WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கையின் கொலைக் களம்
பிரிட்டிஷ் தொலைக்காட்சி இலங்கை போர்க் குற்றங்களை
ஆவணப்படுத்துகிறது
By Paul Bond
22 June 2011
2009
தொடக்கத்தில்
30 ஆண்டுகள்
நடைபெற்ற
உள்நாட்டுப்
போரின்
கடைசி
மாதங்களில்,
இலங்கை
இராணுவம்
கிட்டத்தட்ட
300,000 தமிழர்களை
வட
கிழக்கு
கடலோரப்
பகுதியில்
“பாதுகாப்பு
வலையத்தினுள்”
தொடர்ச்சியாக
தள்ளியது.
ஒரு
மனிதாபிமான மீட்பு
நடவடிக்கை
செயல்
என்று
அரசாங்கத்தால்
விளக்கப்பட்ட
இந்நடவடிக்கை
பொதுமக்களை
குறிவைத்து
அவர்கள்
மீது
குண்டுவீசுவதற்கு
உதவத்தான்
பயன்படுத்தப்பட்டது.
இந்த
ஆண்டு
முன்னதாக
வந்த
ஐக்கிய
நாடுகள்
அறிக்கை
பரந்தமுறையில்
போர்க் குற்றங்கள்
மற்றும்
மனிதகுலத்திற்கு
எதிரான
குற்றங்கள்
நடந்ததை
உறுதிப்படுத்தியுள்ளது.
போர்ப்பகுதியில்
இருந்து
உள்ளூர்
மற்றும்
சர்வதேச
செய்தி
ஊடகத்தை
தடை
செய்திருந்த
அரசாங்கம் இதை
மறுக்கிறது.
கடந்த
இரண்டு
ஆண்டுகளில்
Channel 4 News
ல்
இருந்து
ஒரு
குழு,
கைத்தொலைபேசியில்
இருந்து
போர்ப் பகுதிக்குள்
எடுக்கப்பட்ட
ஏராளமான
ஒளிப்பதிவுக்
காட்சிகளை
சேகரித்துள்ளது.
இதனால் வெளிவந்துள்ள
ஆவணச்
சான்றுகள்,
இழைக்கப்பட்ட
கொடூரங்கள்
பற்றிய கொடூரமான
சாட்சியங்களைக்
கொடுக்கிறது.
செய்தி
ஊடகம்
தடைசெய்யப்பட்டதானது
ஜனாதிபதி
மகிந்த
இராஜபக்ஷ தமிழீழ
விடுதலைப்
புலிகளுக்கு
(LTTE) எதிரான
போரை
நிறுத்துவதற்கு
இராணுவத்திற்கு
கொடுத்த
தடையற்ற
சுதந்திரம்
என்னும்
பல
தந்திரோபாயங்களில்
ஒன்றுதான்.
2008 இறுதியிலேயே
அரசாங்கம்
நாட்டின்
வடக்கே
உதவி
நிறுவனங்கள்
மற்றும்
வெளிநாட்டு
கண்காணிப்பாளர்களிடம்
அவர்களுடைய
பாதுகாப்பிற்கு
உத்தரவாதம்
கொடுக்கமுடியாது
என்று
கூறிவிட்டது.
அரசாங்கத்தின்
முடிவை
ஏற்று
ஐக்கிய நாடுகள் சபை
உத்தியோகபூர்வமாக
அதன்
ஊழியர்களை
தமிழ்
நிர்வாக
மையமான
கிளிநொச்சியில்
இருந்து
திரும்பப்
பெற்றது.
முன்னாள்
ஐ.நா.
செய்தித்
தொடர்பாளரான
கோர்டன் வைஸ்
Channel 4
இடம்
அரசாங்கத்தின்
முடிவு
“என்ன
வரவிருக்கிறது
என்பது
பற்றி
சுயாதீனமான
சாட்சிகள்
பார்க்கமுடியாமல்
அகற்றுவதை
நோக்கமாகக்
கொண்டுள்ளது”
எனத்
தான்
நம்புவதாக
கூறினார்.
மற்ற
ஐ.நா.
அதிகாரிகள்
தங்களை
திரும்பப்பெற
எடுக்கப்பட்ட
முடிவு
தவறு
என்று
உணர்ந்ததாகக்
கூறினர்.
அவர்கள்
புறப்படும்போது
ஐ.நா.
அதிகாரிகள்
எடுத்த
ஒளிப்பதிவு
காட்சிகளில்
தம்மை கைவிடவேண்டாம்
என்று தமிழ் மக்களால் வலியுறுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
ஜனவரி
2009ல்
கிளிநொச்சி
வீழ்ந்தபோது,
அதனுடன்
பிராந்திய
தமிழ்
நிர்வாகமும்
சரிந்தது.
பெரும்பாலான
சர்வதேச
அரசாங்கங்களின்
ஆதரவைக்
கொண்டிருந்த
இராஜபக்ஷ
அரசாங்கம்
அதனது தாக்குதலை
விரிவாக்கியது.
தமிழீழ விடுதலைப்
புலிகளுடன்
சேர்ந்து
நூறாயிரக்கணக்கான
பொதுமக்கள்
தப்பியோட
முயன்றபோது
பொறிக்குள்
அகப்பட்டது
போல்
வைக்கப்பட்டனர்.
அரசாங்கம்
அதன்
முதல்
‘பாதுகாப்பு
வலையத்தினை
(NFZ)’
உருவாக்கியது. இதில்
300,000 முதல்
400,000 குடிமக்கள்
அடங்கியிருந்தனர்.
இப்பகுதி
கொழும்பில்
இருந்த
ஐ.நா.வினால்
கண்காணிக்கப்பட்டது.
வைத்தியர்கள் பாதுகாப்பு வலையம் சென்று
ஒரு
மருத்துவமனையை
நிறுவினர்.
கனரக
பீரங்கிங்கள்
பாதுகாப்பு
வலையத்தின் மீது
தாக்குதலை நடாத்தின.
அதே
நேரத்தில்
அரசாங்கம்,
அவை
பொதுமக்களைக்
காப்பாற்றுவதற்கான
மனிதாபிமான
மீட்பு
நடவடிக்கைகளைச்
செய்து
வருவதாகக்
கூறியது.
தீவிர
குண்டுத்
தாக்குதல்
நடத்தப்பட்டபோது,
புதுக்குடியிருப்பு
மருத்துவமனை
ஒரு
வாரம் முழுவதும்
நாளாந்தம் குண்டுத்தாக்குதலுக்கு
உள்ளானது.
குண்டுத்தாக்குதல்,
அதற்குப்
பின்
நடந்தவை
ஆகியவை
பற்றி
ஒளிபரப்பப்பட்ட
ஆவணச்
சான்று
புதுக்குடியிருப்பிற்குள்
எடுக்கப்பட்டவை
ஆகும்.
14 வயது
மகன்
மருத்துவமனையில்
இறந்து
கொண்டிருக்கும்
ஒரு
காட்சியுடன்
அவரைக்
கொன்ற
பீரங்கித்
தாக்குதல் பற்றி ஒரு
சாட்சி
விவரிப்பதை
நாம்
பார்க்கிறோம்.
இலங்கைக்கு
பயணித்திருந்த
பிரிட்டிஷ்
தமிழ்
உயிரியல் மருத்துவ
தொழில்நுட்பவியலாளரான
வாணி
குமார்
இந்த
ஆவணத்தில்
பேட்டி
காணப்படுகின்றார்.
அவர் பாதுகாப்பு வலையம் இருக்கும்
மருத்துவமனைகளில்
உதவி
புரிந்தார்.
இராணுவம்
முதல்
தாக்குதலில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவுபவர்கள்மீது
தாக்குவதற்காக
இரண்டாம்,
தாமதிக்கப்பட்ட
தாக்குதலை
நடத்தியது
என்ற
குற்றச்சாட்டுக்கள்
உள்ளன.
மனித
உரிமைகள்
பற்றிய
பேராசிரியர்
வில்லியன்
ஷபஸ்,
பாதுகாப்பு வலையம்
பொதுமக்களை
இன்னும்
தாக்குவதற்கு
ஒரு
ஒன்றிணைக்கப்பட்ட
தன்மையைத்தான்
கொண்டிருந்தது
என்னும்
தன்
சந்தேகத்தை
தெரிவித்துள்ளார்.
தமிழீழ
விடுதலைப்
புலிகளும்
பொதுமக்களைக்
கொன்றது,
புலிகள்
பகுதியை
விட்டுச் சென்ற
பொதுமக்கள்
மீது
துப்பாக்கிச்
சூடு
நடத்தியது
பற்றிய
ஒளிப்பதிவுக்
காட்சிகளும்
ஆவணங்களில்
இடம்
பெற்றுள்ளன.
அதேபோல்
தமிழீழ விடுதலைப்
புலிகளின் ஒரு
தற்கொலைப்
படை
உறுப்பினர்
இராணுவத்தையும்
பொதுமக்களையும்
கொலை
செய்தது
பற்றி
புகைப்படச்
சான்றும்
உள்ளது.
இந்தக்
கட்டத்தில்,
தமிழீழ விடுதலைப்
புலிகள்
போதியளவு
தோற்கடிக்கப்பட்டு
விட்டனர்.
அரசாங்கத்தின்
கொள்கைகள்
தமிழ்
மக்களை
வன்முறை
மூலம்
நசுக்குவதற்கான
முயற்சியே
என்பதற்கு
தெளிவான
அடையாளங்களை
காட்டின.
இரண்டாவது
யுத்த பாதுகாப்பு
வலையத்தினை அரசாங்கம்
நிறுவியது.
இம்முறை
இது
வலைஞர்மடம்
என்ற
மணற்தரையான இடத்தில்
அமைக்கப்பட்டது.
ஒரு
பீரங்கித்
தாக்குதலை
நடத்தி
அதை
இரு
பகுதிகளாக
உடைப்பதற்கு
முன்னர் இராணுவம்
உணவு
வரும்
பாதைகளில்
குண்டு
வீசியது.
ஏப்ரல்
இறுதியில்
அரசாங்கம்
10,000 மக்கள்தான்
அங்குள்ளனர்
என்று
கூறியது.
ஆனால் உண்மையான
எண்ணிக்கை
200,000 க்கும்
மேலாகும்.
கோர்டன் வைஸ்
இது
பொதுமக்கள்
இறப்பின்
அளவு
பற்றி
முறையான
கணக்கு
எடுப்பதை
தவிர்ப்பதற்காக
செய்யப்பட்டது
என்று
தெரிவிக்கிறார்.
மீண்டும்
ஆவணச்சான்று
பாதுகாப்பு
வலையத்திலிருந்த மருத்துவமனைகள்
பலமுறை
தாக்கப்பட்டது
பற்றிக்
கொடுரமான
சான்றுகளைக்
கொடுக்கிறது.
போர்ப்பகுதியிலுள்ள
வாடிக்கையான
நடைமுறையை
பின்பற்றி
GPS கருவிகள்
பொருத்தப்பட்ட
செஞ்சிலுவைச்
சங்கத்தினர்
இராணுவத்தினர்
அவர்களது பாதுகாப்பை
உத்தரவாதம்
செய்யும்
வரையில்
இராணுவத்திற்கும்
மருத்துவ
வசதிகளுக்கான
பொருட்களை
விநியோகித்தது.
இப்பொருட்களை
இராணுவத்தின்
உதவியுடன் வழங்கிய ஒரு
மணிநேரத்திற்குப்
பின்
மருத்துவமனைப்
பிரிவில்
இணைப்பு
கருவிகள்
வைக்கப்பட்டபின்,
அப்பகுதி
தாக்குதலுக்கு
உட்படுத்தப்பட்டது.
தமிழ்
மருத்துவர்கள்
செஞ்சிலுவைச்
சங்கத்திடம்
இணைப்பு
கருவிகள்
வழங்க
வேண்டாம்
என்று
கேட்டுக்
கொண்டனர்.
இப்படி
முற்றுகைக்குட்பட்ட
மருத்துவமனைகளுக்குள்
இருந்த
நிலைமைகளின்
அழிவுத்
தன்மை
குறித்து
ஆவணங்கள்
சான்று
அளிக்கின்றன;
இவற்றில்
வசதிகள்
மிகவும்
குறைவாக
இருந்தன.
பற்றாக்குறைகள்
பற்றி
விவாதித்த
ஒளிப்பதிவுக்காட்சியில்
தோன்றிய ஒரு
மருத்துவமனை
நிர்வாகி,
பின்னர்
ஒரு
குண்டுத்தாக்குதலில்
கொல்லப்பட்டார்.
ஒரு
ஆறுவயதுக்
குழந்தை
மயக்க
மருத்து
கொடுக்கப்படாமல்,
சாதாரண
கத்தியைக்
கொண்டு
ஒரு
கால்
மற்றும்
கை
துண்டிக்கப்பட்ட
அறுவை
சிகிச்சையை
மேற்கோண்டபோது
தான் மயக்கமுற்று
விழுந்ததை வாணி
குமார்
விவரிக்கிறார்.
மருத்துவமனைகள்
பலமுறை
இடம்
மாற்றப்பட்டன.
இறுதியில்
மருத்துவமனை
மூடப்பட்டது;
அத்துடன்
தமிழ்
ஒளிப்பதிவு
காட்சிகளும்
முடிவடைகின்றன.
சர்வதேச
பார்வையாளர்கள்
போர்ப்பகுதியில்
தடை
செய்யப்பட்டிருந்தாலும்,
ஐ.நா.
ஆரம்பத்தில்
7,000 பேர்
அங்கு
இறந்ததாகத்
தெரிவித்தது.
இந்த
எண்ணிக்கை
இப்பொழுது
கிட்டத்தட்ட
40,000 என்று
திருத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்,
இராஜபக்ஷ
அரசாங்கத்தின்
பொய்களை
தெளிவாக
காட்டியுள்ளது.
ஆவணத்தின்
கடைசிப்
பகுதி
பல
கைத்தொலைபேசி
“வெற்றிக்”
காட்சிகள்
என்று
இராணுவத்தினர்
எடுத்த
காட்சிகளைக்
கொண்டுள்ளது.
இராணுவத்தினர்
பொதுமக்களை
இலக்கு
கொண்டதுடன்,
இராணுவம்
கைதிகளை
சித்திரவதை
செய்தல்,
சுட்டுக்
கொல்லுதல்
ஆகியவற்றிற்கும்
பொறுப்பைக்
கொண்டிருந்தது.
கட்டிப்போடப்பட்ட
நிர்வாண
நிலையில்
கைதிகள்
சுட்டுக்
கொல்லப்படும்
காட்சிகள்
நிறைய
உள்ளன. தலையில்
எப்படிச்
சுட்டுவீழ்த்தி
கொல்வது
என்பது
பற்றி
படையினருக்கு
கூறப்படுகின்றது.
இக்காட்சிகள்
ஐ.நா.வினால்
உண்மையானவை
என்றுதான்
ஒப்புக்
கொள்ளப்பட்டுள்ளது.
தமிழீழ
விடுதலைப்
புலிகளினால்
கட்டாயமாக
அணிதிரட்டப்பட்ட போராளி
ஒருவர்
மரத்தில்
கட்டிவைக்கப்பட்ட
மற்றொரு
கைதியின்
தலை
சீவப்படுவதைப்
பார்க்கிறார்.
தங்களை
பாதுகாப்பிற்காக
இராணுவத்திடம்
ஒப்படைத்துக்
கொண்ட
பெண்கள்
கற்பழிக்கப்பட்ட
நிகழ்வுகள்
பல
நடந்துள்ளன.
இந்த
ஆவணப்படம்
தமிழீழ விடுதலைப்
புலிகளின் தலைவர்கள்
சரணடைந்தபின்
அல்லது
கைப்பற்றப்பட்டபின்
எவ்வாறு
சித்திரவதை
செய்யப்பட்டு
கொலையுண்டனர்
என்பதற்குச்
சான்றுகளை
வழங்குகிறது.
கேணல்
ரமேஷ்
போரின்
கடைசி
நாளான
மே
18, 2009ல்
கொல்லப்பட்டார்
என்று
கூறி
அவர்
சடலத்தின்
புகைப்படத்தை
அரசாங்கம்
வெளியிட்டது.
ஆனால்
அவரைப்
பற்றி
வந்துள்ள
புதிய
உயிருடன்
இருக்கும்
காட்சிகள்
கைப்பற்றப்பட்டுக்
காவலில்
இருந்தபோது
காயங்கள்
ஏற்படுத்தப்பட்டன
என்பதைக்
காட்டுகின்றன.
அதேபோல்
தமிழீழ விடுதலைப்
புலிகளின் ஒரு
தலைவரான
நடேசன்
சரணடைவதற்கு
உண்மையில்
முயன்றார்.
ஆனால்
அவருடைய
சடலத்தின்
புகைப்படம்
அவர்
தலையில்
துப்பாக்கிக்
குண்டுக்காயத்தினால்
இறந்ததைக்
காட்டுகிறது. இது
சரணடைந்தபின்
நடத்தப்பட்ட
கொலையாகும்.
இராஜபக்ஷ
அரசாங்கம்
இழைத்துள்ள
போர்க்குற்றத்தின்
அளவு,
தன்மை
பற்றி
உறுதியான
சான்றுகளை
இவ்நிகழ்வு
கொடுக்கிறது.
இராஜபக்ஷ இதில்
நேரடியாகத்
தொடர்பை
கொண்டுள்ளார்.
அவருடைய
சகோதரர்
கோத்தபாய
பாதுகாப்புச்
செயலர்
ஆவார்.
நிகழ்வு
பற்றிய
கருத்துக்
கூற
அரசாங்கம்
மறுத்துவிட்டதுடன்,
இந்த ஆவண நிகழ்வு
பற்றி கருத்துக் கூறவும்
மறுத்துவிட்டது.
அத்துடன்
போர்க்குற்றங்களின்
தன்மையைக்
குறிக்கும்
ஐ.நா.
வல்லுனர்
குழுவின்
அறிக்கையும்
நிராகரித்துள்ளது.
இலங்கையின்
வடக்குப்
பகுதி
இன்னமும்
இராணுவக்
கட்டுப்பாட்டிற்குள்
இருக்கிறது. நிகழ்வு
சுருக்கமாக
தமிழ்
குடிமக்களுக்கு
நிறுவப்பட்டுள்ள
உள்ளக முகாம்களை
பற்றியும்
காட்டுகிறது.
இராஜபக்ஷ
அரசாங்கம்
எடுத்துள்ள
நடவடிக்கைகள்
இலங்கை
தொழிலாள
வர்க்கம்
முழுமைக்கும்
ஓர்
அச்சுறுத்தல்
ஆகும்.
இந்நிகழ்ச்சி
இப்போர்க்குற்றங்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி
கிடைக்கும்
சாத்தியம் பற்றியும்
கேட்கிறது.
அதற்கான
வாய்ப்புக்கள்
அதிகம்
இல்லை
என்று
முடிக்கிறது.
இதற்குக்
காரணம்,
சர்வதேச
ஆளும்
உயரடுக்கின்
தொடர்பு
மற்றும்
அது,
இராஜபக்ஷ
அரசாங்கத்திற்கு
கொடுக்கும்
ஆதரவுதான்.
ஐ.நா.
வின்
பொதுச்செயலர்
பான்
கி-மூன்,
அரசாங்கம்
மற்றும்
இராணுவ
அதிகாரிகளால்
உள்ளக
முகாம்களைச்
சுற்றிக்
காண்பிக்கப்பட்டார்.
அறிக்கையை
தொடர்ந்து
ஒரு
குற்றவிசாரணை
நடத்தப்பட
வேண்டும்
என்னும்
ஐ.நா.
வல்லுனர்
குழு
பரிந்துரையை
பான்
நிராகரித்துவிட்டார்.
சர்வதேச மனித உரிமை
அமைப்பினுடைய
ஸ்டீவ்
கிராஷா
இதற்கும்
லிபியாவிற்கும்
இடையே
கொடுக்கப்படும்
விடையிறுப்பு
பற்றிச்
சுட்டிக்
காட்டியுள்ளார்.
இராஜபக்ஷவினால்
அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் சமரசத்திற்குமான போலிக்குழு (Lessons
Learnt and Reconciliation)
பற்றி
இத்தொலைக்காட்சி
நிகழ்ச்சி
சரியாகவே
உதறித்தள்ளியுள்ளது.
அந்த
யுத்த நடவடிக்கைக்கு
வாஷங்டனின்
பகிரங்கமான
ஆதரவு
இருந்தது.
விக்கிலீக்ஸ்
வெளியிட்டுள்ள
தகவல்கள்
ஒபாமா
நிர்வாகம்
போர்க்குற்றங்கள்
நடத்தப்பட்டபோதே
அவற்றைப்
பற்றி
நன்கு
அறிந்திருந்தன
என்பதைத்தான்
வெளிப்படுத்துகின்றன. |