WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இலங்கை சோ.ச.க.
கூட்டம் எகிப்திய புரட்சியை கலந்துரையாடியது
By our correspondents
2 March 2011
Use
this version to print | Send
feedback
சோசலிச
சமத்துவக்
கட்சியும்
(சோ.ச.க.)
சமூக
சமத்துவத்துக்கான
அனைத்துலக
மாணவர்கள்
(ஐ.எஸ்.எஸ்.ஈ.)
அமைப்பும்,
எகிப்திய
புரட்சியின்
பூகோள
உட்பொருளை
கலந்துரையாடுவதற்காக
கடந்த
வெள்ளிக்
கிழமை
மத்திய
கொழும்பில்
உள்ள
மஹாவலி
கேந்திரத்தில்
பொதுக்
கூட்டமொன்றை
நடத்தின.
பல
கலைஞர்களுடன்
சேர்த்து
கொழும்பு,
மத்திய
மலையக
மாவட்டங்கள்
மற்றும்
கிராமப்புற
பிரதேசங்களிலும்
இருந்து
வந்த
இளைஞர்களும்
தொழிலாளர்களும்
இக்கூட்டத்திற்கு
வருகை
தந்திருந்தனர்.
சபையின்
ஒரு பகுதி
துனீசியா, எகிப்து, லிபியா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில்
உள்ள ஏனைய நாடுகளிலும் நடக்கும் கிளர்ச்சி பற்றி ஒரு அமைப்பால் இலங்கையில்
நடத்தப்பட்ட முதலாவது கூட்டம் இதுவே. சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. குழுக்கள்
கொழும்பில் உயர் கல்வி நிறுவனங்களிலும் தொழிலாள வர்க்க பிரதேசங்களிலும் உலக
சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரைகளை விநியோகித்து பிரச்சாரம் செய்தன.
விலானி பீரிஸ்
கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ்
தெரிவித்ததாவது: “சோவியத்
ஒன்றியம் 1991ல் கலைக்கப்பட்ட பின்னர், ஒரு முதலாளித்துவ ஆரவார அலை காணப்பட்டதோடு
சோசலிசத்தின் முடிவு பற்றியும் அதிகம் பேசப்பட்டன. சிலர் தொழிலாள வர்க்கத்தையும்
வர்க்கப் போராட்டங்களையும் காலங்கடந்ததாக ஒதுக்கித் தள்ள முயற்சித்தனர். ஆயினும்,
எகிப்திய தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர பலத்தை காட்டியதோடு அத்தகைய பிற்போக்கு
பிரச்சாரத்துக்கு மரண அடி கொடுத்தனர்.”
பூகோள
நிதி நெருக்கடி உலகம் பூராவும் ஒரு திருப்பு முனையை குறிக்கின்றது என பீரிஸ்
தெரிவித்தார்: “அமெரிக்கா
உட்பட முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், பெரும் வங்கிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களை
பிணையெடுத்த அதே வேளை தொழிலாளர்கள் அதற்கு விலை கொடுக்கத் தள்ளப்பட்டார்கள். இது
எகிப்து உட்பட ஒவ்வொரு நாட்டிலும் சமூக சமத்துவமின்மையை ஆழமடையச் செய்ததோடு
வெகுஜனப் போராட்டங்கள் வெடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது.
துனீசியாவில் ஒரு வேலையற்ற பட்டதாரி தீமூட்டி தற்கொலை செய்துகொண்டதே ஜனாதிபதி பென்
அலியை தூக்கிவீசிய எழுச்சியை தூண்டிவிட்டது என ஐ.எஸ்.எஸ்.ஈ. செயலாளர் கபில
பெர்ணான்டோ தெரிவித்தார். கிளர்ச்சி துரிதமாக ஏனைய நாடுகளுக்கு பரவியதோடு
தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலையற்ற இளைஞர்களும் முன்னணியில் இருந்தனர்.
உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, 81 மில்லியன் இளைஞர்கள் உலகம் பூராவும்
வேலையற்றுள்ளனர் என அவர் கூறினார். தெற்காசியாவில் மட்டும் 2010 முதல் 2015 வரை
ஆண்டுக்கு ஒரு மில்லியன் இளைஞர்கள் உழைப்புப் படையில் சேர்க்கப்பட்ட போதிலும்,
அநேகமானவர்கள் வேலையற்றவர்களாக உள்ளனர்.
கே.ரட்னாயக்க
“தொழிலாள
வர்க்கம் உலகம் பூராவும் நீண்ட புரட்சிகர போராட்ட காலகட்டமொன்றுக்குள்
நுழைந்துகொண்டிருப்பதையே எகிப்திய கிளர்ச்சியும் மத்திய கிழக்கு பூராவுமான
எழுச்சிகளும் வெளிப்படுத்துகின்றன”
என பிரதான உரையாற்றிய சோ.ச.க.
அரசியல் குழு உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு
உறுப்பினருமான கே.
ரட்னாயக்க தெரிவித்தார்.
அமெரிக்க மாநிலமான விஸ்கொன்சினில் தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரத்தின் மீதான
தாக்குதலுக்கு எதிராக அணிதிரண்டுள்ளதோடு உரிமைகளுக்காவும் போராடி வருகின்ற அதே
சமயத்திலேயே மத்திய கிழக்குப் போராட்டங்களும் விரிவடைந்துள்ளதன் முக்கியத்துவத்தை
ரட்னாயக்க சுட்டிக்காட்டினார்:
“அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளர்கள் வேலையின்மை, பணவீக்கம், வறுமை, கல்வி மற்றும்
சுகாதார சேவை வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் போன்ற தமது
பொதுப் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டத்துக்கு வந்துள்ளனர்.”
தொழிலாள
வர்க்கத்தின் சமூக நிலைமைகளுக்கு எதிரான தாக்குதலை இயக்கும் பூகோள முன்னெடுப்புகளை
பேச்சாளர் விளக்கினார். எகிப்தில் 1984ல் மொத்த தேசிய வருமானத்தில் 60 வீதமாக
இருந்த குறைந்தபட்ச சம்பள வீதம், 2007ல் 13 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதை அவர்
சுட்டிக்காட்டினார்.
“எகிப்திய
தேசிய வருமானம் அதிகரித்திருந்த போதிலும், அது ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், அவரது
விசுவாசிகள் மற்றும் ஒரு உயர் மத்தியதர வர்க்க தட்டினர் உட்பட ஒரு சிறு
பகுதியினருக்கே நன்மைகொடுத்தது. இளைஞர்கள் வேலையின்மை தாங்க முடியாதளவு
உயர்ந்துள்ளது
–வேலையின்மை
ஆண்கள் மத்தியில் 25 வீதமாகவும் பெண்கள் மத்தியில் 59 வீதமாகவும் உள்ளது.
“முபாரக்
அணிதிரட்டிய குண்டர்களும் இராணுவமும் வெகுஜன இயக்கத்தை தோற்கடிக்கத் தவறியபோது,
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எகிப்திய துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான், மொஹமட்
எல்பரைடியினால் தலைமை தாங்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் மாற்றத்துக்கான
தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளார். அவர்கள்
அனைவரும் இராணுவத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். சுலைமான் புலனாய்வுத்துறை
தலைவராக இருந்ததோடு சீ.ஐ.ஏ. உடன் நெருக்கமாக செயற்பட்டவர். தொழிலாள வர்க்கம்
முன்னணிக்கு வரத் தொடங்கியவுடன், முபாரக் வெளியேற வேண்டும் என இராணுவ உயர்மட்டம்
தீர்மாணித்தது.”
தீர்க்கமான அரசியல் மோதல்கள் எதிரில் உள்ளன என ரட்னாயக்க வலியுறுத்தினார். முபாரக்
பதவியிறக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இராணுவத் தளபதிகள் தொழிலாளர்களின் வேலை
நிறுத்தங்களையும் போராட்டங்களையும் நசுக்குவதன் மூலம் தமது அதிகாரத்தை
பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். அமெரிக்கா முபாரக்கிற்கு முண்டு கொடுத்ததைப்
போலவே எகிப்திய இராணுவத்துக்கும் பிரதான முண்டுகோலாக இருக்கின்றது.
முதலாளித்துவத்தை தூக்கி வீசி, அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்
தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைக்காமல் ஜனநாயக உரிமைகளை வெல்ல
முடியாது என பேச்சாளர் விளக்கினார்.
“லெனினுடன்
ரஷ்யப் புரட்சிக்கு துணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த
நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு இதுவேயாகும்.”
ட்ரொட்ஸ்கியின் கோட்பாடே 1917 அக்டோபரில் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் வெற்றிகரமாக
ஆட்சியை கைப்பற்ற வழிநடத்தியது. மற்றும் எகிப்து, துனீஷியா மற்றும் உலகம் பூராவும்
உள்ள தொழிலாள வர்க்கத்துக்கான அடிப்படை படிப்பினையும் இதுவே.
இலங்கை
அரசாங்கம் இந்த எழுச்சிகள் சம்பந்தமாக கூருணர்வுடன் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் தொழில்
புரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்தப் பிராந்தியத்தில் சர்வாதிகார
அரசாங்கங்களுடன் சினேக உறவை வைத்துக்கொண்டுள்ள கொழும்பு அரசாங்கம்,
“இத்தகைய
நெருக்கடி நிலைமைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இலங்கை தயாராக இல்லை”
எனக் கூறி, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு தனது தூதரகங்கள் ஊடாக இலங்கை
தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுத்துள்ளது.
இலங்கையினுள், சில செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர் தலைப்புக்கள், இலங்கையில்
மோசடி, பணவீக்கம் மற்றும் வேலையின்மையின் ஆபத்தான உள்நிலைமைகளைப் பற்றி ஜனாதிபதி
இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தன. அந்த ஆசிரியர் தலைப்புக்கள்,
மக்கள் பொறுமை இழக்கின்றனர் என கவலை வெளியிட்டிருந்தன.
முடிவில், புரட்சிகர தலைமைத்துவத்தை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் பகுதிகளை கட்டியெழுப்புவது தீர்க்கமான பிரச்சினையாக உள்ளது என ரட்னாயக்க
வலியுறுத்தினார். சபையில் இருந்தவர்களை சோ.ச.க. யில் இணையுமாறு அவர் வேண்டுகோள்
விடுத்தார்.
கூட்டத்தின் பின்னர் WSWS
உடன்
பேசிய அவையினர்,
எகிப்திலும் இலங்கையிலும் வெகுஜனங்களின் வறிய வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக
உரிமை மீறல்களின் சமாந்தரத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்தனர்.
ஒரு
பெண் தொழிலாளி தெரிவித்ததாவது:
“நான்
பெரும் ஆர்வத்துடன் மத்திய கிழக்கிலான அபிவிருத்திகளை கவனித்து வருகின்றேன்.
ஆயினும், உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை தெரிந்துகொள்வது கடினமாக
இருக்கின்றது. நடப்பவை பற்றி அல் ஜஸீராவும் WSWS
உம் மட்டுமே சிறந்த தரவுகளை தருகின்றன. நான் WSWSஐ
மிக ஆர்வத்துடன் வாசிக்கின்றேன். 2005ல் நடந்த [அமெரிக்க சோ.ச.க.யின்] கோடைகால
பாடசாலையின் விரிவுரைகளை நான் ஏற்கனவே வாசித்துள்ளேன். இன்னமும் அவற்றில்
வாசிப்பதற்கு உள்ளன.
“இது
[எகிப்திய புரட்சி] ஒரு சிறிய விடயம் அல்ல. அது ஒரு முக்கியமான இடத்தில்
நடக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து உலகில் இரண்டாவதாக அதிக நிதி பெறும் நாடு
எகிப்தாகும். அது பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்காக ஒரு தீர்க்கமான
பாத்திரத்தை வகிக்கின்றது. முன்னர் மத்திய கிழக்கில் சில ஆட்சியாளர்கள் வெகுஜன
ஆதரவைக் கொண்டிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் மக்கள் ஆதரவை
இழந்தனர்.”
WSWS
உடன் பேசிய ஒரு கலைஞர் தெரிவித்ததாவது:
“எகிப்திய
மக்கள் முகங்கொடுத்த சமூக நெருக்கடிகளே அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக எழுச்சி
பெறத் தள்ளியது. உலகம் பூராவும் இதே நிலைமை மேலோங்கி வருகின்றது. இலங்கையில் மக்கள்
கடுமையான பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வாழ்க்கைச் செலவு உயர்வின்
காரணமாக மக்கள் வறுமைக்கு முகங்கொடுக்கின்றனர். ஒரு சிலர் செல்வந்தர்கள்
ஆகின்றார்கள். ஆனால், அநேகமானவர்கள் ஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட
சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையில், சோசலிசம் அத்தியாவசியமானது.
ரஷ்யாவில் முதலாளித்துவம் புணர் நிர்மானம் செய்யப்பட்டிருந்தாலும், வட
ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மக்களின் எழுச்சியானது சோசலிசம் பற்றிய புதிய
எதிர்பார்ப்பை கொடுக்கின்றது.” |