சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Carmaker Citroën-Peugeot to close plants in France and Spain

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலுள்ள கார்த் தயாரிப்பு நிறுவனமான ஆலைகளை மூடவிருக்கிறது

By Antoine Lerougetel 
27 June 2011

Use this version to print | Send feedback

கசியவிடப்பட்டுள்ள உள் ஆவணங்கள் PSA (Peugeot Société Anonyme) என்னும் பிரெஞ்சு Citroen-Peugeot கார்த் தயாரிப்பு நிறுவனம் அதன் ஆலைகளில் மூன்றை மூட இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

இதில் 3,600 வேலை இழப்புக்கள் பாரிஸுக்கு வடக்கேயுள்ள தொழிலாள வர்க்கமுள்ள Seine-Saint-Denis பிரிவில் Aulnay-sous-Bous  விலுள்ள ஆலையிலும் மற்றும் வடக்கு பிரான்சில் Calais அருகிலுள்ள  Hordain இல் PSA/Fiat Sevel Nord ஆகிய நிறுவனங்கள் கூட்டாகக் கொண்டுள்ள ஆலையில் 2,800 வேலை இழப்புக்கள் ஏற்படக்கூடும். இத்திட்டம் போதுமான அரச ஆதரவு இருந்தால் ஆலையை மூடாமல் இருக்க வாய்ப்பு உண்டு என்று கருதுகிறது. மூன்றாவது ஆலை மாட்ரிட்டின் 3,100 தொழிலாளர்களைக் கொண்ட Peugeot ஆலை ஆகும்.

ஆகஸ்ட் 23, 2010 PSA ஆவணம் ஒன்று 2013க்குள் Aulnay ஆலையில் பெரும் பணிநீக்கத்திற்கு வழி செய்து அதை 2014க்குள் மூடத் திட்டமிட்டுள்ளது; மேலும் 2015 ஒட்டி Sevel Nord ல் உள்ள ஆலையும் மூடப்படும் என்று யோசனை தெரிவித்துள்ளது.

PSA இன் தொழில்துறை இயக்குனரான டெனிஸ் மார்ட்டின் உடனடியாக இந்த ஆவணம் ஒரு தயாரிப்பு நிலையில் இருந்தது, இப்பொழுது செல்லுபடியாகாதது என்று உறுதியாகக் கூறினார். ஆயினும்கூட, ஆலைகளின் நிலை பற்றி 12 முதல் 18 மாதங்களுக்கு முன்னதாகக் கூறுவதற்கு இல்லை என்றார்.

பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் பிரெஞ்சுக் கார் தயாரிப்பாளர்கள் 2009ல் அவர்கள் பெற்ற உதவியை ஒட்டி நாட்டிற்குக் கடன்பட்டுள்ளனர் என்று உறுதியாகக் கூறினார். அப்பொழுது அவை பல பில்லியன் யூரோப் பிணை எடுப்புப் பொதியை பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருந்தன. ஆனால் பழையவற்றிற்கு பதிலாக புதியவை (cash for clunkers) என்ற திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 6 பில்லியனுக்கும் அதிகமான யூரோ உதவிநிதி என்பது தற்போதைய தொழில்துறை மறுகட்டமைப்பின் தயாரிப்பிற்கு  பயன்படுத்தப்பட்டன என்பது பற்றி பியோன் மௌனமாக உள்ளார்.

இதையொட்டிக் கிடைத்த இலாபங்கள் PSA மற்றும் Renault  ஆகியவற்றை Automobile Pact க்கு கடன்களைத் திருப்பிக் கொடுக்க உதவின. இது PSA மற்றும் Renault இலாபத்துடன் வைக்கும் வடிவமைப்பு கொண்டவை. தொழிலாளர்கள் நலன்களுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

ஆலைகளை ஒருங்கிணைத்தல் என்று PSA ஆல் விரிவாக்கப்பட்டு அறிந்த உலகத் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த ஆலை முடல்கள் ஆகும். ஐரோப்பியக் கார்த் தொழில் பெரும் மறுசீரமைப்பிற்கு உட்பட்டு, உலகப் பொருளாதார மற்றும் நிதிய நெருக்கடியை ஒட்டி கடும் போட்டிகளை எதிர்கொண்ட நேரத்தில் அவற்றைச் செயல்படுத்தியபோது நிகழ்ந்தவை.

இந்த ஆவணங்களை பெற்ற முன்னாள் Le Monde  ஆசிரியர் Edwy Plenel நிறுவிய இணையத்தளப் பதிப்பான Médiapart ல் ஜூன் 13ம் திகதி வந்துள்ள கட்டுரையில் அதன் முக்கியத்துவம் பின்வருமாறு சுருக்கி எழுதப்பட்டது. “இந்த பெருநிறுவனம் பிரான்சிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் மிக அதிக உற்பத்திப் பிரிவுகளை கொண்டுள்ளதாக கருதுகிறது. அதுவும் மிகைமேலதிக உற்பத்தி (உபரி அளவுடைய) கட்டமைப்புத் திறன் உடைய ஐரோப்பியச் சந்தை ஒன்றில்கிழக்கு ஐரோப்பா, துருக்கி, ஷ்யா ஆகிய நாடுகளில் ஆலைகள் பெருக்கத்தால் மேலும் இத்திறன் இன்னமும் பெருகுகின்றது. இதனால் இலாப விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளன. எனவே PSA உற்பத்தித் தளங்கள் நெருக்கமாதலும் பொருளாதார அளவுகோலும் தான் இலாப விகிதங்களைத் தக்க வைக்கும் திறவு கோலாகும் என்றும் நம்புகிறது.

இதன் பொருள் ஆலைகளை மூடுதல், மிகப் பெரிய, அதிக இலாபம் தரும் ஆலைகளில் மட்டும் உற்பத்திக் குவிப்புக் காட்டுதல் என்பதாகும். Ford, Opel, Fiat, Renault அனைத்தும் ஏற்கனவே ஐரோப்பாவில் ஆலைகளை மூடத் துவங்கி விட்டன. PSA அதன் பிரிட்டனிலுள்ள Ryton ஆலையை 2007லேயே கைவிட்டுவிட்டது.

ஜூன் 2009ல் PSA ன் தலைவராக நியமிக்கப்பட்ட Phillippe Varin நிறுவனத்தின் மூலோபாயத்தை  மாற்றி அது தடையற்ற உலகப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் இருத்த முற்பட்டார். இதில் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் நேரடியாக இந்திய, ஸ்லோவாக்கிய அல்லது துருக்கியத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தப்படுகின்றனர்.” அவருடைய நோக்கம் PSA  ஒரு உலக நிலைக்கேற்ற நிறுவனமாக்குவதாக இருந்தது, அதற்கு குறைந்த அளவு உற்பத்திச் செலவுகள்தான் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் போட்டி ஆலைகளை நெருக்கமாக்குவதன் மூலம் எதிர்க்க முடியும், அதற்கேற்ப தொழிலாளர் தொகுப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இது 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க கார்த் தொழில் மறுபடி இயக்கப்படுவதற்கு ஐரோப்பா எதிர்கொள்ளும் வழிவகையில் ஒரு பகுதியாகும். அதாவது அங்கு பெரும் பணிநீக்கங்கள், 50 சதவிகித ஊதியக் குறைப்புக்கள் தொழிலாளர் தொகுப்பின் மீது சுமத்தப்படல் இன்னும் பல பேரழிவுத் தாக்குதல்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்பட்டன. இத்தாக்குதல்கள் அமெரிக்க தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஒழுங்குபடுத்தப்பட்டன.

சில காலமாகவே Aulnay ஆலையை மூடுவதற்கு PSA தயாரிப்பு நடத்திவருவதைச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இதன் தொழிலாளர் தொகுப்பு 2004ம் ஆண்டு 6,000 என்பதிலிருந்து தற்பொழுது 3,600 எனக் குறைந்துவிட்டது. ஏற்கனவே Aulnay ல் உற்பத்தி குறைக்கப்பட்டு, கூடுதலான அளவில் பெரிய Poissy ஆலையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 5,800 பேர் தொழிலாளர் தொகுப்பில் உள்ளனர். 2008ம் ஆண்டு இரு உற்பத்திப் பிரிவுகளில் ஒன்று மூடப்பட்டது. அக்டோபர் 2010ல் இரவு நேரப் பணிமுறை நிறுத்தப்பட்டது. இது Poissy ல் இரவுப் பணி முறை கொண்டுவர உதவியது. Aulnay யிலுள்ள மாசு-எதிர்ப்புப் பிரிவு இப்பொழுது 2012ல் Moulhouse க்கு மாற்றப்பட உள்ளது.

முக்கிய கட்டிட நிலத்தில் இருப்பதால் Aulnay ஆலையும் 300 மில்லியனுக்கு விற்கப்படலாம் என்று PSA மதிப்பிட்டுள்ளது.

Aulnay இன் தொழிற்சங்கங்கள் மூடப்பட திட்டமிடப்பட்டிருக்கும் ஆலைகளில் பணிகள், ஊதியங்கள் ஆகியவை ஐந்து ஆண்டுகளுக்குத் தக்க வைக்கப்பட வேண்டும் என்று எழுத்து மூலமான உத்தரவாதத்தைக் கேட்டபோது, நிர்வாகம் தொழிலாளர்களின் அளவை  அதிகரிக்காமல் அவர்களை உற்பத்தியில் 5% அதிகரிப்பிற்கு  ஒப்புக் கொள்ளுமாறு கேட்டது. தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு என்னும் CGT தொழிற் சங்க அதிகாரிகள் Challenges  இடம், இதன் பொருள் நாள் ஒன்றிற்கு 15 கார்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட வேண்டும், ஒரு பணிமுறைக்கு 342 கார்களில் (47 மணி நேரம்இருந்து 357 கார்களாக (51 மணி நேரம்உயர்த்தப்பட வேண்டும என்றனர். இதுவரை இத்திட்டத்தை தொழிற்சங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

Sevel Nord ல் தொழிற்சங்கம் அப்பிராந்தியத்திலுள்ள தொழில்துறைத் தொழிலாளர்களை ஜூலை 7ம் திகதி அவர்களுடைய ஆலை மூடப்படுவதற்கு எதிராக ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

தங்கள் வேலைகளைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கும் PSA மேற்கோள்ளும் ஆலை மூடல்கள் முயற்சியை எதிர்ப்பதற்கும் தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்கக் கூடாது. 2008 பொருளாதார நெருக்கடி வெடித்ததிலிருந்து மிகக் கசப்பான கார் ஆலை மூடல்கள் வரலாறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாப்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஜேர்மனிய டயர் உற்பத்தி நிறுவனமான Continental ன் Clairoix ஆலை, அமியானில் Goodyear ன் ஆலை, Crepy-en-Valois ல் உள்ள Sodimatex ஆலை உட்பட, எல்லா இடங்களிலும் தொழிற்சங்கங்கள் முதலாளிகளிடமும் பிரெஞ்சு அரசாங்கத்திடமும் ஒவ்வொரு ஆலையாக மூடுவது குறித்து பேச்சுக்களை நடத்தின. நிறுவனங்களும் அரசாங்கமும் ஆலைகளை மூட முற்பட்ட நிலையில், தொழிற்சங்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்கள் கட்டுப்பாட்டைவிட்டு மீறி நடக்கக்கூடிய போராட்டங்களைத் தவிர்க்க முற்பட்டன. இது தொழிலாளர்கள் பெரும் தோல்வி அடைவதற்கு வழிவகுத்தது. தொழிற்சங்கங்கள் ஆலைகள் முறையாக மூடப்பட வழிவகுத்தன. தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த பணிநீக்கப் பொதிதான் கொடுக்கப்பட்டது.

கான்டினென்டலைப் பொறுத்தவரை, இந்த உடன்பாட்டில் தொழிற்சங்கங்கள் ஐரோப்பாவில் மற்ற இடத்தில் நிறுவனம் ஆலை மூடல்களை செய்வதைத் தடைசெய்யும் முயற்சி கூடாது எனக் கூறப்பட்டது. எந்த ஒரு கட்டத்திலும்  CGT தொழிற்துறை தொழிலாளர் தொகுப்பு முழுவதையும் இந்த மூடல்களுக்கு எதிராக அணிதிரட்ட முற்படவில்லை; மாறாக தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தத்தான் செய்தன.

உண்மையில், பிரான்சில் பிற தொழிற்சங்கங்கள் போலவே CGT யும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கத்துடன் அதன் சிக்கன நடவடிக்கைகள் அனைத்திலும், பிரெஞ்சு பெருவணிகத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வடிவமைப்பு கொண்டவற்றிற்காக, ஒத்துழைத்தது. இதுதான் CGT இன் செயற்பாடுகளில் முக்கிய கவனத்தை கொண்டிருந்தது.

கடந்த அக்டோபர் மாதம் ஓய்வுதியக் குறைப்புக்களுக்கு எதிராக எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் நடந்த வேலைநிறுத்தத்தின்போது இது மிகத் தெளிவாக காட்டப்பட்டது. அப்பொழுது CGT பொலிசாரின் வேலைநிறுத் முறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக எண்ணெய் சுத்திகரிப்புத் துறைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பது என்று முடிவெடுக்கவில்லை. மாறாக, இது முற்றிலும் அடையாள எதிர்ப்புக்களைத்தான் பொலிசார் கட்டாயமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வேலைக்குப் பணித்தபோது காட்டியது. இது சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புத் திரட்டுக்கள் முற்றுப்புள்ளிக்குத் துவக்கமாயிற்று. ஏனெனில் இருக்கும் அமைப்புக்கள் எதுவும் அவர்களுக்காகப் போராடத்தயாராக இல்லை என்பது தொழிலாளர்களுக்கு நன்கு.

பிரான்சிலும் ஸ்பெயினிலும் PSA தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாப்பதற்கு ஒரேவழி அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான முறையில் ஒருங்கிணைத்து தங்கள் அமைப்புக்களை போராட்டங்களுக்காக கட்டமைக்க வேண்டும். அதே போல் அதற்கு ஆதரவு தரும் போலி இடதுகளையும் ஒதுக்க வேண்டும். அத்தகைய போராட்ட அமைப்புக்கள் கார்த் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் பிற தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஆலை மூடல்களுக்கு எதிராக பொதுப் போராட்டத்தை நடத்த வேண்டும்அது தொழிலாள வர்க்கம் பொது வசதிகளை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்துவதில் ஒரு பகுதியாக கார்த் தொழில்களை தேசியமயமாக்கும் சோசலிச முன்னோக்கில் இருக்க வேண்டும்.

கட்டுரையாசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.

How Frances unions aided police strike-breaking at Grandpuits refinery

Lessons of the Sodimatex sell-out in France

How Frances petty-bourgeois left betrays workers