WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
எகிப்திய இராணுவ ஆட்சி ஒரு புதிய முன்னணி நபரை நிறுத்துகிறது
By
Patrick Martin
5 March 2011
இராணுவ
ஆட்சியை நெறிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட ஒரு கவனமான அரங்கு நிர்வாக முறையில்,
புதிதான
நியமிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி எஸ்ஸம் ஷரப்,
வெள்ளியன்று
கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்திற்கு வருகை புரிந்து எதிர்ப்பாளர்களை சந்தித்து,
ஜனாதிபதி ஹொஸ்னி
முபாரக் அகற்றப்படுவதற்குக் காரணமாக இருந்த போரட்டத்திற்குத் தன் பரிவுணர்வை
வெளிப்படுத்தினார்.
2004
முதல்
2006 வரை முபாரக்
ஆட்சியில் ஒரு காபினெட் மந்திரியாக இருந்த ஷரப் முந்தைய தினம் ஆயுதப்படைகளின்
தலைமைக் குழுவினால் பிரதம மந்திரி என்று நியமனம் பெற்றார்.
இந்த ஆட்சி,
முபாரக் ஜனாதிபதிப்
பதவியை இராஜிநாமா செய்த பெப்ருவரி
11 முதல் எகிப்தை
ஆண்டு வருகிறது.
முபாராக்கின்
கடைசிப் பிரதம மந்திரியும் ஒரு முன்னாள் விமானப் படைத் தளபதியுமான அஹ்மத் ஷபிக்
பழைய ஆட்சியுடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்டார்,
அதையொட்டி அரசியல்
அளவில் அதிக குறைமதிப்பிற்கு உட்படாத ஒருவர் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்ற
முடிவிற்கு இராணுவத் தலைமை முடிவிற்கு வந்திருக்க வேண்டும்.
புதிய பிரதம
மந்திரிக்கு முதல் பரிசோதனை,
ஷபிக் இராஜிநாமா
தேவை எனக் கோரிய திட்டமிட்ட எதிர்ப்பு அவர் அகன்றதைக் களிக்கும் கொண்டாட்டமாக மாறிய
இடமான தஹ்ரிர் சதுக்கத்திற்குச் செல்லுதல் என்று இருந்தது.
“புரட்சியின்
தியாகிகளுக்கும்,
ஆயிரக்கணக்கில்
காயமுற்றவர்களுக்கும்,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும்”
ஷரப் புகழாரம்
சூட்டினார்.
அதே நேரத்தில்
இறப்புக்கள் மற்றும் காயங்களுக்குப் பொறுப்பான அரச பாதுகாப்புப் படைகளைக் கலைக்க
வேண்டும் என்று கூட்டம் எழுப்பிய கோரிக்கைகளை பொருட்படுத்தவில்லை.
தஹ்ரிர்
சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் எகிப்திய இளைஞர்கள்
“அரசப்
பாதுகாப்புப் பிரிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்”
என எதிர்ப்பாளர்கள்
கோஷமிட்டனர்.
இப்பிரிவுதான்
அரசியல் எதிர்ப்பை அடக்கும் பொறுப்பை உள்துறை அமைச்சரகத்தின் மூலம் பெற்றுள்ளது.
“எகிப்து ஒரு
சுதந்திர நாடாகத் திகழ வேண்டும்,
அதன் பாதுகாப்புக்
கருவி குடிமக்களுக்கு பணிபுரியும் என்று நான் வேண்டுகிறேன்”
என வருங்காலக்
குறிப்பைக் காட்டி ஷரப் தெரிவித்தார்.
“இன்று
நான் உங்களிடம் இருந்து எனக்கு அங்கீகாரத்தை பெறுவதற்காக வந்துள்ளேன்.
உங்களுக்குதான்
முறையான அங்கீகரிக்கும் தன்மை உள்ளது”
என்று அதன்பின் அவர்
அறிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் அவரைப் பாராட்டியதுடன் அவரைத் தோள்களின்மீது
சுமந்தும் சென்றனர்.
ஆனால் புதிய
ஆட்சியிடம் “பொறுமை”
காட்ட வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால் ஆட்சியோ
உயரிடத்தில் முபாரக் இல்லை என்பதைத்தவிர,
கிட்டத்தட்ட பழைய
ஆட்சி போலவேதான் உள்ளது.
பல
எதிர்ப்பாளர்கள் ஷரப் பற்றி அவநம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்தி,
எகிப்திய மக்கள்
முன்,
முபாரக்கின் தளபதிகளுக்கு
விசுவாசத்தை உறுதி கூறுவதற்குப் பதிலாக,
தஹ்ரிர்
சதுக்கத்தில் அவர் பிரதம மந்திரி பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
கோஷமிட்டனர்.
இதைப்பற்றி அதிகம்
பேசாத ஷரப்,
பின்னர் சதுக்கத்தை
விட்டு அகன்றார்.
“
அரசப் பாதுகாப்புக் கருவி கலைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்”
என்ற தகவலை வெளிப்படுத்தும் இரு இளைஞர்கள்
உலக சோசலிச
வலைத் தளத்திடம் பேசிய இரு இளைஞர்கள் இன்னும் பல கோரிக்கைகள் இருப்பதால் அவர்கள்
தஹ்ரிர் சதுக்கத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
“சில சாதனைகள் உள்ளன,
முபாரக் மற்றும்
ஷபிக்கை கீழிறக்கினோம்,
அது பற்றிப்
பெருமிதம் கொண்டுள்ளோம்,
ஆனால் இப்புரட்சி
இன்னும் முடிவடையவில்லை.
1952ல் இருந்து
நடைபெறும் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.
இராணுவம் அதன்
முகாம்களுக்குத் திரும்ப வேண்டும்,
அரசாங்கத்தின்
பாதுகாப்புக் கருவிகளைக் கலைக்க வேண்டும்.
உண்மையான
ஜனநாயகத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம்”
என்று அவர்களில்
ஒருவர் கூறினார்.
துனிசியாவினால் ஊக்கம் பெற்றதைப்போல்,
லிபியா,
யேமன்,
பஹ்ரைன் இன்னும் பல
நாடுகளில் உள்ள எதிர்ப்பாளர்களுக்குத் தங்கள் ஒற்றுமை உணர்வையும் அவர்கள் காட்ட
விரும்புவதாக இருவரும் கூறினர்.
ஜனவரி
25ல்
எதிர்ப்புக்கள் துவங்கியதிலிருந்து இந்த இளைஞர் எகிப்தியக் கொடியுடன் தஹ்ரிர்
சதுக்கத்தில் முகாமிட்டுள்ளார்.
புரட்சியின்
தொடக்கத்திலிருந்து தஹ்ரிர் சதுக்கத்தில் மற்றொரு இளைஞர் முகாமிட்டுள்ளார்.
“உண்மையில் எதுவும்
இப்பொழுது மாறிவிடவில்லை.
பழைய ஆட்சிதான்
இன்னும் அதிகாரத்தில் உள்ளது.
எங்கள் கோரிக்கைகள்
அனைத்தும் ஏற்கப்படும் வரை நான் நகரப்போவது இல்லை.
இந்த முறை முழுவதும்
அகற்றப்பட வேண்டும்.
ஆட்சியால்
கொல்லப்பட்ட 350க்கும்
மேற்பட்ட தியாகிகளுக்கு நீதி வேண்டும்”
என்றார் அவர்.
ஷரப்
அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று மார்ச்
19ம் தேதி இராணுவம்
நியமித்துள்ள உயர்கல்வியாளர் மற்றும் சட்ட நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள எகிப்திய
அரசியலமைப்பிற்கான எட்டு திருத்தங்களுக்கு இசைவு கொடுக்க வாக்கெடுப்பு நடத்தப்படும்
என்ற அறிவிப்பைக் கொடுத்ததாகும்.
இந்த
தந்திரோபாயத்தின் நோக்கம் தற்பொழுதுள்ள பிற்போக்குத்தன அரசியலமைப்பில் ஒப்புமையில்
சிறு மாற்றங்களுக்கு ரப்பர்-முத்திரை
அளிப்பதின் மூலம் மக்கள் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டுவது போன்ற தோற்றத்தை அளிப்பது
ஆகும்.
பெரும்பாலான திருத்தங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்ப்பு வேட்பாளர்களும் பங்குபெறும் வாய்ப்பு பற்றியது
ஆகும்.
அதேபோல் இனி ஜனாதிபதியின்
ஆட்சிக் காலம் இரண்டு நான்காண்டு வரைகாலம் என்று வரம்பு கட்டுவதும் அடங்கியுள்ளது.
பிரசுரம் கூறுவது:
“அமெரிக்காவிற்குக்
கடிதம்:
லிபியா மற்றொரு ஈராக் போல் இராது.
அமெரிக்காவின் தலையீட்டிற்கு எதிராக ஒன்றுபடு.”
இத்திருத்தங்கள் நெருக்கடி ஆட்சியை அறிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தைத்
தக்கவைத்துக்கொள்ளும்.
இதுதான் கடந்த
மூன்று தசாப்தங்களாக எத்தகைய அரசியல் எதிர்ப்பையும் கிட்டத்தட்ட தடைக்கு
உட்படுத்துவதற்கு சட்டபூர்வத் தளத்தை கொண்டுள்ளது.
மேலும் இதையொட்டி
வேலைநிறுத்தங்கள் மற்றும் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பிற எதிர்ப்பு
நடவடிக்கைகளும் நசுக்கப்பட்டன.
ஷரப்பிற்கு
தஹ்ரிர் சதுக்கத்தில் பெரிய அளவில் நட்பு மிகுந்த வரவேற்பிற்கு முதலாளித்துவ
தாராளவாதத்தின் பழைய மற்றும் புதிய தட்டுக்களின் தீவிர ஒத்துழைப்பு தயார் செய்தது.
இவர்கள் முபாரக்கை
அகற்றும் மூன்று வார ஆர்ப்பாட்டங்களின் போது முக்கியத்துவத்தை அடைந்தனர்.
முன்னாள் ஐ.நா.அதிகாரியும்
நோபல் சமாதானப் பரிசை வென்றவருமான மஹ்மத் எல்பரடெய் ஷபிக்கிற்குப் பதிலாக ஷரப்
வந்ததைப் பாராட்டி,
“இன்று
[பழைய]
ஆட்சி இறுதியில்
சரிந்துவிட்டது.
நாம் சரியான
பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்”
என அறிவித்தார்.
எல்பரடெயின்
அமைப்பான மாற்றத்திற்கான தேசியச் சங்கம் இராணுவ ஆட்சிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது.
“தலைமைக் குழுவின்
முடிவு மக்கள் கோரிக்கைகளுக்குக் கணிசமான விடையிறுப்பு ஆகும்”
என்று அமைப்பு
கூறியுள்ளது. “புதிய
அரசாங்கம் எங்கள் விழைவுகளைச் சாதிக்கும் என்று நம்புகிறோம்.
மாறுதல் காலத்தில்
நாட்டை நடத்துவதற்கு ஒரு ஜனாதிபதிக் குழு அமைத்தல்,
நெருக்கடிச்
சட்டத்தை அகற்றுதல்,
எஞ்சியுள்ள மற்ற
அரசியல் கைதிகளை விடுவித்தல் உட்பட மற்ற கோரிக்கைகளையும் தலைமைக் குழு நிறைவேற்றும்
என நம்புகிறோம்”
என்று அது
தெரிவிக்கிறது.
முன்னாள்
ஜனாதிபதி வேட்பாளரும் தாராளவாத கட் கட்சியின் தலைவருமான ஐமன் நௌர் நியமனத்தைப்
பாராட்டி ஷரப்
“சரியான பாதையில்
உள்ளார்”
என்றும்
“அவருடைய
செயற்பட்டியல்,
திட்டங்கள்,
நெருக்கடிக்கால
சட்டம்,
அரசாங்கப் பாதுகாப்பு
நடைமுறை பற்றி அவர் பேசியிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்”
என்றும் சேர்த்துக்
கொண்டார்.
எல்பரடெய்
மற்றும் அரபு லீக்கின் தலைமைச் செயலருமான அமர் மௌசாவும் மார்ச்
2ம் தேதி இராணுவத்
தலைவர்களைச் சந்தித்தனர்.
ஒரு மாறுதல் கால
அரசாங்கத்திற்கு ஷபிக்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட உள்ளவர்கள் பற்றி
விவாதிப்பதற்காக இது இருந்திருக்கலாம்.
மேலைத்தேயச்
செய்தி ஊடகத்தில் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள எதிர்ப்பு நபர் எல்பரடெய் ஆக
இருக்கலாம்.
ஆனால் அவருடைய
கன்சர்வேடிவ் அரசியலுக்கு எகிப்தில் மக்கள் ஆதரவு அதிகம் இல்லை.
நாடு ஒரு மூன்று
நபர்கள் கொண்ட இடைக்காலக் குழுவினால் ஆளப்படும்போது புதிய தேர்தல்கள் குறைந்த
பட்சம் ஓராண்டிற்காவது தள்ளிப்போடப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
அக்குழுவில் ஒரு
இராணுவ அதிகாரியும் இரு குடிமக்களும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
(ஒருவர் இவரே என்ற
கருத்தும் இருக்கலாம்.)
முபாரக்
சர்வாதிகாரத்தின் கீழ் மிகப்பெரிய எதிர்ப்புக் குழுவாக இருந்த முஸ்லிம்
சகோதரத்துவம் ஷரப்பின் தேர்வை ஆதரித்துள்ளது.
இதை எதிர்கொள்ளும்
வகையில் இராணுவ ஆட்சி சிறையில் இருந்து அமைப்பின் தலைமையில் இருக்கும் இரு முக்கிய
உறுப்பினர்களை விடுதலை செய்துள்ளது.
கய்ரட் அல்-ஷடர்
மற்றும் ஹசன் மாலிக் இருவரும் டிசம்பர்
2006ல் ஒரு இராணுவ
நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ஏழாண்டு சிறை தண்டனை பெற்றனர்.
இராணுவக்
குழுவிற்கும் தஹ்ரிர் சதுக்கத்தில் பல எதிர்ப்புகளுக்கு அழைப்புவிடுத்த ஜனவரி
25 புரட்சிக்
குழுவிற்கும் இடையே
நடந்த கூட்டத்தில்
ஷபிக்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட வேண்டிய சில பெயர்கள் முன்வைக்கப்பட்டதில்
ஷரப்பும் ஒருவர் ஆவார்.
இக்குழுவில் ஒருவரான
நாசர் அப்தல் ஹமித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூட்டணி வரவுள்ள
எதிர்ப்புக்களிலிருந்து விலகிவிடும் என்றும் கூறினார்.
“அவர்கள் வேலை
செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்”
என்று ஷரப்
தலைமையிலுள்ள புதிய காபினெட்டைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
2004-2006ல்
போக்குவரத்துத் துறை மந்திரி என்னும் முறையில் இப்பொறியியல் பேராசிரியர்
ஒப்புமையில் சுதந்திரம் என்ற கருத்திற்காகப் புகழ் பெற்றார்.
இறுதியில் ஒரு பெரிய
ரயில் விபத்து மூடிமறைக்கப்பட்டது பற்றித் தன் பதவியை இராஜிநாமா செய்தார்.
ஆனால் முபாரக்கின்
அரசியல் முகப்பு அமைப்பான தேசிய ஜனநாயகக் கட்சியில் அவர் முக்கிய உறுப்பினராக
இருந்து கட்சியின் கொள்கைகள் இயற்றும் குழுவிலும் பணியாற்றினார்.
எத்திசையில்
காற்று அடிக்கிறது என்பதை உணர்ந்த முன்னாள் முபாரக் அதிகாரிகளில் ஷரப்பும் ஒருவர்.
எனவே பகிரங்கமாக
எதிர்ப்பு இயக்கத்தில் நுழைந்து கொண்டார்.
முபாரக் இராஜிநாமா
செய்த வாரத்தில் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் மற்ற பேராசிரியர்களுடன் குறுகிய
நேரத்திற்கு தஹ்ரிர் சதுக்கத்திற்கும் வந்திருந்தார்.
எகிப்தியச்
செய்தி ஊடகம் கொடுத்துள்ள தகவல்களின்படி,
ஷரப் வியாழன் இரவு
இளைஞர் கூட்டணிக் குழுக்களின்
15 உறுப்பினர்களை,
நியமனத்திற்குச் சில
மணி நேரம் முன்பு,
சந்தித்திருந்தார்.
15 பேரில் ஒருவரான
அம்ர் சலா,
அல் மஸ்ரி
அல்யுவோமிடம் ஷரப்
15 நிமிடக்
கூட்டத்தின் பெரும்பகுதியை அவர்களின் குறைகளைக் கேட்பதில் செலவழித்தார் என்றார்.
அரசப் பாதுகாப்புக்
கருவி கலைக்கப்படல்,
அரசியல் கைதிகள்
விடுவிக்கப்படல் ஆகியவை அவற்றில் அடங்கியிருந்தன.
அதற்குப் பதிலாக
அவர்கள் புதிய பிரதம மந்திரிக்குத் தங்கள் ஒத்துழைப்பைக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
கூட்டணியின்
மற்றொரு தலைவரான அப்டெல் ஹமிட்,
எகிப்தியச் செய்தி
ஊடகத்திடம் இக்குழு
“விழிப்புக்
குழுக்களை”
அமைக்க உள்ளதாகவும்,
அது மார்ச்
5
சனிக்கிழமையையொட்டி தஹ்ரிர் சதுக்கத்திலிருந்து நீங்க வேண்டும் என்று
எதிர்ப்பாளர்களை நம்ப வைக்க முயலும் என்றும் கூறினார்.
கூட்டணித்
தலைவர்களில் மற்றும் ஒருவரான அப்டெல்ரஹ்மான் சமிர்,
“நாம் வளைந்து
கொடுக்க விரும்புகிறோம்.
நம் கோரிக்கைகள்
நிறைவேற்றப்பட்டால் தக்க விடையிறுப்பு அளிக்க விரும்புகிறோம்….எங்கள்
பங்கு எதிர்ப்பது மட்டும் அல்ல,
நம் நாட்டைக்
கட்டமைக்கவும் நாங்கள் விரும்புகிறோம்”
என்றார்.
ஆயுதப்படைகள்
தலைவரான சமி அனனுக்கு,
இராணுவ அதிகாரப்படி
நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளவருக்கு,
ஷபிக்கிற்குப்
பதிலாக ஷரப் வந்தால் எதிர்ப்புக்கள் நிறுத்தப்படும் என்று கூட்டணி
உறுதியளித்துள்ளதாகவும் சமிர் வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில் வன்முறை மற்றும் இராணுவ ஆட்சியின் மிருகத்தனம் பற்றிய புதிய தகவல்கள்
வந்துள்ளன.
பெப்ருவரி
26ம் தேதி தஹ்ரிர்
சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட இராணுவப் பொலிஸ் தாக்குதலில்
கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தலைமை இராணுவ நீதிமன்றத்தால் இவ்வாரம் ஐந்து
ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்.
அம்ர் அப்தல்லா
அல்பெஹிரி மிருகத்தனமாக அடிக்கப்பட்டு அதன் பின் அரசாங்க அதிகாரியைத் தாக்கியது,
ஊரடங்கு உத்தரவை
மீறியது ஆகியவற்றிற்காகக் குற்றம் சாட்டப்பட்டார்.
பெப்ருவரி
26ம் தேதி தாக்குதல்
தொடங்கியதிலிருந்து இளைஞர்கள் மீண்டும் தஹ்ரிர் சதுக்கத்திற்கு வரத்
தொடங்கியுள்ளனர்.
முகாம்கள் அமைத்து
மற்றொரு ஆக்கிரமிப்பு எதிர்ப்பிற்குத் தயாரிப்புக்களை நடத்துகின்றனர்.
அதில் ஷபிக்
அகற்றப்பட வேண்டும்,
பாதுகாப்புப்
பிரிவுகள் கலைக்கப்பட வேண்டும்,
அரசியல் கைதிகள்
விடுவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகள் மையமாக உள்ளன.
ஷபிக்
அகற்றப்பட்டது,
அவருக்குப் பதிலாக
ஷரப் நியமிக்கப்பட்டுள்ளது ஆகியவை மாற்றம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவை நடக்கின்றன
எனக் காட்டுவதற்கு இராணுவ ஆட்சி கொடுக்கும் தோற்றத்தின் தொடர்ச்சியான
அடையாளங்களைத்தான் ஒத்திருக்கிறது.
அதே நேரத்தில் அது
எத்தகைய உண்மையான எதிர்ப்பும் எகிப்திய முதலாளித்துவ உயரடுக்கின் சொத்துக்கள்,
சலுகைகளுக்கு
வருவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த உயரடுக்கில்
உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளனர்.
இந்தப் பெயரவு
அடையாள நடவடிக்கைகளில் முபாரக் ஆட்சியில் குறிப்பாக வெறுப்பிற்குட்பட்ட அதிகாரிகள்
நீக்கப்படுதல்,
காவலில்
வைக்கப்படுதல்,
முபாரக் குடும்பம்
மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் சொத்துக்களை முடக்குதல் ஆகியவை அடங்கும்—அதைத்தவிர,
இந்த எடுபிடிகளில்
இராணுவத்தின் தலைமைக் குழுவிலுள்ள உயரதிகாரிகளும் உள்ளடங்குவார்கள்.
அவர்களின் தலைவரான பாதுகாப்பு மந்திரி மஹ்மத் தன்தவி உட்பட இக்குழு
உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியின் நீண்ட கால நண்பர்கள் ஆவார்கள் |