சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Britain and France insist bombing of Libya must continue

லிபியா மீது குண்டுவீச்சுக்கள் தொடர வேண்டும் என பிரிட்டனும் பிரான்ஸும் வலியுறுத்துகின்றன

By Peter Symonds 
25 June 2011
Use this version to print | Send feedback

லிபியாவில் ஒரு போர்நிறுத்தம் வேண்டும் என்று இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினோ விடுத்த அழைப்பை பிரிட்டனும், பிரான்ஸும் தயக்கமின்றி நிராகரித்தன. இது நேட்டோவிற்குள் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை அகற்றுவதற்கு அதன் வான்வழிப் போரை குறித்த அழுத்தங்களை உயர்த்திக்காட்டுகிறது.

ஞாயிறு மற்றும் திங்களன்று நேட்டோ குண்டுத் தாக்குதல்களினால் லிபியக் குடிமக்கள் கொல்லப்பட்டபின், புதன்கிழமை பிரட்டினோ இதை அறிவித்தார்: “உடனடியாக உதவியளிப்பதற்கு மனிதாபிமானத்திற்காக நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவது தேவையாகும்.” இதில் திரிப்போலி மற்றும் எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிஸ்ரடா நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும் என்றார் அவர். “நேட்டோவைப் பொறுத்தவரை, குடிமக்கள் மீது நடத்தப்படும் வியத்தகுத் தவறுகள் பற்றிய முடிவுகள், மற்றும் கொடுக்கப்படும் துல்லியமான வழிகாட்டி முறைகளைப் பற்றிய விரிவான தகவல்கள் தேவை என்பது நியாயமானதுதான்.”

இந்த வாரம் முன்னதாக அரபு லீக் தலைமையிலிருந்து வெளியேறும் அமர் மௌசா போர் நிறுத்தத்திற்கும் லிபியாவில் ஓர் அரசியல் தீர்விற்கும் கொடுத்த அழைப்பைத் தொடர்ந்து பிரட்டினோவின் கருத்துக்கள் வந்துள்ளன. மௌசா லிபியாவிற்கு எதிரான போரில் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

இடைவிடாமல் நடத்தப்படும் குண்டுத் தாக்குதலில் சற்று நிறுத்தம் என்பதற்கு இடமே இல்லை என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன் கூறிவிட்டார். நேட்டோத் தலைமையிலான கூட்டுவலுவான நிலையில் உள்ளதுஎன்றும் பிரிட்டன் லிபியாவிற்கு எதிரான வான் தாக்குதலை தேவைப்படும் வரை தொடரும் திறனைக் கொண்டுள்ளது என்றும் அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.”கடாபி மீது அழுத்தம் அதிகரிக்கிறது என்று நான் வாதிடுவது முக்கியம் என நினைக்கிறேன்இம்முறை ஆதரவு நமது பக்கம், கடாபியின் பக்கமல்ல.”

வழக்கமான பல்லவியாகிவிட்ட வகையில் காமரோன் மீண்டும் லிபிய ஆட்சி சரிவின் விளிம்பில் உள்ளது என்று அறிவித்தார். “லிபியாவில் நடப்பதைப் பார்த்தால், நீங்கள் லிபியாவில் மேற்குப் பகுதியில் புரட்சி வலுவடைவதைக் காண்கிறீர்கள். கடாபியினுடைய ஆட்சியைவிட்டுப் பல மக்களும் விலகுவதைக் காண்பீர்கள்.” கடாபியின் துல்லியமான அரசியல் நிலைமை எப்படி இருந்தாலும், இத்தகைய வனப்புரை நேட்டோ அவரை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள பெருந்திகைப்பு, திரிப்போலி மீது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நேட்டோ ஆதரவுடைய எழுச்சியாளர்கள் காணமுடியாததால் ஏற்பட்டுள்ள பெருந்திகைப்பு மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெருகும் போர் எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

கடைசிக் கருத்துதான் உறுதியாக பிரட்டினோ மற்றும் இத்தாலிய அரசாங்கத்திற்கு உந்துதல் கொடுக்கிறதேயொழிய லிபியக் குடிமக்கள் பற்றிய சிறப்பு அக்கறை ஏதும் இல்லை. பிரட்டினோவின் கருத்துக்கள் வெளிப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் ஆளும் கூட்டாட்சியில் முக்கிய பங்காளியாகவுள்ள வடக்கு லீக்கின் தலைவர் உம்பெர்ட்டோ போசி இத்தாலி போரில் பங்கு பெறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை என்று அழைப்பு விடுத்தார். குண்டுத் தாக்குதலுக்கு வடக்கு லீக்கின் எதிர்ப்பு, இனவழிரீதியான தளத்தைக் கொண்டுள்ளது, இத்தாலிக்கு வட ஆபிரிக்காவிலிருந்து குடியேறுபவர்கள் வெள்ளமென வந்துவிடக்கூடும் என்ற அச்சத்தைக் கொண்டது ஆகும். இது போருக்குப் பரந்த விரோதப் போக்கு உள்ளதை வலதுசாரி பயன்படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் பேர்னார்ட் வலெரோ பிரட்டினோவிற்கு விடையிறுக்கும் வகையில் நேட்டோ குண்டுத் தாக்குதலின் நோக்கம் லிபியக் குடிமக்களைக் காப்பது ஆகும் என்ற பொய்யை மீண்டும் கூறியதுதான். “செயற்பாடுகளில் சிறிதும் இடைவெளி என்பது கடாபிக்கு மீண்டும் தன் நிலைமையைச் சீர்செய்து கொள்ள கால அவகாசத்தைக் கொடுத்துவிடும். இறுதியில் இதையொட்டி நம் சார்பில் மிகச்சிறிய வலுவற்ற தன்மையின் அடையாளம் வந்தாலும் குடிமக்கள்தான் பெரும் துன்பத்திற்கு உள்ளாவர்என்றார் அவர்.

குண்டுத் தாக்குதலுடன் கடாபியை அரக்கத்தனமாக சித்தரிக்கும் போர்ப் பிரச்சாரமும் இணைந்து நடைபெறுகிறது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வக்கீல் லூயி மொரெனோ-ஒகம்போ பெருமளவு கற்பழிப்புக்களை படையினர்கள் நடத்த வேண்டும் என்று கடாபி உத்தரவிட்டதாகக் கூறப்படும் ஆதாரமற்ற கூற்றுக்களை கிளிப்பிள்ளை போல் திருப்பிக் கூறினார்.

சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு என்னும் இரு அமைப்புக்களும் அத்தகைய தவறான நடத்தைகள் பற்றித் தாங்கள் சான்றுகள் எவற்றையும் காணவில்லை என அறிவித்துள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்பின் மூத்த ஆலோகர் டோன்டெல்லா ரோவெரா, மூன்று மாதங்கள் லிபியாவில் இருந்தவர், Independent  இடம் கூறினார்: “கற்பழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சான்றாகவோ, கற்பழிக்கப்பட்டார் என அறிந்த ஒரு மருத்துவரையோ நாங்கள் காணவில்லை.”

தொடக்கத்திலிருந்தே தெளிவாக்கப்பட்டதுபோல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுடைய உண்மை நோக்கம் கடாபியை அகற்றி, அவற்றின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை எண்ணெய் வளமுடைய லிபியா மற்றும் இப்பிராந்தியம் முழுவதும் சுரண்ட உதவும், வளைந்து கொடுக்கும் ஆட்சியை நிறுவுவதுதான். அந்த இலக்கையொட்டி, அமெரிக்கத் தலைமையிலுள்ள நேட்டோ கூட்டணி பெங்காசியிலுள்ள, தன்னைத்தானே மாற்றுக்காலத் தேசியக் குழு எனக் கூறிக்கொள்ளும் பிரிவிற்குஒரு மாற்றீட்டு நிர்வாகமாக ஆதரவு கொடுக்கிறது. இக்குழுவில் கடாபியின் முன்னாள் மந்திரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

TNC க்குக் குறைந்த பட்ச அங்கீகாரம் அளித்த சமீபத்திய நாடாக இவ்வாரம் சீனா மாறியது. TNC தலைவர் மஹ்முத் ஜிப்ரிலை பெய்ஜிங்கில் சந்தித்தபின், வெளியுறவு மந்திரி யாங் ஜியிசி இக்குழுவைஒரு முக்கிய அரசியல் சக்தி”, “முக்கிய உரையாடல் பங்காளியினர்என்று விவரித்தார். அல்-ஜசீரா தொலைக்காட்சிக்குக் கூறிய கருத்துக்களில் TNC உறுப்பினர் முகம்மது நாசர்கடாபி ஆட்சி விரைவில் முடிந்துதுவிடும் என்பதற்கும், லிபியர்கள் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளனர் என்பதற்கும் இந்த அங்கீகாரம் ஒரு வலுவான அடையாக் குறிப்பு ஆகும்என்று பாராட்டினார்.

ஆனால், குண்டுத் தாக்குதலுக்கு ஒரு இராஜதந்திர அத்தி இலை மறைப்பை அளித்த ஐ.நா. தீர்மானத்தில் வாக்குப் போடாத சீனா அனைத்துத் தளங்களையும் காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறது. லிபியாவிலுள்ள கணிசமான சீன முதலீடுகள் அனைத்தையும் நேட்டோ தலைமையிலான இராணுவத் தலையீடு பாதிக்கும் என்பதால், இது பெய்ஜிங்கை ஆயிரக்கணக்கான சீன மக்களை அந்நாட்டிலிருந்து அகற்றுவதற்கு அவசரக்கால நடவடிக்கையை மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுத்தியது. ஜிப்ரிலை யாங் சந்தித்ததின் முக்கிய நோக்கம் TNC சீனக் குடிமக்களைப் பாதுகாக்கும், அதன்கீழுள்ள பகுதியில் சீனச் சொத்துக்களைப் பாதுகாக்கும் என்பதை உறுதி செய்வதற்குத்தான்.

TNC யின் ஜனநாயக-விரோதத்தன்மை, போன வாரம் அது அறிவித்த கடாபிக்குப் பிந்தைய காலத்தில்மாற்றுக் காலத்திற்கான இடைக்கால அரசியலமைப்புஎன அது இயற்றியுள்ளதில் வெளிப்படையாகத் தெரிகிறது. TNC யின் அரசியல் விவகாரங்களின் தலைவரான பத்தி முகம்மத் பாஜா இந்த ஆவணம்ஒரு அரசியல் அமைப்பு அல்லஎன்று நிருபர்களுக்கு உறுதியளிக்கப் பெரும் முயற்சியை எடுத்துக் கொண்ட வகையில், “இது (பெங்காசி TNC) லிபியாவின் வருங்காலத்தை முடிவுசெய்யும் என்ற கருத்து கொடுக்கப்படுவதை எப்படியும் நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்என்றார்.

ஆனால் மேற்கத்தைய ஆலோசகர்கள் குழுவின் உதவியுடன் TNC துல்லியமாகச் செய்ய முற்படுகிறது. TNC உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என்று உறுதிமொழி கொடுத்திருந்தாலும், திரிப்போலியின் வீழ்ச்சிக்குப் பின்னர் குறைந்தது 10 முதல் 13 மாதங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல்கள் எதுவும் நடக்காது. இடைக்காலத்தில், தேர்ந்தெடுக்கப்படாத TNC நாட்டின் விவகாரங்களை நடத்தும்.

கடாபி அகற்றப்பட்டபின், TNC யில் உறுப்பினர் எண்ணிக்கை 45ல் இருந்து 60க்கு விரிவாக்கப்படும் என்றுஇடைக்கால அரசியலமைப்புமுன்வைத்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது ஆகும். இந்தத் தேர்ந்தெடுக்கப்படாத பதவிகளில் 10 முன்னாள் கடாபி அதிகாரிகளுக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும். இது திரிப்போலியிலுள்ள கடாபி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அங்கிருப்பவர்களின் ஆதரவை நாடும் வெளிப்படையான முயற்சி ஆகும். TNC யின் சுகாதார மந்திரி Naji Harakat, Christian Science Monitor இடம், “கடாபி ஆட்சியுடன் பலர் ஒத்துழைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நாம் தூக்கிலிடவோ, சிறையில் வைக்கவோ முடியாது என்றார். கடாபிக்குப் பிந்தைய ஆட்சியில் “30 முதல் 40 நபர்கள்தான்விலக்கி வைக்கப்படுவர் என்றும் அவர் அறிவித்தார்.

TNC யின் நிர்வாகக் குழு உறுப்பினர் மஹ்முத் ஷம்மம் இந்த வாரம் எழுச்சிக் குழு அயல்நாட்டு மத்தியஸ்தர்களின் உதவியின் மூலம் பேச்சுக்களில் உள்ளது என்றார். திரிப்போலி நிர்வாகத்திலுள்ள மூத்த உறுப்பினர்களுடன் நடக்கும் இப்பேச்சுக்கள்கடாபி அகன்றவுடன் இருத்தப்பட வேண்டிய அரசாங்கக் கருவி பற்றிவிவாதிப்பதற்கு என்றார் அவர்.

ஒரு புதிய, ஜனநாயக, லிபியாவைக் கொண்டுவருவதற்குப் பதிலாக இப்பொழுது நடக்கும் முயற்சிகள் அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் மிகவும் தாழ்ந்து நடக்கும் லிபிய ஆளும் உயரடுக்கின் கடாபி எதிர்ப்புப் பிரிவுகளைத் தளமாகக் கொண்ட ஒரு ஆட்சியை நிறுவுதல் என்றுதான் உள்ளது. அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் ஒரு மூத்த பிரிட்டிஷ் தூதர் பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, துருக்கி, டென்மார்க் இன்னும் பிற நாடுகளிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று பெங்காசியில் பல வராமாக இருந்து TNC உடன் திட்டமிடப்பட்டுள்ள கடாபிக்குப் பிந்தைய ஒழுங்குமுறை பற்றிய விவரங்களுக்குத் தீர்வு காண முற்படுகின்றனர்.

எண்ணெய் ஏற்றுமதிகளின் பாய்வு விரைவில் நடக்க வேண்டும் என்பதுதான் சர்வதேசக் குழுவின் முக்கிய ஈடுபாடு ஆகும். “அடுத்த வாரம் முடியும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் எண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடக்கப்படுவதற்கான கால அட்டவணை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதுஎன்று அசோசியேட்டட் பிரஸ் எழுதியுள்ளது. “அங்கு உற்பத்தியைச் சீர்குலைக்கும் அளவிற்கு தீவிரச் சேதம் ஏதும் இல்லை என்றும் வேலைகள் கடாபி ஆட்சி அகற்றப்பட்டு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் தொடக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.”