World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canadian postal union to bow before strike-breaking law

கனேடிய அஞ்சல்துறை தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை முறிக்கும் சட்டத்திற்கு அடிபணிகிறது

By Carl Bronski 
22 June 2011
Back to screen version

பாராளுமன்றத்தில் வெளிப்படையான ஜனநாயக விரோத வேலைநிறுத்தத்தை முறிக்கும் சட்டத்தை கனடாவின் கன்சர்வேடிவ் அரசாங்கம் அவசரமாக இயற்றியவுடன் கிட்டத்தட்ட 50,000 அஞ்சல்துறை ஊழியர்கள் தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடாமல் வேலைக்கு திரும்புமாறு தாங்கள் உத்தரவிடுவோம் என்று அஞ்சல்துறைத் தொழிற்சங்கத் தலைவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கனேடிய அஞ்சல் தொழிலாளர்கள் சங்கம் (CUPW), கனேடிய லேபர் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்க ஆதரவுடைய புதிய ஜனநாயகக் கட்சி அனைத்துமே இந்த அப்பட்டமான ஜனநாயக விரோதச் சட்டத்தை கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் கன்சவேடிவ் அரசாங்கம் இதைப் பயன்படுத்தி, கூட்டாட்சி அரசாங்கத்திற்கு சொந்தமான கனடா போஸ்டினால் கோரப்படும் பாரிய விட்டுக்கொடுப்புக்களுக்கு எதிரான அஞ்சல் தொழிலாளர்கள் எதிர்ப்பை குற்றம்மிக்கதாக்க  பயன்படுத்துகிறது.

ஆனால் இக்கண்டனங்கள் அனைத்துமே உத்தியோகபூர்வதொழிலாளர்இயக்கங்கள் விட்டுக்கொடுப்புகளுக்கு எதிரான அஞ்சல் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதை மறைக்கும் ஒரு மூடுபனிப் படலம்தான்.

ஆரம்பத்திலிருந்தே CUPW நகர்ப்புறங்களிலுள்ள கிட்டத்தட்ட 48,000 அஞ்சல் பிரிவுத் தொழிலாளர்கள் முழுமையாக அணிதிரட்டப்படுவதைத் தடுக்க முயன்று வருகிறது. இதற்குக் காரணம் அரசாங்கத்துடன் ஒரு நேரடி மோதலுக்கு இது வழிவகுக்கும் என்ற அச்சம்தான். கடந்த வாரம் கனடா போஸ்ட் அலுவலகங்களை மூட நடவடிக்கை எடுத்தபோது, தொழிற்சங்கமானது கனடா போஸ்ட் இருக்கும் ஒப்பந்தத்தின் விதிகளின்படி நடந்து கொண்டால் அது உடனே 12 நாட்களாக நடைபெற்று வந்த சுழற்சிமுறை உள்ளூர் வேலைநிறுத்த நடவடிக்கைகளை நிறுத்துவதாகக் கூறியது.

இப்பொழுது கன்சர்வேடிவ்கள் உறுதியாகக் குறுக்கிட்டு கனடா போஸ்ட் நிர்வாகத்தின் கோரிக்கைகளைச் சுமத்தும்போது, CLC, NDP ஆகியவற்றின் முழு ஆதரவுடன் CUPW கன்சர்வேடிவ் அரசாங்கம் பாராளுமன்றத்தில் வேலைநிறுத்த முறிப்புச் சட்டத்தை இயற்றிய உடனேயே தொழில்துறை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பணிக்குத் திரும்புமாறு அஞ்சல்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்போவதாக அறிவித்துள்ளது.

விவாதத்தை நிறுத்தும் ஒரு பாராளுமன்ற நடைமுறையானதடுத்தல்என்பதைத் தான் செய்ய இருப்பதாக கன்சர்வேடிவ்கள் குறிப்புக் காட்டியுள்ளனர். இதையொட்டி வியாழன் இறுதியில் விவாதம் முடிந்து வாக்கெடுப்பினால் தடைசெய்யப்படாமல் சட்டம் உடனடியாகச் சட்டமாக்கப்படுவது பாதுகாக்கப்படும்.

திங்களன்று பாராளுமன்றத்தில் தொழில்துறை மந்திரி லிசா ரைட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் சட்டம் தொழிலாளர்களுடைய வேலைநிறுத்த உரிமை, கூட்டாகப் பேரம் நடத்தும் உரிமை ஆகியவற்றின் மீது நேரடித் தாக்குதலை நடத்துகிறது.

அஞ்சல்துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை இதுதற்காலிகமாக நிறுத்தி வைக்கும்”. அதேபோல் கனடா போஸ்ட்டின் நிர்வாகத்திற்குப் பெரிதும் ஆதரவாகச் சட்டத்தின் பல உட்பிரிவுகள் இருக்கும்.

கன்சர்வேடிவ்களால் அஞ்சல்துறை ஊழியர்கள் மீது சுமத்தப்பட இருக்கும் புதிய நான்காண்டு ஒப்பந்தத்தின் பல விதிகளைப் பற்றியும் முடிவெடுக்க ஒரு நடுவரைத் தேர்ந்தெடுக்கும். சட்டம் இந்த நடுவர் முறைதான்தேர்ந்தெடுக்கும் முறையில் இறுதி வாய்ப்பாகஇருக்கும் என்று கூறுகிறது; அதாவது அந்த வழிவகை தொழிற்சங்கமானது தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் உரிமைகளையும் கைவிட்டுவிடுவதற்கான அழுத்தத்தை அதிகரிப்பதாகும். இது. “இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பின் கீழ்தொழிற்சங்கம் அல்லது நிர்வாகத்தின்இறுதிகோரிக்கைகளில் ஒன்றை நடுவர் தேர்ந்தெடுக்கும், மற்றதை முற்றிலும் நிராகரித்துவிடும்.

இச்சட்டத்தின்படி ஒரு தொழிற்சங்க அதிகாரி மீது 50,000 டொலர்களும் தொழிலாளர் மீது 1,000 டொலரும் என்று தடையை மீறுபவர்களுக்குக் கடினமாக அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தான் பொறுக்கி எடுத்த நடுவர் நிர்வாகத்தின் மிகக் கடுமையான சலுகைப் பறிப்புக்களுக்கு ஆதரவாக உத்தரவிடுவார் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்னும் தெளிவான அடையாளத்தில், நிலுவையிலுள்ள சட்டம் இதேபோன்ற மற்றச் சட்டங்களில் பொதுவாக இருக்கும் விதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதில் 1997 அஞ்சல்துறை வேலைநிறுத்தத்தை முறித்த லிபரல் அரசாங்கத்தின் சட்டமானநடுவர்இறுதி ஒப்பந்தத்தை நிர்ணயிக்கையில்நல்ல தொழில்துறை வுகளின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது இடம் பெறவில்லை.

உண்மையில் ரைட்டின் சட்டம் ஒரு படி மேலே செல்லுகிறது. பேச்சுவார்த்தைகள் முறிவதற்கு முன் கனடா போஸ்ட்டே அளிக்கத் தயாராக இருந்தவற்றையும் விட கணிசமாகக் குறைந்த தன்மையில் ஊதிய உடன்பாட்டைச் சுமத்துமாறு அது நடுவருக்கு உத்தரவிடுகிறது! தற்பொழுது வேலையில் இருக்கும், தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அஞ்சல்துறைத் தொழிலாளர்கள் 2011 ல் 1.75 சதவிகிதம், 2012 ல் 1.5 சதவிகிதம் மற்றும் நான்கு ஆண்டுகால ஒப்பந்தத்தின் கடைசி 2 ஆண்டுகளில் 2 சதவிகித ஊதிய உயர்வைப் பெறுவர் என்று அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. கடைசியாக முன்வைத்த அளிப்பில் கனடா போஸ்ட் புதிய உடன்பாட்டில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு 1.9% உயர்வையும்பணவீக்கமோ 3.3% இருப்பதுடன் அதிகமாகியும் வருகிறதுஇறுதி ஆண்டில் 2% என்றும் கூறப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ்களுடைய வேலைநிறுத்த முறிப்புச் சட்டத்திற்கும் கனேடிய போஸ்ட் வழங்க முன்வருவதற்கும் இடையேயுள்ள ஊதியயர்வு வேறுபாடு, ஒரு நான்காண்டு ஒப்பந்தக்காலத்தில் முழு நேர சராசரி அஞ்சல் தொழிலாளர்களுக்கு 875 டொலர் என்று இருக்கும்; இதையொட்டி கனடா போஸ்ட்டிற்கு 35 மில்லியன் டொலர்கள் சேமிப்பு ஏற்படும்.

கடந்த 16 ஆண்டுகளில் கனடா போஸ்ட் தொடர்ந்து இலாபத்தை அறிவிக்க முடிந்துள்ளது. மேலும் அந்த இலாபம் வருவாய் வழிகளில் வளர்ச்சி கணிசமாக ஏற்பட்டதில் வருகிறது என்று இல்லாமல் செலவினங்களைக் குறைப்பது, தொழிலாளர் தொகுப்பிற்குக் கொடுத்து வந்த உற்பத்தித் திறனுக்கான கூடுதல் ஊக்கத் தொகையைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம்தான் வந்துள்ளது. தற்பொழுதைய பூசலில் கனடா போஸ்ட் பெரும் சலுகைக் குறைப்புக்களுக்குத் தொழிலாளர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கோருகிறது. இவற்றுள் புதிய ஊழியர்களுக்கு 20% ஊதியக் குறைப்பு, ஓய்வூதியம் பெறத் தகுதி உடைய காலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படல், புதிதாக நியமிக்கப்படுபவர்களின் ஓய்வூதிய விதிகள் வலுவற்றுப் போதல், எல்லாத் தொழிலாளர்களுக்கும் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் கொடுக்கப்படும் சலுகைகள் குறைக்கப்படல், பணி விதிகளில் மாற்றங்கள், இயந்திரமயமாக்குதலை ஒட்டி வேலைகள் அகற்றப்படல், தொந்தரவு தரும் புதிய அஞ்சல் பிரித்தல், வழங்குதல் முறைகளில் மாற்றத்தைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

இத்தகைய முன்னோடியில்லாத தாக்குதல்களை முகங்கொடுக்கையில், கனேடிய அஞ்சல்துறைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் டெனிஸ் லெமெலின் மற்றும் முழுத் தொழிற்சங்கத் தலைமையும் கனடா போஸ்ட்டிடம் பின்வாங்கி ஒரு உடன்பாட்டை, கன்சர்வேடிவ் ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசாங்கத்துடன் மோதலைத் தவிர்ப்பதற்காகச் செய்துள்ளனர். எட்டு மாதங்களுக்கு முன் பேச்சுக்கள் துவக்கப்பட்டதில் இருந்தே, CUPW தொழிலாளர்களிடம் எந்தப் மோதலிலும் ஏற்படக்கூடிய விளைவு அரசாங்கம் மீண்டும் வேலைக்குத் திரும்பும் என உத்தரவிடும் என்று கூறாமல்தான் இருந்தது. இன்னும் அதிகமாக அத்தகைய நிலைதான் வரும் என்று தெரிந்த பின்னரும் ஒரு எதிர்ப்புத் திட்டத்தைத் தொழிலாளர்களுக்கு முன்வைப்பது ஒரு புறம் இருக்க, அந்த நிலைப்பாட்டை அது ரிசீலிக்க மறுத்தும்விட்டது.

மாறாக, CUPW அதிகாரத்துவம் கனடா போஸ்ட்டின் செயற்பாடுகள் மிகக் குறைந்த அளவு மட்டுமே பாதிக்கப்படும் என்ற வகையில்தான் பெரிதும் நடந்து கொண்டது. அதற்காகப் அஞ்சல்துறையில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாத பயனற்ற சுழற்சி முறை வெளிநடப்புக்களுக்கு ஏற்பாடு செய்ததுடன், அவற்றைப் பற்றிப் பெருமையுடனும் பேசிக்கொண்டது. மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற சட்டம் இப்பொழுது வரவிருக்கையில், இது தன்னுடைய மௌனத்தையும் செயலற்ற தன்மையையும் காட்டும் வகையில் வரவிருக்கும் சட்டம் செயல்பட உதவும் என்று கூறுகிறது. “பேச்சுவார்த்தை நடத்துபவர்களிடையே மீறும் தன்மைக்கான ஆர்வம் எதையும் நான் காணவில்லைஎன்று CUPW துணைத்தலைவர் ஸ்டீவ் கார்ட்டர், பெரும் வான்கூவர் உள்ளூர்க் கிளையில் இருப்பவர் WSWS இடம் வெள்ளியன்று கனடாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கூறினார்.

ஒரு போராட்டம் நடத்தும் தோற்றத்தைக் கொடுத்து, தொழிலாளர்களின் சீற்றத்தைத் தீங்கற்றவகையில் கரைத்துவிட்டபின்னர், CUPW இப்பொழுது சிறிய அளவு ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் நடத்துகிறது. இக்கூட்டங்களில் உத்தியோகப்பூர்வ பேச்சாளர்கள் ஹார்ப்பர் அரசாங்கத்தைக் கடுமையாகக் கண்டிக்கின்றனர். அதே நேரத்தில் நீதிமன்றங்களில் முறையீடு செய்யவேண்டும், 2015ல் நடக்கவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தல்களில் NDP க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். அது ஒன்றுதான் அஞ்சல் தொழிலாளர்களுக்கு நலன் தரும் செயல் என்றும் கூறுகின்றனர்.

பெரும்பாலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் அஞ்சல் துறைத் தொழிலாளர்களால் அதிகம் பங்குபெறப்படுவதில்லை மாறாக அவர்கள் உள்ளூர்த் தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் NDP வாக்குக் கோருவோரின் கூட்டங்களில்தான் காணப்படுகின்றனர்.

அற்ப ஊதிய உயர்வுகள் பற்றிய கன்சர்வேடிவ் நிபந்தனை நிர்வாகம் முன்னதாகக் கொடுக்க முன்வந்ததைவிடக் குறைவாக உள்ளது என்பது CUPW தலைமையை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு சட்டம் இறுதியாக இயற்றப்படுமுன் வரவழைக்கும் தூண்டுதல் தன்மையை உடையது. ஒரு புதிய கூட்டு உடன்பாட்டைதடையற்றுவிவாதிக்கும் வாய்ப்பையும் கொடுக்கிறது.

இத்தகைய விளைவு கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்ப்பு அணியான புதிய ஜனநாயக கட்சிக்கும், கனேடிய லேபர் காங்கிரஸ் (CLC)க்கும் விருப்பமானதாக இருக்கும். கடந்த வாரம் இரு அமைப்புக்களும் கனேடிய கார்த் தொழிலாளர் சங்கத் தலைவர் கென் லெவன்சாவை தேசிய விமான நிறுவனத்தின் 3,800 வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவின் பிரதிநிதிகளுக்கு எதிராக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவருவதற்கு ஏயர் கனடாவுடன் ஒப்பந்தம் ஒன்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் முடித்ததற்கு சில மணி நேரம் முன் பாராட்டினகார்த்துறையில் தன் உறுப்பினர்கள் மீது விட்டுக்கொடுப்புகளை சுமத்துவதில் தேர்ந்தவரான லெவன்சா ஏயர் கனடாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான வருங்காலத்தில் ஓய்வு பெறப்போவோருக்கு பெரும் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் அனைத்து  புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கும் வேறுவித சலுகைகள் என்ற இரட்டை அடக்கு முறை உடன்பாட்டினை பற்றி உரத்து எதுவும் கூறவில்லை.

கனடா போஸ்ட் பூசலில், NDP சட்டம் இயற்றப்படுவதைத் தான் ஓரிரு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்த முடியாது என்று அச்சுறுத்தியுள்ளது. “தனை ஒரு இழுத்தடிக்கும் தந்திரோபாயம் என அழைக்க முடியுமா என எனக்கு தெரியாது என்றார் NDP தொழிலாளர் துறை விமர்சகரான யுவான் கோர்டின். “ஆனால் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி என்னும் வகையில் எங்கள் வேலையைச் செய்வோம்.” ஆனால் NDP தோற்றுவிக்கக் கூடிய எந்தத் தாமதமும் தொழிற்சங்கத்திற்கும் கனடா போஸ்ட் நிர்வாகத்திற்கும் உடன்பாட்டைக் காணக் கூடுதல் அவகாசத்தை அளிக்கும் என்பதுடன், அத்தகைய உடன்பாடு தொழிலாளர்கள் பல காலம் பாடுபட்டுப் பெற்றிருக்கும் நலன்களைத் தகர்க்கவும் செய்யும். ஆனால் லெவென்சா கூறியுள்ளபடி தடையற்ற கூட்டுப் பேச்சுக்கள் நடத்தும் உரிமை என்ற கொள்கை காப்பாற்றப்பட்டது என்று விளம்பரப்படுத்தப்படும்.

தொழிலாள வர்க்கத்தினருக்கும் இத்தகைய பாம்பு தைலம் குறைந்த நலனைத்தான் கொடுக்கும். முக்கியத் தொழில்துறை வல்லுனர்கள்கூட ஏயர் கனடாவிலும் கனடா போஸ்ட்டிலும் நடைபெற்ற கன்சர்வேடிவ் குறுக்கீடுகள் ஏற்கனவே நாட்டிலுள்ள தொழில்துறை உறவு நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர்.

பொதுவான கொள்கை பற்றிய விவாதம் ஏதும் இல்லாமல், இப்பொழுது நாம் ஒரு புதிய வகை பேரம் பேசும் ஆட்சியில் உள்ளோம்என்று Queen’s University ல் கொள்கை ஆய்வுகள் பயிலகத்திலுள்ள ஜோர்ஜ் ஸ்மித் கூறினார். “இது ஹார்ப்பர் அரசாங்கத்தின் அரங்கு என நான் நினைக்கவில்லை. அத்தகைய விவாதம் இல்லாமல் அவர்கள் இரு நடவடிக்கைகள் மூலம், பெரும் பொருளாதாரத் தீமை ஏற்படாது என்று இருக்கும் நிலையில், தாங்கள் தலையிட்டு இருதரப்பினரும் கனடா தொழில்துறை நெறியில் நினைத்தும் பார்க்கப்படாத ஒரு வழிவகையைச் சுமத்தும் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது.” டோரோன்டோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை உறவுகள் வரலாற்றாளர் இன்னும் தெளிவாக, “அடிப்படையில் அரசாங்கம் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செல்வாக்கைப் பயன்படுத்துகிறது, இதன் பொருள் அவர்கள் அதிகார சமநிலையை மாற்றும் வகையில் குறுக்கிடுகின்றனர் என்பதாகும்என்றார்.

"இது ஹாப்பர் அரசாங்கத்திற்கு ஒரு மேடை என நான் நம்பவில்லை. அந்த விவாதம் இல்லாமலே, இதுவரை கனேடிய தொழிலாளர் சட்டங்களில் கவனத்தை ஈர்க்காது ஒரு நிகழ்போக்கில் தலையிட்டு அதில் கலந்துகொண்டவர்களின் மீது  திணித்த இரு சந்தர்ப்பங்களில் எவ்வித பொருளாதார பாதிப்பு பற்றிய சான்றுகள் எதுவுமில்லாது அவர்களே தீர்மானித்துக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை தருகின்றது. டோரன்டோ பல்கலைக்கழக தொழில் உறவு வரலாற்றாசிரியரான லவ்ரல் மக்டோவெல் இதுபற்றி மிக இரத்தினச்சுருக்குமாக குறிப்பிடுகின்றார். அடிப்படையில் அவர்கள் (அரசாங்கம்) நிர்வாகத்தின் பின்னால் தமது பலத்தை பிரயோகிக்கின்றனர். இதன் கருத்து என்னவெனில் அதிகார சமநிலையை மாற்றும் வகையில் அவர்கள் தலையிடுகின்றனர்." 

தங்கள் பங்கிற்கு கனேடிய லேபர் காங்கிரஸ், எதிர்பார்க்கும் வகையில், அதன் உறுப்பினர்களை கனடா போஸ்ட்டின் தலைமை நிர்வாகிக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்படலாம்என அச்சறுத்தும் எதிர்ப்புக் கடிதத்தை அனுப்புமாறு ஆலோசனை கூறியுள்ளது. வேலைக்குத் திரும்பக் கட்டாயப்படுத்தும் சட்டம் ஜனநாயக விரோதம் உடையது என்பது உறுதியானதுதான். மேலும் கன்சர்வேடிவ்கள் சர்வாதிகார முறையைப் பயன்படுத்திப் பெருவணிகத்தின் செயற்பட்டியலைச் செயல்படுத்துவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் கனேடிய அரசாங்கத்தின் இணைக் கருவி என்னும் முறையில் கனடாவின் தலைமை நீதிமன்றம் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டு நலன்களுக்கு எதிராகத்தான் தொடர்ந்து தீர்ப்புக்களைக் கொடுத்துள்ளது. கடந்த மாதம்தான், கனடாவின் உரிமைகள் பட்டயத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளகூடிப் பேசும் உரிமைஎன்பது தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடம் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்துவதற்கு அதிகமாக ஒன்றையும் கொடுத்துவிடவில்லை என்று தீர்ப்புக் கொடுத்தது. CLC (மற்றும் CUPW) புதிய சட்டத்தின் அரசியலமைப்பு விரோதம் பற்றி வலியுறுத்துகின்றன என்றால், அது நீதிமன்றங்கள் மூலம் வேலைநிறுத்த முறிப்புச் சட்டம் எதிர்க்கப்படலாம் என்ற பொய்யான நிலைப்பாட்டை வளர்ப்பதற்குத்தானே ஒழிய, தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக அல்ல.

இன்னும் ஒரு கசப்பான தோல்வியை அஞ்சல்துறைத் தொழிலாளர்கள் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் சலுகைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரிடம் இருந்து பற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். அடிப்படை தொழிலாளர்கள் குழு அமைப்பதின் மூலம், அதுவும் தொழிற்சங்க அமைப்பிற்கு வெளியே, அதற்கு எதிராக இது நடத்தப்பட வேண்டும். ஹார்ப்பர் அரசாங்கத்தின் வேலைநிறுத்த முறிப்புச் சட்டத்தை மீறுவதற்குத் தயாரிப்பு நடத்த வேண்டும். தங்கள் வேலைநிறுத்தங்களை அனைத்து வேலைகள், ஊதிய வெட்டுக்களுக்கு எதிராகவும், தொழிலாளர் உரிமைகள், பொதுச் சேவைகளை பாதுகாத்தல் ஆகியவற்றிற்காகத் தொழிலாளர் வர்க்கம் நடத்தும் அரசியல், தொழில்துறைத் தாக்குதலின் முன்னணியில் இருத்த வேண்டும்.