WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
ஜேர்மனிய பசுமைக் கட்சி கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுடன் கூட்டணிக்கு முற்படுகிறது
By
Dietmar Henning
25 June 2011
வலதுசாரி
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடன்
(CDU) நெருக்கமான
ஒத்துழைப்பு என்னும் திசையில் ஓர் அரசியல் திருப்புமுனையைக் குறிக்கும் வகையில்
சனிக்கிழமை அன்று நடக்க உள்ள பசுமைக் கட்சியின் சிறப்பு மாநாடு செயல்பட முற்படும்.
அணுசக்தி பாவனையை முடிவிற்கு கொண்டுவரும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய
சான்சிலர் அங்கெலா மேர்க்கெலின் முன்மொழிவுற்கு ஆதரவழிப்பது இவ்வாறான கூட்டிற்கு
அரசியல் வாகனமாக பயன்படுத்தப்படும்
பசுமைக்
கட்சியின் தலைமை ஏற்கனவே மேர்க்கெலின் அணுசக்தியில் இருந்து வெளியேறும்
கொள்கைகளுக்கு ஆதரவாகத் தன் உறுப்பினர்களை அணிதிரட்டியுள்ளது.
சனிக்கிழமை நடக்க
இருக்கும் மாநாட்டில் முன்வைக்கப்பட இருக்கும் தீர்மானம் ஒன்றில்,
கட்சித் தலைமை
அச்சட்டத்திற்கு ஆதரவு தருமாறு அதன் பாராளுமன்றப் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்ளும்.
பாராளுமன்றப்
பிரிவுத் தலைவர்களான றெனாட்ட கூனாஸ்ட்,
யூர்கென் ரிட்டீன்,
மற்றும் கட்சி இணைத்
தலைவர்கள் செம் ஒஸ்டிமிர்,
கிளவ்டியா ரோத்
ஆகியோரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
றெனாட்ட
கூனாஸ்ட் கூறினார்:
“பசுமைவாதிகள் ஏன்
ஒதுங்கி இருக்க வேண்டும்?”.
வடக்கு ரைன்
வெஸ்ட்பாலியாவின் பசுமைக் கட்சித் தலைவர் இன்னும் ஒரு படி மேலே சென்று,
“இது ஒரு பசுமைக்
கட்சியின் [அணுசக்தியில்
இருந்து]
வெளியேற்ற திட்டம்.”
என்றார்.
கட்சி
முன்னதாக நிர்ணயித்திருந்த
2017க்குள் அணுசக்தி
விசையைக் கைவிட்டுவிட வேண்டும் என்ற இலக்கிற்கு பசுமைக் கட்சிக்குள் சில குரல்கள்
எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
சில சுற்றுச் சூழல்
குழுக்கள் பசுமைவாதிகளை மேர்க்கெல் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு
தரக்கூடாது என்று கோரியுள்ளன.
ஆனால்,
கட்சித் தலைமையின்
விருப்பம்தான் செயல்படுத்தப்படும்.
“இம்முறை நாம்
பிளவுற்றிருக்கவில்லை,
பிரிக்கப்பட்டிருக்கவுமில்லை”,
“இலக்கில்
எந்தவிதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை.”
என்றார் ரோத்.
அணுசக்திக்
கொள்கையில் மேர்க்கெலின் மாற்றம் பசுமைவாதிகளுக்கு ஒரு தெளிவான அழைப்பு ஆகும்;
இதற்கு அவர்கள்
உடனடியாக விடையிறுத்துள்ளனர்.
“உண்மையான ஒருமித்த
உணர்வின்மூலம்,
அணுசக்திப்
பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இது ஒரு
‘வரலாற்றுத் தன்மை
உடைய வாய்ப்பு’
ஆகும்.”
என்றார் ரிட்டீன்.
அநேகமாக கட்சித்
தலைவர்கள் அனைவருமே இதேபோன்ற கருத்துக்களைத்தான் கூறியுள்ளனர்.
குறிப்பாக
பசுமைக் கட்சி உறுப்பினரான பாடன் வூர்ட்டம்பேர்க் மாநிலப் பிரதமரான வின்பிரெட்
கிரெட்ஷ்மான்
CDU
உடனான தன்னுடைய
உடன்பாட்டிற்கான பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக அவர்
இதுபற்றித்தான் வாதிட்டு வந்துள்ளார்.
சான்ஸ்லருக்கும்
அவருடைய அணுசக்திக் கொள்கையில் கொண்டுள்ள மாற்றத்திற்கும் அவர் பெரும் பரபரப்புடன்
பாராட்டுக்களைத் தெரிவித்து அவ்வம்மையார்
“பெரும்
நன்மதிப்புப் பெற”
உரியவர் என்றார்.
பசுமைக் கட்சி
மாநிலப் பிரதமர்
“பல ஆண்டுகளாக
இப்பிரச்சினையுடன் போராடிவருகிறார்.”
அவர் இதற்காகப்
பாடுபட்டுவருவதை அவ்வம்மையார் பாராட்டுகிறார்.
மேர்க்கெல்
அணுசக்திக் கொள்கையில் முற்றிலும் மாறிவிட்டது ஒரு வரலாற்றுத் திருப்பம் என்று
கிரெட்ஷ்மான் கூறியுள்ளார்.
CDU விற்கும்
பசுமைவாதிகளுக்கும் இட்டு நிரப்ப முடியாத பிளவாக இருந்தது இப்பொழுது
தீர்க்கப்பட்டுவிட்டது.
“வேறுவிதமாகக்
கூறினால்,
கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுடன்
ஒரு கூட்டு என்பது இயலும்,
2013க்குள்கூட
முடியும் என்கிறார் மிகச் சக்திவாய்ந்த பசுமைக் கட்சி அரசியல்வாதி”
என
Spiegel Online
கூறியுள்ளது.
கிரெட்ஷ்மான் பலமுறையும் தன்னை
“பக்தி நிறைந்த
கத்தோலிக்கர்”, “பழைமைவாத
மதிப்புக்கள் நிறைந்த குடிமகன்”
என்று
கூறிக்கொள்கிறார்.
1980களில் அவர்
Ökolibertaren
(Eco-libertarians
சுற்றுச்சூழல் தாராளவாதிகள்)
என்ற
பசுமைக்கட்சிக்குள் ஒரு வலதுசாரிப் போக்கிற்கு முக்கிய தலைவராக இருந்தார்.
தன்னுடைய
“சுற்றுச்சூழல்
மனிதத் தன்மை”யுடன்
“மனிதனும்
இயற்கையும் கொண்டுள்ள ஒற்றுமை”
பற்றி மனிதச் சமூக
வளர்ச்சிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதுடன்,
சுற்றுச்
சூழலுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கும் இடையே உள்ள ஆழ்ந்த சிந்தனைப்போக்குத் தொடர்பு
பற்றியும் பேசுகிறார்.
பசுமைவாதிகளும்
CDUவும் இயற்கையைப்
பயன்படுத்துவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்,
படைப்பைத் தக்க
முறையில் பாதுகாக்கவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்று அவர்
அறிவிக்கிறார்.
CDU இதை இயல்பாகவே
தங்கள் சமய அஸ்திவாரங்கள் மூலம் சேர்த்துக் கொண்டுள்ள நிலையில்,
பசுமைவாதிகள்
இதேபோன்ற இலக்குகளை தங்கள் சுற்றுச்சூழல் கொள்கை மூலம் தொடர்கின்றனர்.
பிற பசுமைக்
கட்சித் தலைவர்கள் சற்று குறைந்த ஆர்வத்துடன்தான் மேர்க்கெலின் அணுகுமுறையை
எதிர்கொண்டுள்ளனர்;
ஆனால் இதன்
உள்ளடக்கம் அதே தெளிவாக உள்ளது.
ஒஸ்டிமிர் அடுத்த
கூட்டாட்சித் தேர்தல்களில்
CDU உடன் கூட்டு
என்பதை ஒதுக்கிவிடவில்லை.
Hamburger Abendblatt பத்திரிகையிடம்
அவர், “நாங்கள்
எப்பொழுதுமே உள்ளூர் நிலைமையை
ஒட்டி
CDU
உடன் பேச விரும்புகிறோம்.”என்றார்.
பசுமைவாதிகளுடன் மீண்டும் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல
காலமாகப் பேசிவரும் கூட்டாட்சியின் சுற்றுச் சூழல் மந்திரி நோர்பேர்ட் ரொட்கன்
(CDU)
ஐத் தவிர,
பிராங்பேர்ட்
நகரசபைத்தலைவரான
CDU வின் பெட்ரா
ரோத் Spigel
இடம் கூட்டாட்சி
மட்டத்தில் CDU
வும் பசுமைவாதிகளும்
கூடுதல் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புவதாகக் கூறினார்.
இரு கட்சியினருமே பல
முக்கிய பிரிவுகளில் ஒரே மாதிரியான கருத்துக்களைத்தான் கொண்டுள்ளனர் என்று அவர்
கூறினார்.
CDU
வின் கிளவுஸ் ரொப்பரை
பசுமைக் கட்சியின் சிறப்பு மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு கொடுத்துள்ளதும் இரு
கட்சிகளுக்கும் இடையே உறவு சீரடைவதைத்தான் விளக்குகிறது.
1980களின் கடைசிப்
பகுதிகளில்,
ஐக்கிய நாடுகள் சபை
சுற்றுச்சூழல் திட்டத்தின்
(UNEP)
முன்னாள் இயக்குனரான
ரொப்பர் சுற்றுச்சூழல்,
இயற்கை காத்தல்,
அணுசக்திப்
பாதுகாப்பு ஆகிய துறைக்கு கூட்டாட்சி மந்திரியாக இருந்தார்.
தற்பொழுது இவர்
CDU வின்
ஆலோசனைக்குழுவின் தலைவராக உள்ளார்.
இது கூட்டாட்சி
அரசாங்கத்தின் புதிய விசைக் கொள்கைக்கான பரிந்துரைகளை வரைவு செய்துள்ளது.
ரொப்பர் சிறப்புக்
கட்சி மாநாட்டில் பசுமைக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு உரையாற்றுவார்.
மேர்க்கெலின் அணுசக்திக் கொள்கைத் திருப்பம் தந்திரோபாய கணிப்பீடுகளை ஒட்டி
வெளிவந்துள்ளது.
CDU மற்றும்
FDP (தாராளவாத
ஜனநாயகக் கட்சி)
உறுப்பினர்கள்
தேர்தல்களில் பேரழிவான எண்ணிக்கைக் குறைப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில்,
மேர்க்கெல் புதிய
கூட்டணி வாய்ப்புக்களாக்காக ஆலோசிக்கிறார்.
கிறிஸ்துவ
ஜனநாயகவாதிகள் இப்பொழுது
30%க்குச் சற்று
மேல்தான் வாக்குகளைப் பெறுகின்றனர்,
FDP பாராளுமன்ற
பிரதிநிதித்துவத்திற்கு தேவையான ஐந்து சதவிகிதத் தடையை தாண்டுவதற்கும் கீழே உள்ளது.
CDU
அங்கத்தவர்களிடம் இருந்தும்,
அதேபோல் பெரு
எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய,
சர்வதேச
அரசாங்கங்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்துள்ளபோதிலும்,
மேர்க்கெல்
அணுசக்திப் பயன்பாட்டை படிப்படியாக அகற்றுவது என்ற விருப்பத்தில் உள்ளார்.
அவருடைய
வலதுசாரித்தன மற்றும் ஆழ்ந்த செல்வாக்கற்ற கொள்கைகளுக்கு புதிய அரசியல் மற்றும்
சமூக முட்டுக் கொடுத்து நிறுத்தும் பிரிவுகளைத் தேவையாக அவர் கொண்டுள்ளார்.
ஜேர்மனிய
ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் மத்தியதர
வர்க்கத்தில் செல்வம்மிக்க தட்டுக்களை ஈர்த்துக் கொண்டுவருவதற்கு பசுமைவாதிகள்
தேவையாக உள்ளனர்.
ஆனால்
பசுமைவாதிகள்
CDU விற்குத்
திரும்பியுள்ளது தந்திரோபாயக் கணப்பீடுகளுக்குச் சற்று குறைந்த தன்மையைத்தான்
கொண்டுள்ளது.
மாறாக,
பசுமைவாதிகள்
அநேகமாக எல்லா விடயங்களிலும்
CDU உடன்
உடன்பாட்டில்தான் உள்ளனர்.
உதாரணமாக,
பசுமைவாதிகள்
அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள
“கடன் தடை”க்கு
உறுதியாக வாதிடுகின்றனர்.
இதையொட்டி பெரும்
குறைப்புக்கள் சமூகநலச் செலவுகளில் ஏற்பட்டாலும்,
அவர்கள் அதற்குத்
தயாராக உள்ளனர்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின்
சமூக ஜனநாயக்கட்சி-பசுமைக்கட்சி
சிறுபான்மை அரசாங்கச் செயற்பாட்டிற்கு ஓராண்டிற்குப் பின் வந்துள்ள ஒரு இடைக்கால
அறிக்கையில் இரு பசுமைக்கட்சி மாநிலத் தலைவர்கள் மொனிக்கா டுக்கர்,
சிவன் லேமான்
ஆகியோர் “பொது
நிதிகளில் உள்ள நெருக்கடி காரணமாகத் நிதிய கொள்கை தீவிரமாக ஆராயப்படுகிறது”
என
வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில்
உள்ள பசுமைவாதிகள் எரிசக்தி நிறுவனங்களின் நலன்கள் வேறுவகைகளில்
முன்னேற்றுவிக்கப்படலாம் என்று வலியுறுத்துகின்றனர்;
அவற்றை
“சுற்றுச்சூழல்”
ஆடையில் உடுத்துவர்.
இந்த வாரம் முன்னதாக,
பசுமைக் கட்சி
மாநிலச் சுற்றுச் சூழல் மந்திரி ஜோன் ரெம்மல்
“எரிசக்தி கொள்கை
மறு சார்பு கொடுக்கப்படல்”
பற்றி
Evonik, RWE, ThyssenKrupp
ஆகியவற்றின் தலைமை நிர்வாக
அதிகாரிகளான கிளவ்ஸ் எங்கெல்,
யூர்கென் குரோஸ்மான்,
ஹென்றிச் ஹீசிங்கர்
ஆகியோருடன் விவாதித்தார்.
ரெம்மல் இது
பற்றி
“களிப்புடன் வியப்பு
அடைந்து”
பெரிதும் பாராட்டினார்.
அவருடைய
சுற்றுச்சூழல் கொள்கை தொழில்துறையை அகற்றுவது அல்ல,
மறுபடியும்
தொழில்துறையைக் கொண்டுவருவதுதான் என்று அவர் வலியுறுத்தினார்.
“புதிய நாட்களுக்கு
இடையே நாம் உள்ளோம்,
முந்தைய
சகாப்தங்களுடன் ஒப்பிடுகையில் நாம் பெருமிதம் அடையலாம்”
என்றார் அவர்.
இதற்கிடையில்
Tübingen
நகர சபைத்தலைவர் போரிஸ்
பால்மர், Zeit
Onlineக்கு வழங்கிய
பேட்டி ஒன்றில்,
பசுமைவாதிகள்
மக்களுக்கு எதிரான ஒரு வலுவான அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டைக்
காட்டினார். “கடந்த
காலத்தில் பசுமைவாதிகள் மிக அதிக அடக்குமுறைக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக,
அரசாங்கத்தின்
ஊடுருவல்களுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தம்மைக் கருதிக் கொண்டனர்”
ஆனால் ஆட்சி செய்ய
இது போதாது.
பொறுப்பான உள்நாட்டு
கொள்கை என்பதற்கு சிலவேளை ஒடுக்குமுறை உதவிக்கு அழைக்கப்பட வேண்டும்.
பொதுவான இடங்கள்
நீண்டகாலமாக பொலிஸ் அல்லது பாதுகாப்புப் படைகளினால் அச்சுறுத்தப்படவில்லை,
இளைஞர்களால்
அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது.
“அச்சமில்லாமல்
நடமாட முடியாது உள்ளது.”
என்றார் அவர்.
இளைஞர்களைப்
புறக்கணித்தல் ஒரு சமூகப் பிரச்சினை என்ற கருத்தை பசுமைவாதிகளின் நகர சபைத்தலைவர்
கடுமையாக நிராகரித்தார்.
“சமூகப் பணி மூலமோ,
தடுப்புமுறை மூலமோ,
நல்ல கல்வி மற்றும்
மாறுதல் ஊதியங்கள் மூலமோ”
தீர்க்கபட முடியும்
எனத் தான் நம்பவில்லை என்றார் அவர்.
“என்னிடம் எவரேனும்
இத்தகைய கூக்குரலினால் நாம் தூக்கத்தை இழப்பதாகக் கூறினால்,
Hartz IV பொதுநலச்
சட்டங்களில் உள்ள குறைபாடுகளைப் பாருங்கள் என்று நான் கூறிமுடியாது.”
பசுமைக்
கட்சி இதே பங்கைத்தான் வெளியுறவுக் கொள்கையிலும் கொண்டுள்ளது.
மேர்க்கெல்
அரசாங்கத்தின் ஆயுதப்படைகளைத் திட்டமிட்டு அவற்றை ஆக்கிரோஷமான ஜேர்மனிய வெளியுறவுக்
கொள்கையின் கருவியாக அதைச் சீர்திருத்தும் செயல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது;
ஜேர்மனிய இராணுவம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் நிலைப்பாடு கொள்வதற்கும் ஆதரவைக் கொடுக்கிறது.
கூட்டாட்சி
அரசாங்கம் லிபியப் போரில் கலந்து கொள்ளததற்குக் கடுமையான விமர்சனத்தை வைத்தது.
CDU உடன் உறவுகள்
சீராக்கப்பட்டுள்ளது பசுமைவாதிகளின் மாற்றத்தில் மற்றொரு மைல்கல் ஆகும்.
சமீபத்திய போக்கு
“மத்தியதர
வர்க்கத்திற்குள்ளேயே சமரசம் என்ற பொருளாகும்.
1968 காயங்கள்
குணப்படுத்தப்படுகின்றன.
70களில் இழந்த
குழந்தைகள் மீண்டும் வருகின்றனர்”
என்று
Spiegel Online
விமர்சித்துள்ளது.
ஆனால்,
அறுபதுளில் மாணவர்
எதிர்ப்பு இயக்கத்திற்கும் பசுமைவாதிகளின் அரசியல் வளர்ச்சிக்கும் இடையே உள்ள உறவு
இன்னும் கவனத்துடன் ஆராயப்பட வேண்டும் இரண்டாம் உலகப் போருக்குப்பின்,
ஜேர்மனிய
முதலாளித்துவம் பாசிசம் மற்றும் போரால் பெரும் அவமதிப்பிற்கு உட்பட்டது;
பெரும் நிதானத்தை
அவை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டன.
1960 களில் கடைசிப்
பகுதி, 1970களின்
முற்பகுதியில் நடந்த மாணவர் இயக்கம் பழைய அரசியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்கைக்
கண்டித்தது.
பசுமைவாதிகள் இந்த
இயக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் வெளிப்பட்டனர்.
1980ல்
“கட்சிகள்-எதிர்ப்புக்
கட்சி”
என்று நிறுவப்பட்ட இக்கட்சி
இப்பொழுது ஜேர்மனிய முதலாளித்துவத்தின் புதிய கட்சியாக உள்ளது.
இவர்கள் இரண்டாம்
உலகப் போருக்குப் பின் இழிவிற்குட்பட்ட ஜேர்மனிய முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய
சிந்தனைப் போக்கு அடித்தளத்தைக் கொடுத்தன.
தொழிலாள
வர்க்கம் பாரிய சமூக வெட்டுக்கள் மூலம் இதற்கு வேலை கொடுக்கும் சர்வதேச நிதிய
நெருக்கடி உள்ள நிலையில் ஆளும் வர்க்கத்திற்கு அவற்றைச் செயல்படுத்த ஒரு வலுவான
அரசாங்கம் தேவைப்படுகிறது.
பசுமைவாதிகள்
வாதங்களையும் சிந்தனைப்போக்கு நியாயப்படுத்துதல்களையும் அதற்கு அளிக்கின்றனர்.
“பொறுப்பான நிதியக்
கொள்கை”, “நிலைத்திருக்கும்
தன்மை”, “வருங்காலத்
தலைமுறைகளின் நன்மையை ஒட்டிக் கடன்களைக் குறைத்தல்”,
“சுற்றுச் சூழல்-பசுமை-வணிகம்”
ஆகிய சொற்றொடர்கள்
முன்வைக்கப்படுகின்றன.
சமூக வீழ்ச்சிக்கு
எதிரான எதிர்ப்புக்களும்,
“புறக்கணிப்பு”,
“பொது இடத்தைக்
காத்தல்”, “சகிப்புத்
தன்மைக்கு எதிரான போராட்டம்”
என்ற சொற்றொடர்கள்
மூலம் எதிர்கொள்ளப்படுகின்றன.
அதே
நேரத்தில் ஜேர்மனி மீண்டும் தன் பொருளாதார நலன்களைச் சர்வதேச அளவில் பாதுகாத்துக்
கொள்ள வேண்டும்.
இதில் இராணுவ பலத்தை
பயன்படுத்துதலும் அடங்கியுள்ளது.
இங்கும்கூட,
பசுமைவாதிகள்
ஜேர்மனியத் துருப்புக்கள்
“தலைவர்,
மக்கள்,
தந்தை நாடு”
ஆகியவற்றிக்காக
வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்படவில்லை.
எதிர்காலத்தின்
ஜேர்மனிய இராணுவம் மற்ற நாடுகளின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தி அவற்றை,
“அமைதி,
சுதந்திரம்”,
“ஜனநாயகம்”,
“மனித உரிமைகள்”,
படுகொலைகளில்
இருந்து “குடிமக்களைக்
காப்பாற்றுதல்” (அண்மையில்
லிபியப் போர்)
ஆகியவற்றிற்காகத்தான் நிலைப்பாடு கொள்ளும் என்ற தத்துவார்த்த நியாயப்படுத்துதலை
வழங்குகின்றனர்.
பசுமைக் கட்சியின்
முன்னாள் வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷர்
1989ல்
சேர்பியா மீது குண்டுபோட்டதை,
அப்போரில் பங்கு
பெற்றதை, “மீண்டும்
ஒருபொழுதும் படுகொலை முகாம்கள்
(Auscwitz)
கூடாது”
என்று கூறியவகையில்
நியாயப்படுத்தினார்.
மேர்க்கெல்
மற்றும்
CDU மீது கவனத்தை
திருப்பிக்காட்டியுள்ள நிலையில்,
பசுமை வாதிகள்
இன்னும் தெளிவாகத்தான் தங்கள் உண்மையான அரசியல் முகத்தைக் காட்டுகின்றனர். |