சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Walker must go! For a general strike in Wisconsin!s

வால்கர் வெளியேற வேண்டும்! விஸ்கான்சனில் ஒரு பொதுவேலைநிறுத்தம் வேண்டும்!

David North
3 March 2011

Use this version to print | Send feedback

செவ்வாயன்று விஸ்கான்சன் ஆளுநரால் முன்வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்கு அறிக்கை, மாநிலம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த அதிர்ச்சியையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் வாழ்க்கைத்தரங்களைப் படிப்படியாக குறைக்கவும், அத்தியாவசிய சமூகசேவைகளை வெறுமையாக்கவும், தங்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தெடுக்கவும் ஒரு இரக்கமற்ற முயற்சியோடு தாங்கள் மோதிக் கொண்டிருப்பதை வின்கான்சிஸ் தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களும் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றன.

பெரும் பெருநிறுவனங்களின் வரிவிகிதங்கள் சமீபத்தில் பாரியளவிற்கு குறைக்கப்பட்டதால் தோற்றுவிக்கப்பட்டு, பெரிதும் விரிவடைந்த, ஒரு பற்றாக்குறையை சமாளிக்க, மாநில வரவு-செலவு கணக்கிலிருந்து குறைந்தபட்சம் $1.5 பில்லியனை வால்கர் கோரி வருகிறார்.

அறிவிக்கப்பட்டிருக்கும் வெட்டுக்களாவன;

பள்ளி மானியங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு $1.25 பில்லியன் வெட்டுக்கள் செய்யப்பட்டன. இதில் மாநிலம் முழுவதற்குமான கல்வி நிதியுதவியில் $900 மில்லியனுக்கும் மேலான குறைப்பும் உள்ளடங்கும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அண்ணளவாக ஒவ்வொரு மாணவருக்கும் $500 வெட்டு செய்யப்படும்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான விஸ்கான்சன் மக்களின் மாநில சுகாதார திட்டங்களுக்கு (Medicaid) நிதி ஒதுக்கப்படும் மருத்துவநல மானியத்திலிருந்து 500 மில்லியன் டாலர் வெட்டுக்கள். இதனால் குறைந்த-வருவாய் பெறும் மற்றும் காப்பீடு செய்திராத நபர்களுக்கும், குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்கும் நாசகரமான விளைவுகள் ஏற்படும்.

விஸ்கான்சன் பல்கலைக்கழக நிதியுதவியில் 250 மில்லியன் டாலர் வெட்டப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, செல்வவளமிக்க முதலீட்டாளர்களின் நலன்களுக்கு உதவும் தனியார்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, விஸ்கான்சன் பல்கலைக்கழக மாடிசன் கிளை மாநில அமைப்புமுறையிலிருந்து துண்டிக்கப்படும். இதில் சுமார் 17,000 விஸ்கான்சன் பல்கலைக்கழக தொழிலாளர்களை பலியிடும் என்பதுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கல்லூரியின் கல்வி கட்டணங்களையும் கடுமையாக உயர்த்திவிடும்.

வால்கரின் வரவு-செலவு கணக்கு அறிக்கை ஒரு யுத்த பிரகடனமாக உள்ளது. கூட்டு பேரம்பேசுதலை கைவிடுவது போன்ற மேலதிக  கோரிக்கைகளை அவர் சேர்ந்திருப்பது, தர்க்கரீதியாக அவருடைய வரவு-செலவு கணக்கு முன்மொழிவுகளிலிருந்து தொடர்கின்றன. "பேரம்பேசலை" ஒரு இழிவுபடுத்த அவர் கோரும் வெட்டுக்கள் இயல்பாகவே அவருடைய வரவு-செலவு கணக்கு முன்மொழிவுகள், அவரின் ஒருதலைபட்சமான கோரிக்கைகளுக்கு தொழிலாளர்களை முற்றிலுமாக அடிபணியச் செய்ய வைப்பதாகும்.    

வால்கர் தம்முடைய கூட்டுபேரம்பேசலை முடிக்கும் கோரிக்கையிலிருந்து பின்வாங்கினால் போதும் அவரின் வரவு-செலவு கணக்கில் உள்ள வெட்டுக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கூறும் தொழிற்சங்க அதிகாரிகளின் திரும்பதிரும்ப கூறப்பட்ட  நிலைப்பாடு கோழைத்தனமானது மட்டுமல்ல, அது விஸ்கான்சனில் நிலவும் அரசியல் யதார்த்தத்தின் ஓர் அபாயகரமான தட்டிக்கழிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

வங்கிகள் மற்றும் தொழில்துறையின் முதலாளித்துவ தலைவர்களின் நலன்களுக்காக செயல்பட்டுவரும் தொழிற்சங்கங்கள், மாநில அரசாங்கங்களின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டால் போதும், “கூட்டு பேரம்பேசல்" என்பதற்கு எவ்வித அர்த்தமுமில்லை. கூட்டு பேரம்பேசல் என்பது பெருநிறுவனங்களின் தாராள மனப்பான்மையால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓர் அனுமதிச்சீட்டு அல்ல. அது பல தசாப்தங்களாக சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான கடும் மோதலுக்குப் பின்னர் முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது. அத்தகைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை இழந்தனர். இறுதி ஆய்வில், முதலாளித்துவ வர்க்கத்துடனான கருத்து முரண்பாடுகளையும், உள்ளாட்சி, மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தில் அதன் அரசியல் கையாட்களைக் கடந்து செல்லவும், தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆயுதத்தைப் பயன்படுத்த தயாராகி இருந்தார்கள் என்ற அளவிற்கு தான் கூட்டு பேரம்பேசல் இருந்தது.

வால்கரின் வரவு-செலவு திட்டம் இன்னும் சட்டப்பூர்வமாகக்கப்படவில்லை என்றாலும் கூட, நடைமுறையில் கூட்டு பேரம்பேசல் பொறிந்துவிட்டதையே எடுத்துக்காட்டுகிறது. அவருடைய நிர்வாகம் விஸ்கான்சனில் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கழுத்தை நெரிக்கும் ஒரு கொடூரமான மற்றும் சமூகரீதியில் நாசகரமான ஒரு வரவு-செலவு திட்டத்தை முன்னெடுத்து செல்கிறது.

இத்தகைய அரசியல் யதார்த்தத்திற்கு விஸ்கான்சன் தொழிலாள வர்க்கம் எவ்வாறு விடையிறுப்பைக் காட்ட வேண்டும்?

சமீபத்திய நாட்களில், மாநில தலைநகரில் நடக்கும் போராட்டங்கள் போதியளவிற்கு இல்லையென்பதையும் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதையும் விஸ்கான்சன் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர்.

பொது வேலைநிறுத்தம் நடத்தும் உணர்வு, தொழிலாள வர்க்கத்திடையே மேலோங்கி வருகிறது. முன்பில்லாத அளவிற்கு பெரும் எண்ணிக்கையில் இருக்கும் விஸ்கான்சின் தொழிலாளர்கள், தங்களின் ஒட்டுமொத்த பலத்தையும் பாரியளவில் ஒன்றுதிரட்டுவதை தவிர குறைந்த எதுவும் வால்கர் நிர்வாகத்தின் தாக்குதலைத் திருப்பியடிக்க போதாது என்பதை உணர்ந்து வருகிறார்கள்.

இந்த நியாயமான உணர்வு விஸ்கான்சிலும், அமெரிக்கா முழுவதிலும் அதிகளவில் நிலவும் அரசியல் யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. கூட்டு பேரம்பேசலின் பொறிவு, அதாவது தொழிலாளர்கள்மீது பலத்தை பயன்படுத்துவது குறித்த குறிப்பான அச்சுறுத்தலுடன் சகிக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளைத் திணிக்கும் மாநிலத்தின் முயற்சி ஓர் ஆழ்ந்த புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. நாங்கள் கேட்போம். நீங்கள் எங்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்: இதைத்தான் ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களிடம் கூறுகிறது.  

உண்மையில், இது வர்க்கங்களுக்கு இடையில் உள்ள சமரசம் முடிவுக்கு வந்துவிட்டதைக் முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த அரசியல் யதார்த்தத்தை தொழிலாளர்கள் அதிகளவில் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே, ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அவர்களிடம் அதிகரித்துவரும் உணர்வின் பின்புலத்தில் உள்ளது.

ஒரு பொதுவேலைநிறுத்த உந்துவிசையைக் கட்டியெழுப்பும் இந்த தீர்மானத்திற்கு வந்திருக்கும் தொழிலாளர்களுக்கு இது அவசியமாக உள்ளது. ஒரு பொதுவேலைநிறுத்தம் குறித்து பேசுவதே அதன் அடிப்படை தயாரிப்பை நோக்கி கொண்டு வந்துவிடும்.

ஒவ்வொரு வேலையிடத்திலும் பொதுவேலைநிறுத்தத்திற்கான ஒரு தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும்; பொதுவிவாதம் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பொதுவேலைநிறுத்தத்திற்கு எங்கெல்லாம் கணிசமான ஆதரவு இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்த நடவடிக்கைக்குத் தயாரிப்பு செய்ய தொழிற்சங்க அதிகாரிகளளில் இருந்து சுயாதீனமான அடிப்படை தொழிலாளர் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த இயக்கம் ஒரு பொதுவேலைநிறுத்த அழைப்புடன் பின்வரும் கோரிக்கைகளை அடித்தளத்தில் கொண்டிருக்க வேண்டும்:

* விஸ்கான்சன் தொழிலாளர்களால் அனைத்து பொருளாதார விட்டுக்கொடுப்புகளும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வங்கிகளின் குற்றவியல் ஊக நடவடிக்கைகளால் விளைந்த மூன்று ஆண்டு பின்னடைவினால் ஏற்பட்ட, அழுத்தும் பிரச்சினைகளைச் சமாளிக்க சமூகச்செலவின ஒதுக்கீடுகளை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை வைக்க வேண்டும்.

* பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தொழிலாளர்கள் தாங்கள் முடிவெடுத்த போது தங்களின் வாழ்க்கை தரங்களை மேம்படுத்த மற்றும் பாதுகாப்பதற்காக, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள்மீது எந்தவிதமான அல்லது அனைத்து தடைகளையும் சமரசமின்றி மறுத்தல்.

* பெருநிறுவன இலாபங்களுக்கு கணிசமாக வரி உயர்வு விதிப்பது. வரவு-செலவு கணக்கில் உள்ள பற்றாக்குறையைத் தீர்க்கவும், புதிய மற்றும் அத்தியாவசிய சமூக செலவுகளைச் சமாளிக்கவும் பெருநிறுவன இலாபங்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் கணிசமாக வரிகளை உயர்த்துவது.

* ஆளுநர் வால்கர் மற்றும் அவரின் பிற்போக்குத்தனமான நிர்வாகம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென கோருவது. தொழிலாளர் வர்க்கத்தின்மீது பெருநிறுவன தாக்குதலை நடத்துவதற்கும், சர்வாதிகார முறைகளைப் பயன்படுத்துவதற்கும் வால்கர் வேண்டுமென்றே ஓர் அரசியல் வழிகாட்டியாக ஆகியுள்ளார். வரவு-செலவு திட்ட அறிக்கைக்கு எதிரான விஸ்கான்சன் தொழிலாளர்களின் போராட்டம், சாரம்சத்தில், ஓர் அரசியல் போராட்டமாகும் என்பதை உணர்வதிலிருந்து தான் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கை எழுகிறது.

வால்கரை நீக்குவதற்கான அழைப்பு ஜனநாயக கட்சிக்குள் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பதாகாது. விஸ்கான்சன் எல்லைகளுக்கு வெளியிலும், வரவு-செலவு திட்ட வெட்டுக்களைக் கோரும் ஜனநாயக கட்சி ஆளுநர்கள் மற்றும் நகரசபை தலைவர்களின் கொடுமைகள், வால்கர் கோரியதையும்விட குறைந்ததில்லை. நாடுமுழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையில் உக்கிரமான பேரழிவை ஏற்படுத்தும் வரவு-செலவு கணக்கு வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதில் ஒபாமா நிர்வாகம் மாநில ஆளுநர்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள காங்கிரஸூடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.  

எவ்வாறிருப்பினும் விஸ்கான்சின் தொழிலாளர்களால் களம் அமைக்கப்பட்ட முன்மாதிரியால் தூண்டப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ வர்க்க அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்குமான எதிர்ப்பில், ஒவ்வொரு மாநிலமாக ஒட்டுமொத்தத்தில் நாடு முழுவதும் பரவும்.

இவ்வாறு, பெருநிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு மாற்றாக தொழிலாளர்கள் தங்களின் சொந்த, சுயாதீனமான, சோசலிச மாற்றீட்டை உருவாக்க, அவர்களின் எல்லா தேவைகளிலும் உள்ள மிக முக்கிய பிரச்சினையாக, வால்கரை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுகிறது.

வால்கர் நிர்வாகம் மற்றும் அதன் பிற்போக்குத்தனமான வரவு-செலவு திட்டத்திற்கு எதிரான பொதுவேலைநிறுத்த போராட்டத்தை சோசலிச சமத்துவ கட்சி ஆதரிப்பதுடன், ஊக்கப்படுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கை அவசியமாகும் என்ற தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் உணர்வு, அமெரிக்காவில் சமூக மோதல் தீவிரப்பட்டிருப்பதை நிரூபிக்கிறது. எவ்வாறிருப்பினும், தொழிலாளர்கள் ஏதோ ஒரேயொரு ஆளுநருக்கு எதிராக போராடவில்லை, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக, எதன் அடிப்படையில் அது ஆட்சி செய்கிறதோ அந்த இலாபகர அமைப்புமுறைக்கு எதிராக அவர்கள் போராடி வருகிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.