செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
லிபியாவில் இராணுவத்
தலையீட்டிற்குத் துருப்புக்களும் தளவாடங்களும் தயாராகின்றன
By
Julie Hyland
2 March 2011
Use
this version to print | Send
feedback
அமெரிக்கா,
பிரிட்டன் மற்றும்
ஐரோப்பியச் சக்திகள் இராணுவ நடவடிக்கை உட்பட லிபியாவில் தங்கள் தலையீட்டிற்கான
தயாரிப்புக்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
முயம்மர் கடாபியின்
ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியை அவைகள் பயன்படுத்தி லிபியாவின் எண்ணெய் வயல்கள்
மீதான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவும்,
அவர்கள் பல
ஆண்டுகளாக நம்பியிருந்த சர்வாதிகாரிகள் இப்பொழுது முற்றுகையிலுள்ள நிலைமைகளில்
அடுத்த நடவடிக்கைகளுக்கான முக்கியத் தளத்தை நிறுவவும் முயல்கின்றன.
அமெரிக்காவில் திங்களன்று சட்டப்பேரவையின் பிரதிநிதிகள் பிரிவின் வெளியுறவுக்
குழுவின் முன் சாட்சியம் அளித்த அரச செயலர் ஹில்லாரி கிளின்டன்,
“முழுப்
பிராந்தியமும் மாறி வருகிறது,
ஒரு வலுவான
மூலோபாயத் தன்மையுடைய அமெரிக்க எதிர்கொள்ளல் மிகவும் தேவையாகும்”
என்று எச்சரித்தார்.
விமானத்
தளத்தைக் கொண்டுள்ள
USS Enterprise
மற்றும் நீரிலும் தரையிலும் செல்லும் ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ள இரு கப்பல்களான
USS Kearsarge
மற்றும் USS
Ponce ஆகியவை
தென்மேற்கு மத்தியதரைக்கடலில் நிலை கொண்டுள்ள நேரத்தில் அவருடைய அறிக்கை வந்துள்ளது.
இதன் நோக்கம்
லிபியாவிற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும்
“அதற்கான முடிவுகள்
எடுக்கப்பட்டவுடன் அதில் வளைந்து கொடுக்கும் தன்மையை அளிப்பதுதான்”
என்று ஒரு மூத்த
அமெரிக்க இராணுவ அதிகாரி கூறினார்.
லிபியக்
கடலோரப் பகுதியையோட்டி கடலில் பிரிட்டன் ஒரு கடற்படை அழிப்புக்கப்பல் மற்றும்
பிரிகேட்டை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடாபி
“தலைமைதாங்கத்
தகுதியற்றவர்”
என்று ஐ.நா.வில்
அமெரிக்கத் தூதராகவுள்ள சூசன் ரைசின் அறிக்கையை எதிரொலிக்கும் வகையில் பிரதம
மந்திரி டேவிட் காமெரோன் கடாபி அகற்றப்படுவது பிரிட்டனுக்கு
“உயர்ந்த
முன்னுரிமைச் செயல்”
ஆகும் என்றார்.
பிரிட்டனின்
பாதுகாப்புப் படைகளின் தலைவரான ஜேனரல் சர் டேவிட் ரிச்சர்ட்ஸ் இராணுவ
நடவடிக்கைகளுக்கான அவசரக்காலத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் நிலப்பகுதி
நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பல மேலைத்தேயச்
சக்திகள் லிபியாவில் பொறியில் அகப்பட்டுக் கொண்டுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க
மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில்,
அத்தகைய
செயல்களுக்கு முன்னால் ஆழ்ந்த முறையில் ஊடுருவி மேற்பார்வையிடும் தங்களுடைய
துருப்புக்களைப் பயன்படுத்தியதும் அடங்கும்.
ஈராக்
மற்றும் முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடந்த தலையீடுகளில் இருந்தது போலவே,
“மனிதாபிமானம்”
பற்றிய கவலைகள்தான்
காலனியப் படையெடுப்பிற்கு ஒரு முறைப்பு கொடுப்பதற்கு முன் வைக்கப்பட்டுள்ளன.
லிபியாவில் இருந்து
தப்பியோடிச் செல்லும் பல்லாயிரக்கணக்கான குடியேற்ற தொழிலாளர்கள் துனிசியாவில்
நுழைந்துள்ளனர்,
அதைத்தவிர பலரும்
எல்லையில் எவருக்கும் உரிமை இல்லாத இடத்தில் தற்பொழுது பொறியில் அகப்பட்டுள்ளது
போல் உள்ளனர்.
உறைவிடம் இல்லாமல்,
குறைந்த அளவு
பொருட்களே உள்ள நிலையில்,
பங்களாதேசம்,
கானா மற்றும்
எகிப்தில் இருந்து பெரும்பாலும் வந்துள்ள தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு அதிக
ஆதரவு அல்லது வழிவகையைக் கொண்டிருக்கவில்லை.
“இன்னும்
கூடுதலான மோதல்கள் மக்களில் ஏராளமானவர்கள் தப்பியோடுவதை ஏற்படுத்தினாலோ,
உணவு அளித்தலில்
சரிவு ஏற்பட்டாலோ,
துனிசியா,
எகிப்து வழியே
லிபியாவிற்கு மனிதாபிமான உதவிகளை அளிக்கும் வழி உடைய தாழ்வாரங்களைப்
பாதுகாப்புதற்கு அமெரிக்கா,
பிரிட்டிஷ் படைகளின்
ஆதரவு தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”
என்று கார்டியன்
கூறியுள்ளது.
இத்தகைய
“தாழ்வாரங்கள்”
வட ஆபிரிக்கா
மற்றும் மத்திய கிழக்கில் மக்கள் எழுச்சிகளின் மையமாக தற்பொழுதுள்ள மூன்று
நாடுகளிலும் மேலைத்தேய துருப்புக்களைத் தக்க முறையில் நிலைநிறுத்தும் திறனாகப்
பயன்படுத்திவிட
முடியும்.
செவ்வாயன்று
ஐ.நா.பொதுச்
சபை தன் மனித உரிமைகள் குழுவிலிருந்து லிபியாவைத் தற்காலிகமாக நீக்கும் வாக்கை
அளித்தது.
அமெரிக்கா,
பிரிட்டன்,
ஜேர்மனி மற்றும்
ஆஸ்திரியா ஆகியவை கடாபி மற்றும் அவருடைய குடும்பத்தினர்,
நெருக்கமான
நண்பர்கள் ஆகியோரின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத்
தடைகளைச் சுமத்துதல் ஆகியவற்றை அடுத்து இது வந்துள்ளது—லிபியாவின்
எண்ணெய் ஏற்றுமதிகளில்
85 சதவிகிதமானது
ஐரோப்பிய ஒன்றியத்திற்குத்தான் செல்லுகின்றன.
ஜெனீவாவில்
மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் பேசிய கிளின்டன் ஐரோப்பிய வெளியுறவு
மந்திரிகளுடன் தான் கடந்த வார இறுதியில் இயற்றப்பட்ட ஐ.நா.பாதுகாப்புச்
சபைத் தீர்மானங்களின் விளைவுகள் பற்றி விவாதித்ததாகக் கூறினார்.
இவற்றுள் ஆயுதங்கள்
அனுப்புவது பற்றிய தடைகளும் லிபியத் தலைவர்,
அவருக்கு
நெருக்கமானவர்களின் சொத்துக்களை முடக்குவது ஆகியவை உள்ளன.
கடாபியின்
படைகள் குடிமக்களைத் தாக்கும் முயற்சியை நிறுத்துவது என்ற பெயரில் லிபிய
வான்பகுதியில் ஒரு
“பறக்கக் கூடாது”
வலயப் பகுதியை
நிறுவுதலை விவாதிப்பதற்காக பிரான்ஸ்,
ஜேர்மனி,
இங்கிலாந்து,
இத்தாலி ஆகியோருடன்
பேசிய பின் “மேசையில்
முடிவுகள் ஏதும் அகற்றப்படவில்லை”
என்றார் கிளின்டன்
சமீபத்திய
நாட்களில் எதிர்ப்புச் சக்திகள் கைப்பற்றி இருக்கும் அஜ்டபியா,
மிஸ்ரடா,
மற்றும்
திரிப்போலிக்கு மேற்கேயுள்ள
மூலோபாயத் துறைமுக
நகரான ஜவியா ஆகிய பகுதிகளை மீட்க கடாபி முற்பட்டுள்ளார்.
இம்முயற்சிகள்
அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன போல் தோன்றுகிறது.
லிபியாவின் எண்ணெய்
மற்றும் எரிவாயு வயல்களின் மீதான கட்டுப்பாட்டின் பெரும் பகுதியையும் கடாபி
எதிர்க்கட்சிகளிடம் இழந்துவிட்டார்.
எதிர்ப்புக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பெங்காசிக்கு உணவு மருத்துவப்
பொருட்கள் உட்பட விநியோகங்களுக்கு உதவும் வாகன வரிசைகளை திரிப்போலி சமாதானம் நாடும்
வகையில் திரிப்போலி அனுப்பிவைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
லிபியாவின்
வெளியுறவு உளவுத்துறைப் பணியின் தலைவர் பௌஜெய்ட் டோர்டாவை எதிர்ப்புத் தலைவர்களுடன்
பேச்சுக்கள் நடத்துவதற்கும் கடாபி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இச்செயற்பாடு
எதிர்க்கட்சியனரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
திரிப்போலிக்குள்ளேயே திங்களன்று ஒரு தொழிலாளர் வர்க்கப் புறநகரான டஜௌராவில்
திங்களன்று நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
வார இறுதியில்
ஆட்சியினால் கொல்லப்பட்ட எதிர்ப்பாளர் இறுதி ஊர்வலத்தையொட்டி இவை நிகழ்ந்தன.
“பறக்கக்கூடாத
வலயம் ஒன்றை”
நிறுவுதல் என்னும்
விருப்பத் தேர்வும் எங்களால் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.
இன்று அதைப்பற்றி
நண்பர்களுடனும் பங்காளிகளுடனும் விவாதித்தேன்”
என்றார் கிளின்டன்.
பறக்கக்
கூடாது வலயப் பகுதிகளுக்குத் தங்கள் ஆதரவை ஜேர்மனியும் பிரான்ஸும் குறிப்புக்
காட்டியுள்ளன.
அதே நேரத்தில்
லிபியாவின் முன்னாள் காலனிய ஆதிக்கச் சக்தியாக இருந்த இத்தாலி அதன் தளங்கள்
லிபியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளது என்று
கூறப்படுகிறது.
ஐ.நா.வின்
ஒப்புதலை இப்பகுதிகள் பெறவேண்டும் என்று பிரான்ஸ் கூறியுள்ளது.
அதே நேரத்தில்
ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டர்வெல்லே,
“எச்சூழ்நிலையிலும்
இது ஒரு இராணுவத் தலையீடுபோன்றது என்ற உணர்வு வெளிப்பட்டுவிடக்கூடாது”
என்றார்.
உண்மையில்
பறக்கக்கூடாது என்பவை இன்னும் பரந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி
என்றுதான் கருதப்படுகின்றன.
செவ்வாயன்று
செனட் விசாரணை ஒன்றில் பேசிய அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தளபதியான ஜெனரல்
ஜேம்ஸ் மட்டிஸ்,
“என்னுடைய
இராணுவரீதியான கருத்து அது
[பறக்கக் கூடாது
வலயப் பகுதிகள்]
சவால் விடும் தன்மை
உடையவை.
ஒரு பறக்கக்கூடாது வலயப்
பகுதியை நிறுவுவதற்கு வான் பாதுகாப்புத் திறனை அகற்ற வேண்டும்.
எனவே இங்கே
போலித்தோற்றங்களுக்கு இடம் இல்லை.
அது ஒரு இராணுவ
நடவடிக்கை என்றுதான் இருக்க முடியும்—மக்களிடம்
உங்கள் விமானங்களை இங்கு பறக்க விடாதீர்கள் என்று வெறுமனே கூறுவதாக இருக்க முடியாது”
என்றார்.
வேறுவிதமாகக் கூறினால்,
லிபிய விமானத்
தளங்கள் மற்றும் விமானங்கள் மீது குண்டு வீசுதல் என்ற பொருளை இது தரும்.
ரஷியா
மற்றும் சீனா ஆகியவை பறக்கக் கூடாது வலயப் பகுதிகளை நிறுவும் விருப்புரிமையைத்
தாக்கியுள்ளன.
ரஷிய வெளியுறவு
மந்திரி செர்ஜி லவ்ரோவ் உலகச் சக்திகள்
“லிபிய
நெருக்கடியில் மேற்போக்கான செயல்களைத் தவிர்க்க வேண்டும்”
என்றார்.
அந்நாட்டின் நேட்டோ
தூதரான Dmitry
Rogozin, “வாஷிங்டனில்
எவரேனும் லிபியாவை மின்னல் வேகத்தாக்குதலுக்கு உட்படுத்தலாம் என்று நினைத்தால் அது
தீவிரத் தவறு ஆகிவிடும்.
ஏனெனில் நேட்டோவின்
பொறுப்புப் பகுதிக்கு அப்பால் இராணுவ வலிமையைப் பயன்படுத்துதல் சர்வதேசச் சட்டத்தை
மீறுவது என்று கருதப்பட்டுவிடும்”
என்றார்.
“தேசிய
விமானப் படை அல்லது சிவில் விமானப் பிரிவு தங்கள் பகுதிகள் மீது பறக்கக்கூடாது என்ற
தடை விதிப்பது மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தீவிரக் குறுக்கீடு ஆகும்,
எப்படியும் அதற்கு ஐ.நா.பாதுகாப்புச்
சபையின் தீர்மானம் தேவை.”
துருக்கியின் பிரதம மந்தரி
Recep Tayyip Erdogan
ம் அமெரிக்கா மற்றும்
இங்கிலாந்து நாடுகளின் இராணுத் தலையீடு தேவை எனக் கூறுவதை
“அபத்தமானது”
என்று கண்டித்தார்.
“மத்திய கிழக்கும்
ஆபிரிக்காவும் மேற்கிற்கு எண்ணெய்க்கு ஆதராமாகக் காணப்படுகின்றன.
எனவே பல
தசாப்தங்களாக எண்ணெய் போர்களில் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன”
என்றார் எர்டோகன்.
மக்கள்
எழுச்சிக்குப் பின்னணியில் இது உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால் அல்
ஜசீரா குறிப்பிட்டுள்ளபடி,
“சனிக்கிழமை
இயற்றப்பட்ட 1970
ஐ.நா.பாதுகாப்புச்
சபைத் தீர்மானமானது உறுப்பு நாடுகளை லிபியாவில்
“மனிதாபிமான
உதவிக்கு உடனடியான,
பாதுகாப்பான
செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் உறுப்பு நாடுகள் செய்யலாம்
என்று இசைவு கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.”
அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் சர்வதேச சட்டத்தை மீறுவதற்குத் தயாரிப்புக்கள்
நடத்துகின்றன என்பதின் மற்றொரு அடையாளமாக பைனான்சியல் டைம்ஸ்,
“எர்டோகனின்
கருத்துக்கள் நேட்டோ தலைமையின் கீழ் ஒரு மேலைத்தேய இராணுவ நடவடிக்கை எடுப்பது
கடினமாகப் போகலாம் என்று தெரிவிக்கின்றன.
நேட்டோ எப்பொழுதும்
ஒருமித்த உணர்வின் அடிப்படையில்தான் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய முடிவுகளை
எடுக்கிறது.
இந்த ஒருமித்த
உணர்வை அது அடையமுடியவில்லை என்றால்,
அமெரிக்கா மற்றும்
பிரிட்டன் விருப்பமுடைய நாடுகளின் முறைசாராக் கூட்டணியைப் பயன்படுத்தி பறக்கக்
கூடாது பகுதிகளை நிறுவும் கட்டாயத்திற்கு உட்படக்கூடும்”
என்று எழுதியுள்ளது.
இத்தகைய
சொல்லாட்சி ஈராக்கின் மீது நடத்தப்பட்ட
2003 போருக்கு
முன்னதாக வந்த கருத்துக்களின் எதிரொலி போல்தான் உள்ளது.
அது ஐ.நா.
ஒப்புதல்
இல்லாமல்தான் துவக்கப்பட்டது.
முன்னாள்
பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஜோன் மேஜர்,
“ஒரு பறக்கா வலயப்
பகுதி தேவை என்பதற்கான ஐ.நா.தீர்மானம்
சிந்தனையளவில் சிறந்ததாக இருக்கும்.
ஆனால் இது ஒன்றும்
சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கு
“முற்றிலும் தேவை
அல்ல”,
நாடுகளின் கூட்டு ஒன்று
தானே இந்த முடிவை எடுக்கலாம்”
என்று கூறியதாக
BBC தெரிவித்துள்ளது. |