World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Western powers exploit Libyan crisis to step up intervention plans

லிபிய நெருக்கடியை பயன்படுத்தி மேற்கத்தைய சக்திகள் தலையிடுவதற்கான திட்டங்களை முடுக்கிவிடுகின்றன

By Mike Head
5 March 2011
Back to screen version

லிபியாவில் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்த்தல் என்னும் இழிந்த மறைப்பு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயம்மர் கடாபி ஆட்சிக்கு எதிராக இயக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இராணுவத் தலையீடு வரலாம் என்ற தயாரிப்புக்களுக்கு இடையே அமெரிக்க மரைன்கள் லிபிய கடலோரத்திற்கு அருகே அமெரிக்கப் போர்க் கப்பல்களை நிறுத்துவதற்காக கிரேக்கத்திற்கு வந்துள்ளனர். அமெரிக்க இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் விமானங்களும் துனிசிய-லிபிய எல்லைக்கு விமானங்களை இயக்கத் தொடங்கிவிட்டன.

கடாபியின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி என்று தொடங்கியது பெருகியமுறையில் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியிலுள்ள ஒரு இடைக்கால நிர்வாகத்தின் உதவியுடன் ஒரு ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு போலிக்காரணமாகிவிட்டது. இத்தகைய நடவடிக்கை லிபியாவில் நடைமுறையில் ஒரு வாடிக்கைத் தன்மையான அரசை நிறுவத்தான் உதவும். இது ஏகாதிபத்தியச் சக்திகள் நாட்டின் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மொரோக்கோவிலிருந்து ஈராக் வரை பிராந்தியம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு எதிரான ஒரு கோட்டையாக மாற்றவும்தான் வகை செய்யும்.

பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் ஜனாதிபதி பராக் ஒபாமா வியாழனன்று வெளியிட்ட அறிக்கையை வரவேற்றுள்ளனர். இதில் அவர் கடாபி அகற்றப்பட வேண்டும் என்றும் லிபியாவில்பறக்கக் கூடாத பகுதியை இராணுவத்தின் மூலம் செயல்படுத்தும் திட்டம் இல்லை என்பதை மறுக்கத் தயாராக இல்லை. அவருடைய கருத்துக்கள் ஆட்சியை அகற்றி, பெங்காசியில் உருவாக்கப்படும் வளைந்து கொடுக்கும் அரசாங்கம் போன்றதை நிறுவும் செயலுக்கு ஆதரவு கொடுக்க அமெரிக்கா தயாராக இருக்கும் என்பதின் அடையாளங்களைத்தான் வெளிப்படுத்துகின்றன.

லண்டனைத் தளமாகக் கொண்ட கார்டியன் பறக்கக் கூடாத பகுதிக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு பிரிட்டனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் முன்னதாக அழைப்பு விடுத்திருந்த பிரிட்டிஷ் பிரதம மந்திரி, “வியாழன் இரவு பராக் ஒபாமாவினால் முக்கிய ஆதரவு அளிப்பைப் பெற்றார். அமெரிக்க இராணுவத் திட்டமிடுவோர் பறக்கக் கூடாத பகுதி உட்பட முழு விருப்பத் தேர்வு வகைகளையும் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். வெள்ளை மாளிகையில்  ஓபாமா மெக்சிகன் ஜனாதிபதி இபெலிபே கால்டெரோனுடன் நிகழ்ந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் என்று நேற்று தகவல் கொடுத்துள்ளது.

காமெரேனும் ஒபாமாவும், “கூடுதலான பேரழிவிற்கு மனிதாபிமான நடவடிக்கை தேவை என்றாலோ கடாபி இன்னும் ஆக்கிரோஷம் அடைந்தாலோ, கடாபி பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்ற முழுத் தேவை ஏற்பட்டாலோ, அதற்கான இராணுவத் தயாரிப்பு தேவைஎன்பது பற்றிக் காமெரோனும் ஒபாமாவும் இப்பொழுது உடன்பட்டுள்ளனர் என்றும் பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறியுள்ளது.

லிபிய நெருக்கடியை எதிர்கொள்வதில் முன்னணியிலிருக்கும் தோற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் அளிக்க வேண்டும் என்பது பற்றி வாஷிங்டன் காமரோன் மற்றும் பிற ஐரோப்பியத் தலைவர்களுக்கு ஐயத்திற்கு இடமின்றித் தெரிவித்துள்ளதாக கார்டியன் கூறுகிறது. அதற்காக காமெரோன் ஒரு பறக்கக்கூடாத பகுதிக்காக வெளிப்படையாக வாதிட்டார். இப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் அடுத்த வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர கூட்டம் ஒன்று நடத்துவதற்கான திட்டங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்.

.நா.வின் தடுப்பதிகாரம் (veto) கொண்டுள்ள ரஷ்ய அரசாங்கம் பகிரங்கமாக ஒரு பறக்கக் கூடாத பகுதியை எதிர்த்துள்ளது. ஆனால் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியிம் ஹேக்உயர் சிந்தனையளவில் அத்தகைய பகுதிக்கு ஐ.நா. இசைவு தேவை என்றாலும், அது முக்கியமில்லை என்று கூறினார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் பறக்கக் கூடாத பகுதி ஈராக்கில் சதாம் ஹுசனை ஆட்சியை அகற்றுவதற்குமுன் தொடக்க நடவடிக்கைகளாக எடுக்கப்படவில்லை என்றும் படையெடுப்பிற்கும் பாதுகாப்புச் சபையின் இசைவைப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

பகிரங்கமாகவேனும் வாஷிங்டன் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதற்கு துல்லியமான காரணம் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெறுப்பு நிறைந்த வரலாறு இருப்பதுதான். இதில் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் தற்பொழுது நடந்து வரும் போர்கள் என்பது மட்டும் இல்லாமல், இரண்டாவது உலகப் போருக்குப் பின் லிபியாவிலேயே இது கையாண்ட அடக்குமுறைப் பங்கும் அடங்கியுள்ளது.

லிபியாவில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவும் பிரிட்டனும் இத்தாலி தோற்றதைப் பயன்படுத்திக் கொண்டு லிபிய மக்களை மிருகத்தனமான அடக்குவதை தொடர்ந்தனர். மக்களில் பாதிப்பேர் 1911-1943ல் இத்தாலிய ஆட்சியின் கீழ் மடிந்து போயிருந்தனர். ஒரு கைப்பாவை அரசர் முதலாம் ஐடிரிஸ் 1951 ம் ஆண்டில் உத்தியோகபூர்வமான சுதந்திரத்திற்குப் பின்னர் இருத்தப்பட்டார் என்றாலும், லிபியாவின் நவ காலனித்துவ அந்தஸ்து தொடர்ந்தது. இது பெரும் அமெரிக்க நிறுவனமான US Wheelus ன் விமானத்தளத்தை திரிப்போலிக்கு அருகே நிறுத்தியதில் நடைமுறையில் அடையாளமாக ஆயிற்று. திரிப்போலி வட ஆபிரிக்கா முழுவதிற்கும் அமெரிக்க இராணுவச் செயற்பாடுகளின் மையமாயிற்று.

1958ம் ஆண்டு எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆதிக்கம் லிபியா மீது இறுக்கப்பட்டதைத்தான் காட்டியது. இதற்கான விரோதப் போக்குத்தான் 1969ம் ஆண்டு கேணல் கடாபியின் இராணுவரீதியான ஆட்சிமுறை மாற்றத்திற்கான சூழ்நிலையை தோற்றுவித்தது. கடாபியின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று வீலஸ் தளத்தை மூட வேண்டும் என்பதாகும். லிபியாவின் எண்ணெய்த் தொழில் துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவை தொடக்கத்தில் கேணலுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புச் சான்றுகளையும் மக்கள் ஆதரவுத்தளத்தையும் வழங்கின.

துனிசிய-லிபிய எல்லைகளில் அகதிகள் முகாம்களில் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான எகிப்தியர்களை பல விமானங்கள் மூலம் திருப்பிக் கொண்டுவருவதற்காகத் தான் விமானங்களை அனுப்ப உள்ளதாக நேற்று பிரிட்டன் கூறியது. பிரான்ஸ் தான் ஒரு ஹெலிகாப்டரை லிபிய கடலோரப்பகுதிக்கு அனுப்பி மக்களை பாதுகாப்பாக மீட்க உதவ உள்ளது என்று கூறியது. பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் எல்லைப் பாதுகாப்புக் கப்பல்களில் ஒன்று, லிபியாவிற்குச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்தியதாகவும் அதில் இருந்துகணிசமான அளவு லிபிய நாணயங்கள் கைப்பற்றப்பட்டனஎன்றும் கூறியுள்ளது.

இராணுவரீதியாகத் தலையீடு செய்வதற்கு வாஷிங்டனும் தயார் செய்து கொண்டிருக்கிறது. லிபியாவிலிருந்து வெளியேறும் கிட்டத்தட்ட 180,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சிலரையாவது பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இரு அமெரிக்க கடல்-தரையில் செல்லும் போர்க் கப்பல்கள் USS Kearsarge மற்றும் USS Ponce இரண்டும் மத்தியதரைக் கடலிலுள்ள USS Berry உடன் சேர்ந்துகொண்டன. 400 மரைன்கள் கிரேக்கத் தீவான கிரேட்டிலுள்ள Souda Bay ல் உள்ள கடற்படைத்தளத்திற்கு விமானத்தில் அனுப்பப்பட்டனர். இவர்கள் Kearsarge க்கு அனுப்பப்படுவதற்கு தயார்நிலையில் உள்ளனர். தளத்தின் செய்தித்தொடர்பாளர் Paul Farley இவர்கள்லிபியாவை பொறுத்தவரையில் கையாளப்படும் முழு வளைந்து கொடுக்கும் விருப்பத் தேர்வுகளில் முக்கிய இடத்தைப் பெறும் வகையில் அவசரகால திட்டங்களின் ஒரு பகுதியாக உள்ளனர்என்றார்.

பென்டகனுடைய செய்தித் தொடர்பாளர் கேணல் டேவிட் லாபன் வெள்ளியன்று லிபிய-துனிசிய எல்லைக்கு இரு சரக்கு விமானங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்றும் இன்று துனிசிய எல்லைப் புறத்தில் அகதிகளை வெளியேற்றும் ஒரு திட்டம் உள்ளது என்றும் கூறினார். ஆனால் கப்பல்கள் போக்குவரத்து உட்பட முழு இராணுவ முயற்சிகளுக்கும் Operation Odyssey Dawn எனப் பெயரிடப்பட்டதாக அவர் அறிவித்தார்.

மேற்கத்தைய சக்திகள் ஒருதலைப்பட்சமாகச் சுமத்தியுள்ள பொருளாதாரத் தடைகள் கடாபியின் ஆட்சியை முடக்கவும் லிபிய சொத்துக்களைக் கைப்பற்றவும்தான் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் செனட்டின் வெளியுறவுக் குழுவிடம் வியாழனன்று அமெரிக்கா லிபிய அரசாங்க நிதியான Libyan Investment Authority வைத்துள்ள $32 பில்லியன் டொலர் சொத்துக்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை ஒபாமாசர்வதேச அளவில் இதுகாறும் சுமத்தப்பட்டவற்றுள் மிக விரைவான, சக்திவாய்ந்த தடைத்தொகுப்புக்கள் இவைஎன்று விவரித்துள்ளார். அன்றே பிரிட்டிஷ் அரசாங்கம் இதேபோன்ற முடக்கும் நடவடிக்கைகளை எடுத்தது. அதில் $3.2 பில்லியன் டொலர் மதிப்புடைய HSBC வங்கியில் போடப்பட்டிருந்த சேமிப்புக்கள் அடங்கும். இவை கடாபி மற்றும் அவருடைய குழந்தைகளுடன் தொடர்புடைய $1.6 பில்லியன் டொலர் சொத்துக்களைத் தவிர என்பது கருத்திற்கொள்ளப்பட வேண்டும்

இத்துடன் தொடர்புடைய ஒரு நடவடிக்கையாக, சர்வதேசப் பொலிஸ் அமைப்பான Interpol ஒரு சர்வதேசஆரஞ்சு நிற அறிவிப்பை” “குடிமக்கள் மீது வான்தாக்குதல் உட்பட திட்டமிட்ட பல தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் அல்லது உடந்தையாக இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதைக்கொடுத்துள்ளது. லிபிய ஆட்சி அரசாங்க-எதிர்ப்பாளர்கள் மீது கொலைக்காரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றாலும்கூட, மேற்கத்தைய அதிகாரிகள் அத்தகைய குற்றங்களை நிரூபிக்க, கடாபியைக் கைப்பற்றத் தேவையான படைகளை அனுப்புவதை நியாயப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகளைக் கொடுக்கவில்லை.

அமெரிக்க அரசியல் நடைமுறைக்குள்ளேயே, ஒரு தலையீட்டிற்கான அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் மற்றும் முன்னாள் ஜனநாயகக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ லிபர்மன் இருவரும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டு வெள்ளை மாளிகைஅறநெறி மற்றும் மூலோபாயக்காரணங்களுக்காக விரைவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வாஷிங்டனிலுள்ள Brookings Institution ல் பேசுகையில் அமெரிக்கக் கொள்கை இயற்றுபவர்களுக்கு உந்துதல் கொடுக்கும் பிற்போக்குத்தன கணக்கீடுகளின் போக்கு பற்றி வெளிப்படுத்தினார். லிபியா, எகிப்து மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் காணப்படும் புரட்சிகர இயக்கம்அரபு உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் தொடரும்என்றும், “உலகம் முழுவதும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

லிபியாவிற்குள் கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா அப்டெல் ஜலில், இப்பொழுது பெங்காசியிலுள்ள எதிர்ப்பு தேசிய லிபியச் சபையின் தலைவராக உள்ளவர், வெளிநாட்டு விமானத் தாக்குதல்கள் மற்றும் ஒரு பறக்கக் கூடாத பகுதி ஆகியவற்றைக் கோரியுள்ளார். சபைக்குள்ளேயே ஆதாரத்தை மேற்காட்டியுள்ள நியூயோர்க் டைம்ஸ்மற்றவர்கள் முற்றிலும் மாறுபட்ட வலுவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தமுறையில் சபையிலேயே பெரும் சூடான விவாதத்திற்குப் பின்னர் ஏற்கப்பட்டது என்று எழுதியுள்ளது. கடாபிக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்களுக்குள்ளேயே அத்தகைய கோரிக்கைகளுக்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. அதற்குக் காரணம் மீண்டும் புதிய முறையிலான காலனித்துவ ஆட்சிக்கு திரும்பிவிடக்கூடும் என்ற அச்சங்கள்தான்-- லிபிய இறைமையின் காவலர் என்று காட்டிக் கொள்ளுவதற்கு அதை கடாபி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் பெங்காசியில் முதலாளித்துவ எதிர்ப்பு லிபியாவைக் கொள்ளையடித்த இதே சக்திகள் தலையிடுவதற்கு வசதியாகக் காட்டும் ஆர்வம் வரலாற்றளவில் அவர்களுடைய வர்க்க நலன்களான ஆட்சிக்கு எதிராக கீழிருந்து வரும் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியை தடுத்தல் என்பதில் வேர்களைக் கொண்டுள்ளது.

கடாபியின் தலைமையிலிருந்து சமீபத்தில் வெளியேறிவிட்ட மற்றவர்களை அடக்கியுள்ள எதிர்ப்புச் சபைக்கு ஜலில் கொடுத்துள்ள அழைப்பு, மேற்கத்தைய சக்திகளுடனும் எண்ணெய் நிறுவனங்களுடனும் நெருக்கமான உறவுகளில் நுழைய முற்றிலும் தயாராக உள்ளது என்பதைத்தான் நிரூபிக்கிறது. வாஷிங்டன், லண்டன், ரோம் இன்னும் பல தலைநகரங்கள் கடந்த தசாப்தங்களில் பெரும் இலாபகரமான உறவுகளை வலுப்படுத்தியதற்கு ஒப்பான நிலைப்பாட்டைத்தான் இது காட்டுகிறது.

லண்டனின் Daily Telegraph பிரிட்டிஷ் அதிகாரிகள் கடாபியின் முன்னாள் அதிகாரிகளுடன் பிரிட்டிஷ் அதிகாரிகள் பேச்சுக்களைவருங்காலத் தலைவர்கள் என்னும் திறன் உடையவர்களைஅடையாளம் காண்பதற்கு நடத்தியுள்ளனர் என்று தகவல் கொடுத்துள்ளது. இவர்கள் முன்னாள் உள்துறை மந்திரியும் லிபியச் சிறப்புப் படைகளின் தலைவருமான ஜெனரல் ஒபைடியும் ஒருவர் ஆவார். செய்தித்தாளிடம் பிரிட்டன்இணைந்து செயலாற்றக் கூடியவராகஒபைடி உள்ளார் என்று டௌனிங் தெரு ஆதாரம் ஒன்று செய்தித்தாளிடம் கூறியது.

கடாபி ஆட்சி, எதிர்ப்பாளர்களை மிருகத்தனமான முறையில் தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்று திரிப்போலிக்கு வெளியே டஜௌரா என்னும் வறிய புறநகரத்தில் 1969க்கு முந்தைய கொடிகளை அசைத்து, கோஷங்களை முழக்கிய கிட்டத்தட்ட 1,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமைப் பிரார்த்தனைக்கு பின்னர் பொலிசால் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் தோட்டக்கள் பயன்படுத்தப்பட்டுக் கலைக்கப்பட்டனர். நகரத்தின் மற்ற பகுதிகளும் இராணுவப் படைகள், பொலிசார் மற்றும் AK-47 களை ஏந்தியிருந்த சாதாரண உடை உடுத்திய பொலிசார் ஆகியோர் நிரம்பியிருந்த ஏராளமான வாகனங்களால் ரோந்திற்கு உட்பட்டன.

திரிப்போலிக்கு மேற்கே 60 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள ஜவியாவில் வசிக்கும் மக்கள் ராய்ட்டர்ஸிடம் குறைந்தபட்சம் 30 பேராவது அரசு சார்பு படைகள் நகரத்தை மீட்பதற்காக மேற்கொண்ட முயற்சியில் கொல்லப்பட்டனர் என்று கூறினர். இதில் சிறுநகரத்தில் எதிர்ப்புத் தளபதியும் அடங்குவார். பகுதிவாழ் மக்கள் கருத்துப்படி கடாபிச் சார்புடைய போராளிகள் சிறுநகரத்தின் மருத்துவமனைக்கு முன்னே அமைதியான எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஏழு பேரைக் கொன்றனர் மற்றும் பலரைக் காயப்படுத்தினர்.

செய்தி ஊடகம் தகவல் கொடுப்பதைத் தடுக்கத் தீவிர முயற்சிகளைக் கொண்டுள்ளபோதிலும் கூட, பாதுகாப்புப் படையினர் ஏராளமான பேரைக் காவலில் வைத்துள்ள சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்த அமைப்பு திரிப்போலியில் பலர் காணாமற்போய் இருப்பது, பாலியல் வல்லுறவிற்குட்பட்டது பற்றிய தகவல்களை பெற்றுள்ளதாகவும் அவற்றைச் சரிபார்த்து வருவதாகவும் உறுதிப்படுத்தினார்

மற்ற இடங்களிலும் அவ்வப்பொழுது மோதல்கள் நிகழ்ந்தன. குறிப்பாக முக்கிய எண்ணெய் நிலையங்களை சூழ்ந்திருக்கும் பகுதிகளில். நாட்டின் கிழக்கே எதிர்ப்புச் சக்திகள் தாங்கள் இன்னும் மேற்கே சென்று Ras Lanuf மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளன. இது ஒரு எண்ணெய் இறுதிப்பகுதி ஆகும். இது ஒரு மூலோபாயக் கடலோரச் சாலையில் கிழக்கிற்கும் கடாபியின் பிறந்த இடமான சிர்ட்டேக்கும் நடுவே உள்ளது. ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.