World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Egyptian protesters storm secret police headquarters

எகிப்திய எதிர்ப்பாளர்கள் இரகசியப் பொலிஸ் தலைமையகத்தை தாக்குகின்றனர்

By Patrick Martin
8 March 2011
Back to screen version

இரகசியப் பொலிசார் தங்கள் செயல்களை மறைப்பதற்கு ஆவணங்களை எரிக்கின்றனர் என்ற தகவல்கள் வெளவந்ததை அடுத்து, பல முன்னாள் அரசியல் கைதிகள் மற்றும் சித்திரவதைப் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் என்று பெரும்பாலானவர்களைக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கெய்ரோ, அலெக்சாந்திரியா மற்றும் பிற எகிப்திய நகரங்களில் அரச பாதுகாப்பு விசாரணை அமைப்பிற்குச் சொந்தமான கட்டிடங்களை முற்றுகையிட்டனர்.

வெள்ளியன்று மார்ச் 4ம் தேதி நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான அலெக்சாந்திரியாவில் தாக்குதல்கள் தொடங்கி, வார இறுதி முழுவதும் தலைநகர் கெய்ரோ இன்னும் பல பிராந்திய நகரங்களிலும் படர்ந்தன. குறைந்தபட்சம் நாடெங்கிலும் உள்ள 11 அரச பாதுகாப்பு அலுவலகங்களில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவணங்களைக் கைப்பற்றினர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சியின் அதிகாரிகளைக் குற்றவிசாரணைக்கு உட்படுத்தும்போது சான்றுகளை அளிப்பதற்கு இந்த ஆவணங்களை பாதுகாக்க அவர்கள் விரும்பினர்.

நேற்று 47 அரச பாதுகாப்பு அதிகாரிகள் ஆவணங்களை எரிக்கின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று தலைமை அரசாங்க வக்கீலின் அலுவலகம் தெரிவிக்கிறது. விசாரணை நடக்க இருப்பதைத் தொடர்ந்து இவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்படுவர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SSI, முபாரக்கின் அரசியல் எதிர்ப்பு மற்றும் உடன்பாடின்மைகளை அடக்குவதற்கு முபாரக்கின் முக்கிய கருவியாக இருந்தது. இதில் கிட்டத்தட்ட 100,000 முகவர்கள் மற்றும் 500,000 தகவல் கொடுப்பவர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க CIA க்கு துணை ஒப்பந்தப்படி சித்திரவதை செய்யும் கருவியாகவும் இது செயல்பட்டது; அமெரிக்க CIA வாடிக்கையாக எகிப்திற்குகடத்தப்பட்டகைதிகளை விசாரணைக்கு அனுப்பிவைத்தது. SSI ஆவணங்கள் வெளிவந்தால், அவை அமெரிக்க மற்றும் எகிப்திய அதிகாரிகள் மனிதகுலத்திற்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களுக்குச் சான்றுகளை தரக்கூடும்.

அலெக்சாந்த்ரியா மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் பெரும் வன்முறையாக இருந்தது; ஆர்ப்பாட்டக்காரர்கள் நாள் முழுவதும் பாதுகாப்புத் தலைமையகத்திற்கு வெளியே கூடி, பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவணங்களை எரிக்கின்றனர் என்ற வதந்தி பரவியவுடன் கட்டிடத்திற்குள் புகுந்தனர். பாதுகாப்புப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் உண்மையான தோட்டாக்களை இயக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்தை தாக்காது கட்டுப்படுத்தினர். நான்கு எதிர்ப்பாளர்கள் காயமுற்றனர், 20 பாதுகாப்புப் பொலிசார் மோசமாக தாக்கப்பட்டனர் என்று செய்தி ஊடகத்திற்கு அங்கு இருந்தவர்கள் கூறினர். பல பொலிஸ் கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

பொலிஸாரை மீட்பதற்கு இராணுவம் தருவிக்கப்பட்டது; ஆனால் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்தை விட்டு நீங்க மறுத்து, ஆக்கிரமிப்பை நிறுவனர்; அதே நேரத்தில் அவர்கள் ஆவணங்களைப் படித்து கிழித்து எறியப்படாத ஆவணங்களை மீட்க முயன்றனர்.

குதுப் ஹசனெய்ன் என்னும் ஆர்ப்பாட்டக்காரர் அசோசியேட்டட் பிரஸிடம் பல எதிர்ப்பாளர்கள் முன்னதாகப் பொலிசால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார். “நாங்கள் அனைவரும் இடர்பட்டோம், இந்த அமைப்பின்கீழ் கொடூரச் சித்திரவதைக்கு உட்பட்டோம்என்றார் அவர்; அவரே இக்கட்டிடத்தில் பல முறை காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். “பழி வாங்க வேண்டும் என்ற பெரிய விருப்பம் உள்ளது. ஆனால் நாங்கள் அனைவரும் ஒரு விசாரணையை அவர்கள் மீது நடத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.” என்று ஹசனெய்ன் முடிவுரையாகக் கூறினார்.

இதற்கு மறுநாள் மாலை இன்னும் பெரிய அளவில் கிட்டத்தட்ட 2,500 மக்கள் கூடி, நாசர் நகரத்தில், கெய்ரோ புறநகர்ப்பகுதியில் SSI இன் தேசிய தலைமையகத்தைத் தாக்க முற்பட்டனர். நன்கு கிழித்தெறியப்பட்ட ஆவணங்கள் அடங்கிய குப்பைப்பைகள் நிறைந்த டிரக்குகளை எதிர்ப்பாளர்கள் பார்த்தனர் என்று கூறப்படுகிறது; பின் அவர்கள் கட்டிடத்திற்குள் முட்டிமோதிக்கொண்டு நுழைந்தனர். வெளியே கைப்பற்றப்பட்ட பல காகிதக் கோப்புக்களையும் கணினியின் hard drives களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பற்றி எடுத்து வந்தனர்; சான்றுகள் அழிக்கப்படாமல் இருப்பதற்குப் பாதுகாப்பாக ஒரு மனிதச் சுவரையும் எழுப்பினர்.

மீட்கப்பட்ட பொருட்களில் ஜனவரி மாதம் ஒரு கோப்டிக் கிறிஸ்துவத் திருச்சபைமீதான தாக்குதல் பற்றி ஆவணங்களும் இருந்தன; இது பரந்த அளவில் அரசாங்கத் தூண்டுகோலின் பேரில் நடந்தது என நம்பப்பட்டதுஅதே போல் அரசியல் உரையாடல் நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டவர்கள் தொலைபேசிகள் ஒற்றுக் கேட்கப்பட வேண்டும் என்ற உத்தரவும் கைப்பற்றப்பட்டது. இவை இரண்டும் வக்கீல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டன.

எகிப்திய மக்களுக்கு, தகவல்கள் வளங்கும் வலைத்தளமான விக்கிலீக்ஸ், சிதைந்த ஆவணங்களைத் தூக்கி எறிய வேண்டாம் என்றும், அவை மீண்டும் முறையாகப் படிக்கப்படுவதற்கு தன் உதவி வழங்கப்படும், அதன் பின்னர் பொதுமக்கள் தகவல் பெறுவதற்கு வெளியிடப்படலாம் என்று முறையீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்துள்ள, அமெரிக்கத் தளத்தைக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் பிரியங்கா மோடபர்த்தி கருத்துப்படி எதிர்ப்பாளர்கள்சித்திரவதைக்குட்பட்ட நன்கு அறியப்பட்ட எகிப்திய நடவடிக்கையாளர்களைப் பற்றிய கோப்புக்களைக் கண்டனர்”, அதே நேரத்தில்சிலர் கட்டிட அறைகளில்கைதிகள் எங்கே என்று கேட்ட வண்ணம் கோஷங்களை எழுப்பினர்.”

நிலத்தடி காவல் அறைகள் மூன்று அடக்குகளிலும் ஆர்ப்பாட்க்காரர்கள் கைதிகள் எவரையும் காணவில்லை; ஆனால் மின்சார அதிரச்சி கொடுக்கும் கருவிகள் உட்பட பல சித்திரவதைக் கருவிகளைக் கண்டுபிடித்தனர்.

நாம் உள்ளே நுழைகிறோம், நம்மைப் பல ஆண்டுகளாகப் பெரும் துயரத்தில் ஆழ்த்திய இரகசியங்களைக் கண்டுபிடிக்கிறோம்.” என்று முன்னாள் கைதி ஹேதம் ஹாசன் வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறினார். “இதுவரை நடந்தது எதையும் விட இது ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கிறது.”

மெர்சா மெட்ரு என்னும் வடமேற்கில் உள்ள நைல் டெல்டா நகரத்தின் SSI தலைமையகத்திலும் ஒரு கூட்டம் முற்றுகையிட்டுத் தாக்கியது; பின் கட்டிடத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டது. பிரெஞ்சு செய்தி நிறுவனமான AFP கூற்றுப்படி, “தலைமையகத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருக்கையில், கடலோரச் சுற்றுலா பகுதியில் வசிக்கும் மக்கள் அருகே இருந்த சிற்றுண்டிச்சாலைகளில் உட்கார்ந்து மனித உரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான காரணத்தைக் கொடுக்கும் ஆவணங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.” 

எகிப்திய செய்தித்தாள் Ahram Online இராணுவம் அலெக்சாந்திரியாவில் SSI தலைமயக வளாகத்தின்மீது கட்டுப்பாட்டைப் பெற்றது என்றும் அக்டோபர் 6 நகர் என்னும் மற்றொரு கறெய்ரோப் புறநகர்மீதான கட்டுப்பாட்டைக் கொண்டது என்றும் Qena, Port Said, Zagazig, Domiat, Tanta ஆகிய நகர்களில் உள்ள SSI கட்டிடங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கிறது. மற்ற தாக்குதல்கள் கெய்ரோப் புறநகரான ஷேக் ஜயிட்டிலுள்ள SSI கட்டிடத்திலும் நைல் டெல்டா சிறுநகரான ஷர்க்கியாவிலும் நடந்தது; அங்கு காவலர்கள் ஆகாயத்தை நோக்கி தோட்டாக்களைச் சுட்டனர்; அதேபோல் தலைநகரத்தின் தெற்கே உள்ள சோலைவன நகரான பேயௌம் நகரத்திலும் இது போல் நடைபெற்றது.

இதற்கிடையில், பரந்த எதிர்ப்புக்களைத் தவிர்க்கும் வகையில், புதிய பிரதம மந்திரியான எசம் ஷரப். வியாழன் அன்று ஆளும் இராணுவக்குழுவால் நியமிக்கப்பட்டவர், ஒரு புதிய உள்துறை மந்திரியை நியமித்துள்ளார். ஞாயிறன்று மன்சூர் அல்-இசவி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுஅனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் குடிமக்களுக்கும் பொலிசுக்கும் இடையே நம்பிக்கையை மீட்பதற்கு எடுக்கப்படும்என்று உறுதியளித்தார். பெப்ருவரி 11ம் திகதி தன் இராஜிநாமாவிற்கு சற்று முன் கடைசி நிமிடத்தில் நியமிக்கப்பட்டிருந்த மஹ்முட் வகடிக்குப் பதிலாக இவர் நியமனம் பெற்றுள்ளார்.

நேற்று ஆயுதப்படைகளின் தலைமைக்குழுத் தலைவரான மஹ்மத் ஹுசைன் தன்தவிக்கு முன் ஒரு புதிய காபினெட் பதவிப்பிரமாணம் செய்விக்கப்பட்டது. இந்த இராணுவ ஆட்சிதான் முபராக் பதவியை விட்டு விலகியபின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

புதிய உறுப்பினர்களில், எகிப்தின் முன்னாள் ஐ.நா. தூதராக இருந்த நபில் எல்அரபி வெளிநாட்டு மந்திரியாக உள்ளார்; மேஜர் ஜேனரல் மன்சூர் எல்-எச்சவி, ஒரு முன்னாள் கெய்ரோ பாதுகாப்புத் தலைவர் உள்நாட்டு மந்திரியாக உள்ளார். உத்தியோகபூர்வஎதிர்த்தரப்புகட்சிகளின் உறுப்பினர்கள் இருவரும் காபினெட் மந்திரிப் பதவியைப் பெற்றுள்ளனர். வப்ட் கட்சியின் மோனிர் பக்ரி அப்டெல் நௌர் சுற்றுலாத்துறை மந்திரியாகவும் டகம்மு கட்சியின் கௌடா அப்டெல் கலிக் எல்சயீத் சமுகப் பாதுகாப்பு மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

முபாரக்கின் எடுபிடிகளில் மிகவும் ஊழல் மிகுந்தவர், மிருகத்தன நடவடிக்கை எடுப்பவர் என்று பெரிதும் வெறுக்கப்பட்டவரும், நீண்ட காலம் பாதுகாப்புப் படைகளின் தலைவராகவும் இருந்த ஹபிப் அல் அட்லிக்குப் பதிலாக வக்டி வந்துள்ளார். அல் அடியின் அடாவடித்தனம் இருந்த மோசமான தன்மையை ஒட்டி இராணுவக்குழு அவரைக் கைது செய்து பணம் மாற்றுதல் இன்னும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தும் கட்டாயத்தைக் கண்டது; இவ்விசாரணை சனிக்கிழமை அன்று தொடங்கியது.

பிரதம மந்திரி ஷரப்ஆவணங்கள், அறிக்கைகள் என்று அரச பாதுகாப்பு தலைமையங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை அனைத்தும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றஅவசர முறையீட்டை வெளியிட்டார். “இவற்றின் பொருளுரைகள் ஆபத்தானவைஎன்றும் அவர் குறிப்பிட்டார்.

ஞாயிறன்றும் வன்முறை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன; கெய்ரோவின் லாஜோக்லிப் பகுதியில் உள்ள SSI தலைமையகத்திற்கு வெளியே ஒரு கூட்டம் குழுமியது. ஆயுதமேந்திய குண்டர்கள் கத்திகளை வைத்துக் கொண்டு எதிர்ப்பாளர்களை கற்களால் தாக்கி, கலைக்க முற்பட்டனர், துருப்புக்கள் தலையிட்ட பின்னர், SSI கட்டிடத்தைப் பாதுகாப்பதற்கு எச்சரிக்கைத் தோட்டாக்கள் விடப்பட்டபின், ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கி மத்திய தஹ்ரிர் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.