WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
German imperialism
and the crisis in Libya
ஜேர்மனிய
ஏகாதிபத்தியமும்,
லிபிய நெருக்கடியும்
Peter Schwarz and
Alex Lantier
2 March
2011
கேர்னல்
மௌம்மர்
கடாபி
உழைக்கும்
மக்களிடமிருந்தும்,
அவரின்
சொந்த
ஆட்சியின்
பிரிவுகளிடமிருந்தும்
அதிகரித்துவரும்
உள்நாட்டு
எதிர்ப்பை
முகங்கொடுத்து
வரும்நிலையில்,
லிபியாவில்
ஏகாதிபத்திய
தலையீடு
அளிக்க
பெரும்
உந்துசக்தியாக
உள்ளதில்
ஜேர்மனி
ஒரு
முழு-வீச்சுள்ள
பங்கெடுப்பாளராக
எழுந்துள்ளது.
அமெரிக்கா
தொடர்ந்து
தனது
பிரதிபலிப்பை
கூர்ந்து ஆலோசித்து
வரும்வேளையில்,
ஜேர்மனி
கடற்படை
ஏற்கனவே
ஒருவாரத்திற்கு
முன்பே
600 சிப்பாய்களுடன்
மூன்று
யுத்தக்கப்பல்களை
அனுப்பியது.
கடந்த
வாரயிறுதியில்,
Al-Nafoura எண்ணெய்
ஆலையிலிருந்து
ஐரோப்பிய
ஒன்றிய
மக்களை
மீட்பதற்கான
ஒன்றாக
வெளிக்காட்டிகொண்டு,
இரண்டு
ஜேர்மன்
Transall விமானங்கள்
கிரேட்டிலிருந்து
லிபியாவிற்கு
பறந்தன.
எதிரி
எல்லைகளுக்குப்
பின்னால்
மறைமுக
நடவடிக்கைகளைக்
கையாள்வதில்
பயிற்றுவிக்கப்பட்ட
பல
துணை-துருப்புகளும்
கிரேட்டில்
Transall
பிரிவுகளுடன்
சேர்ந்து
கொண்டன.
லிபிய
விமானங்கள்
குறிப்பிட்ட
பகுதிகளில்
பறக்க
தடைவிதிக்க
கோரி
ஜேர்மன்
ஊடகங்கள்
அழுத்தம்
அளித்துள்ளது.
ஈராக்கைப்
போன்றே,
இது
லிபியாவின்
யுத்தவிமானங்களை
இலக்கில்
கொண்டு,
லிபியாவின்
விமானப்பிராந்தியத்தின்
கட்டுப்பாட்டைக்
கைப்பற்ற
நடத்தப்படும்
முதல்படியாகும்.
அந்த
ஊடகங்கள்
வெளிநாடுகளில்
உள்ள
லிபிய
நிதியை
முடக்கவும்
அழுத்தம்
கொடுத்துள்ளன.
இத்தகைய
நடவடிக்கைகள்
மனிதாபிமான
அடித்தளத்தில்,
அதாவது
கடாபி
ஆட்சியிடமிருந்து
கிளர்ச்சி செய்யும்
மக்களைக்
காப்பாற்ற
செய்யப்படுவதாக
நியாயப்படுத்தப்பட்டு
உள்ளன.
இத்தகைய
மனிதாபிமான
போலித்தனங்கள்
முற்றிலும்
ஆத்திரமூட்டுவனவாகவும்,
சிறிதும்
நம்பகத்தன்மை
இல்லாமலும்
உள்ளன.
ஆனால்
வட
ஆபிரிக்காவிலிருந்து
மத்தியகிழக்கு
வரையில்
எழுந்துவரும்
மக்கள்
எழுச்சியின்
போக்கில்
தங்கள்
மக்கள்மீதே
துப்பாக்கிசூடு
நடத்திய
எகிப்து,
துனிசியா,
பஹ்ரெயின்
மற்றும்
யேமன்
போன்ற
ஏனைய
மேற்கிற்கு
ஆதரவான
ஆட்சிகளிடமிருந்து
ஐரோப்பிய
மக்களைக்
காப்பாற்ற
ஜேர்மன்
படைகளை
அனுப்ப
வேண்டும்
என்ற
இதேமாதிரியான
எந்த
முன்மொழிவுகளும்
இருக்கவில்லை.
லிபியாவைப்
பொறுத்தவரையில்
ஊடகங்களும்,
அரசு
அதிகாரிகளும்
வித்தியாசவித்தியாசமான
தீர்வுகளை
ஏன்
எடுத்துரைக்கிறார்கள்
என்பதற்கான
காரணங்கள்
புரிந்துகொள்ள
முடியாதவை
அல்ல.
லிபியா
மிகவும்
பரந்த
நாடு;
அதேசமயம்
குறைந்த
மக்கள்தொகை
கொண்டது.
மேலும்
ஐரோப்பாவிற்கு
பெருமளவிற்கு
அது
ஏற்றுமதி
செய்யும்
ஒரு
முக்கிய
பொருளான
எண்ணெய்வளத்தை
பெரிதும்
கொண்டிருக்கிறது.
உலக
பொருளாதார
நெருக்கடியின்
அதிர்வுகளின்கீழ்
தடுமாறிவரும்
மேற்கத்திய
ஏகாதிபத்தியத்தின்
நேரடி
சூறையாடலுக்காக
அது
மிகவும்
ஈர்ப்புடைய
இலக்கை
அது
அளிக்கிறது.
ஒரு
சமூக
ஜனநாயகவாதியான
அப்போதைய
அதிபர்
ஹெகார்ட்
ஷ்ரோடர்
முதன்முதலாக
கடாபியைச்
சந்தித்த
2004இல்
இருந்தே
ஜேர்மன்
பெருநிறுவனங்கள்
பெரும்
விலைமதிப்புடைய
நலன்களை
அபிவிருத்தி
செய்துள்ளன.
BASFஇன்
துணைநிறுவனம்
Wintershall, $2
பில்லியன்
முதலீட்டின்
அடிப்படையில்,
லிபியாவில்
ஒரு
மிகப்பெரிய
வெளிநாட்டு
எண்ணெய்
உற்பத்தியாளராக
அபிவிருத்தி
அடைந்தது.
சிமென்ஸ்
போன்ற
ஜேர்மன்
தொழில்துறை
நிறுவனங்களும்
பெரிதும்
லிபியாவில்
தொடர்புபட்டுள்ளன.
இது
லிபியாவின்
எண்ணெய்
வருவாய்களால்
நிதியுதவிபெற்ற
உள்கட்டமைப்பு
திட்டங்களில்
இருந்து
பெரும்
தொகையைச்
சம்பாதித்து
கொடுத்தது.
அமெரிக்கா
மற்றும்
ஏனைய
ஏகாதிபத்திய
சக்திகளினைப்போலவே
ஜேர்மனியும்
கடாபியின்
வீழ்ச்சியால்
ஏற்படக்கூடிய
ஓர்
அரசியல்
வெற்றிடத்தின்
தாக்கங்கள்
குறித்து
அஞ்சுகிறது.
கடாபிக்கு
எதிரான
படைகளால்
கைப்பற்றப்பட்டுள்ள
பென்ஜாஜியில்
இருந்தும்,
ஏனைய
நகரங்களில்
இருந்தும்
கிடைக்கும்
நேர்காணல்களில்
பெரும்பான்மை
மக்கள்
பெரிய
சக்திகளின்
தலையீட்டை
தாங்கள்
எதிர்ப்பதாக
தெளிவுபடுத்தியுள்ளனர்.
இத்தாலிய
காலனித்துவ
ஆட்சியின்கீழ்
கடுமையாக
பாதிக்கப்பட்ட
லிபியா,
ஏகாதிபத்தியத்துடன்
கடாபி
சமரசத்திற்குத்
திரும்புவதற்கு
முன்னால்
அவரால்
தனக்கு
சாதகமாக
பயன்படுத்தப்பட்ட
ஒரு
பாரம்பரியமான
ஏகாதிபத்திய-எதிர்ப்பு
போராட்டத்தின்
ஒரு
நீண்ட
பாரம்பரியத்தைக்
கொண்டுள்ளது.
கடாபியின்
சர்வாதிகாரத்தோடு
சேர்ந்து
இயங்கி
ஜேர்மன்
பெருநிறுவனங்களின்
முதலீடுகளைப்
பாதுகாக்க
பேர்லின்
அச்சுறுத்தவும்,
அதனால் இராணுவ
பலத்தை
பயன்படுத்தவும்
கூடியதாக
இருக்கவேண்டும்.
இதுதான்
ஜேர்மன்
இராணுவம்
மற்றும்
கடற்படை
அப்பிராந்தியத்திற்குள்
அவற்றின்
துருப்புகளை
அனுப்பி
வருகின்றன
என்பதற்கான
முக்கிய
காரணமாகும்.
பேர்லினின்
ஏகாதிபத்திய
பசியின்
பகிரங்கமான
விருப்பு மக்களின்
மீள்-எழுச்சிக்கு
மத்தியிலும்
கொள்ளையை
பங்கிடுவதற்கு
ஏனைய
ஏகாதிபத்திய
சக்திகளுடன்
கைகோர்த்து
செல்கின்றது.
ஜெனிவாவில்
வெளிவிவகார அமைச்சர்
வெஸ்டர்வெல்லவின்
செயலை
விமர்சித்து
Spiegel Online
எழுதியது: “வடஆபிரிக்காவில்
தற்போதிருக்கும்
மற்றும்
முன்னர்
இருந்த
பெரும்
அதிகாரங்களுடன்
பிரான்சும்,
இத்தாலியும்
கொண்டிருந்த
உறவுகளின்
காரணமாக
அவை
பேர்லினையும்விட
மிகவும்
சமரசப்பட்டு
உள்ளன.
அவற்றிற்கு
விட்டுகொடுக்க
இடங்கள்
இல்லாமல்,
மத்தியதரைக்கடல்
பகுதியில்
ஜேர்மனி
ஒரு
மும்முரமான
பாத்திரம்
வகித்து
வருகிறது.
துனிசியா
மற்றும்
எகிப்தில்
இருந்த
ஆட்சியாளர்களுடன்
இருந்த
ஆரம்ப
தயக்கங்களுக்குப்
பின்னர்,
லிபியா
விஷயத்தில்
வெளியுறவுத்துறை
மந்திரி
முற்றிலும்
தெளிவாக
இருந்தார்.”
லிபியாவில்
அதன்
இராணுவ
பலத்தின்
இலகுதன்மைக்கு
ஜேர்மன்
ஆளும்
மேற்தட்டின்
முன்பின்
ஆராயாத
மற்றும்
அசட்டைத்தனமான
அவசரம்,
அங்கிருக்கும்
வாய்ப்பை
இரண்டாம்
உலக
யுத்தத்திற்குப்
பின்னர்
ஜேர்மன்
இராணுவத்திற்கு
இருந்த
நிர்பந்தங்களில்
என்னவெல்லாம்
எஞ்சியுள்ளனவோ
அவற்றை
தட்டிவிலக்கிவிட ஒரு
வாய்ப்பாக
அது
இந்த
நெருக்கடியைக்
காண்கிறது.
ஜேர்மனியைப்
பொறுத்தவரையில்
லிபியாவில்
தலையீடு
என்பது
முக்கிய
சக்திகளின்
வட்டத்திற்குள்
நாடு
முழுமையாக
திரும்புவதை
நோக்கிய
ஒருபடியாக
குறிக்கப்படுகிறது.
அது
1999 கொசோவோ
யுத்தத்தில்
மற்றும்
ஆப்கானிஸ்தானில்
நேட்டோ
ஆக்கிரமிப்பு
ஆகிய
இரண்டிலும்
அது
அளித்த
பங்களிப்பைத்
தொடர்கிறது.
ஜேர்மன்
மக்களிடம்
உள்ள
இராணுவ-எதிர்ப்பு
உணர்வைத்
தாண்டி
வரவும்,
ஜேர்மன்
அரசியல்வாதிகளை
இட்டுச்
செல்கிறது.
இதுதான்
நாசிசம்
மற்றும்
இரண்டு
உலக
யுத்தங்களில்
கிடைத்த
பேரழிவுமிக்க
அனுபவங்களின்
விளைபொருளாகும்.
ஆப்கானில்
ஜேர்மன்
நுழைந்தது
அதன்
பொருளாதார
நலன்களைப்
பாதுகாக்கவே
என்ற
அவரின்
அறிக்கைக்கு
வந்த
விமர்சனங்களை
எதிர்க்க
கடந்த
மே
மாதம்
ஜேர்மனியின்
ஜனாதிபதி
கோர்ஸ்ட்
ஹோலர்
இராஜினாமா
செய்த
பின்னர்,
பாதுகாப்பு
மந்திரி
கார்ல்
தியோடர்
சூ கூட்டன்பேர்க்
பகிரங்கமாகவே
ஜேர்மனிய
பொருளாதார
நலன்களைப்
பாதுகாக்க
இராணுவ
படைகளைப்
பயன்படுத்த
வேண்டுமென
அறிவுறுத்தினார்.
மத்தியகிழக்கு
முழுவதிலும்,
இறுதியாக
உலகம்
முழுவதிலும்
ஏகாதிபத்திய
யுத்தம்
பரவாமல்
தடுக்கும்
முக்கிய
அரசியல்
தடையாக
இருப்பது,
உழைக்கும்
மக்களின்
எதிர்ப்பு
தான்.
பெரிய
சக்திகள்
லிபிய
மண்ணில்
துருப்புகளை
அனுப்ப
இன்னும்
வெளிப்படையாக
முடிவு
செய்யவில்லை.
ஆப்கானிஸ்தானில்
நடந்ததுபோல,
மக்களுக்கு
எதிரான
ஒரு
முடிவில்லா
யுத்தங்களில்
மாட்டிக்
கொள்வோமோ
என்று
அவை
அஞ்சுகின்றன.
மேலும்
இது
உள்நாட்டிலும்,
யுத்தங்கள்
வெறுக்கப்படும்
இடங்களிலும்,
மற்றும்
மத்தியகிழக்கு
பிராந்தியம்
முழுவதிலுமே
ஏகாதிபத்திய
ஆதரவுடனான
சர்வாதிகாரங்களுக்கு
எதிராக
இப்போது
எழுச்சிபெற்றுள்ள
அப்பிராந்திய
மக்கள்
மத்தியிலும்
பாரிய
எதிர்ப்பை
இது
தூண்டிவிடுமோ
என்று
அவை
அஞ்சுகின்றன.
ஆனால்
தொழிலாளர்
வர்க்கத்திடையே
வேகமாக
அபிவிருத்தி
அடைந்துவரும்
போராட்டங்களுக்கு
ஒரு
புதிய
அரசியல்
முன்னோக்கும்,
அரசியல்
தலைமையையும்
உருவாக்கும்
கேள்வியில்
தான்
இது
வந்து
நிற்கிறது.
தொழிலாளர்
வர்க்கம்
எவ்வாறு
யுத்தத்தை
நோக்கிய
ஏகாதிபத்திய
உந்துதலை
எதிர்த்து
போராட
போகிறது
என்பது
தான்
முக்கிய
கேள்வியாக
உள்ளது.
இராணுவ-ஆதரவு
மற்றும்
ஏகாதிபத்திய-ஆதரவு
நிலைப்பாடுகளுக்கும்
மற்றும்
மக்களின்
யுத்த-எதிர்ப்பு
உணர்வுகளை
ஒடுக்குவதன்
பக்கம்
ஒதுங்கிநிற்கும்
ஸ்தாபனமயப்பட்ட
அரசியல்
கட்சிகள்
எந்த
எதிர்ப்பும்
காட்டாததால்,
ஜேர்மனியின்
பழமைவாத
அரசாங்கத்தால்
அதன்
இராணுவ
நோக்கங்களை
மறைமுகமாக
நடத்திச்
செல்ல
முடிகிறது.
சமூக
ஜனநாயக
கட்சியின்
(SPD) பாராளுமன்ற
கன்னையின்
தலைமையும்
மற்றும்
முன்னாள்
வெளியுறவுத்துறை
மந்திரி
பிராங்
-வால்ட்டர்
ஸ்ரைன்மையர்
உம்
வெளிப்படையாகவே
ஐக்கிய
நாடுகள்
பாதுகாப்பு
குழுவின்
தடைகளையும்
ஜேர்மன்
அரசாங்கம்
அவர்களுக்கு
அளிக்கும்
ஆதரவையும்
வரவேற்றுள்ளனர்.
அவருடைய
துணை-தலைவர்
ஜெர்னாட்
எர்லெட்,
விமானங்கள்
பறக்க
தடை
மற்றும்
ஐக்கிய
நாடுகள்
சபையின்
பிரிவு
7 சாசனத்தின்கீழ்
கொண்டு
வரப்பட்ட
ஓர்
ஆணைக்கு
ஆதரவு
தெரிவித்துள்ளார்.
ஈராக்
யுத்தத்தை
நியாயப்படுத்த
அமெரிக்க
அரசாங்கம்
இதே
வழிமுறைகளைத்
தான்
உபயோகித்தது.
பசுமை
கட்சியின்
முகாமிலிருந்தும்
ஆதரவு
வந்துள்ளது.
பெப்ரவரி
25இல்,
லிபியா
விஷயத்தில்
ஜேர்மன்
அரசாங்கம்
மிகவும்
மெத்தனமாக
இருப்பதாக
பசுமை
கட்சி
தலைவர்
கிளவ்டியா
ரோத்
கண்டித்தார்.
“கடாபி
ஆட்சிக்கு
எதிரான
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
தடைவிதிப்புகளால்
வந்த
கருத்துரையாடல்கள்
மிகவும்
தாமதமாக
வந்துள்ளன.
அத்துடன்
அவை
காலாவதியானவையாகவும்
உள்ளன,”
இது
ரோத்
கூறியது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
கையாலாகத்தனத்தை
விமர்சித்த
அவர், “கடாபிக்கு
எதிரான
ஐரோப்பிய
ஒன்றிய
கொள்கையை
வடிவமைக்க
உதவ
ஒரு
தெளிவான
செயல்
திட்டத்தை
வடிவமைக்க
அரசாங்கம்
உதவ
வேண்டும்,”
என
அவர்
கேட்டுக்
கொண்டார்.
மேலும், “ஓர்
ஒருங்கிணைந்த,
விரைவான
மற்றும்
துல்லியமான
தடைவிதிப்பு
கொள்கையைக்
கொண்டு
வர
வேண்டும்,”
என்றும்
அவர்
அழைப்புவிடுத்தார்.
லிபியாவின்
நிலைமைகள்
குறித்து
கருத்து
தெரிவிக்க
இடதுகட்சி
மறுத்துவிட்டது.
மேலும்
அது
சமூக ஜனநாயக கட்சி
மற்றும்
பசுமைக்கட்சியைப்
போன்றே,
லிபியாவின்
கடற்கரை
பிரதேசத்தில்
ஜேர்மன்
கடற்படையை
நிர்மானிக்க
வேண்டும்
என்பதற்கு
விமர்சனமளிக்கவும்
தவிர்த்து
கொண்டுள்ளது.
மாறாக
அது
ஒரு
புதிய
யுத்தத்திற்கு
எதிராக
எழும்
எந்த
எதிர்ப்பையும்
உடைக்கவும்,
அதற்கு
குழிபறிக்கவும்
தயாராகி
வருகிறது.
Linksruck (சர்வதேச
சோசலிஸ்ட்)
கன்னையின்
ஓர்
உறுப்பினராக
இடதுகட்சிக்குள்
நுழைந்த
நிர்வாக
உறுப்பினர்
கிறிஸ்டியான
புக்ஹோல்ஷ்,
“லிபியா:
இராணுவ
தலையீடு
கூடாது"
என்ற
தலைப்பில்
ஒரு
சிறிய
அறிக்கையை
வெளியிட்டார்.
அதில்
அந்த
பெண்மணி
ஓர்
ஆயுதத்தடைக்கு
அழைப்புவிடுக்கிறார்;
ஆனால்
ஓர்
இராணுவ
தலையீடு
"மக்களை
அரசாங்கங்களுக்கு
பின்னால் தள்ளும்
என்பதுடன்
பலரின்
வாழ்வையும்
பறிக்கும்"
என்று
வாதிட்டு,
ஓர்
இராணுவ
தலையீட்டிற்கு
எதிராக
அறிவுறுத்துகிறார்.
அதன்
ஏகாதிபத்திய
நலன்களைக்
காப்பாற்றிக்கொள்ள
சிறந்த
தந்திர
உபாயங்களுடன்
ஜேர்மன்
அரசாங்கத்திற்கு
ஓர்
ஆலோசகராக
உள்ள
இடதுகட்சியின்
கொள்கையற்ற
பாத்திரத்தைத்
தான்
இது
எடுத்துக்காட்டுகிறது.
பெரிய
சக்திகளின்
எந்த
தடைவிதிப்புகளில்
உள்ள
காலனித்துவ
குணாம்சத்தை
எச்சரித்தோ
அல்லது
கடாபி
மற்றும்
ஒட்டுமொத்தமாக
லிபிய
முதலாளித்துவம்
இரண்டிலிருந்தும்
அவர்களை
விடுவித்துக்கொள்ள
வேண்டியது,
ஏகாதிபத்தியத்தின்
பணியல்ல
மாறாக
லிபிய
மக்களின்
பணி
என்று
வலியுறுத்தியோ
புக்ஹோல்ஷ்
லிபியாவில்
ஏகாதிபத்திய
தலையீட்டிற்கு
ஒரு
கொள்கைரீதியிலான
எதிர்ப்பை
முன்னெடுக்கவில்லை.
அந்த
பெண்மணி
லிபிய
தொழிலாள
வர்க்கத்திற்காகவோ
அல்லது
ஜேர்மனி
தொழிலாள
வர்க்கத்திற்காகவோ
பேசவில்லை.
இவர்கள்
வெஸ்டர்வெல்ல
மற்றும்
ஜேர்மன்
அதிபர்
அங்கேலா
மேர்க்கெல்,
அதேபோல்
சமூக ஜனநாயக
கட்சியில்
உள்ளவர்களையும்
மிக
கசப்பான வர்க்க
எதிரிகளாக
பார்க்கிறார்கள்.
மெஹ்ரெப்பிலும்,
மத்தியகிழக்கிலும்
மில்லியன்
கணக்கானவர்களை
வீதிகளுக்கு
இழுத்துவந்த
வறுமை,
சமத்துவமின்மை,
ஜனநாயக
உரிமையின்மை
போன்ற
சமூக,
அரசியல்
பிரச்சினைகளை
இந்த
முதலாளித்துவ
அமைப்புமுறையின்
கட்டமைப்பிற்குள்
தீர்க்க
முடியாது.
இந்த
இதே
பிரச்சினைகள்
ஜேர்மனி,
ஐரோப்பா
மற்றும்
உலகமெங்கிலும்
உள்ள
மில்லியன்
கணக்கான
தொழிலாளர்களின்
நிதியியல்
மேலடுக்கு
மற்றும்
அதன்
தேய்ந்துபோன
அரசியல்
அமைப்புமுறைக்கு
எதிரான
போராட்டத்திற்குள்
இணைந்துள்ளது.
ஜனநாயகத்திற்கான
போராட்டம்
என்பது
பிரிக்கமுடியாதபடிக்கு
தொழிலாளர்களின்
அதிகாரத்திற்கான
போராட்டம்
மற்றும்
அந்த
பிராந்தியம்
முழுவதும்
உலகம்
முழுவதும்
சோசலிச
சமூக
மாற்றத்தோடு
தொடர்புபட்டுள்ளது.
எந்தவிதமான
இராணுவ
தலையீட்டிற்கும்
எதிர்ப்பைக்
காட்டுவதன்
மூலமாகவும்,
சோசலிச
மற்றும்
சர்வதேசியவாத
கொள்கைகளின்
அடிப்படையில்
உள்நாட்டில்
உள்ள
சுரண்டல்வாதிகளுக்கு
எதிராக
ஒன்றிணைவதன்
மூலமாகவும்
ஜேர்மன்
தொழிலாளர்கள்
லிபிய
மற்றும்
அரேபிய
தொழிலாளர்களுடன்
தங்கள்
ஐக்கியத்தைக்
காட்ட
வேண்டும். |