சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

US used Strauss-Kahn ouster to dictate terms of Greek bailout

கிரேக்கப் பிணை எடுப்பின் நிபந்தனைகளை ஆணையிடுவதற்கு  ஸ்ட்ராஸ்-கானின் வெளியேற்றத்தை அமெரிக்க பயன்படுத்துகிறது

By Stefan Steinberg 
18 June 2011

 
Use this version to print | Send feedback

வெள்ளியன்று அதன் தலையங்க கட்டுரையில் பிரிட்டிஷ் செய்தித்தாள் கார்டியன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் கற்பழிப்பு குற்றச்சாட்டுக்ளை அடுத்து ராஜிநாமா செய்தததை அமெரிக்க நிர்வாகம் நேரடியாகப் பயன்படுத்தி ஐரோப்பியக் கடன் நெருக்கடியில் தலையீடு செய்து நிபந்தனைகளை ஆணையிட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கடினப்போக்குடைய சர்வதேச நாணய நிதியம் ஜேர்மனியை கிரேக்கப் பிணையெடுப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக் கட்டாயப்படுத்தியது என்ற தலைப்பில் கார்டியன் வெளியிட்டுள்ள கட்டுரை அமெரிக்க அதிகாரிகள் எப்படி இந்த ஆண்டில் கிரேக்கத்திற்கு இரண்டாம் பிணை எடுப்புப் பொதிக்கு உடன்பட ஜேர்மனி மீது ஆழ்ந்த அழுத்தம் கொடுத்தது என்பது பற்றி விவரித்துள்ளது.

மே மாதம் நடுப்பகுதி வரை ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கிரேக்கப் பொருளாதாரத்திற்கு ஓர் இரண்டாம் பிணை எடுப்புத் தேவையில்லை என்பதைப் பலமுறையும் வலியுறுத்தி வந்தார்.

தன்னுடைய ஆளும் கூட்டணிக்குள் இருந்த தீவிர அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து மேர்க்கெல் ஏதென்ஸிற்குப் புதிய நிதி கொடுப்பதை எதிர்த்ததுடன், கிரேக்கத்தின் கடன் பற்றி வங்கிகள் மற்றும் தனியார்துறை முதலீட்டாளர்கள் சற்று ஈடுபாடுகொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தார். பிரெஞ்சு தலைமையில், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் அமெரிக்க நிர்வாகம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்ட நிலையில் பிற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எந்ததாக்குதலும் அதாவது நிதிய இழப்புக்களும் வங்கிகளுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று கடுமையான எதிர்த்தன.

சர்வதேச நாணய நிதியத்தில் வாஷிங்டன் தனது செல்வாக்கு மூலம் ஜேர்மனியின் மீது பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதை கார்டியன் பின்வருமாறு குறிப்பிட்டது.  “கடந்த ஆண்டு 110 பில்லியன் யூரோக்கள் மீட்பு நிதி (97 பில்லியன் பவுண்டுகள்) தோற்றுவிட்டது என்பது தெளிவானவுடன், மற்றும் இதேபோன்ற நிதி ஒரு கிரேக்க அரசாங்க செலுத்துமதி இயலாநிலையை தடுக்கவும் ஐரோப்பிய வங்கிகளின் இடருக்கு உரிய நிலையில் பேரழிவுப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையிலும், சர்வதேச நாணய நிதியம் ஜேர்மனிய அரசாங்கத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கை கொடுத்தது: புதிய கிரேக்கப் பிணை எடுப்பிற்கு உறுதியான உத்தரவாதங்களை கொடுத்து, தேவைப்படும் பணம் பற்றி ஒரு எண்ணிக்கையை குறிப்பிடவும், அல்லது கிரேக்கத்திற்கு அடுத்த மாதம் நிதிகள் கொடுக்கப்பட மாட்டாது, அதையொட்டி ஏதென்ஸ் செலுத்தமதியின்மை அபாயம் ஏற்பட்டுவிடும் எனக் கூறியது.”

இம்முரண்பாட்டின் ஒரு திருப்பு முனை உலகத் தலைவர்களின் G8 உச்சிமாநாடு பிரான்ஸின் சுற்றுலாத்தலமான டோவில் இல் மே 26 இல் நடத்தபோது ஏற்பட்டது என்பதையும் கட்டுரை தொடர்ந்து விளக்கியுள்ளது. உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தனியே பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை சந்தித்தார், ஆனால் ஜேர்மனிய சான்ஸ்லரைப் புறக்கணித்தார்.

கிரேக்கக் கடன் நெருக்கடியில் (ஜேர்மனிக்கு எதிராக) அமெரிக்க நிர்வாகம் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு சார்க்கோசி ஆதரவு கொடுத்து, லிபியாவிற்கு எதிரான நேட்டோப் போரைத் தொடக்குவதற்கும் ஒரு உந்துதல் சக்தியாக இருந்தார். பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இரண்டின் அதிருப்திக்கும் உட்பட்ட வகையில் ஜேர்மனி லிபியாவிற்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்கான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடந்தபோது, ஜேர்மனி அதில் கலந்து கொள்ளவில்லை.

அமெரிக்கா மற்றும் சர்வதேசச் செய்தி ஊடகத்தில் அவருக்கு எதிரான தீவிர பிரச்சாரம் நடந்ததைத் தொடர்ந்து ஸ்ட்ராஸ்-கான் சர்வதேச நாணய நிதிய தலைமைப் பதவியை இராஜிநாமா செய்வதாக Deauville உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அறிவித்தார். அதே நேரத்தில் அமெரிக்க நிர்வாகம் அவருக்குப் பதிலாக யார் வருவது என்பது பற்றிய தன் விருப்பத்தைத் தெளிவாக்கியது. ஸ்ட்ராஸ்-கான் வழக்கு பற்றிய முதல் பகிரங்க அறிவிப்பில், அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்நெர், ஸ்ட்ராஸ் கானின் உதவியாளரான மூத்த அமெரிக்க வங்கியாளர் ஜோன் லிப்ஸ்கி இடைக்கால தலைவராக பதவியேற்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஸ்ட்ராஸ் கானுக்குப் பதிலாக உலகத் தலைவர்களுடன் டோவில் இல் லிப்ஸ்கிதான் பேச்சுக்களை நடத்தினார். கார்டியன் எழுதுகிறது: “சர்வதேச நாணய நிதிய தலைமைக்கு தற்காலிக மாற்றாக வந்துள்ள ஜோன் லிப்ஸ்கி பிரான்ஸிற்குச் சென்று ஜேர்மனி, மற்றும் முக்கிய பங்கு பெறுவோரை பிணையெடுப்பு நாடகத்தில் கட்டாயப்படுத்த முயன்றார்.”

கட்டுரை தொடர்கிறது: “ஸ்ட்ராஸ்-கான் யூரோ நெருக்கடியில் முக்கிய நபராக இருந்ததுடன், அரசியலில் திறமையுடன் செயல்பட்டதில் அவருடைய பங்கிற்காக பெரும் பாராட்டுக்களை பெற்றார். அதே போல் திறமையான பிரெஞ்சு அரசியல் வாதி என்றும் பாராட்டப்பட்டார். ஓர் அமெரிக்கரான லிப்ஸ்கி அவரைப் போல் மிருதுவாகப் பேசுபவர் அல்ல, அப்பட்டமாகவே கருத்துக்களை கூறுபவர். டோவில் உச்சிமாநாட்டின் ஒதுக்குப்புறக் கூட்டங்களில் அவர் அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கத்துடனும் பெல்ஜியத்தின் ஹெர்மன் வான் ரோம்பை (அப்பொழுது ஐரோப்பியக் குழுவில் தலைவர்) பேச்சுக்களை நடத்தினார்.

கார்டியன் இறுதியாக எழுதுகிறது: “அப்போதைய சூழ்நிலையில் டோவில் இன் பேச்சுவார்த்தைகளில் தொடர்புடைய பிரமுகர்கள் கருத்துப்படி, ஜேர்மனியர்கள் மீண்டும் கால அவகாசம் பெறும் வகையில் நடந்து கொண்டதுடன், செப்டம்பர் வரை ஒரு புதிய மீட்பைத் தாமதப்படுத்த விரும்பினர். ஆனால் அது மிகவும் தாமதமான முயற்சியாகிவிட்டது. லிப்சி அவர்களுடைய உண்மை நிலையை அம்பலப்படுத்தினார், ஜேர்மனியர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு உடன்பட வேண்டியதாயிற்று.”

டோவில் இல் இருந்து திரும்பிய பின் மேர்க்கெல் வேறுவழியின்றி ஜேர்மனிய பாராளுமன்றத்தில் இந்த ஆண்டு பிற்பகுதியில் ஒரு இரண்டாம் பிணை எடுப்பு கிரேக்கத்திற்கு தேவைப்படக்கூடும் என்று அறிவித்தார்.

இந்தக் கட்டுரையில் அடிக்குறிப்பில் கார்டியன் லிப்ஸ்கின் உத்தியோகப் போக்கு பற்றிச் சுருக்கமாக எழுதியது; அவருடைய முழு உத்தியோக வாழ்வையும் அவர் வோல்ஸ்ட்ரீட்டில் அல்லது சர்வதேச நாணய நிதியத்தில் கழித்துள்ளார் என்று குறிப்பிட்டது. சுருக்கமாக மேலும் அது கூறியது: “அவர் (லிப்ஸ்கி) தனக்கு முன் பதவியில் இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ் கானிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தினார்; ஸ்ட்ராஸ் கானோ மேற்கு அரசாங்கங்கள் தோற்றுவித்த நிலையினால் ஏற்படக்கூடிய வேலை இழப்புக்களைப் பற்றிக் கவலைத் தெரிவித்து அது சமூக அமைதியின்மை உருவாக்கும் திறனைக் கொண்டது என்றும் கூறியிருந்தார். அவருடைய பொது அறிவிப்புக்கள் அனைத்திலும் லிப்ஸ்கி சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை, கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பொதுச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதைப் பல முறையும் கூறினார்.”

அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே உள்ள தற்போதைய அரசியல் வேறுபாடுகளின் அளவைப்பற்றிய சிறப்பான உட்பார்வையை மட்டும் கார்டியன் அளிக்கவில்லை; இது அமெரிக்க நிர்வாகம் எந்த அளவிற்கு இரக்கமற்ற முறையில் ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் தலையிடத் தயார் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கு ஆதரவு கொடுக்காததை அடுத்து, முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட்பழைய ஐரோப்பா என்ற பொய்த்தோற்றத்தை எழுப்பினார் (பிரான்ஸ், ஜேர்மனி அதில் அடங்கும்); இதைஒரு புதிய ஐரோப்பாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் வைத்தார்; இதில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக் வெளியுறவுக் கொள்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பவை அடங்கியிருந்தன. ஜனாதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர் சர்வதேசப் பங்காளிகளுடன் ஒரு புதிய உறவைக் கொள்வதாகவும் பிரிக்கும் தன்மை நிறைந்திருந்த புஷ் நிர்வாகப் போக்கில் இருந்து மாறுபட்டு இருக்கப்போவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் ஐரோப்பிய கடன் நெருக்கடியில் அமெரிக்காவின் பங்கு பற்றி வெளிவந்துள்ள சமீபத்திய தகவல்கள் எந்த அளவிற்கு ஒபாமா நிர்வாகம் தன்னுடைய மாக்கியவெல்லி உத்திகளைப் பயன்படுத்த மற்றும் அமெரிக்க வங்கிகளின் நலன்களை பாதுகாக்கத் தேவையான அதன் கொள்கைத் தேவைகளுக்கு செயல்படுத்த தயாராக உள்ளது என்பதைத்தான் காட்டுகின்றது.

அதே நேரத்தில் கார்டியனில் வெளிப்பட்டுள்ள தகவல்கள் ஸ்ட்ராஸ்-கானுக்கு எதிராகவே வந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றியும் கூடுதலான, உடனடியான வினாக்களையும் எழுப்புகின்றன. அவர்மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த நேரத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேசச் செய்தி ஊடகங்கள் இழிவான பிரச்சாரத்தை ஸ்ட்ராஸ்கானை அவமானப்படுத்தும் வகையில் நடத்தி, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் என்னும் பதவியை அவர் இராஜிநாமா செய்வதை துரிதப்படுத்தின. அரசியல் நடைமுறையின் வலது மற்றும் பெயரளவு இடது ஆகியவற்றில் இருந்து இதே விமர்சகர்கள்தாம்  ஸ்ட்ராஸ் கானுக்கு எதிராக வந்துள்ள குற்றச்சாட்டுக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையின் அச்சை மாற்றுவதற்கான முயற்சிகளுடன் பிணைந்துள்ளன என்ற கருத்தை ஏளனப்படுத்தியிருந்தனர்.

இத்தகைய பிரச்சாரத்தை உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்திருந்தது; மே 19 வெளியிட்டடொமினிக் ஸ்ட்ராஸ்-கான் விவகாரம் எழுப்பும் முக்கிய வினாக்கள் என்னும் கட்டுரையில் நாம் “Cui Bono? (எவருக்கு இலாபம்) என்ற வினாவை எழுப்பி, எழுதினோம்:

தற்போதைய அவதூறை எந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கூறுபாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள புதன்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் “ சிறையிடப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய 
தலைவர் மீது அழுத்தங்கள்
 அதிகரிக்கின்றன'' என்ற தலைப்பில் வந்துள்ள முதல் பக்க கட்டுரையை படித்தால் போதும்இக்கட்டுரை ஒபாமா நிர்வாகம் “சர்வதேச நாணய நிதியம் டொமினிக் ஸ்ட்ராஸ் கானை அதன் தலைவர் என்பதிலிருந்து மாற்றுவதற்கு வலுவான அடையாளம் காட்டியுள்ளது; அவருடைய பணியில் அவர் இனி திறமையுடன் செயற்படமுடியாது” என்று கூறுகிறதுஸ்ட்ராஸ்-கானின் கைது அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு அரசியல் வாய்ப்பாகக் காணப்படுகிறது என்பது தெளிவு
.

அம்முன்னோக்கு தொடர்கிறது: “ஸ்ட்ராஸ்-கானுக்குப் பதிலாக மற்றொருவர் வருவது என்பதில் முக்கிய கொள்கை பற்றிய தாக்கங்கள் இருக்கும் என்பது தெரிந்ததுதான்ஏற்கனவே ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தொடர்ந்து பதவிக்கு வர இருப்பவர் பற்றி கசப்பான மோதல் உள்ளதுவோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின்  கருத்துப்படி ஐரோப்பியர்கள் சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவியைத் தொடர்ந்து வகிக்க விரும்புகின்றனர். “ஆனால் அமெரிக்கா அவ்அமைப்பில் ஒற்றை மிகப் பெரிய பங்குதாரர் என்னும் முறையில் இதன் முடிவுகள் பற்றி தீர்மானிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்.”

இப்பகுப்பாய்வு இப்பொழுது முற்றிலும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அமெரிக்க அரசாங்கம் உடனடியாக ஸ்ட்ராஸ்-கானைச் சூழ்ந்நிருந்த விவகாரத்தைஒரு அரசியல் வாய்ப்பாக பற்றி எடுத்துக் கொண்டு வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை முன்னெடுப்பதற்கு தன்னுடைய நபரான ஜோன் லிப்ஸ்கியை சர்வதேச நாணய நிதிய தலைவராக இருந்து புதிய கிரேக்கப் பிணை எடுப்பிற்கு நிபந்தனைகளை ஆணையிட வைத்தது. 64 வயதான லிப்ஸ்கி விரைவில் ஓய்வு பெறும் தன் எண்ணத்தை அறிவித்துள்ளார்; ஆனால் ஒபாமாவும் சார்க்கோசியும் Deauville இல் உகந்த அடுத்த பதவியேற்பவர் பற்றி நிபந்தனைகளை விவாதித்திருப்பர்; அதாவது தற்பொழுது பெரிதும் ஏற்கப்படும் பிரெஞ்சு நிதி மந்திரி கிறிஸ்டின் லகார்ட் தான் இதற்கு உகந்தவர் என்பதை.