சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialist hands off Libya!

ஏகாதிபத்தியமே லிபியாவில் தலையிடாதே!

Patrick Martin
1 March 2011

Use this version to print | Send feedback

அமெரிக்காவும், ஐரோப்பிய சக்திகளும் லிபியாவில் நேரடி இராணுவத் தலையீட்டை நோக்கி நகர்ந்து வருகின்றன. அவை, மௌம்மர் கடாபியின் 41-ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக ஒரு நியாயமான மக்கள் எழுச்சியைச் சுரண்டி ஒரு கூடுதல் தீவிரமய ஆட்சி எழுவதற்கான எந்த சாத்தியக்கூறையும் இல்லாமல் செய்யவும் இந்த சீர்கெட்ட சர்வாதிகாரத்தின் இடத்தில் ஒரு காலனித்துவ-பாணியிலான கைப்பாவை ஆட்சியை நிறுவவும் கோரி வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்க கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் வேகம் அசாதாரணமாக உள்ளது. கடாபிக்கு எதிரான போராட்டங்களில், ஒப்பீட்டளவில் அமைதி காத்த நிலையில் இருந்து வெளியிலிருந்தான தலையீட்டிற்கு முன்னிலை வகிப்பதற்கு அமெரிக்கா நகர்ந்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் போலவே, இதிலும் உந்துசக்திகள் இருமுனையில் செயல்படுகின்றன: ஒன்று, முக்கிய எண்ணெய்-உற்பத்தி நாடுகளில் ஒன்றின் ஆதாரவளங்களை கைப்பற்றுவது, இரண்டாவது, மத்தியகிழக்கிலும், வடக்கு ஆபிரிக்காவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த மூலோபாய நலன்களைப் பின்பற்றுவது.  தற்போது முழுக் கொந்தளிப்பில் உள்ள எகிப்து, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய இடங்களிலும், அத்துடன் சாட், நைஜர், நைஜீரியா, சூடான் என சகாராவெங்கிலும் நிகழும் சம்பவங்களின் எதிர்கால போக்கில் செல்வாக்கு செலுத்த லிபியாவில் தரையிறங்கியுள்ள ஏகாதிபத்திய இராணுவப் படைகள், சரியான இடத்தில் நின்றுகொள்ளும்.

யாருமே, குறைந்தபட்சம் லிபிய மக்களே கூட, அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலிய மற்றும் ஏனைய இராணுவ படைகளின் வருகையை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் மனிதாபிமான அக்கறையின் முறையீடுகளை நம்ப வேண்டாம். துனிசிய மற்றும் எகிப்திய சர்வாதிகாரிகளான ஜைனுல் அபிடைன் பென் அலி மற்றும் ஹோஸ்னி முபாரக், வேலைகள், ஜனநாயக உரிமைகளை கோரிய மற்றும் ஆளும் ஓர் ஊழல் மேற்தட்டால் நடத்தப்பட்ட கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிய ஆர்ப்பாட்டக்காரர்களைப் படுகொலை செய்த போது, இதே சக்திகள் தான் அவர்கள் பக்கம் நின்றன. அவை இந்த தலையாட்டி ஆட்சிகளுக்கு உதவும் ஒரு முயற்சியில் அரசியல்ரீதியான, இராஜாங்கரீதியிலான மற்றும் சில சந்தர்ப்பங்களில் நேரடி பாதுகாப்பு உதவியையும் அளித்தன.

கடாபியின் பாதுகாப்புப் படைகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற அதே இரண்டு வாரங்களின்போது வாஷிங்டனின் எவ்வித பொது கண்டனங்களும் இல்லாமல், இராணுவத் தலையீட்டிற்கு சர்வதேசப் பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பதைக் கூட விடுவோம் ஓமனிலும், பஹ்ரெனிலும் உள்ள அமெரிக்க கூட்டாளிகளாலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க நேச ஆட்சியாலும் அதேபோன்ற குற்றங்கள் நடத்தப்பட்டன.

1990களில் போஸ்னியா மற்றும் கொசாவாவில் அமெரிக்கா மற்றும் நேட்டோ தலையீட்டிற்கு வழியைத் திறந்துவிட்ட பிரச்சாரங்களின் மாதிரியில், லிபிய மக்களைக் "காப்பாற்ற" ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கூட்டுத் தலையீடு அவசியப்படுவதாக கூறும் ஒரு வாதத்தோடு கடாபி ஆட்சியால் நடத்தப்பட்ட அட்டூழியங்களை எடுத்துக்காட்டி, ஒரு முழு அளவிலான தாக்குதல் பின்புறத்தில் நடந்து வருகிறது. “குண்டர்களையும்" “கூலிப்படைகளையும்" கடாபி பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும், “லிபிய அரசாங்கம் லிபியர்களை அச்சுறுத்துவதையும், கொன்று குவிப்பதையும் தொடரும் வரையில் மேஜையில் இருந்து எந்த வாய்ப்பையும் எடுக்க முடியாது" என்று அறிவித்தும், அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் திங்களன்று ஒரு தொனியை வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரன், பொது அவையில் பேசுகையில், “இராணுவ உடைமைகளை லிபியாவில் பயன்படுத்துவதை எந்த வழியிலும் நம்மால் கைகழுவிவிட முடியாது" என்று கூறி, அதற்கு ஒத்துப்பாடினார்.

வாஷிங்டன், இலண்டன், மற்றும் இதர ஏகாதிபத்திய தலைநகரங்களிடமிருந்து அதன் குறிப்பை எடுத்துக்கொண்டு, கிழக்கு லிபியா மற்றும் தலைநகரம் த்ரிபொலியைச் சுற்றியுள்ள பகுதிகளின் போராட்டக்காரர்களுக்கு எதிராக கடாபியின் படைகளால் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமான விமான தாக்குதல்கள் குறித்த விஷயங்களில் சர்வதேச ஊடகங்கள் பெரிதும் கவனத்தைக் குவித்துள்ளன. கடாபியின் விமானஓட்டிகளில் பலரும்  கட்சிமாறிவிட்டனர் என்பதால், உண்மையில் ஆவணப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே உள்ளன.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி கெவின் ரூட், கிளிண்டனுடனான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென அறிவிக்கும் அளவிற்கு வெளிப்பட்டார். “குயர்னிகா பொதுமக்கள்மீது குண்டுவீசுவதை உலகம் முழுவதும் அறிந்துள்ளது,” என்று அறிவித்த அவர், ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தின் போது நாஜி யுத்த விமானங்களால் நடத்தப்பட்ட படுகொலைகளையும் மேற்கோளிட்டு காட்டினார். அவர் கூறியது, “லிபியாவில் நாம் அதற்கான ஆதாரங்களைக் காண்கிறோம். இதுபோன்ற அட்டூழியங்கள் இன்னும் நடப்பதற்கு முன்னதாக, இனியும் நாம் வெறுமனே நின்று பார்த்து கொண்டிருக்க கூடாது.” வெறுமனே நின்று பார்த்து கொண்டிருக்க கூடாது என்பதற்காக தான், இதையும்விட அதிகளவில் அட்டூழியங்களை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்திய அமெரிக்க யுத்தத் தாக்குதல்களில் ஆஸ்திரேலியா ஒரு முழுக் கூட்டாளியாக இருந்துள்ளது.

மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் குறித்த அமெரிக்க-ஐரோப்பிய பிரஸ்தாபத்தில் சிறிதும் நம்பிக்கை வைப்பதற்கில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரையில், லிபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆதாய ஒப்பந்தங்களைப் பெற, இந்த சக்திகள் தான் கடாபிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தன. கொண்டலீசா ரைஸ், பிரிட்டனின் டோனி பிளேயர், பிரான்சின் சிராக், இத்தாலியின் பெர்லுஸ்கோனி, ஸ்பெயினின் ஜபாடெரோ போன்ற மேற்கத்திய பொருத்தங்களின் ஓர் அணிவகுப்பு, எண்ணெய் வாசனைக்குப் பின்னாலேயே த்ரிபொலிக்குச் சென்றது. கடாபியின் பொலிஸ் அரசு குறித்தும், அவருடைய சித்திரவதை கூடங்களிலிருந்து வந்த கதறல்களின் மீதும் அப்போது அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை.

2003க்கு பின்னர், ஒரு பெரும் மூலோபாய வெற்றியாக, வாஷிங்டன் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் கடாபியின் திடீர் நல்லிணக்கத்தைப் பாராட்டியதுடன், அவருடன் நட்புறவுகளை விதைப்பதில் அமெரிக்கா ஒரு பெரும் அரசியல் மற்றும் நிதியியல் முதலீட்டைச் செய்தது. சமீபத்தில் கடாபியின் மகன்களில் ஒருவருக்கு வாஷிங்டனில் விருந்துபச்சாரம் நடத்தி ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க-லிபிய வர்த்தக அமைப்பின் ஸ்தாபக தலைவரை சர்வதேச எரிபொருள் விவகாரங்களுக்கான அரசுத்துறை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.

 

2009இல் கடாபியின் மகன் அமெரிக்காவில் விஜயம் செய்தார். அவர் தகுந்த மரியாதையோடு வரவேற்கப்படுவார் என்பதற்கு வெளிவிவகாரத்துறைச் செயலர் கிளிண்டன் உறுதியளித்தார்.

நாட்டின் பெரும்பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ள எதிர்ப்பு படைகளுக்கு ஆதரவாக நிற்பதாகக் கூறி இப்போது இந்த சக்திகள் லிபியாவிற்குள் திரும்பிவர வரிந்துகட்டி வந்தாலும், அவையும் இலாபம் மற்றும் சூறையாடும் அதே அகோரபசியால் தான் உந்தப்பட்டுள்ளன. கடாபியைத் தூக்கியெறிய அளிக்கும் அவற்றின் ஆதரவு வேலைகளுக்கு இடையில், அமெரிக்கா மற்றும் முன்னாள் ஐரோப்பிய காலனிய சக்திகளின் இராணுவப் படைகளின் வருகை, உண்மையிலேயே சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிய போராடிவருபவர்களுக்கு உதவுவதற்காக அல்ல.

வெளிநாட்டுத் தலையீடு மக்களின் கோபத்தைத் தான் கிளறிவிடும். பென்காஜி எழுச்சியில் ஈடுபட்ட பலர் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பியத் துருப்புகள் நுழைவதற்கு பலமான எதிர்ப்பை அறிவித்துள்ளனர். ஓர் ஏகாதிபத்திய-எதிர்ப்பாளராக கடாபி அவரின் போலி பிம்பத்தை மீண்டும் காட்டவும், அவருடைய ஆட்சிக்கு ஒரு புதிய உயிர் கொடுப்பதற்கும் அனுமதிக்க கூடிய ஒரே விடயம் இது மட்டுமே.

பெப்ரவரி 17இல் பென்காஜியில் போராட்டம் வெடித்ததில் இருந்து, லிபியாவிலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் நூறாயிரக்கணக்கானவர்களின் தலைவிதி குறித்த கவலைகளுக்காக வெளியிடப்படும் முறையீடுகளும் இதேயளவிற்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது. தொழில்நுட்பவியலாளர்களாகவும், ஏனைய எண்ணெய் நிறுவனத்தின் நிர்வாகத்திலும் இருக்கும் தமது நாட்டினரில் பலர் அபாயத்தில் உள்ளதாகவும், அவர்களைக் காப்பாற்றி ஆக வேண்டுமெனவும் பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் உத்தியோகப்பூர்வ செய்திதொடர்பாளர்கள் முறையிடுகின்றனர். அதேவேளையில், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற மத்தியதரைக்கடல் கடற்கரையை ஒட்டியுள்ள நாடுகள், தீவிரமடைந்திருக்கும் உள்நாட்டு யுத்தத்திலிருந்து அகதிகள் வெள்ளமென வரலாம் என எச்சரித்துள்ளனர். ஆகவே, லிபியாவிற்குள்ளும் மற்றும் அதன் கடற்கரையை ஒட்டிய பிராந்தியத்திலும் இராணுவத் தலையீடு செய்வது தான் இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே "தீர்வாக" உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

லிபியாவிற்கு எதிரான பிரச்சாரம், வார்த்தை அடிப்படையில், கொள்ளையடிப்பதற்கான ஒரு நடைமுறையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு தடைவிதிப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்த பின்னர், அமெரிக்க நிதியியல் அமைப்புகளின்வசமிருக்கும் 30 பில்லியன் டாலர் லிபிய சொத்துகளையும், ஐரோப்பிய கணக்கில் உள்ள பில்லியன்களையும் முற்றிலுமாக கைப்பற்றுவதே முதல் பெரிய நடவடிக்கையாக உள்ளது. சொத்து "முடக்கம்" என்ற பெயரில் லிபிய மக்களுக்கு உரிய ஆதாரவளங்களைப் பறிமுதல் செய்வதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது.

துருக்கிய பிரதம மந்திரி ரெசிப் தாயெப் எர்டோகன் ஜேர்மனியில் நடந்த ஒரு வர்த்தக மாநாட்டில் பேசுகையில் ஆட்சேபம் தெரிவிக்க நிர்ப்பந்தமாய் உணருமளவுக்கு இந்தத் திருட்டுத்தனம் பட்டவர்த்தனமாய் உள்ளது.  அவர் கூறினார், “அரசாங்கங்களால் செய்யப்பட்ட தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கக் கூடாது. லிபிய மக்களையும்  அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டினரையும் மனதில் கொண்டு பார்க்கையில் லிபியாவில் தலையீடு செய்வது மற்றும் தடைகளை விதிப்பது குறித்த விவாதங்கள் கவலையளிப்பதாக நாங்கள் கருதுகிறோம்.” வெளியிலிருக்கும் சக்திகள் அவர்களின் எண்ணெய் நலன்களைக் கருத்தில் கொண்டு அல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் லிபியாவில் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இராணுவத் தலையீட்டை நோக்கிய உத்வேகம் அதிகரித்து வருகிறது. லிபியாவின் முன்னாள் காலனித்துவ சக்தியாக இருந்த மற்றும் அதன் எண்ணெய் வளத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கும் இத்தாலியின் பெர்லுஸ்கோனி அரசாங்கம் ஞாயிறன்று கடாபி ஆட்சியுடனான அதன் சமரச உடன்படிக்கையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக் கொண்டது. இது லிபியாவிற்குள் இத்தாலிய இராணுவ நடவடிக்கைக்கும் மற்றும் அவியானோவிலும், இத்தாலியில் உள்ள நேட்டோ விமானத்தளங்களிலும் அமெரிக்க யுத்தவிமானங்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்கும் அவசியமான சட்டபூர்வ தயாரிப்பாகும்.

ஒபாமா நிர்வாகம், லிபிய சுற்றுவட்டத்திற்குள் கடற்படைத் தளவாடங்களைக் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் மத்தியதரைக்கடல் பகுதிக்குள் மீண்டும் அவற்றை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளதை திங்களன்று உறுதிசெய்தது. பெண்டகன், எகிப்திய ஜனாதிபதி முபாரக் தூக்கியெறியப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர், அதன் சக்தியைக் காட்டுவதற்காக பெப்ரவரி 15இல் செங்கடலுக்குள் சூயஸ் கால்வாய் வழியாக USS Enterprise என்னும் விமானந்தாங்கிக் கப்பலை அனுப்பியிருந்த நிலையில் லிபியாவிற்குள் கிளர்ச்சி வேகமாக பரவியதில் திகைத்தது. யேமனில் அமெரிக்க ஆதரவுடனான சர்வாதிகாரி சலெஹ் மற்றும் பாரசீக வளைகுடாவின் எண்ணெய் ஷேக்குகளுக்கு ஆதரவாக "கொடிகளை அசைத்துக்காட்டி" கொண்டே, யுத்த தளவாட குழுமம் அரேபிய கடலில் தொடர்ந்து சென்றது.

திங்களன்று ஒரு பெண்டகன் செய்திதொடர்பாளர் அறிவித்தார், “நமது திட்டமிடல் நிபுணர்கள் பல்வேறு அவசரநிலைத் திட்டங்களை ஆய்ந்து வருகின்றனர்....அதன் பாகமாக முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அந்த நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும் வகையில் நாங்கள் படைகளின் நிலைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம்.…" Enterprise விமானந்தாங்கிக் கப்பலும் மற்றும் USS Kearsage என்னும் ஒரு சிறிய ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலும், சூயஸ் கால்வாயை மீண்டும் கடக்கும் நிலைக்கோ அல்லது லிபிய இலக்குகளுக்கு எதிராக விமானத்தாக்குதல்கள் செய்யவோ பயன்படுத்தப்படும் வகையில், செங்கடலில் மீண்டும் திருப்பி கொண்டு போய் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் அதிரடிப்படையினால் ஏற்கனவே நடத்தப்பட்டது போன்ற "மீட்பு" முயற்சிகள் முதல் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது வரை, அதிரடியாக போர்க்கப்பல்களை நிறுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகளும் விவாதத்திக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் பாத்திரம் அமெரிக்காவிற்கு மற்றொரு கூடுதல் கவலையாக உள்ளது. அது அதன் இராணுவ நடவடிக்கையை முதல்முறையாக மத்தியதரைக்கடலில் செய்யவிருக்கிறது. பெய்ஜிங், லிபியாவில் போராட்டங்களில் மாட்டிக் கொண்டிருக்கும் 30,000 சீனர்களை (இதில் பெரும்பாலானவர்கள் கட்டுமான பணியாளர்கள்) வெளியேற்ற உதவியாக சோமாலியா கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப்படையிலிருந்து சிறிய கடற்படைக் கப்பலான Xuzhouஐ விடுவித்து லிபியக் கடற்பகுதிக்கு சூயஸ் கால்வாய் வழியாக அனுப்பியுள்ளது.

லிபிய எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஒரு நம்பிக்கையற்றதன்மையும், முற்றிலும் கொடூரத்தனமும் உள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ரோபர்ட் கேட்ஸ் ஓர் இராணுவக் கூட்டத்தில் பேசுகையில், “என்னைப் பொறுத்த வரையில், ஆசியாவிற்கோ அல்லது மத்தியகிழக்கிற்கோ அல்லது ஆபிரிக்காவிற்கோ மீண்டும் ஒரு பெரிய அமெரிக்க தரைப்படையை அனுப்ப ஜனாதிபதிக்கு உபதேசிக்கும் எந்த எதிர்கால பாதுகாப்பு செயலரும், ஜெனரல் மேக்ஆர்த்தர் மறைமுகமாய்க் கூறியதைப் போல, 'தம்முடைய மூளையைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கும்'” என்று அறிவித்த ஒருசில நாட்களுக்குப் பின்னர் இது மேலெழுந்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் நீண்டகால ஆக்கிரமிப்பிற்கு ஆப்கான் மக்களின் கட்டுக்கடங்காத எதிர்ப்பாலும் மற்றும் தொடர்ந்து பத்து ஆண்டுகள் வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து தன்னார்வப் படைகளின் மோசமான நிலைமைகள் குறித்த இராணுவ உயர் அதிகாரிகளின் கவலைகளாலும் உருவாகியிருந்த அவநம்பிக்கையையே கேட்ஸ் எதிரொலித்தார்.

இத்தகைய நடுக்கங்கள் இருந்தாலும், ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தர்க்கம் உள்ளது, ஒபாமா நிர்வாகம் அதனால் செலுத்தப்படுகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலையீட்டின் உச்சக்கட்ட நோக்கம், நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று குறிப்பிட்டதைப் போல நாட்டை ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கவசமாக மாற்றுவதன் மூலம் லிபியாவில் நிலவும் "அரசியல் வெற்றிடத்தை" நிரப்புவதாகும்.

லிபியாவிலிருக்கும் ஓர் அமெரிக்க வல்லுனர், ஞாயிறன்று நியூஸ்வீக் இதழில் எழுதுகையில், லிபியாவில் செய்யப்படும் ஒரு தலையீட்டை பால்கன்கள் விடயத்தில் நீண்டகால அமெரிக்க பாத்திரத்தோடு நேரடியாகவே ஒப்பிட்டார். அவர் எழுதினார்: லிபியாவிலிருக்கும் அரசியல் நிலைமை, “லிபியாவில் அரசைக் கட்டுவதற்கு அருகிலிருக்கும் எகிப்து அல்லது துனிசியாவைக் காட்டிலும் பால்கன்களை முன்னோடிகளாகக் கொள்ள அறிவுறுத்துகிறது. பால்கன்களில் போலவே இங்கும் நிபுணத்துவத்தையும் மற்றும் தற்காலிகமாக பாதுகாப்புப் படைகளையும் வழங்குவதன் மூலமாக சர்வதேச சமுதாயம் ஒரு பெரிய நேர்மறையான பாத்திரத்தைக் கொள்ள முடியும்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவாலும் மற்றும் மேற்கு ஐரோப்பிலிருக்கும் அதன் சக சூறையாடல்தாரர்களாலும் ஆளப்படும் பாதி-காலனித்துவ நாடாக லிபியாவை மாற்றப்பட இருக்கிறது. அவர்கள் எண்ணெய் வளங்கள்மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவார்கள் என்பதுடன் அந்நாட்டின் பிராந்தியத்தை மத்தியகிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இப்போது அலையாய் எழுந்திருக்கும் மக்கள் எழுச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான ஒரு மூலோபாயத் தளமாக மாற்றுவார்கள்.

http://www.fightforsocialism.org/