சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Egyptian prime minister resigns on eve of mass protest

எகிப்திய பிரதம மந்திரி மக்கள் எதிர்ப்புக்கு முன்னதாக இராஜிநாமா செய்கிறார்

By Alex Lantier
4 March 2011

Use this version to print | Send feedback

இன்று முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் நீண்ட வரலாற்றுச் சேவையை பற்றிக் குறைகூறி, மாற்றத்தைக் கோரும் எதிர்ப்பாளர்கள் நடத்தவுள்ள ஒரு மில்லியன் மக்கள் அணிவகுப்பைத் தவிர்க்கும் முயற்சியாக நேற்று எகிப்திய பிரதம மந்திரி அஹ்மத் ஷபிக் பதவியை இராஜிநாமா செய்தார்.

எகிப்திய விமானப் படையில் (முபாரக் போன்றே) ஒரு முன்னாள் தலைமைத் தளபதியாக இருந்ததுடன், உள்துறை விமானப் போக்குவரத்து மந்திரியாகவும் இருந்த ஷபிக், ஜனவரி 29ம் திகதி சர்வாதிகாரத்திற்கு எதிராக பெருகிய மக்கள் இயக்கத்தின் முனைப்பைக் குறைக்கும் வகையில், முபாரக்கினால் பிரதம மந்திரி என்று நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த நியமனத்தை உண்மையான அரசியல் மாறுதல் என்று மக்கள் ஏற்க மறுத்து எதிர்ப்புக்களை தொடர்ந்தனர். சக்திவாய்ந்தை வேலைநிறுத்த அலைகள் தொடர்ந்ததுடன் இறுதியில் பெப்ருவரி 11ம் தேதி முபாரக் பதவியில் இருந்து விலகும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

இளைஞர் குழுக்களுடனான மற்றும் எதிர்ப்புக்களை அமைத்தவர்களுடனான பேச்சுக்களில் ஷபிக் எகிப்திய வெகுஜனப் போராட்டங்களுக்கு உந்துதல் கொடுக்கும் அடிப்படைக் கோரிக்கைகள் பற்றித் தன்னுடைய இகழ்வுணர்வை சிறிதும் மறைக்க முயலவில்லை: அரசியல் சுதந்திரம், உயர்ந்த ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள், உத்தியோகபூர்வ ஊழலுக்கு முற்றுப்புள்ளி என்று அடிப்படைக் கோரிக்கைகள் உள்ளன. கூட்டங்களில் அவர் எதிர்ப்பாளர்களைக் கேலி செய்து, தஹ்ரிர் சதுக்கத்தை விட்டு நீங்கினால் அவர்களுக்கு “candy”  கொடுப்பதாகவும் கிண்டல் செய்தார். எகிப்தின் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளை அது சித்திரவதை செய்வதாக வந்துள்ள குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் பாதுகாக்கிறார்.

தஹ்ரிர் சதுக்கத்தில் ஒரு இளம் எதிர்ப்பாளரான கேபி ஓஸ்மான் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “அஹ்மத் ஷபிக் மற்றும் ஹொஸ்னி முபாரக் இருவரும் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். ஹொஸ்னி முபாரக்கினால்தான் இவர் பிரதம மந்திரியானார், அவர் முபாரக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களுக்காக ஏதோ செய்வது போல் காட்டிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கேட்பதாகவும் நாங்கள் வதந்திகளைக் கேட்டுள்ளோம்.”

சமீபத்திய நாட்களில் எதிர்ப்பாளர்கள் மீண்டும் தஹ்ரிர் சதுக்கத்திற்கு வரத் தொடங்கிவிட்டனர் இந்த மையப்பகுதியில்தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் முபாரக்கை பதவியிலிருந்து நீக்கினர், இங்கிருந்துதான் முபாரக்கின் குண்டர்களுக்கு எதிராகத் திறமையுடன் அவர்கள் செயல்பட்டனர். இதையொட்டி அவர்கள் இன்றைய ஷபிக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குத் தயாரிப்பிற்காக கூடாரங்களை அமைத்துள்ளனர். ஷபிக் அரசாங்கம் சரியும் வரை எதிர்ப்புக்கள் தொடரப்பட வேண்டும் என்று அழைப்புக்கள் வந்துள்ளன.

நேற்று எகிப்தின் ஆளும் ஆயுதப்படையின் தலைமைக்குழு, முபாரக் அகன்றபின் எகிப்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நடைமுறையில் எடுத்துக் கொண்டுள்ள இராணுவச் சர்வாதிகாரம், பேஸ்புக்கில் ஷபிக்கின் இராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என அறிவித்துள்ளது. முன்னாள் போக்குவரத்து மந்திரி எஸ்ஸம் ஷரப் ஒரு புதிய அரசாங்கம் அமைக்குமாறு பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளார் என்றும் அது கூறியுள்ளது.

இதன்பின் மந்திரிகள் கூட்டத்தில் நிகழ்த்திய சுருக்கமான உரை ஒன்றில் ஷபிக் தன் இராஜிநாமாவை அறிவித்தார். மக்கள் எதிர்ப்பையொட்டி அவர் பதவியில் தொடர முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். அரசாங்க அதிகாரிகள் அதன் பின் மௌனமாக மந்திரிசபைக் கூட்டத்தை விட்டு நீங்கினர், செய்தியாளர்களிடம் இருந்து வினாக்களைப் பெறவும் மறுத்துவிட்டனர்.

புதிய பிரதம மந்திரியான ஷரப் அமெரிக்காவில் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் படித்தவர். முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியில் (NDP) உறுப்பினராக உள்ளார். டிசம்பர் 2005ல் போக்குவரத்து அமைச்சரகத்தில் இருந்த ஊழலை எதிர்த்து இராஜிநாமா செய்தபின் அவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியை மேற்கொண்டார். NDP உடைய கொள்கைகள் இயற்றும் குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்தார்.

பெப்ருவரி 8ம் திகதி முபாரக் எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் ஷரப் சேர்ந்துகொண்டார். இது முபாரக் அகற்றப்படுவதற்கு சற்று முன் நடந்தது. சில எதிர்த்தரப்புக் கட்சிகளுக்கு நெருக்கமாகவுள்ள NDP தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார். பொது உள்கட்டமானம் பற்றிய முபாரக்கின் கொள்கைகள் பற்றிக் குறைகூறுபவர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார். அதேபோல் அவருடைய இஸ்ரேலுடன் நெருக்கமான பிணைப்புக்களையும் குறைகூறியுள்ளார்.

ஆனால், ஒரு பிரதம மந்திரியாக என்ன சீர்திருத்தங்களை அவர் செய்யக்கூடும் என்று விளக்குமாறு கேட்கப்பட்டதற்கு, ஷரப் இப்பொழுதுள்ள ஆட்சி முறையில் குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்டுத்தான் மாறுதல்களைச் செய்ய முடியும். அரச பாதுகாப்புப் படைகளின் பெயரை அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவு எனத்தான் மாற்றமுடியும் என்றார். அதேபோல் தஹ்ரிர் சதுக்கம் லண்டனிலுள்ள ஹைட் பார்க் போல் மாற்றப்படலாம் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

அரச பாதுகாப்புப் படைகள் கலைக்கப்பட வேண்டும் என்னும் பரந்த மக்கள் கோரிக்கைகள் உள்ளன. இவற்றிற்குக் காரணம் முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது அவை நிகழ்த்திய மிருகத்தனமானத் தாக்குதல்கள் ஆகும். நேற்று உத்தியோகபூர்வ அரசாங்க உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் இது பொருளுரையாக இருந்தது.

தஹ்ரிர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர்தளத்தில் இருந்து இரகசியமாக மறைந்து நின்று பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது சுட்டனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளதுஇக்கட்டிடங்களில் முகம்மா, ராம்செஸ் ஹில்டன் ஹோட்டல், கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். இரு முன்னாள் மூத்த பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது சுட மாட்டார்கள் எனச் சாட்சியம் கொடுத்தனர்.

கெய்ரோவிலும் கிசாவிலும். பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது உண்மையான தோட்டாக்களைச் சுட்டனர் என்ற சாட்சியத்தை 120 சாட்சிகளிடமிருந்து குழு திரட்டியுள்ளது. எதிர்ப்பாளர்கள் என்று இல்லாமல் முபாரக் ஆதரவு குண்டர்கள்தான் NDP தலைமையகத்திற்குத் தீ வைத்தனர் என்றும் சாட்சிகள் கூறியுள்ளனர். இரண்டு ஆயுதமேந்திய பொலிஸ் வாகனங்களிலிருந்து தப்பி ஓட முயன்றவர்கள் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் சுட்டது என்ற வீடியோ ஆதாரங்களையும் தான் பார்த்துள்ளதாக அக்குழு கூறியுள்ளது.

செய்தி ஊடகத்திடம் பல எதிர்ப்பாளர்கள் தாங்கள் ஷபிக் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் இன்றைய எதிர்ப்புக்களைத் தொடர இருப்பதாகக் கூறினர். தங்கள் கோரிக்கைகள் பிரதம மந்திரி யார் என்பதற்கும் அப்பால் செல்கின்றன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாஷிங்டன் போஸ்ட்டிடம் ஒருவர் கூறினார்: “அவர்கள் நாளை, மற்றும் வருங்கால எதிர்ப்புக்களை நிறுத்த விரும்புகின்றனர். ஆனால் நாங்கள் நாளைய எதிர்ப்பிற்கு இன்னமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். நாளைய எதிர்ப்பு ஷபிக்கிற்காக மட்டும் அல்ல.”

உத்தியோகபூர்வ அல்லது பகுதி உத்தியோகபூர்வஎதிர்க்கட்சிகள்”, பல அரசியல் நிறங்களைக் கொண்டவை, ஷரப் பதவியில் இருத்தப்பட்டதை எதிர்ப்புக்களை முடிக்கவும் அவர் மேலிருந்து சமூக மாற்றத்தை செயல்படுத்துவார் என்னும் போலித் தோற்றங்களை விதைக்கவும் முயல்கின்றன. முன்னாள் ஐ.நா. அதிகாரியான மஹ்மத் எல்பரடெய் இராணுவத்திற்கு ஷரப்பைப் பதவியில் இருத்தியதற்காக ஒரு சுருக்கமான ட்வீட்டர் தகவலில் நன்றி கூறியுள்ளார்.

தாராளவாத அல் கட் கட்சியைச் சேர்ந்த அய்மன் நௌர் இராணுவம் ஷரப்பைப் பதவியில் நியமனம் செய்துள்ளதைஒரு நல்ல நடவடிக்கைஎன்று புகழ்ந்தார். அவர் மற்ற மந்திரிகளை அகற்றிவிட்டு பாதுகாப்புப் படைகளையும் மறுகட்டமைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். தேசியவாத அல்-மரமாக் கட்சியின் தலைவர் ஹம்டின் சப்பஹி ஷரப்பைப் புகழ்ந்து அவர்எகிப்திய புரட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், முபாரக்கை அல்லஎன்று கூறினார்.

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஷரப்பைப் பற்றிப்பொறுத்திருந்து பார்க்கும்என்ற கருத்துத் தெரிவிப்பை ஜேர்மனிய செய்தி DPA ஊடகத்திடம் கூறியது.

உண்மையில் இராணுவத்தை நம்பிப் பதவியில் இருக்க வேண்டிய அதிகாரி என்ற முறையில் ஷரப், அதிகாரிகள் குழுவின் நலன்களைக் காப்பதை தன் முக்கியமான பணியாகக் கொள்ள வேண்டி இருக்கும்அதாவது இராணுவ உயர்மட்டம் ஒருங்கிணைந்துள்ள எகிப்தின் வணிக உயரடுக்கின் நலன்களைப் பாதுகாத்து மீண்டும் ஒழுங்கை நிலைநிறுத்துதல் என்பதே அது.

அரசாங்கத்தில் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று எகிப்தின் பங்குச் சந்தைகள் திறப்பது பற்றியதாகும். மார்ச் 6ம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று திட்டமிட்டப்பட்டதிலிருந்து, ஷரப் நிர்ணயிக்கும் குறிப்பிடப்படாத தேதி வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 27ம் திகதியிலிருந்து பங்குச் சந்தை மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் கூடுதல் ஊதியங்கள், நல்ல வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றிற்கு போராடுவதால் முதலீட்டாளர்கள் இலாபங்கள் பெரும் சரிவிற்கு உட்படக்கூடும் என்ற அச்சத்தால் அது மூடப்பட்டது.

பங்குச் சந்தை மீண்டும் திறப்பதற்கு உரிய மேன்மையான நிபந்தனைகளை தோற்றுவிப்பது என்பதுஅதாவது தொழிலாளர்களை சுரண்ட நல்ல நிலைமைகளை ஏற்படுத்துவது என்பது ஷரப்பின் அரசாங்கத்தை எகிப்திய மக்களின் புரட்சிகரக் கோரிக்கைகளுடன் நேரடியா மோதவைக்கும்.

இராணுவத் தலைமைக்கும் எகிப்திய முதலாளித்துவத்திற்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவின் மற்றொரு அடையாளம் முபாரக் குவித்துள்ள மாபெரும் சொந்தச் சொத்துக்களாகும். பெயரளவிற்கு இராணுவத்திற்கு கொடுக்கும் ஆண்டு ஒன்றிற்கு 10,000 டொலர் ஊதியம் என்பதில் வாழ்ந்ததை தவிர, முபாரக் பல பில்லியன் டாலர்களின் மதிப்பிடக்கூடிய சொத்துக்களைத்தான் சேகரித்தார். இவர் லண்டன், சைப்ரஸ் மற்றும் ஜெனீவாவிலுள்ள வங்கிகளில் குறைந்தது 7 பில்லியன் டாலர்களை கணக்குகளில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மார்ச் 5ம் திகதி முபாரக் சொத்துக்களைப் பற்றிய விசாரணையை ஒரு கெய்ரோ நீதிமன்றம் மேற்கொள்ள இருக்கிறது. திங்களன்று அரசாங்கத் தலைமை வக்கீல் மெகுப் மஹ்முத் முபாரக்கின் நிதிகள் கைப்பற்றப்பட வேண்டும், அவரும் அவருடைய குடும்பமும் பயணிப்பதை தடை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் முபாரக் பதவியிலிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உட்பட்டதில் இருந்து கணிசமான காலம் முடிந்துவிட்டது. அவர் நாட்டை விட்டு நீங்கிவிட்டார் என்ற தகவல்கள் ஏற்கனவே வந்துள்ளன. சில ஆதாரங்களின்படி அவர் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக்கில் தன் அரண்னையில் இன்னும் உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால், எகிப்தின் அல்-அக்பர் செய்தித்தாள் முபாரக் சௌதி அரேபியாவிலுள்ள தபௌக்கில் கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று தெரிவித்துள்ளது. முபாரக்கின் மனைவி சூசன்சபெட் மற்றும் அவருடைய மகன்கள் அலா மற்றும் கமல் ஆகியோர் கடந்த ஞாயிறன்று ஷரம் எல் ஷேக் விமான நிலையத்தினூடாக எகிப்திலிருந்து தப்பியோட முயன்றனர் என்று வேறு சில தகவல்கள் கூறுகின்றன.