WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
கிரீஸ்:
நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம்
Nick Beams
22 June 2011
தற்போதைய
கிரேக்க
பிணையெடுப்பு
தொகையின் இறுதி
நிலுவைத்தொகையான
12
பில்லியன்
யூரோவை வழங்குவதற்கு
முன்னதாக,
இன்னும் கடுமையான
சிக்கன முறைமையைத்
திணிக்கக்
கோரி சர்வதேச நாணய
நிதியத்தால்
விதிக்கப்பட்டிருக்கும்
நிபந்தனையானது,
கட்டவிழ்ந்துவரும்
ஐரோப்பிய நிதியியல்
நெருக்கடியில்
ஓர் கூர்மையான
திருப்பத்தைக்
குறிக்கிறது.
உடனடியான
பொருளாதார மற்றும் நிதியியல்
விளைவுகளையும் விட
இன்னும்
முக்கியமானது
என்னவெனில்
கிரேக்க மற்றும் ஐரோப்பிய
தொழிலாளர்
வர்க்கத்திற்கு
முன்னால் தீர்க்கமான
அரசியல்
பணிகளையும்,
சவால்களையும்
முன்னிறுத்துகிறது.
பைனான்சியல்
டைம்ஸின்
ஓர் அறிக்கையின்படி,
ஞாயிறன்று மாலை
யூரோ-மண்டல
மந்திரிமார்கள்
சந்தித்த
போது,
அவர்கள்
கிரேக்க
பாராளுமன்றத்தால்
புதிய சிக்கன
முறைமைகள்
ஏற்றுக்கொள்ளப்படும்
நிலைமைகளின்கீழ்
நிதி
வழங்கப்படலாம்
என்று எதிர்ப்பார்த்திருந்தனர்.
ஆனால் சர்வதேச
நாணய
நிதியத்தின்
நிர்வாகிகள் குறுக்கிட்டு,
"நிதி வழங்குவதற்கு
முன்னால் தங்களுக்கு
இன்னும்
உறுதியான உத்தரவாதங்கள்
தேவைப்படுவதாக"
வலியுறுத்தினர்.
இந்த புதிய
நிலைநோக்கானது,
உலகளாவிய
வளர்ச்சி
மந்தப்பட்டிருப்பதையும்,
உலகளவில் புதிதாக
கடன்துறை
உடையும்
அபாயங்கள் உயர்ந்திருப்பதையும்
எச்சரித்து ஒரு
புதிய அறிக்கையை
வெளியிட்டிருந்த,
செலாவணி
மற்றும் மூலதன
சந்தைகளின்
ச.நா.நிதிய
இயக்குனர் ஜோஸ்
வினால்ஸினால்
கடந்த வாரம்
வழங்கப்பட்ட
குறிப்புகளில்
இலைமறை காயாக
காணப்பட்டது.
“நாம்
நெருக்கடியின் ஒரு
புதிய
கட்டத்திற்குள்
பிரவேசிக்கிறோம்
என்பது தான் முக்கிய
செய்தியாகும்;
இதை நான் நெருக்கடியின்
அரசியல் கட்டம்
என்று
குறிப்பிடுவேன்;
மேலும்
வீதிகளுக்கு
வந்துவிட்ட
பிரச்சினைகளைத் தவிர்க்க
தேவையான அரசியல்
முடிவுகளை
எடுப்பது தான் இப்போதைய
காலக்கட்டத்தின்
சாரமாக
உள்ளது,”
என்று
அவர் கூறினார்.
முந்தைய
கட்டம், “வீதிகளுக்கு
வந்தவைகளை
உதைத்து தள்ளுவது"
அல்லது
"ஏமாற்றுதலை
நீடிப்பது"
என்று
வர்ணிக்கப்பட்டது.
அதாவது,
வங்கிகளுக்கும்
நிதியியல்
அமைப்புகளுக்கும்
மேலும் கூடுதலாக
கடன் வழங்குவதை
நீடிப்பதும்,
இருக்கும்
பிரச்சினைகள்
மீண்டும்
எழும்வரையில் அவை
சமாளிக்கப்பட்டு
வருகின்றன என்று
ஏமாற்றுவதும்
ஆகும்.
ஆனால் கிரீஸில்
மட்டுமின்றி,
அயர்லாந்து,
ஸ்பெயின்,
போர்ச்சுக்கல்
மற்றும் மிக
சமீபத்தில்
இத்தாலியிலும் கூட,
கடன்கள்
மதிப்பிடும்
நிறுவனங்கள்
நாடுகளின்
கடன்களைத்
தொடர்ந்து
குறைமதிப்பிட்டு
வரும் நிலையில்,
“நீட்டித்தல்
மற்றும் ஏமாற்றுதல்"
என்பதும் துல்லியமாக
செயலிழந்து
போயுள்ளது.
இந்த
குறைமதிப்பீடுகளானது,
கிரீஸ் மற்றும்
ஐரோப்பாவில்
மட்டுமின்றி
சர்வதேச அளவில்,
முதலாளித்துவ
நிதியியல் அமைப்பின்
இலாபங்களையும்,
நலனையும்
மீட்டெடுக்க தேவையான
ட்ரில்லியன்
கணக்கான டாலர்களை தொழிலாளர்
வர்க்கத்திடமிருந்து
சுரண்டியெடுப்பதன்
மூலம்
புதிய அரசியல்
செயல்முறையையும்,
ஆட்சி வடிவங்களையும்
அபிவிருத்தி
செய்யும்
முதலாளித்துவ அரசின்
அரசியல்
கட்சிகளுக்கு நிதியியல்
மூலதனம்
வழிக்காட்டுவதை
எடுத்துக்காட்டுகிறது.
நாடாளுமன்ற அமைப்புமுறைகள்
மூலமாக அதிகளவில்
இது அடைய
முடியாத நிலைமைகளின்கீழ்,
ஏனைய முறைமைகள்
கண்டறியப்பட
வேண்டியுள்ளது.
ஸ்ட்ராஸ்-கான்
வெளியில் தள்ளப்பட்ட
பின்னர்
அப்பதவியை ஏற்ற,
தற்காலிக
IMF
நிர்வாக இயக்குனர்
ஜோன்
லிப்ஸ்கி,
இறுதி
நிலுவைத்தொகையான
12
பில்லியன்
யூரோவை நிறுத்தி
வைக்கும்
முடிவு குறித்து பேசுகையில்,
எவ்வித
எதிர்ப்பையும்
சகித்துக்கொள்ள
முடியாது
என்பதை தெளிவுபடுத்தினார்.
“பொருளாதாரத்தைக்
குணப்படுத்த,
மற்றும்
புதிய வளர்ச்சிக்கு
களம் அமைக்க தேவையான
கட்டமைப்பு
சீர்திருத்தங்களின்
முக்கிய வேலைத்திட்ட
நோக்கங்களை
ஏற்றுக்கொள்வதிலும்,
நடைமுறைப்படுத்துவதிலும்
கிரேக்க
அதிகாரிகளால்
முன்னெடுக்கப்படுபவை
தான்
மிக முக்கிய படிகளாக உள்ளன,”
என்றார்.
“குணப்படுத்துதல்"
மற்றும்
"புதிய
வளர்ச்சி"
என்பது
கூலிகளில் இன்னும்
மேலதிக
குறைப்புகள்,
அரசின்
சமூக செலவு
வெட்டுக்களை
ஆழப்படுத்துதல் மற்றும்
அரசுடைமை
சொத்துக்களை விற்றல்
ஆகியவற்றிலிருந்து
வரும்
என்ற
கூற்றானது
ஓர் ஆத்திரமூட்டும்
பொய்யாகும்.
மில்லியன்
கணக்கான மக்களுக்கு
அவர்களின்
கசப்பான சொந்த அனுபவங்களில்
இருந்தே இது
அவர்களுக்கு
தெரியும்.
“மீட்டெடுப்பு"
என்ற வாக்குறுதியோடு
அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த
ஆண்டின் சிக்கன
முறைமைகள்,
ஒரு துரிதமான பொருளாதார
சுருக்கத்தையும்,
வேலைவாய்ப்பின்மை
உயர்வையும்
கண்டுள்ளது.
ஆனால் கடன் அளவுகளை
குறைப்பதற்கு மாறாக,
மொத்த
உள்நாட்டு
உற்பத்தியில் கடன்
விகிதம் அதிகரிப்பு
தொடர்ந்ததுடன்,
அது
160
சதவீதத்தைத்
தாண்டி சென்று
கொண்டிருக்கிறது.
ச.நா.நிதியத்தின்
வழிகாட்டும்
கோட்பாடுகள்,
கிரீஸிலும்,
ஏனைய இடங்களிலும்
பொருளாதார
வளர்ச்சியை
மீட்டெடுக்கவில்லை.
மாறாக
அவை பிரதான வங்கிகள்
மற்றும்
நிதியியல் அமைப்புகளின்
நலன்களைப்
பாதுகாத்துள்ளன.
குறிப்பிடத்தக்க
விதத்தில் அமெரிக்க
நிதியியல்
மூலதனத்தின் ஒரு
பிரதிநிதியான
லிப்ஸ்கி,
ஜேர்மன்
அரசாங்கம் அதன்
சொந்த தேசியவாத
நோக்கங்களுக்காக
முன்வைக்கப்பட்ட
முன்மொழிவோடு,
அதாவது
கிரீஸிற்கு
வழங்க்கப்படும்
ஒரு புதிய
பிணையெடுப்பு
பொதியின் பாகமாக
தனியார்
வங்கிகள்
அவற்றின் கடன்களில்
சிறிது
இழப்புகளுக்கு ஆட்பட
தள்ளப்படும்
என்ற வாதத்தோடு,
கூர்மையான
பிரச்சினையைக்
கையிலெடுத்தார்.
இத்தகைய ஒரு
முறைமை,
கிரீஸிற்கு
நிதியளித்த பிரெஞ்சு
மற்றும்
ஜேர்மன் வங்கிகள் மீது
கடுமையாக
விழும் என்பதே அதிபர்
அங்கெலா
மெர்கெல் மற்றும்
அவரின்
அரசாங்கத்தின் கணக்காக
இருக்கிறது.
அது
ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசியின்
பிரெஞ்சு
அரசாங்கத்தாலும்,
அத்தோடு சேர்ந்து
ஐரோப்பிய மத்திய
வங்கியாலும்
(ECB)
எதிர்க்கப்பட்டது.
கிரேக்க
பங்குபத்திரங்களில்
சுமார்
140
பில்லியன்
யூரோ முதலீடு
செய்திருக்கும்
ஐரோப்பிய மத்திய
வங்கி,
எவ்வித மறுகட்டமைப்பிலும்
பில்லியன் கணக்கான
யூரோக்களை
இழந்துவிடுவோமோ என்று
அஞ்சுகிறது.
ஜேர்மன்
திட்டத்துடன்
லிப்ஸ்கி
பிரச்சினையைக்
கையிலெடுப்பதொன்றும்,
பிரெஞ்சு
வங்கிகள்
அல்லது ஐரோப்பிய மத்திய
வங்கி
மீது ஏற்பட்ட எவ்விதமான
திடீர்
கரிசனத்தால் அல்ல,
மாறாக
கடன்களைத் திரும்ப
செலுத்தவியலாமையின்
எவ்வித வடிவமும்
கடன் திருப்ப
செலுத்தவியலாத
காப்புறுதிகள்
சந்தையில்
(the credit default swaps market)
கோரிக்கைகளைத்
தூண்டிவிடும்
என்பதால் தான்.
அச்சந்தைகளில் தான்
அமெரிக்க வங்கிகளும்,
நிதியியல்
அமைப்புகளும்
பலமாக ஈடுபட்டுள்ளன.
இத்தகைய
சந்தைகளில் நிலவும்
உள்ளார்ந்த
சிக்கலின் துல்லியமான
மதிப்பீடுகளைக்
காண்பது
மிகவும் சிரமமானது.
ஆனால்
அமெரிக்க வங்கிகள்
உலகளவில்
கடன்களைத்
திரும்பசெலுத்தவியலாத
காப்புறுதி
சந்தையில், “பரந்த
ஐரோப்பா"
என்றழைக்கப்படும்
நாடுகளுக்கு சுமார்
100
பில்லியன் டாலரை
பாய்ச்சி
இருப்பதாகும்,
உலகளவில் மொத்தம்
சுமார்
2
ட்ரில்லியன்
டாலரை பாய்ச்சி
இருப்பதாகவும்
மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
நிதியியல்
மூலதனத்தின்
பிரதிநிதிகளின்
இத்தகைய நலன்கள்
தான்,
என்னவெல்லாம்
தேவைப்படுகிறதோ
அதைக் கொண்டு
பாதுகாக்க
விரும்புகின்றன.
மேலும் முதலாளித்துவம்
அதன் தயாரிப்புகளைச்
செய்துவரும்
நிலையில்,
தொழிலாள
வர்க்கமும் அதற்கு
குறைவில்லாமல்
தீர்க்கரமாக
செயல்பட வேண்டும்.
“நெருக்கடியின்
அரசியல் கட்டம்"
என்பது,
அதை மீண்டுமொருமுறை
ஓரங்கட்டி போட
வேண்டும்
என்பதையும்,
மற்றும்
சிக்கன
நடவடிக்கைகளைத்
திரும்பப் பெற
அல்லது
இப்போதிருக்கும் அரசியல்
கட்சிகளின்
தலைமையின்கீழ்
ஒரு தீர்வைக் காண,
தற்போதைய
போராட்டங்கள் அல்லது
வேலைநிறுத்தங்களைக்
கொண்டு
எவ்வாறேனும்
முக்கூட்டிற்கு
(ஐரோப்பிய
ஒன்றிய
ஆணையம்,
ஐரோப்பிய
மத்திய வங்கி
மற்றும் சர்வதேச
நாணய நிதியம்)
அழுத்தம்
அளிக்க முடியும்
என்ற அனைத்து
மாயங்களையும்
குறிக்கிறது.
மாறாக,
கடந்த
150
ஆண்டுகளில்
அபிவிருத்தி அடைந்த
வேலைநிறுத்தங்கள்,
போராட்டங்கள்
மற்றும்
பாரிய
ஆர்ப்பாட்டங்கள்,
ஆலை
முற்றுகை
நடவடிக்கைகள் மற்றும்
வர்க்க
போராட்டத்தின் ஏனைய
அனைத்து முறைகளும்,
வெட்டுகள்
மற்றும் சிக்கன
முறைமைகளை
எதிர்ப்பதற்காகவும்,
திவாலாகிப்போன
ஆளும்
வர்க்கத்தின் மற்றும்
கிரேக்க
மக்களை ஒரு பேரழிவிற்குள்
மூழ்கடித்த அதன்
அரசியல்
கட்சிகளின் கரங்களிலிருந்து
அதிகாரத்தைக்
கைப்பற்றும்
ஒரு தொழிலாளர்கள்
அரசாங்கத்திற்கான
போராட்டத்தோடு
தவிர்க்கமுடியாதபடிக்கு
இணைக்கப்பட்டு
முன்னெடுக்கப்பட
வேண்டும்.
இந்த
முன்னோக்கிற்கான
போராட்டமானது
முதலாளித்துவ
வர்க்கத்திடமும்
அதன் மோசடி அரசியல்
பிரதிநிதிகளிடமும்
பொறுப்பை
ஒப்படைத்துவிட்டு,
யூரோவிலிருந்து
விலகுவது,
டிராச்மாவை
திரும்ப கொண்டு
வருவது,
தேசிய நெறிமுறைகளுக்குத்
திரும்புவது
ஆகியவற்றில்
தான் முன்னோக்கிய பாதை
இருப்பதாக
கூறும் பல்வேறு போலி-இடது
குழுக்களுக்கு
எதிராக
முன்னெடுக்கப்பட வேண்டும்.
இத்தகைவொரு
வேலைத்திட்டத்தைப்
பின்தொடர்வதானது,
பேரழிவை கோருவதாகும்.
அது
நடைமுறைப்படுத்தப்பட்டால்
அது கிரேக்க
வங்கிகளின் ஒரு
பொறிவை,
பெரும்
பணவீக்க உயர்வை,
ஒரு
பொருளாதார முறிவை,
இன்னும்
அதிகமான
வேலைவாய்ப்பின்மை
மட்டங்களைக் காணும்.
இதுபோன்ற
ஒரு
வேலைத்திட்டத்திலும்,
அதன் விளைவாக வரக்கூடிய
சமூக அவலங்களோடும்
தொழிலாள
வர்க்கம்
எவ்வழியிலேனும்
அதனை
இணைத்துக்கொள்ளுமேயானால்,
உடமையை
இழந்த
மத்திய வர்க்கங்ளின்
மற்றும் குட்டி-முதலாளித்துவத்தின்
நம்பிக்கையிழந்த
பிரிவுகளை
ஒன்றுதிரட்ட
பாசிச
பிரிவுகளுக்குப்
பாதையைத் திறந்துவிடும்
என்பதோடு
இராணுவம் அதன்
அதிகாரங்களைத் திணிக்க அதற்கு
அவசியப்படும்
நிலைமைகளை
தோற்றுவிக்கும்.
தற்போதைய
ஆட்சியை
தூக்கியெறிந்து,
அரசியல்
அதிகாரத்தை அதன்
சொந்த கரங்களில்
எடுக்கும்
அடிப்படையில்
தொழிலாள வர்க்கம்
அதன்
சொந்த சுயாதீனமான சோசலிச
வேலைத்திட்டத்தை
முன்னெடுக்க
வேண்டும்.
வங்கிகள்
மற்றும்
பிரதான நிதியியல்
அமைப்புகளை
தேசியமயமாக்கி,
அனைத்து அரசு
கடன்களையும்
தள்ளுபடி செய்வதே
தொழிலாளர்கள்
அரசாங்கத்தின் முதல்
வேலையாகும்.
அதேவேளையில்,
ஐரோப்பிய
ஐக்கிய
சோசலிச
அரசுகளைத்
தோற்றுவிப்பதன்
மூலமாக நிதி மூலதன
சர்வாதிகாரத்தை
முடிவுக்குக்
கொண்டு வரும்
போராட்டத்தில்
ஐரோப்பா முழுவதிலும்
உள்ள
தொழிலாள வர்க்கத்தை
ஒன்றுதிரட்ட
அழைப்புவிடுக்கவும்
அது
நிர்பந்திக்கப்படும். |