WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
உலகின்
பெரும் செல்வந்தர்களின் செல்வம் 2010 ல்
கிட்டத்தட்ட 10 சதவிகிதம் உயர்ந்தது
By Chris Marsden
25 June 2011
2008
சரிவைத் தொடர்ந்த
ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தினருக்கு சிக்கன நடவடிக்கைகள்,
ஊதிய வெட்டுக்கள்
மற்றும் உயரும் வேலையின்மை ஆகியவைதான் எஞ்சி நிற்கின்றன.
ஆனால்
செல்வந்தர்களுக்கும்,
மிகப் பெரிய
செல்வந்தர்களுக்கும் இந்த ஆண்டுகள் ஆரம்பத்தில் இழக்கப்பட்ட ஒவ்வொரு பென்னியையும்
மீட்டு இன்னும் மிக அதிகமாகத் திரட்ட முடிந்தவை ஆகும்.
இன்று
உலகில் செல்வந்தர்கள் சரிவிற்கு முன் இருந்ததைவிட அதிகம் செல்வத்தை பெற்றுள்ளனர்.
இந்த அதிக செல்வம்
படைத்த,
பிரத்தியேகமான குழுவை
சேர்ந்த நபர்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது.
மெரில்
லின்ச் மற்றும் கேப்ஜெமினி நிறுவனங்கள் தயாரித்த ஆண்டு உலக செல்வம் பற்றிய அறிக்கை
கிட்டத்தட்ட
11 மில்லியன்
“அதிக நிகர மதிப்பு
உடைய தனிநபர்களை”
(HNWI) அடையாளம்
கண்டுள்ளது.
அதாவது சொத்துக்கள்,
ஓய்வூதியங்கள்
ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமல்,
1 மில்லியன்
டொலர்களுக்கு மேல் தடையற்ற ரொக்க இருப்பு வைத்திருப்பவர்கள் என வரையறை
செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை.
உலகம்
முழுவதும் இந்தப் பிரிவில் வந்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை
2010ல்
8.3 சதவிகிதம்
அதிகரித்தது.
இது
“இன்னும்
நிலைத்திருக்கக்கூடிய வேகத்திற்கு”
மீண்டுள்ளதுதான் என
கடந்த ஆண்டு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள
10 மில்லியன்
HNWI எண்ணிக்கை
17 சதவிகிதம்
உயர்ந்துள்ளதில் இருந்து விளக்கப்படுகிறது.
இந்தப்
புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கும் தனிப்பட்டோரின் செல்வக்குவிப்பின் அளவைத் தெளிவாக்க
வேண்டும் என்றால்,
“மிக அதிக நிகர
மதிப்புடைய தனிநபர்கள்”
என்று
கூறப்படுபவைகள் பற்றிய முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி
விவரிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம்
30 மில்லியன்
டொலர்களை தடையற்ற ரொக்க இருப்பாகக் கொண்டுள்ளனர்.
இப்பிரிவில் உள்ளோர்
எண்ணிக்கை 10
சதவிகிதமாக உயர்ந்து,
103,000 என உள்ளது.
ஆனால் அவர்களுடைய
சொத்துக்கள் 11.5
சதவிகிதமாக உயர்ந்தன.
அதையொட்டி அவர்கள்
15 டிரில்லியன்
டொலர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இதன் பொருள் உலகின்
செல்வந்தர்களில் உயர்மட்ட ஒரு சதவிகிதத்தினர் தங்கள் கூட்டுச் சொத்துக்களாக
36 சதவிகிதத்தின்
மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில்தான் மிக அதிகமான
HNWI க்குள்
தொடர்ந்து வசிக்கின்றனர்.
இதைப் பின்பற்றி
ஜப்பானும் ஜேர்மனியும் உள்ளன.
இந்த நாடுகள்
மொத்தத்தில் உலகின் செல்வந்தர்களில்
53 சதவிகிதத்தை
கொண்டுள்ளன.
அமெரிக்காவில்
3.1 மில்லியன்
HNWI க்கள்,
ஜப்பானில்
1.7 மில்லியன்,
ஜேர்மனியில்
920,000 என்ற
எண்ணிக்கையில் இவர்கள் உள்ளனர்.
மிக அதிக
செல்வம் படைத்த
3.4 மில்லியன்
நபர்களின் சொத்துக்கள் வட அமெரிக்காவில்,
பெரும்பாலும்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது.
இதன் மதிப்பு
9 சதவிகிதம்
உயர்ந்து 11.6
டிரில்லியன்
டொலர்கள் என்று உள்ளது.
ஐரோப்பாவில்
HNWI பொதுவாக
இதைவிடக் குறைவான செயற்பாட்டைத்தான் கொண்டிருந்தனர்.
ஆயினும்கூட
பிரிட்டன் இக்குழுவின் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் ஐந்தாவது
இடத்தில் உள்ளது.
ஐரோப்பாவின்
3.1 மில்லியன்
HNWI யினர் மொத்தம்
10.2 டிரில்லியன்
டொலர்கள் ரொக்க இருப்பாகக் கொண்டுள்ளனர்.
ஆசிய-பசிபிக்
பகுதியில் HNWI
க்கள் உடைய சிறப்பான
செயற்பாடுகள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஆளும் உயரடுக்கினரிடையே பெரும்
பீதியை ஏற்படுத்தின.
ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில்
HNWI க்களுடைய
எண்ணிக்கை கிட்டத்தட்ட
10 சதவிகிதம்
உயர்ந்து 2010ல்
3.3 மில்லியன் என்று
இருந்தது.
இது பிராந்திய வளர்ச்சி
விகிதத்திலேயே மிக அதிகம் ஆகும்.
ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில்
HNWI க்களுடைய
எண்ணிக்கை ஐரோப்பிய மொத்தம் மற்றும் அமெரிக்க மொத்தத்தைவிடக் கடந்து விட்டது.
இது முழு வட
அமெரிக்காவின் மொத்தத்தைவிட
100,000 தான் குறைவு
ஆகும்.
ஆசியாவின் உயரடுக்குத்
தட்டு இப்பொழுது
10.8 ரொக்க டொலர்கள்
இருப்பின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
இச்செல்வக்கொழிப்பு வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பவை சீனாவும் இந்தியாவும் ஆகும்.
தரைப்பகுதி சீன
HNWI
மில்லியனர்களின் எண்ணிக்கை
முழுமையாக 12
சதவிகிதம் வளர்ந்து
534,500 என ஆயிற்று.
இத்துடன் அசாதாரணமான
முறையில் ஹாங்காங்கிலுள்ள செல்வந்தர் அடுக்கின் வளர்ச்சியும் சேர்க்கப்பட வேண்டும்.
அங்கு
HNWI க்களின்
எண்ணிக்கை 33.3
சதவிகிதம் உயர்ந்து
101,300 என்று
ஆயிற்று. 2009ல்
இது 76,000
என இருந்தது
குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய
பங்கிற்கு இந்தியா
HNWI க்கள்
எண்ணிக்கையில்
20.8 சதவிகித
உயர்வைக் கண்டது.
இது எந்த நாட்டில்
எடுத்துக் கொண்டாலும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஆகும்.
HNWI மில்லியனர்கள்
பட்டியலில் இந்தியா முதல் தடவையாக முதல்
12 பேரைக்
கொண்டுள்ளது.
“வறுமையை
அகற்றுவதற்கு இன்னும் தொலைதூரம் இந்தியா செல்ல வேண்டியிருக்கலாம்.
ஆனால் உயர்
பொருளாதார வளர்ச்சி ஆயிரக்கணக்கான மில்லியனர்களை உருவாக்கியுள்ளது…IMF
ன் தனிநபர் தலா
வருமான அடிப்படையில்
138வது இடத்திலுள்ள
இந்த நாடு,
ஐ.நா.வின்
மனித வளர்ச்சித்தர விகித அடிப்படைக் குறிப்பீடுகளில்,
ஆயுள்கால
எதிர்பார்ப்பு,
கல்வி ஆகியவற்றின்
தன்மையில், 119வது
இடத்தைக் கொண்டுள்ளது.
2010ம் ஆண்டு
கிட்டத்தட்ட
26,300 HNWI க்களைக்
கூடுதலாக ஆக்கியது….”
என்று
ஹிந்துஸ்தான்
டைம்ஸ்
தெரிவிக்கிறது.
மத்திய
கிழக்கில்,
முழு எண்ணிக்கை
சிறியதுதான்.
ஆனால்
அப்பிராந்தியத்தில் தனிநபர் சேகரிக்கும் அளவை அடிக்கோடிட்டுக்காட்டத்தான் உதவும்.
இப்பிராந்தியத்தில்
400,000 நபர்கள்தான்
1.7 டிரில்லியன்
டொலர்கள் ரொக்க இருப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.
குவைத்,
பஹ்ரேனிலுள்ள
HNWI க்களுடைய
எண்ணிக்கை 25
சதவிகிதத்தை
அதிகரித்து,
இந்நாடுகளை
71 நாடுகள் கொண்ட
பட்டியலில் 6
மற்றும்
7 ம் இடங்களில்
நிறுத்தியுள்ளது.
மெரில்
லிஞ்ச் செல்வ மேலாண்மை நிறுவனத்தின் மத்திய கிழக்குச் செயற்பாடுகளின் தலைவரான
Tamer Rashad
அரேபியன்
பிசினஸ்ஸில்
மிகப் பெரும்
செல்வந்தர்கள் பரந்த செல்வச் சேகரிப்பில் ஒரு கூறுபாடு,
“மொத்த உள்ளநாட்டு
உற்பத்தியில் கணிசமான சேமிப்பு விகித உயர்வு ஆகும்”
என்று
குறிப்பிட்டுள்ளார்.
இந்த விகிதம்
பஹ்ரைனில் 54
சதவிகிதம்,
சௌதி அரேபியாவில்
40 சதவிகிதம் என்று
அமெரிக்கா போன்ற வளர்ச்சியுற்ற நாடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒற்றை இலக்க
விகிதங்களுடன் ஒப்பிடத்தக்கது.
இந்த
எண்ணிக்கைகள் குறிக்கும் தீவிர சமூக எதிர்நிலைப்பாடுகள்தான் இறுதியில் எகிப்தில்
ஹொஸ்னி முபாரக்,
துனிசியாவில் ஜைன்
எல் அபிடைன் பென் ஆகியோர் அகற்றப்படுவதில் முடிந்த வெகுஜன எழுச்சிகளுக்கு
வழிவகுத்துப் பிராந்தியம் முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்களைத் தூண்டின.
ஆனால்
மெரில் லிஞ்ச் மற்றும் கேப்ஜெமினி கொடுத்துள்ள எண்ணிக்கை இந்த நிதிய உயரடுக்கின்
சிறப்பான காலத்தைக் களிப்புடன் கொண்டாடுதல் என்று அளிக்கப்படுவது,
வர்க்கப் போராட்டத்
தயாரிப்பிற்கான உலகந்தழுவிய,
பரந்த வெடிப்பிற்கு
அடையாளத்தைத்தான் காட்டுகிறது.
உலக வங்கி
வறிய நிலையை நாள் ஒன்றிற்கு அமெரிக்க
1.25 டொலர்கள்
வருமானத்தில் மட்டும் வாழ்தல் என்று வரையறுத்துள்ளது.
நிதானமான வறுமை
என்பது நாள் ஒன்றிற்கு
2 டொலர்களுக்கும்
குறைவான வருமானத்தில் வாழ்வது.
2001ல் கிட்டத்தட்ட
1.1 பில்லியன்
மக்கள் நாள் ஒன்றிற்கு
1 டொலருக்கும்
குறைந்த பணத்திலும்
2.7 பில்லியன்
மக்கள் 2
டொலர்கள் நாள் ஒன்றிற்கும்
குறைவு என்ற வருமானத்திலும் வாழ்ந்தனர்.
உலக மக்களில்
கிட்டத்தட்ட பாதிப்பேர்—3
பில்லியன் மக்கள்—நாள்
ஒன்றிற்கு 2.50
டொலர்களுக்கும்
குறைவான பணத்தில் வாழ்கின்றனர்.
ஒரு பில்லியன்
குழந்தைகள்—உலகக்
குழந்தைகள் மொத்தத் தொகையில் பாதிப் பேர்—வறுமையில்
வாழ்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும்
6 மில்லியன்
குழந்தைகள் பட்டினியினால் உயிர் துறக்கின்றன.
ஒவ்வொரு நாளும்
17,000 குழந்தைகள்
பட்டினியினால் உயிரை விடுகின்றன.
ஒரு
புறத்தில் கையளவு எண்ணிக்கை உடையவர்கள் பகுத்தறிவற்ற,
மன்னிக்க முடியாத
வகையில் செல்வத்தைச் சூறையாடுதல்,
மறுபக்கத்தில் வறுமை,
பட்டினி,
துயரங்கள்
ஆகியவற்றின் பெரும் சுமை என இருப்பது முதலாளித்துவ முறை மீது இருக்கும் விடையிறுக்க
முடியாத பெரும் குற்றச்சாட்டாகும். |