WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Protests
spread throughout Arabian Peninsula
அரேபிய தீபகற்பம் முழுவதும்
எதிர்ப்புக்கள் பரவுகின்றன
By Alex
Lantier
2 March 2011
நேற்று
யேமன்,
ஓமான் மற்றும்
பஹ்ரைனில் மீண்டும் மக்கள் எதிர்ப்புக்கள் வெளிப்பட்டன.
வெகுஜன எதிர்ப்பை
முகங்கொடுக்கும் ஆட்சிகளின் பெருகிய உறுதியற்ற தன்மையைத் தவிர,
வேறு அடையாளங்களும்
துனிசியா மற்றும் எகிப்திலிருந்து அரேபிய தீபகற்பத்திற்கு பரவியுள்ள எதிர்ப்புக்கள்
சௌதி அரேபியா மற்றும் குவைத்தையும் பாதிக்கக்கூடும் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.
யேமன்
நாடெங்கிலும் மக்கள் எதிர்ப்புக்கள் அமெரிக்க ஆதரவுடைய ஜனாதிபதி அலி அப்துல்லா
சலேக்கு எதிராக நடைபெற்றன.
அதே நேரத்தில்
எதிர்க்கட்சிகள் ஞாயிறன்று எடுத்த நிலையிலிருந்து முற்றிலும் மாறாக சலேயுடன்
சேர்ந்து ஒரு ஐக்கிய அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கு மறுத்து விட்டனர்.
பெப்ருவரி
11ம்
திகதியிலிருந்து சலே ஆட்சியை எதிர்ப்புக்கள் அதிர்விற்கு உட்படுத்தியுள்ளன.
தலைநகர்
சானாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
“சீற்ற தின”
எதிர்ப்பன்று
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான குருதி கொட்டுதலை நிறுத்துமாறும்
அதிகாரத்திலிருந்து சலே அகல வேண்டும் என்றும் கோரி அணிவகுத்தனர்.
ஜின்ஹுவாக்
கருத்துப்படி கிட்டத்தட்ட
5,000 மக்கள்
சானாவில் எதிர்ப்புக்களில் கலந்து கொள்வதற்கு
60 கிலோமீட்டர்
தொலைவிலுள்ள தமர் மாநிலத்தில் இருந்து பயணித்திருந்தனர்.
நேற்று
அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சானாவில் மற்றொரு அணிவகுப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒரு சில ஆயிரம்
மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆளும் கட்சிக்கும்
எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இன்னும் வன்முறையைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள்
மீண்டும் தொடரப்பட வேண்டும் என்று இது அழைப்புவிடுத்துள்ளது.
Dhamar,
Ibb, Taiz, Aden, Abyan, Shabwa, Al-Bayda
மற்றும்
Hadramout
மாநிலங்கள் என்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இவ்வெதிர்ப்பில்
10,000 மக்கள்
கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்
துருப்புக்களால் கொல்லப்பட்ட
27
கொலைகளில்
24 இடம்பெற்றுள்ள
துறைமுக நகரான ஏடேனில் நடைபெற்ற எதிர்ப்புக்கள் கொல்லப்பட்டவர்களின் நினைவிற்கு
கவனக் குவிப்புக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலும்
அமெரிக்காவும் எதிர்ப்புக்களுக்கு ஊக்கம் தருவதாக சலே அதே நேரத்தில் கண்டனம்
தெரிவித்து,
எதிர்ப்பாளர்களின்
சீற்றத்தைக் குறைக்கவும் முற்பட்டார்.
ஏடெனில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலையுண்டது பற்றி ஒரு விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களுடைய
பகுதியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை என்று வந்துள்ள நிலையில் ஐந்து மாநில
கவர்னர்களையும் அவர் பதவிநீக்கம் செய்துள்ளார்.
இவர்களுள் ஏடென்
கவர்னர் அட்னன் அல்-ஜெப்ரி,
ஹாட்ரமௌட் கவர்னர்
சலிம் அல்-கான்பஷி,
அல்-ஹோடெய்டா
கவர்னர் அஹ்மத் அல்-ஜபலி,
அப்யன் கவர்னர்
அஹ்மத் அல்-மைஸரி
மற்றும் லஹ்ஜ் கவர்னர் முஷின் அல்-நகிப்
ஆகியோர் அடங்குவர்.
ஆனால் இவர்கள்
அனைவரும் வேறு அரசாங்கப் பதவிகளை பெற்றுள்ளனர்.
ஒரு ஐக்கிய
அரசாங்கம் அமைப்பதற்காக கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தை சலே ஒத்திவைக்கும்
கட்டாயத்திற்கு உட்பட்டார்.
2006ல் நிறுவப்பட்ட
முதலாளித்துவ எதிர்ப்புக் கூட்டணியில் இஸ்லாமியவாத இஸ்லாக் கட்சி,
தேசியவாத மக்கள்
நாசரிச அமைப்பு,
யேமன் சோசலிஸ்ட்
கட்சி (YSP)
ஆகியவை உள்ளன.
YSP யேமன்
1990ல்
மறுஒற்றுமைக்கு வருவதற்கு முன்பு தெற்கு யேமனில் ஆட்சி புரிந்து வந்தது.
பெப்ருவரி
28ம் திகதி,
இதன் செய்தித்
தொடர்பாளர் மஹ்மத் அல்-முடவகில்
“ஆளும்
கட்சியுடன் ஒரு கூட்டான ஐக்கிய அரசாங்கத்தில் பங்குபெற கட்சி தயார்”
என்று கூறினார்.
சலே இராணுவப்
பதவிகளையும் நிதி மந்திரிப் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று இது
கோரியுள்ளது.
நேற்று
கூட்டுக்கட்சிகளின் கூட்டமானது சலே பதவியிலிருந்து இறங்கினால்தான் அரசாங்கத்தில்
பங்கு பெறமுடியும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளன.
பழங்குடித்
தலைவர்களும் தென்புறப் பிரிவினைவாதிகளும் சலேக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
ஹசெட் பழங்குடி
மற்றும் இஸ்லாக் கட்சி இரண்டின் தலைவருமான ஷேக் ஹர்னிட் பென் அப்தல்லா அல்-அஹ்மர்
என்பவர் பக்கில் பழங்குடித் தலைவர்களுடன் சேர்ந்து,
கடந்த வாரம் சலே
அகற்றப்பட வேண்டும் என்ற அழைப்பிற்கு ஒப்புதல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பிரிவினைவாத
தெற்கத்திய இயக்கத்தின் தலைவரான யாசின் அஹ்மத் சலே க்வாதி தான் சலேயின்
வீழ்ச்சிக்கு பின்னர் பிரிவினை பற்றிய ஒரு வாக்கெடுப்பிற்கு வலியுறுத்த உள்ளதாக
அறிவித்தார்.
வடக்கே இருக்கும்
18 மில்லியனுடன்
ஒப்பிடுகையில் தெற்கே
5.5 மில்லியன்
மக்கள்தான் உள்ளனர் என்றாலும்,
தெற்கு செல்வக்
கொழிப்பு உடையது.
நாட்டின் அன்றாட
எண்ணெய் உற்பத்தியான
300,000
பீப்பாய்களில் பெரும்பகுதியை உற்பத்தி செய்கிறது.
யேமன் பிரிவினைக்கு
உட்படுவது நாட்டைப் பல துண்டுகளாக சிதறடிக்கும் என்று சலே எச்சரித்துள்ளார் என்று
தெரிகிறது.
யேமன்
பற்றிய வல்லுனரான கிரிகெரி ஜோன்சென் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்:
“சலே அகன்ற பின்னர்
என்ன நடக்கும் என்பது பற்றி நிறைய மக்கள் கவலைப்படுகிறார்கள்.
பல பழங்குடிக்
குழுக்களும் எப்படி நடந்து கொள்ளும் என்பது பற்றி ஒருவருக்கும் தெரியாது”
சலேயின் சன்ஹன்
பழங்குடி யேமனின் இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது.
தொழிற்துறை
மற்றும் துறைமுக நகரான வடக்கு ஓமானிலுள்ள சோஹரில் நேற்று இராணுவம் மீண்டும் வேலைகள்
கோரும்,
சுல்தான்
க்வபூஸ்பின் செய்த்தின் வரம்பிலா முடியாட்சி சீர்திருத்தப்பட வேண்டும் என்றும்
கோரும் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஒரே ஒரு நபர்தான்
காயமுற்றார் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஞாயிறு
எதிர்ப்புகளின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை ஆறு என்று உயர்ந்தது.
முந்தைய
எதிர்ப்புகளில் கிட்டத்தட்ட
2,000 பேரை ஈர்த்த
சோஹர் க்ளோப் முற்சந்தியில் துருப்புக்களும் கவச வாகனங்களும் ஆக்கிரமித்துள்ளன
ஆனால் சோஹர் துறைமுகத்தை எதிர்ப்பாளர்கள் தடைக்கு உட்படுத்திவிட்டனர்.
துறைமுகத்தின்
நிர்வாகத்தைக் கொண்ட மேலைநாட்டினர் சோஹரிலிருந்து ஓமனின் தலைநகரான மஸ்கட்டிற்குக்
குறுகிய காலத்திற்குள் சென்றனர்.
டெஹ்ரான் டைம்ஸ்
கூற்றுப்படி எதிர்ப்பாளர்கள்
“நம் எண்ணெய்ச்
செல்வத்தின் நலன்கள் சீராகப் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்”
என்று கோரினர்.
எதிர்ப்பாளர்கள் மஸ்கட்டில் சுல்தான் க்வபூஸிற்கு ஆலோசனை தரும் ஷூராக் குழுவின்
கட்டிடங்களைச் சூழ்ந்து,
வேலைகள்,
அதிக ஊதியங்கள்
மற்றும் செய்தி ஊடகத்திற்குச் சுதந்திரம் ஆகியவற்றைக் கோரினர்.
50,000
வேலைகளைத் தோற்றுவிப்பதாக
சுல்தான் க்வபூஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதேபோல்
வேலையின்மைக்கான மாத உதவிநலனான
390 டொலர் என்று
கொடுக்கப்படும்,
ஆலோசனைக் குழுவின்
அதிகாரங்களை விரிவாக்கும் வாய்ப்பு ஆராயப்படும் என்றும் கூறினார்.
சனிக்கிழமையன்று
அவர் ஆறு காபினெட் மந்திரிகளைப் பணிநீக்கம் செய்து குறைந்தபட்ச ஊதியத்தையும்
40 சதவிகிதம்
அதிகமாக்கினார்.
குறுகிய
ஹோர்மஸ்
நீரிணைப்பில் ஈரானுக்கு அப்பால் அரேபியக் கடல் கடந்து ஓமன் ஒரு மூலோபாய நாடாக
உள்ளது.
இதன் வழியாகத்தான் வளைகுடா
எண்ணெய் ஏற்றுமதிகள் இயக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா
க்வபூஸிற்கு ஆதரவு கொடுத்துள்ளது.
அமெரிக்க அரச
அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரௌலி,
“அரசாங்கத்துடன்
நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்,
உரையாடல் மூலம்
வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்கு காட்டப்படும் நிதானமாகத்தான் ஊக்கம்
பெற்றுள்ளோம்”
என்றார்.
ஓமானில்
எதிர்க்கட்சிகள் ஏதும் இல்லை.
ஏனெனில் அங்கு
அரசியல் கட்சிகள் சட்டவிரோதம் ஆகும்.
200
ஆண்டுகளாக
ஆட்சிபுரிந்துவரும் அல்-கலீபா
மரபிற்கு எதிராக பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எதிரப்பாளர்கள்
சல்மனியா மாவட்டத்திலிருந்து பேர்ல் சதுக்கம் வரை அணிவகுத்துச் சென்றனர்.
சமீப வாரங்களில்
அரசாங்க எதிர்ப்புக்கள் இந்த மையச் சதுக்கத்தில்தான் குவிப்புக் காட்டியுள்ளன.
பேர்சிய
வளைகுடாவில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் கடற்படைத் தளத்திற்கு
முக்கிய ஆதரவை பஹ்ரைன் கொடுத்துவருகிறது.
சௌதி இராணுவப்
படையினர்தான்
1996ல் அங்கு மக்கள்
எதிர்ப்புக்கள் பெருகியபோது பஹ்ரைனில் தலையீடு செய்தனர்.
30
சௌதி டாங்குகள் பஹ்ரைனுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்ற தகவல் வெளிவந்த உடன் கச்சா எண்ணெய் விலைகள் நேற்று உயர்ந்தன.
இந்த அறிக்கையை
பஹ்ரைன் அதிகாரிகள் மறுத்தனர்.
ஆனால் எல்லை கடந்து
டாங்குகளின் நகர்வு உள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.
“பஹ்ரைனில்
சௌதி அரேபிய டாங்குகள் ஏதும் இல்லை.
திங்கள் மாலை
அடையாளம் காணப்பட்ட டாங்குகள் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவை,
அவை குவைத்தில்
தேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டபின் திரும்பி வருபவை.
பல ஒப்பந்த
நாடுகளின் இராணுவங்கள் அதில் பங்கு பெற்றன”
என்று அதிகாரிகள்
கூறினர்.
எதிர்ப்புக்கள் சௌதி அரேபியா மற்றும் குவைத்திற்கும் பரவக்கூடும் என்பதற்கான
அடையாளங்கள் உள்ளன.
இந்த இரு அமெரிக்கச்
சார்புடைய அடக்குமுறை முடியாட்சிகள் உலக எண்ணெய் வணிகத்திற்கு முக்கியமானவை ஆகும்.
குவைத்தில்
Fifth Fence
எனப்படும் இளைஞர் குழு ஒன்று மார்ச்
8ம் திகதி நாட்டின்
பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பு ஒன்றை நடத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
குவைத்திலுள்ள
குவைத்தின் எதிர்க்கட்சிகளானது எமிர் ஷேக் சபா அல் ஹ்மத் அல்-சபாவின்
சகோதரர் மகனான பிரதம மந்திரி ஷேக் நாசர் மஹ்மத் அல்-அஹ்மத்
பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளன.
சௌதி
அரேபியாவில்,
இணைய தள ஆர்வலர்கள்
பேஸ்புக் பக்கங்களை நிறுவி மார்ச்
11 மற்றும்
20 ஆகிய நாட்களில்
எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இவற்றில் முக்கியமாக
ஷூரா சட்டமன்றத்திற்குத் தேர்தல்களுக்கான கோரிக்கைகள்தான் தளமாக உள்ளன.
இப்பக்கங்களுக்கு
17,000 ஆதரவாளர்களை
ஈர்த்துள்ளது.
ஆனால் செய்தி ஊடகத்
தகவல்கள் 2004ல்
சௌதி பாதுகாப்புப் படையினர் ரியட்டிலும் ஜேட்டாவிலும் எதிர்ப்புக்களைக் கலைக்க
முடிந்தது என்றும்,
சௌதி அதிகாரிகள்
பேஸ்புக் பக்கங்களைக் கண்காணிக்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.
ஆளும் சௌதி
முடியாட்சிக்குள் எதிர்ப்புக்கள் பிளவுகளை தீவிரப்படுத்தக்கூடும்.
UPI செய்தி நிறுவனம்
கூறுவதாவது: “இந்த
இராச்சியம் அரசருக்குப் பின் யார் என்பதில் கூருணர்ச்சியுடைய நிலைமையை
எதிர்கொள்கிறது.
நாட்டின் மூத்த
தலைவர்களுக்கு அதிக மூப்பு ஆகிவிட்டதால் பிரச்சினை சிக்கலாகியுள்ளது.
அரசர் அப்தல்லா,
இளவரசர் சுல்தான்,
உள்துறை மந்திரி
மற்றும் துணைப் பிரதம மந்திரி இளவரசர் நயெப் மற்றும் ரியட் கவர்னர் இளவரசர் சல்மான்
ஆகியோர் அனைவரும் தங்கள்
80 ஆவது வயதுகளில்
உள்ளனர்.” |