WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
The role of the ex-left in Spain’s los
indignados protests
ஸ்பெயினின்
”சீற்றமுற்றோரின்”
ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் இடதுகளின் பாத்திரம்
By
Robert Stevens
23 June 2011
மூன்று
வாரத்துக்கும் அதிகமான காலத்திற்குப் பின் சீற்றமுற்றோர் (los
indignados)
மாட்ரிட்டின்
Puerta
del Sol
சதுக்கத்தில் இருந்து தங்களது உள்ளிருப்பை முடித்துக் கொண்டதானது
அதன் தலைமையால் முன்வைக்கப்படும்
“தனித்தியங்கும்/அரசியல்
கலவாமை”
முன்னோக்கை மீண்டுமொருமுறை புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை
வழங்குகிறது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுத்த சிரமங்கள் மற்றும் வறுமை பெருகி வந்த
நிலை தான் ஸ்பெயினின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த உள்ளிருப்புகளுக்கு
தூண்டியது. ஜோஸே சபடேரோவின் ஸ்பானிய சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE)
அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பை இவை
வெளிப்படுத்தின.
இப்போதே
உண்மையான ஜனநாயகம் (Real
Democracy Now)
உள்ளடங்கலாக பல்வேறு இணையத்தை அடித்தளமாக கொண்ட பிரச்சாரங்களை ஆரம்பித்து மே 15
இயக்கத்துக்கு அழைப்பு விட்டன.
இதன் பின் தான் இந்த இயக்கம்
M-15
எனப் பல சமயங்களில் அழைக்கப்படுகிறது,
இதிலிருந்து தான்
Puerta
del Sol
இல்
”முகாம்
நகரம்”
தோன்றியது. இந்த உள்ளிருப்புகள்
PSOE
மற்றும் எதிர்க்கட்சியான பழைமைவாத மக்கள் கட்சி (PP)
ஆகிய இரண்டுக்கும் பரந்த மக்களிடையே பெருகி வரும் எதிர்ப்பை
பிரதிபலித்தன என்கிற அதே சமயத்தில் அவை ஒருபோதும் அரசாங்கத்தின் ஆட்சிக்கு
அச்சுறுத்தலாய் அமையவில்லை.
PSOE
இன் சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒரு உண்மையான அரசியல் சவால் எழுந்து
விடுவதைத் தடுப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற்சங்க அதிகாரத்துவம் தனது
கழுத்துப் பிடியைப் பராமரிப்பதற்கும்
“அரசியல்
கலவாமை”
என்கிற புகைமூட்டத்தின் பின்னால் மறைந்து கொள்வதில் பல்வேறு
போலி-இடது குழுவாக்கங்களும் தேர்ச்சியடைந்திருக்கின்றன.
பப்லோவாதம்
என்றழைக்கப்படும் அரசியல் போக்கின் ஸ்பானிய பிரதிநிதிகளான
Izquierda Anticapitalista
(முதலாளித்துவ-எதிர்ப்பு இடது -
IA)
இதில் அதிமுக்கிய பாத்திரம் ஒன்றினை ஆற்றி வருகிறது. சமூகத்தின்
சோசலிச உருமாற்றத்திற்கு ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களும் மற்றும்
பல்வேறு முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களும் தான் வழிவகையாக இருக்கும் எனக்கூறிக்
கொண்டு அதனடிப்படையில் தான் 1950களில் இந்தப் போக்கு ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து
முறித்துக் கொண்டது. பல தசாப்தங்களுக்குப் பின்,
பழைய ஸ்ராலினிச மற்றும் மாவோயிசக் கட்சிகளின் மிச்சசொச்சங்களை
தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்புடன் கூட்டணி சேர்ந்து இணைப்பதற்கு முனையும்
கட்சிகளில் பல பப்லோவாதிகள் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர்.
Puerta
del Sol
முகாம் முடிவதற்குக் கொஞ்சம் முன்னால் தான்,
கட்டலோனியாவில்
IA
இன் ஒரு தலைவரும் பப்லோவாத வெளியீடான
Viento
Sur
இன் ஆசிரியர் குழுவின் ஒரு உறுப்பினருமான எஸ்தர் விவாஸ் எழுதினார்:
“ஸ்பெயினில்
Puerta del Sol
மற்றும்
பல்தரப்பட்ட நகரங்களின் மற்ற இடங்களை ஆக்கிரமித்திருக்கும் குடிமக்கள் இயக்கம்
அரசியல் விவாதத்தை மீண்டும் வீதிகளுக்குக் கொண்டுவந்து,
எனவே அரசியல் கட்சிகளின் பாத்திரத்தை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.”
இது ஒரு
பொய். பிரிட்டிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் ஸ்பானிய இணைப்பான
En Lucha
(போராட்டத்தில்)
போன்ற குழுக்களுடன் சேர்ந்து கொண்டு பப்லோவாதிகள்,
உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் இத்தகையதொரு திக்குத்திசை
தெரியாத சங்கடத்திற்குள் கொண்டுவந்து சேர்த்திருக்க கூடிய அரசியல் கட்சிகளையும்
தொழிற்சங்கங்களையும் இந்த இயக்கம் ஒருபோதும் சவால் செய்து விடாமல் இருப்பதை உறுதி
செய்வதில் கருவியாக செயல்பட்டிருந்தன.
மே 21 அன்று,
வியண்டோ சர்
(Viento
Sur)
ஆசிரியரான மிகேல் ரோமெரோ,
பப்லோவாத முக்கிய வெளியீடான இண்டர்னேஷனல் வியூபாயிண்ட்
(International Viewpoint)
இதழுக்கு
ஒரு வெளிப்படையான நேர்காணலை அளித்தார். தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான
இயக்கத்தை தலைசீவுவதில் அவர்களது அதிமுக்கிய பாத்திரத்தை அது சுருங்கக் கூறுகிறது.
சென்ற
ஆண்டில் செப்டம்பர் 29 அன்று நடந்த 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்திற்கு மொத்த
ஸ்பானிய தொழிலாளர் எண்ணிக்கையில் ஏறக்குறைய 70 சதவீதமான 10 மில்லியன் தொழிலாளர்கள்
ஆதரவளித்தனர். ஆனால் அதற்குப் பின்,
எங்கே
PSOEக்கான
இந்த வெகுஜன எதிர்ப்பு தங்களது கட்டுப்பாட்டை கடந்து சென்று விடுமோ என அஞ்சி,
தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் ஒழுங்கமைக்க
மறுத்தன. அதற்குப் பதிலாய்,
பிப்ரவரியில்,
ஜோஸே சபடேரோ அரசாங்கத்துடனும் முதலாளிகள் கூட்டமைப்புடன் ஒரு
“மாபெரும்
சமுக ஒப்பந்தம்”
ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன. ஓய்வூதிய வயதை
2013க்குள்ளாக 65 இல் இருந்து 67க்கு உயர்த்துவதும் இந்த ஒப்பந்தத்தில்
இடம்பெற்றிருந்தது. பொதுத் துறை ஊதியங்கள் மற்றும் நல உதவி செலவின வெட்டுகளும்,
அத்துடன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களின் பிற்போக்கான
“சீர்திருத்தங்களும்”
இதனைப் பின் தொடர்ந்து நிகழ்ந்தன.
இது
தொழிற்சங்கங்களை நோக்கி,
குறிப்பாக இளைஞர்களிடையே,
உருவாக்கிய குரோதத்தை ரோமெரோ குறிப்பிடுகிறார். அவர் எழுதுகிறார்,
“ஆயினும்,
[செப்டம்பர்]
வேலைநிறுத்தத்தை ஆதரித்து,
முற்றுகைகளுக்கும் மற்றும் பிற போராட்டங்களுக்கும் ஆதரவளித்திருந்த
இளைஞர்களிடையே இது கோபத்தைக் கொண்டுவந்தது. பெரும்பான்மை தொழிற்சங்கத்திடம் இருந்து
இனி ஒன்றும் எதிர்பார்க்க முடியாது என்ற எண்ணம் பரவியது.
[அராஜகவாத-தொழிற்சங்கவாத-
[anarcho-syndicalist]]
CGT
போன்ற
சிறுபான்மை தொழிற்சங்கங்களை பொறுத்தவரை,
அவற்றுக்கு பலம் அதிகம் கிடையாது.”
“2011
இன் ஆரம்பத்தில்,
நீங்கள் பல்கலைக்கழகங்களில் ஒரு குறிப்பிட்ட பதட்டத்தை உணரக் கூடும்”
என்று அவர் குறிப்பிடுகிறார்.
“ஆனால்
முதலாளித்துவ-எதிர்ப்பு இடதின் மட்டத்தில்,
நாங்கள் ஓரளவு ஐயுறவுடனே இருந்தோம்”
என்று அவர் மேலும் கூறினார்.(அழுத்தம்
எமது)
”முதலாளித்துவ
எதிர்ப்பு இடதின்”
இந்த ஐயுறவிற்கு முழுக் காரணம்,
இவர்கள் எதில் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ
வர்க்கப் போராட்டத்தை கண்காணிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் எதனை நம்பி இருக்கிறார்களோ
அந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நிலை வேரறுந்து கொண்டிருப்பது தான்.
”சீற்றமுற்றோர்”
(los
indignados)
இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்த வந்த முதலாளித்துவ ஆதரவுப் பிரச்சாரத்தை
உருவாக்குவதிலும் பிரகடனம் செய்வதிலும் ஒரு மையப் பாத்திரத்தை ஆற்றுவதன் மூலம்
அவர்களது பதிலிறுப்பு அமைந்தது.
Puerta
del Sol
முகாம் தலைமையுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதன் மூலமாய் அவர்கள்
இதனைச் செய்தனர்.
ரோமெரோ
கூறுகிறார்:
“இந்த
ஒருங்கிணைப்பு சுமார் 60 பேர் சம்பந்தப்பட்டது. அவர்கள் வயது 25 முதல் 28 வரை.
இவர்கள் எல்லாம் நல்ல தொழில் தகுதிகளுடன்,
வேலைவாய்ப்பில்லா நிலையுடன்,
சிக்கலான நிலையிலானவர்களாக,
பரிதாபகரமான வேலை சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக,
அரசியல் அனுபவமோ அல்லது இணைப்போ இல்லாதவர்களாக இருப்பவர்கள்.
இவர்களில் மாணவர் எவரும் இல்லை. பேரணிகளில் எல்லாம் மக்கள்மிகுந்த புறநகர்ப்
பகுதிகளில் இருந்து வெகு சில இளைஞர்களே கலந்து கொண்டனர்.”
பரந்த
இயக்கம் பல மாணவர் இளைஞர் உட்பட மாட்ரிட் மக்களின் பெரும் பகுதிகளை
உள்ளடக்கியிருந்தது என்கிற அதே சமயத்தில்,
இயக்கத்தின் தலைமை குறித்த ரோமெரோவின் விவரிப்பு துல்லியமாய்
அமைந்துள்ளது. இது ஒரு தொழிலாள வர்க்க இயக்கம் இல்லை,
ஆனால் சூழுகின்ற நெருக்கடியால் பாதிப்புறும் நடுத்தர வர்க்கத்தின்
பிரிவுகளை அடிப்படையாய் கொண்டதான ஒன்றாகும். பரந்துபட்ட இயக்கத்தை அரசாங்கத்துடனும்
மற்றும் அதன் தொழிற்சங்கக் கூட்டாளிகளுடனும் மோதலுக்குக் கொண்டு செல்லாமல்
செலுத்துவதற்கு இந்தக் குழுவுக்குள்ளாக விடாமுயற்சியுடன் வேலை செய்ய பப்லோவாதிகள்
தீர்மானம் பெற்று இருந்தனர்.
ரோமெரோ
விளக்குகிறார்:
“எம்-15
இயக்கத்தைப் பொறுத்தவரை,
அது நன்றாகவே இருந்தது.”
அதனை
“ஜனநாயக
மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான ஒரு வேலைத்திட்டம்”
என்று விவரித்த அவர் மேலும் கூறுகிறார்:
“சுற்றுச்சூழல்
குறித்தும் குறைவாகத்தான் என்றாலும் கூட. இடம் பெற்றிருக்கிறது.
முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வு பெரியளவில் இல்லை. பல சமயங்களில்
ஆர்ப்பாட்டங்களில்
“முதலாளித்துவ
எதிர்ப்பு”
என்கின்ற முழக்கம் பெருமளவாய் எழுப்பப்படுகிறது என்றாலும் அது
பெரும் தத்துவார்த்த உள்ளடக்கம் எதுவும் இன்றியே இருக்கிறது”.(அழுத்தம்
எமது)
எப்படியிருப்பினும்,
ரோமெரோ அறிக்கையை பாராட்டுவதோடு மட்டுமல்ல,
உண்மையில்
Izquierda Anticapitalista
அவ்வியக்கத்தின் உருவாக்கத்தில் உதவியிருந்தது என்பதையும் அதன் பெயரளவிலான
உருவாக்கர்களாக இருந்த
“அரசியர்
கலவா”
குழுக்கள் என கூறப்படுபவற்றின் தலைமை அமைப்புகளிலும்
இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.
“ஆரம்பத்தில்
இருந்து நாங்கள் பேரணிகளில் பங்குபெற்றிருக்கிறோம்.
முன்னதாய்,
நாங்கள் ஏற்கனவே
‘Jovenes sin future’ [ஒரு
வருங்காலமற்ற இளைஞர்கள்]
இல் ஏற்கனவே இருந்தோம்.
அதன்பின் இந்த அறிக்கையை உருவாக்குவதில் நாங்கள்
பங்குபெற்றிருக்கிறோம்”
என்று அவர் தெரிவிக்கிறார்.
‘Jovenes
sin future’
வலைத் தளம் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தலைமையிலான ஐக்கிய இடது
(IU)
மற்றும் முன்னணி பப்லோவாதியான
Jaime Pastor
உள்ளிட்ட
பிற வடிவாக்கங்களில் இருந்தான ஆதரவாளர்களைப் பட்டியலிடுகிறது.
1969
இல்,
பாரிஸில் நாடு கடந்து வாழ்ந்த நிலையில் பாஸ்டர்,
அலென் கிறிவின் தலைமையிலிருந்த பிரெஞ்சு புரட்சிகரக் கம்யூனிஸ்டுக்
கழகத்தில்
(LCR)
இணைந்தார்.
1971
இல்,
ஸ்பானிய
LCR
ஸ்தாபகத்தில் அவர் உதவியதோடு பல தசாப்தங்களுக்கு அந்த இயக்கத்தில்
ஒரு முன்னணிப் பாத்திரத்தை ஆற்றினார்.
ஸ்பானிய
LCR 1995ல்
ஐக்கிய இடதுடன் இணைந்தபோது,
பாஸ்டர் அதன் மத்திய அரசியல் குழுவில் சேவை செய்தார்.
2008ல்
Izquierda Anticapitalista
உருவாக்கப்ப்பட்டதென்பது,
ஸ்ராலினிஸ்டுகளுடனான அரசியல்ரீதியான அழிவுகரமான கூட்டணியில் இருந்து
அமைப்புரீதியாக தங்களை அந்நியப்படுத்திக்கொள்வதற்கு பப்லோவாதிகள் செய்த சர்வதேச
முயற்சியின் ஒரு பாகமாகும்.
இதனைத் தொடர்ந்து
2009
இல் பிரெஞ்சு
LCR
பல்வேறு குட்டி முதலாளித்துவ போக்குகளை மறுகுழுவாக்கம் செய்ய
அழைப்புவிட்டதன் அடிப்படையில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
(NPA)
ஆக உருமாறியது நிகழ்ந்தது.
இந்த
சீற்றமுற்றோரின் இயக்கத்தின் அறிக்கையானது பப்லோவாதிகளின் அரசியல் நோக்கங்களுக்கு
பொருத்தமானதாக இருக்கிறது,
PSOE
குறித்து பெயரும் கூடக் குறிப்பிடப்படவில்லை.
முதலாளித்துவம் குறித்தும் இலாப அமைப்புமுறையின் தோல்வி குறித்தும்
அறிக்கையில் குறிப்பிடப்படவும் இல்லை,
அறிக்கை வெறுமனே என்ன சொல்கிறது என்றால்,
“நமது
அரசாங்கம் மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் நடப்பு நிலையானது இந்த
[ஜனநாயக
மற்றும் சமூக]
உரிமைகள் மீது அக்கறை காட்டுவதில்லை,
பல வழிகளில் மனித முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக
இருக்கிறது”.”(அழுத்தம்
எமது)
ஒரு
பொருளாதார அமைப்புமுறையையும்
“நமக்குக்
காதுகொடுக்காத ஒரு அரசியல் வர்க்கத்தையும்”
விமர்சிக்கையில் அது
“விலக்க
முடியாத உண்மைகள்”
குறித்து பேசுகிறது.
ஒரு
“அறநெறிரீதியான
புரட்சிக்கு”
அழைப்பு விடுவதுடன் அது முடிகிறது.
ரோமெரோ
தொடர்கிறார்,
“இந்த
இயக்கத்தில் நன்கு புலப்படுவதாய் இருக்கின்ற குறுங்குழுவாதமற்ற தானியங்கு
நீரோட்டத்துடன் எங்களுக்கு மிக நல்ல உறவு இருக்கிறது.
பொதுவாக,
மிக கவனமாகவும் அடக்கத்துடன் இருப்பது அவசியமாகிறது,
குறிப்பாக சுய அடையாள விடயத்தில்:
கொடிகள்,
வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் இன்ன பிற விடயத்தில்.”
தங்களது
அடையாளத்தையும் உண்மையான அரசியல் திட்டத்தையும் திட்டமிட்டு மறைப்பதன் அடிப்படையில்
தான்
“குறுங்குழுவாதமற்ற
தானியங்கு நீரோட்டத்துடனான”
அவர்களது
“மிக
நல்ல உறவுகள்”
அமைந்திருந்தன.
இந்த அரசியல் மோசடியின் இறுதி இலக்குகள் ஸ்பானியத் தொழிலாளர்கள்
மற்றும் இளைஞர்கள் எனும் பரந்த மக்களே.
M-15
இயக்கம் தழுவிக் கொண்ட
“தன்னியல்பான”
என்பது அரசியல் ஸ்தாபகத்தின் இற்றுப் போன மற்றும் கறைபடிந்த
அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கான ஒரு மறைப்பு என்பதைக் காட்டிலும்
“ஜனநாயக
சுய-ஒழுங்கமைப்பின்”
ஒரு அதிரடியான புதிய வடிவத்தைக் குறித்து நின்றதாய் அவர்கள் தான்
நம்பச் செய்யப்பட்டனர்.
பிரெஞ்சு
பப்லோவாதிகளின் ஆதரவுடன்,
பல்வேறு இணைய அடித்தளத்திலான பிரச்சாரங்களை நிலைநாட்டவும்
வெற்றிபெறவும்
IA
உதவியது.
இந்தப் பரப்புரைகள் அதன்பின் ஸ்பெயினின் ஊடகங்களில் பரந்த
விளம்பரத்தைப் பெற்றன.
இந்த இயக்கத்தின் கூறுகள் எதுவும்
PSOE
மற்றும்
PP
ஐ உண்மையாக எதிர்க்க முனையக் கூடுமாயின்,
அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் குறித்த எந்த விவாதத்தின்
மீதும் தடை விதித்திருப்பதன் மூலமாக அவ்வாறு நடப்பதில் இருந்து அவை தடுக்கப்பட்டு
விட்டன.
ரோமெரோ தனது
நேர்காணலின் இன்னொரு இடத்தில் கூறுகிறார்,
“எமது
நீரோட்டத்திற்கு
(இளைய,
குறுங்குழுவாதமற்ற,
குறிப்பிட்ட சித்தாந்தம் சாராத,
சமூக இயக்கங்களுடன் நெருங்கிய இணைப்புடைய)
இது ஒரு சந்தர்ப்பமாகும்.”
பப்லோவாதிகளின் அரசியல் அகராதியில்,
“குறுங்குழுவாதமற்ற”
மற்றும்
“சித்தாந்தம்-சாராத”
என்பதெல்லாம் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு சோசலிச மற்றும்
புரட்சிகர இயக்கம் அபிவிருத்தியுறுவதற்கு அவர்களது எதிர்ப்பு மற்றும் அத்திசையில்
ஸ்தாபனமயப்பட்ட கட்சிகள் மற்றும் தொழிலாளர் அதிகாரத்துவத்தை பாதுகாப்பதற்கான
தயார்நிலை ஆகியவற்றுக்கு அது கொண்டுள்ள சபதமே ஆகும். |