செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
மிலாடிக் ஹேக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார்
By
Chris Marsden and Markus Salzmann
1 June 2011
Use this
version to print | Send
feedback
1992-95
உள்நாட்டுப் போரின் போது
Republica Srpska
இல்
முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவத்தின் தலைமை அதிகாரியாகயிருந்த ராட்கோ மிலாடிக்
செவ்வாயன்று நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் ஹேக்கில் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு அங்கு உட்படுத்தப்படுவார்.
69
வயதான மிலாடிக் மே
26ம்
திகதி சேர்பியப் பாதுகாப்புப் படைகளால் ஜனாதிபதி போரிஸ் டாடிக்கின் ஜனநாயகக் கட்சி
அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இனப் படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை அவர் எதிர்கொள்கிறார்.
இவை முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்
(ICTY)
ஜூலை
24, 1995ல்
அவர் மீது சுமத்தப்பட்டன.
சிரெப்ரெனிகாவில்
8,000
முஸ்லிம் ஆண்களையும் சிறுவர்களையும் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டதற்கு
தூண்டிவிட்டதாகவும்,
சரஜேவோ முற்றுகைக்குத் தலைமை தாங்கியதற்கும் பிற போர்க் குற்றங்களுக்காவும் அவர்
மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மே
29ம்
திகதி,
மிலாடிக்கிற்கு ஆதரவாக சேர்பிய பாராளுமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் இது தலைநகர் முழுவதும் கலகமாக வெடித்தது.
இரண்டு
நாட்கள் முன்னதாக
ICTY
இவ்வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய பிரிவை நியமித்தது.
இது ஒரு விசாரணையை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்பதை எதிர்பார்ப்பதற்கான ஒரு
காரணமும் இல்லாமலுள்ளது.
2001ல்
முன்னாள் சேர்பிய,
யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடோன் மிலோசெவிக் கைது செய்யப்பட்ட பின்னர் மிலாடிக்
தலைமறைவாகி இருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியவைச் சேர்க்க அனுமதி கொடுப்பதற்கு இவர் கைது
செய்யப்படுவது ஒரு முன்னிபந்தனையாக வைக்கப்பட்டது.
பல ஆண்டுகள் ஒரு கைதுப் பிடி ஆணையை இவர் எதிர்கொண்டிருந்தார்.
தவிர இவரைப் பிடித்தால்
5
மில்லியன் யூரோக்கள் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பரிசுத் தொகையை கடந்த ஆண்டு கடைசியில்
10
மில்லியன் யூரோக்களாக சேர்பியா உயர்த்தியிருந்தது.
ஜூலை
21, 2008ல்
கைது செய்யப்பட்ட
Republica Srpska
வின்
முதல் ஜனாதிபதி ராடோவன் கரட்ஜிக்குடன் மிலாடிக்கும் தேடப்பட்டு வந்தார்.
ராடோவன் இப்பொழுது
ICTY
காவலில்,
விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.
ICTY
ன்
அப்பொழுதைய வக்கீல் கார்லா டெல் போன்டே
1998ல்
இருந்தே சேர்பிய அதிகாரிகளால் பிடிபடக்கூடியவராக இருந்தார் என்று கூறினார்.
மே
1, 2006
க்குள்
இவர் பிடிக்கப்படவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சேர்பியா நுழைவது
ஆபத்திற்கு உட்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால்
மிலாடிக்கை சேர்பியா கைதுசெய்வதற்குக் காட்டிய தயக்கத்தை தவிர,
அமெரிக்கா,
பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் அவர் கைது செய்வதற்கு எதிராகத் திரைக்குப் பின்னால்
எதிர்ப்புக்கள் இருந்தன.
இது கரட்ஜிக் கைது செய்யப்பட்டதற்குப் பின்னால் இது வெளிப்பட்டது.
கரட்ஜிக்
11
குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.
அவற்றுள் சரஜீவோ முற்றுகை மற்றும் ஸ்ரெப்ரெனிகா படுகொலையும் அடங்கும்
—
இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப் பெரிய வெகுஜனப் படுகொலை
ஆகும்.
நவம்பர்
1995
டேய்ட்டன் ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து கரட்ஜிக் தலைமறைவானார்.
அந்த ஒப்பந்தம் முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசை இரு இனங்களை அடிப்படையாகக் கொண்டு
நாடுகளாக பிரிக்கப்பட்டது
—
அதாவது
Republica Srpska (RS)
மற்றும்
பொஸ்னியா-ஹெர்ஸகோவினா
கூட்டாட்சி
(முஸ்லிம்-குரோட்
கூட்டு)
என.
கைப்பற்றப்பட்ட பின்னர் அவருடைய வக்கீல்கள் அவருக்கு அமெரிக்க பாதுகாப்பு கொடுக்க
முன்வந்தது,
அதற்கு ஈடாக அவர் பதவியிலிருந்து விலகி பொது வாழ்வில் பங்கு பெறக்கூடாது எனக்
கூறியது.
இக்கூற்று உண்மைதான் என்பதை டெல் போன்டே ஒப்புக் கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தோன்றியபோது,
டேய்ட்டன் ஒப்பந்தத்தைத் தயாரித்தவரும்,
முன்னாள் அமெரிக்க தூதருமான ரிச்சார்ட் ஹோல்ப்ரூக்குடன் கொண்ட ஒப்பந்தப்படி போர்க்
குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக கர்டஜிக் கூறினார்.
“எங்கள்
உடன்பாட்டை அடுத்து,
[ஜனாதிபதி
பில் கிளின்டனின் கீழ் முன்னாள் வெளிவிவகார செயலராக இருந்த]
மாடெலீன் ஆல்ப்ரைட்
RS
ன்
ஜனாதிபதியான பில்யனா ப்ளாஸ்விக்கிடம் நான் ரஷ்யா,
கிரேக்கம் அல்லது சேர்பியாவிற்கு செல்ல வேண்டும்,
அங்கு தனியார் மருத்துவமனையை நடத்த வேண்டும் என்று கூறினார்”
என்று அவர் தெரிவித்தார்.
டெல்
போன்டேயின் செய்தித் தொடர்பாளர் பிளாரன்ஸ் ஹார்ட்மன்,
“தலைமறைவானவர்களின்
இருப்பிடங்களை பற்றிய தகவல்கள் நன்கு தெரிந்திருந்தன.
ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவதை அமெரிக்கா,
பிரிட்டன் அல்லது பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்று எப்படியும்
தடுத்துவிடும் என்றுதான் எப்பொழுதும் இருந்தது”
என்றார்.
“சில
சமயம் கைது நடவடிக்கைகள்
[முன்னாள்
பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக்]
சிராக்கினால் தனிப்பட்ட முறையில் தடுத்து நிறுத்தப்பட்டது,
வேறு சமயங்களில் கிளின்டனால் நிறுத்தப்பட்டது”
என்றும் அவர் கூறினார்.
ஒரு
பேட்டியில்,
“மேற்கத்தைய
சக்திகள் கரட்ஜிக்,
மற்றும் மிலாடிக் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்ற காரணங்கள்
….
அவர்கள்
தாங்கள் செய்த குற்றங்களை சர்வதேச சமூகத்தின் மீது சுமத்தக்கூடும் என்பதால்தான்,
ஸ்ரெப்ரெனிகா பகுதியை எடுத்துக் கொள்ள பச்சை அல்லது ஆரஞ்சு வண்ண ஒப்புதல்
கொடுக்கப்பட்டிருந்தன என்று அவர்கள் கூறுவர்”
என்று ஹார்ட்மன் கூறியிருந்தார்.
“வெகுஜனப்
படுகொலைகள் நடப்பதற்கான சூழ்நிலையை மேற்கத்தைய சக்திகள் ஏற்படுத்தின”
என்றும் அவர் கூறினார்.
ICTY
தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்தே,
“போர்
மற்றும் இனப் படுகொலைக்கான தங்கள் விடையிறுப்பைப் பெரிய சக்திகள் நியாயப்படுத்தி
நீதியிலிருந்து ஒதுங்குவதற்கான முயற்சி இருந்தது….
அவை தொடர்ந்து யார் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தவில்லை,
பின்னர் குறிப்பிட்ட சான்றுகளை மேலும் அளித்தன,
அதன் பின் அவற்றையும் கூட நீதிமன்றம் உண்மையைக் கண்டுபிடித்தால் தங்களுக்கு தீமை
வருமா இல்லையா என்பதைப் பொறுத்து மாற்றின.”
செப்டம்பர்
14, 2009
ல்
ஹார்ட்மன்
ICTY
யினால்
நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டனை பெற்றார்.
இதற்குக் காரணம்
ICTY
இரகசியமாக அளித்திருந்த இரு தீர்ப்புக்களைப் பற்றி அவர் வெளிப்படுத்தியதுதான்.
அத்தீர்ப்புக்கள் சான்றுகள் மறைக்கப்பட்டதற்கு ஒப்புதல் கொடுத்திருந்தன.
அவை ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் சேர்பியாவிற்கு நேரடித் தொடர்பு என்ற குற்றச்சாட்டை
நீக்கும் முடிவுடன் பங்கு பெற்றிருந்தன.
கரட்ஜிக் மூன்று ஆண்டுகளுக்கு பின்னும் பொது விசாரணையை எதிர்கொள்ளவில்லை.
ஐ.நா.
வின் நிலையமான
Scheveningen
ல் அவர்
காவலில் உள்ளார்.
இது உலகிலேயே மிக ஆடம்பரமான சிறை என்று விவரிக்கப்படுகிறது—கைதிகள்
ஒற்றை அறையில்,
ஷவர் பாத்,
கழிப்பறை,
வாஷ் பேசின்,
ஒரு மேசை
,
நூலகம் மற்றும் துணைக்கோள் மூலம் தொலைக்காட்சி,
விளையாடும் அறைகளுக்குச் செல்லும் வசதி மற்றும் தம்பதிகளின் உறவுகளுக்கான தனி அறை
ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சக்திகள் மிலாடிக் மற்றும் கரட்ஜிக்கைப்
பாதுகாப்பதற்கு தொடர்பு கொண்டுள்ளதற்கு நேரடிச் சான்றுகள் இல்லாவிடினும்,
பொஸ்னியப் போரின் போது இக்குற்றங்களுக்கான அவற்றின் அரசியல் பொறுப்பு பற்றி
சந்தேகத்திற்கு இடமில்லை.
ஜேர்மனியுடன் அமெரிக்காவும் பொஸ்னியா மற்றும் யூகோஸ்லாவியா முழுவதும்
பிரிக்கப்படுவதற்கான செயற்பாடுகளில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.
இது அவை தேசியவாத,
வகுப்புவாத அரசியல்வாதிகளான குரோஷிய ஜனாதிபதி
Franjo Tudjman
மற்றும்
பொஸ்னிய முஸ்லிம் தலைவர்
Alija Izetbegovic
ஆகியோருடைய வளர்ச்சியூடாக அமைந்தது.
இந்த நபர்கள் மிலாடிக் மற்றும் கரட்ஜிக் போலவே பொஸ்னியாவை உள்நாட்டுப் போரில்
தள்ளியதில் பொறுப்பு உடையவர்கள் ஆவர்.
1980
களின் கடைசிப் பகுதி,
1990களின்
தொடக்கப்பகுதிகளில் யூகோஸ்லாவியா உடைக்கப்பட்டது மேற்கத்தையச் சக்திகள் ஆணையிட்ட
கொள்கைகளின் விளைவு ஆகும்.
இவை சர்வதேச நாணய நிதியம்
(IMF)
மற்றும்
உலக வங்கியின் மூலம் சுமத்தப்பட்டன.
மேற்கத்தைய சக்திகளின் நோக்கம் அரச கட்டுப்பாடு கொண்டுள்ள பொருளாதாரத்தை தகர்த்து
யூகோஸ்லாவியா மீது தங்கள் நேரடி ஆதிக்கத்தை மீட்பது ஆகும்.
பெரிதும் உயர்ந்த பணவீக்கம் மற்றும் பெரும் வேலை இழப்புக்கள் எங்கும்
வேலைநிறுத்தங்கள்,
வெகுஜன எதிர்ப்புக்கள் ஆகியவற்வறைத் தூண்டின.
இதற்கு முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர் தேசியவாத பிளவுகளைத் தூண்டிவிட்டு
மேற்கத்தைய சக்திகளுடைய ஆதரவிற்கும் போட்டியிட்டனர்.
மூன்று
இனங்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள்
1990களிலேயே
பொஸ்னியாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின
—
சேர்பிய ஜனநாயகக் கட்சி,
முஸ்லிம் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி
(SDA)
மற்றும் குரோஷிய ஜனநாயகச் சமூகம்
(HDZ)
என்பவையே அவைகள்.
சோவியத் ஒன்றிய சரிவு மற்றும்
1991ல்
ஜேர்மனி மறு ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இனப் பதட்டங்கள் வெடித்தன.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் முதலில் ஸ்லோவேனியா பிரிந்து போகவும்,
பின்னர் குரோஷியா பிரியவும் முயற்சி எடுத்தது.
இது சோவியத்தின் செல்வாக்கை எதிர்க்கும் வழிவகையாகவும் தன் நலன்களை
இப்பிராந்தியத்தில் உயர்த்திக் கொள்ளும் முயற்சியாகவும் இருந்தது.
தான்தான் மத்தியதரைக்கடல் பகுதியில் சோவியத் செல்வாக்கு நுழையாமல் தடுத்து நிறுத்த
முடியும் என்பதைக் காண்பிக்கும் வகையிலும் இருந்தது.
யூகோஸ்லாவியா உடைவிற்கு தன் முந்தைய எதிர்ப்பை அமெரிக்கா கைவிட்டது.
இதற்குக் காரணம் ஜேர்மனி மேலாதிக்கம் பெற முயல்வதற்கு சவால் விட வேண்டும்
என்பதாகும்.
சேர்பிய அரசாங்கம் ஒரு ஒற்றுமையான ஒன்றுபட்ட அரசைத் தக்க வைத்துக்கொள்ளும்
போக்கிற்கு எதிராக பொஸ்னியா,
பின்னர் கொசோவோ சுதந்திரத்திற்கு வாஷிங்டன் முக்கிய ஆதரவைக் கொடுக்க முற்பட்டது.
இதன் விளைவு அப்பிராந்தியத்தில் இனவழியில் பெரும் பிளவைக் கொண்டிருந்த அரசாக
பொஸ்னியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது ஆகும்.
சேர்பியா இனச் சுத்திகரிப்பை நடத்தியபோது அதை எதிர்த்தது,
ஆனால் அதேபோன்ற குற்றங்கள் குரோஷியாவால் செய்யப்பட்டதற்கு ஆதரவு கொடுத்தது.
மிகவும் இழிந்த முறையில் வெள்ளை மாளிகை
1995ல்
Operation Storm
என்பதை
ஆதரித்தது.
இது
200,000
சேர்பியர்களை க்ராஜினாவிலிருந்து விரட்டியடித்த நடவடிக்கை ஆகும்.
ஆயிரக்கணக்கான விமானத் தாக்குதல்கள் அமெரிக்க விமானப் படையால் குரோஷிய,
பொஸ்னிய முஸ்லிம் சக்திகளுக்கு உதவும் வகையில் நடத்தப்பட்டன.
உள்நாட்டுப்போரில் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மிகப் பெரியளவில் செய்ய இது
உதவியது.
ஸ்ரெப்ரெனிகா படுகொலையின் தோற்றங்கள் ஐ.நா.
இதை ஒரு
“பாதுகாப்புப்
பகுதி”
என்று குறித்ததால் ஏற்பட்டது.
இதையொட்டி அது
ABiH
எனப்பட்ட பொஸ்னிய முஸ்லிம் இராணுவத்தின் தளமாக வர அனுமதிக்கப்பட்டது.
அது சேர்பிய படைகளைத் தாக்கியது.
மிலாடிக்கின் படைகள் ஜூலை
11ம்
திகதி நகரத்திற்குள் நுழைந்து ருஷ்லாவிற்கு தப்பிச் செல்ல முயன்றவர்களை படுகொலை
செய்தது.
அங்கு படைகளுக்கும் குடிமக்களுக்கும் இடையே வேறுபாடு காட்டப்படவில்லை.
இப்பொழுது மிலாடிக் கைதிற்கு ஈடாக அளிக்கப்படும்
“பரிசு
அல்லது வெகுமதி”—
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்ப நாடு என்ற முறையில்
—
சேர்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கசப்பான மாத்திரை போல் ஆகும்.
EU
மற்றும்
IMF
பிரதிநிதிகள் முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசிற்கு மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது
தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டால்தான் நிதி உதவி கிடைக்கும் என்பதைத்
தெளிவுபடுத்தியுள்ளனர்.
சேர்பிய
பொருளாதார பிராந்திய வளர்ச்சித் துறையின் மந்திரி
Verica Kalanovic
மற்றும்
IMF
குழுவின் தலைவர்
Albert Jaegar
இருவரும் சேர்பிய அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை தொடரும் என்றும்,
அவை நாட்டின் கல்வி,
ஓய்வூதிய முறைகளை இலக்கு கொள்ளும்,
பொதுத்துறை தனியார் மயமாக்கப்படுதல் விரைவுபடுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர்
Manuel Barroso
மே
19
ம்
திகதி பெல்கிரேடில் அரசாங்கம் இன்னும் கூடுதலான முயற்சிகள் எடுத்து நிதியக்
கொள்கையை வலுப்படுத்த வேண்டும்,
முதலீட்டிற்கான சூழ்நிலையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்று கூறினார்.
சேர்பியா,
2009ல்
IMF
இடமிருந்து
3
பில்லியன் யூரோக்கள் கடன் வாங்குவதற்கு வெளிநாட்டு வங்கிகளிடம் தான் பெற்றுள்ள
கடன்களை சீரமைக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது.
ஊதியங்கள் ஒரே நிலையில் முடக்கப்பட்டு வரவு-செலவுத்
திட்டப் பற்றாக்குறை
4.8
சதவிகிதத்திலிருந்து
4
சதவிகிதம் எனக் குறைக்க பொதுநலச் செலவுகளை அரசாங்கம் கடுமையாகக் குறைத்துவிட்டது.
பொதுத்துறையின் அளவு
2010ல்
10
சதவிகிதம் குறைக்கப்பட்டது.
ஆனால் பொது நிறுவனங்கள் இன்னமும் மொத்தத் தொழிலாளர் தொகுப்பில்
26
சதவிகிதத்திற்கு வேலை கொடுக்கின்றன.
தனியார்மயம் அதிகமாக்கப்படல் சமூகத்தில் பேரழிவை ஏற்படுத்தும்.
குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றிற்கு
194
டொலர்
என்பதற்குச் சமமாகத்தான் உள்ளது.
சராசரி மாத நிகர வருமானம்
422
டொலர்
என்று உள்ளது.
வேலையின்மை நலன்கள் இப்போது சராசரி கடைசி ஊதியத்தில்
50
முதல்
60
சதவிகிதம் என்று உள்ளன.
இவை வயது,
வேலையிலிருந்த காலத்தையொட்டி ஒரு மாத ஊதியம் என்று அதிகப்பட்சம்
24
மாதங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.
பொதுநலத் திட்டங்களை நம்பியிருக்கும் ஒற்றை நபர்
60
யூரோக்களைப் பெறுவார்.
நான்கு பேர் உள்ள குடும்பம்
110
யூரோக்களைப் பெறும்.
வேலைநிறுத்தங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
மார்ச் இறுதியில்
10,000
பொதுத்துறை ஊழியர்களுக்கும் மேலானவர்கள் குறைந்த ஊதியம்,
இழிவான பணி நிலைகள் பற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மருத்துவர்கள்,
பொலிஸ் அதிகாரிகள் இன்னும் மற்ற ஊழியர்களும் ஆசிரியர்கள் நடத்திய எதிர்ப்பில்
சேர்ந்து கொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் ஜனவரி துவக்கத்திலிருந்து ஊதிய உயர்விற்குப் போராடுகின்றனர்.
இறுதி ஆண்டிலுள்ள மாணவர்களும் ஆசிரியர்களின் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுத்தனர். |