களின் மதிப்பு
2009ல்
451.1 மில்லியன்
டொலர் என இருந்தது என காங்கிரஸின் தகவல்கள் புலப்படுத்துகின்றன.
NPCயில்
பில்லியனர்களின் மேலாதிக்கம் கொண்டுள்ளமையானது ஒரு தசாப்தத்திற்கு முன்பு
முதலாளித்துவத்தினர் கட்சியில் சேரலாம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழிவிட்டதில்
இருந்து வந்துள்ளது.
Hurun செல்வந்தர்
பட்டியலிலுள்ள
1,363
பில்லியனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்
CCP
உறுப்பினர்கள் ஆவர்.
173 பேர்
குறிப்பிடத்தக்க அரசாங்க ஆலோசனைப் பதவிகளை வகிக்கின்றனர்.
இப்புள்ளிவிபரங்கள் சீனப் பெருநிறுவன உயரடுக்கு அதன்
CPP பங்காளிகள்
ஆகியோரின் தடையற்ற செல்வக் குவிப்பு மிகுந்துள்ளது என்பது பனிப்பாறையின் உச்சியை
மட்டும் காட்டுபவை.
அதன் பட்டியலில்
அமெரிக்க டாலர் கணக்கில்
189 பேர்
அடங்கியிருக்கலாம் என்றும்,
பணத்தைப் பற்றி
விவரங்களைத் தெரிவிக்காததால் அதே அளவு எண்ணிக்கை விடுபட்டிருக்கலாம் என்றும் ஹுருன்
மதிப்பிட்டுள்ளது.
இதையொட்டி
சீனாவில் ஒருவேளை
400 முதல்
500 வரையிலான டாலர்
பில்லியனர்கள் உலகிலேயே அதிக எண்ணிக்கை என்ற வகையில் இருக்கலாம்.
சராசரியாக
கடந்த இரு ஆண்டுகளின் செல்வந்தர் பட்டியலின் மொத்தச் சொத்துக்கள்
64 சதவிகிதம்
அதிகரித்துள்ளன.
நிலச் சொத்து
வளர்ச்சி என்னும் துறைதான் அதிக அளிப்பைக் கொடுத்துள்ளது.
அதைத்தொடர்ந்து
சுகாதாரப் பாதுகாப்பு,
தகவல்
தொழில்நுட்பத்துறை,
சில்லறை மற்றும்
ஆடைத் தொழில்கள் வருகின்றன.
Hurun பட்டியலின்
சாராசரி மதிப்பு இப்பொழுது
577 மில்லியன் டொலர்
என்று உள்ளது.
இது பிரிட்டனிலுள்ள
1,000
செல்வந்தர்களுடைய ஒப்புமையில்
536 மில்லியன் டொலர்
என்பதை விட அதிகம் என்பதும் அமெரிக்காவின் எண்ணிக்கையான
722 மில்லியன் டொலர்
என்பதிலிருந்து அதிகம் பின்தங்கிவிடவில்லை என்பதும் தெளிவாகும்.
CCP
ஆட்சியில் படர்ந்துள்ள
செல்வந்தர்களுக்குக் கீழ் மற்றொரு குறிப்பிடத்தக்க தட்டும் ஒன்று உள்ளது.
சீனாவில்
875,000 தனிநபர்கள்—நாட்டின்
1.3 பில்லியன்
மக்களில் 0.1
சதவிகிதத்திற்கும்
குறைவானவர்கள்—10
மில்லியன் யுவானை
விட ($1.5
மில்லியன்)
கூடுதலான
தனிச்சொத்துக்களைக் கொண்டுள்ளவர்கள் ஆவர் என
Hurun
மதிப்பிட்டுள்ளது.
சமூகத்தின்
எதிர்முனையில் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ஆண்டு ஒன்றிற்கு தனிநபருக்கு
1,196 என்று உள்ளது,
அதாவது
50 அமெரிக்க
சென்ட்டுகள் நாளொன்றிற்கு என.
அரச
Xinhua செய்தி
நிறுவனத்தின்படி,
150 மில்லியன்
சீனமக்கள் நாள் ஒன்றிற்கு
1 டொலருக்கும்
குறைவான பணத்தில் வாழ்கின்றனர்.
இந்த எண்ணிக்கையும்
மிகப் பெரிய அளவில் குறைவாக இருக்கலாம்.
விரைந்து பெருகும்
பணவீக்கத்தினால்—உத்தியோகபூர்வமாக
இது 4.9
சதவிகிதமெனக்
கணக்கிடப்பட்டுள்ளது—மற்றும்
சொத்துக்கள் விலை உயர்வினால்,
சேரிகள்
பெய்ஜிங்கிலிருந்து குவாங்ஜௌ வரையுள்ள நகரங்களில் புறநகர்ப் பகுதிகளில்
வெளிப்பட்டுவிட்டன.
புறநகர் இளைஞர்கள்
வசிப்பதற்கு வீடு இல்லாத நிலையில் உள்ளனர்.
சீனாவின்
Gini குணகம்
(coefficient),
வருமானப் பகிர்வை அளக்கும் முறை,
ஒரு அரைக்கால்
நூற்றாண்டிற்கு முன்பு இருந்த
0.3ல் இருந்து
கிட்டத்தட்ட 0.5
என உயர்ந்துள்ளது.
இதை வோல் ஸ்ட்ரீட்
ஜேர்னலிடம் பெய்ஜிங் தேசியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார,
வணிக உயர்கூடத்தில்
பொருளாதாரப் பேராசிரியராகவுள்ள லிஷி தெரிவித்துள்ளார்.
0.4 என்னும்
அடையாளம்தான் சமூக அமைதியின்மைக் கணிப்பிற்குப் பகுப்பாய்வாளர்களால்
பயன்படுத்தப்படுகிறது.
NPC
கூடிய நிகழ்வானது,
Zong Ginghou என்ற
பெரும் செல்வத்தைக் கொண்ட பிரதிநிதி,
தன் வர்க்கத்தின்
உணர்வுகளுக்குக் குரல் கொடுத்தார்.
பெய்ஜிங்கில் மார்ச்
1ம் திகதி
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிக வரிகளையும்
ஐரோப்பிய வகையிலான பொதுநலத் திட்டங்களையும் கண்டனத்திற்கு உட்படுத்தினார்.
இக்கொள்கைகள் உடைய
நாடுகள் “அவர்கள்
பணம் செலவழிந்தபின் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்”
என்று அவர்
அறிவித்தார். “செல்வந்தர்கள்
தங்கள் பணத்தை முதலீடு செய்து வேலைகளைத் தோற்றுவிக்கின்றனர்.
செல்வந்தர்கள்
கொல்லப்பட்டால் எவரும் முதலீடு செய்யமாட்டார்கள்,
ஆலைகளையும் நிறுவ
மாட்டார்கள்”
என்றார் அவர்.
58
ஆலைகளில் கிட்டத்தட்ட
30,000 பேரை
வேலைக்கு வைத்துள்ள குளிர்பானத் தயாரிப்புப் பெருநிறுவன அதிபரான
Zong ஆட்சியின்
ஆதரவுடன்தான் தெளிவாகப் பேசியிருக்க வேண்டும்.
மார்ச்
6ம் திகதி
NPC செய்தியாளர்
கூட்டத்தில் அவர் முக்கியமாக அறிவித்தார்:
“நாம்
செய்யக்கூடியதில் மிக முக்கியமானது அவர்களுக்கு
(ஏழைகளுக்கு)
எப்படித் தாங்களே
தங்களுக்கு உதவி செய்து கொள்ள வேண்டும்,
கடின உழைப்பின்
மூலம் பணக்காரர் ஆவதற்கு உதவலாம் என்பதுதான்”
என்றார்.
அத்தகைய
நலன்களைக் காக்கும் வகையில்,
அதே நேரத்தில்
பெருகும் அதிருப்தியைப் பற்றி அச்சம் கொண்ட நிலையில்,
பெய்ஜிங் ஆட்சி அதன்
உள்நாட்டுப்பாதுகாப்புக் கருவிக்கு உயர்நிலை அளித்துள்ளது.
NPC க்கு நிதி
அமைச்சரக வரவு செலவுத்திட்டம் கொடுத்துள்ள அறிக்கையானது அரசப் பாதுகாப்பு,
பொலிஸ்,
நீதிமன்றங்கள்,
ஆயுதமேந்திய சிவில்
இராணுவக் குழு மற்றும் சிறைகளுக்கான நிதிகள்
14 சதவிகிதமாக
உயர்த்தி,
இந்த ஆண்டு
624.4 பில்லியன்
யுவானாக இருக்கும் என்று காட்டியுள்ளது.
இதன் பொருள்
CCP
உத்தியோகபூர்வமாக இராணுத்தினுடையதை விடக்கூடுதலாக உள்நாட்டுப் பாதுகாப்பிற்குச்
செலவிடுகிறது என்பதாகும்.
இராணுவச்
செலவுகளுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள்
601.1 பில்லியன்
யுவான் ($91.5
பில்லியன்)
ஆகும்.
இது
12.7% உயர்வைக்
குறிக்கிறது.
இரு
பக்கங்களிலும் உண்மையான செலவு ஒருவேளை இன்னும் மிக அதிகமாகத்தான் இருக்கும் இராணுவ
வரவு-செலவுத்
திட்டத்தில் முக்கியப் பொருட்களான ஆயுத இறக்குமதி போன்றவை குறிப்பிடப்படவில்லை.
பாதுகாப்பு வரவு-செலவுத்
திட்டத்தில் இரகசியக் கண்காணிப்புச் செலவுகள் சேர்க்கப்படவில்லை.
பிரதமர் வென்
தன்னுடைய ஆரம்ப அறிக்கையில் உள்புற செலவுகளில் சில இணையத்தளக் கட்டுப்பாடுகளுக்குச்
செலவழிக்கப்படும் என்றார்.
“நம் தகவல்
பாதுகாப்பு,
இரகசியம் ஆகியவற்றை
நாம் தீவிரப்படுத்தி,
தகவல் இணையத்
தளங்களின் மேலாண்மையை முன்னேற்றுவிக்க வேண்டும்”
என்றார் அவர்.
டிசம்பர்
நடுப்பகுதியிலிருந்து மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் வெடித்துள்ள
எழுச்சிகள் ஏற்படுத்தக்கூடிய திறன் பற்றி சீனத் தலைமை வெளிப்படையாக எச்சரிக்கை
அடைந்துள்ளது.
கடந்த மூன்று
வாரங்களாக பாதுகாப்புக் கருவிகள் அனாமதேய
(பெயரிடாமல் வரும்)
அழைப்புக்கள்,
அமைதியான
“அணிவகுக்கும்”
எதிர்ப்புக்கள் டஜன்
கணக்கான சீன நகரங்களில் ஒவ்வொரு ஞாயிறும் நடப்பது என்பதற்குத் தீவிர நசுக்குதலைக்
காட்டியுள்ளன.
ஆனால் உண்மையான
எதிர்ப்புக்கள் பற்றி உரிய அடையாளங்கள் இல்லை.
(see: “Chinese regime reacts with alarm to ‘Jasmine Revolution’ calls”).
பாதுகாப்புக் கட்டமைப்பிற்கு முற்றிலும் எதிரான வகையில் கடந்த ஆண்டு சுகாதாரப்
பாதுகாப்பிற்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
1.2% என்றுதான்
இருந்தது.
இந்த வரவு-செலவுத்
திட்டத்தில் இந்த ஆண்டு
16.3 என
அதிகரிக்கப்படும்,
கிட்டத்தட்ட
$28 பில்லியன் என்று.
ஆனால் அது நபர்
ஒருவருக்கு 25
யுவான்கள்தான்
($3.80) என
இருக்கும்.
இதேபோல்
2010 வரவு-செலவுத்
திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
3.1 சதவிகிதம் என்று
காட்டுகிறது.
இது உலக வங்கித்
தகவல் தொகுப்பின்படி நடுத்தர வருமானங்கள் உள்ள நாடுகளின் சராசரியைவிட மிகக் குறைவு
ஆகும்.
சந்தை
உந்துதல் வளர்ச்சியைப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என்னும்
கருத்திற்கு உதட்டளவு ஆதரவு ஆட்சியால் கொடுக்கப்பட்டாலும்,
தொழிலாள வர்க்க
மக்கள் பின்னடைவில் தான் உள்ளனர்.
கடந்த ஐந்து
ஆண்டுகளில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் குழுவின் கருத்துப்படி
தொழிலாளர்களின் வருமானம் உற்பத்தித் திறனின் வளர்ச்சிக்கு ஒப்பாக இருந்தது,
மொத்த உள்நாட்டு
உற்பத்தி வளர்ச்சியில் சீனாவின்
27 மாநிலங்கள்
தன்னாட்சிப் பகுதிகளில் மூன்றில் மட்டும்தான் இந்த நிலை என்று புலனாகிறது |