சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US, European officials debate military intervention in Libya

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் லிபியாவில் இராணுவத் தலையீடு பற்றி விவாதிக்கின்றனர்

By Patrick O’Connor and Patrick Martin
3 March 2011

Use this version to print | Send feedback

செவ்வாய் மற்றும் புதன் காங்கிரஸ் விசாரணைக் குழுக்களிலும், செய்தி ஊடகத்திற்கு வெளியிட்ட அறிக்கைகளிலும், ஒபாமா நிர்வாகம் மற்றும் காங்கிரஸின் உயர்மட்ட அதிகாரிகளும் லிபியாவில் அமெரிக்க இராணுவத் தலையீடு பற்றிய வாய்ப்புக்களை பகிரங்கமாக விவாதிக்கின்றனர். அதே நேரத்தில் பென்டகன் வட ஆபிரிக்காவின் பக்கம் கப்பல்களையும் போர் விமானங்களையும் நிலைகளுக்கு அனுப்புகிறது. இதே விவாதம்தான் அட்லான்டிற்கு அப்பால் ஐரோப்பிய சக்திகளிடையேயும் நடைபெறுகிறது. அவையும் இப்பிராந்தியத்தில் தங்கள் சொந்த இராணுவச் சொத்துக்களை நிலைநிறுத்தியுள்ளன.

இவ் உத்தியோகபூர்வ விவாதத்தில் லிபிய மக்களின் உரிமைகளும் நலன்களும் கருதப்படவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் ஒரு பெரிய, விரிவான பாலைவனம் நிறைந்த நாட்டில் தங்கள் இராணுவச் சக்திகளை நிலைநிறுத்துவதிலுள்ள நடைமுறை இன்னல்களைப் பற்றிக் கவலைப்படுகின்றன. அதேபோல் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைப் போரில் ஈடுபடுத்தியதற்குப் பின் முக்கியமான முஸ்லிம் பெரும்பான்மையுடைய நாட்டில் மூன்றாவது பெரிய தலையீடாக லிபியாவில் தலையிடுவதின் அரசியல் உட்குறிப்புக்கள் பற்றியும் கவலை கொண்டுள்ளனர்

அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் நேற்று சபையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுத் துணைக் குழுவினால் வினாவிற்கு உட்படுத்தப்பட்டபோது, “வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றால் இந்த இராணுவ விருப்புரிமைகள்  சிலவற்றைப் பற்றி நிறைய தேவையற்ற கருத்துக்கள் வந்துள்ளன. நாம் ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்றுதான் குறிக்க வேண்டும்ஒரு பறக்கக் கூடாத பகுதி என்றால் லிபியா மீது தாக்குதல் நடத்தி அதன் வான் பாதுகாப்புக்களை அழிப்பதுடன் தொடங்கும். எப்படித்தான் ஒரு பறக்கக் கூடாத பகுதியைத் துவக்க முடியும்... எனவே ஒரு பெரிய நாட்டில் அது ஒரு பெரிய நடவடிக்கை ஆகிவிடும்.”

லிபியா மீதான தலையீட்டிலுள்ள பரந்த விளைவுகளையும் கேட்ஸ் சுட்டிக் காட்டினார். “இன்னும் கூடுதலான சொத்துக்களை அங்கு நகர்த்தினால், அதன் விளைவுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பேர்சிய வளைகுடாவிற்கு எப்படி இருக்கும்?” என்று அவர் வினவினார். “மேலும், மற்ற எந்த நட்பு நாடுகள் இவற்றுள்  சிலவற்றிற்காக நம்முடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளன?”. “நாமும் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். வெளிப்படையாக மத்திய கிழக்கில் மற்றொரு நாட்டில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தப்படுவது பற்றி.”

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை மீது  2008ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், செனட்டர் ஜோன் மக்கெயின் மற்றும் ஈராக் போர் முழுவதும் புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவை ஆர்வத்துடன் கொடுத்திருந்த வலதுசாரி ஜனநாயக செனட்டர் ஜோசப் லிபர்மான் ஆகியோர் தாக்குதல் நடத்தியது பற்றி பென்டகன் தலைவர் விடையிறுத்தார். அட்லான்டிக் குழுவிடம் மக்கெயின் செவ்வாயன்று வாஷிங்டன் சிந்தனைக் குழு ஒன்று அமெரிக்கா உடனடியாக லிபியா மீது பறக்கக் கூடாத பகுதியை அமூல்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

ஆம், ஒரு பறக்கக் கூடாத பகுதி நமக்குத் தேவைதான். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் கணக்கை விட நம் பாதுகாப்புச் செலவுகளுக்கு நாம் 500 பில்லியன் டொலருக்கும் மேல் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். திரிப்போலி மீது நாம் பறக்கக் கூடாத பகுதியை அமைக்க முடியாது என்று என்னிடம் சொல்லாதீர்கள்என்று மக்கெயின் அறிவித்தார். பென்டகன் உயர்மட்ட அதிகாரிகள்சிலவற்றைச் செய்யவேண்டும் என்பதற்குப் பதிலாக ஏன் செய்யக்கூடாது என்பதற்குத்தான் காரணங்களைக் கூறுகின்றனர்என்று குறையும் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜோன் கெர்ரி, வெளியுறவுத் தொடர்புக் குழுவின் தலைவர் இதே கொள்கைக்கு ஆதரவு திரட்ட சற்றே குறைந்த முரட்டுத்தனச் சொல்லாட்சியைப் பயன்படுத்தினார். புதன்கிழமையன்று அவர் விசாரணையில் லிபியாவில் பறக்கக் கூடாத பகுதி என்பது ஒரு நீண்ட காலத் திட்டம்அல்ல என்றும் அமெரிக்க இராணுவம் அதைச் செயல்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும்  கூறினார். “லிபியத் தெருக்களில் நிரபராதியான மக்கள் படுகொலைக்கு உட்படுவதைத் தடுப்பதற்கு லிபிய மக்களுக்குக் கருவிகள் தேவை, விமானங்கள் குண்டுவீசிக் கொலை செய்வதில் ஈடுபடும்போது உலகச் சமூகம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன்என்றார் அவர்.

ஒரு பறக்கக் கூடாத பகுதியை லிபியாவில் கொள்ள வேண்டும் என்பது உடனடிச் செயலாக வேண்டும் என்னும் ஆலோசனைகளை ஒபாமா நிர்வாக அதிகாரிகள் குறைந்த முன்னுரிமை போல் காட்டுகின்றனர். செனட்டின் வெளியுறவுக் குழுவில் பேசிய வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன், “லிபியாவில் பறக்கக் கூடாத பகுதி பற்றி நிர்ணயிப்பதிலிருந்து நாம் தொலைவில் உள்ளோம்என்று அறிவித்தார். “நாடு பெரும் குழப்பத்தில் சரிந்துள்ளது, மற்றொரு பெரிய சோமாலியா போல் ஆகிவருகிறதுஎன்ற கவலையை ஒப்புக் கொண்ட கிளின்டன், “மனிதாபிமானச் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதைத் தவிர வேறு ஏதேனும் நடவடிக்கை எடுப்பது பற்றி மிக அதிகமான எச்சரிக்கை கையாளப்படுகிறதுஎன்று வலியுறுத்தினார்.

லிபியாவிடம் ஒப்புமையில் உயர்ந்த வான் பாதுகாப்பு முறை உள்ளது. அதை அழிப்பதற்குத் தேவையான மிக அதிகமான குண்டுவீச்சு நடவடிக்கை என்பது, தவிர்க்க முடியாமல் மக்களின் இறப்புக்களை ஏற்படுத்தும்.

மற்றொரு நீடிக்கும் திறனுடைய போரைத் தொடக்குவதில் இருக்கக் கூடிய உட்குறிப்புக்கள் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இராணுவ நடைமுறையில் ஒரு பிரிவின் சார்பாக கேட்ஸ் கருத்துத் தெரிவிக்கிறார்அதுவும் மற்ற இடங்களில் அமெரிக்கர்களை எதிர்கொண்டுள்ள அழிவு நிலைமையுள்ளபோது. கடந்த வாரம் அவர் ஆசியா, மத்திய கிழக்கு அல்லது ஆபிரிக்காவில் வருங்காலத்தில் பெரிய அமெரிக்கத் தரைப்படையை இயக்க வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால், “அவர் மூளை பாதிக்கப்பட்டுள்ளதா என ஆராயப்பட வேண்டும்என்று அறிவித்தார்.

இதே போன்ற கவலைகள் ஐரோப்பாவிலும் எழுப்பப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன் அவருடைய பெரும் வனப்புரையிலிருந்து பின்வாங்கியுள்ளது போல் தோன்றுகிறது. அதில் லிபியாவில் எதிர்ப்புக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தல் போன்ற கருத்துக்களும் இருந்தன. “மூத்த பிரிட்டிஷ் இராணுவ ஆதாரங்கள் ஒரு நீடித்த, ஆபத்துத் திறன் உடைய நடவடிக்கைளில் இழுக்கப்பட்டுவிடுவது பற்றிய ஆபத்துக்களை டௌனிங் தெரு கவனிக்கவில்லை என்ற கவலைகளை இராணுவ ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளனஎன்று கார்டியனில் தகவல் கொடுத்துள்ளது.

லண்டனைத் தளமாகக் கொண்ட International Institute for Strategic Studies நிறுவனத்தினுள்ள James Hackett என்பவர் பெங்காசியைத் தளமாகக் கொண்ட எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றி பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: “இங்கு பிரச்சினை எவருக்கு ஆயுதம் அளிப்பது என்று நீங்கள் உங்களைக் கேட்க வேண்டும் என்று இருப்பதுதான். பல வகை பழங்குடி மக்கள், சமூகங்கள் உள்ளன, கடாபி அகன்றுவிட்டால் ஒவ்வொன்றும் செய்ய நினைக்கும் செயலே வேறுஎன்றார் அவர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இராணுவ நடவடிக்கை லிபியாவிற்கு எதிராக எடுக்கப்படுவது என்பது, “சர்வாதிகாரியின் பிரச்சாரத்திற்கு ஊக்கம் கொடுக்கும்”, லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை அரசியல் அளவில் வலுப்படுத்தும்.

கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் சக்திகள் பரந்த அளவில் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன, இவை வெளி இராணுவத்  தலையீட்டிற்கு எரியூட்டுகின்றன என்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கூட்டுப் படைகளின் தலைவரான அட்மைரல் மைக் முல்லன் வாஷிங்டனில் காங்கிரஸ் விசாரணை ஒன்றில் அமெரிக்க இராணுவம் அத்தகைய தாக்குதல்கள் பற்றி உறுதி செய்ய முடியாது என்றார்.

செவ்வாயன்று ஒரு மூத்த நிர்வாக அதிகாரி இத்தகைய தாக்குதல்கள் ஆயுதக் கிடங்குகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு புறத்தே நடந்தன என்பதை மறுத்தது பற்றியும் மேற்கோளிட்டுள்ளது. “அவர்கள் மக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தினர் என்பதை நாம் காணவில்லை என்று நினைக்கிறோம்என்று செய்தித்தாளிடம் அவர் கூறினார்.

இத்தகைய ஒப்புதல்கள் அமெரிக்க மற்றும் சர்வதேசச் செய்தி ஊடகங்கள் லிபியாவில்மனிதாபிமானத்திற்குஎனப்படும் தலையீடுகளுக்காக நடத்தும் பிரச்சாரத்தின் மோசடித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்தே, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் லிபிய எண்ணெய்த் தொழில்துறையில் தங்கள் பங்குகளைப் பாதுகாப்பதிலும் அவற்றின் பிராந்திய புவியியல் மூலோபாய நலன்களைக் காப்பதிலும் முக்கிய அக்கறை கொண்டுள்ளன. கடாபி எழுச்சியை அடக்கிவிடுவாரா என்று ஒபாமா நிர்வாகம் ஆரம்பத்தில் காத்திருந்து கவனித்தது. ஆட்சியானது நாட்டின் பெரும் பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை இழந்த பின்னர்தான் திரிப்போலியிலுள்ள நண்பரைக் கைவிட்டது.

பின்னர் போரின் பேரிகை முழக்கம் வெளிப்பட்டவுடன், லிபியாவைப் பால்கன்களுக்கு ஒப்பிட்டதுடன், ஏன் ருவண்டா அல்லது சூடானுடன் கூட இணைத்து பிரச்சாரம் ஒன்று வெளிப்பட்டது. இது வட ஆபிரிக்க  நாட்டை முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்காகத் தாழ்ந்து நடக்கும் அரைக் காலனியாக மாற்றப்படும் நோக்கத்தைக் கொண்ட தலையீட்டிற்குப் போலிக் காரணத்தை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

சமீபத்திய தந்திரோபாய வேறுபாடுகளின் வெளிப்பாடு மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றிய கவலைகள் வெளிநாட்டுத் தலையீடு என்னும் அச்சறுத்தலுக்கு ஒரு முடிவைக் காட்டிவிடவில்லை.

மத்தியதரைக் கடலில் ஒரு பெரிய இராணுவச் செயற்பாடு கட்டமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் தாக்குதல் கப்பலான USS Barry மற்றும் தரையிலும் நீரிலும் செல்லும் தாக்குதல் கப்பல்கள் இரண்டு, ஹெலிகாப்டர்கள், இறங்கும் தளங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மரைன்களைக் கொண்டவை நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், செங்கடலில் தயாராகவும் உள்ளன. பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய கடற்படை மற்றும் விமானப் படைகளின் சொத்துக்களும் லிபியாவை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ளன.

ஒரு பறக்கக் கூடாத பகுதியை நிறுவுவதிலுள்ள இடர்பாடுகளினால் அந்த விருப்புரிமை ஒன்றும் இல்லை எனப் போகவில்லை என்று ஹில்லாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார். “இதேதான் அவர்கள் பால்கன்களிலும் கூறினார்கள். மிகக் கடினம், தக்க வைப்பது கடினம் என்று. இறுதியில் பாதுகாப்பை ஒட்டி அவ்வாறு செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதுஎன்று அவர் செனட் வெளியுறவுக்குழுவிடம் கூறினார்.

நேற்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே பாதுகாப்பு மந்திரியின் கருத்துக்களுக்கு விடையிறுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் கூறினார்: “பறக்கக் கூடாத பகுதி நிறுவுதல் சிக்கல் வாய்ந்தது என்னும் உண்மையின் பொருள் அது விவாதத்திற்கு உட்படாது என்பதல்லபல விருப்பத் தேர்வுகளையும் நாங்கள் பரிசீலிக்கிறோம். எந்த விருப்பத் தேர்வையும் இப்பொழுது தள்ளுபடி செய்துவிடவில்லை.”

லிபியாவிற்குள்ளேயே அரசாங்கத்திற்கும் எதிர்ப்புச் சக்திகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. நேற்று கடாபி ஆதரவுப் படையினர் பெங்காசிக்கு தெற்கே கிட்டத்தட்ட 240 கி.மீ. தொலைவிலுள்ள கிழக்குத் துறைமுக நகரான பிரெக்காவைத் தாக்கினர். ஆனால் பெரும் மோதலுக்குப் பிறகு பின் வாங்கினர். அரசாங்கத் துருப்புக்கள் கடாபியின் உள்ளூரான சிர்ட்டேயிலிருந்து வந்தன என்று கூறப்படுகிறது. அச்சிறு நகரம் இறுக்கமான அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அப்படைகளுக்கு விமானப்படை ஜெட்டுக்கள் ஆதரவும் இருந்தன. அவை சிறுநகரத்தில் இராணுவ இலக்குகளை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பிரெக்காவிலிருந்து கார்டியனின் Martin Chulov கூறுகிறார்: “பிரெக்காவின் மீதான தாக்குதல் பழிவாங்குதல் என்பதைவிட மூலோபாயம் நிறைந்தது எனத் தோன்றியது. அரசாங்கச் சார்புடைய சக்திகள் புதனன்று ஒரு பல்கலைக்கழகம், விமான நிலையம் மற்றும் சில ஆலைகள் என்று கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. பெங்காசிக்கு எரிசக்தி விநியோகத்தைத் தரும் ஆதாரம் அருகில் உள்ளது. அதேபோல் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் Sirte Oil Company யும் உள்ளது. இதில் 17 பெப்ருவரிப் புரட்சிக்கு முன் 300 வெளிநாட்டினர் இவற்றில் இருந்தனர். ஒரு ஒதுக்கப்பட்ட வலுவான நபர் சீற்றத்தில் தாக்கும் உணர்வு ஒன்றும் இங்கு இல்லை. இது ஒரு வாரம் முன்பு மாற்ற இயலாது எனக்கருதப்பட்ட ஒரு சமன்பாட்டை மாற்றும் நோக்கம் கொண்ட தொடர் நடவடிக்கைகளாக, திட்டமிடப்பட்டுள்ளவை ஆகும்.

மற்ற மோதல்களில் கடாபியின் படைகள் டெஹிபா என்னும் துனிசிய எல்லையில்  அருகேயுள்ள சாவடி ஒன்றை மீட்டன. பெங்காசிக்கு அருகே தெற்கில் அஜ்டபியாவிலும் பெரும் மோதல்கள் நிகழ்ந்தன. இங்கு தங்களை அகற்ற அரசாங்கத் துருப்புக்கள் மேற்கோண்ட முயற்சிகள் எதிர்ப்பாளர்களால் தகர்க்கப்பட்டன.

நேற்று தொலைக்காட்சிக்காக கடாபி மூன்று மணி நேர உரை ஒன்றை நிகழ்த்தினார். இதில் அவர் எதிர்ப்புக்காரர்களுக்குச் சலுகைகள் பலவற்றைக் கொடுத்தார். அவற்றுள் சரணடையும் எதிர்ப்புச் சக்திகளுக்கு பொது மன்னிப்பு, ஒரு புதிய அரசியலமைப்பு, இன்னும் சுதந்திரமான செய்தி ஊடகம் ஆகியவை அடங்கியிருந்தன. குறைந்தவட்டியுடைய கடன்கள் மற்றும் வீடுகள் வாங்குதற்கு மக்களுக்கு உதவும் மற்ற திட்டங்கள் பற்றியும் அவர் அறிவித்தார். அமெரிக்க ஐரோப்பிய அரசுகளிடம் அவை தலையிட்டால் போர் வரும் என்ற அச்சறுத்தலைக் கொடுத்த கடாபி, சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் லிபியாவில் செயற்பாடுகளைத் தொடங்க ஊக்கம் கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் சர்வாதிகாரியின் மத்திய தகவல், வாஷிங்டனுக்குத் தன் அரசாங்கத்துடன் நல்லுறவுகளை மீண்டும் கொள்ளுவதற்கான முறையீடு என்றுதான் இருந்தது. அல் கெய்டா மற்றும் இஸ்லாமியவாதச் சக்திகள் குறித்து கடாபி மீண்டும் எச்சரித்தார். எந்த அளவிற்குத் தான் பயங்கரவாதத்தின் மீதான போரில் ஒருங்கிணைந்து செயல்பட்டேன் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். அதேபோல் அகதிகள் ஏராளமாக ஐரோப்பாவிற்குள் நுழையக்கூடும் என்ற ஐரோப்பிய அரசாங்கங்களின் கவலை பற்றியும் எச்சரித்தார். “மத்தியதரைக் கடல் பகுதிக்கு லிபியா ஒரு பாதுகாப்புக் கருவி போல் உள்ளது. நாங்கள் தான் ஐரோப்பாவிற்குள் குடியேறுபவர்கள் சட்டவிரோதமாக வராமல் தடுப்பவர்கள், பின் லாடன் அங்கு வராமல் தடுப்பவர்களும் நாங்கள்தான். மடத்தனமாகச் செயல்படாதீர்கள். வீட்டிற்குள் எலி உள்ளது என்பதற்காக வீட்டைக் கொளுத்தியவன் போல் செயல்படாதீர்கள்என்றார் அவர்.

கடாபி எதிர்ப்புச் சக்திகளில் முக்கியமானது ஒன்று தன்னைத்தானே தலைமை என்று நியமித்துக் கொண்ட குழு நேற்றுதேசிய அரசாங்க இடைக்காலச் சபைஎன்பதை அமைத்துக் கொண்டு பறக்காக் கூடாத பகுதி ஒன்று நிறுவப்பட வேண்டும், அது அமெரிக்க-ஐரோப்பிய விமானத் தாக்குதல்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தபா அப்டெல்ஜலில் தலைமையிலுள்ள சபை பெரும்பாலும் முன்னாள் கடாபி அரசாங்க, இராணுவ அதிகாரிகளைக் கொண்டிருக்கிறது. இதன் செய்தித் தொடர்பாளர் அப்டெல் ஹபிஸ் ஹோகா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சபையானது கடாபியின் ஆபிரிக்க கூலிப்படைகளுக்கு எதிராககுறிப்பிட்ட தாக்குதல்கள்”, “மூலோபாய வான் தாக்குதல்கள்நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

பெங்காசியில் இடைக்கால தேசிய அரசாங்கச் சபை என அழைக்கப்படுவதின் நிலைப்பாடு முதலாளித்துவத் தலைமையின் பிற்போக்குத்தனத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், லிபியத் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த புரட்சிகர நோக்குநிலையை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையையும், அது எப்படி அனைத்து லிபிய முதலாளித்துவப் பிரிவுகளிலிருந்தும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதையும் அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை தளமாகக் கொள்ள வேண்டும் என்பதையும் உடனடியாகச் செய்ய வேண்டும் என்ற தேவையையும் கூறுகிறது.