செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
New mass protests against US-backed regimes in Egypt and Yemen
எகிப்து மற்றும்
யேமனில் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிகளுக்கு எதிரான புதிய வெகுஜன எதிர்ப்புக்கள்
By
David Walsh
26 February 2011
வெள்ளியன்று
உண்மையான
மாற்றம்
இல்லாததை
எதிர்ப்பதற்கும்
வெறுக்கப்பட்ட
சர்வாதிகாரி
ஹொஸ்னி
முபாரக்கின்
வீழ்ச்சி
ஏற்பட்டு
இருவாரங்கள்
ஆகியதைக்
குறிக்கும்
வகையிலும்
பல்லாயிரக்கணாக்கான
எகிப்தியர்கள்
தஹ்ரிர்
சதுக்கத்தில்
கூடினர்.
இதற்கிடையில்
எகிப்தில்
ஒரு
வேலைநிறுத்த
அலை
தொடர்கிறது.
கிட்டத்தட்ட
பொருளாதாரத்தில்
ஒவ்வொரு
துறையிலும்
விரிவாகும்
தொழில்துறை
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே
தினத்தில்
யேமனில்
வாஷிங்டனின்
நண்பராகிய
ஜனாதிபதி
அலி
அப்துல்
சலே
தொடர்ந்து
ஆட்சி
புரிவதற்கு
எதிராக
நூறாயிரக்கணக்கான
மக்கள்
நடத்திய
மிகப்
பெரிய
எதிர்ப்புக்கள்
யேமனில்
தற்பொழுதைய
அமைதியின்மை
அலை
மூலம்
நிரூபித்தன.
கிட்டத்தட்ட
50,000 அல்லது
அதற்கும்
அதிகமானவர்கள்
தலநகரான
சானாவில்
அணிவகுத்தனர்.
அதேநேரத்தில்
100,000 மக்கள்
நாட்டின்
தென்மேற்கிலுள்ள
டைஸில்
எதிர்ப்புக்களில்
பங்கு
பெற்றனர்.
வெள்ளை
மாளிகை
மௌனம்
காக்கையில்
அல்லது
அதன்
எண்ணெய்
அளிப்பைக்
கட்டுப்படுத்துவதற்காக
லிபியாவில்
இராணுவத் தலையீடு
நடத்தப்படும்
என்று
அச்சுறுத்துகையில்,
மத்திய
கிழக்கு
மற்றும்
ஆபிரிக்காவில்
ஏராளான
மக்கள்
தங்களை
அமெரிக்கா,
பிரிட்டன்,
பிரான்ஸ்
இன்னும்
பிற
ஏகாதிபத்தியச்
சக்திகளின்
முழு
ஆதரவுடன்
பல
தசாப்தங்களாக
அடக்கியாளும்
கொடுங்கோல்
ஆட்சிகளிலிருந்து
தங்களை
விடுவித்துக்கொள்ள
பெரும்
முயற்சி
எடுத்து
வருகின்றனர்.
பெப்ருவரி
25ம்
தேதி
கெய்ரோவிலும்
மற்ற
எகிப்திய
நகரங்களிலும்
எதிர்ப்பாளர்கள்
குறிப்பாக
இந்த
வாரம்
பிரதம
மந்திரி
அஹ்மத்
ஷபீக்கின்
அமைச்சரவை
மாற்றி
அமைக்கப்பட்டது
பற்றி
சீற்றம்
காட்டினர்.
இது
ஏராளமான
முபாரக்கின்
எடுபிடிகளை
இன்னும்
பதவியில்
இருத்தியுள்ளது.
ஷபிப்போ
எகிப்திய
முன்னாள்
விமானப்
படையின்
தலைவராகவும்
முபாரக்கின்கீழ்
மந்திரியாகவும்
இருந்தவர்.
வியாழனன்று
சமீபத்திய
அணிவகுப்புக்களுக்கு
ஒரு
நாள்
முன்னதாக
ஆளும்
இராணுவக்குழு
ஒரு
அறிக்கையில்
“தான்
தன்
உறுதிமொழிகளை
நிறைவேற்ற
அனைத்து
நடவடிக்கைகளையும்
எடுக்கப்போவதாகவும்,
அதையொட்டி
கடந்த
காலத்திற்குத்
திரும்பும்
சூழ்நிலை
இராது
என்றும்,
அதன்
இலக்கு
பெரும்
நாட்டின்
நம்பிக்கை,
விழைவுகளைச்
செவ்வனே
அடைவதுதான்”
என்றும்
கூறியுள்ளது.
இராணுவத்திற்கு
எதிரான
வெகுஜன
எதிர்ப்பு
பல
சமாதானச்
சொற்கள்
வந்தும்கூட
பெருகியுள்ளது.
Christian Science Monitor
வெள்ளியன்று
“கூட்டத்தினரிடையே
எதிர்ப் புரட்சி
என்பதுதான்
முக்கிய
சொல்லாக
இருந்தது”
என்று
குறிப்பிட்டுள்ளது.
“எங்களுக்கு
இனி
ஷபிக்
தேவையில்லை,
எங்களை
அவர்கள்
தோட்டாக்களினால்
சுட்டாலும்”,
“வெற்றி
அடையப்படும்
வரை
புரட்சி,
ஷபிக்,
அரண்மனைக்கு
எதிராகப்
புரட்சி”
என்ற
கோஷங்களை
எதிர்ப்பாளர்கள்
எழுப்பியதாக
ராய்ட்டர்ஸ்
தகவல்
கொடுத்துள்ளது.
சில
எதிர்ப்பாளர்கள்
மந்திரிசபைக்
கட்டிடத்தைச்
சூழ்ந்து
கொண்டு,
“நாங்கள்
நகரமாட்டோம்!
அவர்தான்
போக
வேண்டும்”
என்று
கோஷமிட்டனர்.
இதே
கோஷம்தான்
முபாரக்கை
அகற்றுவதற்கும்
பயன்படுத்தப்பட்டது.
தஹ்ரிர்
சதுக்கத்தில்
ஒரு
பதாகை,
“ஷபிக்கின்
அரசாங்கம்
ஊழல்
மிகுந்த
ஆட்சிக்குத்
தாழ்ந்து
நடக்கிறது”
என்று
கூறியது.
ஒரு
அருங்காட்சியகத்
தலைவரான
ஆர்ப்பாட்டக்காரர்
ஒருவர்
கிறிஸ்டியன்
சயின்ஸ்
மானிடரிடம்
“நூற்றுக்கணக்கான
மக்கள்
இதற்காக
ஒன்றும்
இறந்து
விட
வில்லை….அஹ்மத்
ஷபிக்
முபாரக்கின்
மாணவர்தான்.
நாங்கள்
ஒரு
புதிய
ஆரம்பத்தை
கோருகிறோம்,
அதில்
அஹ்மத்
ஷபிக்
ஒரு
பங்காக
இருக்கமாட்டார்.
அவரை
ஏற்க
நாங்கள்
மறுக்கிறோம்”
என்று
கூறினார்.
ஒரு
32 வயதான
எதிர்ப்பாளர்
Associated Press
இடம்,
“முபாரக்
இன்னமும்
சுதந்திரமாகச்
சுற்றிக்
கொண்டிருக்கிறார்.
அவருடைய
மகன்களும்
மனைவியும்,
ஆட்சியின்
உறுப்பினர்களும்
இன்னும்
சுதந்திரமாக
உள்ளனர்.
ஒரு
சிலர்
மட்டுமே
பலிகடாக்களாக
ஆக்கப்பட்டுள்ளனர்”
என்றார்.
இராணுவம்
முபாரக்
ஆட்சியிலிருந்து
நலன்களைப்
பெற்றது,
இராணுவம்
தன்னை
மாற்றிக்
கொள்ள
வேண்டும்
என்று
மக்கள்
கட்டாயப்படுத்துகின்றனர்.
இராணுவத்திடம்
பொறுப்பை
விட்டால்,
நாம்
மீண்டும்
சர்வாதிகாரத்தைத்தான்
பெறுவோம்”
என்றும்
சேர்த்துக்
கொண்டார்.
கெய்ரோவில்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
வெறுக்கப்படும்
இரகசியப்
பொலிஸ்
கலைக்கப்பட
வேண்டும்
என்று
கோரியுள்ளனர்.
இது
அடக்குமுறை,
சித்திரவதை
ஆகியவற்றைச்
செய்ததனால்
இழிவடைந்துள்ளது.
இஸ்ரேலியச்
செய்தித்தாளான
Haaretz
வெள்ளியன்று
அந்நகரத்திலும்
கெய்ரோவிலும்
எதிர்ப்புக்களைத்
தூண்டிய
நிகழ்வான
ஒரு
கோப்டிக்
(எகிப்தியக்
கிறிஸ்துவ)
பாதிரியார்
அஸ்யுட்டில்
பெப்ருவரி
23ம்
தேதி
கொல்லப்பட்டது
பாதுகாப்புக்
கருவியினரின்
வேலையாக
இருக்குமோ
என்ற
சந்தேகத்தைக்
கூறியுள்ளது.
இத்தகைய
நிகழ்வுகளுக்குத்
தீவிரவாதம்
குறைகூறப்படுகிறது:
“அவற்றையொட்டி
அவசரகால
அதிகாரங்களை
நிலைநிறுத்துவது
நியாயப்படுத்தப்படுகின்றன”,
“இதையொட்டி
பாதுகாப்புச்
சக்திகள்
வரம்பிலா
அதிகாரத்தை
மக்கள்
எதிர்ப்பை
அடக்கவும்
அவற்றின்
ஆதரவாளர்களைக்
கைது
செய்யவும்
முடிகிறது”
“மதங்களுக்கு
இடையே
வன்முறை—புரட்சியின்போது
முற்றிலும்
இல்லாததன்மை—
பொலிசாருக்கும்
இராணுவத்திற்கும்
சீர்திருத்தங்களை
நிறுத்துவதற்கு
வன்முறையைப்
பயன்படுத்த,
‘ஒழுங்கை
மீட்பதற்கு
என்ற
போலிக்காரணத்தில்
ஒரு
நல்ல
காரணத்தைக்
கொடுக்கும்’
என்று
ஹாரெட்ஸ்
கூறியுள்ளது.
வெள்ளியன்று
கெய்ரோவில்
இருந்த
கூட்டத்தினர்
லிபிய
மக்களுடன்
ஒற்றுமையை
நிரூபிக்கும்
வகையில்
“கடாபி
வீழ்க”
என்று
கோஷமிட்டு
லிபிய
நாட்டுக்
கொடிகளையும்
அசைத்தனர்.
வெள்ளியன்று
இஸ்மைலியா,
அரிஷ்,
சூயஸ்,
போர்ட்
சையத்
ஆகிய
இடங்களில்
பல்லாயிரக்கணக்கான
மக்கள்
ஆர்ப்பாட்டம்
நடத்தினர்
என்று
ராய்ட்டர்ஸ்
தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட
7,000 பேர்
சூயசில்
ஆர்ப்பரித்து
ஒரு
புதிய
அரசியலமைப்பு,
ஷபிக்
அகற்றப்படுதல்,
உள்ளூர்
கவர்னரின்
இராஜிநாமா
ஆகியவற்றைக்
கோரினர்.
சூயஸ்
கால்வாய்
மேற்குக்
கரையில்,
வடகிழக்கு
எகிப்திலுள்ள
இஸ்மைலியாவில்
வயர்
சர்விஸ்
கொடுத்துள்ள
தகவலின்படி
“10,000க்கும்
மேற்பட்ட
மக்கள்
ஆர்ப்பரித்தனர்.
புரட்சி
இன்னும்
முடியவில்லை,
அதன்
அனைத்து
இலக்குகளையும்
அது
இன்னமும்
சாதிக்கவில்லை
என்று
கூறினர்.”
எகிப்தியத்
தொழிலாளர்கள்
ஏராளமானவர்கள்
ஊதியங்கள்,
கௌரவ
வாழ்க்கத்
தரங்கள்,
ஊழலுக்கு
முற்றுப்புள்ளி,
பணியிடத்தில்
ஜனநாயகம்
ஆகியவற்றிற்காகத்
தங்கள்
தாக்குதல்களைத்
தொடர்கின்றனர்.
Al-Masry Al-Youm
(எகிப்திய
ஆன்லைன்
நாளேடு)
தன்
ஆங்கிலப்பதிப்பில்
வெள்ளியன்று
குறைந்தபட்சம்
ஒரு
டஜன்
புதிய
வேலைநிறுத்தங்கள்அல்லது
எதிர்ப்புக்களைப்
பற்றிக்
குறிப்பிட்டுள்ளது.
வடக்கு
எகிப்தில்
பஹரியா
ஓயேசிசில்
வியாழனன்று
நூற்றுக்கணக்கான
சுரங்கத்
தொழிலாளர்கள்
ஒரு
உள்ளிருப்புப்
போராட்டத்தை
“மட்டமான
வாழ்க்கை
நிலைமைகளை”
எதிர்த்து
நடத்தினர்.
கிட்டத்தட்ட
மத
அறக்கட்டளை
அமைச்சரகத்தின்
50 தொழிலாளர்கள்
இதற்கிடையில்
ஊதிய
உயர்வுகளைக்
கோரினர்,
தற்காலிக
விவசாயத்துறை
மேற்பார்வையாளர்கள்
நிரந்தரப்
பணியை
நாடி
எதிர்ப்புத்
தெரிவித்தனர்.
Al-Masry Al-Youm
போர்ட்
சையத்
பகுதியில்
நடந்த
ஆர்ப்பாட்டம்
ஒன்றைப்
பற்றியும்
குறிப்பிட்டுள்ளது.
“ரட்வான்
கிராமத்தில்
நூற்றுக்கணக்கானவர்கள்
கல்லூரிப்
பட்டதாரிகளுக்கு
(முபாரக்கின்
இளம்
பட்டதாரிகள்
திட்டத்தின்கீழ்)
ஒதுக்கப்பட்ட
நிலங்களில்
அரசாங்க
அனுமதி
இல்லாமல்
ஏற்பட்டுள்ள
விதி
மீறல்கள்
பற்றி
விசாரணையைக்
கோரினர்
“[நைல்
மையத்தில்
விவசாயப்
பகுதியில்,
கிட்டத்தட்ட
120 மைல்
கெய்ரோவிற்குத்
தெற்கே]
பெனி
சூயப்பில்
1,000 புதிய
பட்டதாரிகள்,
தொழிலாளர்கள்
மற்றும்
ஆசிரியர்கள்
இரண்டாவது
நாள்
தொடர்ச்சியாக
கல்வி
அமைச்சரகக்
கட்டிடத்திற்கு
எதிரே
கவர்னர்
அலுவலகங்களில்
எதிர்ப்புக்களை
நடத்தினர்.
உண்மையான,
நிரந்தர
வேலைவாய்ப்புக்களை
அவர்கள்
நாடினர்.
கட்டிடத்திற்குள்
ஆவேசமாக
நுழைய
முற்பட்ட
அவர்களைப்
பாதுகாப்புப்
படையினர்
தடுத்து
நிறுத்திவிட்டனர்…அவர்கள்
தங்கள்
கோரிக்கைகள்
நிறைவேற்றப்படாவிட்டால்
ஆசிரியர்கள்
சங்கத்திற்குள்
நுழைவோம்,
கல்வி
அமைச்சரகக்
கட்டிடத்தை
எரிப்போம்
என்று
அச்சுறுத்தினர்”
சூயசில்
கிட்டத்தட்ட
1,200 எஃகுத்
தொழிலாளர்கள்
அரசாங்க
நிறுவனங்கள்
இன்னும்
தங்கள்
பிரச்சினையில்
தலையிடவில்லை,
கோரிக்கைகளை
நிறைவேற்றவில்லை
என்று
குறைகூறி,
ஒரு
முக்கிய
சாலையில்
தடுப்புக்களை
ஏற்படுத்தினர்.
எகிப்து
அமிரோன்
எஃகு
குழாய்த்
தயாரிப்பு
நிறுவனத்தின்
தொழிலாளர்கள்
தங்கள்
நிறுவனத்
தலைமையகத்தில்
ஊதியம்,
பணி
நிலைமைகள்
குறித்து
உள்ளிருப்புப்
போராட்டத்தை
நடத்துகின்றனர்.
“கபிர்
அல்-ஷேக்கில்
தேசுக்
நகர
பஸ்
ஓட்டுனர்கள்
தங்கள் காப்பீட்டுக்
கட்டணம்
அதிகரிப்பை
எதிர்த்து
வேலைநிறுத்தம்
செய்தனர்.”
அஸ்வானில்
எட்பு
அல்நஸர்
சுரங்க
நிறுவனத்தில்
கிட்டத்தட்ட
700 தொழிலாளர்கள்
தங்கள்
உத்தியோகப்பூர்வ
சங்கத்திடம்
எதிர்ப்பை
அளித்து,
தொழிலாளர்கள்
அடங்கிய
ஒரு
புதிய
தற்காலிக
நிர்வாகக்
குழு
அமைக்கப்பட
வேண்டும்,
“இருக்கும்
தொழிற்சங்கத்தின்
மீது
தாங்கள்
“கொண்டுள்ள
நம்பிக்கையைத்
திரும்பப்
பெறுகிறோம்”
என்று
கோரினர்.
(மற்றொரு
எகிப்திய
செய்தித்தாளான)
அஹ்ரம்
பெப்ருவரி
25ம்
தேதி
ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்
நடத்தும்
மற்றும்
பிற
எதிர்ப்புக்கள்
முபாரக்
வீழ்ச்சிக்குப்
பிறகு
நடந்ததைக்
குறிப்பிட்டுள்ளது.
“ஒரே
நாளில்
கெய்ரோ
நகர
மையத்தில்
சாலையில்
செல்பவர்கள்
அரசாங்கத்
தலைமை
வக்கீல்
அலுவலகத்திற்கு
முன்
NileEngerprise for Cotton
தொழிலாளர்கள்
அமர்ந்து போராட்டம்
நடத்துவது,
ஆசிரியர்
குழு
ஒன்று
கல்வி
அமைச்சரகத்திற்கு
முன்பு
ஆர்ப்பரித்தல்,
சமீபத்தில்
தனியார்மயமாக்கப்பட்ட
ஒமர்
எவெண்டித்
தொடர்
நிறுவனங்களில்
ஊழியர்கள்
நிறுவனத்
தலைமையகத்திற்கு
முன்
எதிர்ப்புத்
தெரிவித்தல்
ஆகியவற்றைக்
காண
முடியும்”
என்று
அது
எழுதியுள்ளது.
Haaretz
அதே
தினத்தில்,
“எகிப்து
முழுவதும்
ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்
ஊதிய
அதிகரிப்பு,
ஊழல்
நிர்வாகத்தை
அகற்றுதல்
என்னும்
தங்கள்
கோரிக்கைகளை
வலியுறுத்த
வேலைநிறுத்தங்களைத்
தொடர்ந்தனர்...
மேற்பரப்பிற்குக்
கீழ்
சீற்றம்
கொதிக்கிறது,
இது
எதிர்பார்க்கப்படும்
மாற்றங்கள்
செய்யப்பட்டு
கோரிக்கைகள்
நிறைவேற்றப்படாவிட்டால்
வெடிக்கும்
அச்சுறுத்தலைக்
கொண்டுள்ளது”
என
எழுதியுள்ளது.
சூயஸ்
வளைகுடாவில்
ஒரு
ஓட்டுத் தொழிற்சாலை
பற்றி
இஸ்ரேலிய
நாளேடு
குறிப்பிட்டுள்ளது.
இதன்
சொந்தக்காரர்
மஹ்மத்
அபு
எல்
எனின்,
“முபாரக்கின்
தேசிய
ஜனநாயகக்
கட்சியில்
ஒரு
மூத்த
உறுப்பினர்”
அவருடைய
ஐந்து
ஆலைகளிலுமுள்ள
9,000 தொழிலாளர்கள்
தங்கள்
பல
ஊதியக்
கோரிக்கைகள்
பற்றி
விவாதிக்க
மறுத்துவிட்டதையொட்டி
எதிர்ப்பைத்
தொடங்கியுள்ளனர்.
எகிப்திய
நாளேடு
அல்-ஷுருக்
கூற்றுப்படி,
உரிமையாளர்
எதிர்ப்புக்களை
நசுக்க
ஆயுதமேந்திய
குண்டர்கள்
குழுக்களை
அனுப்பி
வைத்தார்.
Haaretz,
“கிட்டத்தட்ட
1,800 தொழிலாளர்கள்
நாட்டின்
தெற்குப்
பகுதியிலுள்ள
ஒரு
விவசாயப்
பதனிடு
நிலையத்தில்
தங்கள்
கோரிக்கையான
நியாயமான
ஊதியங்கள்
தீர்க்கப்படவில்லை
என்றால்
நிலையத்தை
தீயிட்டுக்
கொளுத்துவதாக
அச்சுறுத்தியுள்ளனர்”
என்றும்
தெரிவித்துள்ளது.
யேமன்
எதிர்ப்புக்கள்
யேமனின்
தலைநகரில்
அணிவகுத்த
பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
“ஆட்சி
வீழ்ச்சி
அடையவேண்டும்
என்று
மக்கள்
கோருகிறார்கள்”
என்று
கோஷம்
இட்டனர்.
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னல்
நிருபர்,
“மாணவர்கள்
பல
வாரங்களாக
முகாமிட்டிருக்கும்
சானா
பல்கலைக்கழகத்திற்கு
வெளியே,
தெருக்களில்
மக்கள்
நிறைந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில்
வெள்ளி
பிரார்த்தனைக்கு
30,000க்கும்
மேற்பட்டவர்கள்
தங்கள்
ஆதரவைத்
தெரிவிப்பதற்கும்
அரசாங்க
விசுவாசிகளால்
செவ்வாய்
இரவு
கொல்லப்பட்ட
இரு
எதிர்ப்பாளர்களுக்குத்
துக்கம்
தெரிவிக்கவும்
கூடினர்….உள்ளுர்
செய்தி
ஊடகம்
கிட்டத்தட்ட
50,000 முதல்
60,000 வரையிலான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
இருந்தனர்
என்று
குறிப்பிட்டுள்ளது.”
எதிர்ப்புக்களில்
பல
பெண்களும்
கலந்து
கொண்டு,
“வெளியேறுக!
வெளியேறுக!”,
“உங்கள்
செயல்களை
ஆண்டவன்
கண்காணிக்கிறார்,
அப்துல்லாவே”
என்ற
கோஷங்களை
எழுப்பினர்.
இது
யேமனின்
நீண்ட
கால
ஜனாதிபதியான
அலி
அப்துல்லா
சலெயேக்
குறிப்பது
ஆகும்.
பொலிஸ்,
இராணுவத்தை
ஏராளமான
எண்ணிக்கையில்
அரசாங்கம்
அணிதிரட்டியது.
தங்கள்
கவலை
அரசாங்க
எதிர்ப்பாளர்களும்
சலே
ஆதரவு
எதிர்ப்பாளர்களுக்கும்
இடையே
கலகங்களைத்
தவிர்த்தல்
என்று
அதிகாரிகள்
கூறுகின்றனர்.
பிந்தையவர்கள்
எண்ணிக்கையில்
குறைந்திருந்தாலும்,
சலே
எதிர்ப்புச்
சக்திகள்
மீது
வன்முறைத்
தாக்குதல்
நடத்த
கடந்த
10 நாட்களாக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டஜன்
கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
தாக்குதல்களில்
இறந்துவிட்டனர்.
சானாவில்
மகத்தான
எதிர்ப்பு
அணியில்
பேசியவர்களில்
ஒருவரான
தவக்குல்
கெர்மல்,
சலேயை
நோக்கி
அறிவித்தார்:
“உங்களிடம்
இருந்து
ஜனாதிபதி
அரண்மனையை
நாங்கள்
எடுத்துக்
கொள்ளப்
போகிறோம்.”
வெள்ளி
எதிர்ப்புக்களை
அமைப்பாளர்கள்
ஆட்சியின்
“முடிவின்
துவக்கம்”
என்று
குறித்தனர்.
நியூ
யோர்க்
டைம்ஸ்
,
டைசில்
“கிட்டத்தட்ட
100,000
ஆர்ப்பாட்டக்காரர்கள்
வெள்ளிப்
பிரார்த்தனையில்
ஐக்கியத்துடன்
உள்ளூர்
மதகுரு
நடைபாதைகளில்
உட்கார்ந்திருந்த
ஏராளமானவர்களுக்கு
உரையாற்றினார்”
என்று
குறிப்பிட்டுள்ளது.
இக்கூட்டம்
“பின்னர்
துனிசியப்
புரட்சி
தொடங்கியதில்
இருந்து
“மக்கள்
ஆட்சி
வீழ்ச்சியை
விரும்புகின்றனர்”
என்ற
கோஷத்தை
எடுத்து
முழக்கமிட்டது.”
தெற்கு
யேமனி
துறைமுகமான
ஏடெனில்
குறைந்தபட்சம்
10,000 பேர்
கொண்ட
ஆர்ப்பாட்டம்
ஒன்று
நடைபெற்றது.
இங்கு
பாதுகாப்புப்
படையினர்
கண்ணீர்ப்புகை
குண்டுகளைப்
பயன்படுத்தி
ஆகாயத்தை
நோக்கித்
தோட்டாக்களைச்
சுட்டும்
கூட்டத்தைக்
கலைத்தனர்.
மன்சௌர்
மாவட்டத்தில்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
நகரவைக்
கட்டிடத்தில்
நுழைந்து
அரசாங்க
வாகனம்
ஒன்றிற்கும்
நெருப்பு
வைத்தனர்.
வியாழன்
அன்று
யேமன்
போஸ்ட்
நாட்டின்
ஒவ்வொரு
மாகாணத்திலும்
அரசாங்க
எதிர்ப்புக்கள்
தொடர்வதைப்பற்றி
விளக்கமாக
எழுதியுள்ளது.
சானாவிற்கு
வெளியே
அதிக
அதிகாரத்தைச்
செலுத்தாத
சலே
பெரும்
திகைப்புடன்
முதலாளித்துவ
எதிர்ப்புக்
கட்சிகளுடன்
தந்திரோபாயத்தில்
ஈடுபட்டு
தன்னை
அதிகாரத்தில்
தக்க
வைக்கும்
முயற்சிகளில்
ஈடுபட்டுள்ளார்.
இம்முயற்சியில்
அவருக்கு
ஒபாமா
நிர்வாகத்தின்
முழு
ஆதரவும்
உள்ளது.
அது
இந்த
ஆட்சியைத்
தன்னுடைய
“பயங்கரவாதத்தின்
மீதான
போரில்”
முக்கிய
நட்பாகக்
கருதுகிறது.
யேமனின்
ஜனாதிபதி
வியாழனன்று
எதிர்ப்புக்காரர்களுடன்
விவாதம்
நடத்த
ஒரு
குழு
அமைப்பதாக
அறிவித்தார்.
சலே
தன்
பிரதம
மந்திரி
ஐவர்
குழு
ஒன்றிற்குத்
தலைமை
வகிக்க
வேண்டும்,
“அது
ஆக்கபூர்வமான,
வெளிப்படையான
உரையாடலை
எதிர்ப்பாளர்கள்
இளம்
சகோதரர்கள்
உட்பட
அனைவருடனும்
கொள்ள
வேண்டும்
…
அவர்களது
நிலைமைகள்,
எதிர்பார்ப்புக்கள்
பற்றிக்
கேட்க
வேண்டும்”
என்று
உத்தரவிட்டுள்ளதாக
நாட்டின்
உத்தியோகப்பூர்வ
செய்தி நிறுவனமான
SABA விளக்கியுள்ளது. |