WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
North African uprisings force French foreign
minister to resign
வட ஆபிரிக்க எழுச்சிகள்
பிரெஞ்சு வெளியுறவு மந்திரியை இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்துகின்றன
By
Pierre Mabut
28 February 2011
பிரெஞ்சு
வெளியுறவு
மந்திரி
மிஷேல்
அலியோ-மரி
ஞாயிறன்று
பதவியிறக்கப்பட்ட
துனிசிய
தலைவர்
பென்
அலியுடன்
கொண்டிருந்த
அரசியல்,
தனிப்பட்ட உறவுகளைச்
சூழ்ந்திருந்த
அவதூறுகளின்
காரணமாக
தன்
பதவியை
இராஜிநாமா
செய்யும்
கட்டாயத்திற்கு
உட்பட்டார்.
அவசரமாக
ஏற்பாடு
செய்யப்பட்ட
ஒரு
10 நிமிடத்
தொலைக்காட்சி
உரையில்
ஜனாதிபதி
நிக்கோலா
சார்க்கோசி
அரசாங்க
மாற்றத்தை
அறிவித்தார்.
இதில்
அலியோ
மரி
பற்றிய
குறிப்பு
ஏதும்
இல்லை.
தற்போதைய
பாதுகாப்பு
மந்திரி
புதிய
வெளியுறவு
மந்திரி
என்று
பெயரைகுறிப்பட்டார்.
சமீபத்தில்
இனவெறி
அவமதிப்புக்களுக்காக
குற்றஞ்சாட்டப்பட்ட
Brice Hortefeux
யையும்
சார்க்கோசி
பதவியை
விட்டு
நீக்கினார்.
அவர்
ஜனாதிபதியின்
சிறப்பு
ஆலோசகர்
ஆகிறார்.
தேசிய
பொலிசின்
முன்னாள்
தலைமை
இயக்குனரும்
முன்னாள்
ஜனாதிபதி
ஆலோசகருமான
Claude Guéant
இப்பொழுது
Brice Hortefeux
யின்
பதவியை
வகிப்பார்.
இவற்றிலிருந்து
சார்க்கோசி
2012 ல்
தன்னுடைய
இனவெறிக்
கொள்ளையின்
ஒரு
பகுதியாக
குடியேற்ற
எதிர்ப்புப்
பிரச்சாரத்திற்கு
ஊக்கம்
கொடுக்க
முடியும்
என்று
நம்புகிறார்.
வட
ஆபிரிக்காவிலுள்ள
சர்வாதிகார
ஆட்சிகளுக்குத்
தன்
அரசாங்கம்
கொடுத்த
ஆதரவை
மன்னிக்கும்
வகையில்
சார்க்கோசி
பொதுவாக
இந்தச்
சர்வாதிகாரங்கள்
அனைத்திற்கும்
எல்லா
மேற்கத்தைய
சக்திகளும்
காட்டும்
ஆதரவை
மேற்கோளிட்டார்.
வட
ஆபிரிக்காவில்
இப்பொழுது
வரும்
புதிய
ஜனநாயகங்கள்
மூன்று
ஆண்டுகளுக்கு
முன்பு
அவர்
துவக்கிய
ஒரு
மத்தியதரைக்கடல்
ஒன்றியம்
என்பதில்
இருந்து
வரும்
என்று
அவர்
கூறினார்.
“இந்த
அரபுப்
புரட்சிகள்
இந்நாடுகளுடன்
நாம்
கொண்டுள்ள
உறவுகளில்
ஒரு
புதிய
சகாப்தத்தைத்
திறக்கின்றன….இந்த
வரலாற்றுத்
தன்மை
கொண்ட
மாற்றத்தைக்
கண்டு
நாம்
அச்சப்பட
வேண்டியதில்லை”
என்றார்
அவர்.
லிபிய
நெருக்கடி,
அகதிகள்
வருகை
ஆகியவற்றிற்குத்
தீர்வு
காண்பதற்கு
ஐரோப்பிய
மந்திரிகள்
சபைக்
கூட்டம்
அவசரமாக
நடத்தப்பட
வேண்டும்
என்றும்
அவர்
அழைப்பு
விடுத்துள்ளார்.
அலியோ
மரி
அவருடைய
பங்காளி
பாட்ரிக்
ஒல்லியே
கொண்டிருந்த
கடாபி
ஆட்சியுடனான
நெருக்கமான
உறவை
ஒட்டியும்
பதவிநீக்கப்படுகிறார்—ஆனால்
அக்கொள்கைக்கு
சார்க்கோசி
அரசாங்கத்தின்
ஒப்புதல்
இருந்தது.
ஒல்லியே
பாராளுமன்ற
உறவுகள்
மந்திரி
ஆவார்,
மேலும்
லிபியாவுடனான
“பாராளுமன்ற
நட்புக்
குழுவின்”
தலைவரும்
ஆவார்.
சார்க்கோசி
தான்
2007ம்
ஆண்டு
கடாபியை
பிரான்சிற்கு
அரச
வருகைக்கு
அழைத்திருந்தார்.
அதையொட்டி
பல
இலாபகரமான
இராணுவத்
தளவாட
ஒப்பந்தங்கள்
கையெழுத்தாயின.
ஒல்லியே
தான்
தன்
பதவியை
அலியோ
மரிக்குப்
பரிவுணர்வு
காட்டுவதற்காக
இராஜிநாமா
செய்வதாக
விரும்பினார்.
ஆனால்
அவர்
தொடர்ந்து
பதவியில்
இருக்குமாறு
வற்புறுத்தப்பட்டார்.
இப்பொழுது
சார்க்கோசி
காலம்
கடந்து
கடாபி
அகல
வேண்டும்,
பிரெஞ்சு
அரசாங்கம்
டிரிபோலியில்
அதன்
தூதரகத்தை
மூட
வேண்டும்
என்று
கூறுகிறார்.
பிரெஞ்சு
அரசாங்கம்
மற்றும்
ராஜதந்திர
முறை
இப்பொழுது
வட
ஆபிரிக்கா
மற்றும்
மத்திய
கிழக்கு
மக்கள்
எழுச்சிகளால்
சிதறியுள்ளன.
லிபியத்
தலைவர்
கடாபிக்கு
எதிரான
புரட்சிகள்,
பென்
அலியின்
வீழ்ச்சி
ஆகியவை—பிரெஞ்சு
ஏகாதிபத்தியத்தின்
இரு
நெருக்கமான
நட்புகள்—கடைசி
இம் மாற்றம்
மூன்று
மாதங்களுக்கு
முன்புதான்
நடத்தப்பட்டது
என்றாலும்,
பழையபடி
இப்பொழுது
அரசாங்கத்தை
மாற்றஞ்
செய்ய
வைத்துள்ளது.
ஜனாதிபதிக்கு
ஆதரவான
கருத்துக்
கணிப்பு
இப்பொழுது
30 சதவிகிதம்
என்று
குறைந்துவிட்டது.
இது
மிக
மோசமான
நிலை
முன்பு
இருந்ததற்கு
ஒப்பாகிறது.
64
வயது
அலியோ-மரி
1993ல்
இருந்து
முக்கிய
மந்திரிப்
பதவிகளை
வகித்துள்ளார்.
துனிசியாவில்
பென்
அலிக்கு
எதிரான
எழுச்சி
தொடங்கியபோது
அவரும்
அவருடைய
குடும்பத்தினரும்
2010 கிறிஸ்துமஸ்
விடுமுறையை
கழித்தனர்
என்பது
வெளிப்பட்டவுடன்,
பென்
அலி
பதவி
விலகிய
பின்னர்,
இவர்
இராஜிநாமா
செய்யுமாறு
அழுத்தத்திற்கு
உட்பட்டார்.
பெயரிட
விரும்பாத
அரசாங்க
மந்திரி
ஒருவர்
இந்நிலையில்
அவர்
“நீடிப்பது
கடினமாகிவிட்டது”
என்றார்.
துனிசியாவில்
அவர்
இருந்தபோது,
அலியோ
மரி
பல
முறை
வணிகரும்
பென்
அலிக்கு
நிதி
அளிக்கும்
நெருக்கமானவருமான
அசீஸ்
மிலேடாவின்
தனி
ஜெட்டில்
பயணித்திருந்தார்.
அவருடன்
இப்பயணத்தில்
அவருடைய
பங்காளி
பாட்ரிக்
ஒல்லியே
மற்றும்
அவருடைய
பெற்றோர்களும்
இருந்தனர்.
கடைசி
இருவரும்
அங்கு
தங்கியிருந்தபோது
மிலேட்டுடன்
சொத்துக்கள்
உடன்பாட்டைக்
கொண்டனர்.
இக்குழு
மிலேட்டிற்குச்
சொந்தமான
டாபர்க்கா
ஓட்டலில்
தங்கியிருந்தது.
ஜனாதிபதி
சார்க்கோசி
இழிந்த
முறையில்
அலியோ-மரி
நடந்து
கொண்ட
முறைக்கு
ஆதரவு
கொடுத்தார்.
இதன்
மூலம்
பிரெஞ்சு
ஆளும்
உயரடுக்கு
பென்
அலி
ஆட்சியுடன்
கொண்டிருந்த
பிணைப்புக்களுக்கும்
பாதுகாப்பு
கொடுத்தார்.
இவற்றில்
“பொதுப்
பணத்தில்
ஒரு
சென்ட்
கூட
கையாடல்
செய்யப்படவில்லை”
என்றும்
அவர்
கூறினார்.
தன்னுடைய
வெளியுறவு
மந்திரிக்கு
பிரதம
மந்திரி
பிரான்சுவா
பியோன்
முழு
ஆதரவைக்
கொடுத்தார்.
எகிப்தில்
இப்பொழுது
பதவி
இறக்கப்பட்டுள்ள
சர்வாதிகாரி
ஜனாதிபதி
ஹொஸ்னி
முபாரக்
டிசம்பர்
மாத
இறுதியில்
எகிப்தில்
பியோனுடைய
குடும்பத்தின்
விடுமுறைக்குப்
பணம்
கொடுத்தார்
என்பது
பின்னர்
வெளிப்பட்டுள்ளது.
ஜனவரி
11ம்
தேதி
பாராளுமன்றத்தில்
நடத்திய
உரை
ஒன்றில்
துனிசிய
எழுச்சியை
அடக்குவதற்கு
பிரெஞ்சு
உதவியை
அளிக்கத்தயார்
என்று
அலியோ
மரி
இழிந்த
முறையில்
கூறியிருந்தார்—அல்லது,
அவர்
கூறியபடி
பிரெஞ்சு
பொலிஸ்,
படைகளுக்கு
“எப்படிச்
செய்வது”
என்பதில்
பயிற்சி
அளிப்பதாகக்
கூறினார்.
பென்
அலி
கவிழ்க்கப்படும்
நேரத்தில்
ஏராளாமான
கலக
எதிர்ப்புக்
கருவிகள்
அங்கு
அனுப்பப்படுவதாக
இருந்தன.
அப்பொழுதிலிருந்து
பாரிஸ்
முன்னாள்
பிரெஞ்சு
காலனியான
துனிசியாவை
ஒட்டி
பல
ஊழல்களைப்
பெருகிய
முறையில்
எதிர்கொண்டது.
துனிசியாவில்
பிரெஞ்சு
ஏகாதிபத்தியம்
பரந்த
முதலீடுகளைக்
கொண்டுள்ளது.
முன்னாள்
வெளியுறவு
மந்திரி
எழுச்சி
தொடங்கியதிலிருந்து
துனிசியாவிற்குப்
போன
வாரம்
சென்றிருந்த
முதலாவது
பிரெஞ்சு
அரசாங்கக்
குழுவில்
பங்கு
பெறவில்லை.
சென்றிருந்தால்
பொருட்டல்லாத
ஒரு
நபர்
என்றுதான்
துனிசிய
தொழிலாளர்களால்
கருதப்பட்டிருப்பார்.
இந்த
பயணத்திற்கு
நிதி
மந்திரி
Christine Lagarde
மற்றும்
ஐரோப்பிய
விவகாரங்கள்
மந்திரி
Laurent Wauquiez
ஆகியோர்
தலைமை தாங்கினர்.
கடந்த
வாரம்
துனிசியாவிற்குப்
புதிதாய்
நியமிக்கப்பட்டுள்ள
பிரெஞ்சுத்
தூதர்
Boris Boillon
பென்
அலிக்கு
அலியோ
மரி
கொடுத்த
ஆதரவு
பற்றித்
துனிசியச்
செய்தியாளர்கள்
வினா
எழுப்பியபோது
பிரெஞ்சு
ஏகாதிபத்தியத்தின்
புகழிற்கு
இன்னும்
சேதத்தை
விளைவித்தார்.
“இரு
நாடுகளுக்கும்
இடையே
போக்குவரத்தை
எளிதாக்குவதற்காக”
தான்
வந்ததாக
விளக்கிய
பின்னர்,
Boillon
எழுப்பப்பட்ட
வினாக்கள்
“மட்டமாக
உள்ளன”
என்று
திமிர்த்தனமாகக்
கூறி
பேட்டிகளை
நிறுத்திக்
கொண்டார்.
பேட்டி
காண்பவர்களுக்கு
உரிய
மரியாதை
காட்டாதது
நூற்றுக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
பிரெஞ்சுத்
தூதரகத்தின்
முன்
சூழ்ந்துகொள்ள
காரணமாயிற்று.
துனிசியாவிலிருந்து
Boillon
வெளியேற்றப்பட
வேண்டும்
என்ற
கோரிக்கையும்
எழுந்தது.
துனிசியாவில்
தூதராக
வருவதற்கு
முன்
Boillon
பாக்தாத்திலுள்ள
அமெரிக்க
ஆக்கிரமிப்பு
ஆட்சிக்கு
பிரான்ஸின்
தூதராக
இருந்தார்.
வட
ஆபிரிக்கா
மற்றும்
மத்திய
கிழக்கு
சர்வாதிகாரங்களுடன்
பிரான்ஸின்
உறவுகள்
அரசாங்கத்திற்குள்ளும்
தூதரகப்
பிரிவினர்
இடையேயும்
பிளவுகளை
ஏற்படுத்தியுள்ளது.
ஆளும்
உயரடுக்கின்
சில
பிரிவுகள்,
முதலாளித்துவ
எதிர்க்கட்சி
சோசலிஸ்ட்
கட்சியில்
(PS) இருப்பவை,
தற்போதைய
அரசாங்கத்தின்
பொறுத்திருந்து-பார்ப்போம்
என்னும்
அணுமுறையைக்
குறைகூறின.
அவர்கள்
சர்வாதிகாரியின்
நண்பர்கள்,
மக்கள்
எழுச்சியை
மீறித்
தப்பிவிடுவர்
என்று
நம்பியிருந்தனர்.
மிஷல்
அலியோ-மரி
ஜனவரி
18 அன்று
“பிரான்ஸ்
நிகழ்வுகள்
இவ்வாறு
வரும்
என்று
நினைக்கவில்லை”
என
அறிவித்திருந்தார்.
சோசலிஸ்ட்
கட்சியின்
முதலாவது
செயலாளர்
மார்ட்டின்
ஆப்ரி
பிரெஞ்சு
இராஜதந்திரமுறை
“நீடித்து
இருக்கவில்லை,
அக்காரணத்தையொட்டி
பிரான்ஸ்
உலகில்
சுருங்கிக்
கொண்டிருக்கிறது”
என்று
புலம்பினார்.
இதேபோல்
அதிருப்தியடைந்த
பல
தூதர்களும்
Le Monde
பத்திரிகையில்
ஜனாதிபதி
சார்க்கோசியின்
வெளியுறவுக்
கொள்கை
பற்றி
அனாமதேயே
குறைகூறலை
வெளியிட்டனர்.
“குறைந்த
கால
செய்தி
ஊடகச்
செயற்பாடுகளில்”
அவர்
ஈடுபடுபவராகவும்
குற்றம்
சாட்டினர்—இது
அவருடைய
அடுத்த
ஆண்டு
ஜனாதிபதித்
தேர்தல்
பற்றிய
குறிப்பு
ஆகும்.
இக்கட்டுரை
துனிசியா
மற்றும்
எகிப்தின்
மீதான
கொள்கைகள்
“தூதரக
பகுப்பாய்வுகளை
கருத்திற்
கொள்ளாமல்”
வரையறுக்கப்பட்டுள்ளன
என்று
குறைகூறியுள்ளது.
PS
ன்
குறைகூறல்கள்
நேர்மையற்றவை,
அரசியல்
அளவில்
திவால்தன்மை
உடையவை.
PS வட
ஆபிரிக்க
சர்வாதிகாரங்களுக்கு
உடைந்தையாகத்தான்
இருந்துள்ளது.
சோசலிஸ்ட்
இன்டர்நேஷனல்
என
அழைக்கப்படும்
அமைப்பிற்குள்
PS பென்
அலியின்
Constitutional Democratic Rally (RCD)
மற்றும்
முபாரக்கின்
தேசிய
ஜனநாயகக்
கட்சி
(NDP) இரண்டுடனும்
பிணைப்பு
கொண்டிருந்தது.
தன்
அரசியல்
தந்திரோபாயங்களால்
PS இந்த
உறவுகளை
மறைக்க
முற்பட்டு
அதே
நேரத்தில்
இன்னும்
திறமை
வாய்ந்த,
இன்னும்
வெற்றித்திறன்
உடைய
பிரெஞ்சு
ஆளும்
வர்க்கத்தின்
பிரதிநிதிகள்
என்று
காட்டிக்
கொள்ள
முற்படுகிறது. |