WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Worker
unrest in China sends tremors through world capitalism
சீன
தொழிலாளர் கிளர்ச்சி உலக முதலாளித்துவத்திற்கு அதிர்வை அனுப்புகிறது
John Chan
25 June 2011
ஜென்ங்செங்கில்
வெடித்த
தொழிலாளர்கள்
போராட்டங்கள்,
உலக
பொருளாதாரம்
எந்தளவிற்கு
சீன தொழிலாள வர்க்கத்தின்
மீதிருக்கும் பெரும்-சுரண்டலை
சார்ந்துள்ளது
என்பதை
அடிக்கோடிட்டு,
உலகளாவிய
நிதியியல்
வட்டாரங்கள் மூலமாக
ஓர் அதிர்வை
அனுப்பியுள்ளது.
பைனான்சியல்
டைம்ஸூம்,
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னலும்
தொழிலாள
வர்க்கத்தின்
அனைத்து பாரிய
போராட்டங்களையும்
ஒடுக்குவதில் சீன
பொலிஸ்
அரசின் திறன் குறித்து கவலை
தோய்ந்த
கட்டுரைகளைப்
பிரசுரித்தன.
ஒரு
பைனான்சியல்
டைம்ஸ்
தலையங்கம்
சீன போராட்டங்களின்
எண்ணிக்கை
மற்றும் தீவிரம் குறித்து
ஊகித்து,
பின்னர்
குறிப்பிட்டதாவது:
“உள்ளூர்
போராட்டங்களின்
தன்மை
ஒரு பரந்த தேசிய
இணக்கத்தைப்
பெற்றுவரும்
உணர்வு,
சீன கம்யூனிஸ்ட்
கட்சியை ஆழமாக
அச்சுறுத்தி
வருகிறது.”
இந்த நிலைமை
சர்வதேச
முதலாளித்துவத்தையும்
ஆழமாக அச்சுறுத்தி
வருகிறது. “ஜீன்ஸ்
தலைநகர்"
என்றறியப்படும்
ஜென்ங்செங்கில்
ஏற்படும்
ஒரு சாதாரண
சமூகவெடிப்பும்
கூட உலகம்
முழுவதையும்
அதிர்ச்சிக்கு உள்ளாக்கி
உள்ளது.
குவாங்ஜிஹோவினை
சுற்றியுள்ள
நகரம்,
சுமார்
60
வெவ்வேறு
சர்வதேச
குறியீடுகளை
கொண்ட
உலகளவில்
உற்பத்தி செய்யப்படும்
ஜீன்ஸ்
ஆடைகளில் மூன்றில் ஒரு
பகுதியை
உருவாக்கி வருகிறது.
முக்கியமாக
ஏற்றுமதிக்காக,
ஒரு
தனிப்பொருள்
உற்பத்தியில்
சிறப்புத்திறமைபெற்ற
பல உற்பத்தி
"தலைநகரங்களில்"
ஜென்ங்செங்
நகரமும் ஒன்றாகும்.
சீனாவின் பரந்த
தொழிற்துறை
கிளர்ச்சியானது,
ஜேர்மன் இயந்திர
ஏற்றுமதியாளர்கள்
முதல்
அவுஸ்திரேலியா மற்றும்
பிரேசிலில் உள்ள
பாரிய
சுரங்க தொழிற்துறை வரையில்
தொலைதூர
தாக்கங்களை
கொண்டிருக்கும்.
ஜெனரல் மோட்டார்ஸ்
தற்போது
அமெரிக்காவையும்
விட சீனாவில்
இருந்துதான்
அதிக கார்களையும்,
கனவூர்திகளையும்
தயாரிக்கிறது;
வோல்மார்ட்
அதன் பெரும்பான்மை
மலிவு-விலை
நுகர்பொருட்களுக்கு
சீனாவையே
சார்ந்துள்ளது.
ஆப்பிள்
நிறுவனத்தின்
ஐபோன்கள் மற்றும்
ஐபாட்கள் பாக்ஸ்கான்
நிறுவனத்தால்
நடத்தப்படும் பெரும்
அடிமையுழைப்புகூடங்களில்
செய்யப்படுகின்றன.
வெளிநாட்டிற்கு
சொந்தமான சேய்
நிறுவனங்கள்
நேரடியாக
16
மில்லியன்
சீன தொழிலாளர்களை
நியமித்துள்ளன
என்பதோடு,
அவற்றில்
பல மில்லியன்
கணக்கானவர்களுக்கும்
மேலானவர்கள்
பன்னாட்டு
நிறுவனங்களுக்குத் தேவையான
சிக்கலான வினியோக
தொடரில்
ஈடுபட்டுள்ளனர்.
ஜென்ங்செங்கின்
புறநகர்
புலம்பெயர்ந்தோரின்
கோபம்மிக்க
போராட்டங்கள்,
உள்ளூர்
பாதுகாப்புபிரிவினர்களால்
ஒரு கர்ப்பிணி பெண்
கொடூரமாக
கையாளப்பட்டதால்
தூண்டிவிடப்பட்டது.
எவ்வாறிருந்த போதினும்,
அந்த சம்பவத்தின்
அடித்தளத்தில்,
உணவுப்பொருட்கள்,
வீட்டுவாடகை மற்றும்
ஏனைய அத்தியாவசிய
பொருட்களின்
விலையுயர்வுகளால்
தூண்டிவிடப்பட்ட
கூர்மையான சமூக
பதட்டங்களும்
இருந்தன.
ஹோண்டா
ஆலையில் தொடங்கி
தொடர்ச்சியான
வேலைநிறுத்தங்களில்
கடந்த
ஆண்டு தொழிலாளர்களால்
வென்றெடுக்கப்பட்ட
கூலி
உயர்வுகள் பணவீக்கத்தால்
முற்றிலுமாக
அரிக்கப்பட்டுவிட்டன.
ஜென்ங்செங்
போராட்டத்தை அடுத்து
தொழிற்துறை
முடக்கங்கள் நிகழ்ந்தன.
கடந்த வாரம்,
டோங்கானில் உள்ள
ஜப்பானுக்கு
சொந்தமான சிட்டிசன்
கைக்கடிகார
ஆலையில்
2,000
தொழிலாளர்கள்
நீண்ட வேலைநேரம்
மற்றும்
குறைந்த சம்பளத்தை
முன்னிட்டு
பல நாட்கள் வேலையை
நிறுத்தினர்.
இந்த வாரம்,
குவாங்ஜ்ஹாவில் உள்ள
உயர்தர பொருட்கள்
தயாரிக்கும்
தென்கொரியாவிற்கு சொந்தமான
கைப்பை உற்பத்தி
ஆலையில்
4,000
தொழிலாளர்கள்
சம்பள உயர்வு
மற்றும் நிர்வாக
துஷ்பிரயோகத்தை
முடிவுக்கு
கொண்டு வருதல்
ஆகியவற்றிற்காக
வேலைநிறுத்தம்
செய்தனர்.
ஜென்ங்செங்
போராட்டத்திற்கு
விடையிறுப்பாக,
அரசுத்துறையின்
Global Times
இதழில் வெளியான
ஒரு தலையங்கம்,
மத்தியகிழக்கு
மற்றும் வடஆபிரிக்காவை
உடைத்துக்கொண்டிருக்கும்
புரட்சிகர கொந்தளிப்புகளுக்குள்
சீனாவும்
இழுக்கப்பட்டுள்ளது
என்பதை
நிராகரிக்கக பெரும்
பிராயத்தம்
எடுத்தது.
“பல
மக்களுக்கு
குறிப்பிட்ட குறைகளும்,
முறையீடுகளும்
இருக்கலாம்.
ஆனால்
அவர்களுக்கு
தற்போதிருக்கும்
சமூக அமைப்புமுறையை
உடைப்பது
மற்றும் ஒட்டுமொத்த சமூக
ஸ்திரத்தன்மையைக்
கவிழ்ப்பதில்
எவ்வித ஆர்வமும்
இல்லை,”
என்று அது அறிவித்தது.
“தற்போது நிலவும்
அமைப்புமுறையை
கவிழ்க்க
கோரும் ஒட்டுமொத்த மக்கள்
கோபம் உள்ள ஒரு
நாடல்ல சீனா.
இந்த அர்த்தமற்ற
பொய்யை ஒழித்துகட்ட
வேண்டிய
நேரம் இது,”
என்று
குறிப்பிட்டது.
உண்மையில்,
நாகரீகமான வாழ்க்கை
தரங்கள் மற்றும்
ஜனநாயக
உரிமைகளைக் கோரியும்,
உத்தியோகப்பூர்வ
ஊழலை முடிவுக்குக்
கொண்டு
வரக்கோரியும்
1989
மே-ஜூனில்
பெய்ஜிங்கிலும்,
ஏனைய
நகரங்களிலும்
மாணவர்களோடு
மில்லியன் கணக்கான
தொழிலாளர்களும்
சேர்ந்த போது
குரூரமாக
ஒடுக்கப்பட்ட
அந்த
கிளர்ச்சிகளால்
சீன கம்யூனிஸ்ட்
கட்சி
(CCP)
ஆட்சி இன்று வரையில்
அச்சத்தில்
உள்ளது.
அந்த வெடிப்பிற்கு
இட்டுச் சென்ற
எந்தவொரு சமூக
முரண்பாடுகளும்
தீர்க்கப்படவில்லை.
அதற்கு மாறாக,
கடந்த
இரண்டு தசாப்தங்களாக
பாரியளவிலான
சீன முதலாளித்துவத்தின்
வளர்ச்சி
பணக்காரர்களுக்கும்,
ஏழைகளுக்கும் இடையில்
இன்னும் அதிக ஆழமாக
சமூக
பிளவுகளை உருவாக்கியுள்ளது.
1978 இல்
120
மில்லியனாக
இருந்த நகர்புற
தொழிலாளர்களின்
எண்ணிக்கை,
இன்று
210
மில்லியன் புறநகர்
புலம்பெயர்வு
தொழிலாளர்கள்
உட்பட,
500 மில்லியனுக்கும்
அதிகமாக
அதிகரித்துள்ளது. 2002இல்
சீனாவில் ஒன்றுமே
இல்லாததாக இருந்த
அமெரிக்க
டாலர் பில்லியனியர்களின்
எண்ணிக்கை
189ஆக
தாவியுள்ளது.
இது
அமெரிக்காவிற்கு
வெளியிலிருக்கும்
மிகப்பெரிய
எண்ணிக்கையாகும்.
மார்ச்சில்
Global Timesஆல்
நடத்தப்பட்ட
ஓர் இணைய ஆய்வு,
அதில்
பங்கெடுத்த
94
சதவீதத்தினர்
தற்போதைய சமூக
அமைப்புமுறையினால்
தாம்
"ஓரம்கட்டப்பட்டுள்ளதாக"
மதிப்பிட்டிருப்பதாக
கண்டறிந்தது.
இதில்
"ஆமாம்"
என்று
வாக்களித்தவர்களில்
ஒருவர், “சீனா
பணக்காரர்களின்
சொர்க்கம்,
ஆனால்
அதேவேளையில் ஏழைகள்
வேலைவாய்ப்பு,
வீட்டுவசதி
மற்றும்
வாழ்வாதாரத்திற்கு
மிகவும் கடுமையாக
போராடி
வருகின்றனர்,”
என்று
குறிப்பிட்டார்.
ஏதோவொரு
வழியிலோ அல்லது வேறு
வழியிலோ,
சீனாவில்
சீறிவரும் இந்த சமூக
அதிருப்தி
தவிர்க்கவியலாமல்
பெய்ஜிங்கில்
உள்ள ஸ்ராலினிய
ஆட்சிக்கு
எதிராக ஒரு
பரந்துபட்ட
போராட்டத்தில்
அதன் வெளிப்பாட்டைக்
காணும்.
ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும்,
அரசாங்கங்கள்
வங்கிகளையும்
பெருநிறுவனங்களும்
பிணையெடுத்த
பின்னர்
ஏற்பட்டிருக்கும்
பெரும் கடன்களை
கடுமையான
சிக்கன முறைமைகள் என்ற
வடிவதில்
தற்போது
திணித்து வருகின்றன.
வேலைவாய்ப்பின்மை
மற்றும் அதிருப்தி
உயரக்கூடிய
வாய்ப்பைக் கண்டு அஞ்சி,
பெரும் மீட்பு
பொதிகளை
அளித்தும்,
பொருளாதாரம்
துரிதமான வேகத்தில்
வளர்வதற்கு
கடன்களை
பாரியளவில்
வழங்கி
உலகளாவிய நிதியியல்
நெருக்கடிக்கு சீன
ஆட்சி
விடையிறுப்பு காட்டியது.
இந்த கொள்கைகள்
ஒருபோதும்
நீண்டகாலத்திற்கு
நிலைநிற்கவில்லை.
தவிர்க்க
முடியாமல் பொருளாதார
வேகத்தைக்
குறைப்பதற்கு இட்டுச்சென்ற,
உயர்ந்த
வேலைவாய்ப்பின்மைக்கும்
மற்றும் பரந்த
அதிருப்திக்கும்
இட்டுச்சென்ற கடன் தடுப்பை
(credit brake)
ஏற்கனவே பெய்ஜிங்
நடைமுறைப்படுத்தி
வருகிறது.
மத்தியகிழக்கு,
ஐரோப்பா மற்றும்
அமெரிக்க
போராட்டங்களில்
சீன தொழிலாளர்கள்
பெற வேண்டிய
ஒரு படிப்பினை
இருக்குமென்றால்,
அது
எந்தளவிலான
அழுத்தமும்
எவ்வித அடிப்படை
மாற்றங்களைச்
செய்யவதற்கு
பெய்ஜிங் ஆட்சிக்கு
நெருக்கடி
கொடுக்காது
என்பதேயாகும்.
அரசுத்துறை
தொழிற்சங்கங்கள்
ஆட்சியின்
பொலிஸ் உளவாளிகளைப் போல
செயல்படுகிறார்கள்
என்பதை
சீன தொழிலாளர்கள் நன்கு
அறிவார்கள்.
இருப்பினும்,
China Labour Bulletin
இன்
ஸ்தாபகர் ஹன்
டோங்பேங்
போன்றவர்களின்
முன்னோக்கையும்
அவர்கள்
நிராகரிக்க வேண்டும்.
தொழிலாளர்கள்
சுயாதீனமான
"அரசியல்
சார்பற்ற"
தொழிற்சங்களை
ஏற்படுத்திக்
கொள்வதன் மூலம்
அவர்கள் தங்களின்
உரிமைகளைப்
பாதுகாக்க முடியுமென்று
அவர்
முன்மொழிகிறார்.
வேலைநிறுத்தங்களும்
போராட்டங்களும்
அரசாங்கத்தை
விட்டுகொடுக்கச் செய்ய
அழுத்தமளிக்கும்
என்ற
நம்பிக்கைக்குள் தொழிலாள
வர்க்கத்தை ஏமாற்ற,
1989
ஆர்ப்பாட்டங்களின்
போது தொழிலாளர்களின்
தலைவராக
இருந்த அவரின் செல்வாக்கை
அவர் பயன்படுத்தி
வருகிறார்.
"நிர்வாகத்துடன்
அமைதியான,
ஆக்கபூர்வமான
மற்றும் சம அந்தஸ்துடனான
பேச்சுவார்த்தைகளின்"
மூலம்
தொழிலாளர்களின்
கோரிக்கைகளைத்
தீர்க்கலாம்
என்றவொரு திட்டத்தை ஹன்
சமீபத்தில்
பெய்ஜிங்கிடம்
முறையிட்டிருந்தார்.
அவர்
தொடர்ந்ததாவது:
“அமைதியான
கூட்டு பேரம்பேசல்
மூலமாக
தொழிலாளர்கள் அவர்களின்
நோக்கங்களை எட்ட
முடியுமென்றால்,
நீண்டகால நோக்கில்
வெகுசில
வேலைநிறுத்தங்களே
இருக்கும் என்பதோடு,
தொழிலாளர்களுக்கும்
சிறந்த சம்பளம்
கிடைக்கும்
மற்றும் உழைப்பாளர்களுடனான
உறவுகளும் பெரிதும்
முன்னேறும்,”
என்கிறார்.
எதார்த்தத்தில்,
ஆட்சியதிகாரம் அதன்
பொலிஸ்-அரசு
முறைமைகளைப்
பலப்படுத்தி
வரும் நிலையில்,
"கூட்டு
பேரம்பேசல்"
மூலமாக
தொழிலாளர்களின்
சுயாதீனமான
அனைத்து போராட்டத்தையும்
முடக்க உதவுவதில்
ஹன் அவருடைய
சேவை அளித்து வருகிறார்.
ஐரோப்பா,
அமெரிக்கா மற்றும்
மத்தியகிழக்கை
போன்றே,
சீனாவிலும் தொழிலாளர்கள்
அவர்களின் சொந்த
சுயாதீனமான
பலத்தைச் சார்திருந்து,
ஒரு சோசலிச மற்றும்
சர்வதேச வேலைத்திட்டத்தின்
அடிப்படையில்
ஒன்றுதிரள
வேண்டியுள்ளது.
அதே
பன்னாட்டு
பெருநிறுவனங்களின்
மற்றும் அதே
அடக்குமுறை இலாபகர
அமைப்புமுறையை
எதிர்கொண்டிருக்கும்
உலகம் முழுவதிலும்
உள்ள
தொழிலாளர்களே அவர்களின்
இயல்பான
கூட்டாளிகளாவர்.
பெய்ஜிங்கில் உள்ள
ஸ்ராலினிச
ஆட்சியைத்
தூக்கியெறிவதும்,
தங்களின்
சொந்த கரங்களில்
அதிகாரத்தை
எடுப்பதுமே சீன
தொழிலாளர்கள்
எதிர்கொண்டிருக்கும்
மைய
பணியாகும்.
அதாவது
இது என்னவென்றால்,
உலக
ட்ரொட்ஸ்கிச
இயக்கமான நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழுவின்
சீன பிரிவாக ஒரு புரட்சிகர
கட்சியை
கட்டியெழுப்புவதாகும். |