WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
கடாபிக்கு எதிரான எழுச்சியில் மோதல்கள் அதிகரிக்கின்றன
By Patrick O’Connor
1 March 2011
Use this version to print | Send
feedback
நீண்டகாலமாக லிபியாவில் சர்வாதிகாரியாகவுள்ள
முயம்மர் கடாபி அவருடைய ஆட்சிக்கு ஒபாமா நிர்வாகம் மற்றும்
அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் கொடுத்துவந்த ஆதரவு விலக்கிக்
கொள்ளப்பட்டதால் தான்
“காட்டிக்
கொடுக்கப்பட்டுவிட்டதாக”
நேற்று
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடாபி ஆட்சிக்கு எதிராக ஒரு சர்வதேச
தலையீட்டிற்கான அவசரக்காலத் திட்டங்களை வாஷிங்டன் இப்பொழுது
முன்னின்று நடத்துகிறது.
இதன்
நோக்கம் ஏகாதிபத்திய சக்திகள் லிபிய எண்ணெய் ஆதாரங்கள் மீது
கட்டுப்பாட்டைக் கொள்வது மற்றும் அமெரிக்க புவிசார்-மூலோபாய
நலன்களுக்கு இணக்கமாக இருக்கும் ஒரு புதிய அரசாங்கத்தை அங்கு
நிறுவுதல் என்பதாகும்.
எழுச்சியை மிருகத்தனமாக லிபிய ஆட்சி அடக்கும் முயற்சிகள் ஒரு
போலித்தன
“மனிதாபிமான”
குறுக்கீட்டிற்கு தயாரிப்புக்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அமெரிக்க இராணுவச் சொத்துக்கள் இப்பொழுது மத்தியதரைக் கடலில்
நிலைநிறுத்தப்படுகின்றன,
வாஷிங்டனில் அதிகாரிகள் இப்பொழுது தீவிரமாக
“பறக்கக்
கூடாத”
வலயப்
பகுதியைச் சுமத்துவது பற்றித்
“தீவிரமாகப்
பரிசீலிக்கின்றனர்.”
ஒபாமா
நிர்வாகம் அதன் புதிய பொருளாதாரத்தடைகளின் ஒரு பகுதியாக லிபிய
அரசாங்கத்தின்
$30
பில்லியன் நிதியச் சொத்துக்களையும் முடக்கி வைத்துள்ளது.
ஐரோப்பிய சக்திகளிடையே பிரிட்டனும் ஜேர்மனியும்
ஏற்கனவே லிபிய இறைமைக்குத் தங்கள் அவமதிப்பை நிரூபிக்கும்
வகையில் வார இறுதியில் அவற்றின் குடிமக்களை வெளியேற்றுவதற்கு
விமானப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இன்று
பிரெஞ்சு அரசாங்கம் இரு விமானங்கள் நிறைய லிபியாவின் இரண்டாவது
பெரிய நகரமான பெங்காசியிலுள்ள எதிர்ப்புச் சக்திகளுக்கு உதவியை
அளித்தது.
பிரதம
மந்திரி பிரான்சுவா பியோன் இந்த நடவடிக்கையை
“சுதந்திரம்
அடைந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு மகத்தான
மனிதாபிமான ஆதரவுச் செயற்பாட்டின் தொடக்கம்”
என்று
விவரித்தார்.
அனைத்துத்
“தீர்வுகளையும்”,
இராணுவ
விருப்பத் தேர்வுகள் உட்பட,
பிரான்ஸ் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தாலியின் வெளியுறவு மந்திரி தன் நாட்டின் லிபியாவுடனான
ஆக்கிரமிப்புப் போர் இல்லை என்ற உடன்பாடு தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் லிபிய அரசு
“தற்பொழுது
இல்லை”
என்றும் அறிவித்தார்.
வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு
நாடுகளுடன் சமீபத்திய ஆண்டுகளில் கடாபி களிப்பான உறவுகளைக்
கொண்டிருந்தார்.
அவரால்
விரைவில் எழுச்சியை அடக்க முடியவில்லை என்பது தெளிவானவுடன்
அவர்களுடைய ஆதரவை இழந்தார்.
ஒரு
BBC
நிருபர் கடாபியிடம் கேட்டார்:
“சமீபத்திய
ஆண்டுகளில் நீங்கள் மேலைத்தேய நாடுகளுடன் நல்ல பிணைப்பு
கொண்டிருந்தீர்கள்,
முக்கிய மேலைத்தேய தலைவர்கள் டோனி பிளேயர் போன்றோரை இங்கு
அழைத்தீர்கள்.
இப்பொழுது மேலைத்தேய தலைவர்கள் வரிசையில் நின்றுகொண்டு நீங்கள்
போக வேண்டும் என்கின்றனர்.
நீங்கள் அது பற்றி காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டோம் என்ற
உணர்வைப் பெறவில்லையா?”.
அவர்
விடையிறுத்தார்:
“ஆம்,
இது
காட்டிக் கொடுப்புத்தான்.
அவர்களுக்கு அறநெறி ஏதும் கிடையாது”
ஒபாமா
“ஒரு
நல்ல மனிதர்”,
“அவரிடமிருந்து
நான் பெறும் அறிக்கைகள் வேறு எவரிடம் இருந்தோ வருகின்றன”
என்றும் சேர்த்துக் கொண்டார்.
இத்தகைய கருத்துக்கள் எந்த அளவிற்கு லிபிய
சர்வாதிகாரி மத்திய கிழக்கின் மீது ஆதிக்கம் கொள்ளவேண்டும்
என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷ உந்துதலுடன்
இணைந்திருந்தார் என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
அவருடைய ஆட்சியின் காலனித்துவ எதிர்ப்பு மற்றும்
“சோசலிச”
வனப்புரையைக் குப்பையில் போட்டுவிட்டு,
கடாபி
முக்கிய அமெரிக்க,
ஐரோப்பிய பெருநிறுவனங்களை லிபியாவிற்கு அவருடைய
IMF
இசைவு
பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக
வரவேற்றிருந்தார்.
அவருடைய பாதுகாப்புப் படைகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான
போர் என்பதற்கு உதவியாக அனுப்பியிருந்தார்.
எதிர்ப்பு இயக்கத்தை ஒரு அல் கெய்டா சதி என்று
கடாபி சித்தரிக்க முற்பட்டு ஒரு
ABC
நிருபரிடம் கூறினார்:
“மேற்குடன்
அல் கெய்டாவுடன் போரிடுவதற்கு நாங்கள் ஒரு உடன்பாடு
கொண்டிருந்தோம்,
இப்பொழுது நாங்கள் பயங்கரவாதிகளுடன் போரிடும்போது அவர்கள்
எங்களைக் கைவிட்டுவிட்டனர் என்பதில் வியப்பு அடைகிறேன்…..
ஒருவேளை அவர்கள் லிபியாவை ஆக்கிரமிக்க விரும்புகின்றனர் போலும்.”
மேலும்
அபத்தமாக அவர்,
“ஆயுதங்களைக்
கொண்டவர்கள் இளைஞர்கள்.
அல்
கெய்டா அவர்களுக்குக் கொடுத்த போதை மருத்துகளின் விளைவுகள்
இறங்கியவுடன் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தொடங்கிவிட்டனர்”
என்றும் கூறினார்.
பல நகர்ப்புற மையங்களில் போர்கள்
தீவிரமாகியுள்ளன.
கடாபிக்கு விசுவாசமாக உள்ள படைகள் வார இறுதியில்
எதிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறிக்கொண்ட
திரிப்போலிக்கு அருகேயுள்ள சில சிறு நகரங்கள் மற்றும் நகரங்களை
மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.
அசோசியேட்டட் பிரஸ் கருத்துப்படி
தலைநகரத்திற்கு மேற்கே கிட்டத்தட்ட
50
கிலோ
மிட்டர் தொலைவிலுள்ள ஜவியாவில் மோதல் ஒன்று ஏற்பட்டது.
இதில்
எதிர்ப்பு போராளிகள் உயர்மட்ட கமிஸ் இராணுவப் பிரிவை
எதிர்கொண்டனர்.
அதில்
அரை டஜன் கவச வாகனங்கள்,
டாங்குகள் மற்றும் விமானத் தாக்குதல் நடத்தும் திறனுடைய
துப்பாக்கிகளைக் கொண்ட ஜீப்புகள் ஆகியவை இருந்தன.
லிபியாவின் மூன்றாவது பெரிய நகரும் திரிப்போலிக்கு கிழக்கே
200
கி.மீ.
உள்ள
நகரமுமான மிஸ்ரடாவில் அரசாங்கப் படைகள் நகரத்திற்கு
வெளியேயுள்ள விமானத் தளம் ஒன்றின் மீது இன்னும்
கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
நேற்று
அவர்கள் எதிர்ப்பாளர்களின் துப்பாக்கி வீரர்கள் மீது தாக்குதல்
நடத்தித் தோல்வி அடைந்தனர்.
கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் படைகள் திரிப்போலியை விட
பெங்காசிக்கு அருகே இருக்கும் கடலோர எண்ணெய் இறுதிப்பகுதியான
ராஸ் லனூப் மீது மீண்டும் கட்டுப்பாட்டைக் கொண்டுவிட்டன என்று
சில தகவல்கள் கூறுகின்றன.
இது
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இன்னும் அதிகமாகக் கிழக்கில்
நிறுவியது என்பது வெளிப்படை.
தலைநகரில் அடிப்படைத் தேவைகள் உணவு உட்பட
பலவற்றின் விலைகளும் வானளாவில் உயர்ந்துள்ளன.
நகரவாசி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் அரிசியின் விலை முன்பு
இருந்ததைப் போல்
500
சதவிகிதம் உயர்ந்துவிட்டது என்றார்.
நீண்ட
வரிசைகள் ரொட்டிக் கடைகளுக்கு வெளியே பகிர்வு முறையில்
வழங்கப்படும் ரொட்டிக்காக நிற்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள்
ஒரு சிறப்பு ரொக்கத் தொகையாக
500
டினர்கள் பெறுவதற்கும் வரிசையில் நிற்கின்றனர்
—இது
$400
க்குச்
சமம்.
பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு மாத ஊதியம் ஆகும்.
இது
கடாபி அரசாங்கம் எதிர்ப்பிலுள்ள தொழிலாள வர்க்கத்தின்
உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாக
வழங்கப்படுகிறது.
தற்போதைக்கேனும் தலைநகரில் பொது
ஆர்ப்பாட்டங்களை வன்முறையைப் பயன்படுத்தி ஆட்சி
நசுக்கிவிட்டதாகத் தோன்றுகிறது.
ஆனால்
பல செய்தியாளர்கள் திரிப்போலிக்கு கிழக்கே புறநகராக இருக்கும்
தொழிலாள வர்க்க மையமான டஜுராவில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை
பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று
அப்பகுதியில் கடந்த வெள்ளி ஆர்ப்பாட்டத்தின்போது இறந்த ஒரு
நபரின் இறுதி ஊர்வலத்தின்போது பலநூற்றுக்கணக்கான மக்கள்
சீற்றத்துடன் கடாபியை கண்டித்தனர்.
“பல
உள்ளூர்வாசிகள் தலைநகரின் தொழில்துறை புறநகரான தங்கள் பகுதி
பெப்ருவரி நடுவில் எழுச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு
மாலையும் போர்ப்பகுதியாக இருந்தது என விவரித்தனர்”
என்று
வோல்
ஸ்ட்ரீட் ஜேர்னல்
கூறியுள்ளது.
“பாதுகாப்புப்
பொலிசும் இராணுவத் துணைப்படைப் பிரிவுகளும் டஜுராவில் இரவு
முழுவதும் ரோந்து வருகின்றன.
பலரையும் கைது செய்கின்றனர்,
ஆயுதங்கள் மூலம் சுடுகின்றனர்.
மக்கள்
இதை தங்கள் ஆர்ப்பாட்டங்களை முடிப்பதற்கு அச்சத்தைக்
கொடுக்கும் தந்திரோபாயம் என்று நம்புகின்றனர்.
“நாங்கள்
வலுவானவர்கள்,
நாங்கள்தான் அவர்களுக்கு அச்சத்தை தருகிறோம்,
எங்களிடம் ஆயுதங்கள் இல்லை,
எங்கள்
குரல்கள்தான் உள்ளன”
என்று
தன்னை அப்பகுதியில் அரசாங்க எதிர்ப்புச் சக்திகளின் ஒரு துணைத்
தளபதி என்று விவரித்துக் கொண்ட அப்துல் கூறினார்.
எகிப்திலும் துனிசியாலும் இருப்பது போல்,
லிபியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள்,
கடாபிக்கு எதிராக இயக்கத்திற்கு உந்துதல் கொடுப்பவர்கள்,
வேலைகள்,
கல்வி
வாய்ப்புக்கள்,
கௌரவமான ஊதியங்கள்,
பணிநிலைகள்,
கட்டுமானம் ஆகிய அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றைக் காக்க
முற்பட்டுள்ளனர்.
ஆனால்
வட ஆபிரிக்க நாடுகளைப் போலவே லிபிய தொழிலாள வர்க்கமும் அதன்
சுயாதீன தலைமையைக் கொண்டிருக்கவில்லை.
அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பல முதலாளித்துவ அரசியல்
சக்திகள் விரைகின்றன,
அவை
கடாபி அகற்றப்பட வேண்டும் என்னும் இயக்கத்திற்கான எழுச்சியை
நிறுத்த முற்படுகின்றன.
அவை
லிபிய உயர்வகுப்புக்களின் நலன்களை நிலைநிறுத்தும் ஒரு புதிய
ஆட்சியைக் கொண்டுவரும் நோக்கத்திற்கு உழைக்கின்றன—இதையொட்டி
முதலாளித்துவ சொத்து உறவுகள் அல்லது நாட்டின் செல்வங்கள்
முற்போக்கான வகையில் மறுபங்கீடு செய்தல் தடுக்கப்படும்.
மேலும்
இவை முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க,
ஐரோப்பிய அரசாங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன.
பெங்காசியில் ஒரு
“தேசிய
சபை”
அமைக்கப்பட்டுள்ளது.
இதன்
அமைப்பும் தலைமையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,
இறுதிப்படுத்தப்படவில்லை என்று அமைப்பின் செய்தித் தொடர்பாளர்
கூறுகிறார்.
நேற்று
Time
ஏடு
இந்நிலைமை சபையின் தலைமையகத்தில் இருந்ததாகச் சித்தரிக்கிறது:
“புதிதாக
உருவாகியுள்ள நூற்றுக்கணக்கான புரட்சிகர அதிகாரிகள்
—நடுத்தர
வயது தன்னார்வலர்கள்,
நகரத்தில் தொழில்சிறப்பு தேர்ச்சியுடையவர்கள்,
வணிக
வகுப்புக்களில் இருந்து வந்தவர்கள்—
பல
கூட்டங்களை நடத்தியுள்ளனர்,
ஆனால்
முடிவுகள் அதிகம் இல்லை.
ஒரு
நீதிமன்றமாக இருந்த இடத்தில் செய்தியாளர் கூட்டத்தை
நடத்துகின்றனர்.
ஒரே
நேரத்தில் அரை டஜன் செய்தித் தொடர்பாளர்கள் அறையினுள்
சுற்றிவந்து உதவ முற்படுகின்றனர்.
ஆனால்
மாறுபட்ட தகவல்கள்தான் வெளிவருகின்றன.”
மனித உரிமைகள் வக்கீல் ஹபிஸ் கோகா தேசிய
சபையின் உத்தியோகபூர்வச் செய்தித் தொடர்பாளர் ஆவார்.
எதிர்த்தரப்பிற்கு வந்துவிட்ட பல இராணுவத் தளபதிகள் அதே
நேரத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுள் இப்பொழுது பெங்காசியைச் சுற்றி இராணுவ
நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கொண்டுள்ள கேணல் டரீக் சயீத்தும்
அடங்குவார்.
ஆனால்
எதிர்த்தரப்பு சக்திகளின் பல்வகைத் தன்மைகள் முன்னாள் அரசாங்க
நீதி மந்திரி முஸ்தாபா அப்டெல் ஜலில் தான் ஒரு இடைக்கால
அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கி கடாபியின் மகன்களுடன்
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க பேச்சுக்கள் நடத்த இருப்பதாக
அறிவித்ததில் வெளிப்பட்டுள்ளது.
ஹபிஸ்
கோகா இக்கூற்றுக்களை நிராகரிக்கும் வகையில் அப்டெல் ஜலில் தன்
“சொத்தக்
கருத்துக்களை”
கூறியுள்ளார் என்றும் முன்னாள் மந்திரி இத்தேசிய சபையின் ஒரு
உறுப்பினர்தான்,
தலைவரல்ல என்றும் கூறியுள்ளார்.
ஐக்கியம் மற்றும் முறையான அமைப்பு இல்லை
என்றாலும்கூட,
தன்னைத்தானே எதிர்த்தரப்புத் தலைமை என்று அறிவித்துக்
கொண்டிருப்பதுடன் வாஷிங்டன் பேச்சுக்களை நடத்த விரைந்துள்ளது.
எதிர்த்தரப்பினரின் வசமுள்ள நிலப்பகுதிகளில் இருந்து எண்ணெய்
ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கிவிட்டன என்ற செய்தியைக் கேட்டு
ஒபாமா நிர்வாகம் சந்தேகத்திற்கு இடமின்றி மகிழ்ச்சி
அடைந்துள்ளது.
கடாபி
எதிர்ப்புச் சக்திகளுடன் பணிபுரியும் அரேபிய வளைகுடா எண்ணெய்
நிறுவனத்தின் இரு டாங்கர்கள் டோப்ருக்கிலுள்ள துறைமுகத்தில்
இருந்து ஞாயிறு காலை சீனா,
ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் எண்ணெயுடன் புறப்பட்டன.
வெளிவிவகார செயலக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரௌலி
அமெரிக்க அதிகாரிகள்
“கடந்த
இரு தினங்களாக எதிர்த்தரப்பில் பலதரபட்ட நபர்களுடன்
பேச்சுக்களுக்காக ஆர்வம் காட்டியுள்ளது”
என்பதை
ஒப்புக் கொண்டார்.
வெளிவிவகார செயலர் கிளின்டன்,
“நாம்
தயாராக இருந்து அமெரிக்காவிடம் இருந்து உதவி நாடும் எவருக்கும்
முடிந்த உதவியைத் தர உள்ளோம்”
என்றார்.
இந்த
“உதவி
அளித்தல்”
என்பது
கிழக்கு லிபியாவில் தளம் கொண்டுள்ள ஆயுதமேந்திய எதிர்
சக்திகளுக்கும் பொருந்துமா என்று கேட்கப்பட்டதற்கு,
க்ரோலி
“எங்களிடம்
பரந்த வகையில் விருப்புத் தேர்வுகள் உள்ளன.
இந்தக்கட்டத்தில் எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை என்றுதான்
நான் நினைக்கிறேன்”
என்றார். |