சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government attacks port workers

பிரெஞ்சு அரசாங்கம் துறைமுகத் தொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்துகிறது

By Anthony Torres
7 March 2011
Use this version to print | Send feedback

ஒரு புதிய வேலைநிறுத்தம் பிரான்ஸின் துறைமுகங்களைப் பாதித்துள்ளது. கடந்த செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற முறையில் துறைமுகத் தொழிலாளர்களின் கடுமையான பணிநிலைமைகளை ஒப்புக்கொண்டதுடன், அவர்கள் முன்னதாக ஓய்வு பெறலாம் என்பதையும் ஏற்றது. இதனால் பல வாரங்கள் நடைபெற்று வந்த துறைமுக வேலைநிறுத்தங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது. டிசம்பர் கடைசியில் அரசாங்கம் அதன் முடிவிலிருந்து பின்வாங்கியது.

சார்க்கோசி அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக அக்டோபர்-நவம்பர் 2010ல் நடந்த வேலைநிறுத்தங்களின் அலையின் போது தொழிற்சங்கங்கள் கொடுத்திருந்த உத்தரவாதங்களின் இழிந்த தன்மையைத்தான் இது அம்பலப்படுத்துகிறது.

அந்த நேரத்தில் துறைமுகத் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டத்தைத் தொழிலாளர்களை முடித்துக்கொள்ள ஊக்கம் அளித்தன. எதிர்ப்பு ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பெரிதும் இது அரசாங்கத்திற்கு உதவியது. தன்னுடைய கடுமையான நிபந்தனைகளைப் பற்றிய உடன்பாட்டில் வெற்றிபெற்றதாகவும் அரசாங்கம் அறிவித்தது. இந்த உத்தரவாதங்கள் பயனற்றவை என்று போய்விட்டன.

சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் துறைமுகங்களில் சீர்திருத்தத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களைப் பாதியில் CGT கைவிட்ட பிறகு, போக்குவரத்துத் துறையின் புதிய இளநிலை மந்திரியான தியரி மரியானி CGT க்கும் அப்பொழுது துறைமுகச் சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பாக இருந்த மந்திரியான Jean-Louis Borloo விற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருந்தது என்பதை மறுத்துவிட்டார்.

துறைமுகங்களுக்கு சீர்திருத்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் என்பதற்கு 6,000 துறைமுக மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் 60 வயது என்று அப்பொழுது நிர்ணயிக்கப்பட்டிருந்த  சட்டபூர்வ ஓய்வூதிய வயதிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வுபெறலாம் என்ற பொருளைக் கொடுத்திருந்தன. உண்மையில் துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பணிகள் நவம்பர் 9, 2010 ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் கடுமையான பகுதிப் பணிகள் என்பதை ஒப்புக் கொள்ளத் தயாராக போக்குவரத்துத் துறையின் அரச செயலாளர் இருந்தார். இதன்பொருள் தற்பொழுது 62 என்று சட்டபூர்வமாக ஓய்வூதியம் பெறும் வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு தொழிலாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறமுடியும் என்பதாகும்.

கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் பெரும் கடல்சார் மார்செய் துறைமுகத் (GPMM-Great Maritime Port of Marseille) தொழிலாளர்கள் மாறி மாறி வெள்ளியிலிருந்து திங்கள் வரை நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஒரு மணிநேரம் ஒவ்வொரு பணித் துறையிலும் நடத்திய சுழற்சிமுறை வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பெப்ருவரி 11ம் தேதி CGT இந்த வேலைநிறுத்தங்களை நிறுத்தி பெப்ருவரி 17 அன்று அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த இது உதவும் என்று கூறியிருந்தது.

Nantes-Saint-Nazaire ன் துறைமுகத்தில் 7 கப்பல்கள் தடுத்துமறிக்கப்பட்டன. கடலில் 12 கப்பல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. வார இறுதியில் Fos ஸில் தடுத்துமறிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து 80-90 சதவிகிதம் என்று இருந்தது. அதே நேரத்தில் Marseille-East கன்டெயினர் போக்குவரத்து 100 சதவிகிதம் முடங்கியது. இரண்டாவது பெரிய துறைமுகமான Le Havre ல் வேலைநிறுத்தம் தொடர்ந்தது, குறிப்பாக கன்டெயினர் இறக்கும் முடிவுப் பகுதியில் தடையேற்படுத்தும் செயல்களால்.

CGT வேலைநிறுத்தங்களைத் தொடர்வதாக அறிவித்தபின், Marseille-West ல் 30 சதவிகிதத் துறைமுகத் தொழிலாளர்கள் நோய் விடுப்பு எடுத்தனர். இது CGT மீது அவர்கள் காட்டிய அவநம்பிக்கையை ஒட்டிய செயலாகும். வேலை கொடுப்பவர்களுக்கும் CGT க்கும் இடையே உடந்தையான நடவடிக்கைகள் இருந்தன என்பதை அவர்களுடைய சமீபத்திய போராட்ட அனுபவங்கள் எடுத்துக் காட்டியதாக இந்நிலைப்பாடு இருக்கிறது.

அதன் தற்போதைய தந்திர உத்திகள் காட்டுவதுபோல், அரசாங்கம் துறைமுகத் தொழிலாளர்களின் கடுமையான பணிநிலைமைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. CGT உடன் ஒத்துழைத்து அது சாதிக்க விரும்பியதெல்லாம் துறைமுக, கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிராகப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள், வேலைக்குத் திரும்ப வேண்டும், அதையொட்டி முழுத் தொழிலாள வர்க்கமும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்.

அக்டோபர் இறுதியில் சார்க்கோசி அரசாங்கத்தின் ஓய்வூதிச் சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் எண்ணெய்த் வந்திறங்கும் முடிவிடப் பகுதித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள்கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் GPMM தொழிலாளர்கள் மாறி மாறி வேலைநிறுத்தங்கள் செய்தபோதுமற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் வேலைநிறுத்தங்கள், தடுப்புக்கள் ஆகியவை பொருளாதாரத்தை முடக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்தன.

Grandpuits சுத்திகரிப்பு ஆலையில் நடந்த வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு அரசாங்கம் பொலிசை அனுப்பித் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. Fos எண்ணைக் கிடங்கிலும் பொலிசார் தலையிட்டனர். தொழிற்சங்கங்கள் போராட்டம் நீடித்து பொலிஸ் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்க முயற்சி ஏதும் எடுக்கவில்லை.

பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஓய்வூதியங்கள் இயக்கம் முடிவடைந்தது. பெர்னார்ட் தீபோ தான் ஓய்வூதிச் சீர்திருத்தத்திற்கு எதிராகஅடையாளநடவடிக்கைகளைத்தான் அமைக்க இருப்பதாக அறிவித்தார். இதன்பின் அக்டோபர் 25, 2010ல் CDFT (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) இன் தேசியச் செயலாளர் Francois Chereque, France 2 TV யில் இளைஞர்கள் மற்றும் முதுநிலைத் தொழிலாளர்கள் பற்றிய வேலை ஒப்பந்தப் பிரச்சினையில் வேலைகொடுப்போரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாகக் கூறினார்.

செப்டம்பர்-அக்டோபர் இயக்கத்திலிருந்து துறைமுகத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு தொழிற்சங்கங்கள் பயன்படுத்திய உறுதிமொழிகள் ஒரு காட்டிக் கொடுப்பு என்பதைத்தான் இது காட்டுகிறது. உண்மையில் துறைமுகத் தொழிற்சங்க தலைவர்கள் இன்று கூட தாங்கள் துறைமுகத் தொழிலாளர்களுக்கும் மற்ற முழுத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கும் இடையே வர்க்க ஒற்றுமையுணர்வை நிறுவுவதற்கு விரோதப்போக்கைக் கொண்டுள்ளதைத்தான் காட்டி வருகின்றனர்.

ஜனவரி 22 அன்று Le Figaro வில் வந்துள்ள ஒரு கட்டுரையில், CGT யின் அதிகாரத்துவ Serge Courouis கூறினார்: “அவர்கள் ஓய்வூதியப் பிரிச்சினையில் எங்களை மாட்டிவிட முயல்கின்றனர். எங்கள் பிரச்சினையோ அதிலிருந்து முற்றிலும் இரு ஆண்டுகளாகத் தொடர்பற்று உள்ளது.” எனவே துறைமுக, ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு CGT எதிராக இல்லை. துறைமுகத்தில் இருக்கும் கடுமையான பணிநிலைமைகளுக்கு அங்கீகாரம் என்றும் அவர்களுடைய கூற்று செப்டம்பர்-அக்டோபர் 2010ல் நடைபெற்ற பரந்த போராட்டங்களின் தன்மைக்கு வெளியே இருப்பது என்று அவர்கள் காண்கிறார்கள்.

பிரான்ஸின் துறைமுகத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் துறைமுகத் தொழிலாளர்களுடைய போராட்டத்துடன் ஒற்றுமையுணர்வு என்பதை முறித்துக் கொள்ளுவதும் இத்துடன் இணைந்துள்ளது. மற்றய ஐரோப்பிய துறைமுகங்களும் பிரான்ஸிற்கு செல்ல இருக்கும் சரக்குக் கப்பல்களிலிருந்து பொருட்களை கீழிறக்க முடிவு செய்து, சரக்குகள் செல்ல முடியாமல் தடைக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆனால் IDC (சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் சபை மற்றும் ஐரோப்பியத் துறைமுகங்கள் தொழிற்சங்கம்) பிரான்ஸில் எல்லை கடந்த போராட்டத்தைத் தவிர்க்கத் தன்னால் முடிந்ததைச் செய்தது.

தன்னுடைய அறிக்கைகளில் IDC வெளிப்படையாக தொழிலாளர் எதிர்ப்புச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அது முதலாளிகளுக்கு உதவும் என்று அறிவித்தது. அதாவது “IDC யில் உள்ள நாங்கள், பிரெஞ்சு அரசாங்கமானது தேசிய CGT துறைமுகக் கூட்டமைப்பு மற்றும் அதன் ஊழியர்களுடன் சமூகப் பங்காளிகளுக்கு இடையே உடன்பாடு அடைவதற்கு மீண்டும் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்று வலுவாகப் பரிந்துரைக்கிறோம். சமூக உரையாடல் ஒன்றுதான் உடன்பாடுகளை அடைவதற்கு வழியாகும். அவைதான் அனைவருக்கும் சாதகமான முறையில் உடன்பாடுகளைக் கொண்டுவரும், குறிப்பாக இப்பொழுது நாம் கடந்து கொண்டிருக்கும் நெருக்கடிக் காலத்தில்.”

பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு தேவையான அனைத்தையும் ஸ்பெயின் ஒருங்கிணைப்பாளர்கள் செய்வர். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் நிதிய மீட்பு நிலையைத் தடுத்துவிடக்கூடிய மோதல்களின் ஏற்றம் என்ற இடரில் விழாமல் அதுதான் பாதுகாக்கும். சமூக உரையாடலில் பிற வெற்றிகரமான முடிவுகளுக்கு உதாரணங்கள் உள்ளன. ஸ்பெயினின் துறைமுகச் சீர்திருத்தங்கள் மற்றும் 2009ன் புதிய சட்டம் ஆகியவைகள் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்றதுடன், ஒரு வழிகாட்டியாகவும் சேவைசெய்ய இதனால் முடியும். பிரஞ்சுத் துறைமுகத் திட்டங்களும் நியாயமானவை, எனவே அந்நாட்டு அரசாங்கத்தால் ஏற்கப்பட வேண்டும்என்று IDC கூறியுள்ளது.

பெப்ருவரி 18ம் திகதி CGT மற்றும் அரசாங்கம் நவம்பர் மாதம் பேசி முடிக்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்ட கடுமையான பணிநிலைமைகள் பற்றி ஒப்பந்தம் செய்து கொண்டன.  கடுமையான பணிநிலைகள் இரு ஆண்டுகள் இருக்க வேண்டும், முதலாளிகள் மூன்றாவது ஆண்டு நிதியளிப்பார்கள், அதன்பின் நான்காவது ஆண்டிற்கான உடன்பாடு 2011ல் ஓய்வூதிய வயது உத்தியோகபூர்வமாக 62 என்ற அடிப்படையில் கையெழுத்திடப்பட வேண்டும் என்று உள்ளது. இது கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் வயதை 58 என்று எனக்கூடுதலாக்கும். இது துறைமுகத் தொழிலாளர்கள் ஓய்வூதிய வயதில் மூன்று ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதற்குச் சமம் ஆகும்.

கப்பல் பழுதுபார்க்கும் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து முறித்துக் கொள்ள வேண்டும். அத்தகைய நிலைமைகள் வேண்டுமென்றே  தொழிற்சங்கங்களால் வளர்க்கப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக அவர்கள் போராட வேண்டும். அனைத்து நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் மற்றய தொழிலாள வர்க்கப் பிரிவில் உள்ளவர்களைப்போல் அதே பிரச்சனைகளைத்தான் கப்பல் பழுதுபார்க்கும் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கிறார்கள்