WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Global
forces driving Middle East uprisings
மத்தியகிழக்கு எழுச்சிகளுக்கு பூகோள சக்திகள் உந்துதல் அளிக்கின்றன
Nick Beams
5 March 2011
ஜனவரியில்
துனிசியாவில்
ஆரம்பித்து,
அதைத்தொடர்ந்து
எகிப்திலும் இப்போது
அப்பிராந்தியம்
முழுவதிலும்
பரவிவரும் மத்தியகிழக்கு
எழுச்சிகள்
பரவிவரும்விதம்,
சிலவேளைகளில்
ஒருவகைத்
தொற்றுநோயைப் போல
தெரிகிறது.
ஒருநாட்டிலுள்ள
தொழிலாளர்களும்,
இளைஞர்களும்
மற்றொருநாட்டில்
நடைபெறும்
பெரும் சமூக
போராட்டங்களிலிருந்து
தூண்டலையும்,
பலத்தையும்
பெற்றிருக்கிறார்கள்,
பெறுவார்கள்
என்பதில் சந்தேகமே
இல்லை.
ஆனால்,
பகுப்பாய்வின்
முடிவாக,
இந்த
சம்பவங்கள் நகரும்
வேகம்,
உலக பொருளாதாரத்தில்
வேரூன்றியுள்ள ஆழமான
வழிமுறைகளின்
விளைவுகளில் தங்கியுள்ளது.
இந்த நிகழ்போக்குகள்
தான் உலகின் ஒவ்வொரு
மூலைமுடுக்குகளிலும்
இயங்கிவருகின்றன.
இதுவரையில்
மூன்று முக்கிய
புயல் மையங்களாக
இருந்துவரும் துனிசியா,
எகிப்து,
மற்றும் லிபியா
ஆகிய மூன்றிலுமே
சமீபத்திய
காலக்கட்டத்தில்
நிகழ்ந்திருந்த
நவ-தாராளவாத
"சுதந்திர
சந்தையின்"
மறுகட்டமைப்பின்
ஒரு பரந்த
வேலைதிட்டம் தான்,
அவற்றிலிருக்கும்
மிக பொதுவான,
வெளிப்படையான
தன்மைகளாக உள்ளன.
பெருமளவிற்கான
தனியார்மயமாக்கம்
உட்பட,
தேசிய பொருளாதாரம்
மற்றும் நிதியியல்
நெறிமுறைகளை
சுருட்டியடித்த,
ஆயிரக்கணக்கான
வேலைகளை நாசமாக்கிய,
மற்றும் அரசு
மானியங்களை வெட்டிய,
இந்த கொள்கைகள்
சர்வதேச நாணய
நிதியத்தால்
உலக நிதியியல் மூலதனத்தின்
சார்பாக
மேற்பார்வை
செய்யப்படுகின்றன.
கடந்த
அக்டோபரில்,
சர்வதேச நாணய
நிதியம்
வெளியிட்ட ஓர்
அறிக்கையில் அது
மத்தியகிழக்கு
மற்றும் வடக்கு
ஆபிரிக்காவில்
பொதுவாக சந்தைபோட்டி
குறைவாக
இருப்பதாக காட்டி
புலம்பியது.
இருப்பினும்,
அது இரண்டு
"வெற்றி
கதைகளையும்"
குறிப்பிட்டது.
"எளிமையான
நெறிமுறை,
நவீன
உள்கட்டமைப்பு,
அரசாங்க
ஊக்குவிப்பு
சலுகைகள்,
நன்கு பயிற்சிபெற்ற
மற்றும் மலிவுகூலி
தொழிலாளர்களை
உருவாக்கும் அறிவுசார்
பொருளாதாரத்திற்கு
பொறுப்பேற்றிருக்கும்
அரசாங்கம்"
ஆகியவற்றுடன்
துனிசியா
அப்பிராந்தியத்தின்
"வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு
சேவை
செய்யும்
மையமாக"
ஆகியிருந்தது.
கடந்த டிசம்பரில்
ஓர் இளம்
வேலைவாய்ப்பற்ற
தொழிலாளி தன்னைத்தானே
கொளுத்திக்
கொண்ட சம்பவம்,
துனிசிய
எழுச்சிக்குத்
தூண்டுகோலாக அமைந்தது.
எகிப்தைப்
பொறுத்தவரையில்,
"வியாபார சூழலுக்கு
ஏற்ற
அபிவிருத்திகளுக்கு"
இட்டுச் செல்லும்
வகையில்,
சமீபத்திய
"கட்டமைப்பு
சீர்திருத்தங்களுடன்"
அது உலகளாவிய
தகவல்தொழில்நுட்ப
முதலீடுகளைக்
கணிசமாக ஈர்த்திருந்தது.
லிபியாவும்
கூட பிரகாசமான
அறிக்கைகளுக்குரிய
விஷயமாக
ஆகியிருந்தது. "லிபிய
அதிகாரிகள்
பொருளாதாரத்தில்
தனியார்துறைகளின்
பங்களிப்பை
அதிகரிக்க
முயற்சியெடுத்து வருவதாக,"
கடந்த ஆண்டு
அக்டோபர் 28இல்
சர்வதேச நாணய
நிதியம்
குறிப்பிட்டது.
"ஏற்புடைய"
நிதியியல் சந்தைகளை
ஆழப்படுத்தும்
முயற்சிகளை
அது பாராட்டியதுடன்,
அங்கே அரசுடைமை
வங்கி எதுவும் இல்லை
என்றும்,
அந்நாட்டில்
செயல்பட்டு வரும்
16 வங்கிகளில் ஆறில்
"வெளிநாட்டுப்
பங்காளர்களும்"
இணைந்துள்ளதாகவும்
அது குறிப்பிட்டுக்
காட்டியது.
அரசதுறை
சேவைகளில்
வேலைவாய்ப்புகளைக்
குறைப்பதிலும்
"முன்னேற்றம்"
செய்யப்பட்டிருந்ததாக
குறிப்பிட்ட
சர்வதேச நாணய நிதிய
அறிக்கை,
340,000 பொதுத்துறை
சேவை தொழிலாளர்கள்
ஆட்குறைப்பிற்காக
ஒரு மத்திய
தொழிலாளர்
அலுவலகத்திற்கு
மாற்றப்பட்டிருந்ததாகவும்,
சுமார் கால்
பகுதியினர் வேறு
வருமானத்தைத்
தேடி சென்றுவிட்டதாகவும்
அது குறிப்பிட்டுக்
காட்டியது.
ஆட்குறைப்பு
திட்டத்தை
"துரிதப்படுத்தவும்"
அது அழைப்பு
விடுத்திருந்தது.
வெகுசமீபத்தில்,
இந்த ஆண்டின்
பெப்ரவரி
9இல்,
கடாபிக்கு எதிரான
எழுச்சி
தொடங்குவதற்கு வெறும்
ஒரு வாரத்திற்கு
முன்னர்
தான் அது,
வங்கிகளைத்
தனியார்மயமாக்கும்
"கவர்ச்சிகரமான
வேலைத்திட்டத்தையும்",
"வளர்ந்துவரும்
நிதியியல் துறையின்
அபிவிருத்தியையும்"
குறிப்பிட்டுக்
காட்டியிருந்தது.
மேலும் ஏனைய
துறைகளில்
செய்யப்பட்ட கட்டமைப்பு
சீர்திருத்தங்களைப்
பாராட்டியதுடன்,
"தனியார்துறை
அபிவிருத்தியை
வளர்த்தெடுக்கவும்,
அன்னிய நேரடி
முதலீட்டை
ஈர்க்கவும்"
சிறப்பாக
எடுத்துக்காட்டும்
விதத்தில்,
கடந்த ஆண்டு
கொண்டுவரப்பட்ட
"முக்கிய
சட்டங்களையும்"
அது
புகழ்ந்திருந்தது.
அதிகாரிகளின்
கவர்ச்சிகரமான
சீர்திருத்த
திட்டங்களுக்காகவும்,
"தொழிலாளர்கள்
சக்தியை பொருளாதார
மாற்றத்திற்குப்
பயன்படுத்திக் கொள்ளும்
நோக்கிலிருந்த
கொள்கைகளுடன்
சேர்ந்து,"
கடந்த
ஆண்டு கொண்டு
வரப்பட்ட பல
முக்கியமான
சட்டங்களுக்காகவும்,
சர்வதேச நாணய நிதிய
இயக்குனர்கள்
அவர்களை
ஆதரித்திருந்தனர்.
இந்த
பின்புலத்திற்கு
எதிராக
பார்த்தால்,
மத்தியகிழக்கில்
ஏற்பட்டிருக்கும்
எழுச்சிகள்
ஒரு பரந்த
முக்கியத்துவத்தைப்
பெறுகின்றன.
இவைதான்,
கடந்த
20 ஆண்டுகளில்
தொழிலாள
வர்க்கத்தின் சமூக
நிலைமைகள்மீது
இதுபோன்றவொரு நாசகரமான
தாக்கத்தைக்
கொண்டிருந்த "சுதந்திரச்
சந்தை"
வேலைத்திட்டத்திற்கு
எதிராக எழுந்த,
முதல் எழுச்சிகளாக
உள்ளன.
தனியார்மயமாக்கம்,
ஆழமடைந்துவரும்
சமூக சமத்துவமின்மை,
அதிகரித்துவரும்
இளைஞர்களுக்கான
வேலைவாய்ப்பின்மை,
பல்கலைக்கழக மற்றும்
கல்லூரி
பட்டதாரிகளுக்கு
சரியான வாய்ப்புகள்
கிடைக்காத
நிலைமை,
நியாயமான
கூலிகளில் வீழ்ச்சி,
பெரும்
செல்வவளங்களின்
திரட்சி,
இத்தகைய
விளைவுகளை
ஏற்படுத்திய
கொள்ளையடிக்கும் குற்றவியல்
நடவடிக்கைகளாக
மட்டும் தான்
அவற்றை விவரிக்க முடியும்.
இவை
மத்தியகிழக்கில்
மட்டுமல்ல,
மாறாக உலகளாவிய
நிகழ்வுபோக்காக
உள்ளன.
நிதி
மூலதனத்தின்
"சுதந்திர
சந்தை"
திட்டம்
எழுச்சிகளுக்கான
புறநிலை
பொருளாதார அஸ்திவாரங்களை
அமைத்து
கொடுத்திருக்கின்றன
என்றபோதினும்,
உலக
நிதியியல்
நெருக்கடியை ஒட்டி,
நிதியியல்
அதிகாரிகளின்
நடவடிக்கைகள்
முக்கியத்துவமிக்க
ஆரம்பகட்ட தூண்டுதலை
அளித்துள்ளன.
எண்பது
ஆண்டுகளின்
மிகப்பெரிய
பொருளாதாரப் பேரழிவை
எதிர்கொண்டிருந்த
நிலையில்,
தொழிலாள
வர்க்கத்தின்
நிலைமைகள் மீது
காட்டுமிராண்டித்தனமான
தாக்குதல்
நடத்திக்கொண்டே,
நெருக்கடிக்கு
இட்டுச்சென்ற அதே
கொள்கைகளையே
தொடர்ந்து கொண்டிருப்பது
தான்,
ஒபாமா
நிர்வாகத்தின்
மற்றும்
அமெரிக்க மத்திய வங்கிகள்
கூட்டமைப்பு
ஆணையத்தின்
விடையிறுப்பாக உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட
அல்லது குற்றவியல்
நடவடிக்கைகளுக்காக
வழக்கின்கீழ் தலைமை
நிர்வாகிகள்
கொண்டு வரப்பட்ட சம்பவங்களை
விடுத்து பார்த்தால்,
நெறிமுறையிலிருந்தோ
அல்லது
கட்டுப்பாடுகளில்
இருந்தோ
வெகுதூரத்தில்
இருக்கும் வங்கிகள் மற்றும்
நிதியியல்
அமைப்புகளுக்கு,
ஊகவணிகங்கள் மற்றும்
நிதியியல்
சூழ்ச்சிகளின்
மூலமாக அவை இன்னும்
பெருந்திரளாக
இலாபங்களைக் குவிக்கும்
வகையில்,
மத்திய
வங்கியால் மிகமலிவாக
கடன்
வழங்கப்பட்டுள்ளது.
கடந்த
நவம்பரில்
வாஷிங்டன்
போஸ்டில்
பிரசுரிக்கப்பட்ட ஒரு
கட்டுரையில் மத்திய
வங்கிகள்
கூட்டமைப்பு ஆணைய தலைவர்
பென் பெர்னான்கே
பகிரங்கமாகவே
அறிவித்ததைப் போல,
நிதியியல்
அமைப்புமுறைக்குள்
நூறு
பில்லியன் கணக்கான
டாலர்களைப்
பாய்ச்சியிருந்த
"பணத்தைப்
புழக்கத்தில்விடும்"
(Quantitative easing - QE)
கொள்கை
என்றழைக்கப்படுவதன்
நோக்கமே,
பங்குச்சந்தை
விலைகளை உயர்த்துவது
தான்.
பங்குகள் மட்டுமல்ல,
மாறாக சொத்து
வியாபாரம்,
நிலம்,
இதர பொருட்கள்,
உணவுப்பொருட்கள்
உட்பட அனைத்து
சொத்துக்களும்,
ஊகவணிகத்தின்
மூலமாக இலாபங்களை
திரட்ட
கோரும் பரந்த நிதி
மூலதனத்தின்
இலக்குகளாக
இப்போது ஆகியுள்ளன.
உலகளாவிய
பண்ட பரிவர்த்தனை
வர்த்தகத்தின்
வாய்ப்புகள் மற்றும்
சாத்தியக்கூறுகளின்
எண்ணிக்கை 2005
மற்றும்
2010க்கு
இடையில்
நான்குமடங்காகி
உள்ளதாகவும்,
இதில்
உணவுப்பொருட்களின்
வர்த்தகம்
மட்டும்
"சிறியளவிலும்,
ஆனால் வெகு-வேகமாக
வளரக்கூடிய
பங்குகளாக
இருப்பதையும்"
ஐக்கிய நாடுகள்
சபையின் குழந்தைகள்
நிதித்துறையின்
(UNICEF) பணியாளர்
ஒருவரால்
செய்யப்பட்டிருந்த
ஒரு சமீபத்திய ஆய்வு
கண்டறிந்தது.
ஊகவணிகத்தின்
உயர்வு,
எண்ணெய்
விலையுயர்வுக்கு
உதவியுள்ளது.
உணவு மற்றும் வேளாண்மை
அமைப்பின்படி
(FAO),
பால்பொருட்கள்,
மாமிசம்,
சர்க்கரை,
தானியவகைகள் மற்றும்
எண்ணெய் விதைகள்
போன்றவற்றை
உட்கொண்டிருக்கும் சர்வதேச
உணவு பண்டங்களுக்கான
விலைக்குறியீடு
கடந்த ஆண்டு
ஜூன் மற்றும் டிசம்பர்
மாதங்களுக்கு
இடையில் 30
சதவீதத்திற்கும்
மேல் உயர்ந்துள்ளது.
வளர்ந்துவரும்
பல நாடுகளில்
சத்துணவுகளில்
மூன்றில் இரண்டு மடங்கு
பயன்படுத்தப்படும்
ஒரு
உணவுப்பொருளான முக்கிய
தானியவகைகளின் விலை,
"அதே
காலக்கட்டத்தில் 57
சதவீதத்தையும்விட
அதிகமாக உயர்ந்தது."
2007-2008இல்
அதிகபட்ச விலையை
எட்டியிருந்த
உணவுப்பொருட்கள்,
சந்தை
விலையிலிருந்து
அதன்பின்னர் இறங்கவேயில்லை
என்பதையும்,
2007 மே
மாதத்தோடு
ஒப்பிடுகையில், 2010
நவம்பரில்,
ஏறத்தாழ,
சுமார்
55 சதவீதம் விலைகள்
உயர்ந்திருந்ததாகவும் அந்த
ஆய்வு கண்டறிந்தது.
எழுச்சிக்களுக்குக்
காரணமான முக்கிய
காரணிகள்
ஒன்றையும் அந்த ஆய்வு
குறிப்பிட்டது.
உண்ணும் உணவில்
குறைப்பு,
மருத்துவ
செலவுகளில் வெட்டு,
கடன்கள் உயர்வு,
உத்தியோகபூர்வமற்ற
துறைகளில்
நீண்டநேரம் வேலை
செய்வது போன்ற
இயைந்துபோகும்
மூலோபாயங்கள்
"2008இல்
இருந்து,"
ஏழை
மக்களிடையே
திணிக்கப்பட்டுள்ளன.
மேலும்
2011இல்
அவர்களின்
எதிர்க்கும்திறன்
மிகவும்
குறைந்துள்ளது,"
என்றும் அந்த
அறிக்கை
குறிப்பிட்டது.
உலக
முதலாளித்துவ
நெருக்கடியால்
தோற்றுவிக்கப்பட்ட
உணவுப்பொருட்கள்
விலையுயர்வு மற்றும்
பணவீக்க
உயர்வு,
ஏற்கனவே
மத்தியகிழக்கில்
வெடிப்புமிக்க
விளைவுகளை அளித்துள்ளன.
அவை சீனாவில்
இன்னும் ஊகிக்க
முடியாத
விளைவுகளுடன்
அச்சுறுத்துகின்றன.
அங்கே ஆட்சி,
தொழிலாள
வர்க்கத்தின்
ஓர் எழுச்சியைக் குறித்து,
அதாவது
1980களின்
பிற்பகுதியில்
ஏற்பட்ட
பணவீக்கத்திற்குப்
பிரதிபலிப்பாக
அபிவிருத்தி அடைந்ததை
விடவும்
மற்றும் ஜூன்
1989இல்
தியானென்மென் சதுக்க
படுகொலைக்கு
இட்டுச்சென்றதை விடவும்
பெரியளவில்
இருக்கும் ஓர்
எழுச்சியைக் குறித்து,
ஒவ்வொரு நாளும்
பயத்தோடு வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
உலக
நிதியியல்
முறிவுகளுக்காக
செய்யப்பட்ட
"மறுகட்டமைப்பு"
விளைவுகளில்
உணவுபொருட்களின்
விலையுயர்வும்
ஒன்றாகும்.
மற்றொன்று,
வங்கி
பிணையெடுப்புகளில்
இறக்கிய ட்ரில்லியன்
கணக்கான
டாலர்களை தொழிலாள
வர்க்கத்தின்மீது
சுமத்துவதில்,
மாநில
அரசாங்கங்களால்
அமெரிக்காவிலும்,
மற்றும்
ஐரோப்பாவிலும்
கொண்டு வரப்படும் பாரிய
செலவின
வெட்டுக்களாகும்.
இப்போது
மேலும் ஒரு
பாய்ச்சல்
விளைவு
விரிந்து
பரவிக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக
சீனாவிற்கு
செய்து வந்த பண்ட
ஏற்றுமதிகளால்
உலக பொருளாதார
நெருக்கடியின்
படுமோசமான
தாக்கத்திலிருந்து
இதுவரை
தப்பித்துவந்த
ஆஸ்திரேலியா மற்றும்
பிரேசில்
போன்ற நாடுகளை நேரடியாக
தாக்க
இது அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில்
ஏற்பட்ட ரியல்
எஸ்டேட் மற்றும்
கட்டுமானத்துறை
வளர்ச்சியிலிருந்து
வந்திருக்கும்,
குறிப்பாக இரும்பு
எஃகின்
அதிகரித்திருக்கும்
பெரும் தேவை,
அதன்
நிதியியல்
அதிகாரங்கள் மற்றும்
அமெரிக்க மத்திய
வங்கி
கூட்டமைப்பின் பணத்தைப்
புழக்கத்தில்விடும்
(QE) கொள்கையால்
பின்பற்றப்படும்
மலிவு
பணக்கொள்கையால்
தூண்டப்பட்டதாகும்.
இருந்தபோதினும்,
இந்த குமிழி
எந்தளவிற்கு
நீள்கிறதோ,
அந்தளவிற்கு அதன்
விளைவுகளும்
படுமோசமாக
இருக்கும்.
இதன்
விளைவுகள்
2007-2008
நெருக்கடியின்
விளைவுகளைவிட பெரிதாக
இருக்கக்கூடும்
என்று இந்த
வாரம் ஆஸ்திரேலிய பேரிய-பொருளியல்
(macro economics)
ஆய்வாளரும்,
ஆஸ்திரேலிய மத்திய
வங்கி கூட்டமைப்பின்
பொதுக்குழு
உறுப்பினருமான வார்விக்
மெக்கெப்பென்
எச்சரித்தார்.
ஆஸ்திரேலிய மொத்த
உள்நாட்டு உற்பத்தி
(GDP) சுமார்
13 சதவீதத்திற்கு
மேலாக இருந்தாலும்
கூட,
பண்ட ஏற்றுமதி
உயர்வு
இல்லையென்றால்,
குமிழி பொறிவின்
தாக்கம் மிகவும்
நாசகரமானதாக
இருக்கும்.
அது
எந்த வடிவத்தில்
இருந்தாலும்
சரி,
ஒவ்வொரு
நாட்டில் இருக்கும்
நிலைமை,
ட்ரொட்ஸ்கி
விளக்கியதைப் போல,
"உலக நிகழ்முறையின்
அடிப்படை
உட்கூறுகளின் ஒரு
நிஜமான கலவையாக"
உள்ளது.
அதைத் தொடர்ந்து
அவர்
குறிப்பிட்டதாவது,
எந்த நாடாக
இருந்தாலும்
தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்கள்,
அவை
அவற்றின் ஆரம்பகட்ட
வடிவத்தில்
என்னவாக இருந்தாலும்,
அதை ஒரு சர்வதேச
வேலைத்திட்டத்தின்
அடிப்படையிலும்,
சோசலிச புரட்சிக்கான
உலக கட்சியைக்
கட்டியெழுப்புவதன்
மூலமாகவும் மட்டும்
தான்
முன்னெடுத்துச் செல்ல
முடியும்.
அதுதான் நான்காம்
அகிலத்தின்
அனைத்துலக குழுவின்
முன்னோக்காக உள்ளது. |